Showing posts with label பாலாஜி மோகன். Show all posts
Showing posts with label பாலாஜி மோகன். Show all posts

Saturday, July 18, 2015

மாரி - மாஸ் ஹிட்டா? மீடியமா? சொதப்பலா?-மக்கள் கருத்து

தனுஷ் நடிப்பில் 'தர லோக்கல்' படம் என்ற அறிவிப்பு, 'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் என்ற இந்த இரண்டு காரணங்களே மாரி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'மாரி' ரசிகர்களின் மனதை மகிழ வைத்ததா? 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்' படங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் மாரி, தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
'மாரி' டைட்டில் போடும்போதும், தனுஷ் பெயரை போடும்போதும் தியேட்டரில் விசில் தெறிக்கிறது. எழுந்து நின்று ரசிகர்கள் கொடுக்கும் அப்ளாஸ் தியேட்டரையே அதிர வைத்தது.
சென்னையில் லோக்கல் டானாக இருக்கிறார் மாரி (தனுஷ்). சின்ன சின்ன அட்ராசிட்டிகள், அலப்பறைகள் செய்பவரை போலீஸ் முக்கிய குற்றவாளியாக கைது செய்கிறது. அதற்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் தனுஷ் என்ன செய்கிறார்? என்பது 'மாரி' கதை.
லோக்கல் டான் 'மாரி' கேரக்டருக்கு தனுஷ் அவ்வளவு பொருத்தம். அறிமுகக் காட்சியில் டான்ஸ் பீட்டில் ஆடும்போது அதகளம் செய்கிறார்.
ஸ்லோமோஷனில் நடந்து வருவது, ரஜினி பாணி ஸ்டைல் காட்டுவது, டான்ஸில் பின்னிப் பெடல் எடுப்பது, ஏரியா ஜனங்களிடம் இம்சை செய்வது, சின்ன சின்ன சேட்டைகளில் ஈடுபடுவது, சண்டைக் காட்சியில் காட்டும் வேகம், புறாக்களிடம் காட்டும் பாசம், எமோஷன் காட்சிகள், என தன்னை ஒரு நடிகனாக நிரூபித்திருக்கிறார்.
''இவ்ளோ டிவி இருக்குது. ஒரு டிவில கூட ஏன் இந்தியா ஜெயிக்கலை?''
''கலப்படமான நல்லவனா இருக்குறதை விட, சுத்தமான கெட்டவனா இருக்குறதே மேல்.''
''ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும்போது ஒரு கொசு வந்து கடிச்சுதுன்னு வெச்சுக்கயேன். அந்த கொசு பெரிய ஆள் ஆகிடாது. ஒரு நாள் முழிச்சிக்கினு இருக்க சொல்ல கடிக்கும்போது, பட்னு அடிச்சா பொட்னு போய்டும். ஒரு நாள்...''
இப்படி பன்ச் பேசும்போது தனுஷ் ஸ்கோர் செய்கிறார்.
ரோபோ ஷங்கரை அருகில் அழைத்து கலாய்க்குறியா? என்று கேட்பது, விஜய் ஜேசுதாஸிடம் நல்லா பண்ற என்று சொல்வது, செஞ்சிருவேன் என்று கை நீட்டி விரல்களை திருப்பி சொல்வது என தனுஷ் தூள் கிளப்புகிறார்.
ரோபோ ஷங்கர் கிடைத்த இடங்களில் கேப்பில் கெடா வெட்டி வெடித்து சிரிக்க வைக்கிறார். காஜல் அகர்வால் போலீஸ் ஸ்டேஷன் போகப் போவதாக சொல்ல, அடுத்த கலெக்‌ஷனே அங்கேதான் என்கிறார்.
''அந்தப் பொண்ணுக்கு கரெக்ட் நீ இல்லைன்னு எங்களுக்குத் தெரியுது. அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரியலையே.''
''பார்த்தவே பிடிக்கலை. பார்க்க பார்க்க பிடிக்குமா?'' என்று தனுஷையே கலாய்க்கும் அளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து ரோபோ ஷங்கர் கொடுக்கும் கவுன்டர்களுக்கும், உடல் மொழிக்கும் தியேட்டர் அதிக அளவில் குலுங்கியது.
முதல் பாதி முழுக்க ரோபோ ஷங்கருக்கு கொடுத்த முக்கியத்துவத்துக்காக இயக்குநரையும், அதற்கு இடம் தந்ததற்காக தனுஷையும் பாராட்டலாம்.
'பேர்ட்' ரவியாக வரும் மைம் கோபி, வேலுவாக வரும் சண்முக ராஜா, அடிதாங்கியாக வரும் கல்லூரி வினோத் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனாக அறிமுகம் ஆகியிருக்கும் விஜய் ஜேசுதாஸ் பேசும்போது மட்டும் வாயில் பாக்கை போட்டு கொதப்பிய மாதிரியே பேசுகிறார். இன்னும் நடிக்க முயற்சித்திருக்கலாம்.
காஜல் அகர்வாலுக்கு பெரிதாக ஏதும் வேலையில்லை. ஒரு காட்சி மூலம் படத்தை நகர்த்த உதவுகிறார். மற்றபடி வந்து போகிறார் அவ்வளவே.
அனிருத் இசையில் மாரி நல்ல மாரி, டானு டானு, தப்பாதான் தெரியும் ஆகிய மூன்று பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் சென்னை ஏரியா முழுக்க பளிச்சிடுகிறது. பிரசன்னாவின் எடிட்டிங் கட்டிங் ஓஹோ என சொல்ல வைக்கிறது.
தர லோக்கல் படத்துக்கான எல்லா முகாந்திரங்கள் இருந்தும் படத்தின் கதையோ, திரைக்கதையோ பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
ஜாலியாக நகரும் முதல் பாதி, சரியான நேரத்துக்காக காத்திருந்து பழிவாங்கும் இரண்டாம் பாதி என்று வழக்கமான கமர்ஷியல் சினிமாவில் பேக்கேஜ் கொஞ்சம் குறைவு தான்.
தனுஷின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. அந்த ஸ்க்ரீன் பிரசன்ஸ் முன்னால் மெயின் வில்லன்கள் காணாமல் போய்விடுவதும் திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டவில்லை.
எனினும், இந்த மசாலா 'மாரி'யை - தனுஷ் ரசிகர்கள் சூப்பர்னு தான் சொல்வாங்க. தனுஷ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்; திருப்தியைக் கொடுக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு..?
'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்கள் மூலம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்ட இயக்குநர் பாலாஜி மோகனுக்கு..?
மாரி - கொஞ்சம் ஸாரி தான்!

நன்றி -த இந்து

  • Venugopal S  
    ரோபோ சங்கரை நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள். அவரும் அதில் ஸ்கோர் செய்கிறார். டிவி நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள படக்குழுவினர் பாரட்டிற்கு உரியவர்கள்..இடைவேளைவரை இருந்த வேகம் அதற்க்குபின்பும் இருந்திருந்தால், திரு.பாலாஜி மோகன் "ஹாட்ரிக்" அடித்துப்பார்.என் செய்வது ? இருப்பினும் திரு.தனுஷின் பண்பட்ட நடிப்பிற்க்காக ஒருமுறை திரை அரங்கிற்கு சென்று பார்க்கலாம்.
    about 6 hours ago
     (0) ·  (0)
     
    • SShankar  
      விஜய் போன்றவர்கள், நடிப்பில் சுத்த ஜீரோ ,சூபர் ஸ்டார் என்றால், தனுஷ் பரவ இல்லை நடிக்கவாவது செய்கிறார். ஆனால் படம் மொக்கை.இது அஜித் அல்லது விக்ரமுக்கு தோதான கதை.
      Points
      20680
      about 7 hours ago
       (1) ·  (4)
       
      Manikandan Up Voted
      Kmag · NELLAI · Sundar · Kombaiah Down Voted
      • SSundar  
        அஜித், விக்ரம் கைதேர்ந்த நடிகர்கள், விஜயின் நடிப்பும் இப்போது மெருகு எரிவருகிறது. ஆகையால் மொக்கை படத்தை இந்த முன்னணி நடிகர்களோடு ஒப்பிடாதீர்கள்.
        about 5 hours ago
         (0) ·  (0)
         
      • PParthi  
        செஞ்சுரிவேன் செஞ்சுரிவேணு சொல்லி படம் பாக்க வந்தவங்கள வெச்சி செஞ்சுட்டாரு .ஒரே ஆறுதல் ரோபோ சங்கர் தான்
        Points
        3100
        about 9 hours ago
         (0) ·  (0)
         
        • AAnandan  
          படம் சூப்பர். பார்க்கலாம். வர வர தனுஷ் நடிப்பு மெருகேறி வருகிறது. வெல்டன் திரு தனுஷ்.
          Points
          6365
          about 11 hours ago
           (0) ·  (0)
           
          • KKishore  
            movie average....
            about 19 hours ago
             (0) ·  (0)
             
            • GKG K  
              பதிரிகைக்காகவா படம் எடுக்கறாங்க. அப்பப்ப ரசிகர்களுக்கவும் படம் எடுக்கணும் சாமி.
              Points
              450
              about 20 hours ago
               (0) ·  (0)
               
              • Andy Andu  
                மாரி படம் டைரக்ட் பண்ணது பாலாஜி மோகனா இல்ல தனுசா.....தமிழ் நாட்ல ஹீரோ க்கு பில்டப் வேணும் தான்... ஆனா ஓவரா பில்டப் பண்றது தேவ இல்ல ...என்ன தனுஷ் சார் .. நல்ல படம் பண்ற நீங்க ...சீன் க்கு சீன் .. நான் சூப்பர் ஸ்டார் மருமகன் .. னு prove பண்றீங்களே ...நான் உங்க நல்ல படத்துக்கு ரசிகன் ...இது மாதிரி படத்துக்கு உங்கள் அறிவுரையாளன் ...நன்றி .. (பி.கு: இது தனுசின் தீவிர ரசிகனுக்கு பொருந்தாது ..எனவே மன்னிக்கவும் நண்பா ...)

              Thursday, July 02, 2015

              மாரி -பக்கா கமர்ஷியல் கலக்கல் - இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி

              • பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
                பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
              • ‘மாரி’ படத்தில் தனுஷ்.
                ‘மாரி’ படத்தில் தனுஷ்.
              ‘மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
              ‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
              ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
              உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
              அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
              குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
              வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
              ‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
              இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
              தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
              இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
              உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
              வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
              ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
              அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
              அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.


              thanx - thehindu