Showing posts with label பாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம ). Show all posts
Showing posts with label பாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம ). Show all posts

Monday, July 13, 2015

பாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )

காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி.
பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை.
மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா (பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான். பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக் (தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன் அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.
தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின் விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும் பிரபாஸ்... அரசி தேவசேனாவாக அனுஷ்கா... பாகுபலியுடன் வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.
மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.
அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப் படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும் படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.
படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர் பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.
போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின் படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.
திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ், ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர். பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின் கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும் காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.
நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.
நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம். குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ் ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள் ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்கள்.
இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில் விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை. தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும் அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.
காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.
மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச் சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.
எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப் பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு, அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.


நன்றி - த இந்து


  • Dennis  
    ஒரு சில காட்சிகளை தவிர்திருக்கலாம் . ராணா போரின் போது பயன்படுத்தும் பிளேடு போன்ற ரதம்.விசாகபட்னாம் தியேட்டரில் எழுந்த சிரி ப்பலை.
    about 8 hours ago
     (0) ·  (0)
     
    • SVShanmugam Venkatesan  
      Heroism can acceptable for these kind of films.... Superb movie...
      about 8 hours ago
       (0) ·  (0)
       
      • சுரேந்தர்  
        படம் சூப்பர் ஆனா கற்பனை கதை நம் தமிழ் இயக்குனர்கள் பாகுபலி போன்ற கதையை கற்பனையாக உருவாக்க தேவை இல்லை ..... நம் தமிழகத்தில் பாகுபலி போன்ற நிஐ சம்பவங்கள் வீரம் பொருந்திய அரசர்கள் ஏராளம் .. எகா: பூலி தேவர் மருது பாண்டியர் ராணி வேலு நாச்சியார் போன்று இவர்கள் வாழ்கையை படமாக எடுத்தால் 1000 பாகுபலி எடுக்கலாம்
        about 10 hours ago
         (0) ·  (0)
         
        • Ratan Kan  
          மகாபாரதத்தின் மறுபதிப்பு...
          Points
          1315
          about 10 hours ago
           (0) ·  (0)
           
          • SSathyam  
            பாகுபலி என்பது மய்ஸ்ருகு அருகில் உள்ள ஒரு ஊர் ,மகிழ்மதி என்பது மகிஷாசுரனின் தலை நகரத்தின் பெயர் . வல்லாளன் என்பது அப்பகுதியின் வரலாற்றுக்கால அரசரின் பெயர் .கதைக்களம் விந்தியமலை -மைசூர் (மகிஷ ஊர் ) பகுதி , அக்கலத்தில்விந்திய மலை பனிபடர்ந்த சிகரங்கள் உடையதாக இருந்ததை இலக்கிய புராணங்களில் காணமுடிகிறது , அம்மலைக்கு இமயமலை என்ரபெயரும் உண்டு .தற்போதைய இமயமலையை விட விந்திய மலை வயதில் மூத்தது.
            about 11 hours ago
             (0) ·  (0)
             
            • SSubashini  
              சூப்பர் movie
              about 11 hours ago
               (0) ·  (0)
               
              • AArun  
                Sema படம் கண்டிப்பா பாருங்கள் ... ரொம்ப nalla இருக்கு தமிழ் ல இப்டி ஒரு படம் நம்ம திரைஉலகிருகு perumai
                about 12 hours ago
                 (0) ·  (0)
                 
                • N[email protected]  
                  பிரமாண்ட போர்கள காட்சிகளை கண் முன் காட்டிய ராஜமௌலி ஹாலிவுட் தரத்திக்கு உயர்ந்துவிட்டார்
                  Points
                  125
                  about 13 hours ago
                   (0) ·  (0)
                   
                  • SSiva  
                    நல்ல படம்.பிரம்மாண்டத்தின் உச்சம் இயற்கைஇன் அழகு ,பிரபாஸ் ராணா ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் ஆகியோரின் வீர நடிப்பு ,விமர்சிக்க வார்த்தை இல்லை.
                    about 15 hours ago
                     (0) ·  (0)
                     
                    • SBSripathy Babu  
                      We are waiting for baahubali 2
                      about 15 hours ago
                       (0) ·  (0)
                       
                      • Chandrasekar S  
                        why you all always showing black color peoples as slaves and like giants ?
                        Points
                        405
                        about 15 hours ago
                         (0) ·  (0)
                         
                        • NNaveen  
                          படத்தை பாரட்டவிடாத இரண்டு பாடல் காட்சிகள் You to rajamauli ?
                          about 17 hours ago
                           (0) ·  (0)
                           
                          • SSujatha  
                            சில குறைகள் இருக்க தான் செய்கிறது ஆனாலும் பார்க்காமல் இருக்க முடியவில்லை பாஹுபலி
                            about 18 hours ago
                             (0) ·  (0)
                             
                            • செல்வபொன்னு  
                              இன்னும் படம் பார்க்க வில்லை பார்த்து விட்டு மீதீசொல்கிறேன்.
                              about 18 hours ago
                               (0) ·  (0)
                               
                              • Ppandiselvam`  
                                சூப்பர்.............பிலிம் இது வரைக்கும் இந்த மாதிரி படத்தையும் வித்தியாசமான பல பிரமாண்டமான அறிவி அண்ட் சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை சூப்பர் சார் யுவர் கிரேட் ... ராஜா மௌலி சார் ....
                                about 18 hours ago
                                 (0) ·  (0)
                                 
                                • Vino Sparks  
                                  Awesome Indian cinema is in next level
                                  about 18 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                  • MMohanraj.  
                                    ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருக்காங்க வெகு பிரமாண்டம் அவசியம் பார்க்கவேண்டும் என்ன.... காலகேயர்களின் (கற்பனை..?) மொழி உச்சரிப்பு கவருகிறது. நம்ம அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி அருவியா அது நம்ப முடியாத அளவிற்கு மெருகூட்டி இருக்கிறார்கள் ஒரு முடிவு இல்லாமல் 2016 -ல் தொடரும் என்று இருப்பதை நம்ம ஊர் ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
                                    about 19 hours ago
                                     (1) ·  (0)
                                     
                                    • NNALRAJ  
                                      நல்ல படம் .குடும்பத்தாரோடு பார்த்து மகிழ அருமையான படம் .பிரபா பாகுபலி அருமையான சித்திரம் .படத்திற்கு நான் கேரண்டி
                                      about 20 hours ago
                                       (0) ·  (0)
                                       
                                      • AAkk  
                                        கதை இல்லை என்கிறார்கள். பாகுபலி கொடுப்பது அனுபவம். அதை அனுபவிக்கத்தான் முடியும். அனுபவித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். முடியாதவர்கள் வழக்கம்போல ஜல்லியடிக்கிறார்கள்.
                                        about 20 hours ago
                                         (0) ·  (0)
                                         
                                        • RRaj  
                                          மேற்கத்தியர்களே எங்கள் படத்தை பாருங்கள்