Showing posts with label பரத். Show all posts
Showing posts with label பரத். Show all posts

Saturday, August 10, 2013

ஐந்து ஐந்து ஐந்து - 555 -சினிமா விமர்சனம்

 

ஒரு விபத்தில்   படு காயம் அடைந்த  ஹீரோ  தன் கூடவே  காரில் பயணம் செஞ்ச  தன் காதலியை காணாம தவிக்கறார்.  தன் காதலியை   அவரால மறக்கவே முடியலை . காதலியின்  வீடு  , காதலி கூட சேர்ந்து  சுத்துன  இடம் எல்லாம் போய்ப்பார்க்கறார். அவரோட காதலி  விபத்தில்  இறந்துட்டாரு.(ன்னு நினைக்கறார்) அவரோட  சமாதியில்  ஹீரோ பழியாக்கிடக்காரு.ஹீரோவோட  அண்ணன்,  சைக்யாட்ரிஸ்ட்  டாக்டர்  2 பேரும்  ஹீரோ கிட்டே சொல்லும் மேட்டர்   அதிர்ச்சியானது .


 குடைக்குள் மழை பார்த்திபன் மாதிரி  ஹீரோவுக்கு  பேரா நாமீசியா அப்டினு ஏதோ ஒரு வியாதி  இருக்காம் . அதாவது இல்லாத ஒண்ணை கற்பனை பண்ணிக்கறது , அந்த  கேரக்டர்  கூடவே வாழ்வது . குணா கமல்  அபிராமியை நினைச்ச மாதிரி. ஹீரோ  தன் காதலியின் அத்தையை சந்திக்கறார். அவரும்  ஹீரோவை யார்னே  தெரியாது , அப்டிங்கறார். ஹீரோவுக்கு ஒரு குழப்பம் .இவங்க நடிக்கறாங்களா?  நிஜமாவே  தெரியலையா? அப்டினு 


 இருக்கற  குழப்பங்கள் , பிரச்சனைகள் பத்தாதுன்னு இன்னொரு பொண்ணு  ஹீரோவை லவ் பண்றேன்னு  பின்னாலயே சுத்திட்டு இருக்கு . சமர் படத்துல  வர்ற மாதிரி எல்லாமே ஒரு டிராமாவோ அப்டினு  நினைக்கறப்போ  இல்லை , இது  வேற மாதிரி   கதை அப்டினு  பின் பாதி திரைக்கதைல  இயக்குநர்  அழகா முடிச்சை அவிழ்க்கிறார்.



சொல்லாமலே,ரோஜாக்கூட்டம் ,பூ போன்ற  மாறுபட்ட  காதல் கதைகளைத்தந்த  சசிதான் இந்தப்பட இயக்குநர் . திரைக்கதை  தான் படத்துக்கு  பக்க பலம் , ஹீரோ  எல்லாம் . தமிழ் சினிமாவின்  முக்கியமான படமான  பெண்ணின் பார்வையில்  சொல்லப்படும்  முதல் காதல் கதையை  எடுத்தவர் ( பூ ) அது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால்  கஜினி டைப் ஆக்சன் பேஸ்டு  லவ் சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுத்திருக்கார். சபாஷ் சசி


 ஹீரோ பரத் . பழநி , திருத்தணி மாதிரி  லோ கிளாஸ் ஆடியன்ஸ் படங்களாக நடித்தவர்   ரொமாண்டிக்  யூத்  , எய்ட்பேக்  பாடி பில்டர்  என  இரு மாறுபட்டதோற்றத்தில் சிரத்தையாக நடிச்சிருக்கார் .  படத்தில் பெரிய  ஆறுதல்  இவர்  பஞ்ச் டயலாக் எதுவும் பேசாமல்  இயக்குநர் சொன்னபடி  கேட்டு அடக்கி வாசித்திருப்பதுதான் . க்ளைமாக்ஸில்   தன்  ஜிம் பாடியை இவர்  காட்டும்போது  பிரமிப்பு . இது வரை எந்தஒரு தமிழ் சினிமா  ஹீரோவும்  இந்த அளவு எய்ட்பேக் பாடி காட்டியதில்லை ( வாரணம்  1000  சூர்யா சிக்ஸ்பேக் )  அதற்கும் ஒரு சபாஷ்


ஹீரோயின்   புதுமுகம்  மிர்திகா அழகு  முகம், வந்து  பழகு பழகு என்று கொஞ்ச வைக்கும்  கவிதை  பேசும்  கண்கள் . சாத்துக்குடி  ஆரஞ்சுப்பழ  சுளை  சைசில்  இருக்கும்  கொடை ஆரஞ்சுப்பழ சுளை க்கு மருதாணி வெச்சா எப்படி இருக்கும்  அப்படி ஒரு இயற்கையான ஆரஞ்சு சிவப்பழகுகொண்ட  உதடுகள் ,  ஒரு சின்ன பரு கூட இல்லாத   மொசைக் ரசகு;ல்லா மாதிரி கன்னங்கள்  அழகு அழகு . ஹீரோ  ஒரு யோகா  ஆள் , பவர் உள்ள ஆள் என இவர் நம்புவது  லைலாத்தனமாக இருந்தாலும் ( லூஸ் )  தன் அப்பாவித்தன நடிப்பில் அப்ளாஸ்  வாங்குகிறார்.  இவரை  மணிரத்னம் , ஷங்கர் மாதிரி இயக்குநர்கள்  ஹீரோயினாக  (படத்தில் ) யூஸ் பண்ணிக்கிட்டா நல்ல எதிர்காலம்  இவருக்கு  உண்டு

 இன்னொரு  ஹீரோயின் எரிக்கா .முதல் ஹீரோயின் ”அளவுக்கு “  இவர் இல்லைன்னாலும்   ஆள் அழகாத்தான்  இருக்கார் . இவருக்கு வாய்ப்பு  கம்மின்னாலும்  வந்தவரை   ஓக்கே 


 ஹீரோயின் அத்தையாக நடிச்சஃபிகர் கூட   கவனிக்க வைக்கும் அழகுதான் .உயிர் பட சங்கீதாசாயல். கொழுக் மொழுக்   வில்லின்னா  இனி அவரைக்கூப்பிடலாம் போல  


வில்லனாக வருபவர்   கடைசி சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பு. 


 சந்தானம் ஹீரோவின் அண்ணனாக  வந்தாலும்  காமெடிக்கு ஸ்கோப் கம்மி .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. கஜினி பட  ரொமான்ஸ் காட்சிகள்  போல்  சாயல் இருந்தாலும்    ரசிக்கும்படி  அதை எடுத்தது. கேபிள் கனெக்ட் பண்ண ஹீரோயின்   வீட்டுக்கு வந்து  அவர் பெட்ரூம்  சூழலை  நோட் பண்ணி விட்டு  பின் ஃபோனில்  தனக்கு ஒரு பவர்  யோகாவால்  கிடைத்ததாகவும் , இப்போ  உன் பக்கத்தில் என்னென்னெஇருக்கு? என்பதை சொல்லமுடியும் என   ஹீரோ அள்ளி விடும் காட்சிகள்   சுவராஸ்யம்


2. சன் கிளாஸ்  பொருத்தப்பட்ட   காரில்  ஹீரோயின்  காத்திருக்க அங்கே வரும்  ஹீரோ எதேச்சையாய் கண்ணாடியில்  தலை  சீவ குனிய   அவர் தன் பவர் மூலம் தான்  இருக்கும் இடம் அறிந்து தான் தன்னைப்பார்த்து  சிரிப்பதாக  ஹீரோயின்  புளாகாங்கிதப்படும் சீன்  கைதட்டல்  ரகம்



3. முதல் முறை  காதல்  பாடல் காட்சி படமாக்கிய   விதம்  ,  ஓப்பனிங்க் சாங்க்   லொக்கேஷன்   இரண்டும்  அழகு 





4. சந்தானத்துடன் ஹீரோ பைக்கில் போகும்போது  பெட்ரோல் ட்ரை (DRY)ஆகி  விட , பெட்ரோல் பேங்க்கில் பாட்டிலில்  ஹீரோ பிடிச்சுட்டு வரும்போது   அந்த வழியில்  ஹீரோயின்  ஸ்கூட்டியை தள்ளிக்கிட்டு வரும்போது  ஹீரோவைப்பார்த்து  “ அட, உன்  பவர்  மூலம்  எனக்கு இப்போ பெட்ரோல் வேணும்னு   கண்டு பிடிச்சுட்டியா? என கேட்பது ஆஹா!


5. திரைக்கதையில்  வரும் டர்னிங்க் பாயிண்ட்டை   கடைசி 20வது  நிமிடத்தில் தான் சொல்வது , அதுவரை  சுவராஸ்யமாக  திரைக்கதையை நகர்த்தியது




6 . விஷால்நடிச்ச சமர் படத்தின்  கதையை  கொஞ்சம்  மாத்தி எடுத்துட்டு   கடைசி டைம்ல  அந்த கதை வேற என நம்மை நம்பவைக்க   சிரமப்பட்டு  ஒரு  ட்விஸ்ட்டைஇடைச்செருகலாய்  சொருகியது


7 . படத்தோடபிரமோஷனுக்காக பரத்தை  எய்ட் பேக் ஜிம் பாடி பில்டர் ஆக்கியது 



8 . படத்தில் வரும்  3  முக்கிய பெண் கேரக்டர்களை அழகாக தேர்வு செய்தது, அவர்களை கண்ணியமாக  , அழகாக உடை அணிய  வைத்து ரசிக்கவைத்தது


9. படத்தின் டைட்டிலை மையப்படுத்தும் பார்சல் க்குள் என்ன இருக்கு என்பதை ஹீரோ யூகிக்கும் காட்சி கலக்கல்  . அப்ளாஸ் அள்ளியது



 இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1. ஹீரோ  லிஃப்ட்ல  வரும்போது  முதன் முதலாக ஹீரோயினை பார்க்கற  டைம்ல   ஹீரோயின் ஹேண்ட் பேக்  ஜிப்  ஓப்பன் என்பதைசுட்டிக்காட்ட   “ ஜிப்”என வெறுமனே சொல்றார் ,  உடனே  ஹீரோயின்  தன்  பேண்ட்   ஜிப்பை   அட்ஜஸ் செய்ய பார்க்கிறார்.  பொதுவா   நாம ஜிப்பை  குறிப்பிட்டா  பேண்ட்   ஜிப் தான். பேக் ஜிப்னாவாயில் முதல் வார்த்தையே  பேக் அல்லது  ஹேண்ட் பேக் என்றுதான் வரும்  


2. ஹீரோ   ஹீரோயினின் சமாதியில்  அவர் பெயரை கிறுக்கும்போது   அந்த சமாதியில் ஒரே  ஒரு பெயர் தான் இருக்கு , அடுத்த காட்சியில் சந்தானம் , டாக்டர்  எல்லாரும்  வந்து பார்க்கும்போது ஏகப்பட்ட  “ லவ் , டயானா : பேரு இருக்கே , எப்படி? 



3.  ஹீரோவும் , ஹீரோயினும்  மோதும்போது  2 பேர் செல் ஃபோனும்  விழுது. ஹீரோயின் ஹீரோவோட  செல் ஃபோன்ல  இருந்து சிம்மை கழட்டி தர்றார். ஆனா ஹீரோயின் செல்ஃபோனை மாத்தி எடுத்துக்கும்  ஹீரோ அவர்  சிம்மை கழட்டித்  தரவே இல்லையே?  ஹீரோ எதுக்கு ஹீரோயின்  ஃபோன்  நெம்பர் கேட்கறார்? அவர்  கிட்டேதான் ஹீரோயின்  சிம் இருக்கே?



4. ஜிம்மில் எக்சசைஸ் பண்றவங்க ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு பண்ணுவாங்களா?  ( ரெகுலரா   ஜிம் போறவங்க  லூஸ் பேண்ட் , திருப்பூர் ஐட்டம்  பனியன்கிளாத் பேண்ட் தான் போட்டுட்டு எக்சசைஸ் பண்ணுவாங்க ,ஜீன்ஸ் போட்டா  எல்லாம் வெந்துடும் ) 


5. வில்லனின் ஆள்  ஹீரோ கிட்டே , ஹீரோவின்  அண்ணன் சந்தானம்  பணயக்கைதி  வில்லன் கிட்டே . அப்படி  இருக்கும்போது  ஹீரோ ஏன் அவசரப்பட்டு  தன் கையில்   இருக்கும்  அடியாளை போட்டுத் தள்றார்? பதிலுக்கு  சந்தானத்தை வில்லன்கொல்வார் என தெரியாதா?வேட்டையாடு விளையாடு  படத்தில் கமல் ( கவுதம் மேனன் ) செய்த அதே தப்பை  பரத்தும் செய்வது  ஏன்? 




6. ஹீரோ பெயரை   அர்விந்த் -னு ஸ்டோர் பண்ணி இருக்கும்  ஹீரோயின்  ஒவ்வொரு  முறையும்   நெம்பரை  டைப் பண்ணுவது ஏன்?   காண்டாக்ட்ஸ் ல போய் ஏ  லைனில் எடுக்கலாமே?அதானே ஈசி ?


7.  ஹீரோயினின் ஆண்ட்டி  ஹீரோ &ஹீரோயின் என்ன பேசிக்கறாங்க என்பதைதெரிஞ்சுக்க   தன் செல்  ஃபோனில் இருந்து  ஹீரோயின்  செல்லுக்கு கால் பண்ணி  ஹீரோயின்  செல் ஃபோனைஅட்டெண்ட் செய்யவெச்சு அந்த செல்லை  ஹீரோயினிடம்  கொடுத்து  விடுகிறார்.  இப்போ 2 பேரும் பேசுவது அத்தைக்கு கேட்கும் . ஓக்கே . ஆனா ஹீரோ ஹீரோயினின்  செல் ஃபோன் மானிட்டரை பார்த்து உண்மையை கண்டு பிடிக்கறார்,. அந்த டைம்ல  ஆண்ட்டி அப்டினு மட்டும்  செல் ஃபோன் ஸ்க்ரீன் ல தெரியுது. அதுஎப்படி? கால்  ஓடிட்டு இருக்கு . டைம்  டியூரேஷன் காட்டிட்டு இருக்கவேணாமா?



8.  ஹீரோயினின் அத்தை  ஹீரோயினிடம்  நான்  இந்த லவ்வர்ஸ் சிலையை பேக் பண்ணித்தர்றேன் . பார்சலை பிரிக்காமல்   ஹீரோ உள்ளே என்ன இருக்கு?ன்னு கண்டுபிடிச்சா  லவ்வுக்கு ஓக்கே  என சொல்லி   சதி  வேலைசெய்பவள்   அதே  ரூமில் இருக்கும் வேறு சிலையை( பொம்மை) வெச்சா மேட்டர் ஓவர். எதுக்கு தன் கழுத்தில்  இருக்கும் தங்கச்செயினை  பார்சலில்  வைக்கறார்?  ரிஸ்க் தானே? 


9. தன் அண்ணனைக்கொன்றவனை  ஹீரோ  தாக்கி கொன்னுடறார், அல்லது மயக்கப்படுத்திடறார். மீண்டும்சுடும்போது  அவர் எப்படி  ஜெர்க் ஆக முடியும்? உடம்பு எப்படி துடிக்கும் ? 


10. பணக்காரரான வில்லன் அவ்வளவு   டிராமா பண்றவர்  சுபா, பிகேபி நாவலில்  வருவது  போல் சவப்பெட்டியில் ஏதோ  ஒரு அநாதை லேடி டெட் பாடியை வெச்சா மேட்டர்  ஓவர். காலி பெட்டியை எந்தமுட்டாள்  வில்லனாவது  வைப்பானா? ஹீரோயின் செத்துட்டா என நம்ப வைப்பவன்  அந்த  சின்ன  லாஜிக் கூடவா   யோசிக்க மாட்டான் ? 




11.  க்ளைமாக்ஸில் ஹீரோயினிடம்  வில்லன்  ஹீரோ  கோமாவில்   இருக்கார் என்கிறார். ஹீரோயின் ஏன் ஹீரோவை இப்போ பக்கத்தில் பார்த்தே ஆகனும்னு அடம்  பிடிக்கலை? வில்லன் தான்  ஹீரோயின் மேல் மயக்கமாஇருக்காரே? ஹீரோயின் என்ன  சொன்னாலும் கேட்கறாரே?



12. க்ளைமாக்ஸ் ல   ஹீரோவுக்கு  கைல அடி பட்டுடுது . அந்தகாயத்துக்கு கட்டு போட அருகில் உள்ள  திரைச்சீலையை கிழிச்சோ , அல்லது அத்தனை  அடியாட்கள்  உடையை  கிழிச்சோ  கட்டி இருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு தன் பனியனையே ஹீரோ ஏன் கிழிச்சுக்கறார்? ஜிம் பாடியை காட்டவா? 


13.  ஹீரோயினை   ராகிங்க்  செய்யும்  ஆள்  ரொம்ப டீசண்ட்டா  உங்க கையை பசங்க சீனியர்ஸ் தொட்டுட்டுவரச்சொன்னாங்க  என சொல்லி ஹீரோயின் உள்ளங்கையை சும்மானாச்சுக்கி தொட்டுட்டுப்போறார். அதுக்கு ஏன்ஹீரோயின் கற்பே போன மாதிரி கூச்சல் போடறார்? டவுன் பஸ்ல போனதே இல்லையா? திருவீழாக்கூட்டத்தில் சிக்கினதே இல்லையா?  கையை தொட்டதுக்கே  இப்படின்னா ...... அதே மாதிரிஅந்த  சீனில் பரத் காட்டும் ஜாக்கிசான் -ன் ரிவன்ஞ்ச் க்ளைமாக்ஸ் ரக  ஆக்ரோசம்  ஓவர்  டோஸ். அட்லீஸ்ட் ஹுரோயின்  இடுப்பில் கிள்ளுவது போல் காட்டி இருக்கலாம் 
 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உங்களுக்குள்ள  உருவான    ஒரு கற்பனையை   வேற ஒருத்தரால  பார்க்க முடியாது , உணர முடியாது



2. நேரங்கெட்டநேரத்துல  ஃபிகருக்கு ஃபோன் பண்றான் . ஃபோனுக்குமயக்க  ஊசி தான் போடனும் 


3. கரண்ட் கட் ஆவதை விட கேபிள் கட் ஆகற டைம்தான் அதிகமா இருக்கு 



4.  அய்யயோ, கதவுல  பூட்டு  இருக்கே? 


பின்னே? கதவுல  பூட்டு இல்லாம   ரேமாண்ட்ஸ் கோட்டா இருக்கும் ?


5. அடேய் , நான் கேபிள்காரன் டா , என்னமோ  சிவாஜிகணேசன் கே ஆர் விஜயாவை உருட்டற மாதிரி என்னை உருட்டறே? 


6. உங்க கிட்டே இந்த பச்சை மண்ணை ஒப்படைக்கிறேன் , இதைவெச்சு நீங்க  பானை செய்வீங்களோ , பன்னாடைசெய்வீங்களோ


7. காக்கா வலிப்பு போல , அவர் கைல ஒரு சாவி குடுங்க 

 டேய், சாவி குடுக்க அவர் என்ன பொம்மையா? 


8  அதெப்பிடிடா   வெகுளீயா பார்த்து லவ் பண்றீங்க ? 



9. டேய், நான்  இன்னும் 4 நாள்ல கனடா  போகப்போறேன்,எப்படிடாஅவகிட்டே லவ்வை சொல்றது?


 நீ கனடா போறேன்னு சொன்னாலே  போதும் ,  தானா லவ் பண்ண்ணுவா  பாரு



10.ஹீரோயின் -ஐ, நகத்தைக்கூட உன் கிட்டே மறைக்க  முடியலை ( கற்பனையை வளர்த்த வேணாம் , இது ஒரு கவித்துவமான காட்சி ) 





11.  உனக்கு சிக்கி இருக்கறவ ஜெனிலியா டைப்னு நினைச்சேன், அஞ்சலி  பாப்பா டைப் போல


12.  என்னமோ பிளஸ் டூ ல அட்டெம்ப்ட்டே வைக்காத  மாதிரி பேசறே?


13.  எனக்குவரப்போற   புருஷன்  யார்?னு உன் கிட்டே  இருக்கும் பவரை  யூஸ் பண்ணி கண்டு பிடி பார்ப்போம் 



14, டேய், என் கிட்டே எவ்வளவு நம்பிக்கை  இருந்தா  அவளுக்கு வரப்போற மாப்ளை யாரா இருக்கும்னு என் கிட்டே கேட்பா? 


 டேய், மேட்ரிமோனியல்  போனா 5000  ரூபாசெலவாகும் . அதான் காரணம் 


15. வில்லன் -அவன் என்னயோசிக்கனும்னு நான் தான்  முடிவு பண்ணனும்.  அவனை எப்படி அலையனும்   எங்கேஅலையனும் அப்டிங்கறதையும் நாந்தான்   முடிவு பண்ணுவேன்  ( சமர்  டயலாக் ) 




16.  எல்லாரும்  வாழ்க்கைல எடுக்கும் முக்கியமானமுடிவே   தன்  வாழ்க்கைத்துணை யார்  அப்டிங்கறதுதான் 


  17. அவ கேள்விக்கு என்ன  பதில் சொல்றதுன்னே தெரியலைடா , செத்துப்போயிடலாம் போல இருக்கு 


கேள்விக்குப்பதில்  தெரியாதவன்  எல்லாம் சாகனும்னா நாம எல்லாம் ஒண்னாங்கிளாஸ்லயே செத்திருக்கனும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  43



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்- காதலர்கள் , சஸ்பென்ஸ் பட விரும்பிகள் , ரொமாண்டிக்  ஃபிலிம் பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம் , பரத், சசிக்கு ஒரு முக்கியமான படம் . ஈரோடு ஆனூர் ல் படம் பார்த்தேன்


a


Friday, April 29, 2011

வானம் - சிம்பு VS தெம்பு? OR சொம்பு ? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKhZFuHn4K7DPynruNI78peG9Gu7BQ2uOh-2azlTSPtcQte70_vdwY1y9cDsGf6I3c77RTfLXyPD4D_qMI-NXRXSYAUlC8cW-jPoq6EP8zuvhkOLZ4E79L5jGcDKdcICnUkK7gv54w6g5p/s1600/Simbu_Anushka_vaanam_movie_posters.jpg

எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல் கை வசம் இருக்கும் தைரியம் + விண்ணைத்தாண்டி வருவாயா படத்தால் சிம்புவுக்கு ஏற்பட்ட புது இமேஜ் & மார்க்கெட் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் +அனுஷ்காவின் இளமை  இந்த மூன்று மேட்டர்களை கையில் வெச்சுக்கிட்டு  இயக்குநர் க்ரிஸ் அதகளம் பண்ணி இருக்கலாம்.. ஆனா... 

 படத்தோட கதை என்ன?
.ராக் ஸ்டாராக ஆசைப்படும்  இளமை துள்ளும் இளைஞன் ( பரத்),மருமகளின் (சரண்யா)கிட்னியை விற்க வரும் மாமனார்,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் கேர்ள் (அனுஷ்கா),தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன் ( சிம்பு).,ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து போன சோகத்தில் ஒரு முஸ்லிம் (பிரகாஷ் ராஜ் ) இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

 இவர்கள் ஐந்து பேரும் வந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.என்ன நடக்கிறது என்பதே கதை.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfTkbuQCRa2R4fA9Div40Jabo8qd516uMK0TBpKYNFbl0riiKVwceJ0KOnLUnoAeHZ2342LlXncRyEw-WjkEePB-8MrDmrk22E1SX0vQOj1dvSHNDZlE_Ju4ZKmYivMm71e7P_XOYjRQJ9/s1600/Sneha_Ullal_Simbu_Vaanam_Movie_Stills_01.jpg
சிம்புவுக்கு அல்வா மாதிரி கேரக்டர்.அவர் சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகள் கல கல காமெடி.சினேகா உல்லாள் தான் ஜோடி ( அவர் தங்கை பேர் மேனகா வெளி ஆள்?)ஆனா ஃபிகர் சுமார் தான்.. நடிக்க வாய்ப்பு இல்லாட்டி கூட  பரவால்ல.. அவர் திறமையை (!!) காட்டக்கூட வாய்ப்பில்லாம போச்சேன்னு தான் இளவட்டங்கள் வருத்தம். 

அனுஷ்கா .. அருந்ததி மாதிரி கலக்கலான கேரக்டரில்,சிங்கம் மாதிரி கிளாமரான கேரக்டரில் பார்த்து விட்டு இந்த மாதிரி டிக்கெட் கேரக்டரில் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு.ஆனா அவர் அசால்ட்டா ந்டிச்சிருக்கார். ஆனா தெலுங்கு பதிப்பை விட தமிழ்ல அவருக்கு அழகும் இளமையும் கம்மி தான்.. (இப்படியே கம்ப்பேர் பண்ணிட்டே இரு. )

பரத் கேரக்டர் வந்த வரை ஓக்கே என்றாலும் படத்துக்கு தேவை இல்லாத கேரக்டர் தான்.

படத்தில் மனம் கவரும் நடிப்பு சரண்யா, அவர் மாமனார், பிரகாஷ்ராஜ் இந்த 3 பேரும் தான்.சோனியா அகர்வால் பார்க்க பரிதாபமாக இருக்கார். செல்வராகவன் விட்டுட்டுப்போனதால் அப்படி இருக்காரா? அவர் அப்படி டல்லா இருக்கறதால அவர் விட்டுட்டுப்போய்ட்டாரா? என்பது சர்ச்சைக்குரியவிஷயம்.


சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
http://fullytimepass.com/wp-content/uploads/2009/03/sneha-ullal-11.jpg
 படத்தில் களை கட்டும் கலக்கல் வசனங்கள்

1.  என் பைக்கை நான் என் ஒயிஃப் மாதிரி பார்த்துக்கறேன்..

சந்தானம்- அப்புறம் ஏண்டா வாசல்ல நிறுத்தி வெச்சிருக்கறே? வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வெச்சிருக்க வேண்டியது தானே?

2. இங்கே இருக்கறவங்க எல்லாம் பார்த்தியா ஆல் ஹை க்ளாஸ்....

சந்தானம்-  - பார்த்தா எச்ச க்ளாஸ் மாதிரி இருக்கு?

3.  சந்தானம்- ஏம்ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றேன்.. சிரிக்க மாட்டியா?

 பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான்.

 சந்தானம்-  ஆமாமா..  பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான், விசில் அடிக்க மாட்டான்,ஜாலியை அனுபவிக்க மாட்டான்.. போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான்?

4.  டேய்.. நான் ஒண்ணு சொல்லட்டா.. அந்தாள் பைக்கை நைஸா வித்துடலாமா?

சந்தானம்-  செத்துடலாமா?ன்னு கேட்டிருக்கலாம். இதுக்கு

5.  லேடி - வாங்க இன்ஸ்பெக்டர் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ரெகுலரா வர இது என்ன போலீஸ் ஸ்டேஷனா?

6. என்னது? சரோஜா ஒரு ஃபுல் நைட்டுக்கு வேணுமா? நீங்க தான் மேட்ச்ல வீக் ஆச்சே? எதுக்கு அவ? 

உன்னை எல்லாம் லாக்கப்ல வெச்சு ஒரு வாரம் கும்முனாத்தான் புத்தி வரும்.

7.  எத்தனை தடவை சொல்றது? உங்க கனவை ,ஆசைகளை என் மேல திணிக்காதீங்க..

8. சந்தானம்- பேசாம அம்பானி பொண்ணையே ரூட் விட்ரலாமா? பணக்காரன் ஆகிடலாம் ஈசியா..

ஆனா அம்பானிக்கு பையன் தான்

9. எப்படியாவது ரூ 40000 பணத்தை ரெடி பண்ணனும். 40 பேர்ட்ட ரூ 1000  கேட்கலாமா?

 சந்தானம்- ஏன்? 40000 பேர்ட்ட ஆளுக்கு ரூ 1 கேளேன்..

10. சரி சரி.. இந்த செல்ஃபோன்ல இருக்கற எல்லா  நெம்பருக்கும் டரை பண்ணு..யாராவது சிக்காமலா போவாங்க? கறந்துடலாம்.

சந்தானம்- கஸ்டமர் கேர் நெம்பர் தவிர எல்லா நெம்பரும் ட்ரை பண்ணீயாச்சு.

11.  சந்தானம்- யோவ்.. நீ நல்ல பார்ட்டியா கல்யாணம் பண்ணாம ஒரு பாட்டியைப்[போய் கல்யாணம் பண்ணீ இருக்க..

 சரி சரி.. கொலீக்ஸ் முன்னால என் மானத்தை கொலாப்ஸ் பண்னாதே..

12. சந்தானம்- உன் லவ் நல்ல ஒர்த்தா?

ரூ 600 கோடிக்கு அதிபதி.

ஆ.......

சந்தானம்- அதுக்கு ஏன் கார் டிக்கி மாதிரி வாயைப்பிளக்கறெ..?க்ளோஸ்

13.  சரி.. ப்ளேன் என்னா>ன்னு சொல்லாம டீ சொல்றே,,?

 இன்னுமா புரில..? அவன் ப்ளேனே இன்னைக்கு நம்ம கிட்டே ஓ சி டீ சாப்பிடறது தான்.

14.  அந்தக்காலத்துல திருடறவன் பசிக்காக திருடுனான். இந்தக்காலத்துல புட்டிக்கும் குட்டிக்கும் திருடறான்.
15.  ஏண்டி.. எல்லாரும்  நம்மையே பார்க்கறாங்க.. 

இவங்க இப்படித்தான். சினிமா நடிகையையும், நம்மை மாதிரி பொண்ணுங்களையும் ஒரே மாதிரி பார்ப்பாங்க.. ( ச்சே ச்சே நீங்க நினைக்கறது தப்பு)

16. திரு நங்கை - ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு.. நாங்க எங்கேய்யா போவோம்.?

17. என்னது? நீங்க கன்னித்திருடன்களா? கன்னிப்பொண்ணுங்களை திருடுவீங்களா? 

 அட நீங்க வேற.. இது எங்க முத திருட்டு..

18.  சரி.. நீங்க எப்படி? ஒன்லி திருட்டு தானா? இல்லை கொலை, ரேப் இந்த மாதிரி...?

சந்தானம்- இன்ஸ்பெக்டர் சார்.. என்னது இது சர்வர்  மாதிரி வடை பொங்கல் போதுமா ? ரோஸ்ட் வேணாமாங்கறது மாதிரி கேட்கறீங்க?

19. யோவ்.. நாங்க தான் படிக்காதவளுக.. இந்த தொழிலுக்கு வந்துட்டோம். நீ படிச்சவன் தானே.. அரசாங்க வேலை ல தானே இருக்கே? யூனிஃபார்ம் போட்டுட்டு இப்படி சம்பாதிக்க வெட்கமா இல்லை? ( பளார்)

20. போலீஸ்களை நம்பக்கூடாது.. குழந்தையை காணோம்னு புகார் குடுத்தா பொண்டாட்டியை காணாம போக பண்ணிடுவானுங்க.. ( செம க்ளாப்ஸ்)
21.  மத்த வேலைகள் செய்ய அனுபவம் வேணும். ஆனா இந்த தொழிலுக்கு அனுபவம் கம்மின்னா பணத்தை அள்ளி வீசுவாங்க.. அனுபவமே இல்லைன்னா கேட்கற பணம் கிடைக்கும்.

22. எனக்காக அவ கிட்டே என்னைப்பற்றின உண்மையை சொல்றியா?

சந்தானம்-  ஏன்? நீ சொல்ல மாட்டியா? எத்தனை பொய் சொல்லி இருக்கே?

பொய் சொல்றது ஈஸி.. ஆனா உண்மை சொல்றது ரொம்ப கஷ்டம்.. (க்ளாப்ஸ்)
http://www.telugupedia.com/wiki/images/d/d7/Anushka.jpg
23. நான் போலீஸ்.. என்னையே டெரரிஸ்ட்னு சொல்றியா?

அப்பாவிகளை கொடுமைப்படுத்தற எல்லாரும் டெரரிஸ்ட்தான்.

24. சந்தானம்- டேய் நாயே.. சீ வெளில வா.. இவரு பெரிய பாரதிராஜா.. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பார்க்கறாரு.. 

25.. அடப்போடா.. என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிக்க வெச்சுட்டியே..?

சந்தானம்-  நீ குடுத்த காசுக்கு உன்னை எலக்‌ஷன்லயா நிக்க வைக்க முடியும்?

26.  எனக்கு இந்த தொழிலே வேணாம்யா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காட்ட முடியாத ஒரு வாழ்க்கையை  ஒரு நல்ல சாவு காட்டிடுச்சு... 
http://l.yimg.com/t/movies/movietalkies/20090112/21/snehaullal-7b-1_1231775016.jpg

இயக்குநர்க்கு பொக்கே குடுக்கும் ஷாட்ஸ்

1. பிரகாஷ்ராஜ் தன்னிடம் அடி வாங்கினாலும் ஆபத்து நேரத்தில் தன்னை தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றினார் என்றதும் கை எடுத்துக்கும்பிடும் போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் வடிவமைத்த விதம்

2. யுவன் சங்கர் ராஜாவிடம் செமயான ஹிட்ஸ் சாங்க்ஸ் வாங்கியது.

3.உனக்கும் வேணும் எனக்கும் வேணும் பாடல் காட்சியை படமாக்கிய விதம்.

4. ஹாஸ்பிடல் காட்சியில்  திருடிய பணத்தை சிம்பு  திருப்பிக்குடுக்க வரும்போது அந்த பெரியவர் நடிப்பு.. அந்த காட்சி மார்வலஸ்



http://hotphotos.picswallpapers.com/var/albums/Sneha-Ullal/latest/Sneha-Ullal-latest-photo-003.jpg?m=1279039354
இயக்குநருக்கு சில யோசனைகள் & கேள்விகள்

1. இரண்டு வருஷத்துக்கு ஓட வேண்டிய மெகா சீரியல் ரேஞ்சுக்கு எதுக்கு படத்துல அத்தனை கேரக்டர்.? கசா முசான்னு ஏகப்பட்ட பேர் வர்றதால சாதாரண சினிமா ரசிகன் குழம்ப மாட்டானா?

2. படம் போட்ட முதல் ஒரு மணிநேரம் கதை எந்த திசைல பயணிக்குதுன்னே தெரில.. கதைல சுவராஸ்யம் கூட்ட க்ளைமாக்ஸ்ல பாம் வைக்கப்போற மேட்டரை ஆரம்பத்துலயே காட்டி இருந்தா டெம்ப்போ ஏத்தி இருக்கலாமே?

3. பரத் கேரக்டர் படத்துல எதுக்கு? தயவு தாட்சண்யமே இல்லாம அந்த கேரக்டரையே தூக்கி இருக்கலாம்.

4. அனுஷ்கா கில்மா பாட்டு சீன்ல லாங்க் ஷாட்ல யெல்லோயிஷ் ஷேடும் ,க்ளோஷப் ஷாட்ல ரெட்டிஷ் ஷேடும் எதுக்கு?அதெல்லாம் எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆச்சே?

5. எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல்இப்படித்தான் பிக்சரைசேஷன் பண்றதா? ஏதோ க்ளப் சாங்க் மாதிரி இருக்கு.இந்தப்பாட்டை பட்டாசு கிளப்ப எடுத்திருக்கலாம்.

6. சிம்புவோட காதல் ஆழமா காட்டப்படல.. ஒரு டூயட் வெச்சிருக்கலாம். கோடீஸ்வரி பொண்ணு குப்பத்துப்பையனை ஏன் லவ்வறா? குப்பத்துப்ப்பையன் ஏன் அப்படி மல்ட்டி மில்லியனர் மாதிரி இருக்கான்? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

7. சிம்பு ஒரு சீன்ல  அப்பா டி ஆர் மாதிரி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி அவரை மாதிரியே ஆடி இருக்காரு.. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா அவர் அப்போ செய்யும் ஆபாச சைகை ஓவர். ( சிங்கார வேலன்ல கமல் புதுச்சேரி கச்சேரி பாட்டுல.. பண்ணூவாரே.. அது போல )

8. சோனியாவின் கர்ப்பம் கலைந்ததும் பிரகாஷ்ராஜின் நடிப்பு இயல்பான நடிப்பின் கடைசிப்படியில் இருந்து ஓவர் ஆக்டிங்கின் முதல் படியை தொட்டது ஏன்?

9. பரத் பாடல் காட்சியில் எதுக்கு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி எரியுது,.. கண் வலி வந்தது தான் மிச்சம்..

10 ஹீரோ அறிமுகம் மகா சொதப்பல். 10 ரவுடிங்க வந்து அவர் எங்கே என க்கேட்பதும் அவர் உயரமான இடத்தில் இருந்து குதித்து8 ஓடுவதும் அவர்கள் துரத்துவதும் செம போர். ஏற்கனவே ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படங்கள்ல யும்,. ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆஃப் காட் ல யும் பார்த்து பார்த்து சலிச்சாச்சு.

பரத் கூட 2 ஃபிகருங்க சுத்துது.. அதுங்க பரட்டைத்தலயோட ஏன் இருக்கு? ஒரு ரப்பர் பேண்டோ,க்ளிப்போ வாங்க கூட வசதி இல்லியா? அய்யோ பாவம்... ஆனா அந்த ஓப்பனிங்க் பாடல்ல  அந்த 2 ஃபிகரும் மழைல நனைஞ்சு ஒரு குலுக்கல் டான்ஸ் போடறாங்களே அடடா..
http://thatstamil.oneindia.in/img/2010/12/30-anushka-2001.jpg

இந்தப்படம் ஏ செண்ட்டர்ல 30 நாட்கள். பி செண்ட்டர்ல 20 நாட்கள், சி செண்ட்டர்ல  10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

 ஈரோடு அபிராமி,ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரணி என 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. நான் அபிராமில பார்த்தேன்

 தியேட்டரில் ... ஒருத்தன்   தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்


எவண்டா  இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான்  செத்தான்  செத்தான்  செத்தான்
என்று பாடி விட்டு செல்கிறான்.. எஹே ஹே ஹேய்