Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Tuesday, February 14, 2012

நந்தியா வட்டைப்பூவும், உன் புன்னகையும் - கவிதை

உடல் மண்ணில் புதையும் வரை ஒரே ஒரு உயிரின் நினைவுகளை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழும் உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துகள்..

 டீன் ஏஜில் நான் எழுதிய சில மொக்கை கவிதைகள்

http://images1.fanpop.com/images/photos/1300000/Love-Wallpaper-love-1370449-1024-768.jpg


பெண்ணே! நீ சிரித்தாய்!

பெண்டாட்டி தாசர்களுக்கு முல்லையும் மல்லிகையும் வாங்காத

நினைவு வந்தது.. 


பிரம்மச்சாரிகள் பத்து பேர் பைத்தியம் ஆனார்கள்.. 

பஸ் ஸ்டேண்டில் பஸ் ஆக்சிடெண்ட்.. 

கன்னிப்பெண்களுக்கு
உன் சிரிப்பிற்கு ஈடான முத்து மாலை வாங்கி விட வேண்டும் என்ற 

அழுத்தமான அபிப்ராயம்.. 

தூக்குத்தண்டனைக்கைதிகளுக்கு

கடைசி ஆசையாய்

உன் சிரிப்பைக்காண வேண்டும் என்ற 

அடக்க முடியாத ஆர்வத்துடிப்பு.. 


நந்தியா வட்டைப்பூ உன் புன்னகை கண்டு பொறாமையில்
ஒரு மாற்று கருத்தது!!


------------------------------------

http://tipstrickstutorials.com/wp-content/uploads/Love_and_Romance_Wallpapers109.jpg

கண்மணி! உன்

கண்களைத்திற! வீட்டில் 

கரண்ட் கட்


----------------------------------------

வீட்டில் விளக்கு அணைந்து விட்டது , 

கொஞ்சம் சிரி பெண்ணே!

தீப்பெட்டி தேட வேண்டும்!

-------------------------------------------

ஈருடல் ஓர் உயிர் ஆகினர்.

. மீண்டும் ஓரு உயிர்!

---------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlc_ZnIrrNQMEF_oNpQ1hPE4slhOx5bL2ybqoU7ZjbkcajHICoyRscxNz8vopCwvn1EXVigose3CrRQa84QSI-8eQ1XL__6bYzOyBTN9aZY9z37S5zS49TRQBDsRpJF4_NJElb9mOstmvM/s1600/Love+Wallpaper+Blog+%252822%2529.jpg

கண்ணே!

நான் எனது கண்களைக்கூட சிமிட்டுவதில்லை.....

உன் பார்வைப்பரிமாறல்களை

இழந்து விடக்கூடாது என்பதற்காக.. 

ஆனால் நீயோ உன் 

கண்களுக்குத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறாய்.. 

ஓவியப்போட்டிக்கு உன்னை வரைந்து அனுப்பினேன்.. 

விலாசம் மாறி விட்டது என்று கவிதைப்போட்டிக்கு 

அதை அனுப்பி விட்டனர்..


கவிதையாய் இருந்த நீ 

கல்லாய் மாறிய மர்மம் என்ன?

Wednesday, January 12, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3

http://www.inneram.com/images/2010/kumudam.gif 
பத்திரிக்கை உலகின் ரஜினி என பெயர் பெற்றதும்,இந்தியாவிலேயே அதிகம்
விற்கும் தமிழ் வார இதழ் என முத்திரை குத்தப்பட்ட்டதும் குமுதம் வார இதழ்.
மேல்தட்டு மக்கள் எப்படி ஆனந்த விகடனை விரும்பி படிக்கிறார்களோ ,அதேபோல் கீழ்தட்டு மக்கள், மற்றும் கிராமப்புற மக்கள் குமுதத்தை அதிகம் விரும்பி படிக்கிறார்கள்.


1. வாசகர் கடிதம் - இந்தியா டு டே இதழுக்கு அடுத்த படியாக  வாசகர் கடிதத்துக்கும் பரிசு கொடுப்பது குமுதம்தான். அஞ்சல் அட்டை என்ற பெயரில் வரும்.புதன் கிழமை வெளியாகும் புக் பற்றி உங்கள் விமர்சனங்களை சனிக்கிழமைக்குள் அனுப்பினால் அடுத்த புதன் கிழமை புக்கில் அது வந்துவிடும்.(வேறு எந்த புக்கும் இவ்வளவு ஃபாஸ்ட்டாக
வாசகர் கடிதத்தை பரிசீலிப்பது இல்லை.)எழுத்துத்துறைக்குப்புதியவர்கள் அஞ்சல் அட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.

அதேபோல் ஜால்ரா அடித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை.க்ளிக் கலாட்டா என்ற பகுதியில் வரும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்களை நக்கல் அடித்துப்போடும் லெட்டர்ஸ்க்கு முன்னுரிமை தருவார்கள்.அரசு கேள்வி பதில்களில் சொல்லப்பட்ட பதில்களை சிலாகித்தோ திட்டியோ எழுதும் கடிதங்கள் போடப்படும். குறிப்பாக லேனா தமிழ்வாணன் எழுதும் கட்டுரைகள்
பற்றியோ,ஆசிரியர் தலையங்கம் பற்றியோ எழுதினால் போட்டுடுவாங்க.

இதற்குப்பரிசு ரூ 50. படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பிடுவாங்க. ( இதில் எல்லா வார இதழ்களும் ஒரு டெக்னிக்கை கடைப்பிடிப்பர்கள்.இதழ் கடைக்கு வந்து 7 நாட்கள் கழித்தே காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பி வைக்கப்படும். ஆர்வக்கோளாறில் நாம் கடையில் வாங்கட்டும் என.)

பிளாக்கில் எப்படி பின்னூட்டமோ அது போல் வாசகர் கடிதம்,நான் ஆரம்பத்தில்  வாசகர் கடிதம் எழுதுவது கேவலம் என நினைத்தேன்.பின் என் எண்ணம் மாறியது. அதிலும் நம் தனி முத்திரையை பதிக்கலாம் என எண்ணம் ஏற்பட்டது.நண்பர்களுடன் சவால் விட்டு ஒரே இதழில் 4 கடிதங்கள் வர வைத்துள்ளேன்.

2. கவிதை - வாரா வாரம் 2 பக்கங்கள் கவிதைக்காக ஒதுக்குவார்கள்.பெரும்பாலும் குட்டிக்கவிதைகள் அனுப்புவது நலம். 4 வரிகள் - 6 வரிகளுக்குள் இருந்தால் நலம். செலக்‌ஷன் செக்‌ஷனில் உள்ளவர்கள் குழந்தைகள் நல விரும்பி போல. பெரும்பாலும் மழலைகள் பற்றிய கவிதைகளே அதிகம் வருகிறது.

திருமயம் பாண்டியன், தஞ்சை அனார்கலி இருவரும் இதில் முத்திரை பதித்தவர்கள். கவிதைக்கான லே அவுட்டும், டிராயிங்கும் பக்காவாக இருக்கும். நமது கவிதை சாதாரணமாக இருந்தால் கூட அவர்கள் பிரசண்ட்டேஷன் அசத்தலாக இருக்கும். எனது கவிதைகள் 28 இதில் வந்துள்ளது.சன்மானம் ரூ 50. குமுதத்தின் சேல்ஸ்,லாபம் இதனுடன் ஒப்பிட்டால் அவர்கள் தரும் சன்மானம் ரொம்பக்கம்மி.
http://www.desikan.com/blogcms/media/1/20080308-Kumudam_sujatha_2.jpg
எஸ் ஏ பி ஒரு முறை லேனாவிடம் டிஸ்கஸ் செய்தபோது சொன்ன வார்த்தை -
குமுதம் புக்கிற்கு வரும் விளம்பர வருமானத்தை கணக்கு போட்டால் ரூ 10 க்கு
விற்கப்படும் புக்கை எல்லாருக்கும் இலவசமாக கொடுத்தாலே ஒரு புக்குக்கு ரூ 1.70 லாபமாம். அப்போ கணக்கு போட்டுக்குங்க. கிட்டத்தட்ட 8 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது.

3.ஒரு பக்கக்கதை. - குமுதத்தில் ஒரு பக்கக்கதை. ரொம்ப ஃபேமஸ்.சும்மா 20 லைன் இருந்தா போதும்.கடைசில ஒரு நீதி இருக்கனும்.தேவை இல்லாத வர்ணனை தவிர்த்து டைரக்டா மேட்டருக்கு வந்துடனும்.புதுமுக எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்குப்பரிசு ரூ 100.  ப . உமா மகேஷ்வரி ஷேக் சிதார் மந்திர், சேலம் செல்வராஜா, சாயம் வே ராஜாராமன், எஸ். ராமன் ,ஐரேனிபுரம் பால்ராசய்யா போன்றர்கள் இதில் கில்லாடிகள்.எனது கதைகள் 30 வந்துள்ளன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxzIGWZpsMKWZYZ9v975qViv32bibotQ_9jFMSgajsYqn8n0Bv_Ee8wRMqx7DlTk-Stlpw7aIfK7MD4VgVed2gJ-Lkh1dJzom3lbvY45QqHo3eciNnE-V9DMXXxcRrVJjcYIVRv8P_D3s/s320/sap-manaian1.jpg
4. சிறுகதை - இப்போது ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சிறுகதை இலக்கியம் அழிந்து வருவது வேதனைக்குரிய விஷயம். ரூ 400 பரிசு தர்றாங்க.பெரும்பாலும் இப்போ பிரபல நாவல் ஆசிரியர்கள் படைப்புதான் வருது. வாசகர் சிறுகதை அதிகம் வர்றது இல்லை.ரொம்ப அரிதா சில சமயம் வாசகர்களுது போடுவாங்க.அனுப்பி 2 மாதத்தில் தேர்வானா போட்ட்டுடுவாங்க. என்னுடையது 2 கதைகள் வந்துள்ளன்.ரா கி ரங்கராஜன்,கீதா பென்னட் இவங்க கதைகள்
அதிகம் வந்திருக்கு,

5. ஜோக் - கடைசியா நம்ம மேட்டர்.வாரா வாரம் சராசரியா 27 ஜோக் போடறாங்க. இதுக்கும் சன்மானம் ரூ 50 தான்.பெரும்பாலும் அரசியல், டாக்டர் ஜோக் போடறாங்க. என்னுடையது கிட்டத்தட்ட 700 ஜோக்ஸ் வந்திருக்கும். குமுதத்துல ஜோக் எழுதியே வீடு கட்டுனாருன்னு வி சாரதி டேச்சு பற்றி ஒரு ஜோக் உண்டு.

குமுதத்தில் பணியாற்றும் ஜெயாப்பிரியன்,குட்டி மு வெங்கடேஷன் இருவருக்கும் 2 பக்கங்கள் ரெகுலரா ஒதுக்கிடறாங்க. அது போக வாசகர்களுக்கு 16 ஜோக்ஸ் போடறாங்க.20 நாட்களில் போட்டுடுவாங்க. நல்ல ஸ்பீடுதான்.எஸ் எஸ் பூங்கதிர், ப உமா மகேஷ்வரி, தஞ்சை தாமு,எஸ் மோகன்,பா ஜெயக்குமார்,ஜோ ஜெயக்குமார் ஜோக் உலகில் கலக்குபவர்கள்.


குமுதம் எனக்கு எப்பவும் செல்லப்பிள்ளைதான். காவேரி நீர்ப்பிரச்ச்னையை
தீர்ப்பது எப்படி? என்ற கட்டுரைப்போட்டியில் நான் ரூ ஒரு லட்சம் பரிசு
வென்றது 2002 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி. (டாக்ஸ் போக
கைக்கு ரூ 68,000 தான் வந்தது என்றாலும் என்னைப்பொறுத்தவரை
தொகை அதிகம்)

1998 -ல் தீபாவளி மலரில் போட தமிழ்நாட்டின் டாப் 10 ஜோக்
ரைட்டர்ஸை அழைத்தார்கள்,அதில் நானும் ஒருவன்.ஹாய் மதன் எங்களுக்கெல்லாம் ரூ 2000 மதிப்புள்ள வாட்ச் பரிசாக குடுத்து எப்படி ஜோக்ஸ் எழுதலாம் என டிப்ஸ் குடுத்தார்.

பொதுவாக பத்திரிக்கைகளில் நம் படைப்பு வந்தால் அந்த புக் நம் கண்களுக்கு
அழகாக தோன்றும். வர்லைன்னா என்ன புக் போடறாங்க என சலிப்பினை  ஏற்படும். அது மனிதனின் மன ரீதியான தடுமாற்றமே. சிலர் குமுதம் புக்கை
சேல்ஸூக்காக தரம் இழந்ததாக சொல்வார்கள். ஆனால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் ரோல் மாடலாக குமுதம் விளங்குகிறது.

வெற்றியாளர்களை ஏதாவது குறை சொல்வது நம்உலக வழக்கம்.
ஆனால் வெற்றியாளனாக மிளிர அவர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு
மட்டுமே தெரியும்.

படைப்புகளை தபாலில் அனுப்ப முகவரி
குமுதம்
த பெ எண் - 2592
சென்னை 600031

கூரியரில் அனுப்ப

குமுதம்
151,புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை 600010

டிஸ்கி - டைட்டிலைப்பார்த்து வெறும்  சுய புராணமாத்தான் இருக்கும் என எண்ணி எனது பழைய பாகங்களை மிஸ் பண்ணியவர்களுக்காக

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

(ஆனந்த விகடன்)

 

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

(தினமலர் - வாரமலர்)