Showing posts with label பசுமை விகடன். Show all posts
Showing posts with label பசுமை விகடன். Show all posts

Sunday, May 27, 2012

சாப்பாட்டுக்கடை - மதுரை - உழவன் உணவகம்

மதுரையைக் கலக்கும் உழவன் உணவகம் !

\

யல்நாட்டின் பீட்சாவையும் பர்கரையும் விற்பனை செய்வதற்காக குளுகுளு ஏ.சி. உணவகங்கள், சாலையோர கோபுரங்களாக உயர்ந்து நிற்கின்றன. அதேசமயம்... களி, கம்பஞ்சோறு, சோளப் பனியாரம், வல்லாரை சுடுச்சாறு, ராகி தோசை... பரம்பரைப் பரம்பரையாகத் தமிழ் மண்ணில் மணக்கும் இயற்கை உணவுகள்... இன்னும் ஃபிளாட்பார கடைகளில்தான் இருக்கின்றன.

இத்தகையக் கொடுமையை மாற்றுவதற்காகவும்... விவசாயிகள் மதிப்புக்கூட்டல் முறையில் லாபம் அடைவதற்காகவும், 'உழவன் உணவகம்' என்ற பெயரில் உழவர் சந்தையில் உணவகத்தை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது உருவாக்கினார் சகாயம். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த உழவன் உணவகம்!


தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும் சகாயம், நாமக்கல் பாணியில் இங்கேயும் 'உழவர் உணவகம்' தொடங்கச் செய்திருக்கிறார். மதுரை-நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ணமடத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில்... தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினை சேவு, பனியாரம்... என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள்.


உழவன் உணவகத்தில் கடை வைத்துள்ள பழையூர் சீனிவாசன், ''இதனால எங்க வருமானம் அதிகரிச்சுருக்கு. தினமும் 8 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. குறைஞ்ச விலையில, உடம்புக்கு ஆரோக்கியமான உணவுகள நாங்க கொடுக்கறதால... நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டே இருக்காங்க. வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமா வந்து சாப்பிட்டு பாத்து, பாராட்டுறாங்க.


 அடுத்தக் கட்டமா... பால் பொருள்களை வெச்சு இயற்கையான நறுமணப்பால், குளிர்பானங்களைத் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு சவால் விடுற வகையில இருக்கும்'' என்று சொன்னார்.


'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தனலட்சுமியும் இங்கே ஒரு கடை வைத்திருக்கிறார். ''வறுமையில வாடிக்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, பயிற்சி கொடுத்து, இங்க கடையும் வெச்சுக் கொடுத்திருக்காரு, கலெக்டர் சகாயம். இந்த வயசுலயும் சுயமா உழைச்சு சாப்பிடறது எனக்கு சந்தோஷமான விஷயமாவே இருக்கு. இந்த வியாபாரம் மூலமா, தினமும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது'' என்று உற்சாகமாகச் சொன்னார் தனலட்சுமி.

உழவன் உணவகத்தை நிர்வகித்து வரும் மதுரை வேளாண் விற்பனைத்துறை அலுவலர், ஆறுமுகம். ''உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல்... உலக அளவில் தனக்கான சந்தையை ஏற்படுத்தி வருகிறது, இந்த உழவன் உணவகம். இங்கிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஆர்டரின் பேரில் உணவு வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.


 சமீபத்தில் மதுரையில் நடந்த வடமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு, இங்கிருந்துதான் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அவர்களெல்லாம் இந்த விவசாயிகளை மனதாரப் பாராட்டினார்கள். மொத்தத்தில் விவசாயிகளின் வருமானத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்வதுடன், நுகர்வோருக்கும் ஆரோக்கியமான உணவுகளைக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறது இந்த உழவன் உணவகம்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

மதுரையில் இருக்கும் 'உழவன் உணவகம்' இப்படி சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், ஏற்கெனவே சகாயத்தால் நாமக்கல்லில் துவங்கப்பட்ட 'உழவன் உணவகம்' கிட்டத்தட்ட மூடுவிழா நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிற செய்தி வேதனையைத் தருகிறது! 'உழவர்சந்தையில் உழவன் உணவகம் நடத்தக்கூடாது என்று அங்கு உணவகங்கள் நடத்தி வருபவர்கள் மிரட்டப்படுகிறார்களாம்!

Posted Date : 12:05 (17/05/2012)Last updated : 12:05 (17/05/2012)
பசுமை விகடனில் இருந்து...


Thursday, May 03, 2012

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!




மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்




டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Sunday, May 29, 2011

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்

Wednesday, April 20, 2011

ஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்

http://farm4.static.flickr.com/3062/3041844520_081b6957f6.jpg

''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

ஜி. பழனிச்சாமி  
 பளிச் பளிச்...
ஏக்கருக்கு 1,700 கன்றுகள்.
சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
வாரத்துக்கு இரண்டு அறுவடை. 
அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு.

இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.
பயிற்சிக்குப் பின் இயற்கை! 
அறுவடை செய்யப்பட்ட வாழை இலைகளை மனைவி சொர்ணாவுடன் இணைந்து கட்டுக் கட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், அப்படியே நம்மிடமும் பேச ஆரம்பித்தார்.
''எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. எங்க பகுதி கடுமையான வறட்சிப் பகுதி. கிணத்துத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை. அந்தத் தண்ணியும் ஒரு ஏக்கருக்குதான் பாயும். அதனால இறவையில மஞ்சள், மரவள்ளி, வாழைனு மாத்தி மாத்தி சாகுபடி பண்ணிக்குவோம். மீதி நிலத்துல மானாவாரியா கடலை, எள், ஆமணக்குனு வெள்ளாமை வெப்போம்.
ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான்.ஈரோடுல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பு, 'இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சி ரெண்டுலயுமே கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துருக்கேன். இப்போ மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்'' என்று மகிழ்ச்சி பொங்க முன்னுரை கொடுத்தவர்,

 http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_58661615849.jpg
''போன போகத்துல தக்காளி போட்டிருந்தோம். 30 டன் மகசூல் கிடைச்சுது. அதை அழிச்சிட்டு புரட்டாசிப் பட்டத்துல இலைவாழை நடவு செஞ்சோம். தை மாசத்துல இருந்து அறுவடை பண்ணிக்கிட்டுஇருக்கோம்.

நாமே வேலை செய்தால்... கூடுதல் லாபம்! 
இயற்கை முறையில் சாகுபடி செய்யுறதால தளதளனு நல்லாவே வளர்ந்திருக்கு வாழை. ஒரு ஏக்கர்ல மட்டுமே வெள்ளாமை பண்றோம். மருந்தடிக்க, உரம் வெக்கனு இந்த வேலைகளுக்கெல்லாம் ஆளுங்கள வெக்கிறதில்ல... நாங்களேதான் பாத்துக்குறோம்.

வாழையைப் பொறுத்தவரைக்கும் உழவுக்கு, நடவுக்கு, களை எடுக்குறதுக்கு மட்டும்தான் வெளியாட்கள். அறுவடையெல்லாம் நாங்க ரெண்டு பேரே பாத்துக்குவோம். இதனால எங்களுக்குக் கூடுதல் லாபம்தான்'' என்ற நல்லசிவம், ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
ஆடியில் சணப்பு... புரட்டாசியில் வாழை! 
''புரட்டாசி மாதத்தில் வாழை நடவு செய்ய வேண்டும் என்பதால், ஆடி மாதத்திலேயே நிலத்தை நன்கு உழுது, 35 கிலோ சணப்பு  விதைகளை ஏகத்துக்கும் விதைத்து, வாரம் ஒரு தண்ணீர் விட்டுவர வேண்டும். 40 நாட்கள் கழித்து அதை மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து ஓர் உழவு செய்ய வேண்டும்.


ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook

ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3167/2681755070_cbb269bbfa.jpg
ஐந்தடி இடைவெளி! 
பிறகு... வரிசைக்கு வரிசை, பக்கத்துக்குப் பக்கம் ஐந்தடி இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும் (வழக்கமாக வாழைக்கு அதிக இடைவெளிவிட வேண்டும். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது குறைந்த இடைவெளி இருந்தாலே போதுமானது. இலைகளை அடிக்கடி அறுவடை செய்வதால், இந்த இடைவெளியிலேயே தேவையான சூரியஒளி மற்றும் காற்றோட்டம் வாழைக்குக் கிடைத்து விடும்).

ஒவ்வொரு குழியும் அரை அடி ஆழம் மற்றும் அகலத்துடன் இருக்க வேண்டும். மண்வெட்டி மூலமே குழி எடுத்து விடலாம். இந்த இடைவெளியில் குழி எடுக்கும்போது நிலத்தின் வாகைப் பொறுத்து 1,700 குழிகள் வரை எடுக்க முடியும் (இவர் 1,600 குழிகள் எடுத்திருக்கிறார்). பிறகு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுரக வாழைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் (இவர் பூவன் ரகக் கன்றுகளை நடவு செய்திருக்கிறார்). நாம் குழிகளை எடுத்து நிலத்தைத் தயார் செய்து வைத்துவிட்டால், கன்று விற்பனை செய்யும் வியாபாரிகளே நடவு செய்து கொடுத்து விடுவார்கள். பிறகு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம்! 
நடவு செய்த 20ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தை இதேபோல சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும்.

40ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய ஆர்கானிக் உரத்தை, கன்றுக்கு 60 கிராம் வீதம் அடிப்பகுதியில் வைத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 100 கிலோ உரம் தேவைப்படும்).

ஐந்தாம் மாதத்திலிருந்து அறுவடை! 
60ம் நாள் மீண்டும் ஒரு முறை களையெடுத்து மண் அணைத்துவிட வேண்டும். 90ம் நாள் 1,600 கிலோ மண்புழு உரத்துடன் 2 கிலோ சூடோமோனஸ் மற்றும் 2 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கும் அடிப்பகுதியில் ஒரு கிலோ அளவுக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
 http://yananwritings.files.wordpress.com/2010/09/banana-leaf.jpg
நடவு செய்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 13 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஏழாம் மாதம் தேவைப்பட்டால், சாம்பல்சத்து அடங்கிய ஆர்கானிக் உரத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல பயிர் ஊட்டம் குறைந்து காணப்பட்டால், 3 லிட்டர் பஞ்சகவ்யா அல்லது 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை             100 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.
இலைவாழைக்கு இரண்டு தழைவுகள்! 
அறுவடையைத் தொடங்கும் ஐந்தாம் மாதத்திலேயே பக்கக்கன்றுகளும் முளைத்து வந்து விடும். இவற்றில் தரமானக் கன்றுகளை விட்டுவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். பக்கக் கன்றுகளிலும் ஐந்து மாதத்துக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்யலாம்.

தாய் மரங்களில் அறுவடை முடிந்த ஐந்து மாதங்கள் வரை பக்கக் கன்றுகளில் அறுவடை செய்யலாம். அதன்பிறகு, மொத்தமாக எல்லா மரங்களையும் அழித்துவிட வேண்டும். பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது மூன்று அல்லது நான்கு தழைவு வரை பக்கக் கன்றுகளை விடுவார்கள். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது இரண்டாம் தழைவோடு நிறுத்தி விட வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது மரங்கள் நல்ல வலிமையாக இருப்பதோடு வெயில், மழை ஆகியவற்றையும் தாண்டி நிற்கும். இலைகளும் தடிமனாக இருப்பதால் அதிகமாகக் கிழியாது.’
இரண்டரை லட்ச ரூபாய் லாபம்! 
சாகுபடிப் பாடத்தை நல்லசிவம் முடிக்க, மகசூல் மற்றும் வருமானம் பற்றி ஆரம்பித்தார் அவருடைய மனைவி சொர்ணா.
''வாரத்துக்கு இரண்டு முறை இலைகளை அறுக்கலாம். ஆரம்பத்துல கம்மியாத்தான் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூடும். அறுப்புக்கு 1,300 இலைகள் வீதம் மாசத்துக்கு 10,000 இலைகள் சராசரியா கிடைக்கும்.                 18 மாசத்துக்கு இப்படி தொடர்ந்து அறுவடை பண்ணலாம். இயற்கை முறையில விளைவிக்கறதால ரெண்டு, மூணு நாள் வரைக்கும்கூட எங்க இலைகள் வாடாம இருக்குனு வியாபாரிங்க சொல்வாங்க.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibO1-YcH15ku932R2gmQnZ0g2iZTMD-Ar_TmKSwfJo0VPMOfY_nIkPxS2tY-BFigsFcfAR0nnvBkZhnfD3Fcm5oT6m3yBrNT3djcsvywVA7JKZcUS_BIOUdAtTG8GxGGNN4vauu0nQI_av/s320/vaazhaimaram-01.jpg
அதனால, இலைக்கு பத்து பைசா கூடுதலாவும் கொடுக்கறாங்க. இலைக்கு ரெண்டு ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. எப்படிப் பாத்தாலும், மொத்தத்துல ரெண்டரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்றார் மகிழ்ச்சியாக. 

 தொடர்புக்கு


எஸ். நல்லசிவம், அலைபேசி: 98422-48693.
'பசுமைத்தாய் உழவர் மன்றம்!’
நல்லசிவம், தன்னுடைய பகுதியில் இருக்கும் 13 விவசாயிகளை ஒன்றிணைத்து தோட்டக்கலைத்துறை உதவியுடன் 'பசுமைத்தாய் உழவர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம், இயற்கை விவசாயம், கருவிகள் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி  பயிற்சி முகாம்கள் நடத்துவதோடு பசுமைச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.