Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, December 02, 2010

ஈரோடு ஹாஸ்பிடலில் நடந்த நூதன மோசடி

http://www.aintreehospitals.nhs.uk/Library/2008_images/Operation%20taking%20place.jpg 
20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.சேலம் நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் சப் எடிட்டர் திரு வேல்முருகன் அவர்களிடமிருந்து எனக்கு
 ஒரு ஃபோன் வந்தது.”செந்தில்,திருச்சில இருந்து நம்ம நண்பர் ஒருத்தர்
ஒரு மேரேஜ் அட்டெண்ட் பண்ண ஈரோடு வந்திருக்கார்.அவரும்,அவரது
மனைவியும்,மேரேஜ் முடிஞ்சி திருச்சி திரும்பறப்ப அவருக்கு திடீர்னு
ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு,இப்போ அவங்க ஈரோடு மூலப்பாளையம்
பக்கத்துலதான் இருக்காங்க,உடனே போய் பாருங்க,அவங்களுக்கு ஹெல்ப்
பண்ணுங்க” என்றார்.

நான் உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தேன்.108க்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள்.எங்கேஜ்டு டோனாக தொடர்ந்து வரவே  வேறு பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவு செய்தோம்.அருகில் சவீதா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப் அருகே செங்குந்தர் ஸ்கூல் பக்கத்தில்
விஜயா ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு
யுனிவர்சல் ஹாஸ்பிடல் என ஒரு ஹாஸ்பிடல் அருகில் இருப்பதாகவும் அங்கே சேர்க்கும்படியும்அறிவுறுத்தினார்.அதன்படியே செய்தோம்.பேஷண்ட் திருச்சி நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் எடிட்டர்.அவரது மனைவி திருமணத்துக்கு வந்ததால் கழுத்து நிறைய நகையுடன் இருந்தார்.அவரது பகட்டான தோற்றத்தை பார்த்து டாக்டர் என்ன நினைத்தாரோ? (வேற என்ன நினைத்திருப்பார் ,கறந்துடலாம்னு நினைச்சிருப்பாரு). என்னை தனி அறைக்கு அழைத்தார்.

“ சார்,பேஷண்ட்டுக்கு மைல்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கு,இதுக்கு உடனே ட்ரீட்மெண்ட் பண்ணனும்.ரூ 3000 க்கு ஒரு ஊசி போடனும்.இன்னொண்ணு ரூ 8000க்கு இருக்கு,லாஸ்ட்டா ரூ 25,000 க்கு ஒரு ஊசி இருக்கு.இதுதான் சேஃப்.நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க.என்றார்.நான் நண்பரின் மனைவியிடம் போய் நிலைமையை சொன்னேன்.அவர் அழுதுகொண்டே
இருந்தார்.எதுவும் பேசக்கூடிய நிலையிலோ,முடிவு எடுக்கும் சூழ்நிலையிலோ அவர் இல்லை.இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் என்ன செய்வது என்று எனக்கும் தோன்றவில்லை.அவர் பணம் ஏதும் எடுத்து வரவில்லை
நண்பரின் பர்சில் ஏ டி எம் கார்டு எதுவும் இல்லை.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து

நான் டாக்டரிடம் “சார் ,அவரது சொந்தக்காரங்க எல்லோரும் திருச்சியில்தான் இருக்காங்க.எனவே இப்போதைக்கு ரூ 3000 ஊசியே போடுங்க..ஓரளவு நிலைமை சரி ஆனதும் அவங்க திருச்சி போய்ட்ரீட்மெண்ட் பார்த்துக்குவாங்க.” என்றேன்.

உடனே டாக்டருக்கு கோபம் வந்து விட்டது”.எனக்கென்ன?நீங்க சொல்ற ஊசி போடறேன்.”என்று சொல்லி விட்டு ஐசி யூனிட்டுக்கு சென்று விட்டார்.அரை மணி நேரம் கழித்து பேஷண்ட்டை போய் பார்த்தோம்.ஸ்லீப்பிங்க் டோஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் அவர் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அவருக்கு வயது 47.இதற்கு முன் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையாம்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் அழைத்தார்,” சார்,கே எம் சி ஹெச் (கோவை மெடிக்கல் செண்ட்டர்) கொண்டுபோயிடுங்க.அதான் பெஸ்ட்.இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க ,அந்தம்மா கிட்டேயும் சைன் வங்கனும் என்றார்.

அவர் இன்னும் அழுது கொண்டே இருந்தார்.எனக்கு டாக்டரின் நோக்கம் தெளிவாக விளங்கி விட்டது. ஹாஸ்பிடல்களுக்குள் ஒரு லிங்க் இருக்கிறது.ஒரு டாக்டர் இந்த ஹாச்பிடலில் சேர்த்த் விடுங்கள் என்றால் அவருக்கு ஒரு கமிஷன் உண்டு.இப்படி மாற்றி விடுவதால் நமக்கு டாக்டர் மேல் நம்பிக்கை வரும்.மெண்ட்டல் டென்ஷன் ஜாஸ்தி ஆகும்மேட்டர் சீரியஸ் என செலவு செய்ய தயார் ஆகி விடுவோம். நான் சார் பேஷண்ட் கண் விழிக்கட்டும் ,அது வரை இங்கேயே இருக்கொம் “என்றேன்.

3 மணி நேரம் கழித்து பேஷண்ட் கண் விழித்தார்.நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து விட்டர்ர், இப்போதான் அவரது மனைவிக்கு திருப்தியே,அழுகையை நிறுத்தி சகஜ நிலைக்கு வந்தார். டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி கிளம்பினர்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேன்ண்டிய பாடங்கள்

1.  35 வயது நிரம்பியவர்கள் கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது நல்லது.

2.  எப்போதும் பேங்க்கில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பில் வைத்திருக்கவேண்டும்.   ஏ டி எம் கார்டு கைவசம் இருக்க வேண்டும்.

3  .கல்யாணத்துக்கு வெளியூர் போகும்போது நகைகள் அதிகம் அணிய வேண்டாம்.கண்ணை  உறுத்தும் வகையில் அணிவதை தவிர்க்கனும்.

4.  பிரைவேட் ஹாஸ்பிடல் சேஃப்டி என்ற எண்ணத்தை அகற்றிக்கொள்ள வேண்டும்.

5.  40 வயதுக்குப்பிறகு தனியே வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கனும்.

6.  சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்.

டிஸ்கி - பின் விசாரித்த வகையில் ஈரோட்டில் பல ஹாஸ்பிடல்களில் இந்த மாதிரி லிங்க் இருப்பதாகவும்,அட்மிட் பண்ணி 2 மணி நேரத்தில் அந்த ஹாஸ்பிடல் போ, இந்த ஹாஸ்பிடல் போ என பந்தாடப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது பற்றி விசாரனைகள் நடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் நல்லது.ரமணா படத்தில் வருவது போல் நடக்கும் ஹாஸ்பிடல் கொள்ளைகளைதடுக்க நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.


8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.


மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?

Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?



ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”


டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.


டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்



சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.


சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.


சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.


வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.


ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.



வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?

Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)





அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்


டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)


Monday, October 18, 2010

சம்சாரம் என்பது வீணை (வீணே?!)

 

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொரு  கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள்.


டிஸ்கி 1 - இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.


டிஸ்கி 2 - நயன்தாரா ஃபோட்டோ சும்மா கிளாமருக்கு,அவருக்கோ அவரது தற்போதைய காதலருக்கோ அட்வைஸ் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை


டிஸ்கி 3. - லைப்ரரில இருந்து புக் சுடுவது எப்படி? புக் எக்ஸிபிஷனிலிருந்து புக் சுடுவது எப்படி? எனது அடுத்தடுத்த பதிவுகளாக வர இருக்கிறது,கபர்தார்