Showing posts with label துப்பாக்கி. Show all posts
Showing posts with label துப்பாக்கி. Show all posts

Thursday, November 22, 2012

"தீனா' , "துப்பாக்கி' ஒப்பிட்டா? - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

கால்ஷீட்டுக்காக கதை எழுத மாட்டேன்! - ஏ.ஆர்.முருகதாஸ்

இப்போது பேசலாம், அப்போது பேசலாம் என தாமதித்துக் கொண்டே இருந்தது இயக்குநர் முருகதாஸூடனான உரையாடல். எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடன் பேசியதிலிருந்து..
.கமர்ஷியல் படங்கள்தான் எப்போதும் விஜய் பாணி. உங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகுமா? எப்படி நடந்தது இந்த மேஜிக்?
 அதுதான் சினிமா. விஜய்யுடன் நான் சேர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். அவருடன் சேர எனக்கு பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஒரு கதையை பிடிப்போம். இது எந்த ஹீரோவுக்கு செட்டாகும் என பார்ப்போம். அப்படித்தான் என் எல்லா சினிமாக்களும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விஜய் எனக்கு பழக்கம். நான் உதவி இயக்குநராக இருக்கும் போதே ""ஒரு சினிமா பண்ணலாம் கதை ரெடி பண்ணுங்க''ன்னு சொல்லியிருக்கிறார் விஜய். நானும் கதை தயார் செய்வேன்.
 ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் எங்களை சேர விடவில்லை. நான் ஒரு படத்தை தொடங்கியிருக்கும் போது, அவர் இன்னொரு படத்தை முடிக்கும் தருவாயில் இருப்பார். நான் தயார் நிலையில் இருந்தால் அவர், ""இந்த ஒரு படத்தை முடித்து விட்டு வந்துடுறேன்'' என்பார். இப்படியே காலம் கடந்து விட்டது. எஸ்.ஏ.சி.சார்தான் எங்களை இணைத்தார். ""விஜய்க்கு ஒரு படம் பண்ணனும். எப்போதுமே தயாராக இருக்கோம்'' என்றார். நானும் "ஏழாம் அறிவு' முடித்து விட்டு உடனடியாக விஜய் படத்துக்கான ஒன் லைனை பிடித்து விட்டேன். அதுதான் இந்த "துப்பாக்கி'.





படத்தில் விஜய் ஒரு இலங்கை அகதி, ராணுவ வீரன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்னும் என்னென்மோ செய்திகள் உலவுகிறதே இதில் எது உண்மை?



இதற்கு பட்டென பதில் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அதில்தான் கதை இருக்கிறது. நீங்கள் நினைக்கிறது எல்லாமே இதில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விஜய் ரசிகர்களுக்காக ஒரு படம் செய்திருக்கிறேன். அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் காத்திருக்கிறது. விஜய் ஸ்டைலை விட்டு நிச்சயம் கதை விலகிப் போகாது. ப்ளஸ் கொஞ்சம் கமர்ஷியலையும் சேர்த்திருக்கிறோம். ஹீரோ, ஹீரோயின் இருவருமே மும்பையில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.



எல்லாமே கலந்து கிடக்கும் மும்பையின் சுவராஸ்யமான முகம்தான் கதை. தமிழ் சினிமா பார்க்காத புதிய தொனியில் கதை இருக்கும், ஜெகதீஷ் என்ற இளைஞனுக்கு ஏற்படும் பிரச்னைகள். அதற்கு அவன் எடுக்கும் முடிவுகள் என கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறோம். முதல் பாதி, அடுத்த பாதி இரண்டுமே பரபரக்கும். இந்த கதை ஏதேச்சையாகத்தான் முடிவானது. முதலில் ஒன் லைன்தான் சொன்னேன். ஷூட்டிங் கிளம்புவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் விஜய்யிடம் கதை சொன்னேன். "துப்பாக்கி' என்ற பெயருக்கேற்ற பரபரப்பு கூட்டியிருக்கிறேன்.



ஹிந்தி உலகில் உங்களுக்கு பெரிய பெயர் இருக்கிறது. பாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் உங்கள் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அதை பயன்படுத்தலாமே. ஏன் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு?



எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். நீங்கள் சொல்லுவதை போல் நான் ஹிந்தியில் மட்டுமே படம் இயக்கி கொண்டிருக்க முடியாது. தமிழ் சினிமாதான் என் அடையாளம். அந்த அடையாளத்தை என்றைக்கும் நான் இழக்க மாட்டேன். ஹிந்தி "கஜினி' சமயம் எனக்கு நிறைய கூச்சம். ""இவர்தான் டைரக்டரா''ன்னு கேட்டவர்கள் நிறைய பேர். படம் பார்த்தவர்கள் ""இவரா இந்தப் படத்தை எடுத்தார்''ன்னு ஆச்சரியமாக கேட்டார்கள். அப்போதே அப்படியென்றால், "தீனா' எடுக்கும் போது நான் எப்படி இருந்திருப்பேன்.



 "கஜினி' எல்லா மொழிகளுக்கும் செட் ஆகிற கதை. அது மாதிரி கதைகள் கிடைத்தால் நிச்சயம் அங்கு இருப்பேன். கால்ஷீட் தர காத்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த கதையையும் கொண்டு போய் திணிக்க முடியாது. மும்பையில் வாழும் ஒரு தமிழ் இளைஞனின் கதைதான் "துப்பாக்கி'. அதை தமிழில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். சில மாற்றங்களோடு "துப்பாக்கி' ஹிந்திக்கும் ரீமேக் ஆக போகிறது. அக்ஷய்குமார் ""எப்போ வேண்டுமானாலும் வாங்க''ன்னு கால்ஷீட் வைத்து காத்திருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நான் எங்கே இயங்க வேண்டும் என்பதை கதைகள்தான் தீர்மாணிக்க வேண்டும்.



அஜித், சூர்யா, விஜய் மூன்று பேரையும் வைத்து இயக்கியிருக்கிறீர்கள். மூன்று பேரும் எப்படி?



எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜித். யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாதபோது, ""கதை சொல்லு பார்க்கலாம்'' என்று கைப்பிடித்து அழைத்து வந்தவர். அவர் மீது எப்போதுமே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. பவர் ஃபுல்லா அவருக்கு கதை தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயல்பா, உண்மையா இருக்கும் அவருக்கு கதையும் அவரைப் போலவே அமைய வேண்டும். பார்க்கலாம். சூர்யா இல்லையென்றால் ஏழாம் அறிவை என்னால் செய்திருக்கவே முடியாது.



 சினிமாவுக்கான புரிதல் அவருக்கு நிறையவே இருக்கிறது. இன்னும் என்ன வேண்டும் என கேட்கிற தைரியம் உள்ள ஹீரோ அவர். விஜய்யை அவ்வப்போது பார்ப்பேன். ஓரிரு வார்த்தைகள் பேசுவார். இவர் இப்படித்தான் என நானும் நினைத்து விடுவேன். நெருங்கி பழகி பார்த்தால் அவ்வளவு விஷயம் பேசுகிறார். நான் என்றைக்கும் ஆச்சரியமாக பார்க்கும் ஹீரோ அவர். மும்பை வாசம் அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ""ஹிந்திக்கு வாங்க''ன்னு சொல்லியிருக்கிறேன். தமிழை தவிர்த்து எங்கும் படம் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை அவர் மாற்றினால், சீக்கிரமே ஹிந்திக்கும் அழைத்துப் போய் விடுவேன்.



 "ரமணா'வுக்கு பின்புதான் விஜயகாந்த் அரசியல் பேசினார். அதே ரமணா தெலுங்கில் வந்த பின்தான் சிரஞ்சீவி அரசியலுக்குள் வந்தார். ஆனால் விஜய் எப்போதே அரசியல் வட்டத்துக்குள் வந்து விட்டார். என்ன நடக்கும் என்ற கணிப்பு இருக்கிறதா?




ஹீரோக்களின் அரசியல் ஆசைகளுக்கு படம் எடுப்பது என் வேலை இல்லை. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். கதைக்கு எது தேவையோ அதை மட்டுமேதான் கொடுப்பேன். ஹீரோக்களிடமும் அதற்கேற்ற உழைப்பை மட்டும்தான் கேட்பேன். "ரமணா'வுக்குப் பின் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும், "ரமணா' தெலுங்கு ரீமேக்குக்கு பின் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்ததும் நானே எதிர்பார்க்காத ஒன்று.



"தீனா' முருகதாஸýக்கும் "துப்பாக்கி' முருகதாஸýக்கும் என்ன வித்தியாசம்?



கொஞ்சம் நிதானம், பக்குவம் கூடியிருக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி முருகதாஸீன் பேஸிக் கேரக்டர் இன்னும் மாறவில்லை. எதற்காகவும், எப்போதும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. "தீனா' தொடங்கி ஹிந்தியிலும் படம் இயக்கி, இப்போது "துப்பாக்கி' ஏழாவது படம். ஆனாலும் என் பலம், பலவீனம் இரண்டையும் தெரிந்து கொள்ளும் ஆசையே இன்னும் வரவில்லை. இவர் நல்லவர் என நினைத்து முகம் காட்டினால், மறுநாளே மறைத்து வைத்திருக்கும் கத்தியின் மூலம் தாக்க வருகிறார். நல்லது, கெட்டதை பிரித்து பார்க்க கொஞ்சம் பழக்கம் வந்திருக்கிறது. வெற்றி கிடைத்தால் கொண்டாடுகிற அளவுக்கு, தோல்வி கிடைத்தால் நான் துவண்டு விடுவேன். அதனால் என்னை தோல்வி தொட்டு விடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.
 நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

Thursday, October 25, 2012

துப்பாக்கி - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி @ விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg"ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை!"

எம்.குணா
'துப்பாக்கி’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வந்து அமரும் ஏ.ஆர்.முருகதாஸ் முகத்தில் திருப்தி ததும்பும் புன்னகை. ''படம் பிரமாதமா வந்திருக்கு. இதுவரை விஜயைப் பிடிக்காதவங்களுக்குக்கூட 'துப்பாக்கி’ விஜயைப் பிடிக்கும்.



இங்கே படம் எடுக்கிறதுகூடக் கஷ்டம் இல்லைங்க... படத்துக்கு ஏத்த தலைப்பு பிடிக்கத்தான் போராட் டமா இருக்கு. ஐந்நூறு ரூபாயைக் கட்டிட்டு கோர்ட்ல கேஸ் போட்டுர்றாங்க. இப்பதான் பெரிய நிம்மதியா இருக்கு!'' - 'துப்பாக்கி’ தலைப் பைத் தக்கவைத்துக்கொண்ட உற்சாகத்தோடு பேசினார் முருகதாஸ்.




 ''தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலத்தில் 'குரு சிஷ்யன்’ படத்தை எஸ்.பி.முத்துராமன் 24 நாட்களிலேயே முடித்தார். படமும் ஹிட். ஆனால், இப்போது ஒரு ஹீரோவை வைத்து இயக்கும் படத்தை ஒவ்வோர் இயக்குநரும் வருஷக் கணக்கில் இயக்குவது சரியா?''  



''உங்கள் குற்றச்சாட்டு உண்மைதான். நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஷூட்டிங், கால்ஷீட், பயணம்னு எதைப் பத்தியும் தெளிவான திட்டமிடல் இல்லை. அதுவும் போக, இப்போ தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுக்க மார்க்கெட்.


 சின்னமனூர் செல்வராசுக்கும் படம் பிடிக்கணும்; சின்சினாட்டி விக்கியையும் படம் அசத்தணும். அதுக்கான மெனக்கெடல், தரம் இதுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு வருஷ உழைப்பு தேவைப்படும்தான். அதைத் தப்பு சொல்ல முடியாது.''



''இந்தி சினிமாவில் உங்களுக்கு மார்க்கெட் இருக்கு. ஒரு தமிழ் ஹீரோவை வெச்சு இந்தியில் படம் பண்ணணும்னா யார் உங்க சாய்ஸ்?''



''விஜய், அஜித், சூர்யா... மூணு பேருமே என் சாய்ஸ்தான். இந்தியில் எனக்கு மட்டும் இல்லை... இவங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருக்கு. 'துப்பாக்கி’ ஷூட்டிங் நடந்தப்போ, மும்பையில் எங்கே வெச்சு விஜயைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடிச்சு, சேர்ந்து சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க இந்திவாலாக்கள்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjXJhCc7jf3go_t6dhz_4LaKuLii5a63a36ERZq-G4oV9doCZxF_3r5ihE89wxMsX6qI9e0nFsisehXBPh-uqcLIcQuQ8YulhN-YFq9HXzQKSGulrZ8kNlhbGqVL3eTWT9r57QJYM9dmo/s1600/0.jpg


அவருக்கே அது ஆச்சர்யமா இருந்துச்சு. விஜய்க்குள்ள ஒரு பிரமாதமான நடிகன் இருக்கான். இன்னும் சரியான தீனி கிடைக்காமத் தவிச்சுட்டு இருக்கான். அஜித் ஸ்க்ரீன்லதான் சாஃப்ட்டா இருக்கார். நேர்ல பழகும்போது அவர்கிட்ட இயல்பாவே இருக்கும் ஆக்ரோஷம், எமோஷன் எல்லாம் பிரமிப்பா இருக்கும். அஜித்தின் அந்த ராவான எனர்ஜிக்கு ஏத்த கதையில் இன்னும் அவர் நடிக்கலை. ஆக்ஷனோ, காதலோ... டபுள் செஞ்சுரி அடிச்சுட்டுப் போயிருவார் சூர்யா. இவங்க மூணு பேருக்கும் ஏத்த கதைகளை அமைச்சுட்டு நானே அவங்க ஒவ்வொருத்தரையும் இந்தியில் இயக்குவேன்.''




''அது என்ன... சினிமா விழாக்களில் நடிகைகளைப் பற்றிப் பேச்சு வந்தால் நீங்க சட்டுனு கோபப்படுறீங்க?''



''அந்த அளவுக்கு சிலர் என் மனசைக் காயப்படுத்தி இருக்காங்க. என் படத்தில் நடிச்ச ஒரு நடிகை பண்ண அலட்டல், பந்தா எல்லாம்... வேண்டாங்க... நினைச்சாலே சங்கடமா இருக்கு. ஹீரோ வர்ற காட்சி மட்டும் இல்லை, படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமா இருக்கணும்னு இழைச்சு இழைச்சு வேலை பார்ப்பேன் நான்.


 படத்துல ஒரு சீன்கூடத் தேவை இல்லாம இருக்கக் கூடாதுனு மொத்தத் திரைக்கதையையும் இறுக்கிப் பக்காவா வெச்சிருப்பேன். ஆனா, அந்த நடிகை 'எனக்குப் படத்துல தனியா பாட்டு வேணும்’னு  அடம்பிடிச்சாங்க. அவர் நல்லாத் தமிழ் பேசுவார். குரலும் நல்லா இருக்கும். அதனால, அவரோட சொந்தக் குரல்லயே டப்பிங் பேசச் சொன்னேன்.


http://www.vikatan.com/av/2012/06/mgqwyz/images/p14b.jpg



ஆனா, அதுக்கு பத்து நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் ஆகும்னு தவிர்த்தார். இத்த னைக்கும் என் படங்களில் ஹீரோக்களுக்குச் சரிசமமான ஸ்கோப் ஹீரோயின்களுக்கும் இருக்கும். அதான் சொல்றேன்... இங்கே ஹீரோக்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு சில நடிகைகளுக்குச் சுத்தமா இல்லை. இதோ இப்போ 'துப்பாக்கி’யில் நடிச்ச காஜலுக்கு கற்பூரப் புத்தி. நான் நினைச்சதுக்கும் மேல பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திட்டாங்க.''




''அது என்ன... 'மாற்றான்’ தொடர்பான உங்க ட்விட்டர் கமென்ட்ல 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு’னு சொல்லி இருந்தீங்க. கே.வி.ஆனந்த், சூர்யா... யார் மேல கோபம்?''



''நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே, ஒளிப்பதிவில் கே.வி.ஆனந்த் சார் ஜாம்பவான். ஒரு சீனியரா அவர் மேல் எனக்கு எப்பவும் மதிப்பு, மரியாதை உண்டு. சூர்யா என் மேல அன்பும் அக்கறையும்கொண்ட நண்பர். அவங்க ரெண்டு பேரையும் காயப்படுத்துறது என் நோக்கம் இல்லை. போன ரெண்டு மாசமாவே யாரோ ஒருத்தர், வேணும்னே என்னைப் பத்தி தப்புத் தப்பா ட்விட்டர்ல கமென்ட் பண்ணிட்டு இருந்தார். அவருக்கு நான் சொன்ன பதில்தான், 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு.’ மத்தபடி அதுல வேற எதுவும் இல்லை!''

 நன்றி - விகடன்



http://www.glamourfm.com/wp-content/uploads/2011/03/Kajal-Agarwal-Hot-Photoshoot-in-Red-Dress-6.jpg

Thursday, June 07, 2012

'துப்பாக்கி’! - ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி @ விகடன்

http://mimg.sulekha.com/tamil/thuppaki/stills/thuppaki-05.jpg 

''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம்,  ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’!




1. ''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?''



''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். 


ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!''





 
2. ''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''



''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன்.




 காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''



3. ''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''



''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். 


அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். 


 இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''

http://www.actorvijay.net/phpThumb/user_image/Thuppakki%20new%20still.jpg



'4. 'விஜய் சுருட்டு பிடிக்கிற 'துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?''


''என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, 'துப்பாக்கி’யில் அந்த சுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை. ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம்.


 யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. 'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? 'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே?  அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''



5. ''விஜய் இந்தி 'ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க... ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?''


''அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் 'துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். 



ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். 'துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், 'சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். 'தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். 'ஓ, அப்படி ஒண்ணு இருக்கா. நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா... என் அடுத்த இந்திப் படம் 'துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqS__HpzC3gA3Wy79dhr5bU96Xk09TRpC_KnYpBee4YNb2EyMZSiAIupcuOxatKIyYrZFQVrxHGNdJ81yDwhLNKjO7Eoi1PlMw88fHPpTiD3I0lfIh0S6HuvMTgBGVhygiUnWduWEJQFA/s1600/Kajal-Agarwal-in-Tupakki-Movie-Most-Inside-1.jpg



'6. ' 'ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார். விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா 'துப்பாக்கி’யில் இருக்கா?''


''ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். 'ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே 'ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!''


 http://www.trendymovies.com/wp-content/gallery/tamanna-latest-photo-gallery/tamanna_latest_photo_gallery-81.jpg?9d7bd4