Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Monday, June 03, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

 

டீ ,காபி கூட குடிக்காம சுத்த சைவம் மட்டும் சாப்பிடும் எந்த கெட்ட பழக்கமும்  இல்லாத நல்ல பசங்களை இந்த பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாங்க . தண்ணியைப்போட்டுட்டு  தெருவோரம் விழுந்து கிடக்கும் பன்னாடைப்பரதேசிங்க , ஊர்ல சண்டித்தனம் , ரவுடித்தனம் பண்ணிட்டு திரியும் ரவுடிங்க , பொறுக்கிங்க , மொள்ள மாரிங்க இவங்களைத்தான் விழுந்து விழுந்து காதலிப்பாங்க . அப்படி ஒரு  கிராமத்து ( நல்ல)ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் என்ன ஆகறாங்க என்பதே கதை . 


இப்படியே கதை சொல்லிட்டா போர் அடிச்சுடும் என்பதால் அம்மா செண்ட்டிமெண்ட்ஸை அப்படியே மாங்காய் துண்டுகள் ல மிளகாய்ப்பொடி தூவுவது மாதிரி தூவி இருக்காங்க .


 அம்மா மீது அதீத பாசம் உள்ள ரவுடியா எம் சசிகுமார் அசால்ட்டாக நடிக்கிறார். டி ஆர்க்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிப்பவனி வரும் தாடிக்காரர்.


 எம் சசிகுமாருக்கு கிடைக்கும் ஆடியன்ஸ் வரவேற்பு ஆச்சரியம் அளிப்பதாய் இருக்கு . தியேட்டரில் அவர் பேசும் வசனங்களுக்கு , சில ரி ஆக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் மழை !!



 ஆனால் அவர் விருமாண்டி கமல் ரேஞ்சுக்கு முயற்சி செய்வதும் , எம் ஜி ஆர் மாதிரி தன் கேரக்டரை வடிவமைத்துக்கொள்வதும் ரொம்ப ஓவர் . இதே மாதிரி 4 படங்கள் வரிசையா வந்தா போர் அடிச்சிடும். பேட்டர்னை மாத்துங்க பாஸ்,,. 


பத்தாங்கிளாசே இப்போத்தான் படிக்கும் பக்கா ஃபிகர் லட்சுமிமேணன் தான் ஹீரோயின் . கும்கியில் கும்மென வந்த வர் இதில் இன்னும் கொஞ்சம் பூசிய உடம்பில் இருக்கார் . ( எல்லாம் ஒரு வெற்றிப்பரவசம் தான் ) .இவரது கனகாம்பர நிற உதடும் ,மயில் தோகையில் இருக்கும் கண் மாதிரியான மயக்கும் கண்ணும் ,  திருஷ்டியில் கூட அழகு சிருஷ்டியாய் அமைந்த கன்னத்து தழும்பும் வரப்பிரசாதங்கள் . இவரது ஆடை அணியும் அழகு படத்துக்கு படம் கண்ணியமும்  , அழகும் கூடுகிறது  சபாஷ்.. 

( வர்ணிப்பை நிறுத்திக்கறேன், லிமிட் தாண்டக்கூடாதாம் - ஃபோனில் உத்தரவு. பிளாக் ரெகுலரா படிப்பாங்களாம் , அவ்வ் ) 


ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யா அக்மார்க் கிராமத்து சினிமா அம்மா. பல காட்சிகளில் இவர் எல்லாரையும் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார், க்ளைமாக்ஸில்  இவரது ஆக்ரோஷம் மட்டும் கொஞ்சம் செயற்கை . 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. வில்லன்கள் வம்புக்கு இழுக்கும்போது  தானே களத்தில் இறங்காமல் ஹீரோ ஒரு சின்னப்பையனை தடி வரிசை சுத்திக்காட்டச்சொல்லும் இடமும் , அந்தப்பையன் செம கலக்கலாக  சிலம்பாட்டம் ஆடுவதும் தியேட்டரில் கைதட்டல்கள் 6 நிமிடங்கள் அள்ளிக்கிச்சு.. செம பில்டப் சீன் .



2.  நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சார்பாக ஹீரோ ஹீரோயினிடம் லவ் லெட்டர் கொடுத்துட்டு வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு வெட்க தயக்கத்துடன் ஓடும் காட்சி அக்மார்க் எம் சசிகுமார் முத்திரை . செம சிரிப்பு 


3. ஹீரோயின் - ஹீரோ மேல் ஆசைப்படுவது , காதலை நாசூக்காக வெளிப்படுத்துவது அதைத்தொடர்ந்து வரும் காதல் காட்சிகள் இதம்


4. டூயட்  காட்சிகளிலும் சரி , குத்தாட்டபாடல் காட்சிகளிலும் சரி  திரையில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் கண்ணியமோ கண்ணியம். பார்த்து பார்த்து உடைகளை தேர்வு செய்த ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு 


5.  சரண்யாவின் அம்மா பாச நடிப்பு தாய்மார்கள் மனதை தொடும் விதம் மிக இயல்பாக அமைத்தது  அதற்கு உயிரோட்டம் அளித்த சரன்யாவின் பிரமாதமான நடிப்பு 


6. ஹீரோவை விட ஹீரோயின் 6 செமீ உயரம் என்பதால் எப்போதும் லாங்க் ஷாட்டிலேயே  ஹீரோவை காட்டி சமாளிப்பதில் ஒளிப்பதிவாளருக்கு வெற்றி . சாமான்யனின் கண்ணுக்கு இருவரும் ஒரே உயரம் என்றே தோணும் 


7. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை  ஆங்காங்கே பயன் படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் ( உபயம் - சுப்ரமணிய புரம் - இரு பொன் மணி )

8. ஹீரோவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பில்டப்பை கொடுத்து க்ளைமாக்சில் வைத்த ட்விஸ்ட்


9. படிச்ச பொண்ணான ஹீரோயினிடம் படிக்காத ஹீரோ  மடிச்சு விட்ட லுங்கியை எடுத்து விட்டு வாத்தியாருக்கு சொல்வது போல் அடக்க ஒடுக்க மாக வணக்கம் போடுவதும் , பெருமிதம் கலந்த வெட்கத்தோடு ஹீரோயின் அதை ரசிப்பதும் செம செம 


10 . ஹீரோயினை காதலிக்க ஏங்கும்  அந்த 4 பசங்க பண்ணும் அலப்பறைகள் , திட்டங்கள் , கலட்டாக்கள் இன்று போய் நாளை வா, கண்ணா லட்டு தின்ன ஆசையா பாதிப்பென்றாலும் ரசிக்க வைக்கிறது


11. ஹீரோயினின் தோழியாக வரும் அந்த தெத்துப்பல் அழகி கவனிக்க வைக்கும் அழகு , நடிப்பு 


கீழே உள்ள ஸ்டில்லில் மஞ்சக்காட்டு மைனா தான் நான் சொன்ன ஹீரோயின் தோழி



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டார் மேல் ஹீரோ வேணும்னே அவங்களை வெறுப்பேற்ற அவர்கள் மேல் வாமிட் எடுக்கும் காட்சி உவ்வே... இந்த மாதிரி காட்சியை சென்சார் எப்படி அனுமதிக்குன்னு தெரியலை . ஆபாசம் , வன்முறைக்காட்சிகளை கட் பண்ணுவது மட்டும் அவர்கள்  வேலை அல்ல  . இந்த மாதிரி அசூயையான காட்சிகளை கட் பண்ணுவதும் அவர்கள் வேலை தான் 


2. எம் சசிகுமாருக்குன்னு தனி பாணி இருக்கும்போது எதுக்கு பருத்தி வீரன் கார்த்தி பாடி லேங்குவேஜ் , விருமாண்டி கமல் மாதிரி அடிக்கடி மீசை முறுக்கும் மேனரிசம்? 


3. வீடே பற்றி எரியுது . ஹீரோ ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு அந்த பொண்ணை  அசால்ட்டாக ஒரு தீக்காயம் கூட ஆகாம காப்பாத்தறதெல்லாம் ரீலோ ரீல் 



4.  ஆடுகளம் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கும் வாகை சூடவா இசை அமைப்பாளர் ஜிப்ரான் பற்றி கண்டுக்கவே இல்லையே , ஏன்?


5. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கப்ப்ட்டிருந்தாலும் நந்தா ஸ்டைலில் சரன்யா  வரக் வரக் என வில்லனை கழுத்தை அறுப்பது ஓவர். இன்னும் கண்ணியமாக காடி இருக்கலாம் 


6. சரண்யா பேங்க்ல டெபாசிட் பணம் போட்டு வெச்சிருக்காங்க . அந்த பாண்ட் பேப்பரை அடமானமா வெச்சு கடன் கேட்கறாரு ஒரு பிரைவேட் ஆள் கிட்டே . அந்த இடத்துல ஒரு வசனம் . மெச்சூரிட்டி பீரியட் முடியாம பணம் எடுக்க முடியாது அப்டினு . அது தப்பு . எடுக்கலாம். வட்டி கட் ஆகும் அவ்வ்ளவுதான். இந்தக்காட்சியைப்பார்க்கும் பாமர ஜனங்க மனதில் பேங்க் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் .




மனம் கவர்ந்த வசனங்கள்
  
1. நீ குடுக்கற பரிசு பார்த்து அவ அப்படியே ஷாக் ஆகனும். 



அப்போ கரன்ட் கம்பியைத்தான் குடுக்கனும்



2.  நிஜ வாழ்க்கைல யும் சரி.சினிமாவிலயும் சரி.பொண்ணுங்க சல்லிப்பசங்களைத்தான் லவ்வு பண்ணுதுங்க



3. பல ஆபத்தான சந்தர்ப்பங்கள் அமைஞ்சும் நம்ம உயிருக்கு எதுவும் ஆகறது இல்லையே? அதுக்கு என்ன அர்த்தம்? மனிதனின் சாவு அவன் கைல இல்ல




4. லேடி -யோவ்.நான் சொன்னதை எப்பய்யா கேட்டே? பகல்லயும் சரி ,நைட்லயும் சரி



5.  ஒரு பொண்ணு நினைச்சா மட்டும் தான் நீயும் ,நானும் ,யாரும் ஆம்பளை.


6. குடிகாரப்பயலுக்கும் கோவக்காரப்பயலுக்கும் வாக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கை வீணாத்தான் போகும்


7 பொண்ணு எப்பவாவது உன்னைப்பார்த்து வெட்கச்சிரிப்பு சிரிச்சா உன் மேல லவ்வுன்னு அர்த்தம்.எப்போ பாரு கெக்கெபிக்கேனு சிரிச்சா லூசுன்னு அர்த்தம்


8. ஆம்பளை கெட்டுப்போனா ( உதவாக்கரையா ) அவன் குடும்பம் தான் அழியும்.பொம்பளை கெட்டா அவ வம்சமே அழியும்


9. தரைல விழுந்த பூவை தலைல வெச்சா குடும்பத்துக்கு ஆகாது



10. கடவுள் இல்லாத கோயிலும் ,கரகம் இல்லாத திருவிழாவும் எதுக்கு ?




 


11.  நான் எதுவும் செய்யலையேம்மா? 

 ம்க்கும், செஞ்சிருந்தாத்தான் குழந்தை பொறந்திருக்குமே?


12. உன் கிட்டே வாழ முடியலைன்னு ஒருத்தி செத்துப்போனா நீ எப்படி ஆம்பளை ஆக முடியும் ? 


13. ஒரு ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கறதை விட அவ பொண்டாட்டி அவனை ஆம்பளைன்னு சொல்லிக்கறதுல தான் பெருமை



14. நல்லவங்க எப்பவும் நல்லா இருக்கனும், அதுக்கு நாம குறுக்கே நிக்கக்கூடாது 


14. பெத்த அம்மா, கட்டிக்கப்போற பொண்ணு 2 பேரும் நல்லவங்களா அமைவது ஒரு ஆணுக்கு கிடைக்கும் வரம்


15.  என் பையன் சிங்கம் மாதிரி இருப்பான், ஆனா பேரு புலி 


16. டேய், அவன் கிஸ் அடிக்கறானே?  உதட்டை அப்படியே குடிக்கறானா? 


17. பொம்பளை சாபம் விட்டா புழுப்பூத்துத்தான் சாவோம்னு நம்பிக்கை உள்ளவன் நானு, அதனால உன் பாவம் எனக்கு வேணாம்

18. போலீசையே அடிச்சுட்டானா? ரைட்டு , இன்னைக்கு இருக்குடி கச்சேரி 


19. பொண்ணு முகம் மட்டும் லட்சணம் இல்லை , முழுசும் லட்சணம் தான் . 


20. அம்மா, எப்போ வேணாலும் சாவு வரும்னு தெரியற  என்னை மாதிரி ரவுடிங்க ஒரு பொண்ணை நினைக்கறது பாவம்மா.. 

 டேய்..  கல்யாணம் பண்ணிக்கறது பாவமா? 

 ஆமா, அது பெரும்பாவம் 





 


சி பி கமெண்ட் - குட்டிப்புலி - எம் சசிகுமார் ன் அதே பார்முலாப்படம் - ,பி .சி சென்ட்டர்களில் சுமாரா ஓடிடும்விருதாச்சலம் கலெக்டரே! ஊர்ல தியேட்டர்ல 70% பேர் சரக்கு அடிச்சுட்டு பார்சல் புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க.என்ன பண்ணிட்டு இருக்கீங்க?( செக்ண்ட் ஷோ @ விருதாச்சலம் ) 


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  2.75 / 5 




 


Monday, April 29, 2013

நான் ராஜாவாகப் போகிறேன் - சினிமா விமர்சனம்



பி டி உஷாவைத்தெரிஞ்ச அளவுக்கு நம்ம ஆளுங்க நிறைய பேருக்கு பி டி கத்திரிக்கா பற்றித்தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா இயற்கையான விவசாயத்துக்கு இது எதிரானது , ஃபாரீன்காரன் கண்டு பிடிச்சது . இத்தனை வருஷமா நாம நல்லா இருந்தது அவனுக்குப்பிடிக்கல போல. இந்தியா அவங்க கிட்டே எதிர்காலத்துல கை ஏந்தி நிக்கனும் என்பதே அவங்க லட்சியம் .அதுக்காக  ஃபாரீன்காரன் ஒருத்தன் இங்கே இருக்கும் எட்டப்பன் கிட்டே கூட்டு வெச்சு விவசாய பூமியை அழிக்கப்பார்க்கிறான். 


அந்த மேட்டர் எப்டியோ சமூக ஆர்வலர்க்கு தெரிஞ்சு ( நம்ம நம்மாழ்வார் மாதிரி ) பிரச்சனை பண்றாரு .  அவரை வில்லன் குரூப் போட்டுத்தள்ளிடுது . சமூக சேவகியான ஹீரோயின் அவர் சாவில் மர்மம் இருக்கு , உண்மை வெளில வரனும்னு போராடுறாங்க , உள்ளே போன ஆ ராசா , அழகிரி எல்லாம் டக் டக்னு வெளில வந்துடறாங்க , ஆனா இந்த உண்மை மட்டும் எப்பவும் வெளீல வரவே வராது . வில்லன் க்ரூப்புக்கும் , ஹீரோயின் , ஹீரோவுக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தமே படம் 


 இப்போ நான் சொன்ன மாதிரி நேரா கதை சொல்லி இருந்தா இந்த  சினிமா தப்பிச்சிருக்கும் , நம்ம ஆளுங்க திரைக்கதைல ட்விஸ்ட் வைக்கனும் , ஹீரோ பில்டப் தரனும் , குத்தாட்டம் வைக்கனும் இத்தனை கண்டிஷன் எல்லாம் இருப்பதால் படம் நீஈஈஈஈளமாப்போய்டுச்சு . கொஞ்சம் சுத்தி வளைச்சு கதை சொல்றாங்க


எது எப்படியோ போகட்டும். 3 விஷயத்துக்காக படம் பார்க்கலாம் . முதல் ல திருமதி தமிழ் மூலம் நம்ம எல்லாருக்கும் பேதி போக வெச்ச திருக்குறள் இடை அழகி  (!!!) தேவயானியின் தம்பி நகுல் க்கு இது ரொம்ப முக்கியமான படம் . டபுள் ஆக்‌ஷன் , முடிஞ்ச வரை முயற்சி பண்ணி இருக்கார். ஆனா அவர் கமல் ரேஞ்சுக்கு எல்லாம் ட்ரை பண்ணி அலப்பறை பண்றது ஓவர் . பாடி வெயிட்டை குறைச்சிருக்காரு, குட் 


அடுத்து 2 ஹீரோயின்ஸ் . எப்படியும் 3 பேரா ஆகிடும்


 


முதல் ஹீரோயின் சாந்தினி .( கே பாக்யராஜ் அறிமுகம் ) )இந்தப்பொண்ணுக்கு அபாரமா நடிப்பு வருது . கண் ரொம்பப்பெருசா இருக்கு . மூக்கும் தான் . ஆனா மத்ததெல்லாம் சின்னது , ஐ மீன் லிப்ஸ் , கன்னம் இதெல்லாம் . 5 லட்சம் ரூபா சம்பளம் வாங்கிட்டு 50 லட்சம் ரூபாக்கு நடிக்குது . ஜோதிகாவுக்கு தங்கச்சி போல . அவர் அடிக்கடி கண்களால் ஆச்சரியம் காட்டுவது ஓவர் டோஸ் . ஆனாலும் ரசிக்கலாம் , நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை ரசிக்காம விட்டோம். ( இந்தப்பொண்ணுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டு கட்டுப்படுத்தனும் )இவரது ஆடை அலங்கார அறிவு பிரம்மிக்க வைக்குது . துப்பட்டா கொஞ்சம் கூட விலகாம கண்ணியம் காட்டுறார் . குட். (அவர் கண்ணியத்தில் இடி விழ )


2 வது ஹீரோயின்  அவனி மோடி ( குஜராத் சி எம் மோடிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , குட்டையை யாரும் குழப்ப வேணாம் ) . இவர் தான் படத்துல மெயின் ஹீரோயின். இவரைத்தான் முதல்ல காட்டறாங்க .  ஏன்னா இவருதான் காட்டு காட்டுன்னு காட்டுவார்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு . இவரது கண்ணே செம கிக் தான் .ஆனா இந்த பிரம்மா ஒரு கதவை மூடுனா இன்னொரு கதவை பெப்பரெப்பேன்னு திறந்துடுவாரு . இவருக்கு வாய் ரயில்வே தண்டவாளம் மாதிரி நீஈஈஈளமா இருக்கு . ( ராஸ்கல், நடிப்பை விமர்சிக்காம பர்சனலா விமர்சிக்கறே, பெண்கள் சங்கம் வருது ஓடிடு )

 




 அவனி மோடிக்கு ஒரு தலையா ஹீரோவைக்காதலிக்கும் பாத்திரம். பிரமாதமா பண்ணி இருக்கார் . ஹீரோ ஏன் இவரை லவ் பண்ணலை என பெஞ்ச் ரசிகனே கேள்வி கேட்கும் அளவுக்கு ரொமான்ஸ்ல நடிப்பு பாப்பாவுக்கு அள்ளுது ( அந்த பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி ) . இந்த 2 ஹீரோயின்ஸுமே தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கறேன்


மணிவண்ணன் உட்பட பலரும் நல்லாவே நடிச்சிருக்காங்க .


 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. மசாலாக்கதைன்னு அசால்ட்டா யாரும் சொல்லிடக்கூடாதுன்னு சாமார்த்தியமா  ஈழப்பிரச்சனை , மரபணு மாற்ற விவசாயிகள் பிரச்சனை என பிரமாதமாக கவனத்தை திசை திருப்பியது


2. ஹீரோ ஹீரோயினை அடிக்கடி சதிக்க ராம்ஜெத்மலானியை சந்திக்க வைக்கிறேன் என பீலா விட்டு ஹோட்டல், காபி பார் என ஜாலி டூர் அடிப்பது அங்கங்கே குட்டி குட்டி சுவராஸ்யங்கள்


3. படத்தில் ஹீரோ டபுள் ஆக்‌ஷன் என நம்பும்படி டைட்டிலில்  காட்சி அமைப்புல் கிம்மிக்ஸ்  வைத்தது


4. இரு ஹீரோயின்களுக்கும் சரி சமமாக காட்சிகள் வைத்தது . நடிப்பைக்காட்ட ஒரு ஃபிகர் , இடுப்பு மடிப்பை காட்ட இன்னொரு ஃபிகர் என தரம் பிரித்து உலாவ விட்டது


5. ஜி வி பிரகாஷ் குமார் இன் இசையில் கலாய்ப்போம்   பாட்டு இளமைத்துள்ளல் .உன்னைக்காணும்போது டூயட் சாங்க் அழகு


6. ஹீரோயின் டிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது டக்னு ஹீரோ உள்ளே வரும் 5 செகண்ட் சீனை என்னமோ படத்தோட மெயின் ட்விஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து போஸ்டர் ஒட்டுனது 




இயக்குநரிடம் சில கேள்விகள்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  படத்துல சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்ண  ஓப்பனிங்க்ல அந்த டபுள் ஆக்‌ஷன் பில்டப் ஓக்கே , ஆனா எதுக்கு தேவை இல்லாம கதைக்குள் கதை , ஃபிளாஸ்பேக் உள்ளே ஃபிளாஸ்பேக் .. சாதாரணமா கதை சொல்லலாமே?


2. வசனம் படத்துக்கு பெரிய மைனஸ். ஏன்னா அண்ணன் வெற்றி மாறன் தான் டயலாக் ரைட்டர் . அவர்  ஆல்ரெடி பல படங்கள்ல  வந்ததையே ரிப்பீட்ட் ஆக்கி இருக்காரு . ( அவரு படத்துக்கு நல்ல வசனம் வேணும் போல )


3. சமூக ஆர்வலரும் , மிகவும் கஷ்ட நிலையில் உள்ள பெற்றோர் உள்ளவருமான ஹீரோயின் தண்ணி அடிக்கும் கண்ட பசங்க கலந்துக்கும் நைட் பார்ட்டியில் தயக்கம் இல்லாமல் வருவது எப்படி?


4. ஹீரோவுக்கு அடிக்கடி தூங்கும் வியாதி இருப்பது எடுபட வில்லை . அது சீரியசாக ஏதோ சொல்ல வரும் கதையில் காமெடி ஆகி விடுகிறது


5. ஹீரோயின் முதன் முதலா லவ்வை சொல்ல பூ , கிரீட்டிங்க் கார்டுடன் வரும்போது இன்னொரு ஹீரோயின் அதை தடுக்காட்டிட்டு ( தட்டி விட்டுட்டு ) ஓடுது , ஹீரோ வாயைப்பொளந்துட்டு அந்த ஃபிகரை பார்க்கறார் , அப்பவே உஷார் ஆகி லவ்வை சொல்லி இருக்க வேணாமா? எதுக்கு பம்மிட்டே தியாகி ஆகறார்? அவருக்கு என்ன தலை எழுத்தா? பொண்ணுங்க இதில் எல்லாம் விபரமா இருப்பாங்களே?


6. மிலிட்ரி கேம்ப்க்குள் அத்து மீறி நுழைஞ்சா அப்பவே துரத்தி விட்டுடுவாங்க , இப்படி உள்ளே கூட்டிட்டுப்போய்  ரூம் எல்லாம் சுத்தி காட்டிட்டு தண்டனை கொடுக்க மாட்டாங்க


7. ஹீரோ முகத்துல தன்னை முதன் முதலாக காதலித்த பெண் தனக்காக விட்டுத்தர்றாளே என்ற நன்றி உணர்வோ , அவளுக்கு ஏதும் செய்யலையே என்ற குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லையே?


8.  கமல் படங்களில் வருவது போல நெம்பர் ஒன் போவதை வைத்து காட்சிகள் , காமெடி கூத்துகள் தேவை இல்லாதது


9. மரபணு விதைகள் பற்றிய காட்சிகள் டாக்குமெண்ட்ரி பார்ப்பது போல் இருக்கு , இன்னும் ஜனரஞ்சகமாய்ச்சொல்லலாம் . மணிவண்னனின் கம்பீரக்குரல் எங்கே? கம்மிப்போய் எப்டியோ இருக்கு? உடம்பு சரி இல்லைன்னா டப்பிங்க் ஆள் போட்டிருக்கலாம்


10 . ஹீரோயின் குளிச்சுட்டு வந்து டிரஸ் சேஞ்ச் பண்றா. அப்போ ஹீரோ டக்னு ரூமுக்கு வந்துடறான். தாழ்ப்பாள் போடாதது ஹீரோயின் குற்றம் , அவ ஏன் ஹீரோ மேல குத்தம் சொல்றா?



 மனம் கவர்ந்த அண்ணன் வெற்றி மாறன் வசனங்கள்



1. பழகிப்பார்த்தாத்தான் அந்தப்பொண்ணைப்பற்றித்தெரியும்னே , இப்போ அவளைப்பார்த்தாலே தெரியுதுங்கறே, எப்படி?


2. டேய் , ரூம் சாவியை வாங்கிட்டு  2 பேரும் எங்கேடா போறீங்க?


 ம், பக்கத்து வீட்டு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணப்போறோம்



3.  ஒரு நல்ல தலைவன் வந்தாத்தான் எல்லாமே மாறும்


4. இந்தியா எய்ட்ஸ்ல 4 வது இடம் . இது எவ்ளவ் பெரிய தலைக்குனிவு



5. மிஸ். டோண்ட் ஒர்ரி . உங்களை யாரும் இங்கே கலாய்க்க மாட்டாங்க , நாம 2 பேரும் சேர்ந்து எல்லாரையும் கலாய்ப்போம்



 


6. பேருல ஜா வரனும்னு ஜோசியர் சொல்லிட்டார் , ஜானகி ராமன் ஓக்கேவா?


முருகன்னு வெச்சிருக்கலாம், ஏன்னா உங்க பேரு  வள்ளி ஆச்சே?



7. உங்க ஊர்ல ஜாலியா டி வி பார்த்தே பொழுது போக்கிடலாம் போல?


 நல்ல வேலைக்குப்போனாத்தான் முதல்ல ஜாலியா இருக்க முடியும்



8.ஃபாரீன்காரன் கண்டுபிடிப்பு விதையால நமக்கு 5 மடங்கு விளைச்சல் கம்மி . மண் எல்லாம் செத்துப்போச்சு . இதன் மூலம் 2000 கோடி ரூபா அவங்களுக்கு லாபம்



9 . எந்த திட்டம் போடுவதா இருந்தாலும் அரசாங்கம் தொலைநோக்கோட போடனும்


10. மிஸ்!டெல் அபவுட் யூ.



எனக்கு ஒரு அப்பா , ஒரு அம்மா



. வாட் எ சர்ப்பரைஸ்!! எனக்கும் ஒரே ஒரு அம்மா, ஒரு அப்பா தான்

 

 ஒரே ஒரு குத்தாட்டத்துக்கு வரும் ஜெரீனா கான்

11. இன்னைக்கு சரின்னு படறது 10 வருஷம் கழிச்சு மக்களுக்கு தப்புன்னு படலாம்


12. ஜெனட்டிகலி மாடிஃபைடு சீட்ஸ் இதைத்தான் மரபணு மாற்ற விதைகள்னு சொல்றோம் ( நன்றி - மேஜர் சுந்தர் ராஜன் )



13.  வெளிநாட்டுக்கம்பெனிகளின் வளர்ச்சி எப்பவும் உள்நாட்டு விவசாயிகளுக்கு வீழ்ச்சி தான்


14.  சிகரெட் குடிப்பது , சரக்கு அடிப்பது தப்புன்னு சொல்றே.. ஒத்துக்கறேன், முதல்ல நீ விற்பதை நிறுத்து . வித்துட்டே ஏன் வாங்காதேன்னு கூப்பாடு போடறே


15.  குடிகாரன் எப்பவும் உண்மையைத்தான் பேசுவான்

 



 எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 40


 குமுதம் ரேங்க் - சுமார்


 ரேட்டிங்க் - 2.5 / 5



சி பி கமெண்ட் - படம் மாமூல் மசாலா கதை தான் , கொஞ்சம் சமூக அக்கறையும் இருக்கு . டி வி ல போட்டா பார்த்துக்கலாம் . ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

 



இந்த சீன் படத்துல இல்லை. அட்ரா சக்க வின் கவுரத்தை காப்பாற்ற அவரின் ஃபேஸ் புக்கில் சுட்டது ஹி ஹி

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

Friday, March 15, 2013

பரதேசி - திரைவிமர்சனம் ( twitter review)


பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
 
 
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
 
 
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.
நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 
 
thanx - http://dohatalkies.blogspot.in/2013/03/blog-post.html