Showing posts with label திரைப்பட விழா. Show all posts
Showing posts with label திரைப்பட விழா. Show all posts

Wednesday, January 13, 2016

திரைப்பட விழாவில் கிடைத்தது என்ன?- சினிமா ஆர்வலர்கள் கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
சர்வதேச திரைப்படவிழாவில் எங்களுக்குக் கிடைத்தது என்ன? - பார்வையாளர்களின் கருத்துத் தொகுப்பு
இயக்குநர், நடிகர் ரவிமரியா:
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருகிறது சென்னை சர்வதேச திரைப்படவிழா. ஒரு இயக்குநராக பல்வேறு கதையுள்ள படங்களைப் பார்த்து அவர்களது கலாச்சாரங்களை, அவர்களின் திரைக்கதை முறைகளை தெரிந்துகொள்கிறேன். ஒரு நடிகனாக இண்டர்நேஷ்னல் அளவில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள், நம் இந்தியாவில் அதை நாம் எப்படிப் பயன்படுத்தமுடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். இத்திரைப்படவிழாவை எப்போதும் நான் மிஸ் செய்வதில்லை. சினிமா வளரவும் சினிமாவுக்கான அறிவு வளரவும் இத்திரைப்படவிழா உதவுகிறது.இவ்விழாவுக்காக முன்பே படபிடிப்பு வாய்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்வேன்.
டி.ஜி.வைஷ்ணவா காலேஜ் மாணவர்கள்:
திரைப்படவிழாக்களுக்கு வருவதன்மூலம் எப்படி திரைத்துறையைச் சார்ந்த முக்கியமானவர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்புகளைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு. தவிர எப்படி ஷாட் எப்படி வைப்பது, கேமரா எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்ள இப்படங்கள் உதவுகின்றன. எங்கள் வாழ்வில் இது ஒரு வைடல் பார்ட். இங்கு வரும் இயக்குநர்களிடம் உரையாடும் கலந்துரையாடல் நிகழ்வு முக்கியமானது. அதில் கலந்துகொள்ளும்போது எந்த பாயிண்ட் ஆப் வியூவில் காட்சிகளை வைத்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
இயக்குநர் சந்தானபாரதி:
நடத்தப்பட்டது. இப்போதும் திரைத்துறையிலிருந்து எஸ்பிஎம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலைஞர்கள் தவறாமல் வந்துபடங்களைப் பார்க்கிறோம். முதலில் இத்திரைவிழா பைலட் தியேட்டரிலும் ஆனந்த் தியேட்டரிலும்தான் அப்போது பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் வந்தார்கள். அடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வரத் துவங்கினார்கள். தற்போது விஸ்காம் மாணவர்கள் பெருமளவில் திரைப்படவிழாவில் வந்து கலந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. உலகஅளவில் இருந்து வரும் படங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அவர்களது கலாச்சாரம், அவர்களது தொழில்நுட்பம், லேட்டாஸ்ட்டாக என்ன செய்திருக்கிறார்கள் கேமராவை எப்படி வைக்கலாம் என எல்லாவற்றையும் விஷூவலாகப் பார்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளமுடியும். கல்லூரியைவிட இங்கு அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். காரணம் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எப்படி விதவிதமாக எடுக்கலாம் எப்படி கேமரா கோணங்களை வைக்கலாம். இங்கு வந்து படங்களைப் பார்க்கும்போது விஷூவலாக்
இயக்குநர், நடிகர் ரமேஷ் கிருஷ்ணா:
உலகப் படங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனா அதையெல்லாம் இங்க செய்யமுடியாது. ஏன்னா மாறுபட்ட கலாச்சாரம். நமக்கு ஈரான் படங்களோட கலாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தி வரும். இந்தப் படங்கள் மூலம் நல்ல விஷயங்கள் தெரிஞ்சக்கலாம். வித்தியாசமான படங்கள் பார்க்கலாம். எப்பவுமே பழைய படங்களைப் பாத்து ஒரே இடத்துல இருக்கற நமக்கு வெளியில வேறொரு பார்வை கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கும்.
சி.ஆர்.சரஸ்வதி(திரைப்பட நடிகை):
நான், டைரக்டர் சந்தானபாரதி, ரமேஷ் கண்ணா பிலிம் பெஸ்டிவல் ஆரம்பித்ததிலிருந்து 10 வருஷமா தொடர்ந்து வந்துகிட்டிருக்கோம்.டிவிடில படம் பாக்கலாம், தியேட்டர்ல பாக்கலாம், பிலிம் பிரிவியூல பாக்கலாம், எந்தப் படமா இருந்தாலும் சரி தியேட்டர்ல பாக்கற சந்தோஷம் டிவிடில கிடைக்காது. அதுவும் மத்த நாட்டுப் படங்கள்னும்போது அவங்க டெக்னிக்கலா எப்படி படம் பண்றாங்க. எப்படி கதை எப்படி சொல்றாங்க. அந்த நாட்டோட அழகு, அந்த நேச்சர், அந்த சீனரீஸ், படத்துல நடிக்கற கலைஞர்களோட திறமை, தொழில்நுட்ப திறமை யெல்லாம் பாக்கும்போது நிறைய விஷயங்கள் தெரிஞ்சக்கமுடியுது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த சீசனை என்ஜாய் பண்றோம். எல்லாப் படங்களையும் பாத்துடுவோம். இதை வழக்கமான ஒரு வேலையா வச்சிக்குவோம்.
சத்யேந்திரா (நடிகர்):
13 வருஷமா நான் பெஸ்டிவல்லுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே வந்தா இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்கமுடியும். இந்தவருஷம் இந்த விழாவில் 120 படங்கள்வரை கவனித்தாலும் 30 படங்களிலிருந்து 35 படங்கள் வரை கவனித்துப் பார்ப்பேன். முக்கியமாக வெளிநாட்டுப் படங்களைத் திரையிட வந்திருக்கும் இயக்குநர்கள் தொடர்பான படங்களைப் பார்ப்பேன். காரணம் படம் முடிந்ததும் அவர்களோடு கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். இந்தப் படங்களில் என் சுவைக்கேற்ற படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். நிறைய பரிசோதனை முயற்சிப் படங்கள், நிறைய சிறந்த படங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா முதல் நாள் பார்த்த விக்டோரியா ஜெர்மன் படம். இப்போ நான் பாத்துட்டு வந்திருக்கிற ப்ரியமானசம். ஒரு சம்ஸ்கிருத மொழிப்படம் முதன்முதலா பாக்கறேன். நல்ல ஒளிப்பதிவில் சிறந்த நடிப்பில் சிறந்த இசை, கதகளி நடனம் என நல்லபடம் இது.
பாலாஜி தரணிதரன் ( இயக்குநர்):
நான் சென்னை திரைப்படக் கல்லூரி முடித்ததிலிருந்தே இந்த விழாவுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே என்னுடைய முதல் குறும்படம் திரையிட்டாங்க. அதுலருந்து சில ஆண்டுகளா நான் தொடர்ந்து வந்துகிட்டிருக்கேன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஷார்ட் பிலிம் எடுத்தவங்க, விஸ்காம் மாணவர்கள் என பலரும் இங்கே வந்து பாக்கறாங்க. இங்கே வந்தா ஒரு உந்துதல் கிடைக்கிறது.
ஷைலஜா:
பிலிம் ஃபெஸ்டிவல்னாலே அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம். என்னைப் பொறுத்தவரை ஒரு இண்டாக்ஸிகேட்டடு நிலையில இருக்கேன். பேஷனா ஆறாத ஒரு ரொமான்ஸ் பலபேருக்கு சினிமாமேல இருக்கும். அந்த மாதிரி எனக்கு உலகத்திலிருந்து வந்த படங்கள் மேல ஒரு ஈடுபாடு. 50க்கும் மேற்பட்ட நாடுகள்லருந்து வந்த படங்கள் இங்கே இருக்கு. என்னன்னு சொல்லத்தெறியலை. ஒருவிதமான மனநிலையில வெளிநாட்டுப் படங்களைப் பாக்கறது. அந்தப் படங்கள்ல நாம பாக்கற அரசியல், பெண்களுக்கான முக்கியத்துவம், அதப் பத்தி மணிக்கணக்கல பேசறது...
இந்தப் படத்தைப் பாத்து அதுல ஊரிப்போற ஒரு சந்தோஷம். அதப்பத்தி திரும்பத் திரும்ப பேசறது... நண்பர்களோட தொடர்ந்து பேசறது... உண்மையில் இது திரைப்பட விழா மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் அது. மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பாக்கும்போது ஒரு சில விஷயங்களைத்தான் பேசுவோம். ஆனால் ஒரு சர்வதேச படங்களைப் பற்றிப் பேசினால் அந்த நாடு பற்றி, அரசியல் பற்றி, கலாச்சாரம், சமூகம், விமன்னோட ஸ்டேட்டஸ் பற்றி, இளைஞர்கள் பற்றி.. விக்டோரியான்னு ஒரு படம் பார்த்தேன்.
முதல்ல பாக்கும்போது 15, 16 வயசுக்கு பேரன்ட்ஸா இருக்கறவங்க என்ன இப்படின்னு ஒரு கன்சர்ன்னு வரும். ஆனா அப்புறம் படம் நகர நகர என்ன விக்டோரியாவோட கேமரா ஒர்க், அவங்களோட பர்மாமென்ஸ் எல்லாம் மிக மிக அருமை. அந்தப் படத்தைப் பற்றியே நீண்டநேரம் பேசிக்கிட்டிருந்தோம். முன்பெல்லாம் பெஸ்டிவல்லுக்கு வர நிறைய தயக்கம் இருக்கும். ஏனா பெண்களே குறைவா இருப்பாங்க. ஆனா இப்போ நிறைய பெண்கள் நிறைய பேர் வராங்க. நாங்க எல்லாம் சிலபேர் இங்கே வாலண்டியராவும் வொர்க் பண்றது மகிழ்ச்சியா இருக்கு.
இயக்குநர் நாகா
நம்ம படங்கள் ஆஸ்கருக்கு போகலையேன்னு ஒரு வருத்தம் நமக்கு இருக்கு. ஆனா நமக்கு exposureரே கிடையாது. வெறும் பிஸினஸா மட்டுமே பாத்து பழக்கப் பட்ட நமக்கு சினிமாவை எப்படி பாக்கணும்? அதை எப்படி பேசணும்னு தெரியாது. போறபோக்குல சில படங்களைப் பாத்துட்டு கைதட்டிட்டு விசிலடிச்சிட்டு போயிடறோம். ஏன்னா சினிமாங்கறது ஒரு சக்திவாய்ந்த சாதனம், ஊடகம்... ஆனா அந்த மீடியத்துக்கு நாம பெரிய கவனம் செலுத்தறதில்லை. நாம சினிமாவைப் புரிஞ்சிகிட்டோம்னு சொல்லமுடியாது. அதனால exporsure தேவை. அதனால இளம் தலைமுறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வரும் படங்களைப் பார்த்துவிட்டு படங்களை இயக்க முற்படவேண்டும்.
ஆரி (நடிகர்)
நான் நடிச்ச நெடுஞ்சாலை படம் முதல்முதலா 2014ல் இங்க திரையிடப்பட்டது. அதேமாதிரி மாயாவுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தத் திரைப்படவிழாவில் இங்க உங்களோட பேசற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழில் நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. ஆனா மாயா ஒரு டிரெண்ட் செட்டிங் படமா அமைஞ்சிடுச்சி. திரைப்படவிழாவில் நிறைய படங்களை வேறவேற மொழிப் படங்களைப் பாக்கற ஒரு அருமையான வாய்ப்பு. நன்றி.

நன்றி - த இந்து

Sunday, January 10, 2016

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

காலை 11.30 மணி

JALAL'S STORY / JALALER GOLPO | DIR.: ABU SHAHED EMON | BANGLADESH | 2014 | 121’

கைவிடப்பட்ட குழந்தையொன்று ஆற்றிலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது. ஆனால் விரைவிலேயே அந்த கிராமம் பிளேக் நோயால் அவதியுறுகிறது. ஜலால் மீண்டும் ஏனோ கைவிடப்படுவதற்கான பரிசீலனை உருவாகிறது. சில காலம் கழித்து ஜலாலுக்கு வயது 9 ஆகும்போது அவன் மிகப்பெரிய நிலச்சுவாந்தாருக்கு வளர்ப்பு மகனாக ஆகிறான். ஆனால் மறுபடியும் ஜலாலுக்கு சிக்கல் வருகிறது.
அந்த நிலச்சுவாந்தாரின் மலடியான மனைவிக்கு கருத்தரிக்கிறது. பிரசவத்தின்போது அவரின் மனைவி இறந்துவிட 10 ஆண்டுகளில் ஜலால் அரசியல் மற்றும் கொள்ளைக்கும்பலோடு சேர்ந்துவிடுகிறான். அது யாருடைய தவறு? ஒரு அற்புதமான கிராமத்தைக் காட்டியதற்காகவும் சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காகவும் இப்படம் உலகம் முழுவதும் ஏராளமான விருதுகளை பெற்றுவந்துள்ளது.

மதியம் 1.00 மணி

PANAMA/ DIR.: PAVLE VUCKOVIC SERBIA| 2015| 105’

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்ட படம். ஜோவன் சாதாரணமாக எந்த வேண்டுகோளும் இன்றி மாஜாவை டேட்டிங் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவளது மர்மமான மற்றும் நிழலான நடவடிக்கைகளால் அவன் தொந்தரவுக்குள்ளாகிறான். அதிலிருந்து அவளை பின்தொடர்வதும் அவள் தொடர்பான வீடியோக்களைக் கொண்டும் சமூக வலைத்தளங்களிலும் அவள் இன்னொரு வாழ்க்கையை கண்காணிக்கிறான். பொய், அகங்காரம், பொறாமை மற்றும் செக்ஸ் போன்ற வலைகளில் சிக்கி தன்னை இழக்கும் ஜோவன், அவள் யார் என்று தீவிரமாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறான். இன்றுள்ள இளைய தலைமுறையினரின் வாழ்நிலையும் மனநிலையும் சொல்லும் படம்.

காலை 4.30 மணி

THREE WINDOWS & A HANGING| DIR.:ISA QOSJA | ALBANIA|2014|94’

பாரம்பரிய கிராமம் ஒன்றில், போருக்குப் பிறகான வாழ்க்கை மெதுவாகத் தொடங்குகிறது. அங்கிருக்கும் பள்ளி ஆசிரியை லஷ், தன் மனசாட்சியால் உந்தப்படு ஒரு சர்வதேச பத்திரிக்கையாளருக்க் பேட்டி தருகிறாள். அதில் தானும், கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களும் போரின் போது, செர்பிய ராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதை சொல்கிறாள். இது அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆண்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து லஷ் மற்றும் அவளது சின்ன மகனுக்கு எதிரான பிரச்சாரத்தையும் தொடங்குகின்றனர்.

மாலை 7.00 மணி

CLEANER|CISTIC | DIR.:PETER BEBJAK | SLOVAK|2015|94’

சிறையிலிருந்து வெளியே வரும் புதிய காற்றை சுவாசிக்கிறான். தன்னுடைய அடுக்கக வீட்டுக்கு வந்து நீண்ட நாள் கழித்து நல்ல புரோட்டீன் உணவு உண்கிறான். சவகாசமாக டிவி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கிறான். அன்றிரவு நல்ல தூக்கம். காலையில் அவனுக்கு ஒரு அழைப்பு காத்திருக்கிறது. அவன் சென்று செய்யவேண்டிய அடுத்த வேலைக்கான முகவரி அறிவிக்கப்படுகிறது. சுத்தம் செய்யும் இறுதிச் சடங்கு பணிகள்தான் அவனுடைய வேலை. எங்காவது யாராவது இறந்துவிட்டால் அங்கு சென்று பிணங்களை அகற்றி அந்த இடத்தையும் தூய்மை செய்வது அவன் வேலை. அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவது. பிறகு அடுத்த அழைப்புக்குக் காத்திருப்பது. இதை அவன் விருப்பமாக செய்யவில்லை. ஒரு அசாதாரண பொழுதுபோக்காக ஆரம்பித்தது கடைசியில் தொழிலாகிவிட்டது

நன்றி - த ஹிந்து

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01.2016 -படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

காலை 11 மணி

OTTAAL | DIR.: JAYARAJ | MALAYALAM|2015|90’

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கேரள உலகத் திரைப்படவிழாவின் வரலாற்றிலேயே கடந்த 20 ஆடுகளில் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒரே படம். தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. பேரனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஒரே உறவான தாத்தாவோடு அவனுக்குள்ள தொடர்பை உருக்கமாக பேசுகிறது. ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

மதியம் 2.30 மணி

DÉCOR | DIR.:AHMAD ABDALLA | EGYPT | 2014 | 116’

எகிப்தைச் சேர்ந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மகாவைப் பற்றிய உளவியல் ரீதியான கருப்பு வெள்ளைப் படம் இது. மகா திருமணமான ஒரு பெண்ணின் உடலிலிருந்து உலகத்தைப் பார்ப்பதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. இரு வெவ்வேறு வாழ்க்கையை, வெவ்வேறு உடல்களின் மூலம் வாழும் மகாவுக்கு இரண்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாமல் எது வேண்டுமென முடிவெடுக்கும் நிலைக்கு மகா தள்ளப்படுகிறாள்.

மாலை 5.00 மணி

CINEMAWALA | DIR.: KAUSHIK GANGULY | BENGALI | 2015 | 105’

கவுசிக் கங்குலியின் 'சினிமாவாலா' திரைப்படம், தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியை அழகாக விளக்குகிறது. கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரனாபேந்து தாஸின் கதையைச் சொல்கிறது 'சினிமாவாலா'. பிரனாப் ஓய்வுபெற்ற திரைப்படப் பார்வையாளர். தன்னுடைய பிழைப்புக்காக காலையில் மீன் வியாபாரம் செய்கிறார். மீதி நேரம் முழுவதையும் தியேட்டரிலேயே கழிக்கிறார். கடந்த காலத்தின் மீது பெரும் மதிப்பைக் கொண்டிருக்கும் பிரனாப், நீதிநெறிகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறான் பிரனாப்பின் மகன் பிரகாஷ். அவனுக்கு நேர்மை, நியாயத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை. தடை செய்யப்பட்ட படங்களை விற்கும் பிரகாஷ், ஒரு கட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான படங்களை தியேட்டரில் திரையிடுகிறான்..

மாலை 7.30 மணி

PARTISAN / PARTISAN | DIR.:ARIEL KLEIMAN | AUSTRALIA | 2015 | 98’

பெரிய மாற்றத்தின் விளிம்பில் இருக்கு நகரத்தில், தனியாக உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குடியிருப்பில் 11 வயது அலெக்ஸாண்டர் வாழ்கிறான். அங்கு அவனைப் போல பல குழந்தைகளும், பெரியவர்களும் இருக்க அவர்களுக்கு க்ரேகோரி என்பவன் தலைவனாக இருக்கிறான். க்ரேகோரி, வாழ்வாதாரத்தை பெருக்குவது, காய்கறிகள் வளர்ப்பது, சமுதாயத்துடன் இணக்காமக இருப்பது, கொலை செய்வது என பல விதங்களில் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கிறான்.


நன்றி - த ஹிந்து



நன்றி - த ஹிந்து