Showing posts with label திருமணம் எனும் நிக்காஹ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label திருமணம் எனும் நிக்காஹ் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, July 25, 2014

திருமணம் எனும் நிக்காஹ் - சினிமா விமர்சனம்


 



ஹீரோ ஒரு ரயில் பிரயாணத்துல  டிக்கெட் கிடைக்காம   அபுபெக்கர் எனும்  முஸ்லீம் பேர்ல போக வேண்டிய சூழல். ஹீரோயின் ஆஃபீசில் பணியாற்றும் சக பணியாளினி ஆயிஷா பேர்ல அதே  ரயில் ல பிரயாணம் பண்றார். நான் ரொம்ப ஏழைங்கோ, எனக்கு ஒரே ஒரு சின்ன வீடுதான் இருக்குனு தலைவருங்க காமெடி பண்ற மாதிரி 2 பேரும்  தான்  ஒரு முஸ்லிம்  அப்ப்டினு மெயிண்ட்டெயின் பண்றாங்க . ஆனா  இருவரும் கதைப்படி பிராமின்ஸ்.
2 பேரும் தீவிரமா காதலிக்கறாங்க . ஆனா வெளில சொல்லிக்கலை. தட்கல் ரயில் ரிசர்வேஷன் -னா பயணம் பண்ன ஒரு நாள் இருக்கும்போதே டிக்கெட் புக் பண்ணௌம், தற்காலக்காதல்னா காதல் வந்ததும் டக்னு வெளீல சொல்லி புக் பண்ணி வெச்சுடனும் . இல்லைன்னா வேற எந்த தகர டப்பாத்தலையனாவது  கொத்திக்கிட்டு போயிடுவான். இது நமக்குத்தெரியுது . ஹீரோவுக்குத்தெரியலை .

ஹீரோ  முஸ்லீம் மக்களின் வாழ்க்கை முறையைத்தெரிஞ்சுக்க ஒரு முஸ்லீம் வீட்ல  ட்யூஷன் போறாரு. சுக்ரதிசை சரியா அடிச்சா கடைக்கோடி ஏழை கூட கலைஞர் ஆகிடலாம்.அது மாதிரி  ஹீரோவுக்கு அந்த பெரியவர் பொண்ணு தானா வந்து மாட்டுது. சிங்கிள் லவ்வருக்கே சிங்கி அடிக்கும் நம்ம மாதிரி ஆட்கள் வயித்தெரிச்சலைக்கொட்டிக்க இந்த  தமிழ்  சீனிமா  ஹீரோக்களை நிஜ வாழ்விலும் சரி , கதையிலும் சரி  ஒரே டைம்ல பலர் வட்டமிடுவாங்க .

ஒரு கட்டத்துல 2 பேரும்  முஸ்லீம்  இல்லை , இந்து தான் எஅ பரஸ்பரம் 2 பேருக்கும்  தெரிய வருது . டக்-னு கட்டிக்காம  2 பேர் மனசுலயும்   ஒரு குழப்பம் . அதாவது  இருவர் மனசுலயும் பதிந்து  விட்ட அபுப்பெக்கர் , ஆயிஷா  பிம்பங்களை  உதறி  நிஜத்தை சந்திக்க திராணி இல்லை . மேரேஜ் பண்ணிக்க வேணாம்னு மேரேஜ்க்கு  முந்தின நாள்  ஹீரோ  சொல்லிடறாரு .

2 பேரும் சேர்ந்தாங்ளா? சேரலையா? என்பதே   நம்மைப்படுத்தி  எடுக்கும்   மிச்ச மீதிக்கதை .








ஹீரோவா நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படாத ஆனா மதுரைல அதுக்கு விழா எடுக்கப்போகும்  இளைய  தளபதி விஜய்  இடத்தைப்பிடிக்க ஆசைப்படும் ஜெய்  தான் கலக்கி  இருக்கார் . குரல் , வசன  உச்சரிப்பு இவருக்கு நல்லா கை கொடுக்குது . இத்தனை நாளா அண்டர்ப்ளே ஆக்ட் பைட்டு இருந்த இவர் இந்தப்படத்துல சல்மான் கான் , கமல் மாதிரி அடிக்கடி சட்டையைக்கழட்டி என்னையும் பார் , என் பாடியையும் பார் அப்டினு கவர்ச்சி காட்றார் .இந்தக்காலத்து மாடர்ன்  ஃபிகருங்க அதையும்  ரசிக்கறாங்க . வாழ்க கலாச்சாரம்

ஹீரோயினா நஸ்ரியா நசீம். முகத்தில்  ஒரு பரு கூட இல்லாத பரு வ அழகி .வெல்வெட் அல்வாவை இரு துண்டு வெட்டி ஒட்டி வெச்சா மாதிரி அழகிய உதடு .கிளாமர் காட்ட மாட்டே என அடம்  பிடிக்கும்  கண்ணியம் . பிரமாதம் ., ஆனா  அவர்  செய்யும் குழந்தைத்தாமான   முக பாவானைகள், லைலாத்தாமான  சேஷ்டைகள்  படு செயற்கை .

இன்னொரு  ஹீரோயினா  வரும் வாயில்  நுழையாத பேர் உள்ள ஃபிகர்  50 மார்க்  போடலாம். அதிக வாய்ப்பில்லை . எப்போ பாரு  ஹீரோவைப்பார்த்து கேனம் மாதிரி  பல்லைக்காட்டி சிரிக்கறது மட்டும் தான் வேலை .
 நல்ல வேலை , பூனம் மாதிரி  வேற எதையும் காட்டலை .

ஆர் பாண்டியராஜன்  , மயில் சாமி  2 பேரும்   கொஞ்ச நேரம்  வர்றாங்க . சுமார் தான் .

ஒளிப்பதிவு  , இயக்கம் , எடிட்டிங்  எல்லாம்  ஓக்கே ரகம் . இசை  ஜிப்ரான். பெரிய  ஹிட் ஆடிக்கலை . ரொம்ப  மோசமும்  இல்லை

133  நிமிஷம் படம்  ஓடுது .
 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. முஸ்லீம் மதத்தினர் மனம்  புண் படாமல் கத்தி மேல் நடப்பது போல் ஜாக்கிரதையாக திரைக்கதை அமைத்தது

2  நாயகிகளாக  2 நல்ல  ஃபிகர்களை  புக்  செய்து ம் கிளாமர் காட்டாமல் கண்ணீயமாகக்காட்டியது

3 ரம்ஜான்  டைமில்  ரிலீஸ் செய்தது


 


இயக்குநரிடம் சில கேள்விகள் 

1  ஓப்பனிங் சீனில்   நர்ஸ் யூனிஃபார்ம்  போட்டுக்கிட்டு  ஒரு  ஃபிகரு பாடல் காட்சில  வருது .அது வெள்ளை  யூனி ஃபார்ம்ல   இருக்கும்போது  ரோஸ் கலர்   ல அதுக்கு பேரலலா ஸ்கர்ட் போட்டு வருது . அது என்ன பிங்கி பிங்கி பாங்கியா? முடியல . அதே  நர்ஸ் அதே பாட்டுல மழைல நனையும்போது  மட்டும்   ர்ரோஸ் இல்லாம  வெள்ளை யே போட்டிருக்கு . இது எப்படி ?


2  ஹீரோயின்  ஆஃபீசில்  சக கொலீக் ஆயிஷா   பர்தா வை அடிக்கடி சுட்டுட்டு  ஹீரோவைப்பார்க்கப்போகுது . சொந்தமா  ஒரு பர்தா  வாங்கி வெச்சுக்காதா>?


3  ஆஃபீஸ்  ல மீட்டிங் நடக்கும்போது  செல் ஃபோன்ஸ்  எல்லாம் சைலண்ட் ல வெச்சுக்கமாட்டாங்களா?

4 ஹீரோ - ஹீரோயின்  2 பேரும்  லவ்வை சொன்னதும்  படம்  கிட்டத்தட்ட  முடிஞ்சிடுது . அதுக்குப்பின் திரைக்கதையை எப்படி  கொண்டு போவதுனு  தெரியாம தடுமாற்றம்


5   முஸ்லிம் வீட்டில்  ஹீரோ எப்போ பாரு  இருக்காரே ? அந்த  வீட்டில் ஒரு பொண்ணு இருக்கே -னு வாப்பா  கவலைப்படமாட்டாரா? இந்த அளவு இ வா  அப்பா  எந்த    ஊர்ல  இருக்காரு ?


 

மனம் கவர்ந்த வசனங்கள்


1 உங்களுக்கு சுக்கிர மேடு ங்க



சாரி.நான் சூளை மேடு # தி எ நி



2 மிஸ்!,நீங்க FACEBOOK ல இருக்கீங்க்ளா?


இந்த FACE எந்த புக் லயும் இருக்காது # திஎநி


==========




3 நம்ம மனசுக்குப்பிடிச்சவங்க நம்மை நினைக்கும்போது நாம அவங்க எதிர் ல நிக்கனும்.இது லவ் எதிக்ஸ் # திஎநி



===========



4  ஒரே ஆபீசில் லவ்வர் இருக்கலாம்.ஆனா ஒயிப் இருக்கக்கூடாது # தி எ நி


5 நம்மை நம்பி இருப்பவங்க கிட்டே நாம பொய் சொல்லக்கூடாது # திஎநி




 6  ரம்ஜான் மாதிரி பண்டிகையின் நோக்கம் என்ன/? ஏதோ ஒரு மனஸ்தாபத்தால அதுவரை பேசாம இருப்பவங்க கூட ரம்ஜான் அப்போ பேசிடனும்#திஎநி


7 இன்னைக்கு செஞ்ச பிரியாணி யை விட நேத்தய பிரியாணியை சூடு பண்ணி சாப்ட்டா அதான் செம டேஸ்ட் # திஎநி



8 வாழும் வரை நாம் யாருக்கும் துரோகம் செய்யாம , நம்பிக்கையைக்காப்பாத்திக்கற அளவு நடந்துக்கனும்#திஎநி









படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


கனகாம்பர உதட்டழகி ,ரோஸ் மில்க் கன்ன அழகி நஸ்ரியா நசீம் நைஸ் இன்ட்ரோ.தட்ரா கையை # தி எ நி




குழந்தைத்தனமாய்ப்பேசுவதாய் நினைத்து நஸ்ரியா பேசும் பாவனை படு செயற்கை.வந்துட்டாப்போச்சு.செஞ்சுட்டாப்போச்சு # திருமணம் எனும் நிக்காஹ்



3  \நஸ்ரியா ஜோடியா ராமராஜன் நடிச்சிருந்தா பட டைட்டில் என்னவா இருக்கு?


டவுசர் எனும் நிக்கர்



 


சி பி கமெண்ட் - திருமணம் எனும் நிக்காஹ் = முன் பாதி படு சுமார்.பின் பாதி படுத்தும் சுமார்.இது உனக்குத்தேவையா குமார்?=விகடன் =40,ரேட்டிங் = 2.25 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 40




குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =   2.25  /  5