Showing posts with label டோலிவுட். Show all posts
Showing posts with label டோலிவுட். Show all posts

Wednesday, June 13, 2012

DHADAA- காஜல் அகர்வால் -ன் தெலுங்கு சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2011/11/DhadaSongsDownload1-1.jpg

உதயம் தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ் ஆனப்போ நாகார்ஜூன்க்கு சிரிக்கவே தெரியாதா? எப்பவும் முகத்தை உர்னு வெச்சுட்டு இருக்காரே.. அப்படின்னு ஒரு டாக்..(TALK)  அவர் நடிச்ச மணிரத்னம் படமான இதயத்தை திருடாதே ( தெலுங்கில் கீதாஞ்சலி) படத்திலும் அதே விமர்சனம் தான்.. இப்போ அவர் பையன் நாக சைதன்யா ஹீரோ ஆகிட்டார்.. அப்பாவுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கார்.. தெலுங்குல இவர் சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரோன்னு பயமா இருக்கு ..

வில்லன் ஒரு லேடீஸ் புரோக்கர்.. அதாவது இங்கே உள்நாட்ல இருக்கற பெண்களை கடத்தி வெளிநாட்டுக்கு பெண்களை விற்கற ஆள்.. ஒரு பெண்ணுக்கு ஒரு கோடி.. கையில் ஒரு லேடி, கிவ் மீ எ  கோடி , மீ எ கேடி.. இதுதான் வில்லனோட தாரக மந்திரம்.. இவரோட கேவலமான பிஸ்னெஸ்ல ஒரு சறுக்கல்.. தெரிஞ்சோ தெரியாமயோ ஹீரோ வில்லனோட பிஸ்னெஸ்ல ஒரு டைம் கிராஸ் ஆகி அவருக்கு ஒரு லாஸை ஏற்படுத்திடறாரு..

வில்லன் ஹீரோவைப்போட்டுத்தள்ள ஐவர் குழுவை அமைக்கறாரு.. ஹீரோ வெட்டாஃபீஸ்.. ஹீரோயின் பயங்கர செல்வச்சீமாட்டி.. ஹீரோயின்க்கு அவங்கப்பா ஒரு ஃபாரீன் மாப்பிள்ளையை நிச்சயம் பண்றாரு.. அந்த மாப்பிள்லை ஆள் படா ஷோக்காத்தான் இருக்காரு.. ஆனா பாருங்க, ஹீரோயினுக்கு  அவனை பிடிக்கலை..

அவருக்கு தெரு பொறுக்கும் ஹீரோ தான் பிடிச்சிருக்கு.. ( இந்த மாதிரி கேவலமான கதைகளை படிச்சுட்டு, படம் பார்த்துட்டு யாரும் இதுவரை பார்த்துட்டு இருக்கற நல்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊர் சுத்த ஆசைப்பட்டதில்லை, நல்ல வேளை )2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவர் வில்லனோட கேங்க்ல தான் இருக்கார் அப்டிங்கறது இடைவேளை ட்விஸ்ட்ல தான் டைரக்டர்க்கு தெரியுது.. ஆனா பாருங்க படம் போட்ட 20 வது நிமிஷமே நமக்கு புரிஞ்சுடுது..



வில்லன் ஹீரோவை கொலை செஞ்சானா? ஹீரோ ஹீரொயினை மேரேஜ் செஞ்சாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

ஹீரோ நாக சைதன்யா ஆள் தலையே சீவாம , தாடியோட முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாம நடிச்சிருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.. ஆனா தெலுங்குல ஹிட் அடிச்சுடுவார்னு தோணுது..

ஹீரோயின் காஜல் அகர்வால்.. சமீபத்துல இவ்ளவ் கேவலமா ஒரு ஹீரோயினை வேஸ்ட் செஞ்ச டைரக்டரை பார்க்கலை.. ஹீரோயின் ஹேர் ஸ்டைல் மகா மட்டம்..  பாப் கட்டிங்க்காம்.. சகிக்கலை.. மாவீரன் படத்துல அவர் என்னா கலக்கு கலக்குனாரு? அதுவும் ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட் கற்பனை வறட்சி.. இருட்டுக்கடை அல்வா அரைக்கிலோவை கைல கொடுத்தும் அதை டேஸ்ட் பண்ணாம வேடிக்கை பார்த்தவன் கதையா இயக்குநர் வேஸ்ட் பண்ணது வன்மையா கண்டிக்கத்தக்கது..

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் தான் ஹீரோவுக்கு அண்ணன்.. ஆள் செம பர்சனாலிட்டி.. அவர் அருகே நிற்கும்போது ஹீரோ படு கேவலமாக இருக்கார்.. தமிழனுக்கு பெருமை..



அவருக்கு ஜோடி சமீக்‌ஷா.. வந்தவரை ஓக்கே.. ஆனா அவருக்கு திறமை காட்ட சந்தர்ப்பம் இல்லை.. சோ சேடு..


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNWjJLiWCCEpksoZlRKp9RuDmKyJ5LjMwI2ygdcSDBb5RnyMf4WUdQeO79bbxKYyIjIF5wfEGAxA-NQe_DWoorboAYnsT13X11RnNcovefRwOPJ0bf-3Fze7NGgJqfmfIZuPJpIUkHQ21Y/s1600/49c88c86480f4a1c83e9aa6ce8ca6838.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பூவிழி வாசலிலே படத்துல வர்ற ரகுவரன் செஞ்ச ஒரு கால் ஊனம் உற்ற கேரக்டரை நைஸா சுட்டு இந்தப்பட வில்லன் கேரக்டர் ஆக்குனது..

2. படத்தை ஆந்திராவில் சாதாரண இடத்துல எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை படம் கிராண்டா வரனும்னு தயாரிப்பாளரை பிரெயின் வாஸ் பண்ணி உலகம் பூரா சுற்றி பல லொக்கேஷன்ஸை ஓ சில பார்த்துக்கிட்டது

3. ஹீரோ, ஸ்ரீகாந்த், வில்லன் , சமீக்‌ஷா இவங்க 4 பேருக்குமான ஆடை வடிவமைப்பு அருமை... செம டீசண்ட்..

4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போனாலும் பிரம்மானந்தம் காமெடியை சாமார்த்தியமா புகுத்தியது


5. பாடல் காட்சிகளில் காட்டிய பிரம்மாண்டம்.. தொடவா? தொடவா? உன் நெஞ்சை பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகுக்கவிதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGIQuODSJDOWRJD5FGsqZFtbQ7vqRu1CqqpmwiWCSuqWyLmQsJkGSNFYHDg4GxxAPrw4hN4hBxAWhUhV44FXII9LUdMKZcUNA9ljjEU5uUtp2qjJStNUEI2Yhh6yeOuSEo83A5AqNlj04/s1600/Kajal+Agarwal+in+Saree1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. வில்லன் ஒரு அரைக்கேனமா? அடிக்கடி யார் கிட்டேயாவது தன் கால் எப்படி ஊனம் ஆச்சு?ன்னு ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு விதமா சொல்றது மகா எரிச்சல்..


2. மேரேஜ் ஆகாத ஒரு பொண்ணு நிச்சயம் செய்யப்போற மாப்பிள்ளையுடனான முதல் சந்திப்பில் அப்படித்தான் லோ கட், லோ ஹிப் டிரஸ்ல வருமா? ஃபேமிலி கேர்ள் மாதிரியே ஃபீல் வர்லை.. பக்கா அயிட்டம் மாதிரி இருக்கு..

3. ஹீரோயினுக்கு பேரண்ட்ஸ் பார்த்த மாப்ளைக்கு எந்த குறையும்  இல்லை,ஆளும் பர்சனாலிட்டிதான், அவர் வில்லனும் அல்ல (க்ளைமாக்ஸ்ல வில்லனா வலியனா காட்டறது தவிர)அப்புறம் ஏன் அவரை ஹீரோயினுக்கு பிடிக்கலை?

4. ஹீரோ என்னதான் பண்றார்? பூவாவுக்கு என்ன பண்றார்? வேலைக்கும் போறதே இல்லை.. எப்போ பாரு ஹீரோயின் பின்னாலயே சுத்திட்டு இருக்கார்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DPWiGleIOSM4tf2UlAqFpCKYzopJ-vhANIYWlyh-TasU7cb1-1BfboBFIHTljjlMlfHkjb_XF3WbDr34EkZetaQuEJDpnsk1zGNGI4eOLvFA9KzNrE0oIevKxqUY4HtH2dxpY8ynVuur/s1600/kajalagarwal-00118.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. கோபம் உன் வீக்னஸ்.. எனக்கு வீகன்ஸ் ஆகாது

2. வெளிநாடு போகும் வேலை வேணாம்ணே... ஜாப்பை ரிசைன் பண்ணிடுங்க..

அவங்க விடமாட்டாங்க

அப்போ ஏதாவது தப்பு பண்ணுங்க.. அவங்களே தூக்கிடுவாங்க

3. பிரம்மானந்தம் - சிட்டிங்க், சீட்டிங்க்,கிஸ்ஸிங்க்.... இதுக்கெல்லாம் நீ ஓக்கே சொன்னா நீ தான் என் செக்ரட்டரி..

உங்களுக்கு வயசான மாதிரி தெரியுதே?

பார்க்கத்தான் அப்படித்தெரியும்.. ஆனா எனக்கு 25 வயசு தான் ஆகுது

4. அட, இது அழகான பொண்ணுதான், உங்க ஒயிஃபா?

யோவ்,ஒயிஃப் இந்த மாதிரி டிரெஸ் பண்ணா குடும்பம்  உருப்படுமா?

5. எதுக்கு இங்கேயே வேடிக்கை பார்த்துட்டு இருக்கே?நீ ஒண்ணு பண்ணு, ஒரு சேர் எடுத்து எங்க எதிர்ல போட்டுக்க வேடிக்கை பாரு.. ரொம்ப ஈசியா இருக்கும்.. லைவ் ஷோ

6,இவ ஏன் இவ்ளவ் வேகமா கார்ல  போறா? சாகடிக்கவா? சாகவா?

7. ஆஹா.. பியூட்டிஃபுல்.. இதுக்கே பார்ட்டி வைக்கறேன்..

 ரொம்ப தாங்க்ஸ்டா..

 ஆனா பில் பே பண்றது நீதான்..

ம்க்கும்

8. டியர்.. உனக்கு 2 ஆப்ஷன்ஸ் தர்றேன்..


1. எனக்கு போர் அடிக்கற வரை நீ என் கூட இருக்கனும்


2. உனக்கு போர் அடிக்கற வரை நான் உன் கூட இருக்கனும்

9. ஸாரி.. நான் கிளம்பறேன், என்னைக்காணோம்னு தேடுவாங்க..

அப்படி தேடற ஆளுங்களோ, உன் மேல அக்கறை உள்ள ஆளுங்களோ இருந்தா நீ இங்கே வந்திருக்க மாட்டே..

10அவன் டெக்னிக்கல் ஃபைட்டர், நான் எமோஷனல் ஃபைட்டர்,அவன் ஃபைட் பண்றது என்னை தோற்கடிக்க, நான் ஃபைட் பண்றது அவனை ஜெயிக்க.. அவன் ஃபைட் போடறது பணத்துக்காக , நான் ஃபைட் பண்றது உனக்காக



11. அவ பேரு தெரியும், அட்ரஸ் இனிதான் தெரிஞ்சுக்கனும்..

 மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சா?

12. அவ கிட்டே லவ்வை எப்படி சொல்றதுன்னு தயக்கமா, பயமா இருக்கு.

 அவளோட பிரச்சனை என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ கேட்காமலேயே அதை நீ சால்வ் பண்ணு.. அப்புறம் உன் லவ்வை சொல்லத்தேவையே இருக்காது.. அவளே தெரிஞ்சுக்குவா..

13. ஒவ்வொரு நாளும் அவனோட உடல் பார்ட்ஸ் ஒவ்வொண்ணா வேலை செய்யாம போனா அவன் எப்போ சாவான்? அவன் சாவு அவ்ளவ் குரூரமா இருக்கனும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE_7KQrhDKQnzK1h35crj9I2YdyURy2IuGETKVfVrFcSP4vKam4qCsUAllGbjzo7z5bpUm7ad70a144IFIMb8OmrQ-LO-zuhPB1nGEtCLP_p2yHVw1Rp329R_pqmHJcDQa9YdbhiG4uzG9/s1600/kajalagarwal-00053.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 (தெலுங்குப்படத்துக்கு மார்க் போடமாட்டாங்க, சும்மா ஒரு ஒப்பீட்டுக்காக, தர நிர்ணயத்துக்காக )

எதிர்பார்க்கும்  குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்கத்தேவை இல்லை

ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்.. ஸ்டில்ஸ் எல்லாம் காஜலின் ஃபேஸ் புக்கில் இருந்து எடுக்கப்பட்டவை.. பட ஸ்டில்ஸ் எதுவும் சகிக்கலை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYcjcWfdCR_KJTWQOPXERsb3R3gIUPK8dVUsSUrLeltjp0gCgkgsstZZqLD5DmN_r3IBE3B2bZ1VoMbaF8kBWnzJkd4en8d_ZtVEcTUNqQPXs0F5v1taanrURezIdB0cpoMt-7L8GmKR8/s1600/2.jpg

Wednesday, May 23, 2012

ஸ்ரீராமராஜ்யம் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.tollywoodandhra.in/wp-content/uploads/2012/02/Sri-rama-rajyam-movie-download.jpg

எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணக்கதைதான்.. ஆனா சம்பூர்ண ராமாயணம்னு தமிழ்ல டீட்டெயிலா வந்ததே அந்த மாதிரி இல்லை.. ஆஃப்டர் வனவாசம் சீதை ரிட்டர்ன் டூ அயோத்தி என்ன ஆச்சு, லவ குசா எப்படி வளர்ந்தாங்க? இதுதான் டாபிக்.. நயன் தாரா சீதையா நடிச்சதால தான் இந்தப்படத்துக்கு இவ்ளவ் செல்வாக்கு..


வனவாசம் முடிஞ்சு ராமர் சீதையோட  நாட்டுக்கு வர்றார்.. 2 பேரும் ஜாலியா அந்தப்புரத்துல  டூயட் பாடறாங்க.. அப்போ யாரோ மக்கள்ல ஒருத்தரு “ சீதை ராவணன் ப்ளேஸ்ல இருந்திருக்கா.. என்ன நடந்துச்சோ என்னவோ? அப்டின்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடறாரு.. உடனே ராமர் சீதையை  அதுவும் நிறைமாசமா இருக்கற சீதையை லட்சுமணன் கிட்டே சொல்லி  காட்டுக்குள்ளே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு.. 

 தக்காளி, அதைக்கூட அவரா செய்ய மாட்டாரா? மன்னர் இல்லையா? அதான்.. எல்லாத்துக்கும் ஆள் வேணும் போல..காட்டுல சீதைக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குது. லவன், குசன்னு பேர் வைக்கறாங்க.. ராமர் நிஜமாவே பொண்டாட்டி மேல அக்கறையா இருந்தா  போய் குழந்தையை, மனைவியை பார்த்துட்டு வந்திருக்கனும்.. ஆனா 8 வருஷமா போகவே இல்லை..

 அந்த பசங்க 8 வயசு ஆன பின் அரண்மனைக்கே வந்து பஜனை பாடறாங்க.. அப்புறமா ராமர் காட்டுக்கு போய் சீதையை அரண்மனைக்கு வான்னு கூப்பிடறார்.. ஆனா பூமா தேவி வந்து சீதையை தன்னோட கூட்டிட்டு போயிடறாங்க.. ராமர் உள்ளதும் போச்சுடுடா க்ரீன் கண்ணா அப்டினு ரிட்டர்ன் ஆகறாரு.. இதுதான் கதை..


சீதையா நடிச்சிருக்கற நயன் தாராவை சும்மா சொல்லக்கூடாது. வாழ்க்கைலயே முதல் முறையா  குடும்பப்பாங்கா, கண்ணியமா முழு உடம்பையும் சேலையால மறைச்சு குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்காங்க .. தேடிதேடிப்பார்த்தும் ஒண்ணும் தெரியல ..

மற்றபடி ராமர், லவன், குசன் எல்லார் நடிப்பும் சுமார் தான் நாடகம் பார்ப்பது போல் இருக்கு .. செட்டிங்க்ஸ், ஆடை வடிவமைப்பு அசத்தல் . இளையராஜா  இசை பிரமாதம்.. 2 பாட்டு நல்லாருக்கு. மொத்தம் 15 பாட்டு அவ்வ்வ்வ்வ்.. இளையராஜாவின் இசையில் தெய்வங்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க  அந்தப்பாட்டும், ராமாயணமே, ஸ்ரீராமாயணமே பாட்டு 2ம் கலக்கல் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPpr-IYDUn2dJ6p7pKnI2uscleExHIQww_MTNRZQwPJOXl_f4gYAkZXt0QmDAxMObWpPQsoEHjDb01wZ_khd4qivcWMiXASQ8BmAc3PVUjD4IRR4yy0qR7eJDqKrjoJfKx2ksuWXr-VbI/s1600/sri_rama_jayam20.jpg
 ராமாயணத்தை இயற்றிய வால்மீகியிடம் சில கேள்விகள்


1. தன் அப்பாவின் ஆணையை மதித்து ராமர் காட்டுக்குப்போனார், அவர் கூட அவர் சம்சாரம் போச்சு ஓக்கே. லக்‌ஷ்மணன் ஏன் போகனும்? அப்படியே அவர் போனாலும் ராமர் என்ன சொல்லி இருக்கனும்? ஒண்ணா நீ அரண்மனைலயே இரு. அல்லது உன் சம்சாரம் ஊர்மிளாவையும் உன் கூட கூட்டிட்டு வந்துடுன்னுதானே சொல்லி இருக்கனும்?


2. ஊர்மிளா ஏதும் சாப்பிடாமல் பட்டினி இருந்து எலும்புக்கூடாய் அவர் படுக்கை அறையில் இருந்ததாய் சம்பவம் வருது.. அதுவரை யாருமே அவரை கவனிக்கலையா?


3. ராமர் பாட்டுக்கு அவர் சம்சாரம் சீதை கூட குஜாலா காட்டுல சுத்திட்டு இருந்திருக்காரு.. லக்‌ஷ்மணன் என்ன பாவம் பண்ணாரு?தனியே விட்டுட்டீங்க?


4. ராமர் சீதை நினைவா சீதை உருவத்தில் தங்கச்சிலை செஞ்சு அரண்மனைல வெச்சு டெயிலி அதை பார்த்துட்டு இருக்கார் , ஓக்கே ஏன் அவரை காட்டில் போய் பார்க்கலை?


5. மக்கள் தான் சீதையை தப்பா பேசி காட்டுக்கு அனுப்பக்காரணம் ஆனாங்க. அதே மக்கள் தங்கள் நகைகளை கொடுத்து சிலை செய்ய சொன்னதுக்கு சீதையை போய் கூட்டிட்டு வான்னு ஒரு பயலும் சொல்லலையே?ஏன்?


6. அனுமார் உலகம் பூரா பறக்கறவர்.. சீதை அந்த காட்டுல தனியா இருக்கும்போது மட்டும் ஏன் தூது விடலை?


7. அசோக வனத்தில் சீதை கற்பு போய் இருக்குமோன்னு சந்தேகப்படற மக்கள் பேச்சை ராமர் கேட்டு அவரை தனியே காட்டுக்கு அனுப்பிட்டாரு , ஓக்கே அங்கே காட்டுல அவர் தனியா இருந்தப்ப யாராவது ரேப் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சாரா?


8. பூமா தேவி வந்து சீதையை தன்னோட பாதாள லோகத்துக்கு கூட்டிட்டு போயிடுது.. எந்த தப்புமே பண்ணாத சீதையை கூட்டிட்டு போறப்ப மனைவியை பரிதவிக்க விட்ட ராமரை ஏன் கூட்டிட்டு போகலை.. தக்காளி, வண்டில ஏர்றான்னு சொல்லி அவரையும் கூட்டிட்டு போறதுக்கென்ன?


9. லவன், குசன் 2 பேரும் பயங்கர புத்திசாலியா வளர்றாங்க, மந்திர வித்தை எல்லாம் தெரியுது. ராமர் பற்றி தெரியுது.. ஆனா ராமர் தான் தன் அப்பான்னு தெரியலை. அப்போ சீதை அவங்க கிட்டே மிஸ்டர் எக்ஸ் தான் உங்கப்பான்னு சொல்லி வளர்த்திருப்பாரா?


10. இவ்ளவ் துரோகம் ராமர் செஞ்சும் சீதைக்கு அவர் மேல கோபமே வர்லையே ஏன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVKjoenQMVngLd9k5wtYcLo0WzhDizqqeH4UnzOekdTCi9jZSHVeUeKlk_mdnl-5D5sLU074iJWaTTrqQIsuGva4OaWQcQgzBzKIvQvmIKFniogM1Bk8apxA-kQZBt8tW52MqaCJL2QU/s1600/Nayanatara_New_Photo_Stills_Sri_Rama_Rajyam+%25281%2529.jpg
 இயக்குநருக்கு சில கேள்விகள்


1. ராமர் தன்னிலை விளக்கம் அளிக்கறப்போ “ ஊரே பேசுது, அதனால தான் அப்படி செஞ்சேன்”கறார். ஆனா பூமாதேவி “ ஒரே ஒரு ஆள் பேச்சைக்கேட்டுட்டு உன்னை நிர்க்கதியா விட்ட ராமன்” கறார்,. ஒய் திஸ் குழப்பம்?


2. தலைவன் எவ்வழி? மக்கள் அவ்வழின்னு சொல்வாங்க.. ராமர் மகா உத்தமர், அப்படி இருக்கும்போது அவர் ஆட்சி புரியும் நாடும் அவரை மாதிரி தானே இருக்கனும்? ஏன் சீதையை சந்தேகப்படற அளவு கேவலமா இருக்கு?

3. ஒரு நாட்டின் மன்னன் போருக்காக போர்க்களம் போனா 6 மாசம் கழிச்சுத்தான் நாடு திரும்பறான்.. அப்போ அவன் என்ன எல்லாம் கில்மா பண்ணானோ? அவன் தீக்குளிக்க வேண்டியது இல்லையா?


4. பூமா தேவி பற்றி ராமாயணத்தில் வர்ணிக்கையில் கம்பர் பச்சை வண்ண ஆடை அணிந்தவள் அப்டிங்கறார்.. ஆனா படத்துல சிவப்புக்கலர் பட்டுப்புடவை, சிவப்புக்கலர்ல வெள்ளை கட்டம் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்களே?


5. பட்டாபிஷேகம் செய்யும்போது நாட்டை காப்பாற்றுவேன் என உறுதி அளித்ததால் தான் நாட்டு நலன் கருதி சீதையை காட்டில் விட சம்மதித்தேன்னு ராமர் சொல்றாரு.. ஏன்? மெரேஜ் நடக்கும்போது கூட மனைவியை எந்நிலையிலும் கை விட மாட்டேன்னு சொன்னாரே? அதை காத்துல பறக்க விடலாமா?

6. புருஷன் இல்லாம தனிமையில் இருக்கும் பெண்கள் அந்தக்காலத்துல பூவே தலைல வைக்க மாட்டாங்க, ஆனா நயன் தாரா ஐ மீன் சீதை எப்பவும் 8 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு இருக்காரே?


7. சீதையை பார்க்க குடிலுக்குள் வர்ற முனிவர் ஏன் கதவை சாத்தறார்? ஹய்யோ அய்யோ ..


8. மத்தவங்க கண்ணுக்குத்தெரியாத இன்விசிபிள் விமனா சீதை அரண்மனைக்குள்ள வர்றப்போ ராமர் வந்ததும் அவரை பார்த்து சீதை ஏன் ஒளியனும்? அவர் தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாரே/


9. நயன் தாரா கைல ரத்தச்சிவப்புல மருதாணி இருக்கு.. கானகத்துக்கு வந்த பின் 8 வருஷமா அவர் 3 மாசத்துக்கு ஒரு டைம் மருதாணி வெச்சுட்டே இருப்பாரா?அவர் தான் எந்த விதமான அலங்காரத்துலயும் மனம் லயிக்காம இருப்பவர் ஆச்சே?

10. பூமா தேவி க்ளைமாக்ஸ்ல 12 நிமிஷம் வசனம் பேசுது.. அப்போ ராமர் அவர் வாயையே ஆன்னு பார்த்துட்டு அவங்க கிளம்பறப்ப லபோ திபோன்னு அடிச்சுக்கறாரே.. அதை அவர் இருக்கறப்பவே செஞ்சிருக்கலாமே?


http://www.andhrabulletin.com/admin/images/Nayanathara%20stills%20from%20Sri%20Rama%20Rajyam%20(9).jpg
மனம் கவர்ந்த வசனங்கள்


1. மக்களுக்கு நல்வாழ்க்கை வழங்கி நாட்டை ரட்சிப்பவனே ராஜன் ( லீக்ஸ்?)


2. கஷ்டங்கள் இல்லை என்றால் கதைகள் இல்லை..


 அப்போ எந்த கதையும் சொல்ல வேணாம்.. கஷ்டம் எதும் வராம இருக்கட்டும்.


3. சூரிய கிரகத்தில் பிறந்தவர் சந்திர வடிவ பொட்டை இடலாமா?.

4. ராமர் இன் ரொமான்ஸ் மூடு - வளர்வது பிறை மட்டுமா? உன் இடையும் தான் ( நல்ல வேளை.. )


5. வரம் என்றாலே எனக்கு பயம் நாதா .. வரம் நமக்கு சரி வராது..

6.  ஆபத்து வேளை தெரிந்து வருவது இல்லை


7. நாளைக்கேவா? அது இயலாது.. பிறந்த மான் எழுந்ததும் ஓட நினைக்குமா?


8. தாம்பத்யம் முக்கியம் அல்ல, ராஜகாரியம் அழைக்கையில்.. வருகிறேன்.. ( இந்த ராமர் சம்சாரத்தை எப்பவும் சரியாவே கவனிக்கலை  போல )


9. சந்தேகித்தது ஒருவர் என்றால் வெட்டலாம். ஆனால் ஊரே சந்தேகப்பட்டால் நான் என்ன செய்வது? ( ஊர் உன்னை சந்தேகிச்சா நீ தீக்குளிப்பியா ங்கொய்யால)


10. கீர்த்திக்கு ( புகழ்)ஆசைப்பட்டு ராஜ தர்மத்துக்கு துரோகம் செய்ய மாட்டேன்..

11. யக்ஞ யாகம் மனைவி இல்லாத போது கணவன் தனித்து செய்ய முடியுமா?


12. கற்பது என்பது வேறு.. தெரிந்து கொள்வது என்பது வேறு


13. எதிரியின் பலத்தை அறிந்து கொள்வது போர் வித்தையின்  முதல் படி ( வால்மீகி சாணக்கியர்ல இருந்து சுட்டுட்டாரா? சாணக்கியர் வால்மீகிட்ட சுட்டாரா?)


14. பிரம்மாஸ்திரத்தை மிஞ்சியது, தோல்வி என்ற ஒன்றையே அறியாதது ராமனின் அஸ்திரம்


 ஆந்திராவில இந்தப்படம் படு குப்பை ஆகிடுச்சு.. தமிழ்ல கேட்கவே வேணாம்.. படு குப்பை.. 5 நாள் தான் ஈரோட்ல ஓடும்.. டி வி லபோட்டாக்கூட போயிடாதீங்க சாரி பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/function-photos/sri-rama-rajyam-audio-launch/sri-rama-rajyam-movie-audio-launch-86.jpg


Monday, April 09, 2012

ரகளை ( RAGALAI ) - தமனாவின் தெலுங்குப்பட விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid4cMeEzeaSslCr0aPwNnHKVhSHwIl0P-dZJUrLvuHQ_9QXV0gAzrZfTmrRqB8KIGnvcwzJ0YT6wn7k8iK-Wlg1uRmg8lacNUwoDSF1CPHj10Li7MHP8nQ45Vs5oP5QsET1cQMpyiGsZE/s400/Ragalai+Movie+Posters+Mycineworld+Com+(4).jpg 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோட சீமந்தப்புத்திரன் ராம் சரண் தான் ஹீரோ. இஞ்சி மஞ்சள் இடுப்பழகி, லூஸ் தனமான முக சேஷ்டை அழகி தமனா தான் ஹீரோயின். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி தான் புரொடியூசர்.. போட்ட முதலீடு 40 கோடியாம். ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .. வழக்கமா தமிழ்ல கதை கேட்டு ஷூட்டிங்க் போறவரு இதுல மறந்துட்டார் போல.

ஹீரோ ஒரு பெட் பைத்தியம். உடனே நித்யானந்தா மாதிரி எந்நேரமும் பெட்லயே கிடப்பாரா?ன்னு கேட்காதீங்க.. பந்தயம் எனும் பெட் கட்டற பைத்தியம்.  அவர் கிட்டே அஜ்மல் ஒரு பெட் கட்டறார்.. ஊருக்கே தாதா வில்லன். அவன் பொண்ணு  தமனாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கனும்.. அதுவும் 30 நாட்களில்... இதுதான் கண்டிஷன். பந்தயத்தொகை ரூ  20 லட்சம்.. 

 இதெல்லாம் ஒரு பந்தயமா?ன்னு யாரும் கேட்றக்கூடாது என்பதற்காகவும், தாய்க்குலம் உச்சு கொட்ட வைக்கவும் ஹீரோ அப்பா திடீர்னு சீரியஸ் ஆகி ஹாஸ்பிடல் செலவு வந்துடுது. பந்தயத்துல ஜெயிச்சா பொண்ணு , பணம் 2ம் கிடைக்கும். 

முதல் டைம் ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் தந்துட்டு அப்பா என்ன?ன்னு கேட்டதும் இது ரியாலிட்டி டி வி ஷோன்னு சொல்லி சமாளிக்கறார் .. அந்த கேனை அப்பனும் அதை நம்பிடறான்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZPuKLwrc7o9ttyZeETBq-i-dSZQqFqdrdgTHUkhbAwOg3rdiKSQe0PWLFxcwyLKAqy4R7r2AnEYRcxG3oVg5tWDzN_-kaVvFUNbqWZpUjl-Eo1ByN3NetIH1cypPGAPldnM70IxoZHo/s1600/tammah-Ragalai-Movie-Stills-4.jpg


2வது டைம் தமனா வீட்டுக்கே சாரி பங்களாவுக்கே போய் அங்கே இருக்கற அடியாளுங்க 346 பேரை அடிச்சுட்டு  லவ் லெட்டர் தர்றாரு.. 

 3 வது டைம் தமனாவையே தூக்கிட்டு போய் ஒரு ஃபுல் டே தனிமைல வெச்சிருந்து ஐ லவ் யூ சொல்றாரு.. தமனா லவ்க்கு ஓக்கே சொல்லுது.. 

 இடைவேளை வரப்போகுது. எந்த திருப்பமும் இல்லைன்னா எப்படி? இது எல்லாமே தமனாவின் டிராமா தான்.. ஏன்னா தமனாவின் அப்பா உண்மையில் தமனாவுக்கு அப்பாவே இல்லை.. கார்டியன். தமனாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அவரோட 18 வது வயசுல ஆட்டையை போட அவர் போட்ட பிளானுக்கு எதிர் பிளான் தான் இது.. 

 ஹீரோ வேற யாரும் இல்லை.. சின்ன வயசுல தமனாவின் லவ்வர் தான்.. 

இடைவேளைக்குப்பிறகு ஒரே ஃபிளாஸ் பேக் மயம்.. அடி தடி மயம் தான். ஆந்திராக்காரங்க  அநியாயத்துக்கு இ வா வா இருக்காங்க.. என்ன குப்பை படம் குடுத்தாலும் அதை ஹிட் ஆக்கிடறாங்க. அவ்வ்வ்

 சிம்பு நடிச்ச சிலம்பாட்டம், சரவணா இந்த 2 படத்தையும் மிக்ஸ் பண்ணூனா ரகளை ரெடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு 40 கோடியா? அய்யோ அம்மா.


 ஹீரோ ராம் சரண் ஆள் நல்லா தான் இருக்கார். அவர் பண்ற அலப்பரைகள் தான் தாங்க முடியல.. ஓடற ரயில்ல இன்னொரு ரயில்ல ஜம்ப் பண்றதெல்லாம் ஓவரோ ஓவர். ரயில் 190 கி மீ வேகத்துல வர்றப்போ அவர் ஜீப்ல 160 கிமீ வேகத்துல எதிர்த்திசைல வந்து சடார்னு கடைசி டைம்ல விலகறதெல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான். 


தமனா எப்பவும் போல லெமனா வர்றார். அவ்ரோட புறமுதுகு ஃபுல்லா காட்டறார்.. ராஜ வம்சம் போல்..... அப்புரம் எப்பவும் போல லோ ஹிப் , லோ கட் எல்லாம் உண்டு.  பாடல் காட்சிகளில் அவர் காட்டும் ஹிப் மூவ்மெண்ட்கலை எல்லாம் சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ.. ? நோ கேள்வி எஞ்சாய்.. 

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ragalai-01/wmarks/ragalai-0102.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. மனசுல இருக்கறதை சாதிக்கறதுக்குப்பேருதான் தில்லு.



2. அந்தப்பசங்க வேலைக்கு கூப்பிடறாங்களே. ஏன் போகலை?

 அவங்க எல்லா “ மேட்டர்ஸ்”க்கும் கூப்பிடறாங்க.. போகவா?


3.  நீ  என்னை லவ் பண்ணுனா அது மரோ சரித்ரா, இல்லைன்னா ரத்த சரித்ரா.. 


4. ஜெயிக்கறதுல இருக்கற கிக் வேற எதுலயும் இல்லை.. தோக்கடிக்கறதுல உள்ள த்ரில்லே தனிதான்.. 

5. மாஸ்டர்.. யூ ஏஜ் பார்.... நீ லேட் பார்.. 


6. ஆண்டவனால சாதிக்க முடியாததை அரசியல் வாதி சாதிச்சுடறான்

7.  அவன் வந்து உன்னை அடிக்கற வரை நீ என்ன புடுங்கிட்டு இருந்தே?

 காமெடி ஆக்டர் பிரம்மானந்தம் - ஃபேஸ் டூ ஃபேஸ் சொல்றேனேன்னு சங்கடப்படாதீங்க.. உங்க மகளை அவன் கடத்திட்டுப்போனப்ப  நீங்க என்ன புடுங்கிட்டு இருந்தீங்களோ அதே தான் நானும் புடுங்கிட்டு இருந்தேன்

8. ஹீரோவின் கேவலமான பஞ்ச் டயலாக் - நீ கத்துனா கூச்சல்.. நான் கத்துனா அது மின்னல்.. 

9.  பஞ்சப்பரதேசிக்கு பர்கர் கிடைச்சாக்கூட ஃபிகர் கிடைக்க மாட்டேங்குதே?

10. என்னது? முட்டை சாப்பிட மாட்டீங்களா? 

 ஆமா.. ஆனா முட்டையோட அம்மாவை சாப்பிடுவேன் ஹி ஹி 

11.. பீஸ் ஃபிரெஸ்ஸா?

 ரெஃப்ரஸ் பண்ணிப்பாரு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim7ulWJFxOadJcXgdyYEpg4CEKlUoR4Utra5W8lBqA5TJSe0TxEtrmJ-xkuIy6GwI5li2GaxVrIY3d5QxDrA9H3IwkcsMqPpSSObEbToMl-OSCQFRRw81wA7YXM3IlxDhfjYXoqIutVfg/s1600/Indian+Actress+Tamanna+Bhatia+Very+Hot+%2528162%2529.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டி வி ரியாலிட்டி ஷோ என சமாளிச்சு ஹீரோ வில்லனுக்கு சர்ஃப் எக்சல் சோப் பவுடர் பாக்கெட் தரும் இடம்.. செம அப்ளாஸ் வாங்கும் சீன்.. 

2. இந்த டப்பா கதையை ஆர் பி சவுத்ரியிடம் சொல்லி ஓக்கே வாங்கியது

3.  தமனாவை முடிஞ்சவரை திறமை  “ காட்ட “ வைத்தது

4.  டில்லக்கு டில்லக்கு டில்லா, உன்னை பார்க்கும், வெள்ளைப்பூவே, ரகளை ரகளை யூத் ரகளை என 4 பாட்டு சுமார் ரகம்.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே 



http://wallpaperpassion.com/upload/4119/tamana-hot-sexy-wallpaper.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

 1. பல சீன்கள் சரவணா, சிலம்பாட்டம் ல சுட்டு இருக்கீங்களே? யாரும் கண்டு பிடிக்கலையா?

2. ரகளை ரகளை யூத் ரகளை பாட்டும்.. ஹீரோவுக்கான பில்டப் மியூசிக் தீமும் அப்படியே 100% சிலம்பாட்ட சுடல்./.. 

3.  ஹீரோ அடிக்கடி கூலிங்க் கிளாஸை கழட்டி ஆடியன்ஸை நோக்கி வீசிட்டே இருக்காரே ஏன்? அவருக்கு பிடிக்கலைன்னா போடாமயே விட்டிருக்கலாமே? ஸ்டைலு? அவ்வ்வ்

4.  ஓப்பனிங்க் சீன்ல அவ்வளவ் பெரிய பணக்காரப்பையன் யாகம் நடக்கும் இடத்துல இருந்து வீட்டுக்கு ஏன் நடந்து பொறான்? அதுவும் வெறும் கால்ல?

5. பாம் வெடிச்சு கார் எல்லாம் கரி ஆகுது.. பில்டிங்க் எல்லாம் பீஸ் பீஸ் ஆகுது. ஆனா அந்த ஒன்றரை அணா தாயத்து கயிறு அப்படியே இருக்கே.. அது எப்படி?

6. ஹீரோ கூடவே ஹீரோயின் 4 நாள் பகல், இரவு எல்லாம் சுத்தறா.. அப்ப எல்லாம் தாயத்தை  பார்க்காம வில்லன் ஹெலி காப்டர்ல வந்து கடத்தறப்பத்தான் பார்க்கறா.. ஏன்? 

7. வில்லன் ஹீரோ கிட்டே அவனோட ஃபிலாஸ் பேக்கை ஏன் சொல்லி டைம் வேஸ்ட் பண்றான்?


http://s4.postimage.org/d3zfu7gv6/Tamanna_Hot_Pictures_Badrinath_6.jpg


எதிர் பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 

எதிர் பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - தமனாவின் ஜொள்ளர்கள் மட்டும் பார்க்கவும்.. வேற யாரும் பட டிரெயிலர் கூட பார்த்துடாதீங்க

 இந்த கேவலமான குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.bollywoodcollections.com/contents/member/hotdesibabes/photos/MidThumbs/07f1123e--10x25vhcgou1zdttjk.jpg