Showing posts with label ஜெ. பிரதமராவது என்ற கேள்விக்கே இடம் இருக்காது!- சோ பேட்டி. Show all posts
Showing posts with label ஜெ. பிரதமராவது என்ற கேள்விக்கே இடம் இருக்காது!- சோ பேட்டி. Show all posts

Wednesday, February 12, 2014

ஜெ பிரதமர் ஆக வாய்ப்பே இல்லை -துக்ளக் சோ பேட்டி @ பிசினஸ்லைன்

ஜெ. பிரதமராவது என்ற கேள்விக்கே இடம் இருக்காது!- சோ பேட்டி


தேசிய அளவில் மூன்றாவது அணி இன்னும் முழுமையாக முளைவிடாமல் இருக்கலாம். ஆனால், அதன் எதிர்காலம் என்ன என்பதை இப்போதே கணித்திருக்கிறார் சோ.


அரசியல் நிலவரத்தைக் கவனிக்கிறீர்களா? இன்றைய சூழலைக் கணிக்க முடிகிறதா?


தேசிய அளவில் மோடிதான் முன்னிலையில் இருக்கிறார்; மற்றவர்களைவிட மக்களிடம் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்திவருகிறார். தமிழகத்தில் இன்னும் கூட்டணிகளே முடிவானபாடில்லை. விஜயகாந்த் எந்தப் பக்கம் சாய்வார் என்பது யாருக்கும் தெரியவில்லை. எந்தக் கட்சியுடன் பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் கூட்டணி சேரப் போகிறது, காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் இடையிலான உறவு என்ன என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், இப்போதைக்கு எதையும் கணிக்க முடியாது.



தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு என்ன? மக்களவைத் தேர்தல் கூட்டணியை முடிவுசெய்வதில் அந்தக் கட்சியின் மிக நீண்ட தாமதத்துக்குக் காரணம் என்ன?



முடிவெடுக்க இன்னும் நிறைய நேரமும் காலமும் இருக்கிறது என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம். எந்தக் கூட்டணியில் இணைந்தால் தனது கட்சிக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்றும் அவர் இன்னமும் கணக்கு போட்டுக்கொண்டிருக்கலாம்.



தே.மு.தி.க-வால் பா.ஜ.க-வுக்கு ஆதாயம் உண்டா?



பா.ஜ.க. கூட்டணியுடன் விஜயகாந்த் இணைந்தால், பா.ஜ.க-வுக்கு நிறைய ஆதாயங்கள் உள்ளன. தே.மு.தி.க-வுக்கு 8% வாக்கு வங்கி இருக்கிறது. அதன் காரணமாகத்தான் தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. விரும்புகிறது.



தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால்?


என்னைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைமை மோசமாகிவருகிறது. அந்தக் கட்சி தனது வாக்குகளைப் படிப்படியாகப் பறிகொடுத்துவருகிறது. அதனால், தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால்கூட, அ.தி.மு.க-வின் வாக்கு வங்கிக்கு இணையாக முடியாது.



ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையுமா?



இப்போதைய நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசவில்லை. அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் திடீர் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லை.



தேசிய அளவில் அ.தி.மு.க. முக்கியப் பங்கு வகிக்குமா?



மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. 25 - 30 தொகுதிகளைக் கைப்பற்றினால், தேசிய அளவில் அந்தக் கட்சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 210-220 இடங்களைப் பிடித்ததாக வைத்துக்கொண்டால், அ.தி.மு.க-வின் 25-30 சீட்டுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.



மூன்றாவது அணி சாத்தியமா?


மூன்றாவது அணி அல்லது மாற்று அணி என எந்தப் பெயரில் அணி அமைந்தாலும், அந்த அணி வலுவான கூட்டணியாக இருக்காது. மிகவும் பலவீனமான கூட்டணியாகத்தான் இருக்கும். மூன்றாவது அணி என்பது சிறு அரசியல் சலசலப்பு மட்டுமே.


சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒருபோதும் ஒருமித்துச் செயல்பட மாட்டார்கள். இடதுசாரித் தலைவர்களும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் இணைய மாட்டார்கள். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எப்போதுமே இருவேறு துருவங்கள். இந்தக் காரணங்களால் பாதிக்கும் மேற்பட்ட கட்சிகள் வெளியேறிவிடும். அதன் பின் மூன்றாவது அணியில் எஞ்சியிருக்கும் கட்சிகளால் நிச்சயமாகப் பெரும்பான்மையைப் பெற முடியாது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவின்றி அந்த அணியால் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும், மூன்றாவது அணி என்பது மிகவும் பலவீனமான அணி.


முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?


ஒருவேளை, பா.ஜ.க-வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலோ, மற்ற கட்சிகள் பா.ஜ.க-வை ஆதரிக்க முன்வராவிட்டாலோ அந்தக் கட்சி வேறு யாரையாவது ஆதரிப்பதைவிட, முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம்.


முலாயம் சிங் பிரதமராக பா.ஜ.க. ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. மாயாவதி, ஜெயலலிதா இருவரில் யாரை ஆதரிக்கலாம் என்றால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்குத்தான் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.


என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கே தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை நெருங்கிவிடும். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியும்.


பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும், மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது.


பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதில் எழுந்துள்ள சர்ச்சைகள்குறித்து…



பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமான நபர் இல்லை என்பது உள்பட, பல்வேறு விதமாக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இப்போது வாக்காளர்களின் மனதில் சில கேள்விகள் எழுந்துள்ளன. யார் பிரதமராக வேண்டும்? மோடியா அல்லது வேறு நபர்களா? மோடி ஏன் பிரதமராகக் கூடாது?


ஒரு வாக்காளரின் மனதில் இந்தக் கேள்வி எழும்போது அவர் நிச்சயமாக மோடிக்கு வாக்களிப்பார்.


உத்தரப் பிரதேசம், பிஹாரில் பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றினால், அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?


நிதீஷ்குமார் வெளிப்படையான, நேர்மை யான முதல்வர். பா.ஜ.க அணியிலிருந்து விலகியதன் மூலம், அவர் தன்னைப் பலவீனப் படுத்திக்கொண்டுள்ளார்.


காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருக்கும்?


நீங்களே சொல்லுங்கள், ஏதாவது ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது அங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. தெலங்கானாவிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்படும். ஆந்திரத்தைப் பிரிப்பதில் காங்கிரஸின் நேர்மை, உண்மையான நோக்கத்தை எல்லோரும் சந்தேகப்படத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரங்களால்


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பலன் அடையக்கூடும்.


ஆம் ஆத்மி கட்சி புதிய சக்தியாக உருவெடுக்குமா?


பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை ஆம் ஆத்மி கெடுக்கக் கூடும். டெல்லியைத் தவிர்த்து, ஏனைய இடங்களில் அந்தக் கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். சில தொகுதிகளில் வேண்டுமானால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் ஆம் ஆத்மிக்குக் கிடைக்கலாம்.


பிசினஸ்லைன், தமிழில்: சு.கோயில் பிச்சை​

நன்றி - த தமிழ் இந்து 


 மக்கள் கருத்து 

    • ஆனால் காங்கிரஸ் ஒரு அயோக்கிய கட்சி. திமுக அதை அடுத்து மாநில அளவில் வருகிறது. 10 வருட ஆட்சியில் காங்கிரஸ் கெடுத்தது அதிகம். குஜராத்தில் மக்களுக்கு கிடைத்து அதிகம். இது இந்திய அளவுக்கு கிடைப்பதை மக்கள் எதிர்பார்ப்பது என்ன தப்பு. ஆமாம் பெர்ணாண்டஸ் ஊழல் செய்தாரா? இல்லை செய்ததாக கூறப்பட்டாரா? நல்லவை , கெட்டவைகளைவிட அதிகம் இருந்தால் அதுவே நல்லது.
      about 24 hours ago ·   (7) ·   (0) ·  reply (1)
      அன்பேவாJP · Vaidhyanathan Sankar · Prassannasundhar  Up Voted esspee 's comment
      •  அன்பேவாJP from Chennai
        அன்பர் ESSPEE அவர்களே இன்றுவரை இந்திய அரசியலில் ஊழல் செய்ததாக கூறப்பட்டவர்கள் தான் அதிகம் அப்படியே செய்து இருந்தாலும் செய்ததாகதான் புகாராகத்தான் கொடுக்கபடுகின்றது இன்றைய ௨G ஊழலில் கூட அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்திவிட்டனர் என்று தான் புகார் பதிவு செய்ய படுகின்றது ஊழல் செய்தனர் என்று புகார் பதிவு செய்வதில்லை இதுதான் அரசியல்வாதிகளின் நுணுக்கம் !அதே போல் எந்த ஊழல் வழக்கிலும் இதுவரை அதிகப்படியான எவரும் ஒரு சிலரை தவிர இதுவரை தண்டிக்கபட்டது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் !அப்படி தண்டிக்க பட்டுள்ள அரசியல்வாதிகள் சிலரும் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்து விட்டு சிலநாட்களில் வெளி வந்து விடுவார்கள் !
        about 20 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
        Vaidhyanathan Sankar  Up Voted %e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b5%e0%ae%beJP 's comment
      •  Ramakrishnan from Chennai
        "பழைய விசயங்களை மறக்கடித்து பழைய ஊழல் வாதிகளை புனிதர்களாக காட்டிவிடலாம் என்று எண்ணி சட்டசபை தேர்தலில் ஜெயாவுக்கு ஆதரவாக செயல் பட்டது போல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றார் பாஜகவின் தமிழக ஏஜென்ட் திருவாளர் .சோ" ஜெ. ரமணா அவர்களே,... நீங்கள் சோ அவர்களின் எண்ணங்களை இந்த ஒரு நேர்காணலின் மூலம் மட்டுமே எடைபோட முயற்சிப்பது தெரிகிறது. சோ என்றுமே பழயதை மறப்பவர் அல்ல. அவர் திரும்பத் திரும்ப சொல்வது ஒன்றே ஒன்றுதான்: எல்லா கட்சிகளும் மோசமானவையே. நான் இருப்பதுள் ஆபத்து குறைவான கட்சியை ஆதரிக்கிறேன். இந்த நிலைப்பாடுக்கு ஒட்டியே, அவர் ஆதரிக்கும் கட்சியின் தவறுகளை சற்று (சற்று மட்டுமே) குறைவாக விமர்சிப்பதும், மகா மோசமான கட்சியின் தவறுகள், குற்றங்களை பலமாக சாடுவதும். (ஜெயலலிதாவின் முதல் முறை ஆட்சியை மிகவும் காட்டமாக விமர்சித்து திமுக பதவிக்கு வரும் வண்ணம் கருத்து பதிவிட்டது, இப்போது மட்டுமே அரசியல் நிகழ்வுகளை நோக்கும் உங்களைப் போன்றவருக்கு,... தெரியாதது வியப்பில்லை.)
        about 20 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
        Mannan Mannen  Up Voted Ramakrishnan 's comment
        •  Mauroof, Dubai from Abu Dhabi
          மிக நியாயமான அறிவார்ந்த கருத்து.
          a day ago ·   (1) ·   (5) ·  reply (0)
          •  raajaa from Sharjah
            ஜெய் அவர்களே, துபாயில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் மேலாளராய் இருந்த திருபாய் அம்பானி, எப்படி இன்று உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவரானார்? திருபாய் அம்பானியின் போட்டோவைத் தூக்கி பிடித்தபடி அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சரான பிரமோத் மகாஜன் போஸ் கொடுத்தார். அந்த நன்றிக் கடனைத்தான் இப்போது முகேஷ் அம்பானி மோடி ஆதரவு மூலம் வெளிப் படுத்துகிறார். ஆனால் அதிலும் ஆதாயமில்லாமல் இல்லை.
            about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
            •  maraicar from Chennai
              நெத்தியடி. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள். நன்றி.
              about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
            •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
              மோடி அலை பேரலையாக மாறினால் மட்டுமே பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை நெருங்க முடியும். அதற்கு இன்னும் 2 மாதங்களில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி பிரபலங்கள் அவர்களது ஊழல் குற்றச்சாட்டுகளினால் பெரிய அளவில் சிறை அல்லது புதிய ஊழல் குற்றச்சாட்டு என்று பாதிப்புகள் வந்தால்தான் மோடி பேரலை ஏற்படும். அதற்கு வாய்ப்பு இருக்க வாய்ப்பு இல்லை. பா.ஜ.க அணி 210 -225 வரை வரும் என்பதே நிதர்சனம். ஜெ. க்கு இம்முறை 30 நிச்சயம் 35 லட்சியம். 28 உறுதி. எதுவும் சாத்தியமே.
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
              •  nisha from Bangalore
                dmk will win condiderable no. of seats.dont underestimate them. tamil people are suffering on all fronts in tamilnadu.
                a day ago ·   (1) ·   (2) ·  reply (0)
                gs  Up Voted nisha 's comment
                •  j j. from Chennai
                  சோ ஒரு அரசியல் விமர்சகர் என்று சொல்வதைவிட ஒரு அரசியல் விதூஷகர் என்பதே பொருத்தமானதாக இருக்கும். அவர் மோடி பக்கம் இருப்பதுபோல தெரிந்தாலும் ஜெயா பக்கமே அதிகம் சார்ந்துள்ளார். எந்தப்பக்கம் இருந்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் மக்கள் பக்கம் இல்லை .
                  a day ago ·   (12) ·   (2) ·  reply (0)
                  Mathan · Mohan Ramachandran  Up Voted j j.'s comment
                  ravi  Down Voted j j.'s comment
                  •  Irumeni Irumeni from Taman Meranti
                    ஜெய்.ரமணா போன்றவர்களெல்லாம் இப்படிப் பட்ட கருத்துக்கள் கொண்டிருப்பது அரசியலிலும் ,மத ரீதியிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. தாங்கள் அழிக்கப் பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் வருங்கால அரசியலையும்,அதிகாரத்திற்கு வரப் போகிறவர்களையும் எண்ணி கலக்கத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்கு,இங்கு மீடியாக்களில் பெரும்பான்மையினர் தரும் ஆதரவு மேலும் வயிற்றைக் கலக்கும் போது உங்களைப் போன்ற மனிதாபிமானிகளும்,நேர்மையான கருத்துக்களை வெளிப் படையாக வெளியிடுவதும் மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது. ஒரு அரக்கனுக்கு ஆதரவாக ஆயிரம் பேர் சேர்ந்து ஆயிரம் பேரைக் கொன்றாலும் ஒரு ஜெய்.ரமணா போன்ற ஒருவர் ஒரு உயிரையாவது காப்பாற்றுவார் எனும் நம்பிக்கையை விதைக்கும் உங்களுக்கு நன்றி!!
                    a day ago ·   (20) ·   (9) ·  reply (0)
                    Mathan · maraicar  Up Voted Irumeni Irumeni's comment
                    • CHO IS AN SENIOR..HIS COMMENTS ARE NEARLY FACT..BUT SLIGHTLY HE SUPPORT TO BJP I THING SO..
                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
                      • மூன்றாவது அணியை மாயாவதி என்றுமே மதித்ததில்லை. இதில், மம்தாவை சேர்ப்பது குறித்த பேச்சும் இதுவரை எழவில்லை. நிலைமை இப்படி இருக்க, மாயா மற்றும் மம்தாவை மூன்றாவது அணியில் சேர்த்து திரு.சோ அவர்கள் கூறும் கருத்து, தேசிய அரசியலில் உள்ள அவரது அறியாமையை காட்டுகிறது!
                        a day ago ·   (1) ·   (1) ·  reply (0)
                        •  ravi from Chennai
                          திரு. சோ சரியாக தான் கணித்துள்ளார் . மோடி என்ற பேரலை முன்னால் சிறு துரும்புகள் காணாமல் போய் விடும். இந்த ஒரு முறை மாற்றம் இல்லை என்றால் நம் இந்திய மக்களுக்கு எப்போதும் ஏமாற்றம் தான் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் மோடி ஒரு மத வாதி என்ற குற்றச்சாட்டை தவிர இவர்களால் மோடி மீது எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது
                          a day ago ·   (2) ·   (0) ·  reply (2)
                          • Chief Minister Narendra Modis statement that girls in state suffered from malnutrition because they are more beauty-conscious than health-conscious such a irresponsible statement he is good for ambani's and tata's not for common man"ஏழைகள் மனதில், "தேசிய மத இன உணர்வு" எனும் போதையை ஏற்றி விட்டால், அவர்கள் சில காலத்திற்கு, பசியும், பிணியும், தெரியாமல் வாழ்வார்கள்" by napolean this is what he has done in gujarat
                            about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                            • Chief Minister Narendra Modis statement that girls in state suffered from malnutrition because they are more beauty-conscious than health-conscious such a irresponsible statement he is good for ambani's and tata's not for common man"ஏழைகள் மனதில், "தேசிய மத இன உணர்வு" எனும் போதையை ஏற்றி விட்டால், அவர்கள் சில காலத்திற்கு, பசியும், பிணியும், தெரியாமல் வாழ்வார்கள்" by napolean this is what he has done in gujarat
                              about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                            •  D.Anandaraj from Mumbai
                              சோ அரசியலில் ஒரு நச்சு வைரஸ்.பொய்யால் புகழ் பெற்றவர். இவர் கருத்தால் பலன் அடைந்தவர் யார்? அழிக்க சக்தி படைத்தவர்.இவரால் ஆக்க முடியாது.இதனால் தானே தனது பால்ய நண்பரையும் ஒதுக்குகிறார்.
                              a day ago ·   (2) ·   (2) ·  reply (0)
                              Mohan Ramachandran  Up Voted D.Anandaraj 's comment
                              •  raajaa from Sharjah
                                சோ, ஜெ.வை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்? சங்கரராமன் கொலை வழக்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான வழக்கு போன்றவற்றை ஜெ. கையாண்ட விதம் சோவை இப்படி பேச வைக்கிறது!
                                a day ago ·   (3) ·   (1) ·  reply (0)
                                Mohan Ramachandran  Up Voted raajaa 's comment
                                •  S. Mani 
                                  எதுக்கு மண்டைய போட்டு எல்லாரும் ஒடசிக்கிரீங்க? ... இருக்கவே இருக்கு நம்ம தமிழ் நாட்டு பார்முலா! .... 10 வருஷம் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்தோம் ..... நாட்ட குட்டிச்சுவரா ஆக்கிட்டாங்க .... ஒரு 5 வருஷம் பிஜேபிக்கு கொடுத்து பார்ப்போமே .... என்னதான் செய்யிறாங்கன்னு .....
                                  a day ago ·   (2) ·   (1) ·  reply (0)
                                  •  Irumeni Irumeni from Taman Meranti
                                    ஜெ யின் நண்பர், வெல்விஷர், அதிமுக அனுதாபி,(சோ வின சொந்த வாக்குமூலம்.) மோடியா? ஜெ யா? என்ற நிலை வரும் போது மோடியை தேர்வு செய்து ஜெ யை கை விட்டது வருத்தத்திற்குறியதே! இதை எப்படியாவது சோ உணரும் வகையில் ஒரு சிறிய பாடம்படித்துக் கொடுக்காமல் ஜெ அமைதி பெற மாட்டார்.
                                    about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                    •  s.s. Sadik at مؤسسة العفيف التجارية
                                      திருவாளர் சோ அவர்கள் என்றுமே மோடி மற்றும் அம்மையாரின் ஆதரவாளர் என்பது உலகறிந்த உண்மை. இவரது கணிப்பு தமிழகத்தில் செல்லாக்காசு என்பதும் அனைவரும் அறிந்தது. இம்முறை அவரது கணிப்பின் படி கொடூர மனம் படைத்த மோடி வர மாட்டார். அவருக்கு பதில் மூன்றாம் அணிகள் சேர்ந்து மம்தா போன்ற தன்னலமற்றவர்கலை தலைமை ஏற்க செய்வார்கள் என்பதே நிதர்சனம்.
                                      about 24 hours ago ·   (1) ·   (0) ·  reply (1)
                                      •  Vaduvooraan from Chennai
                                        மம்தா? ..தன்னலம் அற்றவர் ? இனிமேல் கருத்துப் பதிவு செய்ய ஒன்றுமே இல்லை சாதிக் பாய்!
                                        about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                      •  Conjivaram from Chennai
                                        ஆம் ஆத்மி கட்சியை ஒரு பொருட்டாக இவர் எடுத்துகொள்ள வில்லை என்று தெரிகிறது .. குறிப்பாக ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் பாராளுமன்றதுக்குள் அனுப்ப கூடாது என்பதில் ஆம் ஆத்மி கட்சி குறியாக இருக்கிறது .. அதற்க்கு நிச்சயம் மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும் .. 350 சீட்டுகள் போட்டி இடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்து இருக்கிறது .. குறைந்தபட்சம் 30-50 சீட்டுகள் இந்த கட்சி பெரும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது .. ஊழல் அரசியல்வாதிகள் தோற்கடிக்கபட்டால் அதுவே பெரிய வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் கூட ..
                                        about 23 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
                                        raajaa  Up Voted Conjivaram 's comment
                                        •  keykey 
                                          சோ அவர்களின் கணிப்பு மிகவும் சரியான கணிப்புதான் . இன்றைய சூழ்நிலையில் மோடி போன்ற திறமையான ,மக்கள் செல்வாக்கு உள்ள தலைவரால் மட்டுமே நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல முடியும் .ப ஜ க கட்சியில் உள்ளவர் மட்டும்மல்ல ,அணைத்து கட்சியிலும் அவருக்கு நல்ல அதரவு உள்ளதை புறம்தள்ள முடியாது !
                                          about 22 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                          • தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் மனதில் என்ன இருக்கிறது அவ்ர்களின் வாக்களிக்கும் சிந்தனை யாருக்கு என்று சிறிதும்கூட அறியாத ராம் சாமி அவ்ர்களின் சித்தாதம் வசதி படைத்த மக்களின் கைகூலி என்று இவர் பேட்டி மூலம் அறியமுடி‌கிறது அவ்ர் கணிப்பு இந்த காகிதத்தில் மட்டுமே எழத முடியும்
                                            about 22 hours ago ·   (3) ·   (1) ·  reply (1)
                                            BABUBAGATH  Up Voted ஆரூர் ஜ.பாஷா's comment
                                            •  Vaduvooraan from Chennai
                                              நமக்குப் பிடிக்காத கருத்தை சொல்கிறார் என்பதற்காக வசதி படைத்த மக்களின் கைக்கூலி என்று சொல்லிவிட்டீர்களே பாஷா பாய்! ஜனநாயகம் இது; கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லாம��� உள்ள நாடு இது; உங்க ஷார்ஜா சவுதி போல அல்ல என்பதை நினைவில் வையுங்கள் பாய்!
                                              about 20 hours ago ·   (6) ·   (1) ·  reply (0)
                                              ayya  Down Voted Vaduvooraan 's comment
                                            • Correct
                                              about 21 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                              •  baskaran Karan from Chennai
                                                தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என்று சொல்லுபவர்தான் இந்த சோ. நல்ல அரசியல் நோக்கர் என்றால் இவர் இந்த பதில்களை சொல்லும் முன் யோசித்து இருப்பார். திமுகாவை மட்டுமே குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் உள்ளது என்பது யாவரும் அறிவர்
                                                about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)
                                                • அப்படி என்றால் தி .மு.க.க்கள் குறை சொல்ல முடியாத அப்பழுக்கற்ற தங்கங்கள் என்பதுதான் தங்கள் கருத்தோ?கேழ்வரகில் நெய் வடிகிறது என்பதை நம்புகிற காலமெல்லாம் முற்றிலும் மாறிவிட்டது.
                                                  about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                •  அன்பேவாJP from Chennai
                                                  எப்படி எப்படி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற வேண்டுமாம் !ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் பாஜக கூட்டணி தோற்று ஜெயலலிதா 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமாம்!பிஜேபி யால் முடியாவிட்டால் இந்த அம்மையார் பிரதம்ர் ஆக பாஜக ஆதரவு தருமாம்!இல்லை ஜெயலலிதா குறைவான தொகுதிகளை கைபற்றினால் இதே ஜெயலலிதாவின் (குட்டி கட்சிகள் ) ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்குமாம் ? இவரது பேட்டி யின் சாராம்சம் இதுதான் !என்ன ஒரு விந்தையான யோசனை குழப்பவாதி சோ.வுக்கு? தமிழ்நாட்டில் உங்களின் ஆதரவு யாருக்கு ஜெயாவா ?மோடியா என்று நிருபர் கேட்டிருக்கலாம் !
                                                  about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
                                                  • As per Mr.CHO.Ramaswamy there is no anti incumbency wave in TN, Time is closer to summer Power cut may rise from 5 Hours to 18 Hours, Water scarcity already started many places and it may rise to whole TN, Unemployment of engineers are huge, No money movement, Tamil peoples are struggling price rise of commodities, there is no agriculture development, there is no Industry development by the time Mid April there will be huge anti-incumbency tsunami wave in TN. That time ruling party could not be convince through campaign in Interior Tamil Nadu. It may favour to opposition party
                                                    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                    •  muthu from Doha
                                                      நல்ல செய்தி
                                                      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                      • தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் உன்மையில் திமுக விற்க்கு வாக்கு குறைவாகத்தான் கிடைக்கும். என்ற உன்மையை தான் சோ அவர்கள் சொல்கிறார், உன்மை தான் திமுக இபொழுது யாருடன் சேர்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. திமுக வும் காங்க்கிரஸ் உடன் சேர்ந்து ஊழலில் சம்மந்த
                                                        about 16 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
                                                        •  uthayasurian Chinnadurai Superintendent at Madurai Kamaraj University, Maduraifrom Madurai
                                                          சோ ஒருதலைப்பட்சமாக கருத்துக்கள் சொன்னாலும் அவருடைய ஒரு சிலகருத்துக்கள் மிகச் சரியாக இருக்கின்றன.