Showing posts with label ஜெயராம். Show all posts
Showing posts with label ஜெயராம். Show all posts

Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


Monday, November 12, 2012

துப்பாக்கி





விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள்.

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


 விஜய் பேட்டி @ விகடன்
கதைதாங்கணா ஹீரோ!"



எம்.குணா

''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுக் கிறது பெரிய விஷயம் இல்லை. இப்போ நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் முதல் படத்துக்கான உழைப்பைக் கொட்ட ணும். கடைசி நிமிஷம் வரை உயிரைக் கொடுக்க ணும்... த்ரில்லிங்கா இருக்குங்ணா... கொஞ்சம் பயமா வும் இருக்குங்ணா!'' - முதல் பட ரிலீஸுக்குக் காத்திருக் கும் ஹீரோ போல ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். தீபாவளிக்கு வெடிக்கிறது விஜயின் 'துப்பாக்கி’!



 ''பொதுவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமர்ஷியல் படங்களை கமிட் பண்ணிக்க மாட்டார். 'துப்பாக்கி’யில் வேலை செய்ய எப்படி ஒப்புக்கொண் டார்?''



''படத்துக்கு அவர்தான் கேமராமேன்னு சொன்னப்போ, நான் நம்பலை. 'என் படத்துக்கு எப்படி சார் ஒப்புக்கிட்டீங்க’னு நேர்லயே கேட்டுட்டேன். 'பெரிய ஆர்வம் இல்லாமத்தான் 'துப்பாக்கி’ கதை கேட்டேன். ஆனா, க்ளை மாக்ஸ்ல முருகதாஸ் வெச்சிருக்கிற மெசேஜ் கேட்டு ஆடிப்போயிட்டேன்’னு சொன்னார். காலை 9 மணிக்கு மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவுல என்னையும் நடக்க, ஓடவிட்டாங்க. கேமரா எங்கே இருக்குன்னே தெரியாம நடிச்சது புது அனுபவம்!''



''சினிமாவில் இப்போ ஹீரோக்கள் ரொம்ப ஃப்ரெண்ட் லியா இருக்காங்க. ஆனா, நீங்க மட்டும் யாருடனும் க்ளோஸ் ஆக மாட்டேங்குறீங்களே?''


''இது அபாண்ட வதந்திங்ணா. எல்லாரோடவும் பெர்சனல் டச்லதான் இருக்கேன். வெளியே ஷேர் பண்ணிக்கிறதில்லை... அவ்வளவுதான். மூணு வருஷமா விடாம கமல் சாரோட பிறந்த நாளுக்கு மறக்காம என்னை அழைப்பார். போயிட்டு சந்தோஷமா ஆடிப் பாடிட்டு வருவேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைக்காம, என் லெவலுக்குப் பழகுவார். இதோ தீபாவளிக்கு முன்னாடியே 7-ம் தேதி வர்ற அவரோட பிறந்த நாள் எனக்கு மினி தீபாவளி!''


''டான்ஸ்ல உங்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல பின்றாங்களே. சிம்பு, தனுஷ், பரத், சாந்தனு வரைக்கும் எல்லார் டான்ஸும் எனக்குப் பிடிக்கும்!''


''ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கிற மெகா பட்ஜெட் படங்கள் ஃப்ளாப் ஆகுது... புது முகங்கள் நடிக்கிற 'அட்டகத்தி’, 'பீட்சா’ படங்கள் ஜெயிக்குது... ஏன்?''


''அப்பவும் இப்பவும் எப்பவும் தமிழ் சினிமாவில் கதைதான் ஹீரோ... நடிகர்கள் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டா எல்லா படங்களும் ஜெயிக்கும்!''


''பையன் சஞ்சய் என்ன பண்றார்?''


''ஏழாவது படிக்கிறார். கிரிக்கெட்ல பயங்கர ஆர்வமா இருக்கார். எந்த மேட்ச் நடந்தாலும் சாப்பாடுகூட இல்லாம டி.வி. முன்னாடி உட்கார்ந்துடுறார். புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கார். பார்ப்போம்... சேப்பாக்கமா... கோடம்பாக்கமானு!''- அழகாகச் சிரிக்கிறார் அப்பா விஜய்!




ஏ ஆர் முருகதாஸ் பேட்டி


எப்படி இருக்கு விஜய் கூட்டணி?"

'' இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம்.


 ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ரசிகர்களுக்கு தீபாவளி SPECIAL  FULL MEALS ஆக துப்பாக்கி வெடிக்கும்!''




''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''

''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க.



வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''




''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''

''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு.



ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க.





 ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''


 நன்றி - விகடன்


ட்ரெய்லர்



மேக்கிங்க் ஆஃப் துப்பாக்கி - துப்பாக்கி எப்படி எடுக்கப்பட்டது?



1. துப்பாக்கி பஞ்ச் -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா #துப்பாக்கி பஞ்ச்


3. நெட்டில் புரளி - டேக்கன் ஹாலிவுட்டின் தழுவல் தான் துப்பாக்கி என.# அது தவறான தகவல்


4. துப்பாக்கி விஜய் முதல் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி கொஞ்சம் ஸ்லோ என தகவல்

http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg



டிஸ்கி 1 போடா போடி -

 http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html

 டிஸ்கி 2 -துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/First_look_Thuppakki.jpg/220px-First_look_Thuppakki.jpg

Tuesday, April 19, 2011

சைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் 18 பிளஸ்

http://www.metromatinee.com/movies/images/m3269/large/China%20Town10387.jpg

மோகன்லால்,ஜெயராம்,திலீப் என 3 பேருமே கதையைப்பற்றி கவலைப்படாம படம் ஃபுல்லா ஜாலியா இருந்தா போதும்னு நினைச்சு கால்ஷீட் குடுத்துட்டாங்க போல... அரதப்பழசான கதையா இருந்தாலும் இயக்குநர் ரஃபி மார்ட்டின் காமெடியை வெச்சு படத்தை ஒப்பேத்திட்டார்.

ஒரு ஊர்ல ஒரு கிளப்.. அதுல 4 ஃபிரண்ட்ஸ்.. அந்த 4 பேர்ல 3 பேரை கிளப்ல இருக்கற வில்லன் போட்டுத்தள்ளிடறான்.. உயிர் பிழைச்ச மீதி ஒரு ஆள் செத்துப்போன 3 பேரின் வாரிசுகள் மூலமா பல வருஷங்கள் கழிச்சு பழி வாங்கறான்..

ஆனா ரிவஞ்ச் சப்ஜெக்ட் பார்க்கற எஃப்ஃபக்டே இல்லாம படம் ஜாலியா போகுது.. ஆனா என்ன லாஜிக்கே இல்லாம திரைக்கதை கேனத்தனமா நகருது.. அதுவும் செகண்ட் ஆஃப் ரொம்ப மோசம்.. தடுமாறுது..

 ஹீரோயின் காவ்யா மாதவன். ஹீரோவைப்பற்றி சொல்லாம ஏன் ஹீரோயினைப்பற்றி சொல்லனும்? ஏன்னா பெண்களுக்கே முன்னுரிமை ஹி ஹி ..
http://media.onsugar.com/files/2011/03/09/0/1471/14710008/cc/facebook_photo_100001575280700_23885.jpg
மஞ்சள் பூசிய மர வள்ளிக்கிழங்கு மாதிரி என்னதான் பாப்பா குளு குளுன்னு இருந்தாலும் அவருக்கு கல்யாணம் ஆனதால முழுமையா ரசிக்க முடியல.. இங்கே தான் தமிழன் நிக்கறான்.. ( மற்ற இடம்னா உக்காந்துடுவானா?)

என்னதான் அழகான நடிகையை தமிழன் ரசிச்சாலும் அந்த  நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா அவனோட ரசிப்புத்தன்மை குறைஞ்சிடும்..அல்லது மறைஞ்சிடும். (ஏன்னா செகண்ட்ஸ்ல அவனுக்கு விருப்பம் இல்ல)

மோகன்லால்,ஜெயராம்,திலீப் கூட்டணில திலீப்க்குத்தான் முதல் இடம்.... என்னதான் மோகன்லாலுக்கு ஸ்கோப் அதிகமா கொடுக்கப்பட்டாலும் மவுன ராகம் கார்த்திக் மாதிரி மனுஷன் கிடைக்கிற இடமெல்லாம் கோல் போடறார்.

 ஜெயராம் செய்யற காமெடி தெனாலியோடகம்பேர் பண்றப்ப சுமார் தான்.

மோகன்லாலோட விக் சரி இல்லை.. அவரோட முகத்துல முதுமைத்தன்மை அப்பட்டமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு...
http://3.bp.blogspot.com/-uOk_vc5FnIk/TV_StyOzI_I/AAAAAAAAANE/EJFLgNd0jbk/s1600/China%2BTown%2Bmalayalam%2BMovie%2Bstills.jpg




 காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1.மிஸ்..நான் சென்னைல இருக்கேன்... 

ஓக்கே.. அங்கே என்ன பண்றீங்க?

அதாவது சென்னைல குடி இருகேன்.

நீங்க அங்கே என்ன பண்றீங்க? என்ன வேலை செய்றீங்க?ன்னு கேட்டேன்?

ஹி ஹி .. ஹி ஹி சும்மா தான் இருக்கேன்.. இப்படி நோண்டி கேட்கனுமா?

2.  என் காதலியோட கல்யாணத்தை தடுக்கனும்னு நினைச்சேன்.. முடியல..அட்லீஸ்ட் ஃபர்ஸ்ட் நைட்டையாவது தடுக்கலாமே?

3. அண்ணே.. என்னை விட்ருங்க. போட்டிருக்கறது ஒரே ஒரு அண்டர்வேர்.. மானத்தை மறைக்க அதை வெச்சிருக்கேன்.. ப்ளீஸ் அதை உருவிடாதீங்க?ப்ளீஸ்...

டேய் நாயே.. மானமே இல்லாதவனுக்கு எதுக்கு மானத்தை மறைக்க டிரஸ்?



4. மிஸ்... எனக்கு நீங்க தான் லவ்வோ தெரஃபி சிகிச்சை பண்ணனும்.. 

நீங்க ஏன் ஒரு நல்ல ஆண் டாக்டர் கிட்டே அதை பண்ணீக்கக்கூடாது?

5. உங்களுக்கு ஜிக்குபாயை தெரியுமா?

 ம்ஹூம். எனக்கு ஜி கே தான் தெரியும்.... 

சுத்தம் .. அவர் யார் தெரியுமா? 

 பெரிய தொழில் அதிபரா?

எங்க ஏரியாவுலயே பெரிய ரவுடி... 

அடத்தூ...
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUEwpBH2WbypzgmJy0Mm5k711fWyEd5mujnIOmuQfM2OPcItuJpAzgVxcyir2qOoaum4Uh3mHCaR-v2AYdgHRc5vluEMCp5k00CGXjzPapNbJY0KC9uode8l-pUds0kUJGpCWgcLejuRs/s1600/China+Town13960.jpg

6.  என்னை அடிச்சுட்ட இல்ல.. இடத்தை காலி பண்ணு... 


ஏன்?

 டூ வாட் ஐ சே?  (  DO WHAT I SAY!)

 ஓகே...

அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்   என்ன அடி ? வலிக்குதே.. அவங்களுக்கு  முன்னால அழ முடியுமா..? அதான் கிளம்ப சொன்னேன்...

7. என்னை அடிச்சவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவ்ளவ்தான்.. நீ அவனை பார்த்திருக்கியா?

உனக்குப்பின்னால தான் நிக்கறான்.. 

8. சாரி.. கைஸ் (GUYS) எனக்கு அடி வாங்க தெம்பில்லை.. வேலண்ட்ரியா எலிமினேட் ஆகிக்கறேன்... ஹி ஹி 

9. அதை சாப்பிட்டா 3 வருஷத்துக்கு  தூக்க்கம் பிடிக்குமாம்..

அய்யய்யோ.. எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும் போல... 

10. யாரடா.. நீ? ஜட்டி மட்டும் போட்ட ஜெட் லீ மாதிரி வந்து நிக்கறே,.,.?

11.  திலீப் - டியர் .. என் இதயத்துக்குள் வா... எதுக்கு உன் செருப்பைக்கழட்றே..? என் இதயம் என்ன கோவிலா? அப்படியே வா... ( ஏர்செல் க்ஃபார்வார்டட் எஸ் எம் எஸ் ஜோக் 2009)

http://manju_v.tripod.com/kavya-madhavan-02.jpg
திலீப் காதலியை கவர்வதற்காக உடல் ஊனம் உற்றவர் போல் நடிப்பதும்,வீல் சேரில் அவரை உட்கார வைத்து காதலி வரும்போது திலீப்பின் மாமா அவரை பார்த்து அவரது உண்மை சொரூபத்தை தோல் உரிப்பதும் செம காமெடியான காட்சிகள்.

அதே போல் தன் காலில் உணர்ச்சியே இல்லை என அவர் பீலா விடுகையில் மோகன் லால் குரூப் அவரைக்கட்டி வைத்து கட்டையால் பாதத்தில் செம போடு பொடுவதும் கல கல  காமெடி.. 

அதே போல் மாமிச மலை போன்ற ஆளிடம் அவர் படும் அவஸ்தைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குலுங்கி குலுங்கி சிரிக்கும் சிரிப்பு.... சர வெடி...

கஜினி படத்தில் வில்லனாக வந்தவர் தான் இதிலும் வில்லன்.. வழக்கம் போல் ஸ்டீரியோ டைப் நடிப்பு அவருடையது...

க்ளைமாக்ஸில் மோகன் லாலை ஈசியாக போட்டுத்தள்ல வேண்டிய வில்லன் முட்டாள் தனமாக தன் அடி ஆட்கள் 43 பேரையும் துப்பாக்கியை கீழே போடுங்கள் என சொல்லி.. ரன் படத்தில் மாதவன் வில்லனிடம் மோதுவது போல் ஒத்தைக்கு ஒத்தை மோதுவதும் தோற்பதும் லாஜிக்கே இல்லாத காட்சி.. 
http://www.keralapals.com/gallery/albums/roma/roma_pictures_2109_18.sized.jpg
 அதே போல் அவரை வீழ்த்திய பின் 43 பேரும் சேர்ந்து 2 செகண்டில் ஹீரோவை வீழ்த்தி இருக்கலாம்.. அதை விடுத்து  என்னமோ வரிசையாக வாக்குப்போட போகும் வாக்காளன் மாதிரி அவர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வந்து அடி வாங்குவது காலம் காலமாக தென் இந்திய சினிமாவை ஆட்டி வைக்கும் லாஜிக் சொதப்பல்கள்.



இந்தப்படம் கேரளாவில் பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது..ஆனால் பெரிய ஹிட் ஆகாது.. அங்கே 50 நாட்கள் ஓடும்.. தமிழ்நாட்டில் கோவையைத்தவிர அனைத்து ஊர்களிலும் ஏ பி செண்ட்டர்களில் 20 டூ 25 நாட்கள் ஓடும். சி செண்ட்டர்களில் ஒரு வாரம் ஓடும்.

 கோவையில் மட்டும் 30 நாட்கள் ஓடும் .. ஏன்னா கோவையில் மலையாளிகள் 23 % பேர் இருக்காங்க..

 மூளையைக்கழட்டி வீட்டிலேயே வைத்து விட்டு தியேட்டருக்குப்போனால் சிரித்து விட்டு வரலாம். ( அதாவது மூளை உள்ளவங்க)
http://3.bp.blogspot.com/_Itz7LTZ1VaM/SflKvIYvbpI/AAAAAAAACDc/OgC5b8HTw3c/s400/Roma_Actress.jpg


டிஸ்கி 1 . 

படத்துக்கு  வழங்கப்பட்ட  ஏ சான்றிதழ் படத்தில் உள்ள வன்முறைக்காட்சிகளுக்காக... வேறு ஏதாவது காட்சி இருக்கும் என எதிர்பார்த்துப்போனால் ஏமாந்து போவீர்கள். இது சுத்தமான சைவப்படம்.

டிஸ்கி 2 -  டைட்டிலில் முறைப்படி மோகன்லாலின் சைனா டவுன் என்றுதான் வர வேண்டும்.. ஆனால் பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற உயரிய நோக்கில் காவ்யா மாதவன் வந்தார்.. ஹி ஹி