Showing posts with label ஜீவா- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஜீவா- சினிமா விமர்சனம். Show all posts

Sunday, September 28, 2014

ஜீவா- சினிமா விமர்சனம்


மட்டையை எடுத்துக்கொண்டு தெரு வில் இறங்கும் கோடிக்கணக்கான சிறுவர்களுக்கு இருக்கும் ஆசைதான் ஜீவாவுக்கும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரைப் போல ஆக வேண்டும் என்பதுதான் அவன் கனவு. “நல்லா ஆடறி யேடா, யார் கிட்ட கத்துக்கிட்ட?” என்று கேட்கும் ஆசிரியரிடம் “சச்சின் கிட்ட கத்துக்கிட்டேன் சார்” என்று சொல்லும் ஜீவா, கிரிக்கெட் கனவுகளுடனும் தீவிரமான பயிற்சியுடனும் வளர்கிறான். 


ஏழு வயதில் தொடங்கும் அவனது கிரிக்கெட் ஆர்வம், அவன் இளைஞ னாகும்போது காதலால் பெவிலியனுக் குத் திரும்புகிறது. காதல் தோல்வியின் வேதனை கிரிக்கெட் வாசலை மீண்டும் திறக்க வழிசெய்கிறது. கிரிக்கெட்டைத் தொடர்ந்து காதலும் புதுப்பிக்கப்பட, அவன் வாழ்வில் மளமளவென்று வளர்ச்சி. ரஞ்சி அணியில் இடம்பெறும் அவனும் நண்பன் ரஞ்சித்தும் களத்துக்கு வெளியே எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ள, அவர்கள் கனவுப் பாதை சிதிலமாகிறது. ஆடுகளம் சார்ந்த அவர்களது லட்சியப் பயணத்தில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள், இறுதியில் லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை போரடிக்காமல் சொல்கிறார் இயக்குநர். 


கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலைப் பற்றிப் பலரும் படமெடுத்துள்ளார்கள். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தும் சாதி உணர்வைப் பற்றி யாருமே பேசிய தில்லை. அதைப் பேசத் துணிந்த இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுக் குரியவர். நன்றாக விளையாடியவனின் முதுகை அதிகாரி தடவிப் பார்க்கும் காட்சி தமிழ்த் திரையுலகில் இதுவரை காணப்படாதது. “அவர் தட்டிக்கொடுக்கிறார்னு நெனைச்சேன், ஆனா அவர் தடவிப் பார்த்தாருன்னு அப்புறம்தான் புரிஞ்சுது” என்னும் வசனம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. பாதிப்புக்குள்ளான ரஞ்சித் சம்பந்தப்பட்டவரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளில் தெறிக்கும் நியாயமும் புள்ளிவிவரங்களும் யாரையும் யோசிக்கவைக்கும். 


கிரிக்கெட் பற்றிய கதையில் காதல் என்பதையும் கிட்டத்தட்ட இணை கோடாகக் கொண்ட திரைக்கதை அதற் கான காரணத்தையும் கொண்டிருக் கிறது. ஆனால் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அளவுக்கு அதிகமாக நீண்டு பொறுமையைச் சோதிக்கின்றன. பாடல் காட்சிகளும் திரைக்கதையில் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


காதல், பிரிவு, பணக் கஷ்டம் போன்றவை புளித்த மாவில் செய்த பண்டங்களாக இருந்தாலும் அதிகாலையிலேயே மைதானத்துக்கு வரும் ஜீவாவுக்கு வாட்ச்மேன் பந்து வீசுவது, ஜீவாவின் சோகத்தை கோச் எதிர்கொள்ளும் விதம், ஜீவாவின் அப்பா குடிப்பதை நிறுத்தும் இடம் என்று சில இடங்கள் மனதைத் தொடும் அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. 


விஷ்ணு விஷால், கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர் என்பதால் பாத்திரத்திற் குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நண்பனை இழந்த துக்கம், புறக்கணிப் பால் வரும் குமுறல் ஆகிய தருணங் களில் நேர்த்தியான நடிப்பு வெளிப் படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே கண்ணீர் விடும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார். ஆனால் காதல் காட்சி களிலும் பாடல் காட்சிகளிலும் வழக்க மான தமிழ் சினிமா ஹீரோவாக ஆகி விடுவது பலவீனம். 


நண்பனாக வரும் லட்சுமணனும் கவனம் ஈர்க்கிறார். கிரிக்கெட் ஆடும் காட்சிகளிலும் அதிகாரியிடம் வாதிடும் காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்.
‘அண்ணா.. கொஞ்சம் சக்கரை வேணும்’ என்று பள்ளி மாணவியாகக் கதைக்குள் நாயகி ஸ்ரீதிவ்யா வரும் போது அவரது துறுதுறுப்பும் அழகும் கவர்கின்றன. காதலிப்பது, காதலிக்கப் படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், பிறகு வேலைக்குச் செல்லும் பருவம் என்று மாறுபட்ட தோற்றங்களில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். 


பின்னணி இசையிலும் பாடல்களி லும் புதிதாகக் கேட்பதுபோல் செய்திருக் கிறார் இமான். ஆர். மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு வண்ணம் சேர்க்கிறது. கிரிக் கெட் காட்சிகள் நன்கு படம்பிடிக்கப்பட் டிருக்கின்றன. பொருத்தமான வசனங் கள் மூலம் கவனம் ஈர்க்கிறார் சந்தோஷ். 


காதலில் தோல்வி என்றால் அதற் குப் பெண்களையே குற்றம்சாட்டும் தமிழ் சினிமாவின் நோய்க்கு சுசீந்திர னும் தப்பவில்லை. யதார்த்தமாகப் படம் எடுக்க முயற்சி செய்பவர்களும் பெண்கள் தரப்பைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பது வேதனைக்குரியது. 


கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர் கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய துணிச்சலுக்காகவும் அதைச் சுவையான கதையாகச் சொன்னதற்காகவும் சுசீந்தரனுக்கு வாழ்த்துக்கள். 


தினமலர் விமர்சனம்

பிரபல இளம் நடிகர்களும், நெருங்கிய நண்பர்களுமான விஷாலும், ஆர்யாவும் இணைந்து தங்களது இன்னொரு நண்பரும், முன்னணி இளம் நடிகருமான ஜீவாவின் பெயரையே பட டைட்டிலாக்கி, மற்றொரு வளரும் இளம் நடிகரும், தங்களது நண்பருமான விஷ்ணு விஷால், நாயகராக நடிக்க தயாரித்திருக்கும் படம் தான் ''ஜீவா!''

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ''ஆடாம ஜெயிச்சோமடா'' படத்தில் 'மேட்ச் பிக்சிங்' எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் கதைக்களம் என்றால் இந்த ''ஜீவா'' படத்தில் கிரிக்கெட் வீரர்கள் செலக்ஷ்ன் கமிட்டியில் நடக்கும் ஜாதிவெறியாட்டம் தான் கரு, கதை, களம் எல்லாம்!

கதைப்படி, சின்ன வயதிலேயே அம்மாவை இழந்து, அந்த சோகத்திலேயே குடிகாரரான அப்பாவுடன் வசித்தாலும், அடுத்த வீட்டு குடும்பத்தின் அரவணைப்பில் வளரும் 'ஜீவா' எனும் விஷ்ணு விஷாலுக்கு குடியிருப்பு சிறுவர்களுடன் சின்னஞ்சிறுவனாக, தெருவில் கிரிக்கெட் விளையாடும் காலந்தொட்டே இந்திய அணிக்காக ஆட வேண்டுமென்பது லட்சியமாக இருக்கிறது.

விஷ்ணுவின் லட்சியத்திற்கு குடிகார அப்பா மாரிமுத்து தடையாக இருந்தாலும், வளர்ப்பு அப்பா சார்லியும், அவரது குடும்பமும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இதனிடையே பள்ளிபருவத்திலேயே நாயகி ஸ்ரீதிவ்யாவுடனான காதலில் சிக்கி கவனம் தடுமாறும் ஜீவாவை அதாங்க விஷ்ணுவை, கிரிக்கெட்டை காட்டி வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்தும் வளர்ப்பு அப்பா சார்லி, விஷ்ணு தொடர்ந்து கிரிக்கெட் க்ளப்புகளில் விளையாட விஷ்ணுவின் அப்பா மாரிமுத்துவிடம் ஸ்பெஷல் பர்மிஷனும் வாங்கி தருகிறார். கிரிக்கெட் க்ளப் என்று தீவிர கவனம் செலுத்தி காதலை மறக்கும் விஷ்ணுவிற்கு அவரது தீவிர உழைப்பும், சூரி, ரஞ்சித் எனும் லஷ்மணன்... உள்ளிட்ட கிரிக்கெட் நண்பர்களின் (என்ன.? பரோட்ட சூரி, கிரிக்கெட்டை பிளேயரா! என அதிர்ச்சியில் 'ஆ' வென வாய் பிளக்காதீர்கள்... அவரும் சீனியர் ப்ளேயராக அந்த பாத்திரத்துடன் படத்தில் அம்சமாக பொருந்தி நடித்திருக்கிறாராக்கும்!) ஒத்துழைப்புடன் ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

அங்குதான் சூடுபிடிக்கிறது கதை! ரஞ்சி கோப்பைக்கு செலக்ட் ஆகும் விஷ்ணுவும், அவரது நண்பர் ரஞ்சித் எனும் லக்ஷ்மணனும் கடைசிவரை சப்ஸ்டியூட்டாக பிற வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கவும், ஜூஸ் எடுத்து போகவும் கேலரியில் அமர வைக்கப்பட்டு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகியின் ஜாதி வெறிக்கு தீணியாகின்றனர். ஒருவருடம் நண்பர்கள் இருவரும், தலைமை நிர்வாகியின் ஜாதி வெறியால் ரஞ்சி கோப்பைக்கும் செலக்ட் ஆகாமல் போக, அதில் வெகுண்டெழும் நண்பரை பறிகொடுக்கும் விஷ்ணு, கிரிக்கெட்டில் சாதித்தாரா.? காதலியை கரம் பிடித்தாரா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ''ஜீவா'' படம் மொத்தமும்!

'ஜீவா' வாக விஷ்ணு, நடுத்தர குடும்பங்களில் இருந்து படிப்படியாக முன்னேறி, முன்னணி கிரிக்கெட் ப்ளேயராக வந்த கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட நிஜகிரிக்கெட் வீரர்களை நம் கண்முன் நிறுத்துகிறார் பல காட்சிகளில்! இது ஜீவா படத்தின் பெரும் பலம்!

''திருடுவேன்... ஆனா பொய் சொல்லமாட்டேன்...'' என பேசியபடி அப்பா வாங்கி வைத்திருக்கும் ஒயினை அடிக்கடி திருட்டுத்தனமாக ருசி பார்த்து, ஒருமுறை நாயகர் விஷ்ணுவிடமும் மாட்டிக் கொள்ளும் 'ஜெனி'யாக., கதாநாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா பாந்தம், பிரமாதம்! பள்ளி பருவ காதலிலும் சரி, பருவ வயது காதலிலும் சரி, தான் அறிமுகமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை' அடுத்தும் அசராமல் மற்றுமொரு ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பேஷ், பேஷ்!

சூரி கிரிக்கெட் ப்ளேயரா.? என யோசிக்காமல் போனால் அவரும் சில பல வீரர்களை தன் நடை, உடை, பாவனைகளில் வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியிருப்பது புரியும்! இதுமாதிரி குளோசிங், டீமையே குளோஸ் பண்ணும் பேட்ஸ்மேன்களும் நம் இந்திய அணி டீமிலும் உண்டுதானே.?! இந்த சீனியரால் படத்தில் காமெடி சிக்ஸர்களுக்கும் பஞ்சமில்லை!

வீரர் ரஞ்சித்தாக வரும் லஷ்மண், சார்லி, மாரிமுத்து, தயாரிப்பாளர் அம்மா.டி.சிவா, க்ளைமாக்ஸில் முகம் காட்டும் ஆர்யா, நிஜவீரர் இர்பான் பதான் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மதியின், மதிநுட்பமமான ஒளிப்பதிவு, டி.இமானின் இதமான இசை, ரூபனின் சாதுர்யமான படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் என்.சுசீந்திரனின் எழுத்து-இயக்கத்தில் ''ஜீவா'' கிரிக்கெட் பேக்ரவுண்டில் 'ஜிலிரீ'ட வைக்கின்றார்! அப்பப்பா இயக்குநர் சுசீந்திரனுக்கு தான், எத்தனை தைரியம், சாதுர்யம். ஒரு பாதிக்கப்பட்ட நிஜ கிரிக்கெட் பிளேயரை அருகில் வைத்துக்கொண்டு, நம்மூர் கிரிக்கெட் செலக்ஷ்ன் கமிட்டியில் நடக்கும் தில்லு முல்லுகளை கதை திரைக்கதையாக்கியிருப்பாரோ.? எனும் அளவிற்கு மனிதர் என்னமாய் அசத்தியிருக்கிறார்..!!

மொத்தத்தில், ''உண்மையா உழைக்கிறவங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திகிட்டே இருக்கும்'' என இப்படத்தில் வரும் வசனம் போன்றே, ''ஜீவா''விற்கும் ரசிகர்களிடத்தில் ''லம்ப்பா'' அதிர்ஷ்டம் நிச்சயமிருக்கு!!
thanx - dinamalar  , the hindu 




மனம் கவர்ந்த வசனங்கள் 

ஏன்டா.க்ளாஸ்.ரூம்ல விளையாடாதீங்கன்னு சொன்னா  என் வாழ்க்கைலயே.விளையாடிட்டீங்களேடா

ஸார்.மல்லிகா.டீச்சர் உங்க வீட்ல யாரும் இல்லாதப்ப இந்த லெட்டரை  உங்க கிட்டே  குடுக்கச்சொன்னாங்க
யாருங்க அந்த  சக்களத்தி?

ஹீரோ=,ஏய்.எதுக்குடி வந்தே?
ஸ்ரீ திவ்யா = புது வீடு பால் காய்ச்சினோம்.பால் குடுத்துட்டுப்போக வந்தேன்

லவ் பண்ணிட்டு பின் அண்ணா னு சொல்லி கழட்டி விடும் பொண்ணை விட அண்ணா னு சொல்லி பின் லவ் பண்ணும் பொண்ணு பெட்டர்

விஷ்ணு விஷால் - ஒயின்் குடிச்சா அஜித் மாதிரி அழகா ஆயிடுவேனா?

ஒரு ரோசா உன்னை லூசா ஆக்கிப்போனாளே லேசா

ஒருத்தருக்குப்பிடிச்ச.விஷயத்தை டைவர்ட் பண்ண அவருக்குப்பிடிச்ச இன்னொரு விஷ்யத்தை தூண்டி விடனும்

சூரி = நாங்க எல்லாம் தண்ணிக்குள்ளேயே தம் அடிக்கறவங்கடா.எங்க கிட்டேயவா

உண்மையா உழைப்பவன் வாழ்வில் எதிர்பாராத விதமா ஒரு மேஜிக் நடக்கும்

நேசிச்ச விஷயத்தை /நபரை தூக்கிப்போடுவதை விட வலி நிறைந்தது நேசிச்சது நமக்கு கிடைக்காமயே போவது

எல்லார் வாழ்க்கைலயும் தன் லட்சியம் ஜெயிக்கலை எனும் வலி இருக்கும்

மத்தவங்களால முடியாததை நாம முடிக்கும்போதுதான் அது ரெக்கார்டா மாறும்

மாப்ளை.அவ என்னோட எக்ஸ் லவ்வர்டா.
அடப்பாவி.அண்ணா ன்னா?
புருசனுக்கு முன்னால மாமா ன்னா கூப்பிடுவா?

ஹோட்டலில்
மாப்பி.பல்க்கா ஏதாவது ஆர்டர் பண்ணு.
அப்போ உன்னை கிச்சனுக்குதான் அனுப்பபனும்

மச்சி.அட்லீஸ்ட்  சிங்கிள் ரன்னாவது எடுக்க ட்ரை பண்ணு
பின்னே சிக்சரா அடிக்க்ப்போறேன்?சிங்கிள்க்கே அவனவன் சிங்கி அடிக்கறான்

என்ன/அவனும் கர்த்த்ரை கும்பிடறான்?யார் பிரார்த்தனையை க்ர்த்தர் பேவரைட் பண்ணுவாரு?

சூரி=ஒரு நல்ல் டீம்க்கு எது அழகு?கடைசி பேட்ஸ்மேனை கடைசி வரை ஆட விடாம பாத்துக்க்றது

சூரி = பிச்சுக்கிட்டுப்போன லவ்வரும் ,பிச்சுப்போட்ட பூவும் மறுபடியும் ஒட்டவே ஒட்டாது



படம் பார்க்கும் போது போட்ட Tweets

ஹீரோயின்  16 வயசுல தன் தங்கச்சியோட சரக்கு அடிக்குது # புரட்சித்தலைவியின் ஆட்சியில்

பால் மணம் மாறா பாலகி  ஸ்ரீ திவ்யா க்கு ஓப்பனிங் ஷாட் பால் காய்ச்சும் சீன்.அடடே.பால்கோவா கன்ன அழகி ராக்ஸ்

ஆரவாரமான கை தட்டல் விசில்களுடன்  ரொமான்டிக் காட்சிகள்

ஹீரோயின் ஹீரோவை அண்ணா அண்ணா னு கூப்டுது.இதான் ட்ரெண்ட்
போல #

குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்க மோசடியை துகில் உரிக்கும் கதை என்பதால் ஜீவா படத்துக்கான விகடன் விமர்சனம் தனி கவனம் பெறும்

குவாலிட்டிவைஸ் ஜீவா தான் முதல் இடம்
ஆனா கமர்சியலா மெட்ராஸ் முன்னணி


Rating

ஜீவா - கிரிக்கெட் டீம் செலக்சன் கமிட்டியின் ஜாதி ரீதியான  ஊழல்களை துகில் உரிக்கும் கிளாசிக்கல் மூவி.

விகடன் =44 

ரேட்டிங் - 3. 25/ 5