Showing posts with label ஜாக்கிசான். Show all posts
Showing posts with label ஜாக்கிசான். Show all posts

Saturday, November 19, 2011

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/26/1911_filmposter.jpg/215px-1911_filmposter.jpg 

ஜாக்கிசான் ரசிகர்களுகு அதிர்ச்சி ஊட்டும் ஒரு மேட்டரை முதல்லியே சொல்லிடறேன் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 100 வது படம்  செம டப்பா.. த புரொடக்டர் படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து த ஆர்மர் ஆஃப் காட், ஸ்பானிஸ் கனெக்‌ஷன்,போலீஸ் ஸ்டோரி படங்களின் மூலம் ஆக்‌ஷனின் உச்சத்தை, பொழுது பொக்கின் பிரம்மாண்டத்தை காண்பித்த அகில உலக ஆக்‌ஷன் ஹீரோவின் 100 வது படம் ரொம்ப சாதாரணமாக அமைந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியே..

படத்தோட கதை என்ன? 100 வருடங்களுக்கு முன் சீனாவில் மன்னர் ஆட்சி நடந்த காலம்.. நம்ம ஊர் ஜெ மாதிரி யார் பேச்சையும் மதிக்காத ,ஒரு ராணி சீனாவை ஆள்கிறார்.. கஜானா காலி.. ஆட்சி செய்ய முடியல.. இங்கே எப்படி பஸ் கட்டணம், பால் விலை எல்லாம் உயர்த்தி தன் கையாலாகாத்தனத்தை புரட்டாசித்தலைவி நிரூபிச்சாங்களோ அந்த மாதிரி அந்த ஊர் ராணி ரயில்வே டிபார்ட்மெண்ட்டை அடகு வெச்சு காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை.. எல்லா ஊர்லயும் பொம்பளைங்க ஆட்சி இப்படித்தான் போல..

சுன்யாட்சன் என்பவர் சிப்பாய் கலகத்தை ஆரம்பிக்கிறார்.. ராணிக்கு பண உதவி செய்ய வேண்டாம் என இங்கிலாந்திடம் கேட்டுக்கொள்கிறார். அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுது.. சீனாவில் நடத்தும் புரட்சிக்கு ஜாக்கிசான் தான் தலைமை.. ஆனா அவர் தமிழ்நாட்ல எப்படி கேப்டன் செயல்படாம சும்மா இருக்காரோ அந்த மாதிரி சும்மாதான் இருக்கார்.. 

http://s11.allstarpics.net/images/orig/f/e/fe7qis8csv48c8vq.jpg
ஜாக்கிசான் படம்னா மக்கள் என்ன விரும்புவாங்க? ஏதோ காமெடி இருகும் , அதிரடி சாகசம் இருக்கும்னு தானே ஆவலா இருப்பாங்க.. சரி போர் சம்பந்தப்பட்ட படம்னா ஓரளவு ஃபைட் சீனாவது காட்டனும்.. சும்மா தொண தொண னு பேசிட்டே இருக்காங்க.. செம கடுப்பு..

சுன்யாட்சன் குடியரசுத்தலைவரா தேர்ந்தெக்கப்படறார்.. சீனா முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் தான் சீனாவின் குடியரசுத்தலைவர் ஆகனும்னு சுன்யாட்சன் பதவி விலகறார்.. எல்லாரும் கை தட்டி அந்த முடிவை வரவேற்கறாங்க.. தியேட்டர்ல நம்மாளுங்க செம காண்ட்ல கிளம்பறாங்க.. 

நாட்டுக்கு ஒரு நல்லவன்ல சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்படி ஏமாற்ற,ம் அடைஞ்சாங்களோ. அந்த மாதிரி ஜாக்கிசானின் ரசிகர்கள் இதுல ஏமாற்றம் அடைஞ்சு கிளம்பறாங்க.. 

படத்துல ஜாக்கிசான் வர்ற நேரத்தை விட சுன்யாட்சனா வர்றவர் நடிப்புதான் நல்லா இருக்கு.. அவருக்கு தான் அதிக காட்சிகள் வேற.. 

http://mimg.sulekha.com/english/1911/stills/1911-film-049.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. நாங்க எங்கே வாழந்தாலும் சீனா தான் தாய்நாடு.. தாய் நாட்டுக்கு முன்னால தாத்தா சொத்து  முக்கியம் இல்ல. இந்த சொத்தை வித்து வந்த பணத்தை புரட்சிக்கு நான் தர்றேன்.. 

2. ரயில் துறையை அடமானம் வெச்சா  நம்ம மானமே போயிடும்னு மக்கள் பேசிக்கறாங்க.. 

ஆள்றது நான்.. அவங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்கறது? ( இந்த ராணியோட டி என் ஏ வை தூண்டி விட்டு ஜெ வுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி வெச்சிருப்பாங்களோ? )

3. நீங்க கொடுக்கப்போற பணத்தை வெச்சு கோயிலா கட்டப்போறாங்க?ஆயுதங்களை வாங்கி எங்களை அழிப்பாங்க...

. 4. நம்ம 2 பேருக்கும் வயசு 40.. ஆனா 50 வயசுல தான் எல்லா குழப்பங்களும் வரும்னு சொல்றாங்க.. 

5, என்னை கொன்னு போட்டுட்டு இந்த சுவர்ல இருக்கற ஃபோட்டோ மாதிரி மாட்டி வைக்க ஆசைப்படறீங்களா?

6. உங்க ஆட்சி மாறப்போகுது.. 

அதானே, நாடு 2 பட்டாலும் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே.. 

7. உயிரோட இருக்கனும்னு ஆசைப்பட்டா அந்த காலை வெட்டியே ஆகனும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. 

ஆ ஆ ஆ

ஏய்... அறுக்கறதை நிறுத்து,.. அவர் இறந்துட்டாரு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGwYnd-Fv9DaLA2eAI99Z-MK2idrQBWR-4MuRPE8kUzSyPqLut6VyV5fxZMSs-rj2G2gENmqCMb3HhnUf4a1cSY0PN8Y2BWpysL9y-9MpdDLarn4QPlGNAEXKaXH5N3g29PDZV52syEh0y/s1600/li-bing-bing4.jpg

8. அடிக்கடி சொல்வீங்களே.. ஒரு தடவை தோத்தா இன்னொரு தடவை ஜெயிச்சே ஆகனும்னு ஒரு தத்துவம்.. இப்போ அதை சொலுங்க.. 

9.  உன் கை...?

போராட்டத்துக்கு காணிக்கையா கொடுத்துட்டேன் ( ஆனா ஒரே ஒரு விரல் மட்டும் தான் கட் ஆகி இருக்கு... வசனகர்த்தா மிஸ்டேக் போல)

10.  புரட்சியால மட்டும் தான் மக்களோட வாழ்க்கைத்தரம் உயரும்.. 

11. பணத்தை கொண்டு வர்லை.. நம்பிக்கையை கொண்டு வந்திருக்கேன்.

12. என்ன சார்  .. கோபத்துல ஒவ்வொரு ஜாடியா உடைச்சிட்டு இருக்கீங்க/ இந்தாங்க சார்.. உடைங்க.. 

சார்,, இந்தாங்க .. இதை உடைங்க.

போதும்  போர் அடிக்குது.. நீங்களே உடைங்க.. 

.  13.  ஹீரோயின் ஜாக்கியிடம் - நம்ம குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன்.. ( ஆடியன்ஸ் - இது எப்போ நடந்தது சொல்லவே இல்ல? ஏப்பா ஆபரேட்டர்.. இந்தப்படத்தை நிறுத்திட்டு அந்தப்படத்தை போடு . சீனாவது பார்க்கலாம்.. ) # சீனா படத்தில் சீனா?

14. இப்போ புரட்சி ஜெயிச்சாச்சு. மன்னர் குடும்பத்தை என்ன செய்யப்போறீங்க? கொல்லப்போறீங்களா?

புரட்சி ஜெயிச்சா மன்னர் குடும்பத்தை கொல்லனும்னு அவசியம் இல்ல.. அவங்களும் இந்த நாட்டோட குடி மக்கள் தான்.. 


http://asiapacificarts.usc.edu/files/images/20111013174981911.png?AspxAutoDetectCookieSupport=1

ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் 2ம் குறிப்பிட்டு சொல்லும் அளவு இருக்கு.. போர்க்காலத்தை அப்படியே கண் முன் வந்து நிறுத்துது.. சைனாவில் வேண்டுமானால் இது ஹிட் ஆகலாம்..

STARRING:  Jackie Chan, Li Bing Bing, Zhao Wen Xuan, Joan Chen, Jaycee Chan

DIRECTOR:  Jackie Chan, Zhang Li

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.

சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் கூட பார்க்க முடியாது

டிஸ்கி -

வித்தகன் - வின்னர் ?- சினிமா விமர்சனம்

 

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

 

http://i1.sinaimg.cn/ent/m/c/2009-08-30/U1584P28T3D2675876F326DT20090830033439.jpg

Tuesday, June 07, 2011

LITTLE BIG SOLDIER -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge4GI72HQtWFz9GL8e4uw8kzrGG_xNxOg7ig_KBOrPEwBEQOQ54MV60gVuiiNhZHraUgSw1S71GSozjUWURK5MjEAwm2Q-UFI1fRxwWCvJHeW_Gab1q6PuuN57ZP3R12wSdUWdSIRvEtc/s400/little+big+solidier.jpg 

எவ்ரி ஹீரோ ஈஸ் பிக்கம் போர் ஒன் டே (EVERY HERO IS BECOME BORE ONE DAY)என்று சொல்வது ஜாக்கிசானுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறேன்..அவர் மொக்கை படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் போர் அடிப்பதில்லை..போர் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகள் பர பரவென நகர்கின்றன... 

ஒரு பேரரசின் 2 வாரிசுகளில் (ஸ்டாலின்,அழகிரி மாதிரி) ஒரு வாரிசு சதித்திட்டத்தால் அரண்மனை விட்டு வெளியேற்றப்படுகிறார்..பேரரசின் ஆளுகைக்கு உட்படாத ஒரு சிற்றரசின் வீரரிடம் பணயக்கைதியாக மாட்டிக்கொள்ளும் இளவரசரின் பயணம் தான் படம்.. 

புரூஸ்லிக்குப்பிறகு டூப் போடாமல் ஒரிஜினல் ஃபைட் போடுவதில் ஜாக்கிக்கு நிகரான ஒரு ஃபைட் வீரர் இனி கிடைப்பது சிரமம் தான். அப்படியே கிடைத்தாலும் ,நவீன விஞ்ஞான உலகில் எது ஒரிஜினல்,எது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என வரையறுப்பது சிரமம் தான்.. 

ஜாக்கிசானுக்கு வயசாகிக்கொண்டே இருப்பது  நன்றாகவே தெரிகிறது.. ஆனால் நம்மூர் ஆட்கள் போல் மேக்கப் போட்டு மறைக்க நினைக்காத அசால்ட் தனம் அவர்க்கு கூடுதல் அழகை தருகிறது.. 

இளவரசரும், ஜாக்கிசானும் செல்லும் பயணம் லேசான அலுப்பை தந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் காமெடிகள்,லேசான ஃபைட் காட்சிகள் ஓரளவு படத்தை காப்பாற்றுகிறது.. 

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜாக்கிசான் தாய் நாட்டுக்கொடியை பிடித்துகொண்டே வீர மரணம் அடைவது திருப்பூர் குமரன் கதை நினைவு படுத்துகிறது..

படத்தில் 2 அழகிய பெண் கேரக்டர்கள் இருந்தும் இயக்குநர் படத்தில் அவர்களை சரியாக பயன் படுத்தாமல் அம்போ என விட்டதற்கு எனது கடும் கண்டங்கள்.. ( ஹி ஹி வர வர கண்டனம் எதெதுக்கு  தெரிவிக்கறதுன்னு  விவஸ்தை இல்லாம போச்சு.. ) இதை ஏன் சொல்றேன்னா ரொம்ப வறட்சியான போர்க்கதைல கொஞ்சம் காதல்,இளமை என சேர்த்தா கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா படம் போகும்.. 
http://nimg.sulekha.com/entertainment/original700/peng-lin-jackie-chan-2010-2-17-17-45-55.jpg

படத்தில் காமெடி வசனங்கள்

1. சின்ன வயசுல ஒரு காட்டுப்பன்றியை பிடிச்சப்ப அதை எங்கப்பா விட்டுடச்சொன்னாரு.. பன்னி கர்ப்பமாம்.. நீங்க என் பணயக்கைதி.. உங்களை ஏன் நான் விடனும்?நீங்க என்ன கர்ப்பமா?

2.  வாயைக்கட்டி இருக்கும்போதே கெட்ட வார்த்தையா?

யோவ் நான் முனகுனேன்.. அவ்வளவ் தான்.. 

3. செத்த மாதிரி நடிக்கறதுல நானே ஒரு கில்லாடி.. என் கிட்டேயேவா?

4. கரடி சாணியை மிதிச்சா அதிர்ஷ்டம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. அப்போ எனக்கு இன்னைக்கு செம லக் தான்./.  ( நம்ம ஊர்ல யானை சாணியை மிதிச்சா லக்காம்)

5. தளபதி.. எனக்கு பரிசா கிடைக்கப்போற 5 ஏக்கர் நிலத்துல நான் நெல்லு பயிரிடவா? அரிசியா?

அரிசியே பயிரிடலாமே..?

நெல்லு, அரிசி ரெண்டும் ஒண்ணுதான்கறதே உங்களுக்கு தெரியலை.. நீங்களேல்லாம் ஒரு தளபதியா? 

6.  என்னை யாரும் ஏமாத்த முடியாது.. 
அந்தப்பொண்ணைத்தவிர,,


நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது.. 



http://jackiechan.com/attachments/2009/11/30/20/48180_2009113020583078.jpg
7. உனக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்?அழகாவா? அறிவுடனா?

நேர்மையான பொண்ணு ( வாட் எ ஒண்டர்ஃபுல் டயலாக்!!)

8. உனக்கு பொண்ணுங்க கூட அதிகம் பழக்கம் இல்லை போல.. 

எப்படி சொல்றே..?


 நேர்மையான பொண்ணு வேணும்கறியே?


9. அட.. உனக்கு படிக்க தெரியுமா?
யார் படிச்சாங்க.. எங்கப்பா எழுதுன ஓலையை சும்மா பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. 


10. ஒரே தலைவரை மக்கள் எப்போ தேர்ந்தெடுக்க நினைக்கறாங்களோ அப்போ தான் அந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும், இல்லைன்னா சாபக்கேடு தான்,.. ( கலைஞர் வகையறாக்கள் கவனிக்க)

11. ஒரு சிட்டுக்குருவி கூட ஃபீனிக்ஸ் பறவையா மாறும்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. 

12. நாம 2 பேரும் ஒண்னு சேர்ந்தா தப்பிக்கலாம்..

நீங்க சொல்றது ஓக்கே தான்.. பசிக்கு நமக்கு கஞ்சி வேணும். அது கேப்பைக்கஞ்சியா இருந்தா என்ன? அரிசிக்கஞ்சியா இருந்தா என்ன?

13. உன் வருங்கால அரசனையே கொல்லப்பார்க்கிறாயா?
என்னைப்பொறுத்த வரை நீ அரசனே கிடையாது..

என் படையே அழிஞ்சாலும் நான்  சாகாம இருப்பேன்னு உன் தளபதி கிட்டே போய் சொல்லு.. 

14. உங்க குடும்ப சண்டைல 2000 படை வீரர்களை பலி ஆக்கீட்டீங்களே? ( கலைஞர் குடும்ப சண்டைல தினகரன் ஊழியர்கள் 3 பேர் இறந்த மாதிரி./. )

15. நம்ம நாட்டுக்கு ஒரு ராசா போதும்.... ( ஆமாமா அவரே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சிருக்காரே?)

இதுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா ராசா ஆகனும்னா கூடப்பொறந்த தம்பியே ஆனாலும் அவனை போட்டுத்தள்ளிடனும்.. 


http://cinema.dinakaran.com/images/movie/Little-Big-Soldier/Little-Big-Soldier-01.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போர்க்கதையாக இருந்தாலும் படம் நெடுக மனித நேய வசனங்கள் தூவி காண்ட்ரவர்சியான  கருத்துக்களை வாழைப்பழ ஊசி போல பார்வையாளன் மனதில் பதித்தது.. 

2. ஜாக்கிசான் அடிக்கடி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு என கூறி ஒரு பழைய சம்பவம் பற்றி சொல்வதாக காட்டும் சீன்களில் மனிதனின் வாழ்வில் தனது தந்தை பற்றிய நினைவுகள் பசுமரத்தாணி போல பதியும் என உணர்த்தியது


3. காட்டில் பசியுடன் இருக்கும்போதும்,இரை கிடைக்கும்போதும் கூட அது கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை தப்பிக்க விடும்  மனித நேயம்.. 

4. போர்க்காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்தது.. பின்னணி இசை,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் மேட்டர்களில் பாஸ் மார்க்.

5. ஜாக்கிசான் என்ற மாஸ் ஹீரோ இருந்தும் கதையின் தன்மை கருதி அவரை அண்டர்ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது..



http://english.cri.cn/mmsource/images/2010/02/09/zc100208jackiechan6001.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ- வில்லனின் ஈகோவை தூண்டி விட்டு தன் படை வீரர்களை தவிர்த்து ஒண்டிக்கு ஒண்டி சண்டை  போட அழைப்பதும், அதற்கு வில்லன் சம்மதிப்பதும்.. இன்னும் எத்தனை படத்துல?

2.படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்சில் ஜாக்கிசான் தனது நாட்டின் கரையில் ஒதுங்கும்போது அங்கே போர் நடக்கிறது.. மரண ஓலங்கள், மனிதர்களின் அலறல்கள் என ஒரே சத்தமாக இருக்குமே? எப்படி அது கேட்காமல் ஜாக்கி மன்னரை விடு வித்து விட்டு தான் மாட்டிக்கொள்ள வேண்டும்..
3.பிடி பட்ட ஜாக்கி வீரர்களிடம் உங்கள் மன்னரை காப்பாற்றியதே நான் தான் இப்போதான் படகில் போறார்.. போய் கேட்டுப்பாருங்கள் என ஏன் சொல்லவில்லை?

4. ஜாக்கிசானின் உயிர்த்தியாகம் வலிய திணிக்கப்பட்டது போல இருப்பதால் மனதில் ஒட்டவில்லை..

5.மன்னருக்கு ஏன் ஓலை வரவில்லை? அவருக்கு தன் நாட்டின் ஸ்டேட்டஸ் ஏன் அப்டேட் செய்யப்படவில்லை?





ஜாக்கிசானின் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றபடி  பெரிதாக சொல்ல படத்தில் ஒன்றும் இல்லை.. ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்..