Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, March 02, 2013

அம்மா மெஸ் - ஸ்பாட் விசிட் - விகடன் ரிப்போர்ட்

சென்னையின் கடந்த வாரப் பரபரப்பு... மலிவு விலை உணவகம். முதல்வர் ஜெயலலிதா 'கேசரி’ வழங்கித் தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்தில் சாப்பிடுவதற்கு, 'சி.எம். செல் சிபாரிசு’ தேவைப்படும். அந்த அளவுக்கு அடிதடிக் களேபரம். இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் என்பதே கலாட்டாவுக்குக் காரணம்!  



 சாந்தோம் கிளை உணவகத்தை வெகு தூரத்தில் இருந்தே அடையாளம் காட்டிவிட்டது 'மாண்புமிகு இதயதெய்வம்’ பேனர்கள்.  உணவக வாசலில் ரேஷன் கடையைவிட மிகப் பெரிய க்யூ. வாசலில் ஒரு போலீஸ்காரர், 'வாங்க... வாங்க...’ என்று தோளில் தட்டி உள்ளே அனுப்பு கிறார். ''திபுதிபுனு கூட்டம் உள்ளே வந்துருதுங்களா... அதான் கன்ட்ரோலுக்கு என்னைப் போட்டிருக்காங்க!'' என்றார்.  


வெள்ளைச் சுவரில் பச்சைக் கோடுகள், பச்சை நிற அறிவிப்புப் பலகை, பச்சை நிற பேனர் என்று உணவகத்தில் பசுமை பூத்துக் குலுங்கியது. உள்ளே கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஐந்து பெண் காவலர்கள். உணவக நிர்வாகம் மற்றும் பராமரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினர் வசம். இருக்கை வசதிகள் கிடையாது. அந்த உணவகத்தில் மட்டும் நான்கு ஜெயலலிதா படங்கள் டாலடித்தன. எந்தக் கோணத்தில் நின்று சாப்பிட்டாலும் முதல்வரின் தரிசனத்தில் இருந்து தப்ப முடியாது. (இப்படிலாம் ஐடியா கொடுக்கிறது யாருப்பா?)



மதியம் பன்னிரண்டே முக்கால் மணி அளவில் கூட்டம் புது வெள்ளமாக முண்டியடிக்கத் தொடங்கியது. 'மன்னன்’ படத்தில் ரஜினி 'சின்னத்தம்பி’ படத்துக்கு முதல் டிக்கெட்டை வாங்கியதைப் போல, சட்டை முழுக்க வியர்வை யில் தொப்பலாக நனையும் அளவுக்குப் போராடி இரண்டு பிளேட் சாம்பார் சாதத்தைக் கொய்துவந்தார் ஒருவர்.



 'இங்கு பார்சல் கட்டித் தரப்பட மாட்டாது’ என்ற அறிவிப்புக்குக் கட்டுப்படுபவர்களா நம்மவர்கள்? ஒரு காகிதத் தட்டில் சாம்பார் சாதத்தை வாங்கி, அதை இன்னொரு தட்டால் மூடி வெளியே எடுத்துச் சென்றனர். அதிகாரபூர்வ லன்ச் நேரமான மதியம் 1 மணிக்குப் பகீரென்று பாய்ந்து   வந்தது அந்த அறிவிப்பு... ''சாப்பாடு காலி!''



அது வரை வரிசையில் காத்திருந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. அவர்களைக் கண்டுகொள்ளாமல் அண்டாக்களைக் கவிழ்த்துவைக்கத் தொடங்கினார்கள் உணவகப் பணியாளர்கள். ''இப்பிடித்தான் ஜூ காட்டுவாங்கோ... அப்பாலிக்கா ஒரு பிளேட் ரைஸ் இருபது ரூவானு பிளாக்ல விப்பாங்கோ!'' என்று கலவரத்துக்குத் திரி பற்றவைத்தார் ஒரு சிட்டிசன். ''அப்படிலாம் இல்லைங்க. நீங்களே வந்து நல்லாப் பார்த்துக்கங்க... எங்களுக்கே சாப்பிட சாப்பாடு இல்லை!'' என்று அதட்டினார் ஒரு நிர்வாகி.    



''ஏன் இவ்ளோ சீக்கிரம் தீர்ந்துருச்சுனு சொல்றீங்க... கொஞ்சமாத்தான் சமைச்சீங்களா?'' என்று கணக்கு கேட்டார் ஒரு 'அம்பி’.



''ஆயிரம் தயிர் சாதம், ஆயிரம் சாம்பார் சாதம், ஐயாயிரம் இட்லி செய்யச் சொல்லித்தான் ஆர்டர். அதைவிடவும் அதிகமாத்தான் தயாரிச்சோம். ஆனா, ஒரே ஆளே மூணு, நாலு பிளேட்னு வாங்கிட்டுப் போயிட்டதால, சீக்கிரம் காலியாகிடுச்சு. நாளைக்கு அப்படியே டபுளா சமைக்கணும்!'' என்றார் ஒரு பெண். ''உங்க பேர் சொல்லுங்க?'' என்று அம்பி கேட்டதும், சட்டெனச் சுதாரித்தவர், ''அதெல்லாம் ஹெட் ஆபீஸ்ல கேட்டுக்கங்க!'' என்றார் சிரித்தபடி.



''இப்படிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல... அதான் காலை டிபன் முடிச்சதுமே இங்கேயே செட்டில் ஆகிட்டேன்ல!'' என்று நிறைந்த வயிற்றைத் தடவியபடி வெற்றிக் குறி காட்டினார் வாட்ச்மேன் ஆரோக்கியசாமி.



''சாப்பாடு சூப்பர்... அஞ்சு ரூபாய்க்கு இந்த டேஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை. சும்மா ஒரு வாரத்துக்கு மட்டும் ஷோ காட்டிட்டு அப்புறம் கடைய மூடிராம, விலை ஏத்தாம இருக்கணும்!'' என்று சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், சாப்பாடு கிடைக்கப் பெற்றவர்கள்.


கேமராவைப் பார்த்தவுடன் குஷியான சுப்ரமணி, முதல்வர் பேனரைப் பார்த்து சல்யூட் வைப்பதுபோல் நின்றுகொண்டு, ''சாப்பாடு ஜோரா இருக்குனு அம்மாகிட்ட சொல்லு... அப்படியே பிரியாணியும் லெக் பீஸும் பத்து ரூபாய்க்குப் போட்டா, அடுத்த எலெக்ஷன்லயும் ஜெயிக்கலாம்னு சொல்லு!'' என்று சிரித்தார்.



இது அம்மாவின் கவனத்துக்கு!

 நன்றி - விகடன்

Sunday, February 24, 2013

சாப்பாட்டுக்கடை -அம்மா’ மெஸ் - சென்னை

அன்னமிட்ட கை... நம்மை ஆக்கிவிட்ட கை...’ என்று, எம்.ஜி.ஆர். பட பாட்டு ஒன்று இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஜோராக ஆரம்பித்துவிட்ட அரசின் மலிவு விலை உணவகத்தைப் பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் இப்படித்தான் பாடுகிறார்கள்!  
சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை 19-ம் தேதி மதியம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. காலையில், ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும் மதியம் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இட்லிக்கு சாம்பார் மட்டுமே, சட்னி கிடையாது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் கிடையாது. சாம்பார் சாதத்துக்கு அப்பளம் கிடையாது. 'அதையும் சேர்த்துக் கொடுத்தா என்னவாம்?’ என்று கேட்கிறார்கள் பசியோடு வருபவர்கள்!



மண்டலத்துக்கு ஒன்று எனத் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 200 வார்டுகளிலும் கடை திறக்கத் திட்டமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சமையல் பயிற்சி வழங்கப்படுகிறது. உணவுக்கூடத்தில் வேலை செய்பவர்களுக்கான சீருடை, பச்சைக் கலர் சேலை. கடை திறக்கப்பட்ட முதல் நாள் ஒரு மணி நேரத்திலேயே உணவு வகைகள் காலியானது. சாந்தோமில் முதல்வர் திறந்து வைத்த உணவகத்தில் மறுநாள் காலை 6.30 மணியில் இருந்தே நீண்ட வரிசை நின்றது.


''சாம்பார் சாதம் ருசியா இருந்துச்சு. நான் செக்யூரிட்டியா வேலை பார்க்கேன். ஒரு சாதமே வயிறு ஃபுல் ஆகிருச்சு. என்னோட வசதிக்கு எப்பவும் ரோட்டுக் கடைதான். இனிமேல் அம்மா கடைதான்'' என்றபடியே சாம்பார் சாதத்தில் அம்மா முகம் பார்க்கிறார் சர்தார் முகமது.



சீனிவாசபுரத்தைச் சேர்ந்த அஜிதா, ''பேப்பர் பிளேட்டை கையில் பிடிக்க முடியலை. சாப்பாடு சூடாக இருக்கிறதுனால, பயங்கரமாச் சுடுது. உட்கார்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா, அதுக்கு இட​வசதி இல்லை'' என்று 'உச்’ கொட்டுகிறார்.


தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார், ''சாம்பார் சாதத்தில் மஞ்சள் வாசம் அதிகமா இருக்கு. ரெண்டு சாதமும் 350 கிராம் அளவுனு சொன்னாங்க. ஆனா, தயிர் சாதம் அளவு குறைவாத் தெரியுது. தொட்டுக்க ஏதாவது கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?'' என்று கெஞ்சிக் கேட்கிறார்.



குறைகள் என்று சிலர் பட்டியல் போட்டாலும், ஜெட் வேகத்தில் எல்லாம் காலியாகி விடுகிறது. தரம் குறையாமல் இதே அக்கறையோடு தொடர்ந்தால், 'அம்மா’ மெஸ் ஏழைகளின் அமுதசுரபி​யாகிவிடும்!


- எஸ்.முத்துகிருஷ்ணன் 

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்


நன்றி - விகடன்

Wednesday, October 31, 2012

நீலம் புயல் - சென்னை - அப்டேட்ஸ்

 Nilam Moves Closer Chennai Coast

சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.



நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.



சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



8-ம் எண் புயல் கூண்டு



சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



பலத்த காற்று


இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



அலுவலகங்கள் விடுமுறை:


புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.



மின்சாரம் துண்டிப்பு


நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.



 People Tired Take Photos Cyclone

சென்னை: நிலம் புயல் கரையை கடக்கும் போது போட்டோ எடுத்து, அந்த நீரில் தங்களின் காலை நனைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் விரும்பி சென்னையில் கடற்கரை பகுதிகளில் காத்திருந்தனர். ஆனால் அவர்களை கடலை நோக்கி செல்ல போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.



நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.



புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.



இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.



அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நினைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.



நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.

 Nilam Cyclone Safety Tips Precaution

சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.


அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.



இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.



மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.



பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.



அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மின்கம்பங்கள் சாயலாம்


பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.



மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்


புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்



சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்


புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.



மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்


மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.


தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.


அவசர உதவிக்கு...


சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Cyclone Nilam: Emergency numbers in Chennai 26412646, 28170738, 24838968, 24867725,22342355, 24425961, 22420600, 24500923 


 Heavy Rain Lashes Chennai Its Suburbs

சென்னை: புயல் சின்னம் காரணமாக தலைநகர் சென்னை முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.



சென்னை நகரின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இதேபோல நகரின் உட்பகுதியிலும் மழை பெய்கிறது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தபடி உள்ளது.



இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மணிகள் காலையிலேயே டிவி முன் உட்கார்ந்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்வோர்தான் வெளியில் எப்படிப் போவது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர்.



 http://www.vikatan.com/news/images/koyambedu-rain2.jpg






http://www.vikatan.com/news/images/koyambedu-rain.jpg
 அ





http://dinamani.com/incoming/article1307137.ece/ALTERNATES/w460/RAIN4.JPG





http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/e5c2df68-3e35-4459-8e08-052ee18c2bdf_S_secvpf.gif






http://www.dinakaran.com/data1/Nilam-Chennai-Gallery/day-1/image_1.jpg


நன்றி - தட்ஸ் தமிழ்



NILAM Current Status

Current Wind Speed 63 MPH / 55 knots
Max Predicted Wind Speed 63 MPH / 55 knots at

TROPICAL CYCLONE NILAM Land Hazards

No land hazards or hazard data not available for this storm.

TROPICAL CYCLONE NILAM Tracker

NILAM Satellite Loop

TROPICAL CYCLONE NILAM Alternate Tracking Map

Alternate tracking maps are only available on NHC tracked storms.

Thursday, October 18, 2012

அருந்ததியர் வாழ்வு @ சென்னை

http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/4074.jpg 

வித்தியாச வாழ்வுகள்!

சென்னை லோப்ல ஒக்க ஆந்திரா!

அமிர்தம் சூர்யா

பவன் கல்யாண்காரு கொத்த சினிமா ஏன்ட்டி?

ஏன்ட்டி பாவா அபிகர் செட்டைந்தா?" - என்ற இளசுகளின் குரல்கள். எங்கு திரும்பினாலும் தெலுங்கின் வாசம். தெருவெல்லாம் லெதர் துண்டுகள் இறைந்து கிடக்க, ஆங்காங்கே செருப்புக் கடைகள். அழுக்கான அந்தத் தெருக்களை காற்று அவ்வப்போது கழுவிச் செல்லகுப்பென்ற தோலின் நெடி மூக்கைத் தாக்கி விட்டுப் போகிறது. போதாக்குறைக்குரிங்கி ரிங்கி ரிங்கி ரிங்கா ரே’... ரிங்டோன்கள். இது சென்னை பெரம்பூர்தானே! திசைமாறி ஆந்திராவுக்கு வந்து விட்டோமோ என நினைக்கும்படியிருந்தது அந்த அருந்ததியர் நகர். கல்கியிலிருந்து வந்திருக்கோம்னு சொன்னதும் கூட்டம் கூடி என்ன என்ன - என்ற விசாரிப்புகள். விவரம் சொன்னதும் சிலர் ஒரு வெள்ளை வேட்டிக்காரரை நோக்கி கை நீட்ட... நாம் அவர் முன்னால் நின்றதும்

நேனு ரூலிங் பார்ட்டி; வாரிகி
ஏமி செப்ப நவது ஸார்" என்றார்.

ஆளுங்கட்சி எப்பவும் அலார்ட்டாதான் இருக்காங்க டோய்னு வியாபாரி சங்கத் தலைவர் லோகநாதனின் வீட்டு வாசலில் முகாமிட்டோம்.

அருந்ததியர் நகர் - வட சென்னையில் வியாசர்பாடியையும், பெரம்பூரையும் இணைக்கும் பகுதி. வெளியே இந்நகரை மக்கள் சக்கிலிபாளையம் என்ற புனை பெயரிலேயே அழைக்கின்றனர். 14 தெருக்கள், 3 குறுக்குச் சந்துகள், புறாக்கூண்டு மாதிரி 1800 குடும்பங்கள்; செருப்பு தைப்பது மெஜாரிட்டி குலத்தொழில். இங்கு இருக்கும் 8000 பேரும் தெலுங்கர்களே - டீக்கடை வைத்திருக்கும் நாயர்களைத் தவிர. ஃபோட்டோ கிராபருடன் ஒருநாள் இங்கு வாழ்ந்து பார்க்கத் தொடங்கினோம்.

20 வருஷத்துக்கு முந்தி ஷூ தைக்க ஜனங்க இங்கதான் வருவாங்க. இப்ப யாரும் வர்றது இல்ல. சைனா பொருள் உள்ள வந்து எங்கலைப்ப காவு வாங்கிடுச்சு. எங்க குலத்தொழிலை இப்ப கம்பெனிங்க செய்ய ஆரம்பிச்சதால இந்தத் தொழில் கொஞ்ச நாள்ல காணாம போயிடும். நாங்க படிச்சது கொஞ்சம்தான். அதுவும் எம்.ஜி.ஆர். சோறு போட்டதால படிச்சோம். இப்ப நாங்க பாதிப்பேர் ஹவுஸ் கீப்பீங் வேலைக்குதான் போறோம்," என்று பேச ஆரம்பித்தார் லோகநாதன்.


உங்கள் சாதிக்கென்று தலைவர்னு யாரு இருக்கா?" என்றதும்தான் தாமதம். மாக்கோசமனி நாயக்குடு ராலேது" என்றார். பாஷை பிடிபடாமல் விழித்ததும் உள்ளூர் தலைவர் விக்டர்... பள்ளருக்கு கிருஷ்ணசாமி, பறையர்க்கு திருமாவளவன் மாதிரி அருந்ததியர்க்குன்னு தலைவன் யாருமில்லை ஸார். ஏன்னா எங்களுக்கு சாதி உணர்வும் குறைச்சல்தான். இந்த எடத்துக்கு 162 வருஷத்துக்கு முந்தி ஆந்திராவிலே இருந்து வந்தோம். அப்போ இதுக்கு கோசிங்கு பாளையம்னு பேரு. காலங்காலமாய் செருப்பு, ஷூ தைக்கிறதுதான் வேலை. மூலப் பொருளெல்லாம் சென்னை பெரிய மேட்டுலதான் வாங்குவோம்" என்றார்.


அடுத்த தெருவை கொஞ்சம் ஆராய்ந்துட்டு வரலாம்னு போனோம். குடிதண்ணீர் லாரி வந்ததும் நம்மைச் சுத்தி இருந்த கூட்டம் ஜூட். அந்தத் தெருவில் தோல் விற்றுக் கொண்டிருந்த பிரகாஷ் கொஞ்சம் விவரமாய் பேச ஆரம்பித்தார். NSI -ல் 6 மாத கோர்ஸ் கவர்மெண்டுல கொடுத்தாங்க. அதாவது எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலையே திரும்பவும் கத்துக் கொடுத்து தொழில் தெரியும்னு சர்டிஃபிகேட்; நல்ல கூத்து இல்லே. லோன் கேட்டா முன் பணம் கட்டு, நெகட்டிவ் ஏரியாவுல இருக்கக்கூடாதுன்னு நெறைய ரூல்ஸ். எங்க ஊர் நெகடிவ் ஏரியாவாம் ஸார்" சொல்லிச் சிரிக்கிறார்.



போகிற வழியில் கும்பலா ரோட்டில் குந்திக் கதை பேசிக் கொண்டிருந்த பெண்கள் பெரும்பாலும் பகலில் நைட்டியிலேயே இருந்தனர். அந்தக் குழுவில் சில திருநங்கைகளும். எந்த பேதமும் உறுத்தலுமற்று ஒருசமூக திருப்திஅங்கு நிலவிக் கொண்டிருந்தது.


அருகே தேங்கியிருந்த கழிவு நீர் நெடி அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் அங்கேயே சுழன்றது. தம்பி எங்களை ஃபோட்டோ எடுத்தா கேமிரா தீட்டாயிடுமா" என்று ஒரு திருநங்கை வார்த்தையால் சாட்டை வீசினாள். ஒருக்ளிக்குக்குப் பின் அரசாங்கம் எதுவும் செய்யலையா என்றதும், எம்.ஜி.ஆர். இருந்தப்போ இலவச செருப்பு திட்டத்தில மூலபொருளும் கொடுத்து செருப்பு தைக்க ஆர்டரும் கொடுத்தாரு. ஆனா இப்போ அந்த ஆர்டர் பெரிய கம்பெனிக்குப் போயிடுச்சு" என்றார். ‘அடக் கடவுளேஎன்று நம் வாய் முணுமுணுத்ததும்... சிவகுமார் குறுக்கிட்டு, எங்க குல தெய்வம் மாத்தம்மா. வாங்க காட்டுறோம்" என்றார்.


சிறுமிகளுக்குத் தாலி கட்டி கோயிலுக்கு நேர்ந்துவிட்டு கடவுளின் மனைவியாக, கோயில் சொத்தாக கோயிலில் நாட்டியம் ஆடவும் வசதி படைத்த ஆண்களின் போகப் பொருளாகவும் மாறிச் சிதைந்துபோன ஒரு குலத்தின் வம்சாவழிதான் மாத்தம்மா என்ற வரலாற்று தகவல் மூளையில் வந்து போனது. முன்னோரான மாத்தம்மா பெண் தெய்வமாகி சமூகத்தில் போற்றப்படுவது இங்கு தான். செருப்பைக் கழற்றி தெய்வத்தை வணங்கி ஃபோட்டோ எடுத்தபோது அந்தத் தெருவின் பெயர் உப்பண்டி பாபு தெரு என்றிருந்தது. கூட இருந்த முனுசாமி, என்ன பாக்கிறீங்க... பங்காரி தெரு, தாசரி தெரு, போலேரி அம்மன் தெரு, செங்கண் தெருன்னு நிறைய தெருக்களில் இருக்கும் பேரெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தின் பேர்தான்" என்றார்.


படித்த ஒரு பெண்ணாவது பேசினா நல்லாயிருக்கும் முனுசாமி" என்று அவரிடம் சொன்னதும், ஒரு வீட்டுக்கு அழைத்துப் போனார். அந்த வீட்டு வாசலில் உட்கார்ந்தேன். அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்த கல்லூரி பெண் ஷகிலா... என்ன பத்திரிகை என்று பத்திரிகை ஒரு புரட்டுப் புரட்டி என்னுடைய .டி. கார்டு மற்றும் ஃபோன் நெம்பரை வாங்கி ஊர்ஜிதம் செய்துகொண்டு, பின்னரே சகஜமாய்ப் பேச ஆரம்பித்தார்.
நான் பட்டதாரிதான். இங்க இருக்கிற ஜனங்க படிக்காதவங்க. நாகரிகம் கொஞ்சம் கம்மி. வேலை வாய்ப்பு இல்ல. விழிப்புணர்வும் இல்ல. வேதனையாத்தான் இருக்கு. என்ன பண்ண? என் ஃபிரண்ட்ஸுங்க யாரையும் எங்க ஏரியாவுக்கு நான் கூப்பிட்டது இல்ல. அவங்க யாரும் சாதி பார்க்கிறவங்க இல்ல. ஆனா அவங்க சுத்தம் பார்க்கிறது தப்பில்லையே? சரிதானே!" என்றார்.

இட்லி சுட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் இந்தாங்க என்று தட்டில் இட்லியும் கொஞ்சம் சட்னியும் திடீரென தந்தார். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இடித்துச் செய்த கோங்குரா சட்னியாம். எரிமலை காரம். தொடர்ந்து இவ்வளவு காரம் சாப்பிட்டால் சீதபேதி நிச்சயம் என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்த ஒருவரிடம், ‘என்ன பண்டிகை கொண்டாடுவீங்கஎன்றேன். நாங்க தெலுங்கு பேசுற தமிழர்கள். தெலுங்கு பண்டிகையெல்லாம் கிடையாது. பொங்கல்தான் எங்களுக்கு" என்றார்


. ஒரு வயதான பெண்மணி, இவங்க எதுக்கு வந்திருக்காங்க?" என்றார். அதற்கு பக்கத்திலிருந்த சிவக்குமார் எட்ட உன்ன நேனு, இட்ட அய்ப் போயானு, அனி வீல்லு ராயட்டானிகி ஒச்சாரு" என்றார். நம் ஃபோட்டோகிராபர் மாமு எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்னு நம்மள பத்தி எழுத வந்திருக்காங்கன்னு சொல்றாருடா" என்று மொழி பெயர்த்தார். ‘இதுக்கு முன்னே எப்படி இருந்தீங்க" என்றதும் ஒரு பெரியவர் ஒரு ஷூ தெச்சா அப்போ லாபமாய் 1000 கிடைக்கும். பொண்ணு கேக்க போனா ஷூ தெச்சிக் காட்டினாதான் கல்யாணம் நடக்கும். கம்பெனி வேலையக்கூட துச்சமாய் தூக்கிப் போட்டோம். இப்போ செருப்பு தைக்கக்கூட யாரும் வர்றது இல்ல" என்றார்.

கொசுவர்த்திக்கே ஒரு நாளைக்கு 10 ரூபாய் செலவு செய்றோம். குப்பை அள்ளக் கூட ஆளு வர்றது இல்ல. செருப்பு தைக்கிற வங்கதானேன்னு எங்களை கவர்மெண்டு கூட அனாதை மாதிரி நடத்துறாங்க" என்று லாவண்யா சொன்னதும், ‘இவ்வளவு பேரு இருக்கீங்க ஒண்ணு சேர்ந்து போராடக் கூடாதா?" என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி அப்புடு அன்னம் உன்னா பைட் சேஸ்நாமு. இப்புடு அன்னம் கோசமே பைட் செஸ்த்துன்னாமு" என்றார் சுர்ரென்று. கோபத்தின் போதும் காதலின்போதும் சொந்த மொழி வேஷமின்றி உக்கிரமாயும் உண்மையாயும் வரும் போலும். இந்தமுறை தெலுங்கு புரிந்ததுசோத்துக்கே போராடும்போது...’ என்ற வரி வலிக்கச் செய்தது.


நன்றி - கல்கி , புலவர் தருமி