Showing posts with label சுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள். Show all posts
Showing posts with label சுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள். Show all posts

Sunday, July 03, 2016

சுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள்




1  கொலையாளி ராம் குமார் திட்டமிட்டே இந்தக்கொலையை செய்ததாக தகவல். அப்போ அவன் ஏன் மாறு வேடத்தில் , கெட்டப் சேஞ்ச் பண்ணி வர்லை? பப்ளிக் ப்ளேஸ் ல எல்லாரும் பார்க்கும்படி ஏன் கொலை செய்யனும்? இது போல் பப்ளிக்காக கொலை செய்வது 3 தரப்பினர் மட்டுமே. 1 யாருக்கும் அஞ்சாத  கூலிப்படைகள், 2  ஆத்திரத்தில் அந்த நேர வாக்குவாதத்தில் அவரையும் அறியாமல் தாக்குவது 3  சைக்கோ குற்றவாளிகள்


2  ஒரு பெண்ணைக்கொலை செய்ய சாதாரண கத்தியே போதும், கைக்கு அடக்கமாக பாக்கெட் டில் மறைத்து எடுத்து வர வசதி. ஆனால் மெனக்கெட்டு அவ்ளோவ் பெரிய அரிவாளை ஏன் ஆயுதமாக பயன் படுத்தினான்?

3  ஒரு தலைக்காதல் தோல்வி எனில்  அடைய முடியாத பெண்ணை நம்மைத்தவிர வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது, அல்லது அந்தப்பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் தான் மேலோங்கும்.கொலை வெறியில் இருப்பவன் கொலை பற்றித்தான் சிந்திப்பான். கொலை செய்தவன் ஏன் சுவாதியின் செல் ஃபோனை எடுத்துச்செல்லனும்?அந்த செல்ஃபோனில் என்ன ரகசியத்தகவல் இருக்கு?

4  ராம்குமார் ஸ்வாதிக்கு அனுப்பிய எஸ் எம் எஸ் மிரட்டல்களை போலீஸ் பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதை கைப்பற்றினான்  என சிலர் சொல்கிறார்கள்.அந்த அளவு பயம் உள்ளவன் தன் முகத்தை எல்லாருக்கும் காட்டி விட்டு கொலை செய்வானா?


5 கொலை செய்தவன் பொதுவாக கொலைக்கருவி, ரத்தக்கறை படிந்த ஆடை இவற்றை வழியில் வீசி  விடுவார்கள்    போலீஸ் நாய் மோப்பம் பிடிக்கும் என எண்ணு[பவர்கள் எரிப்பார்கள் , அல்லது ஆற்றில் வீசுவார்கள். யாராவது தன் ரூமில் மறைத்து வைப்பார்களா? அது என்ன நினைவுச்சின்னமா?பத்திரமா வெச்சுப்பாதுகாக்க?


6 கொலை செய்ததும் வெளியூருக்கு தப்பிச்செல்வதுதான் பொதுவாக கொலையாளிகள் பழக்கம். இவன் ஏன் தன் சொந்த  ஊருக்கு, சொந்த  வீட்டுக்குப்போனான்?

7  கொலையாளி படித்த இளைஞன். சுவாதியின் செல் ஃபோனை எடுத்துச்சென்றது கூட ஓக்கே. அந்த சிம் கார்டு கண்காணிக்கப்படும் என்பது தெரியாதா? எதற்காக  அதை ஆன் செய்து தன்  லொக்கேஷனை காட்டிக்கொடுத்தான்/ அப்போ அந்த செல் ஃபோனில்  என்ன தகவல்? அந்த எஸ் எம் எஸ் சை அழிக்கனும் என்றா ல்  செல் ஃபோனை ஆத்துக்குள் எறிந்திருக்கலாமே?


8 தப்பிச்சென்ற ராம்குமார் தன் ஊரில் ஒரு வாரம் இருக்கிறான். போலீஸ் கிராமத்தை சுற்றி வளைக்கிறது. பகல் பூரா கிராமத்தில் உள்ள பலரை விசாரித்து இருக்கு. கிராமத்தார் எனில் நிச்சயம் யாராவது ராம்குமார்  வீட்டில் தகவல் கொடுத்திருப்பார்கள். அல்லது என்னப்பா? இப்டி போலீஸ் விசாரிக்கே? என்ன மேட்டர்? என்ன செஞ்சே? என கேட்டிருப்பார்கள். ஏன் அவன்  உஷார் ஆகலை?


9  போலீஸ் எதுக்கு இரவு 10 மணி வரை காத்திருக்கு? அவன் என்ன அரசியல் கட்சி தலைவரா? கைது செய்தால்   கூட்டம்  கூடும், ஆதரவுக்குரல் எழுப்புவார்கள்  போக்குவரத்து பாதிக்கும் என பயப்பட? சாதாரணமாக பகலில் கைது செய்திருக்கலாம்


10  போலீஸ் கைது செய்யும் முன் கிராமம் பூரா கரண்ட் கட் செய்தார்கள் என தகவல். ஆனால்  ராம்குமார் தற்கொலை முயற்சி செய்வதை   ஃபோட்டோ எடுக்கும்போது மட்டும் ஏது வெளிச்சம்? உடனே ஓடிப்போய் காப்பாற்றுவார்களா? அதை  ஃபோட்டோ எடுப்பார்களா?


11  ஒரு விபத்து / கொலை நடப்பதை எதெச்சையாக கேமரா பதிவு செய்யும் , ஆனால் ஒரு தற்கொலை யை அல்லது தற்கொலை முயற்சியை எதுக்காக  ஃபோட்டோ/ வீடியோ எடுக்கனும்?இதுக்கு முன் உலகில் எந்த ஒரு கேசிலும் குற்றவாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான் என ஆதார ஃபோட்டோவை வெளியிட்டதாக தெரியவில்லையே?


12  தற்கொலை செய்ய பிளேடு உபயோகித்தான் என்பதில் பல டவுட்ஸ். பிளேடு  இருபுறமும் கூர்மையாக இருக்கும். அதை ஒரு கையில் பிடித்து அறுப்பது மிகவும் சிரமம்.கத்தி எனில் கைப்பிடி பிடித்து அறுக்கலாம்.

13  ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஒரு முறை சுவாதிக்கும் ராம்குமாருக்கும் வாக்குவாதம்  நடந்ததாகவும் , ராம்குமார் சுவாதியை அறைந்ததாகவும் , சொல்லப்படுகிறது. அது பற்றி சுவாதி  ஏன் தன் பெற்றோரொடமோ, போலீசிலோ சொல்லவில்லை?


14   வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக வேறு ஒருவருக்காக கூலிப்படை ஆளாக  ராம்குமார் செயல்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு

15   சுவாதி மேல் ஒருதலைக்காதல் உள்ளது உண்மையாக இருந்தால் என்ன ஆதாரம்? கையில் சுவாதியின் பேரை பச்சை குத்தி இருக்கானா? இல்லை. அட்லீஸ்ட் டைரியில் கவிதை எழுதிய ஆதாரம் இருக்கா? காதல் கடிதம் / மெயில் ஆதாரம்  இருக்கா?

16  ராம்குமாரே வாக்குமூலத்தில் நான் தான் கொலைகாரன்  என சொன்னாலும் அதை எப்படி நம்புவது? வேறு ஒரு பணக்காரனுக்காக பினாமியாக இவன் செயல்பட வில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?ராம்குமாரின் நண்பர்கள் , சுவாதியின் தோழிகள் யாராவது சாட்சி சொல்லி இருக்கார்களா?

17  கொலைகாரனைப்பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள், உங்கள் ரக்சியம் பாதுகாக்கப்படும் என்று சொல்றாங்க. ஆனால் கொலைகாரனுக்கு தண்டனை கிடைக்கும் முன்பே சாட்சி வாட்ச்மேன் பற்றி தகவல் ஏன் வெளியிடனும்? கொலைகாரனால் சாட்சிக்கு பாதிப்பு இருக்காது என்று எப்படி நம்புகிறார்கள்?

18  சுவாதியின்  செல் ஃபோன் நெம்பர் ராம் குமாருக்கு எப்படி கிடைத்தது?

19  கொலை செய்யப்பட்ட சுவாதியின் ஃபேஸ் புக் கணக்கு ஏன் முடக்கப்பட்டிருக்கு?அதை இறந்து போன சுவாதி யூஸ் பண்ணப்போவதில்லை. பின் ஏன் அதை லாக் பண்ணனும்?

20   ராம்குமார் உயிருக்கு ஆபத்து இல்லை. அவர் நன்றாக பழையபடி பேச 2 நாட்கள் ஆகும் என டாக்டர் சொல்லி இருக்கார் . அது வரை காத்திருக்காமல் அவசர அவசரமாக ஜட்ஜ் ஏன் கொலையாளியை நேரில் கண்டு வாக்குமூலம் வாங்கனும்?




டிஸ்கி - இவை எல்லாம் என் சந்தேகங்களே, யூகங்களே, ஒருவேளை இவை எல்லாமே தவறாக இருந்து நடந்த சம்பவங்கள் உண்மையாகக்கூட இருக்கலாம்.