Showing posts with label சிக்கிக்கு சிக்கிக்கிச்சு (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சிக்கிக்கு சிக்கிக்கிச்சு (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Sunday, November 01, 2015

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : மிதுன்
நடிகை :மிருதுளா முரளி
இயக்குனர் :ராஜேஷ்குமார்
இசை :விஜய் பெஞ்சமின்
ஓளிப்பதிவு :என்.எஸ்.ராஜேஷ்குமார்
நாயகன் மிதுன், ஆதவன் உள்ளிட்ட நான்கு பேர் நெருங்கிய நண்பர்களாக சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்கள். திருமணம் மீது பிடிப்பு இல்லாமல் வாழ்ந்து வரும், இவருக்கு பெண் பார்க்க இவருடைய அம்மா நாகர்கோவிலுக்கு செல்கிறார்.

இந்நிலையில், நாகர்கோவிலில் நடக்கும் தனது நண்பனின் திருமணத்துக்கு நாயகனை தவிர்த்து அவருடைய நண்பர்கள் அனைவரும் ரெயிலில் செல்கின்றனர். அவர்களை ரெயில் ஏற்றிவிட செல்லும் நாயகன், ரெயில்வே ஸ்டேஷனில் வைத்து நாயகி மிருதுளா முரளியை பார்க்கிறார். பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார்.

உடனேயே, அந்த ரெயிலிலேயே நாயகனும் பயணம் செய்கிறார். ரெயிலுக்குள் நாயகியை கவர, நாயகன் பல முயற்சிகள் செய்கிறார். ஒருகட்டத்தில் நாயகன் மீது நாயகிக்கு ஈர்ப்பு வர, அவளுக்குள் காதல் துளிர்விடுகிறது.

இந்த விஷயம், நாகர்கோவிலில் இருக்கும் நாயகியின் அண்ணனுக்கு தெரிய வருகிறது. நாயகன் நாகர்கோவிலில் கால் வைக்கும் அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்.

இறுதியில், நாகர்கோவில் சென்ற நாயகனுக்கு என்ன நடந்தது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படம் முழுவதும் ஒரு ரெயிலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால், படம் முழுக்க நாயகனும், நாயகியும் ஒரே காஸ்ட்யூமில் வலம் வந்திருக்கிறார்கள். நாயகன் மிதுன், இந்த படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் காதல் ரசம் சொட்ட சொட்ட நடித்திருக்கிறார்.

அதேபோல், நாயகி மிருதுளா முரளியும் நாயகனுக்கு சமமாக போட்டி போடும் அளவுக்கு ரொமான்ஸை அள்ளி தெளித்திருக்கிறார். பார்க்க கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார். ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டு ஒருவருக்கொருவர் பேசாமலேயே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு.

ஆதவன், தனது டைமிங் காமெடியில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார். வில்லனாக வரும் அனூப் அரவிந்த், கடைசியில் நல்லவராக மாறுவது கதைக்கு திருப்புமுனை. நாயகனையும், நாயகியையும் மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிதாக வேலையில்லை.

இயக்குனர் என்.ராஜேஷ்குமார் ஒரு ரெயிலுக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்திருக்கிறார். கதை வலுவானதாக இருப்பதால், காட்சிகள் ஒரே இடத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.. அதேபோல், இந்த கதையை ரொம்பவும் நீளமாக இழுத்திருப்பது கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது.

விஜய் பெஞ்சமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். என்.எஸ்.ராஜேஸ்குமாரின் ஒளிப்பதிவு ரெயில் காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ சிக்கல் இல்லை.

-மாலைமலர்