Showing posts with label சஸ்பென்ஸ். Show all posts
Showing posts with label சஸ்பென்ஸ். Show all posts

Friday, December 23, 2011

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjURnG-36EaHoB-BgoOUHD49jWBWhCKSUy-QTGIXDtBlq3YWjJPQDAjj9s4alZatfzhzBDjgcEutuKSf0Ri_0UzdKIz3owjNu79rCF8TPs8pj2BuulxEHIXMKU3OtffV-K_oLfs_T4Czw/s1600/Rajapattai-Movie-new-Posters-2.jpg 

அடடே.. வாங்க சுசிந்திரன் சார்.. கோடம்பாக்கத்துல தொடர்ந்து 3 படங்கள் வெவ்வேற பாணில பண்ணிட்டீங்க..அதுல வெண்ணிலா கபாடி குழு -ல உங்க டச் இருந்துது.. அழகர்சாமியின் குதிரை-ல வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் ஒரு அழகியல் உணர்வோட கதை சொல்லி இருந்தீங்க, நான் மகான் அல்ல படம் பக்கா கம்ர்ஷியல். இதுவரை யாருமே சொல்லாத கதை, ஹீரோவோட அப்பாவை கொலை செஞ்சவங்களை பழி வாங்கற வித்தியாசமான கதை.. மொத்தத்துல உங்களை நம்பி தியேட்டருக்கு வரலாம்.. அந்தளவு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ரேஸ் குதிரை சார் நீங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்.. தம்பி... நற நற 

ஏன் சார் பல்லை நற நறனு கடிக்கறீங்க?

நான் தமிழ் ரசிகர்கள் மேல கோபமா இருக்கேன்.. அழகர்சாமியின் குதிரை படத்தை அவங்க ஓட்டலை..

அட விடுங்கண்ணே, தியேட்டர்ல ஆபரேட்டரே படத்தை ஓட்டாம இடைவேளைக்குப்பிறகு தூங்கிட்டாராம்.. அது பழைய கதை அதை விடுங்க.ராஜபேட்டை என்ன கதை, இதுக்கு ஸ்டோரி நாட் (KNOT) எங்கே பிடிச்சீங்க?

. உன் சொந்த ஊரு ஈரோடுதானே? அங்கே என்கேகே பி ராஜா -சிவபாலனை ஏமாற்றி நில மோசடி பண்ணாரே.. அதை பேஸ் பண்ணி சசிகலாவை வில்லி ஆக்கிட்டேன் ஹி ஹி 


http://glmourheroine.files.wordpress.com/2010/12/telugu-cute-actress-latest-deeksha-seth-saree-stills.jpg


அவங்க ஆல்ரெடி வில்லிதானே.. என்ன, இத்தனை நாளா போயஸ்ல ஜல்லி அடிச்சிட்டு இருந்தாங்க , இனி அது முடியாது.. அவ்ளவ் தான் , சரி , இந்தப்படம் மூலமா நீங்க இன்னா சொல்ல வர்றீங்க?

ஒரு பக்காவான கமர்ஷியல் சக்சஸ் டைரக்டர்னு காட்டறேன் அவ்ளவ் தான்.. 

கே விஸ்வநாத் சார் கவுரவமான டைரக்டர், அவரை காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க, பாவம், ஆனாலும் அவர் நல்லாவே நடிச்சிருக்கார்.. ஓப்பனிங்க்ல சினிமாவில் வில்லனா நடிக்க ஆசைப்படும் விக்ரம்க்கு காதல் ஐடியா குடுக்கறதும், ஃபிகர்ங்களை  மடக்க அவர் ஜொள்ஸ் பார்ட்டி ஜக்கு ஆகறதும் லேசா செயற்கை தட்டுனாலும் ரசிக்க முடியுது.. இதுவரை தமிழ் சினிமால ஹீரோக்கு லவ் பண்ண தாத்தா ரேஞ்ச்ல இருக்கறவர் இவ்ளவ் தரை மட்டமா இறங்கி யாரும் பார்த்தே இருக்க மாட்டாங்க.. 

இந்தப்படத்துக்காக விக்ரம் உழைப்பு பற்றி சொல்லுங்க

பொறுங்க சொல்றேன், விக்ரம் ஜிம் பாடிதான் அதுல ஒண்ணும் யாருக்கும் டவுட் இல்ல, ஆனா அவர் ஏன் அப்படி விறைப்பா அப்படி படம் பூரா வர்றாரு? நெஞ்சை நிமிர்த்திட்டே இருக்காரு? அவ்வ்வ்வ்வ்வ்

தீக்‌ஷாசேத்னு ஒரு ஃபிகர் ஆந்திரா பார்ட்டி.. தெலுங்குல இருந்து இறக்கு மதி பண்ணி  இருக்கோம்..



http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Rajapattai/Rajapattai%20Movie%20and%20Working%20Stills/Rajapattai%20Movie%20and%20Working%20Stills-d506d672233e5a89b87748253ed06caa.jpg
சுங்க வரி சாரி சினிமா சங்க வரி கட்டிட்டீங்களா? சும்மா சொல்லக்கூடாது.. ஃபிகரு கொழு கொழுன்னு , மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கு.. பாப்பாவுக்கு நடிப்பு வருதா ? வராதா?ன்னு தெரில. ஏன்னா அதுக்கு நீங்க சீனே வைக்கலை.. இடுப்பு மடிப்பு தெரியத்தான் சீன் வெச்சிருக்கீங்க.. 

சும்மா இல்ல தம்பி.. 50 லட்சம் சம்பளம்.. அதான் ஃபுல்லா யூஸ் பண்ணிக்கிட்டேன் ஹி ஹி 

சரி.. உங்க வாயால படத்தோட கதையை அட்ரா சக்க இணைய தள வாசகர்களுக்கு ஒரு தடவை சொல்லிடுங்க... 

அதாவது ஒரு பெரிய கோடீஸ்வரர்.. அவருக்கு ஒரு பொறுக்கி பையன் இருக்கான்.. 

அது தெரிஞ்சதுதானே, சினிமால பணக்காரனுக்கு வாய்க்கர பசங்க எல்லாம் பொறுக்கி பையன்களாத்தானே இருப்பாங்க?

அவனுக்கு எம் எல் ஏ ஆக ஆசை வருது.. சசிகலா ஒரு அரசியல்வாதி, சசி கிட்டே வந்து சீட் கேட்கறான், அந்த சசி அந்த பொறுக்கி கிட்டே உங்கப்பா பேர்ல இருக்கற 30 கோடி ரூபா சொத்துல ஒரு ஆசிரமம் கட்டி இருக்காரே அந்த நிலத்தை மட்டும் எழுதி வாங்கு, நீதான் எம் எல் ஏங்கறார்.. அந்த பொறுக்கியோட தொந்தரவும், டார்ச்சரும் தாங்க முடியாம கோடீஸ்வர அப்பா எஸ் ஆகி கரெக்டா ஹீரோ கிட்டே வந்து சேர்றார்.. ஹீரோ எப்படி ஹீரோயினை கவனிச்சுக்கிட்டே , தன்னை எதிர்க்கிற வில்லனோட 178 அடியாட்களையும் அடிச்சுப்போட்டுட்டு, வில்லியை கரெக்ட் பண்றார்?ங்கறதுதான் கதை..



http://www.southgossips.in/wp-content/uploads/2011/06/deeksha-seth-at-raja-pattai-movie-press-meet-21.jpg

என்னது? ஹீரோ வில்லியை கரெக்ட் பண்றாரா? அடங்கோ..

ஓ சாரி சாரி. வில்லியை டிஸ் கனெக்ட் ஃப்ரம் திஸ் கேஸ் அப்படிங்கறதுதான் கதை.. 

படத்துல நாலே பாட்டு, 4ம் ஓக்கே யுக பாரதி, யுவன் சங்கர் ராஜா கூட்டணி நல்லாவே பண்ணி இருக்காங்க.. ஓப்பனிங்க் ஷாங்க் -ஒரு பையன் போலவே பாட்டுல ஹீரோயின் செம செம. வில்லாதி வில்லன் எல்லோரும் குத்தாட்ட பாட்டு ஓக்கே , அதுக்கு ஆடுன நடிகை பயங்கர தொப்பை, சகிக்கல.. அவ்வ்வ் லோஹிப் காட்ற ஃபிகர்ங்க எல்லாம் நல்லா நோட் பண்ணீக்குங்க, தொப்பை இருந்தா தயவு செஞ்சு அவாய்டு தட் லோ ஹிப் சேலை ஐடியா ( சமூகத்துக்கு மெசேஜ்ங்கோவ்), ஓ கனியே பனிப்பூவே நல்ல மெலோடி.. 


ஃபைட் சீன் பற்றி சொல்லவே இல்லையே... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3-LzoonE-dsa2tEqhR_WRMIIReMo-Fzv0gf254DljJ03RMVKj0K6Jt2l40YEYhKus1_NYBLW2RD0IClDCroG4iSn0OKNJj_S8zFGII3y8j8wblx9OQ6q01EnJZRl6BtVLmXm654MdD68/s1600/Deeksha_Seth_Spicy_Saree_10-586x1050.jpg
 


அய்யா அய்யா உங்க காலை காட்டுங்க.. ஃபைட்ஸ் எல்லாம் செம.. 67 வில்லன் அடியாட்களை 3 நிமிஷத்துல ஹீரோ அடிக்கறது சூப்பர்.. எனக்கு ஒரு டவுட், பொதுவா எல்லா சினிமா மசாலா டைரக்டரையும் கேட்கறேன், ஹீரோ வில்லனை தன் மண்டையால நங்க்-னு சத்தம் வர்ற மாதிரி தாக்கராரு.. வில்லனுக்கு ரத்தம் வருது.. ஹீரோவுக்கு வியர்வை கூட வர்லை.. அசால்ட்டா இருக்கார்.. அப்புறம் ஹீரோ பைக்ல போறப்ப, டூயட் பாடறப்ப கூலிங்க் கிளாஸ் போடட்டும் ஸ்டைலுக்கு ஒத்துக்கலாம்.. ஆனா 80 பேரை அடிக்கறப்ப கூட கிளாஸ் போட்டுட்டே தான் அடிக்கறார், கண்ணு தெரியுமா? அவ்வ்வ்வ் 

டேய் நாயே கூலிங்க் கிளாஸ் பற்றி நீ பேசறே... வேற பேசு.. 

படத்தோட முதல் 4 ரீல்ல ஹீரோயின் ஹீரோ லவ் வர்ற சீன் எல்லாம் செம .. நேரம் போறதே தெரியல.. அப்புறம் வாப்பா கேரக்டர்ல வர்ற கஜினி பட வில்லன் பிரதீப்பை விக்ரம் சி பி ஐ ஆஃபீசர் மாதிரி விசாரனை பண்ற சீன் சொன்னா கோபப்படாதீங்க - கேனத்தனமா இருக்கு. அதை கூட ஏத்துக்கலாம், அவர் சிட்டிசன் அஜித் மாதிரி 6 கெட்டப்ல மாத்தி மாத்தி விசாரணை பண்றது படு செயற்கை.. எதுக்கு அப்படி சீன் வெச்சீங்க? 

ஹி ஹி ட்ரெய்லர்ல, போஸ்டர்ல விக்ரம் பல கெட்டப்ல நடிக்கறார்-னு ஒரு பில்டப் காட்டத்தான்.. மற்றபடி வேற ஏதும் உள்குத்து இல்ல..

அப்புறம் ஒரு முக்கிய மேட்டர், சசிகலாவா வர்ற மேடம் அதான் அக்கா கேரக்டர் செம தெனாவெட்டு ஹி ஹி சரி உங்க கிட்டே சில கேள்விகள் கேட்கறேன் பதில் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqWEUCHTVG7c32W_eqhuXoqVO7M7uK4mPXlvr8DhxMFCPq6Eo45A5wZ-kEXz0kC5nB4UJZ5c5bnKkFIy61PO709CE9Dt-uWnuk7FQR8xvyt8JIcOG7Ul5c_RXS3xg54WoJqZrSedZlWn_/s1600/Deeksha+Seth_+in+Wanted+Movie+%25286%2529.jpg


1. விஸ்வநாத் ஃபோட்டோவை 1500 காபி ஜெராக்ஸ் எடுத்து தமிழ்நாடு பூரா ஆட்களை விட்டு தேடச்சொல்ராரே வில்லி சசிகலா அவர் என்ன அவ்ளவ் ஏழையா? காணவில்லை எனது தந்தையை-னு மகன் தர்ற மாதிரி  நியூஸ் பேப்பர்ல ஒரு விளம்பரம் தந்தா மேட்டர் ஓவர், சன்மானத்துக்கு ஆசைப்பட்டு எவனாவது காட்டிக்குடுத்துடப்போறான்.. 


2. விஸ்வநாத் தன் மகன் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சே தான் வீட்டை விட்டு வெளீயே வர்றார்.. அவர் தன் மகன் அழுது டிராமா பண்ணுனதும் நம்பி உடனே அவன் கூட போய் பத்திரத்துல கையெழுத்து போட்டுடறாரே, அவர் என்ன அவ்ளவ் கேனையா? இல்ல படம் பார்க்கற நாங்க கேனையா?

3. நாட்டையே ஆட்டிப்படைக்கற சசிகலா மாதிரி ஒரு வில்லி சாதாரண ஸ்டண்ட் நடிகரை பார்த்து அப்படி பயப்படறாரே...ஹீரோ என்பதாலா?

4. அட்டகாசமான திறமை உள்ள விக்ரமை ஏன் பல காட்சிகளில் லூஸ் மாதிரி காட்டி இருக்கீங்க? குறிப்பா அழும் குழந்தையை  சிரிக்க வைப்பதற்காக காமெடி ஃபைட் போடும் ஹீரோ சகிக்கல,,

5. ஹீரோ 3 வருஷமா ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் கண்டுக்கலை, ஆனா விஸ்வநாத் வந்து ஒரு ஐடியா தர்றாரு.. சினிமாவுக்கு கூப்பிடுன்னு.. உடனே பார்ட்டி செட் ஆகிடுது.. அந்த அலவு கூட ஐடியா இல்லாத மாங்கா மடையனா அவரு?

6. படத்துல போலீஸ்னு ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கறதையே யாரும் கண்டுக்கலை. ஆல் இன் ஆல் ஹீரோவே பார்க்கறாரு அவ்வ்வ்வ்வ்வ்

7.  30 லட்சம் ரூபா சம்பளம் குடுத்து ஸ்ரேயா, ரீமாசென் 2 பேரையும் ஒரு டான்ஸ்க்கு ஆட விட்டிருக்கீங்க , ஓக்கே ஆனா அதை ஏன் படம் முடிஞ்சு , டைட்டில் போடறப்ப பாட்டை போடறீங்க? பாதிப்பேர் கிளம்பிட்டாங்க.. அட்லீஸ்ட் ஒரு அறிவிப்பாவது தந்திருக்கலாம்.. இப்போ ஒரு பாட்டு வரப்போகுதுன்னு..

8. க்ளைமாக்ஸ்ல கோர்ட் வளாகத்துல போலீஸ் செக்யூரிட்டியோட வில்லி வர்றப்ப அரை கிமீ தூரத்துல இருந்து ஒரு ஆள் ஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்-னுகத்திட்டே வந்து கத்தியால குத்தறார்.. போலீஸ் எல்லாரும் கையில் கன் வெச்சிக்கிட்டு ஆன்னு வேடிக்கை பார்க்கறாங்க, ஏன்? ( அட்லீஸ்ட் அவன் சவுண்ட் இல்லாம வர்ற  மாதிரியாவது காட்டி இருக்கலாம்.. )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVRM6WvTkfWcrouW6ehzy-_OxcV0O_PxLDWC_uvHH1paX3n-cyyGVlTU7MM9cg9AqoHyilc_Y_5qKHkxh6WSmL-Q9MpIbK2EjUmGLrwNpmOWjXghXyM349PsCcoN_fmyiovgnboaycMdFs/s640/deeksha_seth_mirapakaya_movie_stills_01.JPG


ஜாலியான கமர்ஷியல் மசாலாதான், ஆனா புளிச்சுப்போன கதை.. 


25 நாட்கள் ஓடும் , பொங்கல் வருதே, அதுக்குள்ள அள்ளூனாத்தான் உண்டு

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

சி.பி  கமெண்ட் - வித்தியாசமான படங்கள் விரும்பும் ரசிகர்களூக்கான படம் இல்லை, ஆனாலும் மசாலா ரசிகர்கள் பார்க்கலாம், பொழுது போகுது, காமெடி இருக்கு.. கிளாமர் இருக்கு

ஈரோடு - பள்ளிபாளையம் ஜெயலக்‌ஷ்மி தியேட்டர்ல படம் பார்த்தேன்

 படத்துல கலக்கலான காமெடி 30 ஜோக்ஸ் தேறும், அது திங்கள் கிழமை போஸ்ட்ல

டிஸ்கி - கீழே உள்ள ஃபோட்டோ படத்துல கிடையாது,தீக்‌ஷா சேத்-ன் ஒரு தெலுங்குப்பட ஸ்டில் அது அவரோட ஃபேஸ் புக்ல இருந்து சுட்டது ஹி ஹி ..

ராஜபேட்டை , டான் -2 , எட்டாம் நெம்பர் வீடு - ஒரு முன்னோட்ட பார்வை

http://i.indiaglitz.com/tamil/news/rajapattai290911_1.jpg1. 1.  ராஜபேட்டை - தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம் பாயாக நடிக்கிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.பி -இப்போ நடக்கறது அதிமுக ஆட்சி என்பதால் திமுக ஆட்சியில் நடந்த ,குறிப்பாக ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி ஆளுங்களோட வணடவாளங்களை தண்டவாளத்துல ஏத்துற படமா இருக்கும். 

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர். படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. டிச.23 முதல் திரைக்கு வர இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் நடிக்கும் பக்கா கமர்ஷியல் படம் ராஜபாட்டை.

http://tamilmoviesonline.co.in/wp-content/uploads/2011/11/Deeksha-Seth-In-Rajapattai-6_thumb5.jpg

 சி.பி - ஆனா ட்ரெய்லர் எல்லாம் பார்த்தா தல அஜித் நடிச்ச சிட்டிசன் நினைவு தான் வருது.. விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்ல வர்றார்.. அந்த மேக்கப் எல்லாம் சரியா பொருந்தலை.. லெட் ஸி ,எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை .

ஹீரோயின் மெழுகு பொம்மை மாதிரி இருக்கு..ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா, சங்கீதா ஆகிய 3 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது..

2. டான் 2 -ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், ‘டான்’. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான ‘டான்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘டான் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. 


ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. ‘டான்’ படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர். 

டான் 2

 சி.பி -இதுல ஷாரூக் கெட்டப் எல்லாம் பார்த்தா அஜித் நடிச்ச பில்லா -2 கதையைத்தான் சுட்டுட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு.. பில்லா படத்துல அப்பாவி அஜித்தா வர்ற கேரக்டர்க்கு பரம சிவன்ல அஜித் வர்ற கேரக்டருக்கான கெட்டப்பை ஷாரூக் இதுல யூஸ் பண்ணி இருக்கார்.. 
இதை எல்லாம் வெச்சுப்பார்க்கும்போது டான் 2 பில்லா ரீமேக் , அல்லது பில்லா-2 வை தழுவிய கதை என்று தான் தோணுது..

சொல்ல முடியாது, டான் -2 படக்கதையை தெரிஞ்சுக்கிட்டு பில்லா -2 படம் அதே கதையை சுட்டு எடுக்கறாங்களோ  என்னவோ?எப்படியும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம், எப்படின்னா விக்ரம் நடிச்ச ராஜபேட்டையை விட இந்த ப்டத்துக்கு நல்ல தியேட்டர்ஸ் அமைஞ்சுருக்கு.

http://www.thedipaar.com/pictures/resize_20111108075821.jpg



ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஹிந்தியிலும், ஈரோடு ஆனூர் தியேட்டர்ல தமிழ் டப்லயும் ரிலீஸ் ஆகும் போல தோணுது..


3. எட்டாம் நெம்பர் வீடு - ரொம்ப நாளுக்குப்பிறகு ஒரு பேய்ப்படம், இது நேரடி தமிழ்ப்படம் போல தெரில.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா சி ஐ டி காலனின்னு ஒரு ஹிந்திப்படம் வந்ததே அந்த படத்தை டப் பண்ணி நைஸா ரிலீஸ் பண்றாங்கன்னு நினைக்கறேன்.. ஈரோடு ஸ்டார் தியேட்டரில் ,அண்ணாவில் ரிலீஸ்..

இந்தப்படத்துக்கு ஸ்டில் போடலாம்னு கூகுள்ல தேடுனா கிடைக்கலை.. என்னய்யா மார்க்கட் பண்றீங்க?


Saturday, December 17, 2011

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/mouna_guru_movie_posters_27.jpg


திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்..

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர்  தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது..

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்?

ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijFWhNk-jHCPETBDuV_QuUeTaAokPpdPEhR_ZY6rVnMRmLlDk_QhIOyslNFlBBx_GU_kAriyLL5msifV6qLVx2G051C6loXlEz5UGgpFP0BOcSTWaD01rDMqQdxkRHzfJKtRmPhVMjaQ/s1600/iniya+Pair+With+Arulnidhi+in+Mouna+Guru+Movie+Stills+Photos+gallery+Pics+%252830%2529.jpg
இப்போ ஹீரோதான் அந்த வீடியோ கேசட்டை எடுத்த ஆள்னு தவறா புரிஞ்சுட்டு ஹீரோ & வேற 2 பசங்களை காட்டுக்குள்ள அந்த இன்ஸ்பெக்டர்  குரூப் கடத்திட்டு வந்து என்கவுண்ட்டர் டிராமால போட்டுத்தள்ளறப்ப  வீடியோ  வெச்சிருக்கற ஆள் வேறன்னு தெரிய வருது.. ஆனா மேட்டர் இவங்களுக்கு த்தெரிஞ்சதால  போட வேண்டிய சூழல்.. ஹீரோ எப்படியோ எஸ் ஆகிடறார். இங்கே இடைவேளை..

ஹீரோவை ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை பைத்தியம்னு பட்டம் கட்டி விட்றாங்க..அவர் எப்படி அதுல இருந்து தப்பி  வர்றார்?ங்கறது மிச்ச கதை.. இந்த கேசை டீல் பண்ற இன்னொரு லேடி இன்ஸ்பெகடர் அந்த 4 போலீஸ்தான் குற்றவாளிகள்னு கண்டு பிடிக்கறார்.. இடைவேளை வரை செம விறு விறுப்பு.. பின் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.. 

ஹீரோ உதயன்க்கு நடிப்பு வர்லைன்னாலும் கேரக்டரே அமைதி டைப் என்பது மாதிரி காட்டி நல்லா சமாளிக்கிறார்.. இந்தப்படத்துக்கு ஒரு அஜித்தோ, விஜய்யோ ஹீரோ ஆகி இருந்தால் படம் எங்கேயோ போய் இருக்கும்.. 

ஹீரோயின் இனியா இதுல மாடர்ன் கேர்ளா வர்றார்.. வாகை சூடவா படத்துல செமயா இருந்தார், இதுல நெற்றில பொட்டு வைக்காததாலோ என்னவோ அவ்வளவா எடுபடலை.. ஓவர் மேக்கப் வேற. இப்ப வர்ற படங்கள்ல ஹீரோயினுக்கு பொட்டு வைக்க கூடாதுன்னு ஏதாவது சங்கல்பம் வெச்சிருப்பாங்க போல.. மகா ஜனங்களே.. பொண்ணுங்க பொட்டு வைக்கலைன்னா அது மாடர்ன் கேர்ள் ஆகிடாது. அது அழகு தரும்.. 

அண்ணிக்கு தெரியாமல் ஹீரோ , ஹீரோயின் இருவரும் காதல் கொள்ளூம் இடங்கள் கல கல.. ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர்  ஹி ஹி ..வில்லனாக வரும் ஜான் விஜய் ( வ குவாட்டர் கட்டிங்க் காமெடி பார்ட்டி) அசத்தலான நடிப்பு, பாடி லாங்குவேஜ். அவர் கூடவே வரும் 3 போலீஸ்களும் நிஜமாவே நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்களை கண் முன் நிறுத்தும் நடிப்பு.. சபாஷ்.. 

லேடி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ் அமைதியான நடிப்பு. அவர் இன்வெஸ்டிகேஷன் செய்வது மிக யதார்த்தம். ஆனால் அவர் ஏன் 6 மாத கர்ப்பிணியாக வர்றார்? படத்தின் க்தைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஏன்னா அவர் வயிற்றை தள்ளிட்டு அங்கேயும், இங்கேயும் அலைஞ்சு இன்வெஸ்டிகேஷன் பண்றது மனசுக்கு கஷ்டமா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgayBBZz9B2mLVUwC_59K7YNBKUkgZ_2Wa-MqunI922Ge0UVCbpEQRbCQFSJKNqrpp2WxLyaaCGBj2XmNJyaBFTtvhec2DnH7rEL8x_V1wjOHPvYvD9fXvCS4PjQ48CVv5ocfx7IgkHgC0h/+Iniya+New+Stills+In+Mouna+Guru+Audio+Launch+%252810%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயிஸம் எதையும் காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டியது பெரிய பிளஸ். ஏன்னா தயாரிப்பே ஹீரோவோட அப்பாதான், அதனால ஓப்பனிங்க், ஃபைட், ஹீரோ துதி பாடும் பாட்டு எதும் இல்லாம யதார்த்தமான ஹீரோவா காட்டுனது முதல் பிளஸ்

2. ஒரு நாவல் படிக்கிற மாதிரி  மிக தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை.. சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைக்கதை தெளிவை நான் பார்க்கலை. வெல்டன் டைரக்டர்..

3.  யாரிவன் யாரிவன் பாட்டு, ஒரு டூயட் பாட்டு ரெண்டிலும் படமாக்கப்பட்ட அழகிய காட்சி அமைப்புகள் மனதை விட்டு  அகலாதவை

4. படத்தின் கதை அனுமதித்தும் ஒரு இடத்திக் கூட விரசமான காட்சியோ, கண்ணியக்குறைவான சம்பவமோ இல்லை. பெண்கள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி ஒரு த்ரில்லர் மூவியை தருவது மிக கடினம்.. செம

5. படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக யதார்த்தமான நடிப்பை தந்தது, அவ்ர்களை வேலை வாங்கியது எல்லாமே செம

6. பின்னணி இசை கன கச்சிதம்.. டெம்ப்போ ஏற்ற வேண்டிய இடங்களில் ஏற்றி , பேக் கிரவுண்டில் சைலண்ட் மோடு தேவைப்படும் இடங்களில்  அமைதி என நீட் டெக்னீஷியன் ஒர்க்.. ஒளிப்பதிவும் சூப்பர்.. 


http://www.kollytalk.com/wp-content/gallery/mouna-guru-movie-stills/mouna-guru-9.jpg

 இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  படத்துல ஹீரோ மெண்டல் ஆவது , மெண்டல் ஹாஸ்பிடல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது.. அதை சரி செய்ய அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே கதை யுக்தியை பயன் படுத்தி இருக்கலாம்.அதாவது ஒப்பனிங்க்ல முதல்ல ஹீரோவை மெண்டலா காட்டி அப்புறம் ஃபிளாஸ்பேக் சீன்ல கதை சொல்லி இருக்கலாம்.. 

2. கார் ஆக்சிடெண்ட்ல உயிருக்கு போராடற ஆளை இன்ஸ்பெக்டர் அவனோட பின் மண்டைல தாக்கி கொல்றார். அதுக்குப்பிறகு அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் லேடி இன்ஸ்பெக்டர் உமா கிட்டே வருது.. ஓகே, ஆனா அவர் ஏன் அவசரப்பட்டு அவனை பின்னால தாக்கனும்?அவனே சீரியஸ்சா இருக்கான்.. ஈசியா முன்னால அடிச்சு கொன்னிருக்கலாமே..

3.  இன்ஸ்பெக்டரின் சின்ன வீடு ஒரு ஹோட்டல்ல தன் ஆளுங்களோட டிஸ்கஸ் பண்றாங்க, அங்கேதான் வீடியோ கேமரா பறி போகுது.. இந்த மாதிரி சீக்ரெட் மேட்டர் பேசறவங்க ஆள் நடமாட்டம் இல்லாத ஹை வேஸ் ரோட் ஒதுக்குப்புறத்துலயோ, ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்லயோதான் பேசுவாங்க.. ???

4. இன்ஸ்பெக்டர் தன் சின்ன வீட்டை அடிச்சு காயப்படுத்தி தள்ளி விடறப்ப எதிர்பாராத விதமா இறந்துடறாங்க.. ஆல்ரெடி முகம், உடம்புல காயம் உள்ள ஆளை எப்படி தூக்குல தொங்குற மாதிரி செட் பண்ணி வைக்க முடியும்?காயமே இல்லாம தலையணைல முகத்தை அமுக்கி கொலை செஞ்சாதானே அப்படி செய்ய முடியும்? முறைப்படி இந்த சிச்சுவேஷன்ல மொட்டை மாடில இருந்து கீழே குதிச்ச மாதிரி செட் பண்ணீனாத்தானே அந்த காயங்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும்?

5. ஏதாவது பிரச்சனைன்னா, அல்லது கொலையை நேர்ல பார்த்த சாட்சின்னா உடனே போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டர் ஹீரோவை மட்டும் ஏன் போடாம மெண்டல் ஆக்க தலையை சுத்தி மூக்கை தொடறார்? டப்னு சூட் செஞ்சா மேட்டர் ஓவர்..

6. விறுவிறுப்பா போகும் திரைக்கதைல அந்த சோகப்பாடல் எதுக்கு? இந்தப்படத்துல காதல் ஊறுகாய் மாதிரிதானே?



http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Mouna-Guru-Tamil-Movie.jpg

வித்தியாசமான கதையை ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

ஹீரோ வால்யூ இல்லாததால் எதிர்பார்த்த அளவு படம் ரீச் ஆகலைன்னாலும்  மவுத்டாக் மூலமா ஹிட் ஆக வாய்ப்பு உண்டு.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் - திரில்லர் பட விரும்பிகள் குடும்பத்தோடு பார்க்கலாம்