Showing posts with label சமூக வலைத்தளம். Show all posts
Showing posts with label சமூக வலைத்தளம். Show all posts

Wednesday, December 23, 2015

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!
அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!
அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.
எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.
சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!
'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,
“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!
பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

-தஹிந்து


Sunday, February 08, 2015

சிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா? தவறா? மக்கள் அலசல்

எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம்: ட்விட்டர் எதிர்ப்பாளர்களுக்கு சிம்பு விரிவான பதில்

கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அப்படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
அஜித் ரசிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, படம் வெளியானவுடன் இயக்குநர் அட்லீ, அனிருத் ஆகியோருடன் இணைந்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'என்னை அறிந்தால்' பார்த்தார்.
அதற்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்துள்ளேன். 'தல' அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என்று சிம்பு கருத்து தெரிவித்திருந்தார்.
சிம்புவின் இந்தக் கருத்தால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உண்டானது. 'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று சாடும் வகையிலான ஹெக்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்டேன். அதற்கு, "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முன்பு தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது எப்போதாவதுதான் நல்ல படங்கள் வருகின்றன.
சினிமாவில் நிறைய அழுத்தம் இருக்கிறது. 'யு' சான்றிதழில் மட்டும்தான் படம் இருக்க வேண்டும், காமெடியாக இருக்க வேண்டும், பேய் படம் என்றால் பார்க்கிறார்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் அவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் தற்போது குறைவாக இருக்கிறது. நமது கட்டமைப்பு அந்த மாதிரி இருக்கிறது.
இந்த மாதிரியான நெருக்கடியான சூழலில், எல்லா படங்களிலும் குறைகள் என்பது இருக்கத்தான் செய்யும். குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்கிறது, அதற்காக அக்குழந்தையை அடித்து, துன்புறுத்தி, மிரட்டி சொல்லிக் கொடுப்பதில்லை. அக்குழந்தையிடம் நாம் எப்படி சொல்லிக் கொடுப்போம், அதுதான் என்னுடைய கருத்து.
'ஐ' படம் எவ்வளவு பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் எடுத்திருந்தார்கள். அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை விட்டுவிட்டு போகலாம். இல்லையென்றால் சொல்கிற விதம் என்று ஒன்று இருக்கிறது. இது 'கேவலம்', 'வேலைக்கு ஆகாது' என்று சொல்லும்போது அவ்வளவு பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்?
இதை நாம் சொன்னால், உடனே எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்கிறார்கள். 'அஞ்சான்' படம் சரியாக போகவில்லைதான், இயக்குநர் லிங்குசாமி ஏதோ ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டார். உடனே லிங்குசாமியை அவ்வளவு கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதாவது கேட்க முடியுமா, சொன்னேனா... இல்லையே. அது அவங்களோட கருத்து சுதந்திரம்தானே.
அதுபோலவே எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நான் என் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னால், அதை பெரிய பூகம்பமாக உருவாக்குகிறார்கள். அதான் ஏன் என்று தெரியவில்லை" என்றார் நடிகர் சிம்பு.

நன்றி - த இந்து 


  • பிடிக்காதவன மெண்டல் நு சொல்றது கருத்து சுதந்திரம் ..உங்களுக்கு பிடிச்சிருக்கு எல்லாருக்கும் பொதுவாக பிடிக்கும்னு சொல்லிட்டு போ ..அத விட்டுட்டு தேவையில்லாமல் வாய் சவடால் விட்டு வம்புக்கு இழுக்கிறது அப்புறம் கருத்து சுதந்திரம்னு படுத்துகிறது ..முன்னாடி எப்ப நல்ல படம் வந்துச்சு?..ஒரே மாறி படாத எடுத்து வச்சிட்டு நல்ல படம்னு சொல்லிகிறீங்க ..மேல் தட்டது மக்களை படம் எடுத்து ஓடும் போது அது நல்ல படம்..வெற்றிமாறன் சொல்வது போல் போர்முல படம் தான எடுத்தீங்க ..இங்கு உள்ள வாழ்க்கை முறையை வித்தியாசமான உத்தியுடன் காட்டினால் அது மொக்க படம்...நேர்மையா படம் எடுத்த ஓடும் போர்முல எல்லாம் மிக்ஸ் பண்ணா ஓடாது...
    Points
    175

    2 days ago ·   (32) ·   (4) ·  reply (0) · 
       

    •  Raghu Nathan at businessman 

      அப்போ எனோட கருது சுகதிரம் இது - - படம் ரொம்ப ரொம்ப சுமார் , (அருண் விஜய் - நல்ல நடிப்பு ), (அஜித்- பரவில்லை) ( த்ரிஷா & அனுஷ்க டோடல்லி வேஸ்ட்) லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்னோட பணம் வேஸ்ட். இதுக்கு பில்லா 2 -பரவில்லை.

      2 days ago ·   (90) ·   (34) ·  reply (2) · 



      • வில்லு, ஆதி?

        2 days ago ·   (17) ·   (8) ·  reply (0) · 


        • Prakash  

          முதலில் தமிழ் எழுத கற்றுக்கொள்ளுங்கள்

          a day ago ·   (2) ·   (1) ·  reply (0) · 



        • சிம்பு சார் சொன்னது சரியே....

          2 days ago ·   (24) ·   (72) ·  reply (0) · 


          • vasanth  

            படம் நல்ல இருக்குன நல்ல இருக்குனு சொல்லிடு போ.அத விடு படம் நல்ல இலன்னு சொல்றவங்கள நி எப்டி மெண்டல் நு சொல்லாம்..

            2 days ago ·   (41) ·   (4) ·  reply (0) · 


            • Karthik  

              சின்ன தல சொன்ன சரியாய் தன இருக்கும் நோ ப்ரொப்லெம் சிம்பு நாங்க இருக்கோம்

              2 days ago ·   (43) ·   (232) ·  reply (1) · 


            • Pravin  

              Ivar koorum karuthu sudandiram matravargalai batikakodatu oru madatai kuripitu adai pinpatrubavargal ellam mental endru vetru madatinar korinal natil pracanai varada. Karuthu endu enda karumatai vendumanalum kooralama?

              2 days ago ·   (2) ·   (7) ·  reply (1) · 


              • leon  

                Simbu sir appa kathi movie nalla padam illaya

                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


              • vikki  

                இவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாம். அதற்காக அவருக்கு பிடித்ததெல்லாம் மற்றவர்களும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவர் பாணியிலே சொன்னால், புத்தி உள்ளவர்கள் இது போல பிதற்ற மாற்றார்கள்

                2 days ago ·   (60) ·   (9) ·  reply (1) · 


                • abdul  

                  சூப்பர் விக்கி சிம்பு கு பிடித்தால் மட்டவற்கும் பிடிகவெஅண்டும் எஆன்று அவசியமில்லை

                  a day ago ·   (10) ·   (1) ·  reply (0) · 



                • நான் ஒத்துகொள்கிறேன். உங்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. நாங்கள் யாரும் தடுக்கவில்லை. அனால் நீங்கள் சொல்லும் கருத்துக்குள், கருத்தே இல்லையே. அதுதான் பிரெச்சனை. "மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்." இதில் என்ன கருத்து இருக்கிறது? மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நல்லது எது, கேட்டது எது என சிந்திக்க கூட தெரியாது. இதில் என்ன கருத்து உள்ளது? சிம்பு அவர்கள் கருத்து உள்ள கருத்தை தெரிவித்தால் நாங்கள் யாரும் கடுப்பாக மாட்டோம். காரணமில்லாமல், கருத்தில்லாமல், எவரைப்பற்றியும் கவலைப்படாமல், கருத்தில்லா கருத்தை தெரிவித்தால் கடுப்பாகிபோவோம் நாங்கள்.
                  Points
                  2255

                  2 days ago ·   (91) ·   (19) ·  reply (3) · 



                  • மனநலம் பாதிக்க பட்டவர் என்று சொன்னது விஜய் ரசிகர்களை தான். அஜித்தின் எந்த படம் வந்தாலும் அவர்களுக்கு பிடிக்காது. படம் பார்க்காமலே படம் மொக்கை என்று கருத்து சொல்லும் மனநலம் பாதிக்க பட்ட விஜய் ரசிகர்கள் . சூப்பர் ஸ்டார் டைட்டில் விஜய்க்கு கிடைப்பதற்கு ரஜினியை கிண்டல் செய்பவர்களும் அவர்களே . ஆகா சிம்பு சொன்ன மனநலம் சரி இல்லாதவர்கள் அந்த விஜய் ரசிகர்களே..

                    a day ago ·   (30) ·   (26) ·  reply (1) · 


                    • anand  

                      அஜித் ரசிகர்கள் லேசுபட்டவர்கள் இல்லையே !!! விஜய் படம் வந்தால் அவர்கள் இதற்குமேல் எதிர்மறை கருத்தை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலே சொல்ல அரம்பிகிறதை எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் . இரண்டு தரப்பும் இதை நிறுத்தவேண்டும்.

                      about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 



                    • கருத்தே இல்லை என்றால் நீங்கள் நீங்கள் ஏன் கடுப்பாக வேண்டும்???? அதை கண்டுகொள்ளாமல் விடலாமே? உங்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் நடிகர்களுக்கு கடுப்பு சுதந்திரமா???

                      2 days ago ·   (12) ·   (21) ·  reply (1) · 



                      • சிம்பு மாதிரி நானும், "நீங்க சொல்றத சொல்லிட்டு போங்க நான் செய்யறத தான் செஞ்சிட்டு இருப்பன். நீங்க சொல்றத எல்லாத்தையும் காதில போட்டுக்க மாட்டன். அப்படியே தொடசிவிட்டுடு பொய்கிட்டெஇருப்பென்."

                        a day ago ·   (8) ·   (4) ·  reply (0) · 



                      • அருமை ...சரியா சொன்னீர்கள் ...

                        2 days ago ·   (16) ·   (7) ·  reply (0) · 



                      • உங்க படம் எந்த லிஸ்ட்ல இருக்குது ?
                        Points
                        135

                        2 days ago ·   (30) ·   (3) ·  reply (0) · 


                        • geethu  

                          ஆமா பா நாம எது சொன்னாலும் அப்படி தான் "காய்ச்ச மரம் தான் கல்லடி படும்"

                          2 days ago ·   (7) ·   (2) ·  reply (0) · 


                          • Kannan  

                            ஓடாத மொக்கை படங்களை "வெற்றி நடைபோடுகிறது"னு வாய் கூசாமல் சொல்கிறீர்களே.. பின் நாங்கள் எப்படி உண்மையை சொல்லாமல் இருக்க முடியும்? இக்காலகட்டத்தில் Television media is completely waste..
                            Points
                            3145

                            2 days ago ·   (21) ·   (7) ·  reply (0) · 



                            • "லூசு பெண்ணே" பாட்டைமனசில வச்சி பேசி இருப்பார்
                              Points
                              690

                              2 days ago ·   (12) ·   (2) ·  reply (0) · 



                              • தல படம் சூப்பர் நண்பர்களே சிம்புவுக்கு சப்போர்ட் பண்ணுங்க

                                2 days ago ·   (57) ·   (40) ·  reply (1) · 


                              • Ravi  

                                இப்போ தா நீ தெளிவா பேசி இருக்க , அது அவங்களுக்கு பொறுக்கல

                                2 days ago ·   (24) ·   (17) ·  reply (0) · 


                                • selva  

                                  இதே கருத்த மற்ற நடிகர்கள் படத்துக்கும் sollirunththa கருத்து ஏத்துக்கலாம் .

                                  2 days ago ·   (20) ·   (7) ·  reply (1) · 


                                  • Jebaraj  

                                    சிம்பு தல பேன் தல படம் பத்தி மட்டும் தான் சொல்லுவாரு

                                    a day ago ·   (12) ·   (13) ·  reply (0) · 


                                  • praveen  

                                    சும்மா வாய் இர்ருகுனு பேசகூடாது ........உங்க படத்ஹா மொதல பாத்துட்டு ஏன்னா நு சொல்லுங்க

                                    2 days ago ·   (20) ·   (4) ·  reply (0) · 


                                    • shankar  

                                      இந்த படம் நல்ல படம் என்று சொல்லலாம்.இதை ஒரு சினிமா பார்பவனாக மட்டும் சொல்ல முடியும்.ஒரு வெறி பிடித்த ரசிகன் எப்படி வேண்டுமானாலும் சொல்வான் அப்போது அதற்க்கு எதிராக கமெண்ட் வந்தாலும் பொருது கொள்ள தான் வேண்டும்.ஆனால் இந்த படம் வெகு நாளுக்கு பிறகு வந்த ஒரு நிஜமான நல்ல படம்.
                                      Points
                                      13610

                                      a day ago ·   (35) ·   (32) ·  reply (0) · 



                                      • நீ சொன்னா கரெக்டு தான் தல....

                                        a day ago ·   (23) ·   (12) ·  reply (0) · 


                                        • dhinesh  

                                          என் சிம்பு நீங்க அவளோ பெரிய அப்படேகேரா? நீங்க சொன்ன தமிழ் மக்கள் பார்த்திடு வாங்கனு நினைப்பா? முதல்ல உங்க படம் oduthanngu பாருங்க...அப்புறம் அடுத்த படம் பற்றி சொலுங்க....?திரு வாய் அவர்களே....என் கருத்து சுதந்திரம்....

                                          a day ago ·   (39) ·   (13) ·  reply (0) · 



                                          • இந்த போட்டோவை பார்த்தால் எனக்கு என்ன புரிகிறது என்றால், "நீங்க சொல்றத சொல்லிட்டு போங்க நான் செய்யறத தான் செஞ்சிட்டு இருப்பன். நீங்க சொல்றத எல்லாத்தையும் காதில போட்டுக்க மாட்டன். அப்படியே தொடசிவிட்டுடு பொய்கிட்டெஇருப்பென்."
                                            Points
                                            2255

                                            a day ago ·   (11) ·   (0) ·  reply (0) · 


                                            • Felix  

                                              சினிமா உலகத விட்டு வெளிய நீங்கலாம் வரவே மாட்டிங்கலாடா எப்போ தாண்டா திருந்த போறீங்க.. இந்தியால சினிமா உலகம் எப்போ இல்லாம போகுதோ அப்போ தாண்டா தன்னோட குடும்பத்த பத்தி நீங்கலாம் யோசிபிங்க... கலைய ரசிக மட்டும் செய்கடா நாசமா போரவங்கலா....

                                              a day ago ·   (56) ·   (2) ·  reply (0) · 



                                              • படம் பிடிச்சுருந்தா நல்லாருக்குநு சொல்லு.. ஒரு சிலர்க்கு பிடிக்கும்.. ஒரு சிலர்க்கு பிடிக்காது.. வேட்டையாடு விளையாடு .. காக்க காக்க .. வாரணம் ஆயிரம் கலந்து எடுத்தா 150 ருபாய் பணம் கொடுத்து பார்க்கும் போது பிடிக்காமல் தான் போகும்.. எனக்கு பிடிக்கல.. நான் மனநலம் பாதிக்க பட்டவனா.. நான் முதுநிலை பட்டதாரி.. பேங்க் ஒபிபிசெர் .. உன் கருத்து என்னையோ அடுதவரையோ பாதிக்க கூடாது..

                                                a day ago ·   (128) ·   (34) ·  reply (2) · 


                                                • Jebaraj  

                                                  உங்க போஸ்ட் முதல படிக்க முதுநிலை பட்டதாரி

                                                  a day ago ·   (16) ·   (21) ·  reply (0) · 


                                                  • eswar  

                                                    Superர் j

                                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


                                                  • Jebaraj  

                                                    Dear Friends and Haters, First one think all of them,,, Yennai Arindhaal film is going on a Rock .. Blockbuster film of 2015, This is telling on All Cinema welfares and Cinema Scientists, But some Irritate Persons speaking about Simbhu. That is ANIL Kunjukals playing.. Not carrying about Small Vgay Mama Fans. Thala fans support Simbhu

                                                    a day ago ·   (62) ·   (62) ·  reply (0) · 



                                                    • இவரு படத்த மன நலம் பாதித்தவன் பார்த்தாகூட செத்துருவான்
                                                      Points
                                                      3665

                                                      a day ago ·   (75) ·   (49) ·  reply (0) · 



                                                      • ஆமோதிக்கிறேன்

                                                        a day ago ·   (2) ·   (17) ·  reply (0) · 



                                                        • தம்பி டி இன்னும் வரல!!!! மனிதன்
                                                          Points
                                                          405

                                                          a day ago ·   (25) ·   (0) ·  reply (0) · 


                                                          • raghu  

                                                            சிம்பு சார் நீங்க அத சொல்லகூடாது உங்கள நம்பி நெறைய தயரிபளர்கள் கடன்ல இருகண்க அத பாருங்க 4 படத்துக்கு மேல பாதில நடிக்கமாஇருக்கு பொய் தொழில பாருங்க

                                                            a day ago ·   (50) ·   (3) ·  reply (0) · 



                                                            • சிம்புவுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கு என்பதை நாமும் ஒத்துக்குறோம். ஆனா ஒன்னு-அதே மாதிரி மத்தவங்களுக்கும் கருத்து சுதந்திரம் இருக்குமா இருக்காதா? சிம்பு ஒரு உதவாக்கரை என்று சொன்னால் எனது கருத்துச் சுதந்திரத்தை சரிதான் என்று ஏற்றுக்கொள்வாரா? சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம். அதை அந்த அளவில் விட்டு விட்டு வேறு வேலை இருந்தாப் போய் பாருங்கப்பா. எனக்கு ஒரு ஆசை. 40 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களை நடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரே மூஞ்சியை திரும்ப திரும்பப் பார்ப்பதற்கு போர் அடிக்குது.கதாநாயகிகளை மாற்றுவது போல் நாயகர்களும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.கிழடு கெட்டை எல்லாம் குமரிகளோடு ஆடுறத பார்த்தா சகிக்கல.
                                                              Points
                                                              475

                                                              a day ago ·   (115) ·   (31) ·  reply (3) · 


                                                              • umar  

                                                                கரெக்ட் விஜய் அஜித் விக்ரம் ரஜினி கமல் எல்லாரும் 40 பிளஸ் இவங்க எஅள்ளரும் மாத்திடலாம்

                                                                a day ago ·   (21) ·   (4) ·  reply (1) · 



                                                                • பிடிக்கவில்லை என்றால் எதற்காக பார்க்கவேண்டும்? என்ன கட்டாயம்? வீட்டில் இருக்கலாமே?

                                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



                                                                • அய்யயோ என்னால சிரிப்பா அடக்கவே முடியலையே...

                                                                  a day ago ·   (8) ·   (5) ·  reply (1) · 


                                                                • vimal  

                                                                  அருமையான கருத்து....

                                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


                                                                • kalai  

                                                                  சிம்பு யு டோன்ட் வொர்ரி summa

                                                                  a day ago ·   (15) ·   (26) ·  reply (1) · 



                                                                  • டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி, டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி,

                                                                    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 


                                                                  • Kannan  

                                                                    ஏன் ஜால்ரானு புரியுதா? இவரும் கெளதம் மேனன்'ம் ரொம்ப நாட்களா தயாரிச்சுட்டு இருக்கிற "சட்டென்று மாறுது வானிலை" படத்துக்காக தான் இந்த ஜால்ரா..