Showing posts with label கோபிநாத். Show all posts
Showing posts with label கோபிநாத். Show all posts

Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!