Showing posts with label கீர்த்தி சுரேஷ். Show all posts
Showing posts with label கீர்த்தி சுரேஷ். Show all posts

Friday, October 07, 2016

ரெமோ - சினிமா விமர்சனம்

Image result for remo stills


ரஜினி , விஜய்  ரொம்ப காலம் சிரமப்பட்டுப்பிடித்த ஆல்செண்ட்டர் வசூல் ஹீரோ இமேஜை வெறும் 4 வருடங்களில்  பிடித்த  சிவகார்த்திகேயன் அடுத்த கட்டமாக கமல் பாணியில்  கமர்சியல் வித் கலை +களை + கல்லா கட்டும் படம் தான் ரெமோ


கதை ரொம்ப சிம்ப்பிள். ஆல்ரெடி  பெற்றோரால் திருமணம் ஃபிக்ஸ் ஆன ஹீரோயினை ஹீரோ  லவ்வறார், ஹீரோயின் மனசில் தான் இருக்கோமா? இல்லையா? என தெரிஞ்சுக்க  ஹீரோயின் டாக்டராக ?!! ஒர்க் பண்ணும் ஹாஸ்பிடலில் நர்சாக நச் ஃபிகராக பெண் வேடம் இட்டு டிராமா போடறார், கடைசில  சேர்ந்தாரா? படம் கரை சேர்ந்ததா? பார்ப்போம்

ஹீரோவா ஆல் செண்ட்டர் ஹிட் ஹீரோ  சி கா. டைட்டிலில் காட்டும் டிசைனிங் கூட ரஜினி ஸ்டைல். வழக்கம் போல்  ஸ்க்ரீன் பிரசண்ட்டேசனில் கலக்கும் சி கா இதில் ஒரு படி முன்னேறி பெண் வேடத்தில் பின்னிப்பெடல் எடுக்கிறார்.இது வரை தமிழ் சினிமா ஹீரோக்களில் பெண் வேடம் இட்டு கலக்கிய கமல் , பிரசாந்
த்தை  அசால்ட்டாக  ஓவர் டேக்குகிறார். சபாசு


ஹீரோயினாக சிரிக்கும்போதும் , அழும்போதும் முகத்தில் எட்டு போட்டு காட்டும் ஓவர் மேக்கப்  லட்டு கீர்த்தி சுரேசு. இவர் ஒப்பனை பெண்ணை அவசியம் மாற்றியே ஆகனும். முடியல. சேலை கட்டிய  சி கா உடன் இவர் வரும் காட்சியில்  பாஸ் மார்க்  வாங்கவே படாத பாடு படறார்.


 காமெடிக்கு சி கா போதாதுன்னு  மொட்டை ராஜேந்திரன் , சதீசு, யோகி பாபு

அதிலும்  யோகி பாபு  சி கா வுக்கு ரோஸ்  தரும் காட்சி , அவரைத்தேடி அலையும் காட்சி கலக்கல் காமெடி

ரசூல் பூக்குட்டியின்   தயவில்  சி கா  தன் குரலை பெண் போல் மாற்றி பேசி இருக்கார். கமல் , பிரசாந்த் இருவருக்கும் இந்த லக் இல்லை. அந்த கால கட்டத்தில்  டெக்னாலஜி இவ்ளோவ் வளரலை

அனிரூத் இசை ஓக்கே , பிஜிஎம் பக்கா

ஒளிப்பதிவு  பி சி   ஸ்ரீ ராம். கலக்கல்


ஒரு கமர்சியல்  சினிமா வுக்கு என்ன என்ன் வேணுமோ எல்லாமே இருக்கு. இயக்குனர்  ஹிட் ஆக்கிட்டார்.

லாஜிக் மிஸ்டேக்ஸ் +  இயக்குனரிடம் சில கேள்விகள்


1   அவ்வை சண்முகி படத்தில் இருந்து  40 %  சீன்கள்  சுட்டது  ஏனோ? ஒரு சீனில் பெண் வேடம் களைத்து  காரில் ஏறும்  ஹீரோ முக்த்தில்  அரும்பு மீசை எப்டி வரும்? ஒட்டு மீசை தானே இருக்கனும்? அல்லது க்ளீன் சேவ் முகம் இருக்கனும்


2   ஒரு லேடி டாக்டர் எந்த மாதிரி   உடை அணிவார் என்பது இய்க்குந்ருக்கு  தெரியாதா? கீர்த்தி அணியும்  உடைகள் அபத்தம்

3  ஹீரோயினுக்கு ஃபிக்ஸ்  ஆன மாப்ளை மஞ்ச  மாக்கானை விட மோசமா காட்டியது ஏனொ?

4  கிட்டத்தட்ட 18 ரெப்ரன்ஸ் சீன்கள் வருது. கை தட்டல் வாங்க குறுக்கு வழி?

5  க்ளைமாக்சில் விண்ணைத்தாண்டி வருவாயோ படம் போல்  அது வரை  ஓடியதெல்லாம் சினிமா சூட்டிங் என முடிச்சிருக்கலாம். அதுக்கான முன்னோட்டம் தான் கே எஸ் ரவிக்குமார் காட்சிகள். ஏனோ பேக் அடிச்ட்டாக



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஹீரோயின் ஓப்பனிங் சீன்ல விசில் ஊதுது.ஊ ஊ ஊ.குறியீடு#ரெமோ

2 லவ் சொல்ல ஹீரோ ரிகர்சல்.வாரணம்1000 சூர்யா ரெப்ரன்ஸ்


3  தமிழ் சினிமாஹீரோஆக ஹீரோ ஆசைப்படும் சீன்.தாவணிக்கனவுகள் கே பாக்யராஜ் ரெப்ரன்ஸ்

குஷி என் இடுப்பைப்பார்த்தே டயலாக் விஜய் ரெப்ரன்ஸ்.

கமல்,பிரசாந்த் இவர்களை விட சி கா வின் பெண் வேடம் குட்.பாடி லேங்க்வேஜ் பக்கா

பாட்ஷா மெடிக்கல் சீட் வாங்கும் டயலாக் மிமிக்ரி.ரஜினி ரெப்ரன்ஸ்

உள்ளத்தை அள்ளித்தா அழகிய லைலா பாட்டு சீன் ரீமிக்ஸ் ,ரம்பா ரெபரன்ஸ் அபா"ரம்பா"

தும் தத்தா

ஆ.எதைப்பார்த்தே? .ட்விட்டர் ரெப்ரன்ஸ்

9 ரெமோ.இடை வேளை.பிரமாதமும் இல்லை.மோசமும் இல்லை.OK ரகம்.நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஹீரோ லவ்வும் கதை

10 பஸ் ல போவாளா?மாட்டாளா? டாஸ் போடுவோம்.ஐ தல வந்துடுச்சு .அஜித் ரெப்ரன்ஸ்

11 வாடி என் தமிழ்ச்செல்வி பாட்டில் கில்லி விஜய் ரெப்ரன்ஸ்.டான்ஸ் பக்கா

12 கண்ணா மூச்சி ரேரே
ட்விங்க்கிள்ட்விங்க்கிள்லிட்டில் ஸ்டார்
மகிழ்ச்சி
,அஜித் ,விஜய் ,ரஜினி ரெப்ரன்ஸ் ்.எப்டி வரிசை? அது

13 வில்லன் டூ ஹீரோ =உனக்கு காதல் மன்னன் னு நினைப்பா?நிச்சயம் ஆன பொண்ணு தான் வேணுமா? .அஜித் ரெப்ரன்ஸ்




நச் டயலாக்ஸ்

1 FEELஆகனும்னா அந்த மாதிரி பொண்ணு வேணும்

"அந்த" மாதிரி பொண்ணா?


2  அம்மா.எத்தனைநாள் தான் உன் கையால அடிவாங்குவது? ஒயிப் கையால அடிவாங்க ஆசை

மேரேஜ் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு?

27 வயசு ஆகுது.இந்த ஒரு தகுதி போதாதா? # ரெமோ

4 வருத்தப்படாதடா

நான் ஏண்டா வருத்தப்படனும்? நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவன் டா # ரெமோ

5 பொண்ணுங்களோட புல் டைம் வேலையே பசங்களை அழவைப்பதுதானே?


யாரு? அது? சிஸ்டரா?

நர்ஸ் டிரஸ் பார்த்தாலே தெரியல?சிஸ்டர்தான்
டேய்.உன் சிஸ்டரா?

மிஸ்.அவரு ரூமுக்கு கூப்பிடறாரே?

ஏம்மா.இண்ட்டர்வ்யூக்குதான்


இந்தப்பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றது தான் கஷ்டம்.கன்பியூஸ் பண்றது ரொம்ப ஈசி

9}     2 பேர் மோதிரம் மாத்திக்கறது கல்யாணம் இல்லை.மனசை பரஸ்பரம் மாத்திக்கறது

10 எல்லாப்பசங்களையும் குத்தம் சொல்லாதீங்க.லவ்வுக்காக உயிரைக்கொடுக்கற பசங்களும் இருக்காங்க.உயிரைக்கொடுத்து லவ் பண்ற பசங்களும் இருக்காங்க

11  DR.ஸ்டெதஸ்கோப்ப காதுல மாட்டலை

ம்.காதல்ல மாட்டிட்டாங்க போல.

12 இந்த பஸ் லயே 2 பேர் தான் அழகு
1 இந்த ரோஸ்
2,இந்த நர்ஸ்

13 வில்லன் -சில பொண்ணுங்களை கழட்டி.விட எதுவேணா செய்யலாம்.கல்யாணம் பண்ணிக்க எது வேணாலும் செய்வேன்


14  நான் மட்டும் பல்டி அடிக்கலைன்னா அன்னைக்கு அவ என்னை கழட்டி அடிச்சிருப்பா

15 சிஸ்டர்.என் பக்கத்துல வந்து படுங்க

சாரி டாக்டர்.கல்யாணம் வரை யார் கூடவும் படுக்க மாட்டேன்னு அம்மாக்கு சத்தியம்

16  எனக்கு பதில் சொல்லல?

இதோட முடிச்சுக்கலாம்
அழகான பொண்ணுங்க எல்லாம் முடிச்சுக்கலாம்னு சொல்லாதீங்க.பிடிச்சுக்கலாம் சொல்லுங்க

17  என்னை ஏன் பிடிச்சிருக்கு?

தெரில.நீ தான் என் கண்ணுக்குள்ளே தேடிச்சொல்லனும்


18  கையேந்தி பவன் ல யாரோ ஆர்டர் பண்ணின மசால் தோசை நமக்கு கிடைப்பதுதான் யாருக்கோ நிச்சயம் ஆன பொண்ணை நாம லவ் பண்றது


19 ஏண்டா இப்டி குடிச்சிருக்க?

அம்மா.நீ எனக்கு கேசரி செஞ்சு கொடுத்த.அவ எனக்கு அல்வா கொடுத்துட்டா

20 ஆம்பளை அழக்கூடாதுடா

அம்மா.ஆம்பளைங்களை அழ விடக்கூடாதுன்னு பொண்ணுங்க கிட்டே சொல்லு

21  இந்த உலகத்துலயே கலப்படம் இல்லாதது பசங்களோட மனசு தான்

22 வில்லன் = நீ ஒரு தரை டிக்கெட்

ஹீரோ =அதை ஒரு அரை டிக்கெட் நீ சொல்லக்கூடாது

 23  பேசிக்கலா நான் பாக்சர்

டேய்.பாஸ்கர் .உங்களுக்கெல்லாம் வெறும் கராத்தே தான் தெரியும்.எனக்கு மான் கராத்தே தெரியும்

24 என் அப்பா செத்தப்பக்கூட இவ்ளவ் அழலை.உன்னைப்பாத்த அன்னைக்கு அவ்ளவ் அழுதேன்


25 பசங்க செய்யற பாதி தப்புக்குக்காரணம் இந்தப்பொண்ணுங்கதான்.உலகத்துல இதுஎந்தப்பொண்ணுக்குமே தெரியல

26  என்னைப்பார்த்தா லூஸ் போல தெரிதா?

பார்த்தாத்தெரியல.பேசினாத்தெரியுது


27  அந்தப்படத்தை விஜய் டிவி காரன் திருப்பித்திருப்பி போடுவான் .





சி.பி,கமெண்ட் -ரெமோ -முன் பாதி கலகலப்பு ,பின் பாதி சுமார்.காதல் மன்னன் + அவ்வை சண்முகி ,விகடன் =40,ரேட்டிங்=2.5 / 5, கலெக்சன் அள்ளிடும்.



Thursday, August 06, 2015

இது என்ன மாயம் -திரை விமர்சனம்:

காதல் விஷயத்தில் மாய நாடகங்கள் நுழைந்தால் என்ன நடக்கும்? அதுதான் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்திருக்கும் ‘இது என்ன மாயம்’.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு மேடை நாடகம் போட்டு வருகிறார் நாயகன் அருண் (விக்ரம் பிரபு). மக்களிடையே நாடகத்துக்கு சரியான வரவேற்போ, லாபமோ இல்லாததால் வேறு என்ன தொழிலைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்ட்டில் எதிர்முனையில் அமர்ந்திருக்கும் லுத்புதின், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பெண் கோபமாகத் திட்டுவிட்டு புறப்படுகிறாள். இதை கவனிக்கும் விக்ரம் பிரபு, ஃபீலிங்கோடு அமர்ந்திருந்த லுத்புதின் அருகே சென்று, ‘உன் காதல் வெற்றியடைய நாங்க கியாரெண்டி’ என்று உத்தரவாதம் கொடுக்கிறார்.
மேடையில் நாடகம் போட்டவர்கள், அப்போது முதல் அந்தக் காதலை சேர்த்து வைக்க நாடகம் போடுகிறார்கள். திட்டம் வகுத்தபடி அவர்களை காதல் ஜோடிகளாக்கி வெற்றியும் அடைகிறார்கள். பின், அதையே வருமானம் ஈட்டும் தொழிலாகவும் மாற்றுகிறார்கள். தொடர்ந்து காதல் ஜோடிகளை இணைத்து வைக்கும் வேலையில் பிஸியும் ஆகிறார்கள். இந்தச் சூழலில் இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு சந்தோஷ் (நவ்தீப்) தான் நேசிக்கும் மாயா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைப் பற்றி விக்ரம் பிரபு குழுவினரிடம் சொல்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். அந்தப் பெண் யார் என்று விக்ரம் பிரபுவுக்குத் தெரியவரும் இடத்தில் ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சிக்கான காரணமும் விக்ரம் பிரபு எடுக்கும் முடிவும் மீதிக் கதை.
ஒருதலைக் காதலை உண்மைக் காதலாக மாற்ற விக்ரம் பிரபு தன் சகாக்களுடன் சேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ரசிக்க வைக்கிறது. இது முதல் முப்பது நிமிடங்களைக் கலகலப்பாக நகர்த்தவும் செய்கிறது. குறிப்பாக சார்லி, ஆர்.ஜே. பாலாஜி இருவரும் செய்யும் காமெடி அட்டகாசம் கலகலப்பு.
கதை கொச்சி கல்லூரிக்கு நகரும் இடத்தில்தான் திரைக்கதையில் நடுக்கம் ஏற்படுகிறது. தமிழ் சினிமா பல நூறு முறை பார்த்துவிட்ட கல்லூரி காதல் பின்னணி. அது தரும் அலுப்பு போக, கல்லூரியில் ஜூனியர் சீனியர் சண்டை, கிரிக்கெட் போட்டி என்று குறைவில்லாத க்ளீஷேக்கள். விக்ரம் பிரபு தன்னை அந்தக் கல்லூரியின் நட்சத்திரமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இடங்கள் எல்லாம் தேவையா? பொழுதுபோக்குப் படத்துக்கு ஹீரோயிஸம் தேவைதான். ஆனால் கொஞ்சமாவது புதிதாகச் சிந்திக்கக் கூடாதா? இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் கற்பனைக்கு என்ன ஆயிற்று?
காதல் காட்சிகள், பாடல்கள், சண்டை, தன்னுடைய காதல் விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நண்பர்களைச் சந்தித்துக் கேட்டுக்கொள்ளும் இடம், தன்னுடைய சங்கடத்தை மறைத்துக்கொண்டு நவ்தீப்புக்கு உதவும் இடம் இப்படி எல்லா இடங்களிலும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் தருணங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் முதல் படம். நடிப்பிலும், தோற்றத்திலும் கவர்கிறார். கதைக்கும் கச்சிதம். கல்லூரி மேடையில் பாடகியாக அறிமுகமாகும் இடம் தொடங்கி காதலில் கலப்பது, காதல் தோல்வியைச் சந்திக்கும்போது கண் கலங்குவது என்று கலக்குகிறார்.
நவ்தீப்புக்கு லவ்லீ பாய் ரோல். நடிப்பில் குறையொன்றுமில்லை. நாசர், அம்பிகா இருவருக்கும் படத்தில் பெரிதாக வேலை இல்லை.
படத்தின் நாயகியைப் போல இன்னொரு அழகு ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் அவர் பெரிதாக மெனக்கெடவில்லை. அதேபோல நீரவ் ஷா ஒளிப்பதிவும், ஆன்டனியின் படத்தொகுப்பும் சிறப்பு. இவ்வளவு இருந்தும் மிகமிக மந்தமாக நகரும் திரைக்கதையும், புதுமையில்லாத பல காட்சிகளும் படத்தை மாயம் செய்ய விடாமல் தடுக்கின்றன.

thanx - the hindu