Showing posts with label கிளாமர். Show all posts
Showing posts with label கிளாமர். Show all posts

Saturday, March 02, 2013

டாப்ஸி தங்கச்சி ஷாகுன் ஃபிகர் தேறுமா?

டாப்ஸின்னா 'தவம் இருப்பவள்’னு அர்த்தம். சவுத் இந்தியா ஹீரோயின்கள்ல நான்தான் பெஸ்ட்னு பேர் வாங்கணும்னு தவம் இருக்கேன்னு வெச்சுக்கலாம்!''- டாப்ஸி பளிச் புன்னகையுடன் சொல்வதை ஆமோதிப்பது போல அவரது நெற்றியில் விழுந்து புரள்கிறது சுருள் கூந்தல்.


 
 ''அப்போ சாஃப்ட்வேர் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தது நல்ல முடிவுன்னு சொல்லுங்க...''



''நிச்சயமா! நைன் டு ஃபைவ் வேலை எனக்கு ரொம்ப சீக்கிரமே போர் அடிச்சிருச்சு. அதான் சினிமா வாய்ப்பு கிடைச்சதும் ஓடி வந்துட்டேன்.ஆனா, எனக்கு மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமாவுக்கு வந்ததால், அதை மட்டும் மிஸ் பண்றேன். மத்தபடி... ஐ லவ் சினிமா!''  



''ஆனா, கிட்டத்தட்ட நடிக்கிற எல்லா படங்களிலும் பொம்மை மாதிரிதான் வந்துட்டுப்போறீங்க... இன்னும் பளீர் பெர்ஃபார்மன்ஸ் உங்ககிட்ட இருந்து வரலையே?''


''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! சும்மா ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு என் கிட்ட பேச வர்ற பசங்க எல்லாம், ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுற அளவுக்கு மொக்கை போடுவேன். ஆனா, 'ஆடுகளம்’ ஐரீனைப் பார்த்தா, உங்களுக்கு அப்படியா தெரிஞ்சது? ராத்திரி தூங்கிட்டு இருக்கிறப்ப எஸ்.எம்.எஸ். டோனுக்கே பதறி எழுந்திரிக்கிறவள் நான். ஆனா, இப்போ 'முனி’ பார்ட் 3’ படத்தில் நடிக்கிறேன். பேய்ப் படம் பார்க்கக்கூடப் பயப்படுற நான், இப்போ பேய்ப் படத்திலேயே நடிக்கிறேன். ஒரு ஹீரோயினுக்கு ஒவ்வொரு படத்திலும் கிளாமர், லவ்வர் கேர்ள், சென்டிமென்ட்னு ஸ்கோர் பண்ண ஏதோ ஒரு ஸ்கோப்தான் இருக்கும். அதுல மிஸ் பண்ணாம நல்ல பேர் வாங்கினாலே, பெரிய விஷயம். கொஞ்ச நாள் காதலிச்சுட்டு, அப்புறமா சீரியஸா நடிக்கலாம்!''



''கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்களே... ஏன்?''



''கல்யாணம் ரொம்பக் கஷ்டம். லைஃப் முழுக்க ஒருத்தரோடவே வாழணும்னா ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா இருக்கணும்.  மனசு முழுக்க மகிழ்ச்சி இருக்கணும். அப்படி என்னை ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா வெச்சிருப்பார்னு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி ஒருத்தரை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு ஆள் கிடைச்சா, கல்யாணம் பண்ணிக்குவேன். ஒருவேளை சிக்கலைன்னா, கடைசி வரை நோ கல்யாணம்!''
''உங்களைப் பத்தி நீங்களே ஒரு ரகசியம் சொல்லுங்க..?''



''என்னைப் பத்தி இல்லை... என் தங்கச்சி பத்தி சொல்லவா? என் தங்கச்சி ஷாகுன் காலேஜ் முடிச்சுட்டு வேலைல  இருக்கா. அவளுக்கும் நடிக்க ஆசை. இன்னும் கன்ஃபர்ம் ஆகலை. ஆனா, சீக்கிரமே நடிப்பா. வர்ற ஆஃபர்ல எது பெஸ்ட்டோ, அதைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உதவுவேன். அப்புறம் இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் வாங்குறது அவ சாமர்த்தியம்!''



''ஏற்கெனவே அனுஷ்கா, இலியானா, சமந்தா, காஜல்னு ஏகப்பட்ட போட்டி... இதுல வீட்ல இருந்து வேற ஆளைக் கூட்டிட்டு வர்றீங்களே?''


  
''ஒரே விஷயம்தான்... காஜல், இலியானா, தமன்னா, அசின்... இப்போ என் தங்கச்சி... யாரா இருந்தாலும் இந்த டாப்ஸி சமாளிப்பா!''


''சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?''  



''காஜல் ரொம்ப ஸ்வீட். ஜீவா, ஆர்யா ரொம்ப க்ளோஸ். தனுஷ்கூட இப்பவும் டச்ல இருக்கேன். அஜித், நயன்தாராவும் பழக்கம்தான். எனக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க!''


''பார்த்ததில் பிடிச்ச படம்?''


''பர்ஃபி. ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. எந்த மசாலாவும் இல்லாம இதயம் தொட்ட படம்.''


நன்றி - விகடன்

Tuesday, May 01, 2012

கிளாமர் இல்லாம பொது வாழ்க்கையில் இருக்க முடியாது -ஐ பி எல் அழகி அர்ச்சனா விஜயா! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ5Hfvj7zMeLVT7U-8uUh5hOn4CXqL9HB9hyd545JG7g-64Yp_vgChFFeN_ZOyBYDbT9wP60IxNm7uoYgJtW6KvoWt1o6ijqDaPmNTMgLYg4IjGersXC3rby6Zt_JkSzSt-Gg0NdaCqq2O/s400/Archana_Vijaya_Hot.jpg 

சிக்ஸர்கள், சியர் கேர்ள்ஸ், ஒரு பந்து நான்கு ரன்கள் பதற்றம்... இவை போக... இந்த ஐ.பி.எல். பக்கம் கவனம் ஈர்க்கும் கவர்ச்சி ராக்கெட்... அர்ச்சனா விஜயா!
 அழகுப் பெண்ணின் கிரிக்கெட் கமென்ட்ரிக்கு அவ்வளவு மவுசு. ட்விட்டர், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாக்களில் ஹிட்ஸை அள்ளும் அர்ச்சனா விஜயா விடம் பேசினேன்

1. ''பேர்ல தமிழ் சாயல் இருக்கு. ஆனா, உங்க நடவடிக்கை எல்லாம் ஹாலிவுட் ரேஞ்ச்ல இருக்கே... நீங்க தமிழ்ப் பெண்ணா?''


சி.பி - ஹாலிவுட் ரேஞ்ச்னா எப்படி? ஏஞ்சலீனா ஜூலி மாதிரியா?

''ஹாஹா... எங்கே போனாலும் இதேதான் கேக்குறாங்க. ரொம்ப ஸாரி... நான் தமிழ்ப் பொண்ணு இல்லை. ராஜஸ்தான் என் பூர்வீகம். ஆனா, பிறந்தது, வளர்ந்தது,படிச்சது எல்லாமே கொல்கத்தா. இந்தப் பேர் எனக்குத் தென் இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொடுத்திருக்கு. அதனால வட இந்தியா, தென் இந்தியானு என்னைக் குறுகிய வட்டத்தில் அடைச்சுடாதீங்க.''


சி.பி - இளைஞர்களை அழகால கொலையா கொல்றதால கொல்கத்தவா? ஓக்கே. உங்களை எப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க முடியும்? ஹி ஹி ஹி 

2. ''எப்படிக் கிடைச்சது ஐ.பி.எல். காம்பியரிங் வாய்ப்பு?''

''கொல்கத்தாவில் படிச்சிட்டு இருந்தப்ப, சேனல் 'வி’ நடத்துன 'மிஸ் கிளாமரஸ்’ ரியாலிட்டி ஷோவில் ஜெயிச்சேன். தொடர்ந்து மாடலிங், விளம்பர வாய்ப்புகள். இந்தியாவில் நான் கேட் வாக் பண்ணாத ஃபேஷன் ஷோவே கிடையாது.


 அப்புறம் நியோ ஸ்போர்ட்ஸ் சேனல்ல கிரிக்கெட் வீரர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்படி அப்படியே ஐ.பி.எல். கிரவுண்டுக்குள் இறங்கிட்டேன். உலகப் புகழ்பெற்ற 'நினி’ பத்திரிகை 'ஐ.பி.எல்-ன் சிறந்த கண்டுபிடிப்பு அர்ச்சனா விஜயா’னு புகழ்ந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1PNgSxLUoDLYCWLLMO5ceRuhyHy_6cZmTKrZkmNcoJO7Y4Ld4uL181VhwogjxJuNa_4zRETouyDzsU_sYGgr6Wo8HX38lrXSQKOP3VUFi2sBLToC-bh4d5DPxpCaQMbV2agCccLonpg/s640/archana_vijaya_ipl_host_anchor_vj_hot_latest_photos_1.jpg
3. 3.''கிரிக்கெட் வீரர்களோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருப்பீங்க. ஏதாவது ஸ்கூப் சொல்லுங்க?''

''சச்சின் செம சீரியஸ் பார்ட்டினு நினைப்பீங்கள்ல... ஆனா, சார் செமஜாலி. என்னை முதல் தடவை பார்த்ததும் அவர் என்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா? 'எப்படி இவ்ளோ ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கா இருக்கீங்க?’ - அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கலை.


என்ன பதில் சொல்றதுனு தெரியாமத் தடு மாறிட்டேன். எப்பப் பேசினாலும் ஏதாச் சும் கலாய்ச்சுக் காமெடி பண்ணிட்டே இருப்பார் சச்சின். டோனி எப்பவும் அன் லிமிடெட் சேட்டை பார்ட்டி. நான் பேட்டி எடுக்கிற மாதிரியே நடிச்சுக் காட்டிக் கிண்டலடிச்சுட்டே இருப்பார்.


ஒரு தடவை டெல்லியில் இருந்தப்ப, தீபாவளி கொண்டாட நண்பர்களோட பட்டாசுகள் வாங்கிட்டு நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்துட்டார். யுவராஜ் சிங் என் பெர்சனல் ஃப்ரெண்ட். அவரோட எல்லா பிறந்த நாளுக்கும் அவர்கூட நான் இருப்பேன்.''



சி.பி - பொதுவா பசங்க கிட்டே பேசறப்ப  ஒரு முகமும், பொண்ணுங்க கிட்டே பேசறப்போ ஒரு முகமும் வெச்சிருப்பாங்க. அதுக்கு வி ஐ பிகளும் விதிவிலக்கல்ல..


4. ''ப்ளேயர்ஸ் உங்களுக்கு என்னல்லாம் கிஃப்ட்ஸ் கொடுத்திருக்காங்க?''

''அவங்க டி-ஷர்ட்டுகளைப் பரிசா கொடுத்திருக்காங்க. மத்தபடி நீங்க நினைக் கிற மாதிரி எதுவும் இல்லை.''


சி.பி - நாங்க நனைக்கற மாதிரி சாரி நினைக்கற மாதிரின்னா எது அது?


http://www.chitramala.in/photogallery/d/624815-1/Archana-Vijaya-Hot-Stills+_10_.jpg

5. ''சென்னையில் என்ன பிடிக்கும்?''

''முருகன் இட்லிக் கடை, மெரினா பீச். எப்போ சென்னை வந்தாலும் இது ரெண்டையும் மிஸ் பண்ண மாட்டேன்!''


6. ''கிரிக்கெட் கிரவுண்ட்ல இவ்வளவு கிளாமரா டிரெஸ் பண்றது அவசியமா?''


சி.பி - கிரிக்கட் பிடிக்காதவங்க ரசிக்கடுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான். 

''அப்படி கிளாமரா டிரெஸ் பண்ணி, அதைப் பலர் ரசிக்கிறதாலதானே இப்போ நீங்க வந்து பேட்டி எடுக்குறீங்க. பொது வாழ்க்கையில் கிளாமர் இல்லாம இருக்க முடியாது பாஸ்!''



 சி.பி - பொது வாழ்க்கைல கிளாமர் இல்லாம இருக்க முடியாதா? நல்ல வேளை.... ஹி ஹி
''7. கிரிக்கெட்டர்ல செம ஹாட் யாரு?''

''விராட் கோஹ்லி.''

(அவர் இன்னும் டி-ஷர்ட் கொடுக்கலையா?)


http://www.southmoviemasala.com/wp-content/uploads/Archana-Vijaya-Hot-Images-2.jpga


நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.

Monday, May 30, 2011

காஜல் அகர்வால்-ன் கலக்கல் கிளாமர் ,மிதக்கும் இளமை யில் மாவீரன் - சினிமா விமர்சனம்

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/04/Ram-Charan-Tej-Tamil-movie-Maaveeran-2011.jpg

மாமா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல உக்கார வைக்கறப்ப நைஸா ஒரு ஃபிரஸ் கிஸ் வாங்கிடலாம்னு முறைப்பையன் நினைப்பான். ஆனா சந்தர்ப்பம் சாதகமாகாது.. ஆனா விழாவுக்கு வந்த வேறொரு ஃபிகரு எதிர்பாராத விதமா தானா வந்து முத்தம் குடுத்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஷாக் சர்ப்பரைஸ் தான் இந்த தெலுங்கு மகதீரா டப்பிங்க் படமான மாவீரன்.(போடறது  கில்மா விமர்சனம், அதுல ஜொள்மா...!!)

மாங்கு மாங்குன்னு கண்ட கில்மா படத்துக்கு எல்லாம் போக வேண்டியது.. சீன் இல்லாம ஏமாற்றமா திரும்பி வர வேண்டியது.. இதுவே பொழப்பா போன நமக்கு (!!!!) எதிர் பாராத இன்ப அதிர்ச்சியா காஜல் அகர்வால்-ன் மிதக்கும் இளமை காட்சிகள் கதையுடன் கூடிய சுவராஸ்யம் ஆஹா.. 

படத்தோட கதை என்ன?பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களுக்குப்பிறகு எப்படி நிறைவேறுது என்பதே கதை..

சிரஞ்சீவியின் மகன் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் சீன்ல செம காமெடி பண்றாரு.. அதாவது பைக் ரேஸ்.. 30 அடி உயரத்தை தாண்டனும்.. அண்ணன்  பைக்ல வந்து தாண்டறப்ப  டக்குன்னு அந்த உயரத்தை 35 அடியா உயர்த்துறாங்க.. ( டகார்னு பெட்ரோல் விலையை நடுவன் அரசு ஏத்துன மாதிரி)அண்ணன் கவலைப்படலையே.. பைக்கை 30 அடில அம்போன்னு விட்டுட்டு ( ரம்லத்தை பிரபுதேவா கழட்டி விட்ட மாதிரி) அந்தரத்துல ஜம்ப் பண்ணி 35 அடி உயரம் போய் மறுபடி பைக்கை பிடிச்சுடறாரு.. ஜெயிச்சுடறாரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


http://www.koodal.com/cinema/gallery/movies/maaveeran/maaveeran_7_47201192140123.jpg
அந்த டைம்ல முமைத்கானோட ஒரு குத்தாட்டம்.. பக்கத்து சீட் பார்ட்டி சொல்றான்.. தக்காளி, குடுத்த 50 ரூபா இந்த ஆட்டத்துகே சரியாப்போச்சுன்னு.. கேமராமேனை பாராட்றதா? அந்த மாதிரி ஆங்கிள் வைக்கச்சொன்ன டைரக்டரை பாராட்றதா?ன்னே தெரில.. செம கிளாமர்ப்பா.. 

இப்போ ஹீரோயின் அறிமுகம்.. காஜல் அகர்வால்.. சும்மா காமாட்சி, மீனாட்சின்னு பேர் வச்சா நம்ம ஆள் கண்டுக்க மாட்டான்.. இந்த மாதிரி கசக்கு முசக்கு பேர்னா ரசிப்பான்.. ஓப்பனிங்க் சீன்ல மிதக்கும் இளமையோட ஸ்லோ மோஷன் ல ஹீரோயின் வர்றப்ப..  ஹி ஹி அந்த கர்ச்சீஃப் எங்கே..?
ஹீரோ ஆட்டோல போறான்.. ஹீரோயின் கை காட்டி ( கவனிக்க கையை மட்டும் தான் காட்டறா) லிஃப்ட் கேட்க சும்மானாச்சுக்கும் லிஃப்ட் குடுக்காம அவளை தாண்டிப்போற ஹீரோ அவ கையை டச் பண்றான்,, உடனே மின்னல் வெட்டுது.. ஷாக் அடிச்ச மாதிரி ஆகிடறான்  பூர்வ ஜென்ம நினைவு வருது... 

..
பூர்வ ஜென்மம், மறு பிறப்பு இதெல்லாம் உட்டாலக்கிடி வேலை என்பது மூளைக்கு தெரிஞ்சாலும் நம்ம மனசு அதை விரும்புது.. சரி... ஃபிளாஸ்பேக் கதை என்ன?

30 வருடங்கள் மட்டுமே ஆயுள் உள்ள வம்சத்தை சேர்ந்த ஒரு வீரனை நாட்டின் இளவரசி விரும்பறா..மன்னர்க்கு தன் மக இள வயதுல விதவை ஆகறது பிடிக்கலை .ஒரு சமயம் தர்பார்ல தன்னோட அடுத்த வாரிசு தன் மக தான்னு மன்னர் அறிவிக்கும்போது இளவரசியோட முறைப்பையன் ஆண் வாரிசா தன்னைத்தான் அறிவிக்கனும்னு சொல்றான்.

இந்த இடத்துல இன்னொரு காமெடி சீன்.. அது வரை லோ ஹிப்பும் ,லோ கட்டும் தாராளமா காட்டி வந்த இளவரசி தன்னோட துப்பட்டாவை வில்லன் பிடுங்கினதும் அப்படியே கூனி குறுகிப்போயிடறா.. ( அந்த துப்பட்டாவை பாப்பா போட்டிருந்தாலும் ஒண்ணு தான் போடாம இருந்தாலும் ஒண்ணு தான்.)


வில்லன் அந்த துப்பட்டாவை தேர்ல கட்டி அனுப்பிடறான். ஒரு கேவலமான போட்டி.. அந்த துப்பட்டாவை யார் முதல்ல எடுத்துட்டு வர்றாங்களோ அவங்க தான் இளவரசிக்கு சொந்தம்.. ஹீரோ தான் ஜெயிப்பார்னு முந்தா நேத்து வயசுக்கு வந்த வளசரவாக்கம் வளர்மதிக்குக்கூட தெரிஞ்சிருக்கறப்ப நமக்கு தெரியாதா?( விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாம வளர்மதி யாருன்னு கேட்கப்படாது.. ஹி ஹி )

அப்புறம் தனக்கு கிடைக்காத எதுவும் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாதுங்கற தமிழனோட கொள்கைப்படி வில்லன் சூழ்ச்சி பண்ணி ராஜ்ஜியத்தை கைப்பற்றி இளவரசியை போட்டுத்தள்ளிடறான் (அதாவது கொலை பண்ணிடறான்).

அந்த ஜென்மத்துல நிறைவேறாத இளவரசியின் காதல் இந்த ஜென்மத்துல எப்படி நிறைவேறுதுங்கறதுதான் கதை..

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/04/Maaveeran-Movie-Stills-2.jpg


கே பாக்யராஜ்-ன் வசனத்தில் கலக்கிய இடங்கள்

1. உன்னோட பெரிய ரோதனைப்பா.. உங்கம்மாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?உங்கப்பாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?

2.  மேடம்.. அந்த பொண்ணும் நானும் செம க்ளோஸ்..

அப்படியா? அட்ரஸ் தெரியாத அளவு க்ளோஸா?அவங்க அட்ரஸே தெரியல...

3. மச்சான்,... என்னைப்பற்றி நீ என்ன நினைக்கறே?

புரோக்கர்னு..

ஹூம்.. வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கனுமா?



4. என் சைல்டு ஹூட்ல (CHILD HOOD)  நான் ராபின் ஹூட் மாதிரி ....

எருமையை குதிரைன்னு நினைச்சிருப்பே..

5.இந்த வம்சத்து வீரர்கள் 30 வயசு ஆனா  மரணத்தை தழுவுவாங்கங்கறது  உண்மை தான்.ஆனா ஒவ்வொரு வீரரும் 100 பேரைக்கொன்ற பிறகே சாவை சந்திப்பாங்க..

6. மன்னிக்கவும்.. இது இளவரசியின் அந்தப்புரம்.. பெண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஆண்களுக்கு அனுமதி இல்லை..


வில்லன் - பெண்ணுக்குப்பெண் என்னாங்கடி பண்ண முடியும்? வழியை விடு,...


http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/apr/maaveeran/maaveeran_136.jpg

இயக்குநர் சபாஷ் பெற்ற இடங்கள்

1. காஜல் அகர்வால் ஓப்பனிங்க் ஷாட்ல மரத்தில் இருக்கும் பூக்களை பறிக்க ஜம்ப் பண்றப்ப கேமராவை ஏரியல் வியூல வெச்சு ஒளிப்பதிவு பண்ணுனாரே செம ஷாட்..

2.ஓப்பனிங்க் குத்தாட்டப்பாட்டான ஒத்திப்போ ஒத்திப்போ பெண்ணே பாடலில்  ஃபிரீஸிங்க் காட்சியும் , கிராஃபிக்ஸூம் கலக்கல்

3.துப்பட்டா வை யார் எடுத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு சென டெம்ப்போவோட சீன் வெச்சதுக்கு ..அந்த காட்சியில் மணல் புதைகுழி சீன் செம..

4. ஆசை தீர பாடல் காட்சியில் ஏரியல் வியூவில் கேமரா பிரம்மாண்டத்தின் உச்சத்தை  பதிவு செய்தது...

5. ஹீரோ 100 பேரை போரிட்டு கொல்லும் சீனில் லொக்கேஷன், கேமரா பக்கா.


6. காஜல் அகர்வாலை மிகச்சிறப்பாக பயன்படுத்தியது



7. மாடர்ன் கேர்ள் கேரக்டரில் 60 மார்க் வாங்கும் ஹீரோயின் இளவரசி கேரக்டரில் 90 மார்க் வாங்கும் அளவு ஒப்பனி,நடிப்பு அனைத்தும் கலக்கல


http://www.tamilnow.com/movies/gallery/maaveeran/maaveeran-movie-still-10.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பூர்வ ஜென்ம நினைவு ஹீரோவுக்கு இருக்கு ,ஹீரோயினுக்கு இல்லை.. அதெப்பிடி? அதே போல் ஹீரோ ஹீரோயின் விரல்கள் பட்டாலே அவருக்கு ஷாக் அடிக்குது.. ஆனா ஹீரோயினுக்கு எந்த சொரனையும் இல்லை.. அது எப்படி? ( ஒரு வேளை ஹீரோ புது முகம், ஹீரோயின் ஏற்கனவே பல..... படங்களில் நடிச்சவர் என்பதாலோ?)

2. அவ்வளவு பெரிய பணக்காரப்பொண்ணான ஹீரோயின் ஏன் பஸ்ஸ்டாப்ல லோக்கல் ஃபிகர் மாதிரி நிக்கனும்? (அப்போ பஸ் ஸ்டாப்ல நிக்கறவங்களெல்லாம் லோக்கல் ஃபிகர்ஸா?என யாரும் கண்டனம் தெரிவிக்க வேணாம்)

3. இளவரசியை அடைய முடியாத வில்லன் ஏன் அவளை கொல்லனும்? காட்சிப்பொருளா அந்தப்புரத்துல வெச்சு சும்மா பார்த்து ரசிச்சுட்டு இருக்கலாமே? ( ஹூம்.. பய புள்ள கேனத்தனமா கேள்வி கேட்டுட்டு வாங்கிக்கட்டிக்கப்போகுது..)

4. ஹீரோயினை வெறுப்பேத்த ஹீரோ அவரோட நண்பனை பெண் வேடம் இட்டு அணைக்கற மாதிரி சீனை குரு சிஷ்யன் உட்பட பல படங்கள்ல பார்த்ததாச்சே..?

5. ஹெலிகாப்டர்ல இருந்து அவ்வளவு உயரத்துல இருந்து கீழே விழும் ஹீரோ என்ன தான் தண்ணீர்ல விழுந்தாலும் ஒரு சிறு கீறல் இல்லாம தப்பிப்பாரா?

6. உண்மையான காதல்ல சந்தேகம் வருமா? அதுவும் வில்லன் சதிப்படி ஹீரோயினின் அப்பாவை ஹீரோதான் கொன்னார்னு சொன்னதை ஹீரோயின் எப்படி நம்பறாங்க?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBltjG4Jq5bmpGqMZriqVSHz7SSBjpR_JPqEq3EgOmZqUqfN1VMIVV0QHxPXAwuQzzedjecFxoGiZvpMq63XddZpxesKPq48_QVehGqjQwo8slTw1S68XubBxhWd5Mj6PgE2fCDixr3_k/s320/maaveeran_movie_hot_stills_pics_wallpapers_09.jpg

லாஜிக் மீறல்கள் பல இடங்கள்ல இருந்தாலும் படம் பார்த்து ரசிக்கிற மாதிரி தான் இருக்கு..

யார் யார் எல்லாம் இந்தப்படத்தை பார்க்கலாம்?

காதல் ஜோடிகள்,காஜல் அகர்வால் ரசிகர்கள், அஜால் குஜால் ரசிகர்கள், பூர்வ ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள் ,அம்புலிமாமா ரசிகர்கள் பார்க்கலாம்.

ஆனந்த விகடன்ல டப்பிங்க் படத்துக்கு  விமர்சனம் போட மாட்டாங்க.. இருந்தாலும் படத்தோட ரேட்டிங்க் தெரிய

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்