Showing posts with label கலைஞர் டி வி. Show all posts
Showing posts with label கலைஞர் டி வி. Show all posts

Tuesday, October 25, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி, ஸ்டைலிஸ் ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இந்தியாவிலேயே மிக மோசமான ஹேர் ஸ்டைலுடன் பாப்பா கீர்த்தி இன்னைக்கு ஆஜர் @ கலைஞர் டிவி.. அவர் போட்டிருந்த நைட்டி ஹா ஹா பூப்போட்ட டிசைன்ல கோமாளி போல் இருந்துச்சு.. மானாட மயிலாட நிகழ்ச்சில ஓரளவு கேவலமான டிரஸ்ல வர்ற மிஸ் கீர்த்தி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சில மட்டும் ஏன் படு கேவலமா வர்றாங்களோ?ஹூம்..

கீர்த்தி - நீங்க ஒர்க் பண்ணுன அளவுல உங்களுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்தாங்க?  ( ஹி ஹி நோ டபுள் மீனிங்க்)
கே பாக்யராஜ் - அமிதாப் பச்சன். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் தெரியாது.. ஆனாலும் ரொம்ப கோ ஆப்ரேட் பண்ணுனார் ஆக்ரி ராஸ்தா ஷூட்டிங்க் ல ( நான் சிகப்பு மனிதன் ஹிந்தி ரீ மேக் ).. லேடி ஆர்ட்டிஸ்ட் யார்னு சொல்ல முடியாது , வம்பு வந்துடும் ஹா ஹா ( நான் சொல்றேன்.. ஷோபனா .. அவர் தானே இது நம்ம ஆளுல...  ஹி ஹி )

சுந்தர் சி - எனக்கு கமல் & கார்த்திக்  .கார்த்திக்குக்கும், எனக்கும் நல்ல அண்டர் ஸ்டேண்டிங்க்.. நான் எது செஞ்சாலும் அவரோட நல்லதுக்குனு தான் நினைப்பார் ( குஷ்பூவை கல்யாணம் பண்ணுனது? ஹி ஹி )

கமல் வீட்ல இருந்து வர்றப்பவே ஹோம் ஒர்க் பண்ணிடுவார், நம்ம வேலையை மிச்சம் பண்ணிடுவார்..  ( அன்பே சிவம் யார் டைரக்‌ஷன்? உண்மையை சொல்லுங்க இப்பவாவது.. நீங்களா? கமலா?)

லேடி ஆர்ட்டிஸ்ட்ல சவுந்தர்யா.. 



1. ராஜேஷ்குமார் -  BET ( ஆக்‌ஷன்)


ஓப்பனிங்க் ஷாட் செம ஸ்டைலிஸா இருந்தது.. ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உண்டான ஸ்பீடு கட்டிங்க், ஷார்ப் எடிட்டிங்க் என கலக்கறாரே மனுஷன்..

கார்ல ஹீரோ டிரைவிங்க்.. அவனுக்கு ஒரு ஃபோன் வருது.. உன் தங்கையை கடத்தி வெச்சிருக்கோம், நாங்க சொல்ற இடத்துக்கு வா அப்டினு கூப்பிடறாங்க.. போறான்.. அங்கே தங்கையை கண்ணை கட்டி வெச்சிருக்காங்க, வில்லன் எனக்கே உன் தங்கையை கட்டி வைக்கறேன்னு சொல்லு, அப்போத்தான் விடுவோம்கறான்..
அப்போ தங்கை சொல்லிடறா எனக்கு வேற ஒரு ஆள் கூட லவ் இருக்கு... உடனே வில்லன் அவளை ரிலீஸ் பண்ணிடறான்..கார்ல போறப்ப ஹீரோ தங்கைட்ட யார் அவன்?னு கேட்டப்ப அவ சொல்லலை. வெயிட் அண்ணா, நானே அவன் கிட்டே மேட்டர் ஓப்பன் பண்ணலை.. சொல்றேன்கறா.. 

அடுத்த ஷாட்ல ஹீரோ, வில்லன் 2 பேரும் ஒண்ணா தண்ணி அடிக்கறாங்க.எல்லாம் ஆல்ரெடி பிளான்.. அப்போ வில்லனுக்கு ஃபோன் வருது. ஸ்பீக்கர் ஃபோன் போடரான்.. ஹீரோவோட தங்கை ஐ லவ் யூ சொல்றா.
அவ்ளவ் தான் கதை.. கதைல நம்பகத்தன்மை கம்மி, ஆனா கொண்டு போன விதம் ஓக்கே...

தங்கையை கடத்திட்டு போறப்ப அந்த லொக்கேஷன் டாப் கிளாஸ்.. ஒளிப்பதிவும் பக்கா.. பேசிக்கலி படத்தோட டைரக்டர் ஒரு சவுண்ட் எஞ்சினியர் என்பதால்  ரீ ரெக்கார்டிங்க்லயும் நல்லா பண்ணி இருந்தார்.. 



2. மாதவா - யு டர்ன் ( ஃபேண்ட்டஸி)

ஹீரோவுக்கு அகஸ்மாத்தமா ஒரு பூமாரங்க் மாதிரி ஆயுதம் கிடைக்குது ரோட்ல.. அதால சுவர்ல எரிஞ்சா அப்படியே விரிசல் விடுது.. அந்த ஆயுதம் மறுபடி அவர் கைக்கே வந்துடுது.. 


அவர்க்கு பணப்பிரச்சனை.. சேட் கடைல செயினை அடமானம் வெச்சிருக்கார். அதை திருப்ப முடியல.. ஊர்ல இருந்து அப்பா வர்றார்.. வந்தா செயின் எங்கே?ன்னு கேப்பார்.. அதனால சேட் கிட்டே ஒரு நாள் மட்டும் செயினை குடுன்னு கேட்டா தர்லை , கோபத்துல அந்த பூமரங்கால ஒரே போடு,ரிட்டர்ன் வர்றப்ப அவர்ட்ட நக்கல் அடிச்ச டிராஃபிக் போலீஸ் கிட்டே தகராறு, கைல மந்திர ஆயுதம் இருக்க கவலை ஏன்? அவரையும் அட்டாக்..


வீட்டுக்கு வந்து பார்த்தா அந்த பூமாரங்க் ஆயுதத்தால சேதம் அடைஞ்ச வீட்டு சுவர் சரி ஆகி இருக்கு.. அதாவது கொஞ்ச நேரம் மட்டும் தான் அந்த பாதிப்பு போல.. வீட்டு காலிங்க் பெல் அடிக்குது.. திறந்து பார்த்தா அந்த சேட்டு, டிராஃபிக் போலீஸ்.. அவ்வ்வ்வ்வ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சேட்டிடம் மீட்ட செயினை  அங்கேயே கழுத்தில் போடாமல் யாராவது 1 கி மீ நடந்து அப்புறம் நடு ரோட்டில்  நடந்து செல்லும்போது போடுவாங்களா?

2. அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது  கொலை செய்யத்துணிவார்களா?

3. டிராஃபிக் போலீஸை கடந்து சென்ற பின் ஹீரோ அந்த பூமாரங்கை வீசுகிறார். அது போலீஸின் பின் மண்டை, அல்லது முதுகில் தானே தாக்கும், எப்படி நடு நெற்றியில் தாக்கும்? நேருக்கு நேரா நின்றார்?



3. வெங்கடேஷ் - நிழலுக்குப்பின்

வயதான தம்பதி - லேடி - என் மேல சந்தேகப்பட்டுத்தானே அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கமா வந்து வேவு பார்த்தீங்க?னு கேக்கறாங்க..உடனே ஃபிளாஷ்பேக்.. ஹீரோ வீட்டுக்கு வர்றப்ப வீட்டின் பின் பக்கமா ஒரு ஆள் ஓடி போறான், அவனை துரத்திட்டுப்போனா அவன் எஸ் ஆகிடறான்.. ஹீரோ யோசனை பண்ணிட்டே வீட்டுக்குள்ள போறாரு.. எஸ் ஆன ஆள் திரும்ப வீட்டுக்குள்ளயே வந்து படுத்துக்கறாரு.. வாட்ச்மேன்.. நம்பிக்கைத்துரோகம் பண்ணிட்டான். பீரோல இருந்த நகையை எல்லாம் கொள்ளை அடிச்சுட்டான்.. 

ஒண்ணும் தெரியாதவன் போல் வீட்டுக்குள்ல வந்து படுத்துக்கிட்டான்.. இவர் பெட்ரூம்ல போய் செக் பண்றப்ப மனைவி ரத்த வெள்ளத்துல இறந்து கிடக்கறாங்க.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்பவே மடார்னு பின்னால இருந்து வாட்ச் மேன் தாக்கி அவரையும் கொலை பண்ணிடறான்,

இப்போதான் நமக்கு தெரியுது.. வயசான தம்பதிகள் ஆவின்னு.... அவங்க பையனை தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு கலங்கறாங்க.. அவன் பின்னாலயே போறாங்க.. அவங்க பையனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோண திரும்பி பார்க்கறான்.. அதோட ஷாட்  முடியுது..

யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதை சொல்லும் திறமை இருக்கறதால இவருக்கு எதிர்காலத்துல நூறாவது நாள் மணி வண்னன் மாதிரி அமைய சான்ஸ் இருக்கு.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. அவ்ளவ் தூரம் ஓடிட்டு மறுபடி ரிட்டர்ன் வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி வாட்ச்மேன் அல்லது வேலைக்காரன் படுத்துக்கறான்.. ஹீரோ பெட்சீட்டை எடுத்து அவனை பார்க்கறார்.. அப்போ அவன் உடம்புல வியர்வை, அல்லது ஓடி வந்த இளைப்பு வாங்கி இருக்குமே?

2.  பீஸ் கட்டை பிடுங்கப்பட்டதை பார்த்து கரண்ட் இதனால தான் போயிருக்குன்னு ஹீரோ கண்டு பிடிச்சடறார்.. யாரோ ஆள் வீட்ல நடமாடறாங்கனு டவுட் வந்துடுது,. உடனே அக்கம் பக்கம் உதவிக்கு யாரையும் கூப்பிடலை.. ஏன்?



4. அஸ்வின் - குரு


ரிட்டயர்டு ஆன ஒரு ஆசிரியரின் மன அலைகளை பதிவு செஞ்ச அழகான படம்.. பொதுவா ரிட்டயர்ட் ஆகிட்டா மனிதனுக்கு 2 விதமான பயம் வந்துடும்.. 1. தான் சமூகத்தை விட்டு ஒதுக்கப்பட்டுட்டமோ..   2. நம்மோட திறமைகள் இனி செல்லுபடி ஆகாதோ..


அந்த விஷயங்கள் படத்துல நல்லா சொல்லப்பட்டிருக்கு.. 


ரிட்டயர்டு ஆன பேராசிரியர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மெமண்ட்டோவை ஆசையா பார்த்துட்டு இருக்கறப்ப வீட்டுக்குள்ள கிரிக்கெட் பால் வந்து அதை உடைச்சிடுது.. கிரிக்கெட் ஆடுன பையன் பாலை வாங்க வர்றான்.. அவனை கண்டபடி திட்டி காதை கிள்ளறப்ப பையனோட அம்மா வந்து மன்னிப்பு கேட்டு அந்தப்பையனுக்கு டியூஷன் சொல்லித்தரச்சொல்லி கேட்கறா..ஓக்கே சொல்றாரு..



ஆரம்பத்துல சரியா கவனிக்காம விளையாட்டுப்பையனா இருக்கான்.. அப்புறம் ஒழுங்கா கவனிக்கறான்.. சார்.. நான் பாஸ் ஆகிடுவேனா?னு கேட்கறான்.. 2 பேருக்கும் குரு மாணவன்  என்ற ஃபீலிங்க் தாண்டி ஒரு ஒட்டுதல் ஏற்படுது..

டியூஷன் முடிச்சுட்டு கிளம்பறப்ப பையன் வாத்தியாரை கிண்டல் பண்றான்.. உங்களால பேட்டிங்க் பண்ண முடியுமா?ன்னு கேட்கறான்.. அவரும்  கோதால இறங்கறாரு.. அவ்ளவ் தான் கதை..

ஒவ்வொரு மனுஷனும் தான் கவனிக்கப்படனும் , தன்னை எல்லாரும் மதிக்கனும், தன்னால யாருக்காவது ஏதாவது பிரயோஜனம் இருக்கனும்னு நினைக்கறான் என்ற கான்செப்டோட படம் முடியுது.. 

டெக்னிக்கலா அசத்துற படங்களை விட மனித மனங்களை படித்து எடுக்கப்படும் சாதாரன எளிய படங்களே மக்களை கவரும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்தபப்டம் தான் சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோசமா இருந்துச்சு

இயக்குநரிடம் சில சுட்டிக்காட்டல்கள்

1.  வாத்தியார் மெமண்ட்டோவை பார்த்திட்டிருக்கறப்ப ஜன்னல்க்கு எதிரேதான் நிக்கறார்.. ஆனா பந்து அதுக்கு ஆப்போசிட் சைடுல இருந்து வருது.. அப்படி வந்தா அதை உடைக்க வாய்ப்பே இல்லை, கேமரா ஆங்கிளை மாத்தி இருக்கனும்..

2. வாத்தியார் மனைவி கேரக்டர் சமையல் அறைல இருந்து பேசற வசனங்கள், தேவை அற்றது.. அவ்ளவ் ஏன்? மனைவி கேரக்டரை காட்டாமயே இன்னும் அழகா இந்த கதையை சொல்ல முடியும்.. பொதுவா குறும்படம் எடுக்கறப்ப எந்த அளவு கேரக்டரை குறைக்கறமோ அந்த அளவு நல்லது.. ஆடியன்சுக்கு ஈசியா புரியும்.. நமக்கும் வேலை கம்மி.. 


இந்த வாரம் போட்ட 4 படங்கள்ல 3 படங்கள் ஓக்கே ரகம்..

Monday, October 17, 2011

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..

Monday, October 10, 2011

நாளைய இயக்குநர் - காதல், காமெடி கதைகள் - விமர்சனம்

கீர்த்தி - சார்.. குறும்படம் எடுக்கறதுல எந்த மாதிரி படங்கள் மேக்கிங்க்ல கஷ்டம்?

கே பாக்யராஜ் - என்னைப்பொறுத்தவரை ஆக்‌ஷன் ஃபிலிம் தான் கஷ்டம்.. ஏன்னா கொஞ்சம் மிஸ் ஆனாக்கூட காமெடி ஆகிடும்.. கரெக்ட் பேக்கேஜ்ல கொண்டு வரனும்.. 

சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. 



1. கார்த்திக் - காதல் பீஸ்சா

லவ்வர்ஸ் ஜாலியா பைக் ரைடு போறாங்க.. அப்போ ஃபிகர் சொல்லுது.. நாளை வீட்டுக்கு வா..  என் தங்கை , அப்பா வீட்லதான் இருப்பாங்க.. பேசி சம்மதம் வாங்குன்னு.. 

இவரு போனா அங்கே வருங்கால  மச்சினி மட்டும்  தனியே தன்னந்தனியே.. 

இவருக்கு சிரமம் வைக்காம அதுவே பிட்டை போடுது.. வீட்ல வேற யாரும் இல்லை..  உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் அப்டினு சொல்லிட்டே பெட்ரூம்க்குள்ள போகுது.. இது குறும்படமா? குறும்புப்படமா? அப்டினு நாம யோசிக்கறப்ப.....

ஹீரோ பைக் சாவியை மறந்து பைக்லயே வெச்சுட்டு வந்துடறார்.. அதை எடுத்துட்டு வரலாம்னு போறப்ப ஹீரோயின், மாமா வந்து மச்சினி கிட்டே சிலாகிக்கறாங்க.. மாப்ளை கேரக்டர் அருமை.. ரொம்ப நல்லவர் போல.. ஃபிகர் வாலண்ட்ரியா கூப்பிட்டாலும் ஓடிப்போய்ட்டார்..

சாவியை எடுத்துக்கிட்டு திரும்பி வர்ற ஹீரோ நமுட்டுச்சிரிப்போட நிக்கறார்..

இந்தப்படத்துல பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் மச்சினியா வர்ற ஃபிகர் தான் நல்ல முக வெட்டு ( எத்தனை வெட்டுன்னு கேட்கப்படாது) குறும்புத்தனமான அக்னி நட்சத்திரம் அமலா (அஞ்சலி) நடிப்பு.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. மாப்ளையோட கேரக்டரை செக் பண்ண சொந்த தங்கையையே மோசமா நடந்துக்கற மாதிரி நடிக்க சொல்வாங்களா? யாராவது? நாளை மேரேஜ் ஆன பின் நிஜமாவே ட்ரை பண்ணலாம்னு மாப்ளைக்கு தோணாதா?

2. இப்போதான் முதல் டைம் பார்க்கறா ஹீரோயினோட தங்கை. பார்த்ததும் காதல் ஓக்கே, பார்த்ததும் காமம்? நாட் ஓக்கே.. 

3. இது ஒரு விளம்பர படத்தோட KNOT . அதுல ஹீரோ காண்டம் எடுத்துட்டு வரப்போவாரு.. இதுல பைக் சாவி.. 

4.  மோசமான நடத்தை உள்ள மாப்ளை ஏன் மச்சினி சோபால  பக்கத்துல உக்காரும்போது விலகி விலகி செல்கிறார்?

5. மாப்ளையை பற்றி விசாரிக்கனும்னா பொதுவா ஆஃபீஸ்ல , அக்கம் பக்கம், அல்லது நண்பர்களிடம்தான் விசாரிப்பாங்க.. யாரும் இப்படி சொந்த மகளை நடிக்க சொல்லி பார்க்க மாட்டாங்க.. 




2. குணாளன் - தொடரும்

ஒரு மாடர்ன் ஆசாமி தன் லவ்வரோட பைக்ல போறான், காதுல வாக்மேன் மாட்டி பாட்டு கேட்டுட்டே... ரொம்ப தூரம் போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. பார்க்கற ஆடியன்ஸ்  டென்ஷன் ஆகற வரை போய்ட்டே இருக்கான்.. 


வழில ஒரு ஆளை பார்த்து அந்த ஃபிகரு அந்தாள் செமயா இருக்காரு அப்டின்னு சொல்ல அப்போ நானும் நாளைல இருந்து ஜிம் போறேன்னு இவன் சொல்றான்..

அடுத்த நாள் காலைல 6 மணிக்கு இவன் ஜிம்முக்கு போறப்ப பாலத்துல  2 ரோடு பிரியுது.. எந்த ரோடுல போலாம்கற அறிவுப்புப்பலகை மேல் யாரோ ஏதோ போஸ்டர் ஒட்டி இருக்காங்க.. அதனால இவன் தவறுதலா ராங்க் ரூட்ல போறான்.. ஆக்சிடெண்ட்.. ஸ்பாட் அவுட்.. அவன் இறந்த ஃபோட்டோவை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுது.. 

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. அண்ணே, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லவும்.. ஏன் சுத்தி வளைக்கறீங்க?

2. ஹீரோ படம் பூரா வாக்மேன் கேட்டுட்டே வர்றது எதுக்கு? ஆடியன்ஸை டைவர்ட் பண்ணவா? ம்ஹூம்..

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  லவ் பண்ற பொண்ணை யாராவது 2 மணி நேரம் காக்க வைப்பாங்களா?

2. நீ மட்டும் இல்ல... அவனை துவம்சம் பண்ணி இருப்பேன்..

சரி விடு.. அவன் உடம்பை பார்த்தியா? அம்சமா இல்ல?



3. குகன் சென்னியப்பன் - உயிர் வாசம் 

கோயில், திருவிழாக்களில் ஆடு , கோழிகளை பலியிடும் வேலையில் இருக்கும் ஒருவர் நேரில் ஒரு விபத்து கம் கொலை யை பார்க்கும்போது நெஞ்சில் ஈரம் பொங்க , மனித நேயத்தை வெளிப்படுத்துகிறார்.. கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற KNOT..  நீட் 

படத்துல முக்கியமான மேட்டர் டயலாக்ஸே கிடையாது. ஒரே ஒரு சீன்ல செல்ஃபோன்ல குழந்தை வாய்ஸ் மட்டும் கேட்கும்.. ஒருத்தனை நடு ரோட்ல ஒரு கும்பல் வெட்டி போட்டிருக்கும்.. அந்த பாடில இருக்கற ஃபோன் ஒலிக்கறப்ப ஹீரோ எடுத்து அட்டெண்ட் பண்றார்.. அந்த குழந்தை அப்பா சீக்கிரம் வாங்க.. நான் கேட்டதெல்லாம் வாங்கி வந்தீங்கதானே? அப்டினு கேக்கும்

ரோட்ல பேக் சிதறி கிடக்கும், அதுல ஹார்லிக்ஸ், பொம்மை பொன்ற குழந்தைகள் அயிட்டமா இருக்கும்.. எங்கேயும்  எப்போதும் படத்துல இதே மாதிரி சீன் வந்துட்டதால எஃப்க்ட் கம்மி, ஆனாலும் மனதை தொட்டது..

 படத்துக்கு பின்னணி இசை அழகு.. உடுக்கை அடிக்கும் ஒலி.. கோயில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி

1. கேரக்டர்கள் ரவுடிகள், கெட்டவர்கள் என்பதை காட்ட சரக்கு அடிப்பது போல், தம் அடிப்பது போல் அவ்வளவு விலா வாரியாக காட்ட வேண்டுமா?




4. சந்த்ரு - ஆதாயம்

2 ஃபிரண்ட்ஸ்.. 2 பேருமே எழுத்தாளர்கள்... ஒருத்தன் சொல்றான்.. ரவுடி மேட்டர் கேட்டு பத்திரிக்கைல  ஃபோன் வந்திருக்கு.. எப்படி ரெடி பண்ண?
கவலைப்படாத, எனக்கு தெரிஞ்ச ரவுடி இருக்கான். அவனை பிடிப்போம்னு ஃபிரண்ட் சொல்றான்...மனசுக்குள்ள ஃபிரண்டுக்கு பொறாமை, தனக்கு கிடைக்காத பேரும் , புகழும் அவனுக்கு மட்டும் கிடைச்சிருச்சேன்னு.. 

ரவுடியை மீட் பண்ணி தகவல் சேகரிச்சு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணிடறாங்க.. பப்ளிஷ் ஆகுது.. 

இப்போ ரவுடியோட இடத்துல பார்ட்டி.. சரக்கு அடிக்கறாங்க எல்லோரும்.. திடீர்னு ரவுடி தன்னை பற்றி ஆர்டிகிள் எழுதுன ரைட்டரை கொலை பண்ணிடறான்,,. கொல்றப்ப என்னைப்பற்றியாடா எழுதுனே? அப்டி ஒரு பஞ்ச் டயலாக் வேற.. அப்புறம் பார்த்தா அவனை கொலை பண்ணச்சொன்னதே ரைட்டரோட நண்பன் தான் , பொறாமையின் காரணமா அப்டி பண்ண வெச்சுட்டானாம்.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ராஜேஷ்குமார் மாதிரி பிரபலமான ஒரு எழுத்தாளரை கூடவே இருக்கும் நண்பர் கம் ரைட்டர்  பொறாமையின் காரணமாய் கொலை செஞ்சா ஏத்துக்கலாம்... ஊரில் உள்ள 1000க்கணக்கான ஃபிரீ லான்ஸ் ரைட்டரில் இவரும் ஒருவர், இவரைக்கொல்வதால்  அவருக்கு சான்ஸ் கிடைச்சுடுமா? என்ன? இதுக்காக ஒரு கொலையா? அவ்வ்வ்

2. பணம் வாங்கிட்டு கொலை பண்ணும் ரவுடி எதுக்காக கொலை செய்யறப்ப என்னை பற்றியாடா எழுதுனே? அப்டினு டயலாக் பேசறாரு?

பெஸ்ட் ஃபிலிம் உயிர் வாசம்

பெஸ்ட் டெக்னீஷியன் -ஆதாயம் கேமரா மேன்

பெஸ்ட் ஆக்ட்ரஸ் - காதல் பீஸ்சாவில் கில்மா மச்சினியா வந்ததே ஒரு 70 மார்க் ஃபிகரு அதுக்கு

டிஸ்கி - கே பாக்யராஜ் சொன்ன ஒரு மலரும் நினைவு.. வளர்ந்து வரும் எல்லா இயக்குநர்களூம் மனசுல வெச்சுக்கனும்.. வீட்ல விஷேசங்க படத்துல அவரோட மனைவி இறந்ததும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்கப்போறார்..

சார்.. என்னோட முதல் மனைவி இறந்துட்டாங்க....

அந்த சீனை பார்த்துட்டு ஒரு ரசிகர் கேட்டாராம்.. சார்.. நீங்க இப்போ மனைவியை இழந்திருக்கீங்க, முறைப்படி மனைவி இறந்துட்டாங்கன்னுதானே கேஸ் தரனும், முதல் மனைவி இறந்துட்டாங்கன்னா அப்போ 2 வது மனைவிக்கு ஆல்ரெடி பிளானா?ன்னு கேட்டாராம்.. 

டைரக்டர்கள், அசிஸ்டென் டைரக்டர்கள்க்கு தோணாத பல லாஜிக் அத்து மீறல்கள் சாதாரண ரசிகனுக்கு தோணலாம்.. அதனால ஜாக்கிரதை என்றார்..

Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?



3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL