Showing posts with label கருப்பன் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கருப்பன் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, September 29, 2017

கருப்பன் - சினிமா விமர்சனம்

Image result for karuppan motion posterவிஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பதாக இருந்தார். அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழு. 

படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் 'பலே வெள்ளையத் தேவா', ’பிருந்தாவனம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார். பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள ஊர்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தினர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நன்றி - விகடன்

சரி , விமர்சனத்துக்குள்ளே போவோம்


Image result for karuppan motion poster

ஹீரோ ஒரு சண்டியர் , சரக்கு சங்கர லிங்கம் , ஹீரோயின் அண்ணன் போட்ட ஜல்லிக்கட்டு பந்தயத்தில் ஜெயிச்சு மேரேஜ் பண்ணிக்கறாரு, அவங்க எப்படி அதிமுக +பாஜக் போல அன்னியோன்யமா வாழறாங்க என்பதை இடைவேளை காட்றாங்க , திடீர்னு தினகரன் வடிவில் அதிமுக வுக்கு சிக்கல் வந்தது போல்  ஹீரோயினோட முறை மாமன் மூலமா சிக்கல் வருது , ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை 

 ஹீரோவா விஜய் சேதுபதி ,  சி செண்ட்டர் ஆடியன்ஸ்  ஆரவாரமான கைதட்டல்களுடன்  அறிமுகம் ஆகறாரு . அவருடனான ஹீரோயின் கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட் ஆகி இருக்கு . குடிகாரன் கேரக்டர் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், லேடீசுக்குப்பிடிக்கும் விதத்தில்  திரைக்கதை நகர்வது +


ஹீரோயினா தன்யா, ஆள் ஸ்லிம்மா இருக்கு , கலரா இருக்கு, யூத்தா இருக்கு , எல்லாம் இருந்தும் ஒரிஜினாலிட்டி கம்மி . கீர்த்தி சுரேஷை நினைவு படுத்தும் முக பாவனைகள்: . இருந்தாலும் தேறிடும் 


ஹீரோயின் அண்ணனா பசுபதி , பாவம் , யானைப்பசி சோளப்பொரி கதை தான்

 வில்லனா பாபி சிம்ஹா , ஜெ தீபா மாதிரி அம்போன்னு வர்றார் போறார் பாவம்


 சிங்கம் புலி படம் பூரா வந்து ரசிக்கும்படியான நடிப்பை தந்திருக்கார்  

 3 பாடல்கள் தேறுது , இசை , ஒளிப்பதிவு சராசரி 

 பின் பாதி காட்சிகள்  இழுவை ம், யூகிக்க முடியும் திரைக்கதை _ 


Image result for karuppan movie

நச் டயலாக்ஸ்


1 கால்ல ,கைல அடிபட்டிருந்தா தொடைச்சிட்டு போய் இருப்பேன், கண்ல குத்தி இருக்கான் #Karuppan

2 செய்யப்போற சம்பவம் இந்த ஏரியாவுல யாரும் இதுவரை செய்யாததா இருக்கனும் #Karuppan

3  நீ தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாரு #Karuppan

மண்ணும் சரி , மனுசனும் சரி சூடு ஒரு அளவுக்குதான் தாக்குப்பிடிக்க முடியும்

மாடு ஏறி நிக்கும்போது அதை எதித்து நிக்க ஒரு தில்லு வேணும்,அது அவன் கிட்டே நிறையவே இருக்கு

வசதியான பொண்ணுன்னு தெரிஞ்சும் வளைச்சுப்போட நினைக்கலை பாத்தியா?அவன் தான்யா ஆம்பள

ஆம்பளைன்னா 4 பேர்ட்ட சண்டை போடத்தான்யா செய்வான்,எந்த வம்பு தும்புக்குமே போகலைன்னா அவன் என்ன ஆம்பளை?

என்னடி முத ராத்திரியும் அதுவுமா உன்"புருசன் வெளில படுத்திருக்கான்?எல்லாமே வெளில தானா?
ஆமாண்டி,விடிய விடிய வந்து வேடிக்கை பாருங்க

 சரி , ஒரு 10 டிக்கெட் கொடு, ஃபிரண்ட்சை கூட்டிட்டு வாரேன்

பேசாம சாப்பிடுய்யா,அப்போதான் உடம்புல ஒட்டும்

10 என் பொண்டாட்டி என்னை வேலைக்கு போகச்சொல்லிட்டா,எங்கே போறதுனு தெரில
நம்ம கலெக்டர் 2 நாள் லீவாம் ,போறீயா? ம் சரி

11 மாம்ஸ்,ஒரு தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்,என்ன பண்ணலாம்? ஒயின்ஷாப் ?

12 விவசாயம் பண்றவனை ஒரு காலத்துல இந்த உலகமே சாமியா கொண்டாடப்போகுது


Image result for karuppan movie

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

நாயகி தன்யா ரவிச்சந்திரன் டிரஸ்சிங் சென்சில் நதியா ,உதட்டு சுளிப்பில் கீர்த்தி சுரேஷ் ,முக வசீகரத்தில் கவுசல்யா

ஆலுமா டோலுமா பாட்டை போட்டு விட்டு எல்லாரும் டானஸ் ஆடுவாங்க,விஜய் சேதுபதி பைட் போடறாரு

கணவன் மனைவி அன்னியோன்யம் − முறை மாமன் வில்லத்தனம் ,சராசரி கிராமத்துக்கதை ,இடைவேளை

தூள் புகழ் பசுபதி ,ஜிகிர்தண்டா புகழ் பாபிசிம்ஹா போன்ற ஆளுமைகளை நம்பாமல் ,முழுக்கமுழுக்க விஜய்சேதுபதியையே நம்பியது பின்னடைவு

விவசாயத்தை நம்பி வாழும் நாயகன் கோபத்தில் அன்ன லட்சுமியான சாதத்தட்டை மண்ணில் எறிவது போன்ற காட்சி முரண்

கே பாக்யராஜ் + விஜயகாந்த் காம்போ வின் சொக்கத்தங்கம் பட காட்சிகள் பல இடங்களில் ரிப்பீட் ஆவது திரைக்கதைக்கு பின்னடைவு



Image result for tanya ravichandran images

சபாஷ் டைரக்டர்

1  முன் பாதி முழுக்க கலகலப்பு , கிளுகிளுப்பு என ஜாலியா படத்தை கொண்டு போனது

2  ஹீரோயின் டிரஸ்ஸிங் சென்ஸ்  செம டீசண்ட்

3 அம்மா ,. மனைவி செண்ட்டிமெண்ட் காட்சிகள்



Image result for tanya ravichandran images


லாஜிக் மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  அண்ணனிடம் போய் மன்னிப்பு கேட்கலாம் என ஹீரோ இறங்கி வரும்போது நாயகி தடுப்பது ஏனோ? சண்டைக்கா போறார் ? சமாதானத்துக்குத்தானே?

2   வில்லன் தன் எல்லா திட்டங்களையும் க்ளைமாக்சில் லூஸ் போல் அப்படி உளறி மாட்டுவது ஏன்?

3 காயம் அடைந்த மாட்டை  சிகிச்சைக்காக நெருங்கும் ஹீரோ காளையை இரு புறமும் இரு மரங்களுக்கு இடையே கட்டி சிகிச்சை பார்க்காமல் ஆட்களை நம்பி கயிறை அவர்கள் கையில் கொடுப்பது ஏனோ? 



சி.பி கமெண்ட்-கருப்பன் - 25% சொக்கத்தங்கம்,25% நிறைஞ்ச மனசு, 25% கொம்பன் .லேடீசுக்கு பிடிக்கும், பி சி செண்ட்டர்களில் ஓடும், விகடன் 40, ரேட்டிங் 2.5 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 40 


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)3 /.5

 ஈரோடு அபிராமி  தியேட்டரில் பார்த்தேன்  , ஆனூரிலும் ,  மகா ராஜா விலும்  ரிலீஸ் , ஆனா ஓப்பனிங் இல்லை , சுமாரான கூட்டம் தான் , பிரமோஷன் சரியா தர்லை 
Image result for karuppan movie