Showing posts with label கரிமேடு. Show all posts
Showing posts with label கரிமேடு. Show all posts

Sunday, June 09, 2013

கரிமேடு - சினிமா விமர்சனம் ( குமுதம் )

தினமலர் விமர்சனம்


"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் "கரிமேடு" ஆகியிருக்கிறது. "கொக்கி" பூஜா காந்தி, பொம்பளை கொலை கொள்ளைகாரியாக ஒரு கும்பலுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள தண்டுபாளையா எனும் பகுதியை சார்ந்த கொடூர கொலை கொள்ளைக்காரர்கள் பற்றிய உண்மை கதைதான் "கரிமேடு" படம் மொத்தமும். 1990 - 95ம் ஆண்டு வாக்கில் கர்நாடகா போலீஸ்க்கு பெரும் சவாலாக விளங்கிய தண்டுபாளையா பகுதி கொள்ளையர்கள் இன்று சிறைக்குள் களி தின்று வந்தாலும்,  அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும் குறி வைத்து கர்நாடக முழுவதும் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளன! படம் பார்க்கும் நமக்கு இப்படத்தை பார்த்து கும்பலாக புதிய குற்றவாளிகள் யாரும் உருவாகாமல் இருக்க வேண்டுமே எனும் பயமும் லேசாக எழுகிறது!

கதைப்படி ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஊர் ஊராய் கொத்தனார், சித்தாள் வேலைக்கு போகும் தண்டுபாளையா வாசிகள், அங்கு வசதியான வீட்டை நோட்டமிட்டு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்பது மாதிரி ஒரு பெண்ணை அனுப்பி வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்ததும் கும்பலாக உள்ளே நுழைந்து, வீட்டு பெண்களின் கழுத்தை அறுத்து, கற்பழித்த படி கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்காக வெளியில் உளவு பார்ப்பவர்கள், யாராவது பொதுமக்கள், அப்பகுதி வாசிகள் அந்தப்பக்கம் வந்தால் விசிலடித்து சிக்னல் கொடுத்ததும் இவர்கள் எஸ்கேப் ஆவதும் நமது இதய துடிப்பை எகிற வைக்கும் விதங்களில் படமாக்கப்பட்டுள்ளது. "கரிமேடு" படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது என்றாலும் பலவீன இதயம் உடையவர்களை படுத்தப்படுக்கையாக்கி விடும்படியான காட்சியமைப்புகள் கொடூரம்!!

பூஜா காந்தி, ரவிகாளே, த‌லைமையிலான கொள்ளை கும்பலிடம் புதுமணப் பெண் பிரியங்கா கோத்தாரியும், அவரது அண்ணியும் சிக்கி கற்பழிக்கப்பட்டு சாகுமிடங்கள், இதயமில்லாதவர்களின் இதயத்தையும் உறைய வைத்துவிடுகின்ற காட்சிகள் என்றால் மிகையல்ல! பூஜா காந்தி, ரவிகாளே, ரகு முகர்ஜி, பிரியங்கா கோத்தாரி, மகர்ந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட எல்லோரும் கொள்ளையர்களாகவும், கொள்ளையர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் தங்கள் பாத்திரமறிந்து பயமுறுத்தியிருக்கின்றனர். அதிலும் போலீஸ் அதிகாரியாக வரும் சாய் ரவிசங்கர், ரசிகர்களை மிரட்டும் கொள்ளையர்களையே மிரளடித்திருப்பது சூப்பர்ப்! "வேட்டைக்காரன்" வில்லன் பாத்திரத்திற்கு பின் நடிகர் சாய்குமாரின் ‌சகோதரர் சாய்ரவிசங்கரை தமிழில் பேச வைத்திருக்கும் படம் "கரிமேடு" எனலாம்!


அர்ஜூன் ஜன்யாவின் இசை, ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்டங்களுடன் மதுரை கரிமேடாக தெரியும் படத்தின் வசனக்காட்சிகள், திடீர் திடீர் என கன்னட தண்டுபாளையாவாக மாறுவது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஸ்ரீனிவாச ராஜூ இயக்கத்தில்,
 நரி மனிதர்கள் நிறைந்த "கரிமேடு" - "திகில்மேடு!!"


---------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்

வீட்டில் நீங்கள் தனியாக இருக்கும்போது கதவைத் தட்டி யாராவது தண்ணீர் கேட்டால் இனிமேல் தரமாட்டீர்கள்! இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி!

பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடாகத் தேடி கதவைத் தட்டி தண்ணீர் கேட்பாள் ஒரு பெண். அவளுக்குப் பின்னால் ஏழெட்டு ஆண்கள் இருப்பார்கள். இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால், அவ்வளவுதான். அத்தனை பேரும் உள்ளே நுழைந்து வீட்டில் உள்ளவர்களை காலி செய்து நகைகளைக் கொள்ளையடித்து, பின்னர் கற்பழிப்பையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடையைக் கட்டுவார்கள்.

எங்கெங்கோ நடந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து, குறும்பட பாணியில் டெரராய் ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கன்னடத்தில் காசை அள்ளிய படம் தமிழ் பேசுகிறது!

கதாநாயகியாக அல்லது வில்லியாக கலக்கியிருக்கிறார் பூஜா காந்தி. அலட்சியமான நடையும், வாயில் வைத்த பீடியும், கலைந்த தலையும், குலைந்த புடவையும், எதற்கும் கவலைப்படாமல் குத்துக்காலிட்டு உட்காரும் பாவமும் பயங்கரம். ரொம்ப நாளைக்கு அவரை மறக்க முடயாது!

அவருடன் கூட வரும் வில்லன்கள் எல்லாம் நிஜமான பொறுக்கிகள்தானோ என்கிற சந்தேகம் வருகிறது!

அந்த போலீஸ் அதிகாரி சின்னச் சின்ன க்ளூக்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது ராஜேஷ்குமார் நாவல் டச்!

கொலை பண்ண எவ்வளவோ வழிகள் இருக்கே. எதுக்குடா எல்லோரையும் கழுத்தைக் கத்தியால அறுத்தே கொன்னீங்க? “கழுத்தை அறுத்து முடிச்சவுடனே அந்த இடத்திலேர்ந்து ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம் வரும் பாருங்க. அது எனக்குப் பிடிக்கும் சார்’ வசனம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

கழுத்தை அறுக்கும் காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் படம் பூராவும் வருவது ரொம்ப ஓவர்.

ஜே ஜே படத்தில் நடித்த நிஷா கோத்தாரி குட்டி நாயகியாக வருகிறார். பரிதாபத்துடன் சாகிறார்.

தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையைச் சொல்லும் படத்துக்கு கரிமேடு என்று பெயர் வைத்திருக்கத்தான் வேண்டுமா?

கரிமேடு - உஷார் ரிப்போர்ட்!

குமுதம் ரேட்டிங்: ஓகே

Thursday, May 30, 2013

dandupalya - சினிமா விமர்சனம் 36 +

 

எச்சரிக்கை - இதய பலஹீனம் உள்ளவர்கள்  , கர்ப்பமா - இருக்கும் பெண்கள் , இல்லாத பெண்கள் , 20 வயதுக்கு உட்பட்டவர்கள் , மனோ பலம் இல்லாதவர்கள் , குழப்பமான மன நிலையில் உள்ளவர்கள் , தனிமையில் வாழ்பவர்கள் , வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் , சமூகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் , நிலையான மனமோ, சொந்தமாக முடிவு எடுக்கும் திறனோ இல்லாதவர்கள் , மாணவ ,மாணவிகள்   யாரும் இந்தப்படத்தைப்பார்க்கவோ , பட விமர்சனத்தைப்படிக்கவோ வேண்டாம் என பொது நலன் கருதி  கேட்டுக்கொள்கிறேன்.

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  எந்த அளவுக்கு வல்கரா படம் பண்ண முடியுமோ அந்த அளவு வன்முறையைத்தூண்டும் வகையில் வக்ரமாக படம் எடுத்திருக்காங்க . 



கன்னடத்தில் இது ஆல்ரெடி தண்டுபாள்யா என்ற பெயரில் ரிலிஸ் ஆகி பெரும் சர்ச்சையைக்கிளப்பிய படம் 



பியூட்டி பெண்களூர் என வர்ணிக்கப்படும் பெங்களூரில் தண்டுபாளையம்னு ஒரு  ஊரு. அப்பகுதியில் 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்துள்ளன. இவ்வளவு அக்கிரமங்களை செய்தவர்களை போலீஸார் எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப்படத்தின் கதை.

 



பூஜாகாந்தி கன்னடத்தில் மேலாடை இல்லாமல் நடித்த படம் என்ற விளம்பரத்தோடு  தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப்பிங்  படமா ரிலீஸ் ஆகி இருக்கு


பல தரப்பட்ட வயசு உள்ள 8 ஆம்பளைங்க , ஒரு கொடூர லேடி இவங்க முதல்ல ஏரியாவை நோட்டம் போடறாங்க. வீட்ல தனியா லேடீஸ் இருந்தா அந்த வீட்ல போய் முதல்ல இந்த கொடூர லேடி “ குடிக்க தண்ணி குடுங்க” அப்டினு கேட்கும். அவங்க உள்ளே போன கேப் ல கூட்டாளிங்க உள்ளே  வந்து  கொள்ளை அடிச்சுட்டு , அந்த பொண்ணை கொலை பண்ணிட்டு, அதுக்குப்பிறகு  ரேப் பண்ணிட்டு ( ஆர்டர் மாறி இருக்கேன்னு குழப்பம் வேணாம். அப்படித்தான் பண்றாங்க )  எஸ் ஆகிடறாங்க .


 இப்படிப்பட்ட கொடூரமான கும்பலை போலீஸ் எப்படி பிடிக்குது  என்பதே மிச்ச மீதி கொடூரக்கதை .


படத்தின் ஹீரோ , ஹீரோயின் , வில்லி எல்லாமே  பூஜாகாந்தி தான் செம நடிப்பு . அவர் தம் அடிக்கும் ஸ்டைலும் , அசால்டா கொலையை நேரில் கிட்டக்கா பார்ப்பதும் முதுகுத்தண்டு சில்லிட வைக்கும் நடிப்பு .

தலை பூரா விரிச்சு போட்டு  முகத்தில் கொடூரமும் , கண்களில் அசால்ட்த்தனமும் காட்டி நடித்த அந்த மெயின் வில்லன் நடிப்பு  செம. மற்ற கேடிகளின்  சவத்தனமான முகமே பொதுமானதாக இருக்கிறது .. பின்னணி இசை ஒரே இரைச்சல். திகில் ஊட்ட வேண்டிய இடங்களில் மட்டும் அதிரடி இசை கொடுத்தால் போதாதா? என நினைக்க வைக்கிறது

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க் சீனிலேயே நேரடியாக கதைக்கு வந்து விட்ட  லாவகம்.நகரங்களில் வாழும் மக்கள் , தனியாக வசிக்கும் பெண்கள் எப்படி அலர்ட்டா இருக்கனும்? என கற்றுக்கொடுக்கும் பாங்கில்  அமைக்கப்பட்ட திரைக்கதை



2. தற்கொலை செய்யப்பட்டதாக நம்ப வைக்கும் ஒரு கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் லாவகம் சபாஷ் .  தூக்கு போட்டு தற்கொலை செஞ்சா கை விரல்கள்  விரைப்பா இருக்கும் , இப்படி மூடிய வாக்கில் இருக்காது , கயிற்றின் முடிச்சு  பின்னங்கழுத்தில் தான் இருக்கும் , இப்படி சைடில் இருக்காது என அவர் விவரிக்கும் இடம்  ( ஆல்ரெடி ராஜேஸ் குமார் நாவல்களில் வந்திருந்தாலும் ) சபாஷ் போட வைக்குது



3. பாத்திரத்தேர்வு பாராட்டும் விதமாய் இருக்கு. ஒவ்வொரு ஆளும் நிஜக்கேடியோ என எண்ண வைக்கிறது 





 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சாதா பொது ஜனத்துக்கே எச்சரிக்கை உணர்வும் , ஆபத்து காலத்தில் தற்காக்கும் உணர்வும் இருக்கும், ஒரு போலீஸ் ஆஃபீசர் பைக்கில் போறார். அவருக்கு முன் 20 மீட்டர் தொலைவில் 4 ரவுடிகள் வழி மறிக்க நிக்கறாங்க . அவர் கிட்டே ஒரு தற்காப்பு உணர்வே வர்லையே . அவர் இடுப்புல ரிவால்வர் இருக்கு. அதை எடுக்கலை, பைக்கை வேகமா ஓட்டி எஸ் ஆகி இருக்கலாம். அதைச்செய்யலை. அட்லீஸ்ட் சடன் பிரேக்காவது போட்டிருக்கலாம்.  எதுவுமே செய்யாம அவங்க வந்து அட்டாக் பண்ணும் வரை பார்த்துட்டே இருக்காரே? அந்த போலீஸ் ஆஃபீசர் மன்மோகன் சிங்க் உறவுக்காரரா? 


2. ஒரு ஆளை முடிக்கனும்னா ஃபோட்டோ தரனும் , அல்லது ஸ்பாட்ல ஆளை காட்டனும். 2ம் இல்லாம  இன்ன இடத்துக்கு இந்த டைம்க்கு வர்றவனைப்போட்டுத்தள்ளு என்பது ஏத்துக்கவே முடியலை யே.. 



3. பொதுவா நாய்க்கு மோப்பசகதி அதிகம் .  வீட்டில் காவலுக்கு இருக்கும் வேட்டை நாய்க்கு டீக்கடை பன்னுக்குள்  மயக்க மருந்து வைத்து ரவுடி தர்றான். நாய் எப்படி அதை முகர்ந்து பார்க்காம அதை சாப்பிடுது?



4. ஒவ்வொரு தாக்குதலிலும் பெண்கள் மயக்க நிலைக்கு போயிடறாங்க . எதுக்காக தேவை இல்லாம கொலை பண்றாங்க? என்பதற்கு விளக்கம் இல்லை .எதிர்ப்பு வந்தாலோ, கோர்ட்டில் சாட்சி சொல்லிடுவாங்க என்ற பயம் இருந்தாலோதான் கொலை செய்வாங்க 


5. போலீஸ்க்கு மேட்டர்  தெரிஞ்சாச்சு, கூட்டாளி ஒருத்தனை பிடிச்சுட்டாங்க என்றதும் அலர்ட் ஆகி ஊரை விட்டு எஸ் ஆகாமல் அங்கேயே யாராவது டேரா அடிப்பாங்களா? 

 


6. கொலை செய்யப்படும் காட்சிகள் , ரேப் சீன்கள் நாசூக்காக , குறிப்பால் உணர்த்தும் விதமாய் எடுத்தால் போதாதா? இவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கனுமா?  எப்படி சென்சார்ல அனுமதிச்சாங்க? 



7. திரைக்கதை தெளிவாக கொலை, கொள்ளைச்சம்பவத்தைச்சுற்றி போய்ட்டிருக்கும்போது அந்த தம்பதிகள் கதையில் மட்டும் எதுக்கு தேவை இல்லாத டூயட், செண்ட்டிமெண்ட் காட்சிகள் ? 



8.  மிகப்பெரிய கொலை சம்பவம் ஊர்ல நடந்திட்டிருக்கு. போலீஸ் இரவு நேர ரொந்துக்கு ஏற்பாடு செய்யலையா? 


9. இன்ஸ்பெக்டர் கொலையாளீகளை எதேச்சையாக அன் டைமில் பார்த்து அவங்களிடமே “ ஜாக்கிரதையா இருங்க “ என எச்சரித்து அனுப்புவது செம லாஜிக் சறுக்கல். ஆளுங்க எல்லாம் பக்கா கேடிங்க மாதிரி இருக்காங்க . விசாரணை பண்ண மாட்டாரா? 



10. கோயில் சிலையை கொள்ளை அடிப்பவங்க லோக்கல் சேட்டு க்டைல அடமானம் வைக்க மாட்டாங்க , தங்கத்தை உருக்கி விப்பாங்க, அல்லது வெளியூர்ல தான் விப்பாங்க , அவன் அசால்ட்டா பகல் ல பேரம் பேசுவதும் , இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் அங்கே வருவதும் படு செயற்கை 






மனம் கவர்ந்த வசனங்கள்


1.          என்னடா? ஆஃபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டே?

நான் வேணா போய்ட்டு அப்புறமா வர்ட்டா?


2.          டியர், வயிறு வலிக்குது , டாக்டர்ட்ட போய் உடம்பை காட்டனும்

என் கிட்டேயே காட்டு



3.          ஏம்ப்பா, வெறும் 5,000 ரூபா, 10,000 ரூபா கூலிக்காக கொலையே பண்ணுவீங்களா?


கொலைக்குப்பிறகு  அவங்க போட்டிருக்கும் நகை , வீட்டில்  இருக்கும் பணம் எல்லாம் எங்களுக்கு  எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி 


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் – 39 ( இது கன்னட டப்பிங்க் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் – ஓக்கே 


சி.பி கமெண்ட் - விமர்சனத்தின் முதல் பத்தியை படிக்கவும் 


ரேட்டிங்க் - 2.5 /5 


சொந்த ஊரான சென்னிமலையில் அண்னமார் தியேட்டரில் படம் பார்த்தேன்