Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Thursday, September 16, 2010

பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்

பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
தி.மு.க - த மா க கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர்,பி ஜே பி அனுதாபியாக இருந்தாலும் தான் எழுதும் அரசியல் கட்டுரைகளில் நடுநிலைமை தவறாதவர்,அப்படிப்பட்டவர் இன்று வெளியாகி இருக்கும் துக்ளக் இதழில் எழுதிய தலையங்கத்தின் சாரம் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர் அப்படி என்ன எழுதினார் என்பதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
புதுடெல்லி, செப்.7-

பிரதமர் மன்மோகன்சிங், நேற்று பத்திரிகை ஆசிரியர்களை தனது வீட்டிற்கு அழைத்து, உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்றில், அரசு `குடோன்'களில் வீணாகிவரும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்? இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”

ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே.


நன்றாய் தெரிகிறது நீங்கள் யாருக்கான அரசு என்று. உங்கள் சம்பளம் மட்டும் 5  மடங்கு  உயர்த்தியது போதாது என்பீர்கள்.  ஏழைகள் என்றால் கசக்கிறது. செருப்பால் அடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள்.


இது குறித்து நண்பர் வேந்தன் அரசு கூறியது
நம் நாட்டில் 100 கோடி டன் தானியங்கள் விளையுதுனா, அது முழுமையும்
நாட்டு மக்களுக்கு போய் அடையணும்.
அரசு அவற்றில் பெரும்பான்மை வாங்கி பதுக்கிவச்சா ஏழைமக்கள் என்ன
செய்வாங்க? இது சந்தையில் இருந்தால் தானியங்களின் விலை குறையும் ஏழைகளால்
வாங்க இயலும்..

இதில் ஒரு பகுதியை அழுகி வீணாக்குவது என்பதை சமூக குற்றம்.
உணவுப்பொருட்கள் இருந்தால் என்ன விலை என்றாலும் வாங்கி பசியாறலாம்
இல்லாமலே போனால்? அவர்களால் தாமே தானியங்களை விளைவிக்கத்தான் முடியுமா?

பில்கேட்சு போன்ற ஒரு கோடீசுவரன் வந்து 100 கோடி டன் தானியங்களையும்
வாங்கி கடலில் கொட்டினா அரசு சும்மா இருக்குமா?

அதனால் தானியங்களி வீணடித்த உணவுத்துறை அமைச்சரை கழுவில் ஏற்றணும்.

நீதிபதிகளுக்கு பொலிடகலி கரெக்ட் ஆக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதனால்
அவர்கள் கருத்தை அரசு கட்டாயம் கேட்கணும்.  மேலவையில் உடகார்ந்து
சொன்னால்தான் அறிஞர்களின் கருத்தா?

நண்பர் அசோக் கூறியது
தானியங்கள் விலை கூடினால், அடுத்த முறை போட்டி போட்டு கொண்டு விலை அதிகமுள்ள தானியங்களை விவசாயிகள் விளைவிப்பார்கள். அதே போல் விலை குறைந்தால் அந்த தானியங்களை விளைவிக்க நாட்டம் காட்ட மாட்டார்கள்.

தானியத்தை வீணாக்குபவனும் நட்டத்தை அடையாமல் இல்லை. நட்டத்தை நோக்கி தொழில் நடத்த அவனும் மூடன் அல்ல. தானியம் வீணாகும் நிலையில், போக்குவரத்து செலவு, தானிய விலையை விட அதிகமாக இருந்தால் தவிர அவன் அடி மாட்டு விலைக்கு தன் பொருளை விற்றே தீருவான்.

சந்தை விதிகள் சுதந்திரமாக இயங்க விடுங்கள். அதை விட திறனான வழி முறைகள் வேறு இல்லை.


இப்போது மேட்டருக்கு வருவோம்.சோ அவர்கள் பிரதமர் செய்ததும் ,சொன்னதும் சரிதான் என தலையங்கம் எழுதி இருக்கிறார்.ஏழைகள் பட்டினி இருந்தாலும்  பரவாயில்லை,உணவுப்பொருள்கள் வீணானாலும் பரவாயில்லை,சட்டப்படி தான் நடக்கனும் என்கிறார்

என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

1.ஜெ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரே அது சட்டப்படியா?

2.கலைஞர் 25 தலைமுறைக்கு கோடிக்கணக்கி சொத்து சேர்த்தாரே அதுவும் சட்டப்படியா?

3.ஆ ராசா 1000 கோடி ஊழல் பண்ணியும் கூட்டணி அதர்மப்படி அதை கண்டுகொள்ளாமல் பி எம் இருக்காரே அது சட்டப்படியா?

4.போபர்ஸ் ஊக்ஷலில் ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்டது தெரிந்தும் மூடி மறைக்கப்படதே,அது சட்டப்படியா?

ஏழைகளுக்கு ஒரு நீதி,பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும். 4 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை என.கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை நடக்கும்போது சட்டம் மீறப்பட்டால்தான் என்ன? மனிதாபிமானம் எப்போது உயிர் பெறும்?