Showing posts with label ஒரு கை ஓசை – சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி). Show all posts
Showing posts with label ஒரு கை ஓசை – சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி). Show all posts

Thursday, September 17, 2020

ஒரு கை ஓசை(1980) – சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி)

 


ஒரு  கை  ஓசை – சினிமா  விமர்சனம்  ( ரொமாண்டிக்  காமெடி)

 

ஹீரோ  சின்ன வயசுப்பையனா இருந்தப்போ  அம்மா  ஆத்துல  தத்தளிக்கறதைப்பார்த்த  அதிர்ச்சில  பேசா  மடந்தை  ஆகிடறாரு, வசனத்தாலயும், காமெடிலயும் கலக்கும்  ஒரு நபர்   படம் முழுக்க  பேசாத கேரக்டர்  ஏற்கத்தனி துணிச்சலும். தைரியமும்  வேண்டும், ஆனா  என்ன ஒரு ஆச்சரியம்னா  வழக்கமா  ஹீரோ  பேசும்  படங்களை  எந்த  அளவு ரசிக்க  முடிந்ததோ  அதே  அளவு இதிலும்   ரசிக்க  முடிவதே

 

ஹீரோயின்  ஒரு டாக்டர் , அந்த  கிராமத்துக்கு  புதுசா  வந்திருக்கார். இன்னொரு ஹீரோயின்  ஹீரோவுக்கு  முறைப்பொண்ணு , ஹீரோ வீட்டிலேயே வளர்றார். முறைப்பையனைக்கட்டிக்க ஆர்வமா இருக்கார்

 

ஹீரோ லேடி  டாக்டர்  கை பட்டதும் லா லலல்லால  என  மன்சுக்குள்  உறசாகமா உணர்றார்.   டாக்டரின்  சமீபம் கிடைக்க  அடிக்கடி எதுனா  காரனம் சொல்லி காயம் உண்டாக்கிட்டு   பேசண்ட்டா  போறார்.தன் காதலை  அவர்  கிட்டே    சொல்ல  சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்துட்டு  இருக்கார். ஒரு கட்டத்துல  முறைப்பொண்ணுக்கு  ஹீரோவின்  காதல்  விஷயம்  தெரிய  வர  அவர்  முதலில் புழுங்கினாலும் பின் ஒதுங்கிக்கறார்

 

ஹீரோ  டாக்டர்   கிட்டே  தன்  காதலைச்சொல்லும்போது  அவர்  அப்போ அதை  ஏத்துக்கலை.  டாக்டருக்கு  ஏற்கனவே  ஒரு காதலர்  இருந்த்தும்  அவர்  மூலமா 5  வயசுப்பெண்  குழந்தை  இருப்பதும்  தெரிய  வருது. இடை  வேளை

 

 இதுக்குப்பின்  ஹீரோ  எடுக்கும் முடிவு என்ன?  பழைய  ஜிகிடி  கதவைத்திறடி என மாமன்  மகளையே  கல்யாணம்  செஞ்சாரா?  இல்லை  என்ன  முடிவெடுத்தார்  என்பதை  சுவராஸ்யமான  சம்பவங்களோடு  யூ ட்யூபில்  காண்க

 

ஹீரோவா  ஜனரஞ்சக  இயக்குநர்  கே பாக்யராஜ். இவர்  படம் பூரா  பேசாத  கேரக்டர்  என்பதாலாயே இத்தனை  நாட்களாக  அசால்ட்டா பார்க்காம விட்டு வெச்ச  ஒரு படம் . வசனம்  தான் தன்  முக்கிய  பிளஸ்  என தெரிஞ்சும்  வசனம்  பேசாமயே  காமெடி , செண்ட்டிமெண்ட்  காட்சிகளை  கச்சிதமாக  தந்த  பாங்கு  வியக்க வைக்குது.  பிரமாதம்

 

 ஹீரோயினாக  டாக்டராக  அஸ்வினி . ஓவியம்  மாதிரி  அழகான  முகம், அருமையான  நடிப்பு , ஓப்பனிங்  சீனில்  வழி கேட்டு    அவமானப்படுவதும் , நோஸ்கட்  செய்யப்படும்போதும்  கோபப்படாமல்  அமைதியாகப்புன்னகைக்கும்  விதம்  மனதைத்தொடுகிறது

 

முறைப்பெண்னாக  வருபவர்   நடிப்பு  கச்சிதம்

 

சுடலையாக  வரும் சங்கிலி  முருகன்  நடிப்பு   அருமை . 2 ரூபா  காசு கேட்டு தராத  டாக்டரிடம்  மிரட்டி விட்டு  பின் அவரை  ரவுடிகளிடம்  இருந்து  காப்பாற்றும்  சீன்  அருமை

 

கே பாக்யாராஜ்  படங்களில்  தவறாமல் இடம் பெறும் கல்லாப்பட்டி  சிங்காரம்   இதிலும் ஆஜர் , அவரது  கணீர்க்குரல்  பெரிய  பிளஸ்  அவருக்கு

 

ஹீரோவின் அப்பா  கேரகட்ர்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு ,  வீட்டில்  வளரும்  முறைப்பெண்னை  தன் மகனுக்குக்கட்ட வ்ளர்த்தும்  பலி ஆடு என ஊர் பேசுவதைக்கண்டு  மனம் மருகுவது  டச்சிங்

 

 சபாஷ்  டைரக்டர்

 

 1   டாக்டராக  வரும் அஸ்வினி  ஓ[ப்பனிங்  சீனிலேயே   அவர்  யார்  என்பதை  எதிர்பார்க்க  வைக்கிறார். டைரக்டரின்  பிறந்த   ஊரான  ஈரோடு – கோ-பிச்செட்டிபாளையம் – வெள்லாங்கோயில்  கிராமத்தைக்கதை  நடக்கும்  களமாக  கொண்டு வந்தது  சிறப்பு

 

2   தண்டவாளத்தில்  தலை கொடுத்துப்படுக்கும் ஹீரோ  அது  சூடாக  இருக்க  சட்டையைக்கழட்டி தலையணையாக  படுப்பதும்   ரயில்  வேறு  தண்டவாளத்தில்  வருவதும்  காமெடிக்குக்காமெடி , கலைஞரின்  ரயில்  மறியல்  போராட்டத்தையும் நக்கல்  பண்ன  மாதிரி  ஆச்சு

 

3   தற்கொலை  முயற்சி  என்பது  சோக  நிகழ்வு அதில்  காமெடி  செய்வதெல்லாம்  செம  ஐடியா  அவரது  பல  முயற்சிகள்  தோல்வியில்  முடிவதை  காமெடியாக  சொன்ன   விதம்  அருமை

 

4   டாக்டரின்  குழந்தையுடன் ஹீரோ  அட்டாச்மெண்ட்  ஏற்படுவது  , குழந்தை  செண்டிமெண்ட்  காட்சிகள்  எல்லாம் பக்கா

 

5  முந்தானை  முடிச்சுஹீரோ  கேரக்டரை நைசாக  டாக்டர்  கேரக்டர்  ஆக்கிய விதமும்   அந்த  கேர்கடர்  வடிவமைப்பும்

 

நச்  வசனங்கள்

 

1        நம்ம  டீக்கடைக்கு  எதிர்லயே  ஹாஸ்பிடல்  வந்ததால  டீக்கடைக்கு  இப்போ நல்ல கூட்டம்

 டீக்கடைக்கு  வந்தவங்க  எப்படியும்  ஆஸ்பத்திரி  போயே ஆகனும்கறதால     அங்கேயும்  நல்ல  கூட்டமாம்

 

2   என்னப்பா?  டீத்தண்ணி  போடவா? காபித்தண்ணி   போடவா?

 

  டீத்தண்ணியே போடு ஆனா தண்ணி  கம்மியா

 

 

3        வாத்து  மடையன்னு  என்னை  சொல்றீங்களே  அப்டின்னா என்ன ?

 பறவைகள்லயே   வாத்து  மாதிரி  முட்டாள்கள்  கிடையாது , கூட்டமா  ஓடிட்டு  இருக்கும்போது வேட்டைக்காரன்  வானத்தை  நோக்கி சுட்டாக்கூட தன்னைத்தான் சுட்டதா  நினைச்சு  எல்லாமே  தரையோட படுத்துக்குமாம். வாத்து  தலையை  வெட்டினாக்கூட அது  தெரியாம  கொஞ்ச  தூரம்  நடக்குமாம்

 

4        நம்ம  தலைவிதியை  முழுக்க  முழுக்க  பிரம்மன்  தான் எழுதுவான்னு  சொல்லிட  முடியாது

5        செருப்பு கடிச்சு  செத்தவனும் இருக்கான், பாம்பு கடிச்சு பொழச்சவனும் இருக்கான் ( பழமொழி)

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1        ஹீரோவின்  முறைப்பெண்  அவர்  மேல்  அவ்ளோ அட்டாச்மெண்ட்ட்டாக இருப்பவர்  ஹீரோ  டாக்டரை  லவ் பண்றார்  என்பது  தெரிஞ்சதும்  நாசூகாக  ஒதுங்குவது  எப்படி?  ஓப்பனிங்  சீனில் அவர்  ஹீரோயின் கேட்கும் கேள்விக்கு  எகனைமொகனையாக  பதில் சொல்லி தான்  அப்படிப்பட்ட  எடுத்தெறிஞ்சு  பேசும்  கேரக்டர்  தான்  என ஒப்புதல்  வாக்குமூலமே தர்றார்  அப்படிப்பட்ட  ஒருவர் எந்த  தகறாரு,ம்  பண்ணாமல்  ஒதுங்குவது  எப்படி?

2        முறைப்பெண் தனக்கு  மாமா  ஜோடி ஆக மாட்டார் என தெரிந்ததும் அவரை  மறக்க , அடுத்து  வேறு  ஒருவரை  விரும்ப கொஞ்சம்  கால அவகாசம்  எடுத்துக்க வேண்டாமா? ஆனா அந்த  மடம்  ஆகாட்டி சந்தை  மடம் என்பது போல்  டக்னு மனசு மாறுவது எப்படி?

3         இது  எங்க  குழந்தைதான்  என டாக்டர்  ஒரு சீனில்  சொல்றார். அப்போ பக்கத்தில்  அவர்  தம்பி  இருக்கார். என் குழந்தை  என்று தானே  சொல்லனும்? அர்த்தம்  மாறுதே?

4          க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம்  முன்  டாக்டர்  ஹீரோவின்  அப்பாவிடம்  சம்ப்ந்தம்  பேசும்  சீன். முறைப்படி டாக்டர்  ஹீரோவிடம்  தன் சம்மதம்  சொன்னால் மிச்சத்தை  அவர்  பார்த்துக்குவாரே?  அல்லது  தன்  தம்பி  மூலம்  பேசச்சொல்லி இருக்கலாம்.அவரே  தன் மேரேஜ் பற்றி மாப்ளையின் அப்பாவிடம்  பேசுவது  கிராமத்தில்  செட் ஆகுமா?

சி.பி ஃபைனல் கமெண்ட் – கே  பாக்யராஜின் சொந்தபப்டம்  இது. முதல்  மனைவி  பிரவீணா  அமரர்  ஆகும்  முன் அவர்  பெயரில்  தயாரித்த  படம் , முன் பாதி  கலகலப்பு ஆண்களுக்குபொபிடிக்கும்,  பின் பாதி  பேபி செண்ட்டிமெண்ட் , லேடீசுக்குப்பிடிக்கும் . பார்க்கலாம்  ஒரு முரை   ரேட்டிங்  3/ 5