Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Wednesday, June 27, 2012

சுஜாதா - ஒரு பார்வை - காலச்சுவடு கண்ணன் கட்டுரை


சுஜாதா ஒரு முரண்நோக்கு
கண்ணன்
கடந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது.
சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெகுஜன தளத்தில் எழுதவந்தவர்களுக்குப் பின்னர், சில தலைமுறை வெகுஜன எழுத்தாளர்கள் ஜொலித்து மறைந்த பிறகும் சுஜாதா வெகுஜன தளத்தில் தொடர்ந்து நாயகனாக நின்றார். இன்று வெகுஜன தளத்தில் நுழையும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் எவ்வாறு வேகமாகத் தேக்கமடைந்து காலாவதியாகிவருகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய செய்தி இது.



பலரையும் போல் சுஜாதாவை நானும் என் பதின்களில் வெகுஜன இதழ்களில் படித்திருக்கிறேன். அவரது நாவல்கள்மீதான ஆர்வம் பதின்கள் முடியும்வரை நீடிக்கவில்லை. பின்னர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு காலச்சுவடு ஆசிரியராக அவருடனான உறவு பெரிதும் எதிர்நிலையிலிருந்தே ஏற்பட்டுள்ளது. வணிகப் பண்பாட்டிற்கு எதிராக ஒரு சிற்றிதழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி. அக்காலகட்டத்தில் வெகுஜனப் பண்பாட்டின் நாயகனாக நின் றவர் சுஜாதா. இருப்பினும் காலச்சுவடு சுஜாதாவை உரிய இடங்களில் அங்கீகரிக்கத் தயங்கவில்லை.
'தமிழ் இனி 2000' நிகழ்வை நாங்கள் நடத்தியபோது, 'கணினியும் தமிழும்' அமர்வு அவருடைய தலைமையிலேயே நடந் தது.


 எங்கள் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் 'அற்றைத் திங்கள்' நிகழ்விற்கு அவரை அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவரது உடல்நிலை கருதி அழைக்காமலேயே இருந்துவிட்டோம்.
அதேநேரம் அவருடைய எழுத்துக்கள் சார்ந்தும் கருத்துகள் சார்ந்தும் பல முரண்பட்ட கட்டுரைகளும் விவாதங்களும் காலச்சுவடில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவும் காலச்சுவடை அதிகமும் பாதகமாகவே சுட்டிவந்திருக்கிறார். ஆனால், சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பற்றி அவர் எப்போதுமே உயரிய மதிப்பீட்டை வெளிப்படுத்திவந்தார்.



சு. ரா. வுக்கு சுஜாதா பற்றிய மதிப்பீடு இருந்தது. அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று சு. ரா. கருதினார். தன்னை வெகுஜன தளத்தில் சமரசப்படுத்திக் கொண்டதால், தமிழ்ச் சமூகம் அவரது பங்களிப்பைக் குறைவாகவே அடைந்துள்ளது என்றும் கருதினார். அவரது மேலோட்டமான அணுகுமுறை, பாலியல் கொச்சைப்படுத்தல் பற்றிய கடும் விமர்சனமும் சு.ரா.வுக்கு இ ருந்தது. ஒரு எதிர்வினையில் 'வணிகச் சீரழிவின் நாயகன்'1 என்று சுஜாதாவைச் சுட்டினார் சு.ரா. அறிவியல் தமிழுக்கு அவரது பங்களிப்பைப் பற்றிய மரியாதையும் சு. ரா. வுக்கு இருந்தது. சிங்கப்பூர் நா. கோவிந்தசாமிக்கு எழுதிய அஞ்சலிக் கட்டு ரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:



கணினியில் பொது விசைப்பலகை - பொதுக் குறியீட்டு முறை உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தொடர்ந்து அவர் முனைந்து வந்தார் என்பது தெரிகிறது. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் எந்தளவுக்கு இன்று நமக்குப் பயன்படும்? இவை பற்றி வாசகர்கள் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண் டும். கணினித் துறையில் நுட்ப விபரம் கொண்ட ஒருவர்தான் இதனைத் தெளிவுபடுத்த முடியும். தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சுஜாதா இதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்2.
தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவும் சில சமயங்களில் அலட்சியமாகவும் சுஜாதா எழுதுவது பற்றிய வருத்தமும் அவருக்கு உண்டு.


குவளைக்கண்ணனுக்கு அவரது கவிதைத் தொகுப்பு பற்றி சு. ரா. எழுதிய ஒரு கடிதம் நூல் மதிப்புரையாக காலச்சுவடில் வெளிவந்தது.
'கிட்டதட்ட கவிதைகள்' என்ற உபதலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். இது கவிதைக்கு எதிரான ஒரு வேடிக்கை மனநிலையை உருவாக்குகிறது. இந்த வேடிக்கை மனோபாவம் தமிழில் ஒரு இதழாலும், ஒரு பிரபல எழுத்தாளராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது'3
என்று குறிப்பிடுவது சுஜாதாவைத்தான் என நினைக்கிறேன். (அழுத்தம் என்னுடையது)



சுஜாதா ஒன்றிரண்டுமுறை தெற்குப்பக்கம் வந்தபோது வீட்டிற்கு வந்துவிட்டு சு. ரா. வைப் பார்க்க முடியாமல் போனது பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். 80களின் இறுதியில் இருக்கலாம், பீட்டர் புருக்கின் 'மகாபாரதம்' நாடக நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றபோது சு. ரா. வைச் சந்தித்த சுஜாதா, அவரும் இணைந்துகொண்டு காலச்சுவடைத் தொடர்ந்து நடத்து வது பற்றிப் பேசியிருக்கிறார்.


 அந்தத் திட்டத்தை சு. ரா. முன்னெடுக்கவில்லை. சுஜாதா இதனால் மிகவும் மனம் புண்பட்டார் என நினைக்கிறேன். 1991இல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளிவந்தது. கோமல் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் பிரதி ஒன்று சுபமங்களாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இதழிலேயே சுஜாதாவின் மிக எதிர்மறையான விமர்சனம் சுபமங்களாவில் வெளிவந்தது.


 சுஜாதாவே தன்னை அழைத்து, தான் விமர்சனம் செய்வதாகக் கூறிப் பெற்றுக்கொண்டதாகக் கோமல் கூறினார். அவ்வாறு தான் செய்வது பற்றியும் முற்றிலும் தீவிரத் தளம் சார்ந்த அம்மலரை விமர்சிக்கத் தனக்கிருக்கும் தகுதி பற்றியும் சுஜாதாவுக்கு இருந்த உறுத்தல் அக்கட்டுரையிலேயே வெளிப்பட்டது.


இதற்கான உன் தகுதி என்ன என்றால் காலச்சுவடு மதிப்புரைக்காக சுபமங்களாவுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்ப - அவர்கள் எனக்கு அதை அனுப்பி விமரிசனம் எழுதச் சொன்ன ஒரே காரணம்தான். இருந்தும் இதை எழுதுவதில் எனக்கு இஷ்டமே.


சு. ரா. வின் கடுமையான எதிர்வினையும் சுபமங்களாவில் (ஏப்ரல் 92) வெளிவந்தது. காலச்சுவடில் பங்கு பெற முடியாது போனதால் தொடர்ந்து காலச்சுவடைச் சீண்டிவந்தார் என்றும் பிற்காலத்தில் காலச்சுவடு 'போன்ற' ஒன்றை உருவாக்கித் தன் ஆற்றாமையை சுஜாதா தீர்த்துக்கொண்டார் என்றும் எண்ண இடமிருக்கிறது.


n
2000ஆம் ஆண்டை ஒட்டி சுஜாதாவை அவர் வீட்டில் நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். சந்தித்த காலத்தையும் நோக்கத் தையும் இப்போது தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காலச்சுவடு இதழைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியிருந்ததை அப்போது 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தோம். அதைக் கு றிப்பிட்டு 'உண்மையிலேயே எனக்குப் புரியவில்லையப்பா' என்றார்.


அதற்கு முன்னர் பேச்சுவாக்கில் சில தண்டிதண்டி ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருந்தார். அவை கண் முன்னால் மேசையிலிருந்தன. 'இவை புரியும்போது காலச்சுவடு புரியவில்லையா?' என்று கேட்டேன். சில கட்டுரைகள் புரியவில்லை என்றார். 'சில' என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே என்றேன். சிரித்துக்கொண்டே 'அப்ப தப்புதான்' என்றார்.



அறிவியல் புனைகதைகள் எழுதுவது பற்றிய ஒரு பட்டறைக்குக் காலச்சுவடு ஒழுங்குசெய்தால் வந்து நடத்து கிறேன் என்றார். ஆர்தர். சி. கிளார்க் போன்று அறிவியலின் வளர்ச்சியை முன் உணரும் படைப்புகள் தமிழ்ச் சூழலில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. மேலும் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு என்பன மிகுந்திருக்கும் சூழலில் ஒரு நெகிழ்ச்சியை அறிவியல் கதைகள் அளிக்கக்கூடும்.


 பகுத்தறிவும் அதீதங்கள் பற்றிய நம்பிக்கையும் இரட்டைப் பின் னல்போல இருக்கும் தமிழ்ச் சூழலில், மென்பொருள் வட்டத்திற்கு வெளியே அறிவியல் புனைகதைகளின் பொருத்தத்தை நான் உணரவில்லை. அதை அவரிடம் சொன்னேன். மாற்றுக் கருத்துகள் பற்றிய பொறுமையின்மை ஏற்பட்டுவிட்ட வயது அப்போது அவருக்கு.



பின்னர் அவர் ஆலோசகராகப் பணியாற்றிய மீடியா டிரீம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு புளிய மரத்தின் கதையைத் திரைப்படமெடுக்க அவர் யோசனை கூறியிருந்ததை அடுத்து அவரை ஓரிருமுறைகள் அலுவலகத்தில் சந்தித்தேன். அதில் ஆசிரியருக்கு உரிய தொகையின் போதாமையைச் சுட்டி நான் வாதிட்டதை அவர் ரசிக்கவில்லை.


படத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம்கூட நூலாசிரியருக்கு இல்லை. எனக்குத் தொகையைவிடவும் இலக்கியவாதிகளை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்ற சினிமாக்காரர்களின் முன் முடிவை உடைப்பது அவசியமாகத் தோன்றியது. பின்னர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இடையீட்டில் சமரசமாகி அந்த முயற்சி தொடங்குவதற்குள் நிறுவனம் பொளிந்துவிட்டது.



தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பை இவ்வாறு தொகுக்கலாம் என நினைக்கிறேன்:



1. சமகாலத் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.



2. தான் செயல்பட்ட வெகுஜன தளத்தில் வாசகர்களுக்குத் தொடர்ந்து தீவிர ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வந்தி ருக்கிறார்.



3. தொழில்நுட்பத் தமிழுக்கு அவருடைய பங்களிப்பு மிக வலுவானது. சிக்கலான அறிவியல் செய்திகளை எளிய முறையில் விளக்கிவிடுவதில் அவருடைய ஆற்றல் தன்னிகரற்றது.



(பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைத் தமிழன் எக்ஸ்பிரசில் தொடராக எழு திக்கொண்டிருந்தார். அதில் அமெரிக்கா செல்லும்போதும் திரும்பும்போதும் ஏற்படும் ஜிவீனீமீறீணீரீ ஐ விளக்க, 'மறுநாள் கிளம்பி முதல் நாள் வருவதுபோல' என எழுதியிருந்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வருகிறது.)



2005 நவம்பரில் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் சுஜாதாவைக் கடைசியாகச் சந்தித்தேன். உடல்நலம்குன்றிக் காணப்பட்டார். சுந்தர ராமசாமியின் மறைவைப் பற்றிய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். 'பெரிய இழப்பு, பெரிய இழப்பு' என மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார்.



அதெல்லாம் சம்பிரதாயமானதாக இல்லாமல் ஆத்மார்த்தமானதாக இ ருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று நான் படித்த கட்டுரையைப் பற்றி உயர்வாக ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' பத்தியில் எழுதியிருந்தார். இனி அதிகமும் முரண்படவும் அவ்வப்போது பாராட்டவும் சுஜாதா இல்லை.


n
ஒரு தலைமுறைத் தமிழ் வாசகர்களுக்குப் பெண் பற்றிய விடலைத்தனமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் சுஜாதா. தனது சாதிச் சங்கங்களுடன் அவர் கொண்டிருந்த உறவை அவரே பதிவுசெய்திருக்கிறார். அவர் புறக்கணித்து ஒதுக்கிய 'காலச்சுவடு 1991 ஆண்டு மல'ரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் ஒன்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் 'ராமஜென்ம பூமி: ஓர் இந்தியப் பார்வை.'



சென்னையிலிருந்து வெளிவரும் சமநிலை சமுதாயம் என்ற 'முற்போக்கு மாத இத'ழின் கௌரவ ஆசிரியர் ஏவி. எம். ஜாபர்தீன் மலேசியாவில் வசிப்பவர். அவர் சுஜாதாவுக்கு எழுதிய அஞ்சலியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் 'கோயில் ஒழுகு' பற்றி அவர் எழுதும்போது அது முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய இருவர், சுஜாதாவுக்குக் கடுமையான கடிதம் எழுதினர். சுஜாதா தானாக ஏதும் கூறவில்லை.


 கோயில் ஒழுகு பற்றி கூறப்பட்டவற்றை அப்படியே எழுதப்போய் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தூஷணையுடன் எழுத, மனம் நொந்த சுஜாதா இனி இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றித் தாம் ஏதும் எழுதப் போவதில்லை என்பதுபோல் 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் கு றிப்பிட்டார்.5 முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இது. புகழ்பெற்றவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் இன் பம், தர்க்கத்திற்கும் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த இன்பத்தை ஜாபர்தீன் அவர்கள் சுஜாதாவிடமிருந்து நிறைவாகப் பெற்றிருக்கும் செய்தி அவரது அஞ்சலிக் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது.



மேற்படி விஷயத்தில் சுஜாதா 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எழுதியது இதுதான்:


அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான 'கோயில் ஒழுகு' புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். . .


. . . 'கோயில் ஒழுகு' நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட் டிருக்கிறார்.
நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள்போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.



யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். (ஆனந்த விகடன் 17.4.05) (அழுத் தம் என்னுடையது).
இது பற்றிய விவாதம் காலச்சுவடு இதழில் நடந்தது. கோம்பை எஸ். அன்வர், ஜெ. ராஜா முகமது, ஆ. சிவசுப்பிரமணியன், பொ. வேல்சாமி ஆகியோர் பங்களித்தனர். இவற்றை ஜாபர்தீன் அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.



விருந்தினர் வீட்டிற்கு வருவது, அதுவும் நாம் ஆதர்சிப்பவர்கள் வருவது மகிழ்ச்சியான செய்திதான். சுஜாதா குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வந்தது பற்றி ஜாபர்தீனின் உணர்வுகள் இவை:



1993இல் நான் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு நாள் மாலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்" என்றார். உடனே அவரைச் சந்தித்தேன். அவருடன் அவர் துணைவியார் திருமதி சுஜாதா ரங்கராஜனும் அவருடைய மாமனார், மாமியார் ஆகியோரும் வந்திருந்தனர்.


 அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லும்போது, "எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்தான். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்தமாட்டீ ர்களே?" என்றேன். "யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்பதுதான் எங்கள் குறை. எங்களுக்கு சைவ சாப்பாடு தாரு ங்கள். நாங்கள் வருகிறோம்" என்றனர் அனைவரும்.
நான் என் மனைவியிடம் கூறி அசைவ உணவுகளை அப்புறப்படுத்திவிட்டு சைவம் மட்டுமே சமைத்து அவர்களை வி ருந்துக்கு அழைத்தோம். எவ்விதத் தயக்கமுமின்றி அனைவரும் வந்து விருந்துண்டனர். தொடர்ந்து கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்பிய அவர்களுக்கு எனது காரையும் டிரைவரையும் அவர்கள் மலேசியாவில் தங்கி இருக்கும்வரை கொடுத்தேன்.



மிகவும் மகிழ்வோடு அவர்கள் சுற்றுப்பயணம் நிகழ்ந்தது.6
ஆச்சாரமான அய்யங்கார்கள் நம் வீட்டில் தங்கி, உணவருந்தி கௌரவித்துவிட்டார்களே என்ற ஜாபர்தீன் அவர்களின் பெருமிதம் இ ன்றைய காலத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றது. மேற்படிப் பதிவில் விரவிக்கிடக்கும் புலால் உணவு பற்றிய ஜாபர்தீன் அவர்களின் தயக்கங்களும் குற்ற உணர்வும் சமூகவியல் ஆய்வுக்கு உரியவை.
n
சுஜாதா ஆர்வத்துடன் விரும்பிச் செயல்பட்ட தளம், வெகுஜன வணிகத்தளம். அத்தளத்தில் இருந்து அவருக்குச் செலுத் தப்பட்ட அஞ்சலிகள் பல ஆத்மார்த்தமானவை. சுஜாதாவால் பயன்பெற்றவர்கள், பயன்பெறத் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு மட்டும் அவரைப் பற்றி உதிர்க்கத் தொடங்கிய மிகையான புகழாரங்களை, 'நன்றி விசுவாசத் தந்திரம்' என்று புறக்கணி த்துவிடலாம்.



 பெண்ணியமும் திராவிடச் சித்தாந்தமும் பேசுபவர்கள் சுஜாதாவின் கருத்தியல் தொடர்பாக மேற்கொள்ளும் விமர்சன மௌனத்தையும் இதே தொடரில் அடக்கிவிடலாம்.


தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம்


. இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.


என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற 'முழு உண்மை'மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் - சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது - உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


நன்றி - காலச்சுவடு

Monday, March 05, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 5

இந்த உலகத்துல நல்ல பேர் எடுக்கறதுங்கறது பசுமாட்டிடம் தினமும் ஒரு சொம்பு பால் கறந்து  ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கற மாதிரி.. கெட்ட பேர் எடுக்கறதுங்கறது பால் கண்ட்டெயினர்ல  ஒரு துளி விஷம் படற மாதிரி.. ரொம்ப நாளா சம்பாதிச்சு வெச்சிருக்கற நல்ல பேரை ஒரு சின்னத்தவறால இழக்க வேண்டிய சூழல் அல்லது ஒரு மாற்று குறைவான மதிப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலை எல்லா மனிதர்களோட வாழ்க்கைலயும் ஒரு முறையாவது நிகழும்.. என் வாழ்க்கைல, அதாவது பத்திரிக்கை உலக வாழ்க்கைலயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது..

பத்திரிக்கை உலகில் படைப்புகள் அனுப்புவோர்க்கு ஒரு எழுதப்படாத விதி உண்டு.. அதாவது எந்த படைப்பை அனுப்பினாலும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் அதிக பட்சம் 6 மாதங்கள் வரை அந்த படைப்பை மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது.. 

ஆர்வக்கோளாறில் சில சமயம்  சிலர் ஒரே படைப்பை இரண்டு வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்பி துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் ஒரே நேரத்தில் பிரசுரம் ஆவது உண்டு..

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வந்த ஒரு பாட்டை கிண்டல் பண்ணி ஒரு ஜோக் எழுதினேன்.. 

தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

 தையா தையா  தையா அப்டின்னா என்ன? அப்டினு  ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம்


 இந்த ஜோக்கை பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் உல்லாச ஊஞ்சல் என்ற இதழுக்கு அனுப்பினேன்..அது ஒரு மாத இதழ்.படைப்பு அனுப்பி 2 மாதம் வரை வர வில்லை.. பிறகு கல்கி வார இதழுக்கு அனுப்பினேன். 3 வாரங்கள் வர்லை.. அதன் பின் தினகரன் வசந்தம் வார இதழுக்கு அனுப்பினேன்..

இந்த இடத்தில் நான் படைப்புகளை அனுப்பும் முறை குறித்து சொல்லிடறேன்.. நான் வழக்கமா போஸ்ட் கார்டில் ஜோக்ஸ் எழுதி அனுப்புவேன்.. ஒரு புத்தகத்திற்கு 20 ஜோக்ஸ் அனுப்பினால்  அந்த இதழ் பெயர், அனுப்பிய தேதி, ஜோக்ஸ் இவற்றை  டைரியில் குறித்து  வைத்துக்கொள்வேன்.. 3 மாதங்கள் கழித்து  எந்தந்த படைப்புகள் பிரசுரம் ஆனதோ அதை அடிச்சுட்டு பிரசுரம் ஆகாத படைப்பை வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்புவேன்.

அப்படி அனுப்பற ஜோக்ஸ் பொதுவானதாக இருக்கும்.. அதாவது டாக்டர்-நர்ஸ்-பேஷண்ட்ஸ் ஜோக்ஸ், கோர்ட் கபாலி ஜோக்ஸ், அரசியல்வாதிகள் ஜோக்ஸ்,இந்த மாதிரி டாபிக்ல அனுப்புவேன்.. அந்த ஜோக்ஸ் எப்போ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்.. ஆனா டாப்பிக்கல் ஜோக்ஸ் எனப்படுபவை அந்தந்த கால கட்டத்தில் படிச்சாத்தான் நல்லாருக்கும், புரியும்.. 

உதாரணமா இப்போ நயன் தாரா பச்சை குத்தினதை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போறதை கிண்டல் பண்ணி எழுதுன ஜோக்ஸை , அல்லது பிரபு தேவாவுக்கு அல்வா குடுத்த ஜோக்கை இன்னும் 6 மாசம் கழிச்சு எழுதுனா புரியாது, மேட்சா இருக்காது.. அதுக்குள்ள அவங்க அடுத்த பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க ஆ:ளை மாத்தும்போது நாம ஜோக் லைனை மாத்திடனும்..

 ஓக்கே கம் டூ த மேட்டர்.. உயிரே பட பாடல் வெளியீட்டப்ப எழுதி அனுப்பப்பட்ட ஜோக்  3 மாசங்களாக வராததால் கல்கிக்கு அனுப்பினேன்.. கல்கி புக்ல ஒரு வரையறை வெச்சிருந்தாங்க.. 20 நாட்களில் எந்த படைப்பும் பிரசுரம் பண்ணிடுவாங்க.. ஆனா அந்த ஜோக் 20 நாட்கள்ல வராததால் தினகரன் வசந்தத்துக்கு அனுப்பினேன்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=210&height=314&image=/ahtees/admin/customer/content/2009_17_PattukkottaiPrabakar.jpg

உயிரே படம் ரிலீஸ் ஆச்சு.. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. அந்த வார ஞாயிறில் வசந்தம் இதழில், திங்கள் கிழமை கல்கி வார இதழில், அடுத்த வாரம் உல்லாச ஊஞ்சல் மாத இதழில் வெளியாகி விட்டது..


உல்லாச ஊஞ்சல் அந்த இதழில் மொத்தம் என்னுடைய 20 ஜோக்ஸ் ஒரே சமயத்தில் வெளியிட்டது.. தலையங்கத்தில்  என்னை பற்றி பாராட்டி எழுதி இருந்தார்கள்.. அதாவது 200 ஜோக்ஸ், 20 கவிதைகள், 3 கதைகள் என பல்க்காக படைப்புகள் அனுப்பியதாகவும் அவை எல்லாமே வெரைட்டியாக இருந்ததாகவும் சொல்லி இருந்தாங்க..

நம்ம ஜனங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.. அதாவது எவன் எப்போ சறுக்குவான், கை தட்டி வேடிக்கை பார்க்கலாம்னு பார்த்துட்டே இருப்பாங்க.. இந்த ஜோக் மேட்டர் 3 வெவ்வேற இதழ்கள்ல வந்ததும் ஆளாளுக்கு வாசகர் கடிதத்துல இதை குறிப்பிட்டு  கடிதம் எழுதுனாங்க.. சென்னை சென்ற போது ஒரு இதழின் ஆசிரியர் அந்த கடிதங்களை எல்லாம் காட்டினார்.. ( குறை சொல்லி எழுதியவர்களில் அதில் என் நெருங்கிய பத்திரிக்கை நண்பரும் அடக்கம்)

 அடுத்த மாத ஊஞ்சலில்  என்னை பாராட்டி தலையங்கத்தில் எழுதிய அதே உல்லாச ஊஞ்சல் இதழில் என்னை கண்டித்து எழுதியது..  அது வாசகர் வட்டத்தில், பத்திரிக்கை உலகில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.. நம்பகத்தன்மையை குறைத்தது..

அந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் என் படைப்புகள் எதுவும் எந்த இதழ்களிலும் வர வில்லை..  மிகுந்த போராட்டத்துக்குப்பிறகும், பல மன்னிப்புக்கடிதங்கள், தன்னிலை விளக்கக்கடிதங்களுக்குப்பிறகும் தான் மீண்டும் என் படைப்புகள் வர ஆரம்பித்தன..

 அதிலும் ஒரு சோகம் என்னான்னா எந்த படைப்பை அனுப்பினாலும் பத்திரிக்கை எடிட்டோரியல் குழுவில் யாராவது ஃபோன் பண்ணி “ இந்த படைப்பை வேற எந்த இதழுக்கும் அனுப்பிடலையே? என்று கேட்டு உறுதி செய்த பின் தான்  வெளியிட்டார்கள்/.. 

 ஆனால் சம்பவம் ந்டந்து பல வருடங்கள் கழித்து நானே அதை மறந்த நிலையில்  பிளாக் உலகில் வந்த பின்  எனக்கும் ஜாக்கிசேகருக்கும் நடந்த ஒரு மோதலில்  பின்னூட்டம் இட்ட ஒரு  நண்பர் “ பல வருஷங்களுக்கு முன்னால உல்லாச ஊஞ்சல்ல சொம்பு வாங்குனவன் தானே நீ? “ என கேட்டு கமெண்ட் போட்டிருந்தார்.. அப்போதான் எனக்கு உறைத்தது.. நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளைக்கூட காலம் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் என்று.. 

( ஜாக்கி சேகருக்கும் , எனக்கும் நடந்த மோதல் குறித்து பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.. ஆனா அந்த சம்பவத்தில் என் மீதுதான் தவறு இருந்தது)

 இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது..  பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இது போல்  நேர்ந்தது உண்டு.. தமயந்தி என்ற எழுத்தாளர் இதே போல் தேவி வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அதில் வராததால்  குங்குமம் வார இதழுக்கு அனுப்பினார்..  ஒரே வாரத்தில் 2 இதழ்களிலும் வந்தது.. ஆனால் அடுத்த இதழிலேயே அவரது தன்னிலை விளக்கம் பிரசுரிக்கப்பட்டது.. ஆனால் என்னைப்போன்ற ஜோக் எழுத்தாளர்களுக்கு அந்த மாதிரி தன்னிலை விளக்க வாய்ப்பு கம்மி. ( ஏன்னா அவங்களுக்கு 1000 பிரச்சனை இருக்கும், இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது)

 எழுத்து உலகில் இந்த மாதிரி கெட்ட பேர் வாங்குன ஆட்கள் அய்யம்பேட்டை விஜய லட்சுமி, எம் அசோக்ராஜா அரவக்குறிச்சிப்பட்டி.. 

 அவங்க பண்ணுனது  அப்பட்டமான திருட்டு.. ஆனந்த விகடன் இதழில் வந்த முத்திரை சிறுகதையை அப்படியே அட்டக்காப்பி அடிச்சு வைரமுத்து -குங்குமம் இணைந்து வழங்கிய கவிதைப்போட்டிக்கு அனுப்பி மாட்டிட்டாங்க .. குங்குமம் வார இதழில்  அவர் பேரை போட்டு தெளிவா  போஸ்டர் அடிச்சுட்டாங்க.. 

 எம் அசோக்ராஜா என்ன செய்யறார்னா அவர் புக் ஏஜென்சி வெச்சிருக்கார் போல..  பழைய புக்ஸ்ல வந்த ஜோக்சை எல்லாம் காப்பி பண்ணி அனுப்பிட்டு இருந்தார்.. சில புக்ஸ்ல போடவும் செஞ்சாங்க.. ஆனா ஆனந்த விகடன் இதழில் அவர் படைப்பு வருவதே இல்லை.. வாசகர்களிடம் அவருக்கு கெட்ட பேரு.. 

 இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும் வாசகர்கள் கவனமா இருக்கனும் என்பதற்காகத்தான்..

ஆனந்த விகடன் விக்ரம் வாசகர் சந்திப்பு விழாவில்  நானும், என் நண்பர் விஷ்ணுகுமாரும் தேர்வு ஆகி சென்னை போனோம்.. அங்கே சந்தோஷமான நிகழ்வும் , ஒரு சங்கடமான நிகழ்வும் நடந்தது.. அது.....


 தொடரும்.. 


டிஸ்கி -1  மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கு நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html


 இந்த கட்டுரையின் 4 ம் பாகம் -  http://adrasaka.blogspot.in/2012/02/4.html


Tuesday, February 21, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 4

ஈகோ தான் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றிக்கான முக்கியமான தடைக்கல்லாக விளங்குகிறது.. தனிமையில் இருக்கும்போதும், பெரியவர்களுடன் உரையாடும்போதும் அப்படி ஈகோ இல்லாமல் இயங்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடை முறை வாழ்வில் நீ பெரியவனா, நான் பெரியவனா?யார் விட்டுக்கொடுப்பது? போன்ற கேள்விகள் பூதாகரமாக நம் வாழ்வில், குடும்பத்தில், அலுவலகத்தில் எனஎல்லா இடங்களிலும் வந்து நிற்கிறது..

குமுதம் ஆஃபீசுக்கு அவங்க அனுப்பின லெட்டரோட  கிளம்பினேன், மேட்டர் கேள்விப்பட்டு இரா அ தென்றல் நிலவன் , திருச்செங்கோடு, தேவி கணேஷ் குமார பாளையம் இருவரும் நாங்களும் உடன் வருவோம்னு அடமா நின்னாங்க.. இதுல தென்றல் நிலவன் பற்றி சொல்லிடறேன்.. இவர் தான் என்னை சிறு பத்திரிக்கைகள் எனப்படும் இலக்கிய இதழ்களில் எழுத வைத்தவர்.. ராஜக்கவுண்டம்பாளையத்தில் பவர் லூம் தறி போட்டிருக்கார்.. இப்போ தொழில் முறை ஃபோட்டோ கிராஃபர்.. ஹைக்கூ கவிஞர் மு முருகேஷ், மற்றும் அ வெண்ணிலா இருவருக்கும் நெருங்கிய நண்பர் ( இவங்க லவ் மேரேஜ்ல இவரது பங்கும் உண்டு.. )

தேவி கணேஷ் குமுதம் வார இதழில் ஒரு பக்க கதைகள் எழுதுவதில் மன்னனாக 2 வருடங்கள் கொடி நாட்டியவர்.. அதிக பட்சமாக ஒரே வார இதழில் 3 கதைகள் வர வைத்தவர் ( இந்த சாதனையை சேலம் செல்வராஜா போன வருடம் ஜூலையில் முறியடித்தார் - 4 கதைகள்).. அவர்கள் இருவரிடமும் நட்பு ரீதியில் குமுதம் அழைப்பை பகிர்ந்த போது அவர்களும் ஒரு ஆவலில் வர்றேன் என்றதால் தவிர்க்க முடியவில்லை.. 

அவங்க 2 பேரும் பஸ்ஸில் சென்னை வந்தாங்க.. நான் ரயிலில் சென்னை போனேன்.. எனக்கு பஸ் பயணம் ஒத்துக்காதது என்பதும் அதுதான் சார்ஜ் கம்மி என்பதும் காரணங்கள்.. 

கிட்டத்தட்ட 1992 டூ 1998 இந்த 6 வருடங்களில்  2000 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு விட்டதால் ( சராசரி விகிதம் டெயிலி 1) குமுதம் ஆஃபீசில் எல்லாருக்கும் என்னைத்தெரியும், எல்லாரும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் தெனாவெட்டாகவே ஆஃபீஸ் போனேன்.. 

குமுதம் ஆஃபீஸ் செக்யூரிட்டியிடம் விபரம் சொன்னேன்.. அவங்க அனுப்பின லெட்டர் காட்டின பிறகு அனுப்பினார்.. உள்ளே போனதும் ஆசிரியர் மற்றும் எடிட்டர் குழு எங்களை ஒரு அறையில் அமர வைத்தார்கள்..

எல்லாரும் வந்திருந்தாங்க.. இங்கே தான் நான் சொன்ன ஈகோ எல்லார் மனதிலும் எழுந்தது.. யார் முதல்ல பேசறது? எல்லாரும் தலைல ஒரு மாய மகுடத்தை அணிந்து அமர்ந்திருந்தாங்க.. எல்லார் மனசுலயும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கனும், பேசனும்னு ஆசை.. ஆனா ஈகோ தடுத்தது..

நான் தான் முதல்ல  பேச்சை ஆரம்பிச்சேன்  .. ஒவ்வொருவரா அறிமுகம் ஆகிட்டோம்.. பரஸ்பரம் ஃபோன் நெம்பர் வாங்கிக்கிட்டோம்

1. வி சாரதி டேச்சு - திருவல்லிக்கேணி - பத்திரிக்கை உலகில் ஜோக்ஸ் எழுதுவதில் கரடி குளம் ஜெயா பாரதிப்பிரியாதான் நெம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.. அவரை இவர்  1997-ல் ஓவர் டேக் செய்து இன்று வரை எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளார்.. தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக் ரைட்டர்..  துறைமுகத்தில் ஆடிட்டராக பணி புரிகிறார்.. ஆனந்த விகடனில் ஒரே இதழில் அதிக பட்ச ஜோக்ஸ் ஆக 18 ஜோக்ஸ் வர வைத்திருக்கிறார்.. இதுவரை யாரும் முறியடிக்காத சாதனை.. (  ஹாய் மதன், சிம்பு எழுதி வந்தது கணக்கில் வராது, ஏன்னா நான் சொல்றது வாசகர் படைப்பில்) இவர் தினம் தினம் ஜோக்ஸ் எழுதி சுடச்சுட ( சுட்ட அல்ல) பத்திரிக்கை அலுவலகத்துக்கே போய் நேரில் கொடுப்பாராம்.. 60 வயசு இருக்கும்


2. அம்பை தேவா -தூத்துக்குடி  - விக்ரமசிங்கபுரம்னா நிறைய பேருக்கு தெரியாது.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிச்சாங்களே  அந்த ஊர்.. இவர் நடிகர் சிவகுமாரின் குடும்ப நண்பர்.. பல சினிமா நடிக நடிகைகளின் பேட்டிகள், பல படைப்புகள் எழுதியவர்.. திருடன் கபாலி ஜோக் ஸ்பெஷலிஸ்ட்..  எழுத்துலகில் இன்றும் இயங்கி வரும் சீனியர்.. என் நெருங்கிய  நண்பர்.. தினமும் இவருடன் நான் அரை மணி நேரம் கடலை போடுவதை பார்த்து என் மனைவியே இவர் ஒரு பெண்ணோ என செக் செய்ததுண்டு.. அந்தளவு இருவரும் நெருக்கம்.. ( இந்த பழக்கம் எல்லாம் குமுதம் சந்திப்புக்கு பின் ஏற்பட்டது) 54 வயசு இருக்கும்


3.  எஸ் எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர் - கே பாக்யராஜ் இன் அபிமானி, விசிறி.. பாக்யா இதழில் எதிரொலி என்ற பகுதியில் வாரா வாரம் 3 பக்கங்கள்  சன்மானம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் எழுதி வருகிறார்.. ( பாக்யாவில் எந்த படைப்புக்கும் சன்மானம் கிடையாது) ஃபோட்டூன் என்ற வலைப்பூ இயக்கி வருகிறார்


4. கொங்கணாபுரம் வே செந்தில்  - சேலம் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் ஆசிரியர்.. எழுதி சம்பாதித்தவர்கள் யாரும் இல்லை என்ற வார்த்தையை பொய் ஆக்கியவர்.. ஆனந்த விகடனில் வரும் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டே 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர்.. எந்த புக்ல சன்மானம் தர்றாங்களோ அந்த புக்குக்கு மட்டும் தான் எழுதுவேன் என்ற உயரிய கொள்கை படைத்தவர்.. இப்போ ஷேர் மார்க்கெட்ல அண்ணன் செம டப் பார்த்துட்டதால் எழுத்துப்பணியில் கொஞ்சம் சுணக்கம் ( பொதுவா லட்சுமி வீட்ல குடி ஏறிட்டா சரஸ்வதி அந்த வீட்டை காலி செஞ்சுடுவா )இப்போ அவர் எழுதுவது இல்லை ஜூனியர் விகடனில் டயலாக்ஸ் ஏகப்பட்டது எழுதி இருக்கார்.. வயசு 45

5. உ. ராஜாஜி - ரொம்ப  ரொம்ப சீனியர். லைப்ரரியில் பணி ஆற்றியவர்.. இப்போ இவரை பற்றி தகவல்  ஏதும் இல்லை.. 70 வயசுக்கு மேல் இருக்கும்

6. இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்  - ரொம்ப சின்ன வயசு..  சேலம் மாவட்டம். இவர் சீஸன் ஜோக்ஸ் அதிகம் எழுதுவார், அதாவது தீபாவளி, பொங்கல் , காதலர் தினம் இப்படி டைமிங்க்கா எழுதுவார்.. 34 வயசு இருக்கும்

7. சீர்காழி வி ரேவதி - இவர் தஞ்சாவூர்க்காரர்.. ஆண் தான், மனைவி பெயரில்  எழுதுகிறார்.. கொஞ்சம் ரிசர்வ் டைப்.. 45 வயசு இருக்கும்

8. பா ஜெயக்குமார் , வந்த வாசி - ஒரு காலத்துல குமுதத்துல கலக்கு கலக்குன்னு கலக்குனவர்.. இப்போ கொஞ்சம் ஸ்பீடு குறைஞ்சுடுச்சு வயசு 30 இருக்கும்

9. பாஸ்கி  - இவர் ஜெயா டிவில அரிகிரி அசெம்ப்ளி நிக்ழச்சி எல்லாம் பண்ணுனார் கடி ஜோக்ஸ் விகடன்ல  நிறைய எழுதுனார். இப்போ சினிமா, டி வில புகுந்ததால் ஜோக்ஸ் எழுதரது இல்ல.. 

 ஹாய் மதன் தான் எங்க எல்லாரையும் வரவேற்றுப்பேசுனார்.. வித்தியாசமான ஜோக்ஸ் எழுதுங்க என ஒரு லெக்சர் அடிச்சு எங்களை ஊக்குவிச்சார்.. ரூ 1850 மதிப்புள்ள ரிஸ்ட் வாட்ச் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தாங்க.. அப்புறம் ஒரு வேளை ஓ சி சாப்பாடு.. செம விருந்து.. குமுதம் ஆஃபீசில் சாப்பிட்டதை மறக்க முடியாது ( நாங்க எல்லாம் எங்கே ஓ சி ல சாப்பிட்டாலும் அதை மறக்கறதே இல்லை)

 பிரியா கல்யாணராமன் அங்கே பழக்கம் ஆனார்.. ரொம்ப நல்ல மனுஷன்.. எங்க எல்லாருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் குடுத்து சில குறிபிட்ட டாபிக்ஸ் குடுத்து எழுத சொன்னாங்க.. 

அப்புறம் போக வர டி ஏ (T. A) D.A எல்லாம் குடுத்தாங்க.. நல்ல மனுஷங்கப்பா.. 

இப்படி பாசிட்டிவ்வா போய்ட்டு இருந்த பத்திரிக்கை பயணத்துல ஒரு சறுக்கலா, எனக்கு ஒரு கெட்ட பேர் ஆகற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.. அது.. 

தொடரும் 

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html

Monday, February 06, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 3

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு தனித்திறமையுடன் தான் பிறக்கிறார்கள்,ஆனால் யாரெல்லாம் அதை அடையாளம் காண்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்..ஆனால் அதே சமயம் திறமை உள்ள அனைவருமே வெற்றி பெறுவதில்லை.. குடத்தில் இட்ட விளக்குகளை குன்றில் இட்ட தீபங்களாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன..

பத்திரிக்கை உலகில் அந்த மாதிரி திறமை சாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென் பட்டார்கள் ஒருவர் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமண்யன், இன்னொருவர் அமரர் ஆசிரியர் சாவி அவர்கள்..

சாவி இதழில் தீபாவளி மலரில் அட்டைப்படத்தில் என் ஜோக்ஸ் போட்டு, அதே இதழில் 2 சினிமா விமர்சனங்கள், ஜெ பேட்டி காமெடி கற்பனை கட்டுரை செம ஹிட் ஆகவே அவர் மனம் மகிழ்ந்து பாராட்டியது எனக்கு இன்னும் உத்வேகம் தந்தது..

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 ஜோக்ஸ் , சனி ,ஞாயிறுல 50 ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு எழுதற நான் அன்னைக்கு மட்டும் 100 ஜோக்ஸ் எழுதிட்டேன்.. பாராட்டும், அங்கீகாரமும் கொடுக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது..

ஹிந்தி பிரச்சார் சபாவில்  ஹிந்தி பிரச்சாரக் பட்டம் பெற சென்னை தி நகர் ஹிந்தி பிரச்சார சபா போக வேண்டி இருந்தது.. ( நான் டென்த் படிக்கும்போதே பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ர பாஷா உள்ளிட்ட 8 ஹிந்தி எக்ஸாம்கள் முடிச்சிருந்தேன்)சாவி அவர்களிடம் முன் கூட்டி தகவல் சொல்லி விட்டேன்


முதல் முறையாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் செல்லும் வாய்ப்பு.. எனக்கு பிரமிப்பாக இருந்தது.. அவர் வந்தார், என்னை அரவணைத்தார்.. என் அப்பா ,அம்மா, ஆசிரியர் காலில் மட்டுமே விழுந்து பழக்கம் உள்ள நான் முதன் முறையாக ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன்..

சாவி அவர்கள் நகைச்சுவை ரசனை மிக்கவர்.. அதனால் அவர் எனது ஜோக்ஸ் பற்றி ஞாபகமாக பல விஷயங்கள் நினைவு கூர்ந்தார்.. சினிமா விமர்சனம் நன்றாக எழுதுவதாக பாராட்டினார்.. அதில் உள்ள சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.. 

விகடன் எஸ் பாலசுப்ரமணியன் அவர்கள்

http://www.frontlineonnet.com/fl2024/images/20031205004912402.jpg

தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் வெளியிடும் சினிமா விமர்சனம்  முற்றிலும் நடு நிலைமையில் இருக்காது எனவும் வார இதழ்களில் வெகு சில பத்திரிக்கைகளே தயவு தாட்சண்யம் இல்லாமல் நீட்டான விமர்சனம் எழுதும் என்றும் சொன்னார்.. தின நாளிதழ்கள் சினிமா விளம்பரங்கள் வெளியிடுவதால் அவர்கள் படத்தில் உள்ள நல்ல அம்சங்கள் மட்டுமே சொல்வார்கள். மைனஸ் பாய்ண்ட்டை லைட்டாகத்தான் சொல்வாங்க. அதில் இருந்து வித்தியாசப்பட்டு நாம எழுதனும் என்றார்..

மேலும் படத்தின் கதையை ரெண்டே லைனில் சொல்லி முடிச்சிடனும்..  படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை ரசிச்சு படிக்கும்படியும், படம் பார்க்காதவர்கள் விமர்சனம் படிச்சா படம் பார்க்கும் ஆவலைத்தூண்டும்படியும் இருக்கனும், அதுதான் ஒரு நல்ல விமர்சனத்துக்கான அடையாளம் என்றார்..

அவர் சொன்ன தகவல்களை நான் உள் வாங்கிக்கொண்டேன்... அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டேன்..

ஜோக்ஸ் எழுதுவதை குறைத்துக்கொண்டு சினிமா விமர்சனத்தில் ஆர்வம் காட்டினேன்..  சாவி வார இதழில் ஒரே ஒரு பக்கம் தான் விமர்சனம் எழுத அனுமதி..  கிட்டத்தட்ட 8 பத்திகள்.. அதற்குள் சொல்ல வந்ததை நறுக் சுருக் என சொல்ல வேண்டும் என்பது சவாலாக இருந்தது.. இப்போது வரும் ஆனந்த விகடன் விமர்சன அளவில் மூன்றில் ஒரு பங்குதான் எழுத முடியும்..

ஒரு படம் பார்க்கும்போது அந்தப்படத்தின் வெற்றி தோல்வியை கணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏ செண்ட்டர் ரசிகர்களுடன் அதாவது பால்கனியில் படம் பார்ப்பது ஒரு சினிமா விமர்சகனுக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன்.. ஏன்னா அவங்க அமைதியா படம் பார்த்துட்டு சத்தம் இல்லாம போயிடுவாங்க, ஆனா பி சி ரசிகர்கள் தான் கமெண்ட் அடிச்சு, கை தட்டி ரசனையோட படம் பார்க்கறாங்க.

அதனால நான் எப்போ தியேட்டருக்குப்போனாலும்  செகன்ட் க்ளாஸ் டிக்கெட் தான் எடுப்பேன்.. காட்சிகளின் ஃபீடு பேக் உடனுக்குடன் எனக்கு கிடைச்சிடும்.. அது போக தியேட்டர் இடைவேளையின் போது காண்ட்டீனில் 4 பேர் 4 பேராக சேர்ந்து படத்தை பற்றி கமெண்ட் அடிப்பதை நோட் செய்யத்தொடங்கினேன்..

தியேட்டர் ஆபரேட்டர்கள் விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. அவர்களிடம் கேபின்க்குப்போய் சும்மா பேச்சு குடுப்பேன்.. அவர் படம் எத்தனை நாள் ஓடும், தேறுமா, தேறாதா என்பதை ஓப்பனாக சொல்லி விடுவார்..

கேண்ட்டீன் -ல் வேலை செய்யும் பையன்கள், பைக் ஸ்டேண்ட்டில் பாஸ் போடும் ஆள் என ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்பேன், ஆரம்பத்தில் அப்படி நாமாக வலிய போய்க்கேட்க கொஞ்சம் தயக்கமக இருந்தது.. கொஞ்ச நாள் போனதும் சரி ஆகி விட்டது , அவர்களே நன்றாக ப்ழகி விட்டார்கள்.. கருத்து சொல்வார்கள்..


ஃபிலிமாலயா, நியூ ஃபிலிமாலயா, இதயம் பேசுகிறது, ஹெர்குலிஸ், தங்கம் , விகடகவி ,சாவி உட்பட 12 வார மாத இதழ்களில் என் சினிமா விமர்சனம் வரத்தொடங்கியது.. இதில் இன்னொரு சிக்கல் ஒரே படத்தின் விமர்சனம் 12 வெவ்வேறு வடிவத்தில், உள்ளடக்கத்தில் தர வேண்டிய நெருக்கடி எனக்கு சவால் நிறைந்ததாக தோன்றியது.. மிக சிரமமாக இருந்தது.

ஒரு வருடம் சமாளித்தேன்.. அது என் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் அபாயம் இருப்பதாகத்தோன்றியது.. ஜோக்ஸ் எழுதுவதை மீண்டும் தீவிரம் ஆக்கலாமா? என யோசித்த போதுதான் குமுதம் வார இதழில் இருந்து அழைப்பு வந்தது.. 1998 டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் ஒரு சந்திப்பு சென்னை ஆஃபீசில் போக வர அனைத்தும் அவர்கள் செலவில்..

நான் துள்ளிக்குதித்தேன்.. ஏன்னா டாப் டென்ல ஒருத்தனா வந்ததுக்காக இல்லை... மீதி 9 பேரை அவங்க செலவில் சந்திக்கலாமே, குமுதம் ஆஃபீசை சுற்றிப்பார்க்கலாமே?

அமரர் சாவி அவர்கள்

http://balhanuman.files.wordpress.com/2010/05/saavi.gif

தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக்  ரைட்டர் வி சாரதி டேச்சு, அம்பை தேவா,பா ஜெயக்குமார் வந்தவாசி,சீர்காழி வி ரேவதி, பாஸ்கி, திருவெண்ணெய் நல்லூர் எஸ் எஸ் பூங்கதிர், இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்,  உ ராஜாஜி, கொங்கனாபுரம் வே செந்தில் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய வரப்பிரசாதம்..

குமுதம் ஆஃபீசில் என்ன நடந்தது?....

 தொடரும்

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html


இந்த கட்டுரையின் 2ம் பாகம் -http://adrasaka.blogspot.in/2012/01/2.html  

டிஸ்கி 3 - பதிவுலக சகோ மாய உலகம் ராஜேஷ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீடு சுரேஷின் விருப்பத்துக்கு இணங்க, நிரூபன் சொன்னது போல் நாளை செவ்வாய் அன்று பதிவுலகின் துக்க நாளாக கடைபிடிப்போம்

http://balhanuman.files.wordpress.com/2010/09/sujatha_raviprakash_saavi.jpg?w=510

Monday, January 30, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 2

சிறந்த படிப்பாளி தான் சிறந்த படைப்பாளி ஆக முடியும்” அப்படீன்னு பல பெரிய மனுஷங்க எல்லாம் சொல்லி இருக்கறதால நானும் படிக்க முடிவு செஞ்சேன்.


ஸ்கூல்லதான் ஒழுங்கா படிக்கலை, இதையாவது படிப்போம்னு நான் ஜோக், காமெடி லைன்ல யார் எல்லாம் சாதனை செஞ்சாங்கன்னு கணக்கு எடுத்தேன். என் லிஸ்ட்ல முதல்ல சிக்குனது எஸ்.வி.சேகர். அவர் காமெடி டிராமாக்கள் ஆடியோ கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து கேட்க ஆரம்பிச்சேன். அப்போவே ஒரிஜினல் கம்பெனி கேசட் எல்லாம் 26 ரூபாய். அதே நாடகம் ஸ்டேஜ்ல போட்டப்ப அதாவது ஈரோடு கவிதாலயா சார்பா கொங்கு கலை அரங்கம்ல நடந்தப்ப பாக்கலாமுன்னு போனேன். டிக்கெட் 50 ரூபாய். அதனால வாசல்லியே நின்னு ஸ்பீக்கர் சவுண்ட் மட்டும் கேப்பேன். டிக்கெட் செக் பண்றவங்க முதல் அரை மணி நேரம் தான் இருப்பாங்க, அப்புறம் அவங்க உள்ளே போயிடுவாங்க. அதுக்குப்புறம் நானும் உள்ளே போயிடுவேன். (ஹிஹி)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCCpDGCrlJemBBV6iDQxcFRuBIrFEwGYBcOAi1PMVfl9BKlzdkjI5-EFj5Z8_LqBT44hyphenhyphen5vsH9hL3GUA0emPvyIiOXIRk0Vu6-FsmXI972g8Lyh7VAj_HfD-2h2moAB3j0Td_edJQJhn7B/s400/sv-sekar.jpg

எஸ்.வி.சேகரின் மேடை ஆளுமை மிகப் பிரமாதமா இருந்தது. அதாவது வசனங்களை அவர் மனப்பாடம் பண்ணிப் பேசறது  மாதிரியே இருக்காது. சரளமா வரும். அதும் இல்லாம ஒரிஜினல் ஸ்கிரிப்ட்ல என்ன டயலாக் இருக்கோ, அது போக அப்பப்ப நாட்டில என்ன நடக்குதோ அதையும் டைமிங்கா ஜோக் அடிச்சு விடுவார். சொந்தச் சரக்கு. இது எனக்கு ஆனந்த விகடன்ல டாப்பிகல் ஜோக்ஸ் எழுத ரொம்ப யூஸ் ஆச்சு. அரசியல் தலைவருங்க ஏதாவது பேட்டி குடுக்கறப்ப அந்த லைன்ல இருந்து ஒரு ஜோக் தேத்தும் கலையை கத்துக்கிட்டேன்.


பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாரும் விடற அறிக்கையே காமெடியாத்தான் இருக்கும் என்றாலும், அதுல நம்ம டச் சேர்த்து ஜோக் ஆக்கும்போது நாம ரெகுலரா எழுதற ஜோக்கை விட அதிக கவனிப்பு இதுலே  கிடைக்கும். அதும் இல்லாம பெரும்பாலாம பத்திரிகைகள் டாபிகல் ஜோக்ஸ், பாலிடிக்ஸ் ஜோக்ஸ் அதிகம் பிரசுரிச்சிட்டிருந்தாங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2-EesP37sNX0vUAOYfTAC3nlgRojhKObXi_4PxUVeGywK8FBH_LxsTYbajfPiqEMj9NKTlPUf6PgaP-RXQ6Nbobmh1GF7jFQpf9p_qiZGW8MiYDEgiDn1GfE_luzjQsMhdHlfDr3oIQ/s1600/ARS2.jpeg


அப்புறமா எஸ்.வி.சேகரின் முன்னோடி கிரேஸி மோகன்னு தெரிஞ்சுது. அவர் நாடகங்கள்  கேசட் எல்லாம் வாங்கினேன். வார்த்தை ஜாலம், அதாவது எதிராளி பேசும் வார்த்தைகளை வெச்சே குழப்பி அதுல இருந்து ஒரு ஜோக் எடுக்கறது, இது பிரமாதமா அவருக்கு வருது. அவரோட படங்கள் எல்லாம் கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு படத்துல பொதுவா 25 ஜோக்ஸ், இல்லைன்னா அதிகபட்சமா 40 ஜோக்ஸ் தான் பொதுவா வைப்பாங்க, ஆனா கிரேசி மோஹன் டயலாக் எழுதுன படங்கள் எல்லாம் 60 ஜோக்ஸ் சர்வ சாதாரணமா வந்தது.

இப்போ தான் எனக்கு ஒரு பிரச்னை வந்தது. மெம்மரி பவர் எனக்கு கம்மி. படம் பார்த்துட்டு வந்து யோசிச்சு பார்த்தா 20 ஜோக்ஸ் மட்டும் தான் என்னால நினைவு  வெச்சுக்க முடிஞ்சுது. அதை டெவலப் பண்ண ஆரம்பிச்சேன்.


இதிலே, உதாரணத்துக்கு எஸ்.வி.சேகர் நாடகத்துல இருந்து ஒரு சாம்ம்பிள் வசனம் :
ஹலோ அய்யா இருக்காருங்களா?
லேடி : மேலே படுத்திருக்காருங்க ( மொட்டை மாடில)
ஐயையோ, சாரிங்க, நான் அப்புறம் ஃபோன் பண்றேங்க
இந்த ஜோக் தான் அவர் நாடகங்கள்ல சூப்பர் ஹிட் ஆச்சு. நான் மக்கள் ரசனை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கே பாக்யராஜ் சார் டைப் இலை மறைவு, காய் மறைவா  ஜோக் இருக்கனும், எஸ் ஜே சூர்யா மாதிரி பட்டவர்த்தனமாய் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.


கூடவே, டைமிங்க் ஜோக் & டாப்பிக்கல் ஜோக் . அதாவது அந்தந்த கால கட்டத்துல என்ன சம்பவங்கள் நடக்குதோ அதை வெச்சு ஜோக் அடிப்பது,எதிராளி என்ன பேசறானோ அவன் வார்த்தைல இருந்தே ஜோக் எடுப்பது.

http://www.outlookindia.com/images/cho_ramaswamy_20090330.jpg


அடுத்த கட்டம் துக்ளக் ஆசிரியர் சோ.


இவர் அதிமுக அனுதாபின்னு ஒரு பேச்சு இருக்கு. அது பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. என் பார்வைல யார் எல்லாம் நல்லா காமெடி பண்ணறாங்களோ அவங்களை எல்லாம் ரோல் மாடலா எடுத்துக்க முடிவு செஞ்சுட்டேன்,. எனக்கு எதிரின்னு யாரும் கிடையாது. விருப்பமான கட்சி, அபிமான நடிகர்னு யாரும் கிடையாது.


முகம்மது பின் துக்ளக் நாடகம் தான் சோ எழுதுன மாஸ்டர் பீஸ். அந்த புக்ல மட்டும் 230 ஜோக்ஸ் தேறுச்சு. பல வருடங்களுக்கு முன்பே எம் எல் ஏ விலை போவது பற்றி மிகப்பிரமாதமா எழுதி இருந்தார். நாளை நடப்பதை இன்றே கணிப்பது என்ற கலை அவரிடம் அதிகம்.


பிளாக் & ஒயிட் படங்கள் என்றாலும், அவரு நடிச்ச படங்கள் கே டிவில எப்போ போடுவாங்கன்னு காத்திருந்து பார்க்கத்தொடங்கினேன். துக்ளக் பத்திரிக்கையும் வாங்க ஆரம்பிச்சிட்டேன். அதுல துக்ளக் சத்யா அபாரமான கார்ட்டூன்கள், காமெடி கட்டுரைகள் எல்லாம் எழுதுவாரு. அதை எல்லாம் ரசனையோட படிச்சேன்.


ஆனந்த விகடன்ல அட்டைபட ஜோக் எழுதி புகழ் பெற்ற படுதலம் சுகுமாரன் சிறுகதை செக்‌ஷன்க்கு போய்ட்டார். அவரை யாரும் மறக்கவே முடியாது, ஏன்னா எம் ஜி ஆர் பிரியட்ல ஒரே ஒரு அட்டைப்பட ஜோக்குக்காக ஆசிரியரே சிறை செல்ல நேரிட்டது.1000 ரூபாய் அபராதம் அரசே கொடுத்து விடுவித்தது. அதே போல் ஆனந்த விகடன் ஆசிரியரை உள்ளே அனுப்பும் அளவு ஒர்த் ஆன( !!!??) ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.

ஆனா பாருங்க 2 வருஷமா ஜோக்ஸ் வந்ததே தவிர அட்டைப்படத்துல வரலை. அப்புறம் எப்படியோ போன ஜென்மத்தில நான் செஞ்ச புண்ணியத்துல ஒரு ஜோக் அட்டைப்படத்துல வந்தது.
தலைவரே, ரத்தத்தின் ரத்தமே-ன்னு கட்சிக்காரங்களை கூப்பிட்டது தப்பா போச்சு


ஏன்?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு

இந்த ஜோக் அட்டைப்படத்துல வந்தாலும் பெருசா பரபரப்பா பேசப்படலை. அட, குறைந்தபட்சம் ஆசிரியருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வரலை.


அப்போதான் அதிரடியா ஜோக் உலகுக்கு வந்தார் தஞ்சை தாமு. இவர் என் மானசீக குரு எனலாம். பொதுவா என்னை விட திறமைசாலிங்க எல்லாரையுமே நான் மானசீக குருவா ஏத்துக்குவேன். இவரது வார்த்தை ஜாலங்கள் பிரம்மிக்க வைத்தன.


வி சாரதி டேச்சு பத்திரிக்கை  எடிட்டர்களை கவர்ந்தார் என்றால் தஞ்சை தாமு சாதாரண வாசகர்களை கவர்ந்தார். அவரது ஜோக்குகள் தனித்துவம் பெற்றன. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர். உடனே அவரை சந்திக்க ரயில் ஏறிட்டேன்.


வல்லம் தாஜூ என்ற பெயரில் கவிதை எழுதியவரும், பல உள்ளூர் பட்டி மன்றங்களீல் பேசியவருமான அவரது நட்பு கிடைத்தது. பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.


அவரது புகழ் பெற்ற ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்…
இவ்வளவு வசதி இருந்தும் தலைவர் தரைல பாய்ல  படுக்கறாரே, அவ்வளவு எளிமையா?


அட நீங்க வேற, அவருக்கு காலைல எழுந்ததும் எதையாவது சுருட்டணும்.

இந்த மாதிரி மற்றவர்கள் யோசிக்காத கோணத்தில் ஜோக்ஸ் எழுதுவதில் அவர் கை தேர்ந்தவர்.


அடுத்து வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி. இவரது படைப்பாற்றல் பிரம்மிக்கத்தக்கது. கதை, ஒரு பக்க கதை, கவிதை, ஜோக்ஸ் என எல்லா ஏரியாவிலும் கல்லா கட்டும் ஆள். செம ஷார்ப்பாக இவரது படைப்புகள் இருக்கும். இவரை நேரில் சந்தித்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன்.


ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நடிக நடிகைகளை நேரில் சந்திக்கும் ஆர்வம் வந்ததே இல்லை.  இலக்கியவாதிகள், படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வமே அதிகம் இருந்தது, ஆஃபீஸ் வேலையாகவோ, உறவினர், நண்பர் திருமணங்கள்க்காக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் எந்த படைப்பாளி இருக்கார்னு பார்த்து வாலண்ட்ரியா ஆஜர் ஆகி அறிமுகப்படுத்திக்குவேன்.
இப்படி என் எழுத்துப்பணி சீரா போய்ட்டு இருக்கும்போதுதான் சாவி பத்திரிக்கையின் தீபாவளி சிறப்பிதழ்ல என்னோட 8 ஜோக்ஸ், ஒரு சினிமா விமர்சனம், ஒரு காமெடி கட்டுரை ( ஜெவை கிண்டல் பண்ணி) வந்தது. சாவி அவர்கள் எனக்கு ஃபோன் செய்து சென்னை வந்தால் அவசியம் சந்திக்க என்று சொல்ல எனக்கு அது ஒரு பெரிய அங்கீகாரமாக தோன்றியது.


அதுக்கு அப்புறம் தான்…

- தொடருவேன்…

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyqGQXrXGQT9bROyzvFd4fzD4ckMerA1ha9A3v9zrAqo8ojY6ZvkZx846uUOz1A5cuxImCbGMo_rgoOnlHPzyc0mgPELUwN-t7-ZmaDbmjTB436fUBK_tjAMNjTit4P3VHdME35xHVL0Y/s200/chavi.JPG
டிஸ்கி - இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html

Monday, January 23, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 1

நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி.. எங்க வீடு பிராட்டி அம்மன் கோவில் அருகே இருந்துச்சு.. எங்க வீட்டுக்குப்பின்னால ஆண்டவர் பவர் பிரஸ் என ஒரு அச்சகம் இருந்துச்சு.. ஸ்கூல்க்கு போக 3 கிமீ நடக்கனும். ஃபிரண்ட்ஸ் சிலர் சைக்கிள்லயும், சிலர் பஸ்லயும் அவங்கவங்க வசதிக்கு தக்க படி போய்ட்டு இருந்தாங்க.. டெய்லி அப் &; டவுன் நடக்க எனக்கு ரொம்ப போர் அடிச்சுது.. அதுக்கு ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்.. ஆண்டவர் பவர் பிரஸ்ல ராஜாமணி அண்ணன் இருந்தார்.. அவரை ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்கிட்டேன்.. அங்கே பைண்டிங்க்கு வரும்  லயன் காமிஸ், முத்து காமிக்ஸ் , அம்புலி மாமா, ரத்னபாலா, பால மித்ரா போன்ற புக்ஸ் எல்லாம் டெயிலி ஒண்ணா எடுத்துட்டு போய் வாக்கிங்க் ரீடிங்க் பண்ணிட்டு இருந்தேன்..


ஆர்ச்சி, ஸ்பைடர்மேன், இரும்புக்கை மாயாவி என்னை கவர்ந்த கதா பாத்திரங்கள்.. துப்பறியும் சாம்பு, சங்கர்லால் ரொம்ப பிடிக்கும்.. 3 வருடங்கள் ஏகப்பட்ட புக்ஸ் படிச்சாச்சு. பிளஸ் ஒன் படிக்கறப்ப சென்னிமலை லைப்ரரில தென்றல் என்ற பெயர்ல ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சோம்.. அதுக்கு கூட்டாளிங்க அய்யப்பன் ( இவர் பின்னாளில் ஆனந்த விகடன் சொல் வனத்தில் 6 கவிதைகள் , கணையாளியில் 4 கவிதைகள் எழுதினார்), அப்புறம் அங்குராஜ்.. இருவரும் கவிதை கார்னரை கவனிச்சுக்கிட்டாங்க. இதுல அங்குராஜ் பற்றி சொல்லியே ஆகனும்.. அவர் எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது போலவே இருக்கும்.. இவர் தான் புக்ல தென்றல் கை எழுத்துப்பிரதில எழுதுவாரு.. அங்குராஜ் காதல் கவிதைகள் எழுதுவாரு.. அய்யப்பன் மரணம், வறுமை இந்த மாதிரி வெரைட்டியா எழுதுவாரு.. அதுல பாதி கவிதைகள் எனக்கு புரியாது..  நான் பனிப்பூக்கள் என்னும் தொடர் கதை, இது மழைக்காலம் என்னும் கட்டுரைத்தொடர் எழுதி வந்தேன்

மாதம் ஒரு முறை வெளியிட்டோம்.. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை வெளீயிட அந்த புக்கின் கடைசியில் 10 பக்கங்கள் இடம் விட்டோம்.. வாரா வாரம் ஞாயிறு அன்று லைப்ரரி போய் யாராவது கமெண்ட்ஸ் போட்டிருக்காங்களா?ன்னு ஆர்வமா பார்ப்போம்.. 6 மாசம் இப்படியே போச்சு.. சக்திவேல் என்னும் நண்பர் வேர்கள் என்ற பெயரில் புதுசா ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சார்.அதே போல் ராஜ் மோகன் என்பவர் இதயம் என்னும் புக் ஆரம்பித்தார்.. இப்போ போட்டி வந்தாச்சு ஒரே லைப்ரரி 3 புக்ஸ் .. இதயம் ராஜ் மோகன் பற்றி ஒரு தகவல் உயிரின் எடை21 அயிரி என்னும் படத்தில்  விதவை ஹீரோயினின்.  குழந்தையாக ஒரு மழலை வருமே அந்த பாப்பா ராஜ்மோகனின் வாரிசு..


 பிளஸ் டூ படிக்கறப்ப ஸ்கூல்ல லஞ்ச் டைம்ல  க்ளாஸ் போர்டுல கவிதை எழுதறது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.. அவனவன் அவன் ஆள் பேர் சொல்லி அவளுக்கு புரியற மாதிரி கவிதை எழுத சொல்லுவான். நானும் போர்டுல ஏதாவது கிறுக்குவேன். அப்போ எல்லாம் ஜோக் எழுதற ஐடியா எல்லாம் வர்லை. கவிதை, கட்டுரை, தொடர் கதை மட்டும் தான்..

கே எஸ் சண்முக சுந்தரம் என் பிளஸ் டூ கிளாஸ் மேட்.ஆள் செம ஷோக்குப்பேர்வழி. இவர் யார்னா தென்றல் பத்திரிக்கையோட  தூண்களான அங்குராஜ், அய்யப்பன் இவங்களோட அண்ணன்.. ( மூவரும் சகோதரர்கள்) ஈரோட்ல தேவி ஹாஸ்பிடல்ல ( சவீதா பஸ் ஸாப் அருகே, மாமன் பிரியாணி ஸ்டால்) ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் அவர்.. அவர் கே பாக்யராஜின் தீவிர ரசிகர்.. பாக்யா வார இதழ் ரெகுலரா வாங்குவார்.. அதுல அட்டைப்பட கமெண்ட் போட்டி வைப்பாங்க.. அதுல கலந்துக்குவார்.. மாசம் 4 புக் வருதுன்னா அதுல 2 புக்ஸ்ல இவர் கமெண்ட் வந்துடும்..


நாங்க எப்போ அவர் கடைக்குப்போனாலும் அந்த புக்கை காட்டி அவர் கமெண்ட்டை சிலாகிச்சு ஏதாச்சும் சொல்வார்.. ஆரம்பத்துல எனக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்ல. போகப்போக கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு.நாங்களே வாலண்ட்ரியா அவரை கேட்க ஆரம்பிச்சோம். ஒரு தடவை பேச்சு வாக்குல அவர் ஒரு சவால் விட்டார். பாக்யா வார இதழ்ல உன்னால ஒரு அட்டைப்பட கமெண்ட் வர வைக்க முடியுமா?ன்னார். நான் சிரிச்சுக்கிட்டே இதெல்லாம் நமக்கு ஜூஜூபி மேட்டர் அப்டின்னேன் ( ஜூஜூபின்னா என்ன அர்த்தம்னு எனக்கு சரியா தெரியாது.. இருந்தாலும் சொல்லி வெச்சேன்.)

அப்போ இருந்து 6 மாசங்கள் தொடர்ந்து முயற்சி செஞ்சும் ஒண்ணு கூட வர வைக்க முடியல.. அப்புறமாத்தான் பாக்யாவை நுணுக்கமா கவனிக்க ஆரம்பிச்சேன். இத்தனை நாளா சித்தன் போக்கு சிவன் போக்குன்னு எழுதிட்டு இருந்தேன்.. இப்போதான் அவங்க என்ன ஸ்டைல்ல கமெண்ட்சை பிரசுரம் பண்றாங்கன்னு நோட் பண்ணேன்.. அப்புறம் அதே ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சேன். 4 வது வாரமே ஒரு கமெண்ட் வந்தது.

இப்போ நான் பாக்யா சர்க்குலேஷன் எவ்ளவ்னு கடைக்காரர்ட்ட விசாரிச்சேன்.. அப்போ 3 லட்சம் சொன்னாங்க.. 3 லட்சம் பேரு இதை பார்க்கறாங்க அப்டின்னு அவர் கிட்டே சொன்னேன்.. அப்போ அவர் சொன்னாரு. இதென்ன பெரிய அதிசயம்? ஆனந்த விகடன்,குமுதம் இந்த ரெண்டும்தான் லீடிங்க் புக்ஸ்.. 8 லட்சம் டூ 10 லட்சம் சேல்ஸ்.. அதுல வர வைக்க முடியுமா?ன்னு சவால் விடும் தோரணைல கேட்டார்.. ஓக்கே வர வைக்கறேன்னு சொல்லிட்டு நேரா லைப்ரரி போனேன்..


 ஒரு ரஃப் நோட்ல எல்லா வார இதழ்கள், மாத இதழ்கள்  முகவரியை குறிச்சுக்கிட்டேன்.. எல்லா புக்ஸும் என்ன ஸ்டைல்ல படைப்புகள் வெளியிடறாங்கன்னு நோட் பண்ணேன்.. லைப்ரரிக்கு வர்றவங்க எந்த படைப்புகளை அதிகம் படிக்கறாங்கன்னு பார்த்தேன்..

சினிமா, அரசியல் கட்டுரை முதல் இடம் பிடிச்சது-- சிறுகதைகள் சிலர் தான் படிச்சாங்க.. அதிகம் பேர் வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதியை படிச்சாங்க. கிசு கிசு செய்திகள் விருப்பமா படிச்சாங்க.. அப்போவே முடிவு செஞேன் , நம்ம படைப்புகள்ல சினிமா மேட்டர் , நடிகைகள் சம்பந்தப்பட்ட யூகங்கள்,. கிசு கிசுக்கள் இருக்கனும்னு..

எஸ் பி ராமு விவேக் பப்ளிகேஷன்ஸ் ல சூப்பர் நியூஸ் ல ஒரு ஜோக் போட்டி வெச்சிருந்தார். அந்த டைம்ல நக்கீரன் கோபால் வீரப்பன் விவகாரத்துல அரசுத்தூதரா போன நேரம்.. அதை வெச்சு ஒரு ஜோக்

இண்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்க எல்லாம் அரிவாள் மீசையோட இருக்காங்களே..ஏன்?


அரசுத்தூதர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்.. ( இதுதான் நான் எழுதி பிரசுரம் ஆன முதல் ஜோக்)

இந்த ஜோக் முதல் பரிசு வாங்குச்சு ரூ 15 பரிசு .. ( பொதுவா சன்மானத்தொகை கம்மியா இருந்தாலும் போட்டில கலந்துக்கிட்டு ஜெயிக்கற சந்தோஷம் தான்  டாப்பா இருக்கும்)

ஆனந்த விகடன் ல ஜோக் வர வைக்க தலை கீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதா இருந்தது


ஏன்னா அந்த காலத்தில் பாஸ்கி,  ( ஜெயா டி வி  அரி கிரி அசெம்ப்ளி ) மிமிக்ரி சேகர், சிம்பு தேவன் ( இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குநர்) இந்த மாதிரி ஆட்கள் தான் ரெகுலரா எழுதிட்டு இருந்தாங்க.. வி சாரதி டேச்சு என்பவர் ஜோக்ஸ் 2 பக்கம் வரும்.. வார்த்தை ஜாலம் தான் இருக்கும், ஆனா சிரிப்பு அதிகம் வராது.. ஆனாலும் தொடர்ந்து அவருது வந்துட்டே இருந்துச்சு.. நான் ஆனந்த விகடன் ஸ்டைல்ல பல ஜோக்ஸ் அனுப்பினேன் எதும் வர்லை.. 6 மாசம் வாரா வாரம் 20 ஜோக்ஸ் அனுப்புவேன். ம்ஹூம் வந்த பாட்டை காணோம்.. அப்புறம் 6 மாசம் கழிச்சு அத்தி பூத்தது போல் ஒரு ஜோக் வந்துச்சு .. அப்போ அத்திப்பூ ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தான் பூக்குமா?ன்னு கேட்கக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்கு..

அந்த ஜோக்




கோர்ட்டில் ஜட்ஜ் - மணிபர்சை அடிச்சது நீங்க தானே?




இல்லை யுவர் ஆனர், மணி பர்சை பாலு அடிச்சான். கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்

இந்த ஜோக் வந்தது சென்னிமலை சி .பி செந்தில்குமார் என்ற பெயரில். ஒரே சந்தோஷம் .. காம்ப்ளிமெண்ட்ரி காப்பி வீட்டுக்கு வந்துச்சு . செம ஜாலி தான்.. ஒரு படைப்பாளியின் உச்ச பட்ச சந்தோஷம் அவன் பெயரை அச்சில் பார்ப்பதும், அவனது படைப்புகளை மற்றவர் அதுவும் முகம் தெரியாதவர்கள் பாராட்டுவதும் தான். சன்மானம், காசு பணம் எல்லாம் சும்மா.. அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்..

அந்த சந்தோஷத்துல ஒவ்வொரு சண்டேயும் ஜோக்ஸ் எழுத ஆரம்பிச்சேன்.. வாரா வாரம் 50 ஜோக்ஸ்.. இந்த ஜோக்குக்கான KNOT எங்கே பிடிப்பது? அதுக்கு ஒரு ஐடியா செஞ்சேன்.. எல்லா புக்ஸூம் வாசிப்பது.. அதுல வர்ற ஏதாவது ஒரு வரில இருந்து ஜோக் எடுப்பது.. அல்லது ஆல்ரெடி வந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி உல்டா பண்ணுவது.. சில ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வராது.. அதை சிரிப்பு வர்ற மாதிரி கொஞ்சம் மாற்றி போடுவது என ஆரம்பிச்சேன்.

இந்த சமயத்துல சில நண்பர்கள் வெறும் ஜோக்னே போய்ட்டு இருந்தா உன் படைப்புத்திறன் மழுங்கிடும் , இலக்கியப்பத்திரிக்கைகளில் கவனம் செலுத்துன்னாங்க.. சரின்னு பல பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன்.. கணையாளி -ல வந்த என் முதல் கவிதை.. 





ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி

ஜோடனை இல்லாத பிம்பமாய்

உன் முகம் இருக்கும்.

சொர்க்கத்துக்குப்போடப்பட்ட

ஒற்றையடிப்பாதை மாதிரி

உன் தலை வகிடு இருக்கும்.


பளிங்குக்கற்களில் ஊற்றிய

பாதரசம் போல்

அலை பாய்ந்து கொண்டே

உன் கண்கள் இருக்கும்.

நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்

இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்

உன் கூந்தல் இருக்கும்.

ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்

உன் நாசி இருக்கும்.

தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்

உன் உதடுகள் இருக்கும்.


 பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்

வைத்துக்கட்டியது போல்

நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான

 மென்மையில்


 உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.

இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்

கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்

நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்

சர்ச்சைப்பொருளாய்,

இல்பொருள் உவமை அணிக்கு

மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்


உன் இடை இருக்கும்.

குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்

ஒளிந்து கொள்ளும் விதமாய்

உன் குரல் இருக்கும்.



நல்லவரோ,கெட்டவரோ

எல்லா மனிதரிடத்தும்

ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி



ஒரு இதயம் இருக்கும்.

அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?

- தொடரும்..

டிஸ்கி - 1  அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணும்னா சொல்லுங்க..

டிஸ்கி -2 இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்

டிஸ்கி -3 - அட்ரா சக்க லே அவுட்ல காலியான இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர் ஏன்?னு கேட்டதுக்கு சுரேஷ் சொன்னாரு.. நீ போற படம் எல்லாம் மொக்கையாத்தானே இருக்கு.. அந்தப்படத்துக்கு கூட்டம் எப்படி வரும்?னு கேட்டு என்னை கேவலப்படுத்திட்டாரு சுரேஷ் அவ்வ்வ்

டிஸ்கி 4 - நேற்று மாலை 6 மணிக்கு  சேட்டிங்க் வந்து லே அவுட் மாற்றித்தர்றேனு வாக்கு குடுத்து சரக்கு அடிச்சு மட்டை ஆன விக்கி தக்காளிக்கு என் கண்டனங்கள்.. ஹி ஹி ஹி

Wednesday, January 11, 2012

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம்  பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன்  1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்..  4 மிதி தறிகள்.. 

அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே  கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு.. 

எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்.. 

எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்.. 

எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின்  சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.. 

எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம்  சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்.. 

எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்..  தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு.. 

எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க.  ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க  ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். 

எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில  மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. 

கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது.. 

அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில்  சுத்தி 4  ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..

எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..

எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்..  எங்கப்பா இறந்த பிறகு  எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்.. 

இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..

இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என்  வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfh1PEkDqHAsu386lDGyL5NPmCbC5i1tJ1NZZclEQs0okdh2WwwfhsiWtXmpdWDAynIlYWINuqN4V7KF_aRrgyCgkWBUrjSEe4z1Py4Nw7zfBKXWlYT7F6JtAqiq6R_BsNtem12A5vfz1P/

ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்..  இப்போ  பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்..  அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு... 

எங்க வீட்ல நெட் கனெக்‌ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..

அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின்  டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711

நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம்  டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..



அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு



சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..


எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..

பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?

ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்





விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)

ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது..  ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..