Showing posts with label எழுத்தாளர்களை ஏமாற்றினாரா விஜயகாந்த்?. Show all posts
Showing posts with label எழுத்தாளர்களை ஏமாற்றினாரா விஜயகாந்த்?. Show all posts

Sunday, November 15, 2015

எழுத்தாளர்களை ஏமாற்றினாரா விஜயகாந்த்?


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மக்களுக்காக மக்கள் பணி மூலம் தமிழகம் முழுக்க நலதிட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி கடந்த 30-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர்களுக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அதன் மதிப்பு ரூபாய் 5 ஆயிரம்தான் இருக்கும் என கூறி புலம்பி வருகிறார்கள் எழுத்தாளர்கள்.


கும்பகோணத்தில் நடந்த 'மக்களுக்காக மக்கள் பணி' மூலம்  ஆட்டோ, இருசக்கர வாகனம், தையல் மிஷின் என 25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் வழங்கினர். இதில் தமிழ் புலவர்கள், தமிழ் அறிஞர்கள், பத்திரிகையாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என நிர்வாகிகள் சொல்ல 5 ஆயிரம்தான் இருக்கும் என விம்முகிறார்கள் பயனடைந்த தமிழ் அறிஞர்கள்.

நலத்திட்ட உதவிகள் பெற்ற எழுத்தாளர்கள் சிலரிடம் பேசினோம், "தே.மு.தி.க நிர்வாகிகள் தமிழ் புலவர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு கேப்டன், நிறைஞ்ச மனசோட நிறைய உதவிகள் செய்ய சொல்லியிருக்கார் என கூறினார்கள். அதன்படி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என சொல்லி தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிலரை தேர்ந்தெடுத்தனர்.



அவர்களை விழாவுக்கு வரவழைத்து வெள்ளி டாலர், தங்க காயின், ஸ்கூல் பேக், புடவை, ஷீல்டு என விழா மேடையிலேயே விஜயகாந்த் வழங்கினார். ஆனால், தே.மு.தி.க நிர்வாகிகள் சொன்னபடி அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்காது, 5 ஆயிரம்தான் இருக்கும். நலத்திட்ட உதவி என்ற பெயரில் எங்களை ஏமாற்றி விட்டார்கள்'' என்றனர்.

மேலும் அந்த விழாவில் பிரேமலதா பேசுகையில், ''பத்திரிகையாளர்கள் படும் கஷ்டங்களை நன்கு அறிந்தவர் கேப்டன். அவர்கள் செய்தி சேகரிக்க செல்லும்போது பல ஆபத்துகள் அவர்களுக்கு ஏற்படும். அதனால்தான் பத்திரிகையாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்தார். அவர்களுக்கு பாலிசி எடுத்த ஒரே கட்சி தே.மு.தி.க தான். இதற்காக நான் பெருமைப்பட்டு கொள்கிறேன்'' என்றார். ஆனால், ''எங்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவியில் அவர் அக்கறை காட்டவில்லை. அதனால்தான் நிர்வாகிகள் சொன்னபடி  வழங்கவில்லை'' என பொங்கினார்கள் பயன் அடைந்த பத்திரிகையாளர்கள்.



இது குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பரமசிவத்திடம் பேசினோம், ''கட்சி பணிகளை சரியாக செய்யவில்லை. நலத்திட்ட உதவிகளுக்கான ஏற்பாட்டிலும் குளறுபடி நடந்ததால்தான், முன்னாள் மாவட்ட செயலாளர் டெல்லி.சாமிநாதனை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, என்ன மாவட்ட பொறுப்பாளராக அறிவித்துள்ளார் கேப்டன். இனிமேல் எல்லாம் சரியாக நடக்கும்'' என முடித்து கொண்டார்.

பயனாளிகள்தான் பாவம்...

thanks vikatan