Showing posts with label எமி ஜாக்‌ஷன். Show all posts
Showing posts with label எமி ஜாக்‌ஷன். Show all posts

Friday, September 28, 2012

தாண்டவம் - சினிமா விமர்சனம்

http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2012/09/Thaandavam.pngஹீரோ ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர்.இந்தியாவில் உள்ள டாப் 5 ரா  டிவிஷன் ஆஃபீசர்ஸ்ல அவரும் ஒருத்தர். தீவிரவாதி, உளவாளிகளை பிடிக்கும் ஒரு பிராஜக்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு. அதுக்குள்ளே அவங்க ஊர்ல இருந்து அழைப்பு. இன்னும் 2 நாள்ல உனக்கு மேரேஜ் , கிளம்பி வா அப்டின்னு.. 


 ஹீரோவுக்கு மேரேஜ் பண்ணிக்கப் பிடிக்கலை. டும் டும் டும் பட மாதவன் மாதிரி மேரேஜை நிறுத்த பிளான் எல்லாம் போடறாரு, ஆனா எல்லாம் பொண்ணை நேர்ல பார்க்கும் வரை தான். மேரேஜ் ஆகிடுது. ஃபர்ஸ்ட் நைட்ல மாப்ளை என்ன நினைக்கறாரோ, அதையே பொண்ணும் சொல்லுது. அதாவது நம்ம 2 பேருக்கும் பழக்கமே இல்லை, கொஞ்ச நாள் போகட்டும். பரஸ்பரம் புரிதலுக்குப்பின் தான் கில்மா.. 

 மவுன ராகம் கணக்கா 2 பேரும்  தொட்டுத்தொடாத பாரம்பரியமா, பட்டா போட்டும்  விவசாயம் பண்ணாத விளை நிலமா  காலத்தை ஓட்டறாங்க.


 திடீர்னு ஹீரோ தன் பிராஜக்ட் சம்பந்தமா லண்டன் போக வேண்டிய சூழல், .வழக்கம் போல வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் மோதலில் ஹீரோயின் அவுட், ஹீரோவுக்கு கண்கள் 2ம் அவுட். 


http://www.gulte.com/content/2012/09/news/Anushka-Siva-Thandavam-Hot-Photos-1885.jpg


அந்த 5 வில்லன்களையும்  கண் தெரியாத ஹீரோ எப்படி பழி வாங்கறார் என்ற அரைச்ச மாவையே பிரம்மாண்டமா, ஃபாரீன் லொக்கேஷன்ல கிளு கிளு ஃபிகர்கள் சூழ சொல்லி இருக்காங்க.. 


ஹீரோ விக்ரம் காசில ஆல்ரெடி செஞ்ச கேரக்டர் தான் . அதுல செஞ்ச பர்ஃபார்மென்ஸ்ல பாதி கூட இதுல இல்லை.. ஆனா பல இடங்கள்ல இவர் பாடி லேங்குவேஜ் பட்டாசு.. ஆனா எப்போ பாரு செகண்ட் ஷோ பார்த்து தூக்கம் கெட்டவன் கண் போல, மப்புலயே இருக்கும் மாடசாமி  அவர் முகம் சொக்கா போட்டா சோனியா அகர்வால் மாதிரி டல் அடிக்குது.. 


 மனைவியாக ஆறடி உயர ஆப்பிள் , கொழுக் மொழுக் மார்பிள் ( மொசைக் தரைல போடும் கல்),பர்சனாலிட்டி  பஞ்சாப் பர்பி அனுஷ்கா .இவர் வரும் காட்சிகளில் கைதட்டல் , விசில் அடடா.. தமிழர்கள் நல்ல ஃபிகர் இல்லாம எவ்வளவு காய்ஞ்சு போய் இருக்காங்கன்னு காட்டுது..  ரொம்ப அமைதியான நடிப்பு.. பெட்ரூம் ல புருஷன் கிட்டே கண்ணால சைகையாலயே வா-ன்னு கூப்பிடும்போது பக்கத்து சீட்ல ஒரு ஆள் எந்திரிச்சுட்டான்./.  ஹா ஹா .. ஆனா அவர் முகம் ஏன் ஆயில் வடிஞ்ச மாதிரி பல சீன் இருக்கு?  ஷைனிங்க்கா காட்டனும்னு ஏதாவது ஆலிவ் ஆயில் பூசிட்டாங்க போல..  சிவப்புக்கலர் பட்டு சேலைல அவர் மணக்கோலத்துல வர்ற சீன் அடடா இன்னும் நெஞ்சுக்குள்ளே நிக்குது.. 



http://moviegalleri.net/wp-content/gallery/amy-jackson-hot-in-saree-photos/actress_amy_jackson_hot_in_saree_photos_thandavam_audio_release_969dc80.jpg


அடுத்து எமி  ஜாக்சன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டைட் லெக்கின்ஸ் ,ஜீரோ சைஸ் இடை அழகி, உச்சத்தை தொட 2 அங்குலம் மட்டுமே மிச்சம் உள்ள அபாயகரமான லோ லோ லோ ஹிப் ஜீன்ஸில் அவர் வரும் காட்சிகள்  அடடா.. ஆனாலும்  பெரும்பாலான பி சி செண்ட்டர் ரசிகர்களுக்கு இவர் பிடித்துப்போவது சிரமமே.. ஷி ஈஸ் ஒன்லி ஃபார் ஏ செண்ட்டர் ஃபேன்ஸ்.. 



3 வது நாயகியாக தை ஸ்பெசலிஸ்ட் ரம்பாவுக்குப்போட்டியாக வாழைத்தண்டு தொடை அழகி லட்சுமிராய்.  அவருக்கு அதிக வாய்ப்பில்லை.. 


 நாசர் கொலை கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர். வந்த வரை ஓக்கே .சந்தானம் படத்தின் முதல் பாதியில்  சகுனியில் வந்தது போலவே ஆட்டோ டிரைவராக சாரி டாக்ஸி டிரைவராக வருகிறார். வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்புதான்.. 


 அது போக பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கு.. 


http://cdn2.supergoodmovies.com/FilesFive/thandavam-audio-launch-stills-dbd23425.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. லட்டு மாதிரி 3 ஹீரோயின்ஸை புக் பண்ணி 3 பேரையும் கிளாமர் காட்ட வெச்சது , அது போக படத்துல  3 ஃபாரீன் ஃபிகருங்க  எல்லாமே வெல்வெட் அழகிங்க.. 


2. படம் போட்ட 36 வது நிமிஷத்துல எதிர்பாராதவிதமா ஒரு நீச்சல் குள டாப் ஆஃப் சீன் இருக்கு, 2 செகண்ட்ல அது ஓடிடும்.. யாரோ ஒரு புது ஃபிகர் போல.. அடுத்த  6 வது நிமிஷத்துல அதாவது  படம் போட்ட 42 வது நிமிஷத்துல எமி ஜாக்சன் ஸ்லோ மோஷன்ல  ஓடி வரும் சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 



3. ஆல்ரெடி ஹிட் அடித்த  யாரடி மோகினி'அனிச்சம் பூவழகி , உயிரின் உயிரே, இந்த 3 பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் , லொக்கேஷன்களும் அழகு..


4. அனுஷ்காவுக்கு தங்கச்சியா ஒரு 75 மர்க் ஃபிகர் வருது. 6 சீன் வந்தாலும் அசத்தல்.. அதே போல் அனுஷ்கா கட்டி இருக்கும்  சிவப்புக்கலர்  பட்டுப்புடவை டிசைன் கலக்கல். படத்தில் அனைத்து பெண் கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு அழகு/
http://www.gulte.com/content/2012/06/photos/actress/Lakshmi%20Rai%20Hot%20Stills/normal/Lakshmi%20Rai%20Hot%20Stills_54.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1.  படத்தோட பெரும்பாலான ஷுட்டிங்க் நடப்பது லண்டனில். அதனால பல வசனங்கள் கேரக்டர்ஸ் ஆங்கிலத்தில் பேசறாங்க, அதுக்கு மொழி பெயர்ப்பா திரைல தமிழ் ல எழுத்துகள் ஓடுது, ஓக்கே.. அதை ஒரு டைம் மானிட்டர் பண்ண மாட்டீங்களா? ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ்
உதா - வெறும் = வெரும்  , பேஷண்ட்டோட = பேஷ்ன் ட்  -ஓட 


2. கொலையாளியை பார்த்த ஒரே சாட்சி சந்தானம் தான்.  அது வீடியோவில் பதிவாகி இருக்கு. ஆனா நாசர் அவர் கிட்டே கொலையாளி ஆள் எப்படி இருப்பான்னு முதல் கொலை நடந்தப்ப நடந்த விசாரணைல கேட்கவே இல்லை.. 


3. ஹீரோ முதல் கொலை பண்றப்ப எதேச்சையா சந்தானம் டாக்ஸில போறார், ஓக்கே.. ஆனா 2 வது டைம் அதே மாதிரி அவர் வர்றப்ப ஏன் அதே டாக்சில போகனும்? அவனே சாட்சி ஆகிடுவான்னு தெரியாதா? 


4. ஹீரோ வில்லனை கொலை பண்ணி மாடில இருந்து கீழே தள்ளி விபத்து மாதிரி செட் பண்றாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல  ஆள் செத்த டைம்க்கும், டெட் பாடி கைல இருந்த வாட்ச் நின்னு போன டைம்க்கும் வித்தியாசம் வருது, அது கொலைன்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா ஹீரோ ஆல்ரெடி போலீஸ் ஆக இருந்தவர், அவருக்கு இந்த மேட்டர் தெரியாதா? வில்லனை கொலை பண்ணி ஏன் கீழே தள்ளனும்? அவனை குற்றுயிரும், கொலைஉயிருமா பண்ணி உயிரோட மாடில இருந்து தூக்கிப்போட்டாத்தானே அது ஒரு பர்ஃபக்ட் விபத்தா காட்ட முடியும்?


5. விழி ஒளி இழந்தவரா வர்ற ஹீரோ எமி ஜாக்சனை முகத்தை தடவிப்பார்த்து “ நீ ரொம்ப அழகா இருக்கே” அப்டிங்கறார்.. பிரெயில் முறைல லெட்டர்ஸ்க்குத்தான் அப்டி படிக்க சொல்லிக்கொடுத்தாங்க.. தடவிப்பார்த்தா அழகா இருக்கறது தெரியுமா? ( நல்ல வேளை , இந்த சீன்ல கமல் நடிச்சிருந்தா  முகத்தை தடவி இருக்க மாட்டார்.. )



6. டெல்லில டாக்டரா இருக்கும் அனுஷ்கா  தன் கணவர் ஐ பி எஸ் ஆஃபீசர் என்பதே தெரியாமல் சாதா எஸ் ஐ என நினைப்பதா காட்டறது நம்பவே முடியல.. இந்தக்காலத்துல படிக்காத பொண்ணுங்க கூட மாப்ளையை பற்றி நல்லா விசாரிக்கறாங்க.. 


7. அதே போல் கிராமப்பொண்ணா இருந்தா ஓக்கே, ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் டெல்லில பெரிய போஸ்ட்ல இருக்காங்க.. மேரேஜ் முடிஞ்சும் கில்மா எல்லாம் பண்ணாம  என்னமோ லவ்வர்ஸ் மாதிரி காட்டி இருப்பதும், அப்பப்ப ஜஸ்ட் புன்னகை மட்டும் பண்ணிக்கறதும் பார்க்க கவிதையான காட்சியா இருந்தாலும் நடைமுறை சாத்தியம் ரொம்ப கம்மி.. 


http://hotactress-photos.com/wp-content/uploads/2012/09/Anushka-Photos-In-Saree-In-Thandavam-Movie-2.jpg


8. ஹீரோ ஹீரோயின் ஒரே வீட்டில் இருந்தும் எந்த ரொமான்ஸும் பண்ணாமல் இருப்பதும், பார்வையால் காதலை பரிமாறிக்கொள்வதும் இந்த காட்சிகளில் எல்லாம் மவுன ராகம் பி ஜி எம் சாயல் 


9.முக்கியமான டெரரிஸ்ட்டை  ஹீரோ பிடிச்சுடறார், அவனுக்கு கை விலங்கு போடாம அம்போன்னு விட்டுட்டு அசால்ட்டா அவனை தப்பிக்க விடுவது நம்ப முடியாத சீன் 


10. ஹீரோ போடும் கூலிங்க் கிளாஸ் மாடல் அரதப்பழசு, ஆல்ரெடி வயோதிகத்தோற்றம் தரும் விக்ரமின் முகத்தை அதீத வயோதிகம் தருது. அவருக்கு  மெல்லிய  ஃபிரேம் வைத்த கூலிங்க் கிளாஸ் போட்டு விட்டிருக்கலாம்.. 



11. ஹீரோ ஒரு சீனில் நிராயுதபாணியாய் நிக்கறார், அப்போ லண்டன் போலீஸ் 6 பேர் ரிவால்வரோட சூழ்ந்துக்கறாங்க, அப்போ ஹீரோ 2 பேர்ட்ட இருந்து கன்னை பிடுங்கி மீதி ஆட்களை சுட்டுடற சீன் செம காமெடி.. 



12. கிராமப்புறங்கள்ல மேரேஜ்க்கு முன்னாடி அதாவது கன்னிப்பெண்கள் தங்கக்கொலுசு போடக்கூடாதுன்னு ஐதீகம் இருக்கு. ஆனா அனுஷ்கா தங்கக்கொலுசு போட்டுட்டு கிராமத்துல உலா வர்றார்..  


13. சார்லி சாப்ளின் நடிச்ச சிட்டி லைட்ஸ் படத்தை சுட்டு நிலவே முகம் காட்டு எடுத்தாங்க.. அதே காதலை கஜினி  ஃபார்முலாவுல கொஞ்சம் போர்க்களம்  படம் மாதிரி எடுத்திருக்கீங்க.. அவ்ளவ் தான்.. சொல்லிக்கற அளவு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை..

14. ஹீரோ விழி ஒளி இழந்தவர் என்றாலும் அவர்  நார்மலா நாம செய்யும் பல வேலைகள் செய்யறார் என்பது வரை சரி. ஆனால் சேசிங்க், மர்டர், ஃபைட் எல்லாம் ஓவர்..   எக்கோ லொக்கேஷன் பயிற்சி பெற்றவர்னு காட்டறாங்க, ஆனாலும் இந்த அளவு எல்லாம் சாகசம் பண்ண முடியுமா?ன்னு தெரியல

http://www.searchmysite.in/wp-content/gallery/anushka-stills-in-siva-thandavam/anushka-stills-in-siva-thandavam-14.jpg 
மனம் கவர்ந்த வசனங்கள்


1. அழகுப்போட்டில ஜெயிக்க அழகும் ,இளமையும் மட்டும் போதாது.திருட்டுத்தனமும் வேணும்.சமூக அக்கறை உள்ளவர் மாதிரி நடிக்கனும்



2. கொலை நடந்த அன்னைக்கு ராத்திரி என்ன செஞ்சுட்டு இருந்தே? 


குளிருக்கு என்ன சரக்கு அடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் 



3. போன தடவை நடந்த விசாரணைலயும் நீ இதே பதில் தான் சொன்னே



 . சந்தானம் - நீங்களும் இதே ?தானே கேட்டீங்க?நீங்க கேள்வியை மாத்துனா நானும்  பதிலை மாத்திசொல்வேன் 




4. நீங்க நம்பியார்னு நினைச்சு நாகேஷை விசாரிச்சுட்டு இருக்கீங்க சார் 




5. ஷாஜகான் மும்தாஜை எவ்ளவ் லவ் பண்ணார்னு எல்லாருக்கும் தெரியும்.ஒரே ஒருத்தரைத்தவிர '- அது மும்தாஜ் 



6. கொலை நடந்ததை வர்ணி 



 சந்தானம் - சார், திஸ் ஈஸ் டெட் பாடி கம்மிங்க் ஃப்ரம் மொட்டை மாடி .. கம்மிங்க் கம்மிங்க். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.. 




7. நீ எந்த டைரக்‌ஷன்ல வந்திருக்கேன்னு பாரு.. 


 நான் இந்த டைரக்‌ஷன்ல தான் வந்திருக்கேன், நீ தான் மணி ரத்னம்  டைரக்‌ஷன்ல வந்திருக்கே. 


8. சந்தேகம் வர்லைன்னா கேஸே  நிக்காது, சந்தேகம் வந்தாத்தான் கேசையே ஆரம்பிப்போம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg



9. அர்த்த ஜாமத்துல நீ என்ன பண்ணிட்டு இருந்தே? 


 எறும்புக்கு எத்தனை பல்லுன்னு எண்ணிட்டு இருந்தேன்


10. சார், நீங்களும் எல்லா போலீஸ் மாதிரிதானா? ஒரிஜினல் கொலையாளி கிடைக்கும் வரை என்னை பிடிச்சு டைம் பாஸ் பண்ணிட்டு இருப்பீங்களா? 



11.  சார், இவனை 4 தட்டு தட்டுனா உண்மை எல்லாம் வெளில வந்துடும்


 4 இல்லை, 40 தட்டு தட்டுனாலும் உண்மை வராது.. 

 என்ன சார். நீங்களே ஏத்தி விடறீங்க? அவங்களே 4 தானே சொன்னாங்க.. ?



12. என்னை மாப்ளைன்னு இனிமே கூப்பிடாதீங்க


 சரி மாப்ளை



13. நீங்க மாப்ளை வீடா? பொண்ணு வீடா? 


 மாப்ளை வீடு


 நீங்க மாப்ளைக்கு என்ன வேணும்? 


மாப்ளைக்கு கல்யாணம் வேண்டாம்


 அப்போ.. 

 நான் தான் மாப்ளை



14. நீங்க புக்ஸ் படிப்பீங்களா? 

 தூக்கம் வர்லைன்னா படிப்பேன் 



15. ரோட்டை கிராஸ் பண்ணவே அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,


 ஆளை கொலை பண்ண யாரும் அவனுக்கு தேவைபடலை


 ( இந்த இடத்துல வசனம் ரோட்டை கிராஸ் பண்ணத்தான் அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,ஆளை குளோஸ் பண்ண யாரோட உதவியும் தேவை இல்லை) இப்படி இருந்திருக்கலாம், எதுகை மோனை )



16. சோன்பப்டி விக்கற பொண்ணு மாதிரி இருந்துட்டு சொர்ணாக்கா மாதிரி பேசறியேம்மா.. 



17. நீங்க எங்கே போகனும்?


 உனக்குப்பிடிச்ச இடத்துக்கு 


http://tamil.cinesnacks.net/photos/actress/Lakshmi-Rai/lakshmi-rai-hot-027.jpg







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42



 குமுதம் எந்திர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி,.பி கமெண்ட் - ஆஹா ஓஹோ என சொல்லும்படி படம் செம கலக்கல் எல்லாம் கிடையாது , அதே நேரம் படம் மோசமும் இல்லை. டைம் பாஸ்.. பார்க்கலாம். ஜாலியா டைம் பாஸ் ஆகும். யு படம் தான் லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZquebJQ2wuVh9B7UOxMwpy7qmSUoVU-ANrmn9wLp3wWc3MRj1sRlAtXwLWAfbVaWclMIXf-zfp43PGEvPvgJOqtBVXm6HcbFP0dOh1zAa5PNfbLC3G3rOi50V55ucQ-512c0NPE6vEVen/s1600/laxmi-rai-hot-navel-(5).jpga


டிஸ்கி 1 -தம்னா தெலுங்கு சினிமா -ரிபெல் -
http://www.adrasaka.com/2012/09/rebel.html




diSki-உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் முதன் முறையாக முற்று முழுதாக FULL HD SOUND QUALITY இல் உங்கள் புரட்சி.எப்.எம் 
கேட்டுப் பாருங்க - இந்த வித்தியாசத்தை உணருவீங்க! 

Thursday, September 27, 2012

தாண்டவம்




Image'தாண்டவம்' விக்ரமின் முன்மாதிரி பார்வையற்ற டேனியல் கிஷ்-ன் சிறப்பு பேட்டி ! விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார். இதற்கு அவர் ரோல் மாடலாக கொண்டிருப்பவர் டேனியல் கிஷ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் பார்வையற்றவர். ஆனால் தனக்கு பார்வையில்லையே என்று ஒதுங்கி இருந்து விடாமல் வாயால் ஒலி எழுப்பி அதன் எதிரொலியை கேட்டு அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை அனுபவத்தில் கற்றுக் கொண்டவர். 


அதாவது காதால் பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டவர். இப்போது அவர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற திறனை உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். அவர் தாண்டவம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த சிறப்பு பேட்டி :

* பிறப்பிலிருந்தே உங்களுக்கு பார்வையில்லையா? இடையில் ஏற்பட்ட விபத்தால் பார்வை பறிபோனதா?

பிறந்த 7 வது மாதத்திலேயே ஒரு கண் பார்வை போய்விட்டது. 15வது மாதத்தில் அடுத்த கண்ணின் பார்வை போனது. ரெட்டினோக்ளோபியா என்ற மூளை நரம்பு கோளாறினால் இது ஏற்பட்டது.

* உங்கள் பார்வை இழப்பு பெற்றவர்களை எப்படி பாதித்தது?

ஆரம்பத்தில் அவர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இது எல்லா பெற்றோருக்கும் உருவாகும் கவலைதான். ஆனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. தன் குழந்தை இந்த உலகத்தில் மற்ற குழந்தைகளைப்போலவே வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கேற்ப என்னை தயார் படுத்தினார்கள். பள்ளிக்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்னை தைரியமாக தனியே அனுப்பினார்கள். நானும் சுயமாக நடக்க பழகிக் கொண்டேன்.
* எக்கோ லொக்கேஷன் திறனை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

அதற்கும் என் பெற்றோர்தான் காரணம். ஆரம்பத்தில் வீட்டிற்குள் நான் புழங்கும்போது அவர்கள் ஒரு குச்சியால் சுவற்றிலோ அல்லது தரையிலோ ஒலி எழுப்புவார்கள். அந்த சத்தத்தை வைத்து நான் அவர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்பதையும். அதன் எதிரொலியை வைத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கற்றுக் கொண்டேன். அருகில் சுவர் இருந்தால் எதிரொலி ஒரு விதமாகவும் வெட்ட வெளியில் இருந்தால் இன்னொரு விதமாகவும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து சிறியதாக நானே ஒலி எழுப்பி அதன் மூலம் அருகில் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதன் முழு வடிவம்தான் காதால் பார்க்கும் கலை.

* இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் யோசனை எப்படி வந்தது?

உலகத்திலேயே எனக்கு பிடித்தது கற்றுக் கொடுத்தல்தான். கற்றுக் கொடுத்தல் தொழில் அல்ல அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்தே ஆக வேண்டிய கடமை. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை என்றால் நாம் இப்போதும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருப்போம். எனவே நான் கற்ற இந்த திறனை என்னைப்போன்ற பார்வையற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் உள்ளூரில் உள்ள சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். அது படிப்படியாக விரிந்து இப்போது எனது அமைப்பு உலகில் 23 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது. அங்கெல்லாம் நான் சென்று கற்றுக் கொடுத்து வருகிறேன்.

* உங்கள் திறனால் அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்வதைப்போல அருகில் உள்ள மனிதர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடியுமா?

(சிரிக்கிறார்). மனிதர்களை அறியமுடியும். குணங்களை அறிய முடியாது. ஆனால் சில நிமிடங்கள் பேசினால் அறிந்து கொள்வேன்.

* தாண்டவம் படம் பற்றி சொல்லுங்களேன்?


இந்தியாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் என்னை அணுகினார். தான் இயக்கும் படத்தில் எக்கோ லொக்கேஷன் திறன் உள்ள ஒரு கேரக்டர் வருகிறது என்றும் அதற்கு தங்கள் அனுபவம் தேவை என்று சொன்னார். நேரில் வரச்சொன்னேன். எனது வீட்டுக்கு வந்தார் சில நாட்கள் தங்கியிருந்தார் எனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்தார். அதை அவர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

* நீங்களும் படத்தில் நடித்திருக்கிறீர்களாமே?


எனக்கு நடிக்கத் தெரியாது. சில செய்தி படங்களிலும், ஆவணப் படங்களிலும் நான் நானாகவே தோன்றி பேசியிருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் நானாகவே வருகிறேன். நடிக்கவில்லை.

* விக்ரம் பற்றி உங்கள் கருத்து?


இந்த நாட்டில் அவர் பெரிய நடிகர் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது பற்றி எனக்குத் தெரியாது. அவர் எனக்கு ஒரு மாணவர் மாதிரி. இத்தனை பலம் வாய்ந்த ஒருவர் என்னிடம் ஒரு மாணவன் போல இருந்து கற்றுக் கொண்டதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் ரொம்ப ஸ்வீட் பெர்சன்.

* விக்ரம் உங்களை ரோல்மாடல் என்கிறார். உங்களின் ரோல் மாடல் யார்?

என் பெற்றோர்கள்தான். அவர்கள் மட்டும் என்னை முறையாக வளர்க்காமல் இருந்திருந்தால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. எனக்கு 18 வயதாகும்போது. "டேனியல் இனி நீ தனி ஆள். இந்த நாட்டுக்கு நீ வரி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வா. யாருடைய தயவையும் எதிர்பார்க்காதே. சம்பாதித்து அரசாங்கத்துக்கு முறையாக வரி கட்டு. அடுத்து உன் தேவைகளை பார்த்துக் கொள். கொஞ்சம் சேர்த்து வை. அது நாங்கள் முதியோர் ஆனபின் எங்களை நீ கவனித்துக் கொள்வதற்காக" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இன்று வரை செய்து வருகிறேன். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் அனுதாபம் கொள்வது. ஒரு குறைபாடுடைய மனிதனை பார்த்து அனுதாபப்படுவது அவனை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்று நினைக்கிறேன். அவனுக்கு வழியை மட்டும் காட்டுங்கள் நடந்து செல்வது அவன் பொறுப்பு.

* சினிமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"சினிமா பற்றி அதிகம் தெரியாது. நல்ல விஷயங்கள் எந்த வடிவத்தில் மக்களுக்குச் சென்றாலும் அது எனக்கு பிடிக்கும். அந்த வகையில் எக்கோலொக்கேஷன் சினிமா வடிவில் மக்களுக்கு போய்ச் சேர்ந்தால் சினிமாவும் எனக்கு பிடிக்கும்."


நன்றி : தினமலர்









Uyirin Uyire song from Thaandavam 

 

தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'உயிரின் உயிரே' பாடல் முழுமையாக....




 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'அனிச்சம் பூவழகி' பாடல் முழுமையாக...

 

 

 

 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'யாரடி மோகினி' பாடல் 

 

 

 

விக்ரம் பேட்டி - பிரஸ் மீட்