Showing posts with label இயக்குநர் சற்குணம். Show all posts
Showing posts with label இயக்குநர் சற்குணம். Show all posts

Thursday, August 06, 2015

சண்டி வீரன் - களவாணியின் கமர்ஷியல் + வாகை சூடவாவின் கலை நயம் - இயக்குநர் சற்குணம் பேட்டி

கிராமத்து படங்களை எடுக்கும் தற்கால இயக்குநர்களில் முக்கியமானவர் சற்குணம். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, வரிசையில் தற்போது ‘சண்டி வீரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அவரிடம் உரையாடியதில் இருந்து..
‘சண்டி வீரன்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்களைப் பார்த்தால் நீங்கள் கமர்ஷியல் படங்கள் பக்கம் திரும்பியது போல் இருக்கிறதே?
என்னுடைய முந்தைய படங்களில் கமர்ஷியல் விஷயங்களுடன் ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லியிருப்பேன். அது இந்த படத்திலும் இருக்கிறது. ‘களவாணி’ படத்தில் இருந்த எதார்த்தத்தை மீறாத கமர்ஷியல், ‘வாகை சூட வா’ படத்தில் இருந்த தரம் இப்படி இரண்டையும் கலந்து ‘சண்டி வீரன்’ படத்தை எடுத்துள்ளேன். அதற்காக அந்த இரண்டு படங்களின் கதையையும் சேர்த்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்று நினைக்க வேண்டாம். இப்படத்தின் இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் தலைப்பை பார்த்தால் ஜாதியை மையப்படுத்திய படமாக இருப்பது போல் தெரிகிறதே?
கண்டிப்பாக கிடையாது. இந்தப் படம் 100 சதவீதம் எந்த ஜாதியைப் பற்றியும் பேசாது. எந்த ஜாதியையும் உசத்தி பிடிப்பதோ, இறக்கி காட்டுவதோ என் படத்தில் எப்போதுமே இருக்காது. ஜாதியை மையப்படுத்திய படங்களை எடுக்கவும் மாட்டேன். இந்தப் படத்தில் வெறும் காதல், ஆக்‌ஷன் மட்டும் இருக்காது. அதைத் தாண்டி வேறொரு விஷயம் படத்தில் இருக்கிறது. அதை இப்போதே கூறினால் நன்றாக இருக்காது. படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது ஏன்?
என்னுடைய ஒரு படம் வெளியான உடன், அடுத்ததாக எந்தக் கதையைப் பண்ணலாம் என்று தேர்வு செய்து திரைக்கதை அமைக்க நேரம் எடுத்துக் கொள்வேன். கதைக்காக நேரம் எடுத்துக் கொள்வதை என்னைப் பொறுத்தவரை பலமாக கருதுகிறேன்.
‘சண்டி வீரன்’ படத்தை எப்படி இயக்குநர் பாலா தயாரிக்க முன்வந்தார்?
படத்தின் ஒளிப்பதிவுக்காக செழி யனிடம் இக்கதையை கூறினேன். அவர்தான் இந்தக் கதையை பாலா சாரிடம் கூறியுள்ளார். பின்னர் நான் அவரை சந்தித்தேன். இப்படத்தின் கதையை இடைவேளை வரை கேட்டு விட்டு, இதில் நாயகன் வேடத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். அதர்வா செய்தால் நன்றாக இருக்கும் என்றேன். அதன் பின் இரண்டாம் பாதி கேட்டார். முழுமையாக கதையைக் கூறி முடித்தவுடன் ‘நானே தயாரிக்கிறேன், அதர்வாவுக்கு சரியா இருக்கும் இல்லையா’ என்றார். அந்த இடத்திலேயே அதர்வாவுக்கு போன் செய்து வரவழைத்து இந்தப் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், எடுத்தவரை படத்தைப் பார்க்கிறீர்களா என்று பாலா சாரிடம் கேட்டேன். ‘முழுப் படத்தையும் முடி, முதல் பிரதியை பார்க் கிறேன்’ என்று கூறிவிட்டார். இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
பாலா தயாரிக்கிறார் என்பதால் முன்னணி நாயகர்களை வைத்து படத்தை எடுத்திருக்கலாமே?
படத்தின் கதையை ஆரம்ப கட்டத் தில் வேறு மாதிரி தான் எழுதியிருந் தேன். கதையின் கருவை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதும் போது நிறைய மாற்றி எழுதினேன். அப்போதுதான் அதர்வா நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
தொடர்ச்சியாக கிராமம் சார்ந்த கதைகளையே இயக்குகிறீர்களே?
நம்மை பாதித்த விஷயங்களை பட மாக எடுக்கும்போதுதான் அது நல்ல சினிமாவாக மாறும். நான் கிராமத்தில் இருந்து வந்ததால் என்னை சுற்றி நடந்த விஷயங்கள் மற்றும் மனிதர்களை வைத்து படம் பண்ணுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன், அது தான் நல்லதாகவும் படுகிறது. என்னு டைய பலம் என்ன என்று எனக்கு தெரியும்


நன்றி - த இந்து