Showing posts with label ஆறாது சினம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆறாது சினம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, February 26, 2016

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்


கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற 2 ஆஃபீசர்கள் அடுத்தடுத்து கொல்லப்படறாங்க, சாதா கொலை இல்லை , கொடூரக்கொலை. சாதாவுக்கும் கொடூரத்துக்கும் என்ன வித்தியாசம்? மற்ற அரசியல்வாதிகள் ஊழல் பண்ணினா அது சாதா ஊழல், ஆனா தானைத்தலைவரும், புரட்சித்தலைவியும்  ஊழல் பண்ணினா  அது மெகா ஊழல், சீரியல் ஊழல். மாற்றி மாற்றி 2 பேரும் ஆட்சிக்கு வந்து  முறை வெச்சு ஊழல் பண்ணுவாங்க இல்லையா? அது போல் ஒரே மாதிரி இந்த 2 கொலையும் ரண கொடூரமா நிகழ்த்தப்படுது



 இந்த கேசை  டீல் பண்ண  நம்ம ஹீரோவை நியமிக்க ட்ரை பண்றாங்க, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், ஆனா அவர் ஒரு போலீஸ் என்கவுண்ட்டர்ல ஒரு ரவுடியை போட்டுத்தள்ள முயற்சிச்சதில் பெரிய இடத்துப்பகையை சம்பாதிச்சு அதன் மூலம் தன் மனைவி, மகளை ஒரே சமயத்தில்  இழந்தவர். அந்த சோகம் தாங்காம எப்போப்பாரு சரக்கு அடிச்ட்டே இருக்காரு.

 அவரைக்கன்வின்ஸ் பண்ணி  கேசை  எடுத்துக்க வைக்கும்போது  இடைவேளை வந்துடுது. ஆக மொத்தத்துல முதல் 1 மணி நேரம்  1 மே இல்லாம படத்தை  ஓட்டிட்டாங்க.

 ஆனா  ஒரு நல்ல  சைக்கோ க்ரைம் த்ரில்லருக்கான முஸ்தீபுகள்  இருப்பதால  தமிழன் ஆர்வமாப்பார்க்கறான்.

 முன் பாதியில்  இருந்தா  எல்லா  மைனசையும்  பின் பாதி  த்ரில்லர் சரி செஞ்சுடுது , பிரமாதமான திரைக்கதை



ஹீரோவா அருள் நிதி.  அவர்  சோகமா கிளப்ல சரக்கு அடிப்பது, வீட்டில் சரக்கு அடிப்பது  என பாதிப்படத்துக்கு டாக்டர் ராம்தாசே செம கடுப்பு ஆகும் அளவு  குடிச்ட்டே இருக்கார். முடியல, ஆனா போலிஸ் ஆஃபீசரா கம்பீரம் காட்டுவது, துப்பு துலகுவது எல்லாம் கிளாசிக்

 ரோபோ சங்கர்  காமெடி  போலீஸ் . சார்லி சிரிப்புப்போலீஸ் / 2 பேரும் ஆரம்பக்கட்ட்டங்களில்  இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்க்காம துக்க வீட்டில் மொக்கை ஜோக் சொல்லி கடுப்படிக்கறாங்க கேப்டனின்  தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க , ரமணா டைப் புள்ளி விபர டயலாக் எல்லாம் ரோபோ சங்கர் நல்லாவே பண்றார், ஆனா அது எடுபடலை.


ஹீரோயினா  2 பேரு . போலீஸ் ஆஃபீசரோட மனைவி கேர்க்டர். ஐஸ்வர்யா ராஜேஷ். டிவி ப்ரோக்ராமர்  லேடி.  ஐஸ்வர்யா தத்தா  2 மே பாஸ் மார்க் ஃபிகருங்க தான்.இருவருக்கும்  போதிய வாய்ப்புகள் இல்லை..


ஸ்டைலான எடிட்டிங், அழகான ஒளிப்பதிவு  செமயான  பிஜிஎம் என த்ரில்லர் படங்களுக்கே உரித்தான் பிளஸ்கள் படம் நெடுக


வில்லனை ஆரம்பத்தில்  இருந்தே  காட்டி ஆனால் முகத்தை மட்டும் கடைசி வரை காட்டாமல் சாமார்த்தியமாக  கேமரா கோணங்கள் அமைத்த ஐடியாவுக்கு  ஒரு ஷொட்டு




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ரோபோ சங்கர் =,ஒரு ஏசி எனக்கே மீசை இல்லை.உனக்கு ஏன் மீசை?


சார்லி =விடுங்க.அவருக்கு வளருது.வெச்சிருக்காரு #,ஆ சி

2 நான் சாதாரண.டிரைவர்னு நினைச்சு பேசிட்டிருக்கீங்க.


பின்னே ஸ்க்ரூ ட்ரைவரா? #,ஆ சி




3 பார்க்கற எல்லாத்தையும் அநியாயம்னு சொல்லக்கூடாது.கிட்டே போய் பார்த்தாதான் அதோட நியாயம் தெரியும் #,ஆ சி






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்




ஆராதனா வராததால் அஞ்சனா உடன் ஆறாது சினம்


2 சீரியல் கில்லர் ஸ்டோரி ,சைக்கோ த்ரில்லர் டைப் கதைகளில் சென்ட்டிமென்ட் சீன் களை.வலிய திணிக்கக்கூடாது # ஆ சி





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 மலையாளத்தில் வந்த மெமரீஸ் படத்தின்  அதிகாரப்பூர்வமான  ரீமேக் என்பதால் கவுரவமாக டைட்டிலில் கதை - ஜீத்து ஜோசப் என உரிய அங்கீகாரம் தந்தது


2 ஓப்பனிங்கில்  வரும் 2  கொலைக்காட்சிகள், அதற்கான பின்னணி இசை  செம கலக்கல்


3  ஒரிஜினல் கதையை சிதைக்காம  நேர்மையா  திரைக்கதை அமைத்த விதம்







இயக்குநரிடம்  சில கேள்விகள்



1 கொலை நடந்த இடத்தில் எந்த விதமான துப்பு துலக்கிலும் ஈடுபடாமல் ரோபோசங்கர் , சார்லி மொக்கை போட்டுக்கொண்டிருப்பது எதுக்கு ? சீரியசான  கதையில் சம்பந்தமில்லாம மொக்கை ஜோக் எதுக்கு?

2  ஹீரோ வந்துதான்  எல்லாமே கண்டுபிடிக்கனும் என எழுதப்படாத விதி இருந்தாலும் அதுக்குன்னு மற்ற போலீஸ் எல்லாம் ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டேன்னா எப்படி? பாஸ்?


3 கொலை செய்யப்பட்டவனை சிலுவையில் அறைவது போல் மரத்தில் மாட்டி வைத்ததை வைத்து  சீரியல் கில்லர் ஒரு கிறிஸ்டியன் என கண்டு பிடிப்பது பெரிய பிரமாதமான யூகம் போல் பில்டப் தருவது  ஓவர்

4  கொலைகாரனுக்கு கொலை செய்யப்பட்ட ஆட்களோட மனைவிகள் மேல் இருக்கும் கோபம் தான் என்பதை  ஹீரோ எப்படி கண்டு பிடிச்சார் என்பதற்கு விளக்கமே இல்லையே?

5   ஹையர் ஆஃபீசரான ராதாரவி சார்லியை அழைத்து ஒரு வேலை சொல்லும்போது அவர் ஓபிஎஸ் மாதிரி எதுக்கு பம்மிக்கிட்டே குனியனும்> விறைப்பா நின்னு சல்யூட் அடிக்கறதுதானே போலீஸ் அடையாளம்? அவரும் அதிமுக வில் சேர்ந்துட்டாரா?

6 காலேஜ் கிளாஸ்  ரூம்ல கோ எட்  என இருந்தும்  பொண்ணுங்க 5 பேர்  செல் ஃபோன்ல பிட்படம் பார்ப்பது நம்ப முடியலை ,அதுவும்  முதல் பெஞ்ச்ல உட்கார்ந்துட்டு..? எப்டின்னா நாங்க எல்லாம் பிட் புக் படம் பார்க்கும்போது  லாஸ்ட் பெஞ்ச்  போவோம்.பொண்ணுங்க எப்படி  தைரியம் வந்தது ?


7  அந்த 5 லேடீசும்  ஒருவரை மாட்ட வைப்பதற்காக அவரது சொல் ஃபோனில் இருந்து  மேடம்க்கு ஆபாச எஸ் எம் எஸ்  அனுப்பியது  ஓக்கே, ஆனா அதை செண்ட் ஐட்டம்ல போய் எரேஸ் பண்ணவே இல்லையே?

8 காலேஜ்ல 3 வருசம் க்ளோசாப்பழகுன அந்த 5 பேரும் தங்கள் செல்ஃபோனை அட்ரசை பரஸ்பரம் ஷேர் பண்ணிக்காமயா இருப்பாங்க? போலீஸ்  விசாரிக்கும்போது  அவங்க செல் ஃபோன் நெம்பர்  வாங்கி வைக்கலைனு அசால்ட்டா சொல்றாங்க, போலீசும் அது பற்றி  கேட்கவே இல்லையே?

9 ட்யூட்டில மீண்டும்  ஜாயின் பண்ணின  ஹீரோ விசாரணை நடக்கும்போதே  நடு ரோட்டில் பட்டப்பகலில் சரக்கு அடிப்பது எதுக்கு ?

10  கிட்டத்தட்ட மேரேஜ் ஆகி 10 வருசமா  மாசமா இல்லாத காலேஜ் லேடி லெக்சரர் தன் கணவர் விபத்தில் இறப்பதற்கு  3 மாதம் முன்பு எப்படி மாசம் ஆனார்னு  போலீஸ் சந்தேகப்படவே இல்லையே? ( பிடிச்சமில்ல பாயிண்ட்டை, தினத்தந்தி மாலை மலர்  க்கு நன்றி )


11  பல கொலைகளை செய்த அனுபவம் மிக்க கொலையாளி  ஹீரோவை லாங்க் ஷாட்டில் கத்தியால் தாக்க முயற்சிக்கும்போது கத்தியின் கைப்பிடியைப்பிடித்து  கத்தியை   ஹீரோவை  நோக்கி வீசறாரே? முறைப்படி கத்தியின்  கூர்மையான பகுதியை பிடிச்சுத்தானே  வீசனும்?

12  கொலைகள் நடந்த 3  ஊர்களுக்கும் இடையே ஆன தூரம் 150  கிமீ தான் என்பதை வைத்து துல்லியமாக அடுத்த ஊரை எபடி கண்டுபிடிக்கறார்  ஹீரோ? 150  கிமீ ரேடியசில் எத்தனையோ  ஊர் இருக்குமே?

13  குறிப்பிட்ட அந்த 5 பெண்களை பழி வாங்க கொலையாளி அந்தந்த பெண்னின் கணவனை கொலை செய்தால் துன்புறுவர் என நினைப்பது லாஜிக் இல்லை. ரேப் & மர்டர் என்றால் கூட ஓக்கே






சி  பி  கமெண்ட் =ஆறாது சினம் - முன் பாதி சுமார், பின் பாதி பிரமாதமான சைக்கோ லவ் த்ரில்லர், ஏ சென்ட்டர் ஹிட் , விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே







 ரேட்டிங் = 3/5 


a



Director: Arivazhagan
Producer: N. Ramasamy
Writer: Arivazhagan
Story: Jeethu Joseph
Starring: Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta, Anupama Kumar
Music: D.Imman
Cinematography: Aravind Singh
Editor: Rajesh Kannan S.
Production company: Sri Thenandal Films
Release date: 26th February 2016
Language: Tamil

ஈரோடு அன்னபூரணியில்  படம் பார்த்தேன்