Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Wednesday, February 10, 2016

ஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் 50 டூ 62

விகடன் சில மதிப்பெண்கள்!
_____
16 வயதினிலே - 62.5
முள்ளும் மலரும் - 61
விசாரணை - 61
மகாநதி - 60
நாயகன் - 60
ஹேராம் - 60
காக்கா முட்டை - 60

இறுதிச்சுற்று -46
பூவே பூச்சூடவா - 56
அஞ்சலி - 58

அன்பே சிவம் - 47
விருமாண்டி - 48
ஆளவந்தான் - 41
காதலுக்கு மரியாதை - 50
துள்ளாத மனமும் துள்ளும் - 45
கில்லி - 45
சேது - 50

தெய்வத்திருமகள்- 50
பிதாமகன் - 49
வாலி - 45
ரமணா - 43
அலைபாயுதே - 44
ஆய்தஎழுத்து - 40
கன்னத்தில் முத்தமிட்டால் - 49
நந்தா - 44
பேரழகன் - 45
காக்க காக்க - 41
கஜினி - 43
அன்னியன் - 48
முதல்வன் - 43
பரதேசி-55 வழக்கு எண் 18/9 -55
பாரதி - 55
தவமாய் தவமிருந்து - 53
ஆட்டோகிராஃப் - 52
அழகி - 48
7ஜி - 46
பருத்திவீரன் - 46
மொழி - 46
பசங்க - 50
காதல் கோட்டை - 52
மூன்றாம் பிறை - 53
பம்பாய் - 52
முதல் மரியாதை - 54
வாழ்வே மாயம் - 50
வறுமையின் நிறம் சிகப்பு - 55
_____
விகடன் படிச்சவங்க உங்களுக்கு தெரிஞ்ச பெரிய மார்க் (?) எல்லாம் சொல்லுங்க!

நன்றி -@Gurubaai_U1 
பாலகுருநாதன்.மு

Saturday, September 07, 2013

ஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்துமதிப்பீடா? இயக்குநர் ராம் பர பரப்பு குமுறல்

 சி பி செந்தில் குமார் ஆகிய என் கருத்து 


ஆனந்த விகடன் தங்க மீன்கள் படத்துக்கு 44 மார்க் கொடுத்தது தரமான படங்களை எடுப்பவர்களுக்கு மிகவும் பின்னடைவு. ஏன்னா   விகடன்  விமர்சனம் சராசரியா  5 லட்சம்  வாசகர்களை போய்ச்சேருது. வாய்வழி  விமர்சனம் எனப்படும் மவுத் டாக் மூலம்  விகடன்  விமர்சனம்  50 லட்சம் பேரை போய்ச்சேரும்  என உத்தேசமாக கணிக்கிறேன் 


  பொதுவாக   கோடம்பாக்கத்தில்  விகடன் மார்க் எவ்வளவு  என்பதை உன்னிப்பாக பார்க்கிறார்கள் , என்பது அனைவரும்  அறிந்ததே .  ஆனானப்பட்டஷங்கர் , மணி ரத்னம்  கூட விகடன்  மார்க்  பற்றிய தங்கள் எதிர்பார்ப்பு பற்றி தனித்தனி பேட்டிகளில்  சிலாகித்தது உண்டு 


 அப்படிப்பட்ட ஆனந்த  விகடன் சமீப காலமாய் அதாவது  5 வருடங்களாக   சாதா படங்களுக்கெல்லாம்  மார்க்குகளைஅள்ளி இறைக்கிறார்கள் , நல்ல படங்களுக்கு   சுமாரான மார்க்கே போடறாங்க 


 முதலில் எல்லாம் விகடனில்  40 மார்க் வாங்கினாலே  அது நல்ல படம் தான். குடும்பத்தோட போய்ப்பார்க்கலாம்  என  மதிப்பிடலாம் . 

விகடனில்  50 மற்றும்  50 க்குமேல்  மார்க் வாங்கிய படங்க:ள் 




1  பதினாறு  வயதினிலே  -  61.5
2. .  நாயகன்  -  60


3. ஹேராம் - 60 


4. உதிரிப்பூக்கள்  - 60


5. பசங்க -58 


6. பரதேசி  - 56  


7. ஹரிதாஸ் - 45

8 கிழக்குச் சீமையிலெ" - 54


9. தவமாய் தவமிருந்து - 53

இப்படிஅதிக மார்க் வாங்கிய படங்கள்  வியாபார ரீதியாக  பெரும் வெற்றி பெறாமலும்  போய் இருக்கின்றன . விகடனில் மார்க் வந்தால் மட்டும் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆக்கி விட முடியாது . ஆனால் நான்  சொல்ல  வருவது லோ பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  தரமானபடங்களுக்கு    விமர்சனங்கள் பாசிட்டிவாக   அமைந்தால்  அது அதிகமான மக்களிடம்  போய்ச்சேரும் , அதுஆரோக்கியமான  சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்லது 


  இந்த தங்க  மீன்கள் படத்தில் குறைகள் இல்லாமல்  இல்லை . இருந்தாலும்   இதுக்கு  50மார்க்  போட்டிருக்கலாம் என்பதே   எனது கருத்து
ராமின் மரமேசையிலிருந்து : 10.
(ஆனந்த விகடன் மதிப்பெண்ணும் சர்ச்சையும்)

வணக்கம்,

வழக்கம் போல் இன்றும் அதிகாலை 3 மணிக்குதான் எழுத முடிகிறது.

ஆனந்த விகடன் குறித்த உங்கள் மின்னஞ்சல்களைப் படித்து முடித்தேன். நண்பகலில் கோவை, தஞ்சை யிலிருந்தும் நண்பர்கள் அழைத்து ஆனந்த விகடன் குறித்து முறையிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமா என்று கேட்டார்கள்? நீங்களும் மின்னஞ்சலில் இதைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

சென்னையில் ஆனந்த விகடன் வியாழன் அன்றுதான் வெளிவரும் என்பதால் நான் ஆனந்த விகடன் அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்து உங்கள் அழைப்புகளைக் குறித்துச் சொல்லி ஆனந்தவிகடன் படிக்கத் தரும்படி கேட்டேன்.

கடைசி இரண்டு பத்திகள் தவிர மற்றவை சிறப்பாகவே இருந்தன. இரண்டாம் பத்தியில் அவர்கள் குழம்பியதையும் அவர்கள் கவனிக்கத் தவறியததையும் தர்க்கப்பூர்வமாய் சுட்டிக் காட்டினேன்.

இத்தனை நன்றாக எழுதிவிட்டு ஏன் 44 மார்க், டிவிடி பார்த்து எடுத்தப் படங்களுக்கு 50 மார்க் போடும் நீங்கள் எப்படி ஒரு original அய் புறக்கணிக்கிறீர்கள். 

கற்றது தமிழுக்கும் இதையேதான் செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு தங்கமீன்கள் குறித்த விளக்கங்களையும் தந்தேன். மதிப்பெண்கள் கொடுத்த அறுவர் குழு அலுவலகம் விட்டு சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. ஒரு கோரிக்கை வைத்து திரும்பி இருக்கிறேன். ஆசிரியர் திரு.ரா.கண்ணண் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள்ளாக தங்கள் முதலாளியிடம் பேசிவிட்டு கோரிக்கையை ஏற்க முடியுமா முடியாதா என்று சொல்லிவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

எனவே நீங்களும் 11 மணி வரை பொறுத்திருங்கள்.
கோரிக்கை ஏற்கபடாவிடின் நானே என் மறுப்பை வெளியிடுகிறேன்.

அதுவரை எந்தக் கருத்தும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்

ராம்.
 
 
ஆனந்த விகடன் ஆசிரியர் வரும் வார ஆனந்த விகடனில் ஆனந்தவிகடன் விமர்சனம் குறித்தும் அதன் மதிப்பெண்கள் குறித்தும் என் விமர்சனத்தைப் பதிவுசெய்வதாய் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை
இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை
என்று சொல்லுகிறது.

பிரியங்களுடன்

ராம்.
  •  விகடன்  விமர்சனம்


    தன் மகளை 'தங்க மீனாக’ வளர்க்க ஆசைப்படும் தந்தையின் கதை!   


    நிலையான வேலையும் நிரந்தர வருமானமும் இல்லாத ராம், தன் மகள் சாதனாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். அச்சு எழுத்துகளுக்கு அஞ்சும் சாதனாவுக்கோ, மலை, குளம், பறவைகள், மீன்கள் என செயல்வழிக் கற்றலில்தான் ஆர்வம். பள்ளியில் அவள் மட்டம் தட்டப்பட, 'மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வக்கில்லையே’ என்று வீட்டில் ராம் குத்திக்காட்டப்பட... இருவரும் தங்கள் அடையாளத்தைத் தக்கவைக்கிறார்களா என்பதே படம்!


    கல்விக் கட்டணங்கள், ஓர் ஏழைக் குடும்பத்தை அலைக்கழிக்கும் கதையை கையில் எடுத்ததற்கும், அப்பா-மகள் பாசத்தை முதல் புள்ளியாக வைத்து சமூகத்தின் பல இழைகளைப் பின்னிய துணிச்சலுக்கும்... இயக்குநர் ராமுக்கு வாழ்த்து.

    அல்லாடும் தந்தையாக 'நடிகர்’ ராம் அறிமுகம். 'எதுக்கு நாயை அடிச்சீங்க?’ என்று மனைவி கேட்க, 'அப்போ வேற யாரைத்தான்டி நான் அடிக்கிறது’ என்று தன் இயலாமையில் வெடிக்கும்போதும், 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு காக்கா வந்து உங்ககிட்ட சொல்லுச்சா மிஸ்’ என்று பள்ளிக்கூடத்தில் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் குமுறும்போதும்... மனதில் பதிகிறார். சமயங்களில் பெரிய மனுஷித்தன்மையோடு பேசினாலும், தெற்றுப் பல் சிரிப்பிலும், மழலை உச்சரிப்பிலும் குட்டி தேவதையாக மனம் ஈர்க்கிறாள் சாதனா.


    தன்னை எவிட்டாவாகப் பாவித்து, 'அவ தங்க மீனாகிடுவா’ என்று தோழியிடம் கதை சொல்லும் இடம்... க்ளாஸிக்! 'நானும் செல்லம்மா மாதிரிதானேங்கே’ என்று கணவனிடம் இறைஞ்சுவதும், 'விளையாட்டுக்குக்கூட அவளை 'திருடி’னு சொல்லாதீங்க மாமா’ என்று மாமனாரை அதட்டுவதும், மாமியார், மாமனார், கணவன் என்று அனைவரிடமும் வாங்கும் இடிகளுக்கு ஒருகட்டத்தில் பொறுமை இழந்து மகளிடம் வெடிக்கும்போதும்... ஒவ்வோர் உணர்விலும் உருக்கம் சேர்க்கிறார் ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர். 'நான் நாளைக்கு சாகுறேனே... ஏன்னா, இன்னைக்கு எங்கம்மா பூரி பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று குறுகுறுக்கும் சாதனாவின் குட்டித் தோழி சஞ்சனா தோன்றும் காட்சிகளில் எல்லாம் உள்ளம் கொள்ளை கொள்ளுகிறாள்.

    'அப்போ தாத்தாதான் காக்காவா?’,  'காசு இல்லாதவன்லாம் முட்டாப் பயனு நினைக்காதீங்கடா’, 'விளம்பரம் போடும்போது, 'இதைப் பணம் இல்லாதவங்க பார்க்காதீங்க’ன்னா போடுறாங்க?’, 'கிறிஸ்துமஸ் தாத்தா சொன்னா ஜீசஸ் கேப்பார்... ஹெட் மாஸ்டர் கேப்பாரா?’, 'விளம்பரத்துல நாய் வந்ததுல இருந்து சிம்கார்டு வித்துச்சோ இல்லையோ, நாய் நல்லா விக்குது’, 'அவன் ரொம்ப நல்லவன்... கொஞ்சம் கெட்டவனாத்தான் திரும்பி வரட்டுமே’, 'உங்ககிட்ட நான் விட்டுட்டுப்போன குழந்தையைக் கொன்னுட்டீங்க’ - சூழலுக்குப் பொருத்தமான சுளீர் வசனங்கள் கோபம், ஏக்கம், சோகம், கலகலப்பு சுமந்து படம் நெடுகப் பரவிக்கிடக்கின்றன.


    ஓட்டுத் தாழ்வார வீடு, மலை, குளம், ரயில், சைக்கிள், படகு இல்லம் என ஒவ்வொரு தளத்தையும் ஒவ்வொரு பாத்திரமாக மனதில் பதியவைக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. பரந்து விரியும் பச்சைப் பசேல் மலைப்பரப்போ, இருள் கவிழ்ந்த ஒற்றை அறையோ இருப்பிடம் கொண்டு சேர்க்கிறது ஒளிப்பதிவு. பாடல்களில் 'ஆனந்த யாழ்’ மீட்டிய யுவன், பின்னணி இசையில் உயிர் உருக்குகிறார். அர்த்தம் செறிந்த வசனங்களுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறது பிரவாகமான யுவனின் பின்னணி இசை.

    ராம் - சாதனா கதாபாத்திரங்கள்தான் பிரதானமென்றாலும், படத்தின் ஒவ்வொரு கேரக்டர் செதுக்கல்களிலும் தேர்ச்சி. குறிப்பாக, எவிட்டா மிஸ்! க்ளைமாக்ஸ் காட்சி தவிர வசனங்கள் இல்லை, பாடல்கள் இல்லை,  சோகம் ததும்பும் சூழல்தான்... ஆனாலும் 'எவிட்டா மிஸ்’ஸாகக் கலங்கடிக்கிறார்  பத்மப்ரியா.



    பத்மப்ரியாவின் கணவர் நள்ளிரவில் ராமை எதிர்கொள்ளும் சூழலும், சில நிமிடங்களில் மனம் தெளிந்து ராமின் தோள் பிடித்து அரவணைப்பதும்... நெகிழ்ச்சியான சிறுகதை! 'நல்லாசிரியர் விருது’ பெற்ற பூ ராமு, மருமகளின் மீது கோபமும் பாசமும் பொழியும் ரோகினி, 'டேய் என் அண்ணன் வாங்கிக் கொடுத்த சாக்லேட்... எனக்கும் குடுடா’ எனும் தங்கை ரம்யா, பார்வையிலேயே அதட்டல் போடும் ஸ்டெல்லா மிஸ் லிஸ்ஸி... நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும்... அழகு!

    இத்தனை 'நல்லன எல்லாம்’ பார்த்துப் பார்த்துச் சேகரித்திருக்கும் ராம், பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? பள்ளிக் கட்டணம் 2,000 ரூபாய் மட்டும்தான் ராமுக்கு சிக்கல். ஆனால், 2,000 ரூபாய் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருக்க, கேரளா சென்றவர், பிறகு 22 ஆயிரம் ரூபாய் 'நாய்’ என்று இலக்கு வைத்து காடு, மலை, மேடேறுவதெல்லாம்... வழி தவறிய பயணம்!


    எவிட்டா டீச்சரின் சந்தேகப் புத்திக் கணவனின் இயல்பை வார்த்தைகளே இல்லாமல் பதிவுசெய்த இடம், சாதனா - சஞ்சனா இருவரிடையிலான குழந்தை நட்பை அச்சு அசலாகப் பிரதியெடுத்த சித்திரிப்புகள்... அந்த அத்தியாயங்களின் நேர்த்தியைப் பின்பாதியிலும் புகுத்தியிருக்கலாம் ராம்!

    ஆனாலும், கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!


    - விகடன் விமர்சனக்  குழு



    நல்ல கதை கரு.அருமையான இசை ,கேமரா, எல்லாம் இருந்தும் குழப்பமான திரைகதை சொதப்புகிறது. எல்லா பாத்திரங்களின் எதார்த்த நடிப்பு மனதை நிறைக்கும் போது,கதாநாயகனின் வெற்று ஆர்ப்பாட்டம் பல சமயங்களில் எரிசலடைய வைக்கிறது. 'கொள்கைவாதி' எப்போதும் குழப்பவாதியாகவே இருக்க வேண்டும் என்பது என்ன விதியோ???

    என்னங்க இது அநியாயமாக இருக்கு... இந்த படத்துக்கு 60 மேலே மதிப்பெண்கள் கொடுப்பதை விட்டு விட்டு வெறும் 44 தான் கொடுக்குறீங்களே....

    ராம் நல்ல படைப்பாளி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஆனால் கணினி துறையை சாடுவது அவரின் எல்லா படங்களிலும் பொதுவாகிறது! திடீர் பணக்காரன்.. படோபமாக வாழுவது கணினித்துறையில் மட்டுமா நடக்கிறது.. சினிமாத்துறையில் நடக்காத கூத்துக்கலா? தன் படங்களில் அதை படமாக்கவோ விமர்சிக்க முயல்வாரா ராம்!

    நல்ல படம். ஆனால், வீட்டை விட்டு பணம் சம்பாதிக்கப் போகும் பகுதிகள் முட்டாள்தனமானது யதார்தமற்றது. இந்த இயக்குனருக்கு ஒரு இயலாமை உள்ளது, கையறு நிலை. அதனாலேயே, தாரே ஜமீர் பர் பாதிப்பில் உல்டா அடித்தாலும் அப்பன் வழக்கம் போல் கொஞ்சம் நட்டாக காட்டியது.

    பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? கற்றது தமிழிலும் இதே பிழை( சம்மந்தமே இல்லாமல் கணினி துறையை சாடியது). நல்ல படைப்பாளி நல்ல கதை சொல்லியாக இருக்கின்ற நீங்கள் இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்துங்கள். உலக தர தமிழ் சினிமாவை உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் எதிர் பார்க்கிறோம். பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த மற்றுமோர் அறிய படைப்பாளி !!! வாழ்த்துக்கள் ராம்.
    • Jegadeesh

    ...படத்தின் முன்னோட்டமே கண்களில் கண்ணீர் முட்ட வைத்தது... குட்டி பெண் நமது வீடுகளில் இருக்கும் சேட்டை செய்யும் குட்டி பெண்களை நினைவுட்டுகிறாள்...
    • R.BALAMURUGESAN
    கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!
    • satheesh
    வாழ்த்துகள் ராம். மென் மேலும் வளர்க. நல்ல படங்களை இதுவரை தந்து விட்ட நீங்கள், உங்களுக்கென ஒரு பாதையையும் இடத்தையும் பிடித்துவிட்டீர்கள். இனிமேல் போக வேண்டிய தூரத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும், உங்களுக்கு தெரியாதது இல்லை, கெட்ட சினிமா உலகம் இது.

    யுவன் உங்களை எப்போதும் கை விட்டதில்லை, இந்த படத்திலும் அப்படியே, ஆனந்த யாழ் சூப்பர். அவருடன் மீண்டும் வேலை செய்ய நேர்ந்தால், மறந்தும் யுவனை பாட வைத்துவிடாதீர்கள்.
    • E

    நண்பர்களே .... ரொம்ப நாளைக்கு பிறகு வெளிவந்திருக்கும் ஒரு மிக தரமான திரைப்படம். தயவு செய்து பாருங்கள்.
    எனக்கும் இரு பெண் குழந்தைகள் உண்டு. ஆனால் எல்லோருக்கும் முரண்பட்டால் தனியாக தெரிவோம் என்பதற்க்காக சொல்லவில்லை. என்னைபொருத்தவரை இது பெண்ணின் அங்கங்களை காட்டி ஏமாற்றுவது போல் இது அப்பா-மகள் பாசத்தை மிகைப்படுத்தி மக்களை ஏமாற்றும் படம்.

    எனக்கு திருவிளையாடலில் நக்கீரனார் சொல்வதாக வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு சரியான பாடலுக்கு என் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதனைப்பார்த்து மகிழ்ச்சியடைபவன் நான்தான். ஒரு பிழையான பாட்டிற்க்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்த்து வருத்தப்படுபவனும் நான் தான்." என்பது போல இந்த படத்தை இரானிய படத்தினிடமோ அல்லது ஜப்பானிய அகிரா குரோசோவா படத்தினிடமோ, நம்மூர் சத்யஜித் ரே படத்தினிடமோ ஒப்பீட்டு பார்க்க வேண்டாம்.

    என்னைக்கேட்டால் இந்த படத்தில் protoganist -ன் தங்கை கேட்ட கேள்வி , "செல்லம்மா 5 -ஓ அல்லது 50 லட்ச ரூபாயோ மதிப்புள்ள கார் கேட்டிருந்தால் தந்தை எந்தளவு stretch செய்ய வேண்டும்" என்பது மிகச்சரியான கேள்வி என்பேன்.

    இந்த படம் ஒரு பண்படாத மனிதனின் பிதற்றல் என்பது என் தாழ்மையான கருத்து.
    • a

    பாஸ், தலைவா படத்தை விட இது 1000 டைம்ஸ் பெட்டெர் தானே...அப்புறம் ஏன் பாஸ் எவ்வளுவு நல்லா பரீட்சை எழுதினாலும் மார்க் மட்டும் கம்மியா போடுற தமிழ் வாத்தியார் மாதிரியே மார்க் போடுறிங்க......
    இது அநியாயம் பாஸ்... இது கண்டிப்பா 48-50 மார்க்கு தகுதியான படம் தான்.. பொங்கு அடிக்காதிங்க

    44 toooo less.. 60 எதிர்பார்த்தேன்..
    • வேல்
    கஞ்சப் பிசாசுய்யா நீங்க . வெறும் 44 ? போங்கடா !
    ஆயிரம் நல்ல விஷயம் சொல்லிட்டு வெறும் 44 தானா?

    கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் இது போன்ற படங்களை...
    • அசோகன், சிங்கப்பூர்
    • 1

    நல்ல படமா இருக்கும் போலிருக்கு! பார்க்க வேண்டும். ஆனால், என் இவ்வளவு குறைந்த மார்க்?
    \

    அடேடே விகடன் 42 மார்க்குக்கு மேல போட்டா பாக்கலாம் போலருக்கே.
    • S
    44 மதிப்பெண் மிகவும் குறைவு

Thursday, October 25, 2012

ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை

http://static.flickr.com/90/205023921_20231f4f25.jpg

சின்மயி VS கீச்சர்கள்! (ட்வீட் தமிழர்கள்)

க.ராஜீவ்காந்தி

ட்விட்டர், ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. காரணம், அவர் பதிவிட்டதாகச் சொல்லப்படும் சில ட்வீட்களும் அதற்கான எதிர்வினைகளும். போலீஸ் புகார், இணைய உலகில் கருத்து மோதல் என்று கலவர நிலவரம்.
 பிரச்னைகளுக்கு சின்மயியின் ட்வீட்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பிரபல ட்வீட்டர்கள் 'ராஜன்லீக்ஸ்’ ராஜன், 'தோட்டா’ ஜெகன், 'ஃப்ரீயாவிடு’ டேவிட். ராஜனிடம் பேசினேன்...



''2011 ஜனவரி மாசம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இணைய எழுத்தாளர்கள் ஓர் இயக்கம் ஆரம்பிச்சோம். அதில் இணையச் சொல்லி சின்மயியிடம் கேட்டோம். மறுத்துட்டாங்க. அது வரைக்கும் அவங்க உரிமை. ஆனா, 'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா?’னு ட்வீட் பண்ணாங்க. கோபத்தில் நாங்க சின்மயியை விமர்சிச்சு ட்வீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பிரச்னை. தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை சின்மயி போஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்க.


இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில், 'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்’னு எழுதினாங்க. இப்படி அதிகப்பிரசங்கித்தனமா அவங்க போடுற ட்வீட்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டே இருப்போம். அது அவங்களுக்குப் பிடிக்கலை. தமிழ்நாட்டின் பிரபல பதிவர்கள் பட்டியலில் அவங்களுக்கு அடுத்து என் பேர் இருந்தது அவங்களை எரிச்சல்படுத்தி இருக்கு.


http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg
 அதைப் பத்தியும் தப்புத் தப்பா ட்வீட் பண்ணிஇருந்தாங்க. இது எல்லாம் சேர்ந்துதான் இப்போ போலீஸ் புகார் வரை போயிருக்கு. இத்தனைக்கும் சின்மயியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் இருந்த பலரைப் பற்றியும் புகார் சொல்லி இருக்காங்க சின்மயி. இணையவெளி ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். அந்தத் தைரியத்தில் சிலர் சின்மயியை பெர்சனலாப் பேசியிருக்கலாம். ஆனா, அதுக்காக ஏதோ சின்மயி தப்பே பண்ணாத மாதிரி பேசுறது நியாயம் இல்லை. பிடிக்காதவங்களை, தன்னைப் பத்தித் தப்பாப் பேசுறவங்களைத் தன் அக்கவுன்ட்டில் பிளாக் பண்ணியிருக்கலாம். பிரச்னையே இருந் திருக்காது!'' என்றார்.



சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொடர்புச் சட்டம் 66ஏ பிரிவின் கீழ் ராஜனைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக தமிழகத்தில் முதல்முறையாகக் கைது செய்யப் பட்டு இருக்கும் நபர் ராஜன்தான்.



சின்மயியிடம் பேசினேன், ''இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச விரும்பலை. நான் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்னு என் அம்மாகிட்ட கேட்டுக்கங்க!'' என்று ஒதுங்கிக்கொண்டார்.


http://static.ibnlive.in.com/pix/slideshow/06-2012/in-pics-south/simmaardpart34222612_11.jpg



சின்மயியின் தாயார் பத்மஹாசினி பேசினார். ''ஃபேஸ்புக், ட்விட்டர்ல என் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுறது இன்னைக்கு நேத்து இல்லை. பல வருஷமாவே இருக்கு. எத்தனை நாள்தான் நாங்களும் பொறுமையா இருக்கிறது? என் பொண்ணைத் தப்பாப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் என்னையும் தப்பாப் பேசி... ரொம்ப தனிப்பட்ட தாக்குதலா இருந்ததுனாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தா சின்மயி.



'ஜெயலலிதாவையே கேள்வி கேக்குறோம். நீ என்னடி பெரிய இவளா?’னு கேட்டா, எங்களால் என்ன சொல்ல முடியும்? மீனவர் பிரச்னையோ, இட ஒதுக்கீட்டுப் பிரச்னையோ ஒவ்வொருத்தருக்கும் தன் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல உரிமை இல்லையா? இதே சின்மயிதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டிச்சும் ட்வீட் பண்ணியிருந்தா. அதுக்கு, 'நாங்க குழந்தைகளை ரேப் பண்ணினா உனக்கு என்னடி?’னு ட்வீட் போடுறாங்க. இளையராஜா ரசிகர்கள்லாம் சேர்ந்துக்கிட்டு, 'நீ ரஹ்மான் குரூப்தானே’னு திட்டித் திட்டி ட்வீட் போடுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?




முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதைகூடக் கொடுக்காம ஜெயலலிதாவை ரொம்ப மோசமா விமர்சிக்கிறாங்க. கனிமொழி, குஷ்பு, நயன்தாரானு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ஆபாசமா விமர்சிச்சு எழுதுறாங்க. இப்ப இந்த வரிசையில சின்மயி. த்ரிஷா ஒரு நாயைத் தத்தெடுக்கப் போறேன்னு எழுதினா, அதுக்கு உடனே, டபுள் மீனிங்ல கமென்ட் பண்றாங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரோட பிரா சைஸ் என்ன இருக்கும்னு விவாதிச்சுட்டு இருக்காங்க. பெண்கள் மீதான வக்கிரத்தை வெளிப்படுத்தத்தான் இவங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுதா? சின்மயி, சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப் பெருமை பேசுற, 'இந்த சாதிக்காரன்’னு சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்களை எல்லாம் ஏன் இவங்க தட்டிக் கேட்கலை?




ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோதலைவர் களைத் திட்டிட்டா போதுமா? அது தமிழர் களுக்காகப் பாடுபட்டோம்னு அர்த்தம் ஆகிடுமா? ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும்,  வீட்ல கரன்ட் இருக்கிற வரைக்கும் ட்வீட் பண்ணிட்டு, அப்புறம் சொந்த வேலைகளைப் பார்க்கப் போறவங்கள்லாம், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீதியில் இறங்கிப் போராட லாம்ல. இதோ... சோஷியல் நெட் வொர்க்கிங் சைட்களில் பெண்கள் மீது அவதூறு பரப்புறவங்களை எதிர்த்து என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டா. நீங்களும் அப்படி வாங்களேன் பார்ப்போம்!'' என்றார் கோபமும் வேகமுமாக!


http://www.moviecloudz.com/wp-content/uploads/2012/10/Chinmayi-Playback-Singer.jpg



பின்குறிப்பு: இதழ் அச்சுக்குச் செல்லும் சமயம் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுகள் துவங்கிவிட்டதாகத் தகவல்!

 நன்றி - விகடன்

Thursday, October 11, 2012

பரதேசி -இயக்குநர் பாலா பேட்டி

சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"


'பரதேசி' பாலா
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPhnhmo-P9VVq0EljHSVawfVso7iHmhA43mQOzoiVOHy_KJUmhn-kDpXq3MDaiRat5a2IiA8EUxoEWLwEFcp5CBJNh6UqY9J1QvAByEIvZtIfqbkQfNQ-3C0IR6QPkhK-e227y2GDfJOY/s400/2004092113060201.jpg

'வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’




- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.



அதர்வாவா இது? ஆச்சர்யம் கண்களில் விரிய எதிரில் இருந்த புகைப்படங்களில் அடிமைகளின் உறைந்த சரித்திரம். 100 வருடம் வளர்கிற தேயிலைச் செடிகளின்  இலைகளைப் பறித்து, நறுக்கிக் குறுக்கி வளரவிடாமல் ஒரு செடியாகவே வைத்திருக்கிற பெரும் சோகம். நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் காலம் காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் உலகம்.



எடிட்டிங் அறையில் இருந்து பாலா வெளியே வருகிறார். உரையாடலில் இருந்து...



''பாலா பட வரிசையில் 'அவன் இவன்’ பெரிய ஏமாற்றம் தந்துச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு?''



''ஒண்ணும் ஆகலையே'' எனச் சிரிக்கிறார். ''சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கிட்டே இருக்கும். எப்போ ஏணி... எப்போ பாம்பு வரும்னு  தெரியாது. தெரிஞ்சா அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு? 'அவன் இவன்’ உங்க விமர்சனப் பார்வையில் தோல்விதான்.



ஆனா, என்ன விமர்சனம் வந்தா எனக்கென்ன? விஷாலுக்குள் ஒளிஞ்சிருந்த அற்புதமான கலைஞனைக்  கண்டு பிடிச்சேன். ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவை என் கிராமம் வரைக்கும் அழைச்சுக் கிட்டுப் போனேன். என்னோட தயாரிப்பாளரை நிம்மதியா தூங்க வெச்சேன். இது மாதிரி சில நல்ல விஷயங்கள் 'அவன் இவன்’ மூலமா நடந்துச்சு. 'ஜாலியா ஒரு படம் எடேன்’னு சொன்ன உங்களை மாதிரி ஆளுங்களே 'நீ உன் ஸ்டைல்லயே படம் எடுடா’னு கேட்டுக்கிட்ட தால் இப்ப 'பரதேசி’.''





''இந்த மாதிரி டைட்டில்களை எங்கே பிடிக்கிறீங்க? 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்கே?''





''என்ன பயங்கரமா இருக்கு? நாம எல்லாருமே பரதேசிகள்தான். பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான். கார்ல போற பரதேசியும் இருக்கான்; பிச்சை எடுக்கிற பரதேசியும் இருக்கான். இப்படி 1940-கள்ல டீ எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகள்ல ஒருத்தன்தான் அதர்வா. நீங்க 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்குங்கிறீங்க. இதுக்கு முதல்ல வெச்ச பேர்... 'சனி பகவான்’. சிரிக்காதீங்க!''




''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால்... இப்போ அதர்வா?''




''அதர்வாவைக் கவனிச்சுப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போதும் அவன் கண்ணுல மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தைத் தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.''



''ஒரு படத்துக்கான கதையை எப்படி முடிவு செய்றீங்க? 'ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி’யாப் பண்றீங்களா?''



''அந்தக் களத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல இந்தப் பரதேசியை இறக்கிவிட்டுஇருக்கேன். இன்ஸ்பிரேஷன் இல்லாம நாம யாருமே இல்லை. ஒரு மனுஷன் அவனோட இருபது வயசு வரைக்கும்தான் வாழ்றான். அப்புறம், வேலை, குடும்பம், குழந்தைகள், அவங்க கல்வினு பிழைப்புதான் எல்லாமே.




நான் தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனசுக்குள்ள இருக்கு. உள்ளுணர்வுதான் என்னை நகர்த் துது. என்னைப் பொறுத்தவரைக்கும் கதைனு ஒண்ணு கிடையாது. பாத்திரங்கள் தான். ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றினு அவங்களுக்குள்ளே நடக்கிற பரமபதம்தான் எல்லாம்.



'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’. இது எல்லாத்தையும் சேர்த்துவெச்சுப் பாருங்க. நான் எங்கே கதையை முடிவு பண்றேன்? இங்கே யாரும் சுயம்பு இல்லை!''




''கதாநாயகர்களை வதைக்கிறீங்களே... 'சேது’வில் தொடங்கி 'பரதேசி’ வரை உங்கள் ஹீரோக்கள் எல்லோரையும் 'ஒரு டைப்பாக’ மாத்திடுறீங்களே?''




''படங்கள் கேட்குதே... என்ன செய்ய? சினிமால ஒரு நடிகன் தனியா துருத்திக்கிட்டு தெரியக்கூடாதுனு நினைக்கிறேன். அவனை ஒரு மனுஷனா, அந்தக் கதாபாத்திரமாதான் நீங்க பார்க்கணும். அதுக் குக் கொஞ்சம் மெனக் கெடத்தான் செய்யணும்; 'ஒரு டைப்பா’ மாத்திதான் ஆகணும்!''




''இந்தப் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?''



''நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.



முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.



வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுப வத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார். நெஞ்சுக்குள்ள முள்ளு குத்துற தமிழ்!''




''ஆமா, உங்களுக்குப் பெண்கள் மீது மரியாதையே கிடையாதா? உங்க படங்கள்ல ஏன் ஆணாதிக்கம் தலைவிரிச்சு ஆடுது?''




''ஆணாதிக்கம் இருந்ததுங்கிறது உண்மைதான். எனக்கு ஒரு மகள் பிறந்து, அவள் தன்னோட பிஞ்சுக் கைகளால் அடிக்க ஆரம்பிச்சப்பவே எனக்குள் இருந்த, நான் கர்வப்பட்ட ஆணாதிக்க உணர்வு போய்டுச்சு. அவள் கற்றுத்தந்த அன்பு இந்தப் படத்தில் வேதிகா, தன்ஷிகாவுல ஆரம் பிச்சு படத்துல வர்ற ஒரு குட்டிப் பாப்பா வரைக்கும் இருக்கும்!''




''ஜாலியாப் பதில் சொல்லுங்க. பாலாவோட டாப் 10 மாதிரி வெச்சுக்கலாம்...''




''ம்... இது வேறயா?''



''பிடித்த 10 மனிதர்கள்... பிடித்த படைப்புகள் சொல்லுங்களேன்?''



''எம்.ஜி.ஆர். - 'பெற்றால்தான் பிள்ளையா’
சிவாஜி - 'தேவர் மகன்’
கலைஞர் - 'பராசக்தி’
ஜெயலலிதா - 'எங்கிருந்தோ வந்தாள்’
கமல் - 'மகாநதி’
ரஜினி - 'முள்ளும் மலரும்’
பாலுமகேந்திரா - 'வீடு’
போதும்ல?''





''இன்னும் மூணு இருக்கே...''



''இன்னுமா?''

''உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்?''




''ருத்ரய்யா, மணிரத்னம், பாலாஜி சக்திவேல்.''



''நீங்க இயக்க விரும்பின நடிகர்கள்?''



''நானா படேகர். ஜோதிகா.''



''பிடித்த நடிகர்கள்?''    



''என் பட நாயகர்கள் எல்லோரும். இப்போ தைய மனநிலையில்... அதர்வா. ஹீரோயின்... அனுஷ்கா.''



''சரி, சினிமாவுக்கு வரலைன்னா, என்னவாகி இருப்பீர்கள்?''



''டாக்டராவா ஆயிருப்பேன்... ம்ஹூம்... நான் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு, செத்தே போயிருப்பேன். போதுமா? முடிச்சுக்குங்க!''



நன்றி - விகடன்

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்


http://lh5.ggpht.com/-jRoOR5gKn9s/SoHJLf4OiwI/AAAAAAAAIfI/-Adh8mCNNxo/Director%252520K%252520Bhagyaraj%252520Family%252520%2525281%252529.jpg

1.   '' 'தாவணிக் கனவுகள்’ படத்தை ரீ மேக் செய்தால், பாக்யராஜ் யார்... சிவாஜி யார்? ஒரிஜினலைக் கெடுக்க மாட்டேன்... ரீ மேக் வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல் பளிச்என்று சொல்லுங்கள்?'' 



''பாக்யராஜ் - சாந்தனு... சிவாஜி - ரஜினி.''




2. ''நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''



'' 'அந்த 7 நாட்கள்’ பார்த்துட்டு மணிரத்னம் சார், 'திரைக்கதையில் இதுதான் உச்சம்’னு சொன்னார். 'எப்படிங்க இப்படிலாம் கதையில ட்விஸ்ட் கொண்டுவர்றீங்க’னு ஆச்சர்யமாக் கேட்பாங்க. ஆனா, எனக்கென்னவோ என் பேரை காலாகாலத்துக்கும் சொல்ற மாதிரி பெஸ்ட் படம் இன்னும் கொடுக்கலைனுதான் தோணுது. அப்படி ஒரு படத்தை இனிமேல்தான் நான் இயக்கணும். அவை அடக்கத்துக்காகச் சொல்லலை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது மாதிரி எனக்குப் பிடிச்ச படத்தை எடுக்கிறப்போ, பாஸ்கர பாண்டியன்... உங்களுக்கு ஒரு ட்ரீட் இருக்கு.''





3. ''உங்க குரு பாரதிராஜா இயக்கத்தில் உங்களுக்குப் பிடிச்ச படம்... பிடிக்காத படம் எது?''



'' பிடிச்சது... '16 வயதினிலே’,


பிடிக்காதது 'வாலிபமே வா வா’.''



4. ''சிவாஜி, நீங்க, டி.ராஜேந்தர்... அபார திறமைசாலிகளா இருந்தும் அரசியல் வெற்றி மட்டும் உங்களுக்கு எல்லாம் எட்டாக் கனியாவே ஆயிடுச்சே... ஏன்?''



''இங்கே வரும்போது அதை நினைச்சு வரலை. சினிமா மட்டுமே லட்சியமா ஊறியிருந்தது காரணமா இருக்கலாம்.''




5. '' இந்தப் படத்தை ஏன் இயக்கினோம்னு உங்களை வருத்தப்பட வெச்ச படங்கள் என்னென்ன?'' 



''இயக்கினதுக்காக வருத்தப்படலை. 'ஏண்டா நடிச்சோம்?’னு வருத்தப்பட்ட படங்கள் உண்டு. அதை எதுக்கு வெளியே சொல்லிக்கிட்டு... விடுங்க!''


 சி.பி - நான் சொல்றேன் .ஞானப்பழம், ருத்ரா,வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே




'6. ' 'காதல்’, 'சுப்ரமணியபுரம்’, 'களவாணி’ படங்களை சாந்தனு மிஸ் செய்ததில் உங்க பங்கு என்ன?''



''அப்படிலாம் எந்தப் பங்கும் இல்லைங்க. 'காதல்’ படத்துக்குக் கேட்டப்போ சோனு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருந்தான். காதலிக்கிறது, பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறதுனு அவன் நடிச்சா, அது ஏத்துக்கிற மாதிரி இருக்குமானு நான் தயங்குனேன். அதான் உண்மை.



'சுப்ரமணியபுரம்’ கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போ அவனும் ஒரு பக்குவத்துக்கு வந்துட்டான். சசிகுமார் ஒரே ஷெட்யூல்ல முடிக்கிற மாதிரி டேட்ஸ் கேட்டார். சரி... கொடுத்திரலாம்னு முடிவு பண்ண சமயம், திடீர்னு அதுக்கு முன்னாடியே சோனு நடிச்சிட்டு இருந்த 'சக்கரைக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டாரு. சோனு நடிச்சு வெளிவர்ற முதல் படம் 'சக்கரைக்கட்டி’தான்னு தாணு சாருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அதை மீற முடியலை. எப்பவும் நம்ம வார்த்தையில் நிக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால அவன் 'சுப்ரமணியபுரம்’ பண்ண முடியாமப்போச்சு.



'களவாணி’ கதையும் எனக்குப் பிடிச்சது. கதை விவாதத்திலும் ஆர்வமாக் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர் நடிச்சார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சோனுவுக்கு மூன்று வாய்ப்புகளுமே தவறிப்போனது யதார்த்தமா நடந்ததுதான்.''





7. ''நெருக்கமானவங்களைக்கூட எம்.ஜி.ஆர். அதட்டி மிரட்டிருவாராமே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. சொல்லுங்க?''




''அதட்டி மிரட்டிருவாரா... முறைச்சுப் பார்க்கிறதுலயே உண்டு இல்லைனு பண்ணிருவாருங்க!


'அண்ணா என் தெய்வம்’னு வாத்தியார் கடைசியா நடிச்ச படம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்ததோட நின்னுபோச்சு. காரணம், தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் கோட்டையில் உட்கார்ந்தாச்சு. அப்ப அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்கிட்ட வந்தாங்க. 'நீங்க இந்தப் படத்தை ஏதாவது பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. 'ஐயா, நீங்க முதல்ல வாத்தியார்கிட்ட கேட்டுட்டு வாங்க. இன்ன மாதிரி 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும். இதையும் தலைவர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பிவெச்சேன். திடீர்னு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. 'கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஆளுங்க வந்து நிக்கிறாங்க. 



என்னமோ ஏதோனு கலவரத்தோட வாத்தியார் வீட்டுக்குப் போனேன். வீட்ல பயங்கரக் கூட்டம். ஏகப்பட்ட பெரிய மனுஷங்க அவரைப் பார்க்கக் காத்துட்டு இருந் தாங்க. ஆனா, என்னை உடனே உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போனேன். வேற எதுவும் கேட்கலை. எடுத்த எடுப்பிலேயே, 'அந்தப் படத்தை நீ டைரக்ட் பண்றேன்’னு சொன்னியானு கேட்டார். நான் மென்னு முழுங்கிட்டு, பயத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு வழியா 'ஆமா’னு சொல்லிட்டேன். 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னியா?’னு அடுத்த கேள்வி பாய்ஞ்சு வருது. அதுக்கு தயங்கித் தயங்கி 'ஆமா’னு சொன்னேன். அப்படியே முறைச்சுப் பார்த்தாரு. இன்னைக்குத் தொலைஞ்சோம்னு நினைச்சு வெலவெலத்து நிக்கிறேன்.



'தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகுதோ, அதை நான் கொடுத்திடுறேன். அந்த நடிகரை வெச்சுலாம் நீ டைரக்ட் பண்ணணும்னு அவசியம் கிடையாது. அதுல நீ நடி. என் ஆசீர்வாதம் உண்டு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன?’னு கேட்டுட்டு அப்படியே கடகடனு சிரிச்சார். நம்ப முடியாம இன்ப அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிட்டேன். 



சுதாரிச்சு, 'உங்களை மாதிரி எப்படிங்க நான் சண்டை எல்லாம் போட முடியும்?’னு சொல்லிப் பார்த்தேன். 'அதான் 'தூறல் நின்னுபோச்சு’ படத்துல பிரமாதமா சண்டை போட்டியே... சிலம்பம்லாம் என்னை மாதிரி சுத்தினியே... அது போதாதா?’னு கேட்டார். அந்தப் படம்தான் 'அவசர போலீஸ் 100’. அதட்டி மிரட்டுறதுல மட்டுமில்லை, தட்டிக்கொடுத்துத் தூக்கிவிடுறதுலயும் வாத்தியாருக்கு நிகர் வாத்தியார்தாங்க. இன்னும் நிறைய இருக்குங்க. வாராவாரம் வருதுல்ல... பேசுவோம் நிறைய.''





8. ''இந்த திரைக்கதை ஞானம் உங்களுக்கு எப்படி வந்ததுனு யோசிச்சிருப்பீங்களே... என்ன தோணுச்சு?'' 



''என்னைச் சுத்தி நடக்கிறதை எப்பவும் கூர்ந்து கவனிச்சுட்டே இருந்ததில் வந்திருக்கலாம். கடவுளின் அனுக்கிரஹமாகவும் இருக்கலாம்!''



9. ''தி.மு.க-வில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 



''லேடீஸ் ஃபர்ஸ்ட். அதோட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. இதுல பெருமையா சந்தோஷப்பட்டுக்கிறதைத் தவிர, வருத்தப்பட என்ன இருக்கு?''




10. ''சமீபத்தில் பார்த்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படங் கள் என்னென்ன?''



'' 'பர்ஃபி’ ரொம்பப் பிடிச்சது. படம் முழுக்கச் சின்னச் சின்ன பஞ்ச்களா திரைக்கதையை அழகாக்கி இருந்தாங்க. 'சாட்டை’ - கொஞ்ச நீளம். ஆனா, சுத்தமான படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைச்சா, இன்னும் விறுவிறுப்பு சேரும்!''





11. '' 'விடியும் வரை காத்திரு’... செம த்ரில்லர் படம். அந்தக் காலத்துல அப்படி ஒரு படம் எடுக்க ணும்னு எப்படி தோணுச்சு?''



''வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதை விட 'ஒரு கைதியின் டைரி’ என்னைக் கவர்ந்த கதை.''





12/ ''நிஜமாவே முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகுமா?''



''இன்னுமா சந்தேகம்?''



13. ''உங்கள் குரு பாரதிராஜா விடம் கற்றுக்கொண்டது என்ன?''



''சுறுசுறுப்பு.''



- நிறைய பேசலாங்க...




அடுத்த  வாரம்


''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்..?''



''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்..?''



''திரைக்கதையை அடிப்படையா வெச்சு தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களைச் சொல்லுங்களேன்?''



டிஸ்கி1  -தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி http://www.adrasaka.com/2012/10/10.html


டிஸ்கி 2 - 

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |...

http://www.adrasaka.com/2012/10/11.html


டிஸ்கி 3 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

 
 

 

d

Thursday, August 30, 2012

கேப்டனுடன் கூட்டணி -ஸ்டாலின் சூசக பேட்டி @ ஆனந்த விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 

நண்பர் விஜயகாந்த் நிச்சயம் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிப்பார்!"


செம பிளான் ஸ்டாலின்
 
ப.திருமாவேலன்
 
படங்கள் : சு.குமரேசன்
 
'தளபதி’ ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றால், சுட்டி குட்டி சோல்ஜர்கள் சூழ விளையாடிக்கொண்டு இருந்தார்.



 கையில் வைத்திருந்தால், தோளுக்கு மேல் ஏறுகிறாள் தன்மயா. அதைப் பார்த்துவிட்டு முட்டி மோதி தாத்தாவின் மறு தோளில் ஏறுகிறான் நளன். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நடந்து காட்டும் நிலானி பாப்பாவையும் இழுத்து அணைத்துக்கொள்கிறார். 'என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான் இன்பா.


''பேரன், பேத்திகளுக்கான நேரத்தில் பேட்டிக்கு வந்திருக்கிறீர்களே'' என்று துர்கா ஸ்டாலின் வரவேற்க, ''அரசியல் சூட்டைத் தணிக்கும் சுகமான சுமைகள் இவர்கள்தானே'' என்று அர்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ஸ்டாலின்!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbZAR27ep4ytKPRtL7QtlGoNiCgOJ2Mz504pJufN3mmj821C50PfrT7n4VYqF5aWd7XrE9X8MortC0bC2sw5HsWRKPNs0caaFtGv1z5FtsKj1PQ1_LlyI-6GhCcw6g3EkXZFCFStw2OCQF/s1600/tamilmakkalkural_blogspot_muperum_vizha.jpg

''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மீது தொடர்ந்து வழக்குகளைத் தாக்கல் செய்து உஷ்ணத்தைக் கூட்டிவருகிறாரே?''



''அவருக்குத் தெரிந்ததே வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும்தானே. 'இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பது பிரிட்டிஷார் ஆட்சியில் மட்டும் அல்ல; ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது.


 ஒரு நாட்டின் முதலமைச்சரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதே தவறு, பொதுமக்களுக்கு நிகழும் சுகாதாரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லவே கூடாது என்றால், எதிர்க் கட்சிகளே இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? எதுவும் பேசக் கூடாதா? ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறாரா? இப்போது என்ன மிசா சட்டமா நடைமுறையில் இருக்கிறது?''



''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி?''



''ஜெயலலிதா வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்போம். அவர் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பால் விலை அதிகரிக்கும் என்பது தமிழ்நாட்டின் தலைவிதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுக்காத இந்த வாக்குறுதிகளை மட்டும்தான் உடனடியாக நிறைவேற்றுவார். 



தலைமைச் செயலகத்துக்குச் சாதாரணமாக வந்து செல்லும் ஒரு அப்பாவி மனிதனுக்குக்கூடத் தெரியும், அந்தக் கட்டடத்தில் இட நெருக்கடி மிகுந்திருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று. அதனை மாற்றி புதிய தலைமைச் செயலகத்தை சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், காண்பவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் அமைத்து, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கையால் திறப்பு விழாவும் நடத்தினார் கலைஞர்.


'அந்தக் கட்டடத்துக்குள் நான் வர மாட்டேன்’ என்று சிறு பிள்ளைத் தனமாகச் சபதம் போட்டு, கோடிக்கணக்கான அரசாங்கப் பணத்தை அப்படியே கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கட்டும் என்று நினைப்பவர் ஒரு பொறுப்புள்ள மாநில முதலமைச்சராக எப்படி இருக்க முடியும்?


ஆசியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பில் அமைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். அந்தப் பெருமை கலைஞருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அதை மருத்துவமனையாக்கத் துடிக்கிறார்.


தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களை வைத்து மோதிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஆட்சியைப் பிடித்த கட்சி, அரசியல் உள்நோக்கங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவிடம் கடந்த இரண்டு முறையும் அது இல்லை. இப்போதும் இல்லை. வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டார். இப்போது எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகளைப் போடுகிறார்.


பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் - கைதுகள்; சரிந்து, சிதைந்துவரும் சட்டம் - ஒழுங்கு நிலை; குறுவை பொய்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குமுறல்; விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களின் வேதனை; பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் பரிதவிப்பு... இவைதான் இந்த ஓர் ஆண்டு கால ஆட்சியின் சுருக்கம்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg


''தி.மு.க. புள்ளிகள் மீது நில அபகரிப்புப் புகார்கள் கொடுத்தது அனைத்துமே பாதிக்கப்பட்டவர்கள்தானே? அரசாங்கமோ, போலீஸோ, இந்த வழக்குகளைப் போடவில்லையே?''


''சம்பந்தப்பட்ட வழக்குகளின் தன்மைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், தி.மு.க-வினர் மீது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி முதல் நிலை விசாரணை ஏதும் இன்றி உடன டியாக போலீஸ் கைதுசெய்த ஆர்வத்துக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்தானே இருக்கிறது?


இரண்டு மூன்று புகார்களைச் சேர்த்துக்கொண்டு உடனே குண்டாஸில் கைதுசெய்கிறார்கள். ஜெயலலிதா செய்தது நியாயமான நடவடிக்கை என்றால், குண்டாஸில் கைதான அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறதே... அது எப்படி? இதில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுகள் நடக் கின்றன என்று தெரியவில்லையா?''


''கொடநாட்டில் இருந்தாலும், முதல்வர் அங்கிருந்தே அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்பட்டு வந்ததாகத்தானே சொல்கிறார்கள்?''


''ஒன்றரை மாத காலம் அவர் கொடநாட்டில் இருந்தது அவரது விருப்புரிமை. அதனை விமர்சிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம்!''


''தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வுதான் அதிகம் தெரிகிறது. எந்த எழுச்சியும் இருப்பதாகத் தெரியவில்லையே?''


''வெற்றி - தோல்விகளைக் கணக்கிட்டுச் செயல் படும் கட்சி அல்ல தி.மு.க. தோல்வியைப் பார்த்து சோர்வு அடைந்திருந்தால், தலைவர் கலைஞர் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்தத் தோல்விகூட, கழகத் தொண்டனை மேலும் எழுச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்வேன்.


அதேபோல், மிகக் குறுகிய இடைவெளியில் டெசோ மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடக்கின்றன. ஆலோசனைக் கூட்டங்கள் சின்னச் சின்னக் கிளைக் கழகங்களில்கூட முறையாக நடக்கின்றன. எனவே, கழகத் தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டதாகச் சொல்வது, அவர்களைச் சோர்வுஅடையச் செய்ய வேண்டும் என்று நினைப் பவர்களின் அபவாதம்!''



''தொண்டர்களின் உற்சாகத்தைக் கோஷ்டி அரசியல்தான் குறைத்துவிடுகிறது என்கிறார்களே? ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி போன்று பிரிந்து செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?''



''திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக கலைஞர் கோஷ்டி மட்டும்தான். நீங்கள் சொல்வது வெறும் காட்சிப் பிழை. இவை எல்லாம், ஊடகங்களின் கற்பனை.


 'ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமல் தனித் தனி வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன் பிறப்புகள்தான்’ என்று பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. கட்சியில் அனைவரும் உடன்பிறப்புகளே என்ற ஒன்றுபட்ட சிந்தனையுடன், பாசத்துடன்தான் அனைவரும் செயல்பட்டுவருகிறோம். பேதங்களுக்கோ, பிரிவினைகளுக்கோ இங்கே இடம் இல்லை!''



''உங்களது தலைமையைக் கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''


''கலைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் இல்லை!''




''உங்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து கருணாநிதி வழிகாட்ட வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்களில் சிலர் நினைக்கிறார்களே?''



''என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரித்துக் கேள்வி கேட்பதே தவறு!''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXXMIc-ITEjqBKGxaF6nghqb_zY1WSTVKvbphZ02wVTLthLPTRPG0_HbZ204nlzwj3i8s-p5TECzS9ziOkrulmITT3atrGPo9VD1QCbfDDw4SwWQAg57QjDHhdEttEl3O2SP0gqMFzLFXl/s1600/p10.jpg

''அடுத்த தலைமைப் பதவிக்காகத்தான் நீங்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?''



''பகவத் கீதையின் சிந்தனைக்கு நாங்கள் மாறுபட்டவர்கள் என்றாலும், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதற்கு ஏற்ப, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் எனது கடமையை நான் ஆற்றிக்கொண்டு இருக்கிறேன்.



மிகச் சிறு இளைஞனாக கோபாலபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் நாடகம் நடத்திய காலத்தில் என் உள்ளத்தில் இருந்த உற்சாகம் இன்னமும் இருக்கிறது. கட்சிரீதியாக இளைஞர் அணியில் இருந்தாலும், பொருளாளராகத் தொடர்ந்தாலும், ஆட்சிரீதியாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும் என்னுடைய பொறுப்புகளின் தன்மையை உணர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன். 


எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என்னுடைய பயணங்களை நான் குறைத்துக்கொள்ளவில்லை. கழகத் தலைவர் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரை 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது எனது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல!''



''தலைவரின் மகன் என்பதால், கழகத்தில் தனி மரியாதை கிடைப்பது இயல்புதானே?''


''தலைவரின் மகன் என்பது பிறப்பால் நான் பெற்றிருக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு மட்டுமே தனி மரியா தைக்கான தகுதியைத் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

http://img.photobucket.com/albums/v144/annakannan/risingson.jpg



''நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?''


''அப்படிச் சொல்பவர்களுக்கு பேரறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்... 'அதிமாக முறுக்கேறிய கயிறு அறுந்துவிடும்’ என்றார் அந்தப் பெருந்தகை!''



''கட்சித் தொண்டர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?''


''ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுடன் உறவாட என்ன தயக்கம் இருக்க முடியும்? வீட்டிலும் அறிவாலயத் திலும் என்னைச் சந்திக்கக் காத்திருக்கும் அனைவருடனும் அன்போடும் நெருக்கமாகவும்  இருக்கிறேன்.


 வெளியூர் பயணங்களில் தொண்டர்கள் துணையுடன்தான் இருக்கிறேன். அவர்களது வீட்டு விசேஷங்கள் அனைத்துக்கும் உரிமையுடன் செல்கிறேன். கட்சித் தோழர்களோடு நெருங்கி இருப்பதை இன்பத்துள் இன்பம் என்று எண்ணி இருப்பவன் நான். அதில் தயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை!''


''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?''


''தலைவர் கலைஞரின் படை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயாராகவே இருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-4w42h7SXtRO2ri6YyWe9BtoVzTQ5KIMjDvTGBquho4FaqEwXTdgkgsApcQCCxj8KHCeTZFNns-ut5guNgrJw-r6SEBrhN_UE0fF7V4_AND0qGYP2DsEdNIQ_L7vK3UCRagi62ph9qRo/s400/dm25-07-09.jpg

''வெற்றி வாய்ப்பு?''


''சந்தேகம் என்ன... நாங்கள் பெரு வெற்றி பெறுவோம்!''


''ஒரு வலுவான கூட்டணியைச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அமைத்தார். அது வெற்றியைக் கொடுத்தது. அப்படிப்பட்ட திட்டம் தி.மு.க-வுக்கு உண்டா? குறிப்பாக, விஜயகாந்தை உங்களது அணிக்குள் இணைத்துக்கொள்வீர்களா?''



''தலைவர் கலைஞர் எப்போதும் வலுவான அணியைத்தான் அமைப்பார். நண்பர் விஜயகாந்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு தவறைச் செய்துவிட்டோம் என்று அவரே ஒப்புக்கொண்டு உள்ளார். ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்!''

நன்றி - விகடன் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA9fHwjbkXXMwG_j1rUvZlHntVg43m4iV5N5qoKEZIywFwOSmyFDa_SOFsFftLiEXEt2ycA-kB91QTE1akrgEpT-Di0s7YrfG5sm2VGDDkO537ptqJYQNM0l7OIUE1-cACFoTJY6zL7yw/s1600/216413_178366115546485_100001192933610_417874_940375_n.jpg


டிஸ்கி - ஃபாத்திமா பாபு பேட்டி விரைவில் வர இருக்கு, அதுக்கான முன்னோட்ட படம் தான் மேலே உள்ளது, மற்றபடி  இந்த பதிவுக்கும், படத்துக்கு, எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ;-0

Monday, June 18, 2012

ஆனந்த விகடனே அடுத்தவர் படைப்பை சுட்டுப்போட்ட அவலம்,இணைய தளங்கள் அதிர்ச்சி

இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடுவதும், செய்தியை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில் வேகமும் காட்டி வருவது ரெகுலராய் நடக்கக்கூடியதே.. அதே சமயத்தில் மற்றவர் படைப்பை  தன் படைப்பு மாதிரி காட்டிக்கொள்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.. 


நானே பல முறை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், கல்கி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில்  வெளி வந்த படைப்புகளை இங்கே வெளியிட்டு கடைசியில் நன்றி - என போட்டு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை பெயரை போட்டு விடுவேன்,.. டைட்டில், லேபிள், பி கு ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் பெயர் வந்து விடும்.. 


 ஆனால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத்திகழ வேண்டிய பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனே வேறொரு இணைய தளத்தில் வந்த மேட்டரை சுட்டுப்போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.



பாதிக்கப்பட்ட இணைய  தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை


 மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து




இது படைப்புத் திருட்டு இல்லீங்களாண்ணா இதை ஒரிஜினலா வடிவமைச்சது
 a




 ORIGINAL

powered by Photobucket
சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்...