Showing posts with label ஆடை - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆடை - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, July 20, 2019

ஆடை - சினிமா விமர்சனம்

aadai movie માટે છબી પરિણામஆடை படத்தோட டீசர், ட்ரெய்லர் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதெல்லாம் பார்த்துட்டு பெரிய லார்டு லபக் தாஸ் மாதிரி நான் ஒரு கதை கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் .


 அதன் படி ஹீரோயினும் , தோழியும் ஏதோ ஒரு ஐ டி கம் பெனில ஒர்க் பண்றாங்க ., வீக் எண்ட் பார்ட்டில 4 மொள்ளப்பாரி பசங்க மப்புல  இருக்கற மாந்தோப்புக்கிளிகள் 2 பேரையும்  கில்மா பண்ணிடறாங்க . வெகுண்டெழுந்த அந்த 2 பேரும் 4 பேரையும் எப்படி பழி வாங்கறாங்க அப்டிங்கறதுதான் கதைனு யூகிச்சு வெச்சிருந்தேன்


 அது எவ்ளோ கேவலமான கற்பனைனு இயக்குநர்  புரிய வெச்சுட்டார் . கதை வேற


இடைவேளை  வரை மீடியால ஒர்க் பண்ற ஆண்கள் , பெண்கள் , ஜாலி , கலாட்டா , ஷோ ரெடி பண்றது இபடி பொழுது போக்கு அம்சமா போகுது


 இடைவேளைக்குப்பிறகு தான் மெயின் மேட்டர்,. மேட்டர்னதும்   நிமிர்ந்து உக்காராதீங்க , இது ஒரு சமூக விழிப்புணர்வுக்கதை, டீசண்ட்டாதான் காட்சிகள் , நகருது , ஒரு நல்ல  ஓப்பனிங் கிடைக்கனும்கறதுக்காக அமலா பால் கிளாமரை யூஸ் பண்ணிக்கிட்டாங்க , பெரிய தப்பில்லைனு தோணுது ., இதே போல் அனைத்து பிரபல நடிகைகளையும் எல்லா இயக்குநர்களும்   யூஸ் பண்ணா நல்லது  


 ( இப்பவே நம்ம ஆளு க்க அமலா பால்க்கு மென்ஷன் போட்டு போல்டு அட்டெம்ப்ட் மேடம், நட்டு அட்டெம்ப்ட் மேடம், பின்னீட்டீங்க அப்டினு போட்டுத்தாக்கிட்டு இருக்காங்க) 


 இந்தப்படத்துக்குக்கிடைக்கப்போகும்  வரவேற்பைப்பார்த்து எல்லா நாயகிகளும் இதே [போல் ஒரு முற்றும் துறந்த முனியம்மா கதை நடிக்க ஆவலாவாங்க என நம்பறேன்


 ஹீரோயினா அமலா பால் அருமையான் நடிப்பு , ஓப்பனிங் காட்சிகளில்  நண்பர்களுடன் கொட்டம் அடிப்பது போன்ற சீன்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிற்து , வழக்கமா அமலா பால் அப்படி நடிப்பவர் அல்ல ( முன்னாள் கணவர்  இயக்குநர் விஜயை வெறுப்பேற்றவே அப்டி நடிச்சிருக்கலாம்)

 பின் பாதி படம் முழுக்க் அமலா பால்  ராஜ்ஜியம் தான்,  கேமரா மேன் , லைட் பாய்ஸ்களுக்கு கொண்டாட்டமான  படம்


கில்மா சீன்கள் , பிட்டு இன்ன பிற அஜால் குஜால் காட்சிகளை எதிர்பார்த்துப்போனவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் ( நான் அடையலை )


ஃபிளாஸ்பேக்கில் வரும் அந்த திருப்புமுனை கேரகடர் பொண்ணு அற்புதமான நடிப்பு , வாய்ப்புகள் வரும் 


 ஒளிப்பதிவு அருமை, ஹிந்தில டப் பண்ணா மல்லிகா ஷெராவத் ரெடியா இருப்பார் 


aadai movie માટે છબી પરિણામ

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் ல"PNR ஸ்டேட்டஸ் பாத்து டிக்கெட் கன்பர்ம் ஆகிடுச்சா? னு செக் பண்ற மாதிரி தமிழ் சினிமா உலகத்துல வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட படம் பொட்டி வந்துடுச்சா?லைசென்ஸ் க்ளியர் ஆகிடுச்சா?அப்டி னு பாக்க ஒரு ஆப் வந்தா தேவலை



2 ஓப்பனிங்க் சீன்ல சிந்து சமவெளி புகழ் அமலாபால் 8 கெஜ பட்டுப்புடவை ல வர்றதைப்பாத்துட்டு நெட் தமிழன் மிரண்டுட்டான்,அது"கனவு"சீனாம்,நினைவு சீன்ல ஒரே ஒரு டிராயர் ,ஒரு திருப்பூர் பனியனோட வந்ததும் சமாதானம் ஆகிட்டான்


3  இயக்குநர் ஒரு பெண்ணியவாதியாகவோ ,பெண்கள் முன்னேற்றத்துல அக்கறை உள்ளவாராகவோ இருப்பவர் போல,இதை எப்படி கண்டுபிடிச்சேன்னா நாயகி கேரக்டர் வடிவமைப்பு.பந்தயம் கட்டி பைக்ல 125 கிமீ வேகத்துல போகுது,தம் அடிக்குது,தண்ணி அடிக்குது,அரை குறையா டிரஸ் பண்ணுது,வெரிகுட்


நடுராத்திரி 12 மணிக்கு தனியா சுடுகாட்டுக்குப்போறேன்னு பந்தயம் கட்டுவாங்க.அந்த மாதிரி நாயகி ஒரு பில்டிங்க்ல ஒரு நைட் பூரா ஆடை இல்லாம இருந்து காட்றேன் ஜம்பமா,திமிரா மப்பு ல பந்தயம் கட்டி படற பாடுதான் கதை


5  திமுக தலைவர் க்கு நெருங்கிய நண்பரான வைரமுத்து#metoo பாலியல் பலாத்காரவழக்கில் சிக்கியது குறித்து நேரடியா தாக்கப்பட்டிருக்கிறார்.உடன்பிறப்புகள் பொங்கலையா அவர்"சார்பா?

aadai amala paul  hot માટે છબી પરિણામ
நச் டயலாக்ஸ்


1   டீக்கடை வெச்சிருக்கறவன்தானே னு என்னை இளக்காரமாப்பாக்காதீங்க,நான்"நாளையே சிஎம்மாவோ ,பிஎம்மாவோ ஆக வாய்ப்பிருக்கு !



எந்த டிரஸ்ல நீ அழகா இருப்பே?

டிரஸே போடாம இருந்தாதான் அழகா இருப்பேன்


எஸ் வி சேகர் டிராமா காமெடி டயலாக்கை சுட்டுட்டாங்க

அய்யா இருக்காரா?
மேல படுத்திருக்காரு
நான் அப்றம் போன் பண்றேன் (இது ஒரிஜினல்)
அய்யா எங்கே? மேலே படுத்திருக்காரு
நீ என்ன பண்றே?
அம்மா எங்கே ? கீழே படுத்திருக்காங்க
பணிப்பெண் = விளக்கு பிடிச்ட்டு இருக்கேன்



4  கிடைச்ச சுதந்திரத்தை மிஸ்யூஸ் பண்ணாதீங்க #aadai


5  ஹிஸ்டாரிக்கல்  படமா பார்த்தே?

 நாம பார்க்கறதெல்லாம் சன்னிலியோன் நடிச்ச படங்கள் தான் , ஹிஸ்டரில போய் அழிக்க வேண்டிய வேலை இருக்கும்
\

6   நாம் நியூஸ் படிக்கறது பெரிய விஷயம் இல்லை , நம்மை நியூஸ்ல வர வைக்கனும் #Aadai 


7  டை கட்டி  வாழற வாழ்க்கை வாழாட்டி பரவால்ல , மத்தவங்க  முன் கை கட்டி வாழ்ற வாழ்க்கை ஆகாது எனக்கு  #Aadai 



8      சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


 ம்  குடும்பக்கட்டுப்பாடு


9  மயங்கி விழற  மாதிரி நடிச்சு   நக்கல் பண்ணா நாளை நிஜமா மயங்கி விழறவங்களைக்காப்பாத்த யாரும் முன் வர மாட்டாங்க   #Aadai 



10  தப்பு , சரினு நாகரீகம் பார்த்தா வேலைக்கு ஆகாது

aadai amala paul  hot માટે છબી પરિણામ








நெட் வந்த பின்பு பிட் படங்களின் ஆதிக்கமும் ,அதற்கான மவுசும் குறைந்தது.கேரளா கோட்டயம் அபிலாஷ் தியேட்டர் 37 பேர் /540 சீட்ஸ்
ஆடை FDFS


a
சபாஷ் இயக்குநர்


1  இடைவேளைக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாயகி முதல் பாவம் அபிலாஷா ரேஞ்சில் இருந்தாலும் ம்காட்சிகள் கண்ணியம்


2   பலரது யூகங்களுக்கு மாறாக திரைக்கதை அமைத்தது


 3  சினி ஃபீல்டில் இருந்தாலும் தைரியமாக திமுக பிரமுகர் வைரமுத்து வின்  வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது


4    போஸ்டர்  டிசைன்   மார்க்கெட்டிங் , விளம்பரங்கள் என படத்துக்கு நல்ல ஓப்பனிங் கொண்டு வந்தது

  லாஜிக் சொதப்பல்கள்


1  லாஜிக் மிஸ்டேக் 1− பிரபலமான ஒரு சேனல்ல ரெகுலரா நியூஸ் வாசிக்கற பொண்ணு திடீர்னு லீவ் போட்டுட்டா ஆல்ட்டர்நேட்டிவா வேற அரேஞ்ச்மெண்ட்பண்ணி வெச்சுக்க மாட்டாங்களா? அப்டியே பதர்றாரு? எல்லா சேனல்கள்லயும் 3 ் பேரு இருப்பாங்களே?


2    கம்பெனியை காலி பண்றவங்க ஒரே நைட்ல அப்டி துடைச்சு எடுத்துட்டுப்போவாங்களா? கொஞ்சம் கொஞ்சமாதானே காலி பண்ணூவாங்க , அதுவும் அவ்ளோ பெரிய பில்டிங்கை காலி பண்ண ஒரு மாசம் ஆகும்


3  நாயகி நிர்வாணமா இருக்கு , ஃபோன் அவுட் கோயிங் போகலை ஒரு ஹோட்டல்ல  இருந்து வர்ற விளம்பர மார்க்கெட்டிங் கால் ல 5 சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணீ  வாட்டசாட்டமான ஆள் வேணாம், சின்னப்பையுனா  அனுப்புங்க அப்டிங்குதே அதுக்குப்பதிலா   அவரது ஹைட்டுக்கு தகுந்த யாரோ ஆள் ப்வந்தா அவன் டி சர்ட்டை யூஸ் பண்ணீக்கலாமே?


4  தொடர்ந்து 36 மணி நேரமா சாப்பிடலை , தண்ணீர் குடிக்கலை அதுக்கான சோர்வோ அறிகுறியோ நாயகி கிட்டே காணலையே? செழுமையாத்தானே இருக்கு ?


5   நாயகியோட அ ம்மா தொடர்ந்து 18 தடவை கால் பண்ணியும் நாயகி எடுக்கலை, அதுக்குப்பின் 20 மணி நேரம் அம் மா  ஃபோனே பண்ணாதது ஏன்? ஃபோன் லொக்கேஷனைஒ வெச்சு இன்ன இடத்துல இருக்கார்னு போலீஸ் கண்டு பிடிக்க ட்ரை பண்ணலையே? அது ஏன்? 


6   டெலிவரி பாய் டெட் பாடினு நினைச்சு எடுத்துட்டுபோபோகும் போலீஸ் கூட போலீஸ் நாய் கூட்டிட்டு வர்லையே அது ஏன்? 



ஆடை− டி.வி .பிராங்க் ஷோக்கள்,மக்களை மடையர்கள்"ஆக்கும் ஷோக்களை"நையாண்டி செய்திருக்கும்"கதை.நல்ல கரு.ஆனா"திரைக்கதைல தேவையற்ற கிளாமர்,மார்க்கெட்டிங்க்காக,ஆபாசம் எதுவும் இல்லை என்றாலும்.. விகடன் 41 , ரேட்டிங்க் 2.5 / 5