Showing posts with label அரசியல்.ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label அரசியல்.ஆனந்த விகடன். Show all posts

Thursday, April 14, 2011

துக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட்டும்.....தமிழருவி மணியன் பரபரப்பு பேட்டி..-காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5L5lSffKLz2LqnKyzQH8pcTTnewRWdTRi8CvkGzP7bxNSbfhoSrUn1HHWRYfIJTCpCA_zHHv2LiWlkoTsBBEVut3CYVcTrPdHeydlQYq0RRjaL2MXkImP9i9prdf-Ju15hdEwkhTEHtc/s400/modi_cho=Dondu.jpg 

1. மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?''
 
''மறைமுகமாக அல்ல... நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர்தான் அரசியல்.

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார்.

இந்திய அரசியலில், இதுவரை யார் வரக் கூடாது என்றுதான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக் கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள்.

என் வாக்கு... ஜெயலலிதா வர வேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக!
ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!''

கரும்புள்ளிகள் கொண்டவைகள் சிறுத்தை அல்ல .. சிறு மதி படைத்த அல்லது மதி கெட்ட கழுதைகள்

2.'' 'காந்திய மக்கள் இயக்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?''

''நம் சமுதாயம் சகல மட்டங்களிலும் ஆரோக்கியம் இழந்து அழுகிப்போனதற்கு ஒரே காரணம், காந்திய வழியில் இருந்த நாம் விலகி நடந்ததுதான். கிராமம் வரை அதிகாரப் பரவல், தற்சார்புப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, ஆடம்பரம்அற்ற எளிய வாழ்க்கை முறை, புலனடக்கம், கட்சிகளற்ற ஜனநாயகம் என்ற காந்தியத்தின் தடத்தில் நாம் கால் பதித்து நடந்திருந்தால், ஊழலற்ற பொது வாழ்வு, ஏழ்மை இல்லாத இந்தியா இந்நேரம் உருவெடுத்து இருக்கும். 

காந்தியின் எல்லாக் கொள்கைகளையும் கண் மூடிப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் குறிப்பிட்ட கொள்கைகள் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கவை. போராட்ட முறையில் காந்தியப் போர் முறை ஒன்றுதான் உன்னதம். அதிக உயிர்ச் சேதம் இன்றி, அதிகாரத்தைப் புரட்டிப் போடும் அகிம்சை.

இந்த ஆயுதம்தான் முபாரக்கை எகிப்தில் முடக்கியது. இந்த ஆயுதத்தை ஈழத்தில் மக்கள் தொடர்ந்து பிரபாகரன் தலைமையில் ஏந்தி வீதிகளில் நின்று இருந்தால், ஈழம் தமிழரின் தன் நாடாய் இந்நேரம் பிறந்து இருக்கும். இவ்வளவு அழிவுகளை என் இனம் அங்கு சந்தித்து இருக்காது. ஒரு லட்சம் தமிழர் என்னோடு காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நடந்தால், எந்த அரசியல்வாதியும் தவறு இழைக்க முடியாத சமூகத்தை நான் சமைத்துக் காட்டுவேன்.

இழப்புகளையும் வலிகளையும் என்னோடு சேர்ந்து அனுபவிக்க நீங்கள் தயாரா? முதல் நிபந்தனை, நாம் பதவி மறுப்பாளர்களாகப் பணியாற்ற வேண்டும்!''

இந்த ஆட்டத்துக்கு யாரும் தயாரா இருக்கமாட்டாங்கன்னு நினைக்கறேன்.. நோகாம நோம்பி கும்பிடத்தான் தமிழன் பார்ப்பான்.. 

'3. 'உங்கள் இளம் பிராயக் காதல் அனுபவம் குறித்துக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?''

''என் காதலி... தெய்வத்தின் சிருஷ்டியில் அவள் ஒரு தேவதையின் வார்ப்பு. அவள் பூக்களில் அனிச்சம்; புள்ளினங்களில் அசுணம். அவளுக்கு மலர்களைவிடவும் மென்மையான மேனி; பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். அவளைச் சந்திப்பதற்கு முன்பு, என் இதயம் வெறும் கருங்கல்லாய்க் கிடந்தது. தன் நயன உளிகளால் அவள்தான் அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக மாற்றினாள். இப்பாது சிலை இருக்கிறது. அந்தச் சிற்பியைத் தான் காணோம்!''


4. 'துக்ளக்’ ஆசிரியர் சோ பற்றி தங்கள் கருத்து?''

''நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர். பெரும்பான்மைக் கருத்தோடு இயைந்துபோவதுதான் எழுத்துலகத் தர்மம் என்று ஏற்காதவர். ஒரு தனிமனிதனின் பேனாவை மட்டுமே நம்பி, ஓர் இதழை 41 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று சாதித்தவர். 

பொய்யாக யாரையும் புகழ்ந்து பேசத் தெரியாதவர். ஆனால், பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கும் ஓர் அழுத்தமான ஆணாதிக்கவாதியாகத் தன்னை வேண்டும் என்றே வெளிப்படுத்திக்கொள்பவர். இதில் ஜெயலலிதாவுக்கு மட்டும் அவ்வப்போது விதிவிலக்கு வழங்குபவர்!''


அவ்வப்போது என ஏன் மழுப்பறீங்க...? அவர் ஆண்டாண்டு காலமா அம்மா புகழ் தான் பாடிட்டு இருக்கார்.. அதற்கு இருவரும் பிராமணர்கள் என்ற  ஜாதி உணர்வும் ஒரு காரணம்


5. ''உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்களின் படைப்புகள் எவை?''
''பாசாங்கு மொழியில், சரிகை வேலைப்பாடுகள் இல்லாமல், மண்ணின் ஈரம் மணக்க ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் நிறத்தை இயல்பாய் வடித்தெடுத்த இளம்பிறையின் 'நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற படைப்பும், ஒரு பெண்ணின் நுண்மையான அந்தரங்க உணர்வுகளைக் கலை வடிவம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே எழுத்தில் இறக்கிவைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற படைப்பும்!''


6. ''முழுக்க முழுக்க சுயநலவாதிகளாக இருந்துகொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வதுபோல் வலம் வர இந்த அரசியல்வாதி களால் எப்படி முடிகிறது?''

'' 'வேஷங்கள் போட்டுப் போட்டு... அது
தோல், சதை, எலும்புக்குள் இறங்கி,
 வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது’

-என்ற புவியரசின் கவிதையை நீங்கள் படித்து இருந்தால், இந்த ஐயம் உங்களுக்குள் உருவாகி இருக்காது. அரசியல் உலகில் அடுத்தவர் குருதியில் ஆயுளைப் பெருக்கிக்கொள்ளும் கொசுக்களின் கூட்டமே அதிகம். சொந்த நலனுக்காக நம் தேசத்தைக்கூடத் தெருவில் நிறுத்தத் துணியும் இந்த முகமூடி மனிதர்களின் சுய முகம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அன்று!''

 அது ரொம்ப ஈசிங்க.. யார் எல்லாம் வலியனா வந்து மக்களே.. உங்கள் நன்மைக்காகத்தான் என் உடல் ,பொருள்,ஆவி எல்லாம் என கப்ஸா விட்டு ஓட்டுக்கேட்கறாங்களோ அவங்க எல்லாருமே சுயநல வாதிகள் தான்.. தம்  மகன்,மகள், மக்கள் நல்லாருக்கனும்னுதான் எல்லாரும் பார்க்கறாங்க.. நாட்டு மக்களின் நலம் காண்பவர்கள் யாருமே இல்லையே?


7. ''உலகமயமாக்கலால் கல்வி முறை, நாகரிகம், பழக்க வழக்கம், ஏன் வாழ்க்கை முறையே மாறிப்போன இந்நாளில், காந்தியம் இனியும் சாத்தியமா?''

''நோய் நிறைந்த இடத்தில்தானே மருத்துவர் தேவை. வெள்ளாடு மேயும் விளைநிலத்துக்குத்தானே வேலி தேவை. வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரங்களுக்குப் புறம்பாக அக நாகரிகம் வளர்த்தெடுப்பதுதான் காந்தியம். 

உலகமயமாக்கல் சீதனமாய் நம்மிடம் கொண்டுசேர்த்த நுகர்வு வெறியின் முற்றுகையில் மூழ்கி இருக்கும் இளைய சமூகத்தின் வாழ்வை முறைப்படுத்து வதும், நெறிப்படுத்துவதும் காந்தியத்தால் மட்டுமே சாத்தியப்படும்!''

 ஏன் ? இன்று ஒரு அன்னா ஹசாரே தயார் ஆனது போல் நாளை ஒரு நல்ல  அஹிம்சாவாதி தலைவர் தோன்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
 http://3.bp.blogspot.com/_afw-8cBe43U/SSoUvaJBQxI/AAAAAAAAAXg/-5oyOuTAJQ8/s400/THUGLAK.jpg

8. ''ஒரு அரசாங்கமே வீதிக்கு வீதி மதுக் கடைகளை நடத்துவதும், அதனால் இவ்வளவு வருமானம் என்று சொல்வதும், யாரும் பெரிதாக இதை எதிர்க்காததும், வெட்கக்கேடான செயல்தானே? இந்த நிலை எப்போது மாறும்?''

''அரசு வருவாய் அதிகரிக்க 'விலைமகளிர் விடுதி’ நடத்தாதவரை நல்லது என்று மன நிறைவுகொள்ளுங்கள்.

குடிப்பவரையும் கெடுக்கும்: குடும்பத்தையும் கெடுக்கும் என்று குடிமக்கள் உணராதவரை மதுக் கடைகளுக்கு மூடு விழா நடக்கும் வாய்ப்பு இல்லை!''

 குஜராத் மோடி கிட்டே போய் ஒரு மாசம் டியூஷன் எடுத்துட்டு வரசோல்லனும்...மூச்சுக்கு மூச்சு மற்ற தேசங்களோடு ஒப்பிட்டு மின் வெட்டு,விலைவாசி உயர்வு என எல்லா பிரச்சனைக்கும் சப்பைக்கட்டு கட்டும் அரசியல்வாதிகள் ஏன் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு பேச மறுக்கிறார்கள்?


'9. 'பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, பகுத்தறிவுத் தந்தை பெரியார்... இவர்கள் எல்லாம் இன்று உயிரோடு இருந்தால்..?''

''காமராஜர் கதர் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடிஇருப்பார். 'காங்கிரஸுக்கும் கழகத்துக்கும் ஒரே லட்சியம்தான்’ என்று கலைஞர் சொன்னதைக் கேட்டதும், கழகத்தைக் கலைத்துவிடும்படி அண்ணா 'தம்பிக்கு’க் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். பெரியார் முதல் வேலையாக, வீரமணியைத் திராவிடர் கழகப் பொறுப்பில் இருந்து விலக்கி இருப்பார்!''


தங்கபாலு பண்ற காமெடிகளையும், கோஷ்டி சண்டைகளையும் பார்த்து அவங்க தற்கொலை தான் பண்ணிக்குவாங்க.. 

10. ''திராவிடக் கட்சிகள்போல் சிறந்த மேடைப் பேச்சாளர்கள் காங்கிரஸில் உருவாவது இல்லையே... ஏன்?''

''சிறப்பாகப் பேசத் தெரியாதவர்களும் ஒழுங்காக எழுத முடியாதவர்களும்தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒருபோதும், தம்மைவிட ஓர் அங்குலம் உயரமானவர்களைக்கூட உடன் இருக்க அனுமதிப்பது இல்லை!''

அவங்களுக்கு சண்டை போடவும்,சொம்பு தூக்கவுமே நேரம் சரியா இருக்கு... 
 http://velichathil.files.wordpress.com/2010/12/homeattai1.jpg

'11.'இன்றைய இளைஞர்களிடம் தேச பக்தி வளர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?''

''இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் களத்தில் மோதும்போது தேச பக்தி பொங்கி வழிகிறது. சக மனிதரின் துயர் துடைப்பதில் தன் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்குச் சிறிதும் இடமின்றி, சுய நலத்தில் சுருங்கிவிடுவதில் தேச பக்தி வைகை மணல்போல் வறண்டுவிடுகிறது. தேச பக்தி என்பது வெறும் மண் சார்ந்தது இல்லை; மக்கள் நலன் சார்ந்தது!''

 ஏன்? கார்கில் போர் வந்த போது, இலங்கைத்தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது இளைஞர்களிடம் தேச பக்தியும் ,மனித நேயமும் வெளிப்பட வில்லையா?


12, ''இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுரை கூறினால் எள்ளி நகையாடுகிறார்களே...?''

''வரைமுறையற்ற வாழ்வை நடத்துபவர் வள்ளுவம் பேசுவதையும், மதுவின் போதையில் மயங்கி நிற்பவர் மகாத்மாவின் பாதையில் நம்மைப் பயணிக்கச் சொல்வதையும், மாமிசம் நாறும் வாயோடு வந்தவர் வள்ளலாரின் உயிர் இரக்கம் குறித்து உரை நிகழ்த்துவதையும் பார்க்கும் இளைஞர்கள் எள்ளி நகையாடாமல் என்ன செய்வார்கள்?

'என் வாழ்வே என் செய்தி’ என்று மகாத்மாவைப்போன்று எத்தனை மனிதர்களால் சொல்ல முடியும்? ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு நற்செயல் வலிமையானது. அவர்களுக்கு முன் மாதிரியாக நாம் வாழும் வாழ்க்கையில் நடந்து காட்டுவோம். வார்த்தைகளால் வானத்தை வளைக்க முடியாதே!''

டெயிலி மட்டன் சிக்கனா உள்ளே தள்றவன் மத்தவங்களை மட்டும் சைவம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்ன்னானாம்,, அந்த மாதிரி... 

13. ''ஆசை - நப்பாசை - பேராசை... என்ன வித்தியாசம்?''

''எம்.ஜி.ஆரைப் போல் திரையுலகில் ஒரு நடிகராக வலம் வர விரும்புவது ஆசை. அவரைப் போல் கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்புவது நப்பாசை. முதல்வர் நாற்காலிக் கனவில் மூழ்குவது பேராசை.''

 குஷ்பூ அரசியலுக்கு வந்தது ஒரு ஆசைல... நடந்த எலக்‌ஷன்ல எம் எல் ஏ சீட் கிடைக்கும்னு நினைச்சது நப்பாசை..எதிர்காலத்துல தி மு கவுல நல்ல எதிர்காலம் இருக்கும்னு  நினைச்சா அது பேராசை.
 http://1.bp.blogspot.com/_afw-8cBe43U/SRJ5Rbbb0nI/AAAAAAAAAXA/CRZh92ZgavY/s400/THUGLAK+6NOV.jpg

14. ''விஜய்காந்த் நேர்மையான அரசியல்வாதியா... அல்லது அப்படி நடிப்பவரா?''

''அரசியல் உலகில் நேர்மை உறங்கும் நேரம் இது. உண்மையைப் பற்றிப் பேசுவதைவிட, உண்மையாக வாழ்வதுதான் முக்கியம். விஜய்காந்த் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக நடப்பாரா? காலம் எந்த முகமூடியையும் ஒருநாள் கழற்றிப் போடும். அதுவரை காத்திருங்கள்!''

பொது இடத்தில் தன் கட்சி வேட்பளரையே அடிப்பவர் எப்படி நேர்மையா இருப்பார்? பொறுமைசாலிகளே அரசியலில் திணறும்போது..... இந்த மாதிரி அவசர புத்திக்காரர்கள், ஆத்திர புத்திக்காரர்கள்   கட்சித்தலைவராக இருப்பது தமிழனின் துர் அதிர்ஷ்டம்

Tuesday, April 12, 2011

கலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் பிரம்மாஸ்திரம்...



 

 

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!


தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.


ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!




ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது.

'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது.




  a
இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை.

நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!


.
 
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா?

வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!


 

  a

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு.





 
 

 a

'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!




 

 
  a
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி.



 


வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

Monday, April 11, 2011

கலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி தேர்தலுக்கு முந்தின தேர்தல் இது

http://www.cinesouth.com/images/new/kushboo-0302.jpg 

ன் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’ - ஐந்தாவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்ற கருணாநிதி, இந்த ஆட்சியின் தொடக்கக் காலத்தில் காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவு இல்லத்துக்கு வந்தபோது, சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் அமர, கருணாநிதி முன்கூட்டியே தன் தாயின் நினைவிடம் போய் நிற்கிறார்!


அய்யாவுக்கு அம்மா மேல அன்பு இருந்தாலும் அய்யா கட்சிக்காரங்களுக்கு அம்மான்னா யம்மா தான்... 


திருவாரூர் நண்பர்களையும் உற்ற உறவுகளையும் கசிந்த கண்களோடு பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் கருணாநிதி. ''எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் களித்தேனோ, எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ, எந்த மண்ணில் இருந்து என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேனோ... அந்த மண்ணில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?

இதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. வேறு வழியின்றி நான் இங்கே போட்டியிடுகிறேன் என்று சொல்ல மாட்டேன்.

நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...

http://www.southindianactresses.net/d/41717-4/Kushboo-Wallpaper-001.jpg
எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். பல இடங்களில் நான் வெற்றி பெற்று இருந்தாலும், 'உன் சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட ஆற்றல் உண்டா?’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு உண்டு. அதனால்தான், திருவாரூரில் போட்டியிடுகிறேன்.

சென்னையில் போட்டி இட்டா படு கேவலமாக தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் உண்டு # மனசாட்சி


1957-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தனித் தொகுதிஆக்கி என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது!'' 

வாய்ப்பா? ஏய்ப்பா?

''இந்தத் தேர்தலில், 'எனக்கு வாக்களியுங்கள்; எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்பேனே தவிர, 'யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேச மாட்டேன்.

படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?

ஏனென்றால், திருவாரூரில் இருக்கும் அனைவரும் எனது சொந்தக்காரர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக் கணைகளை வீசி, ஒரு லேசான காயத்தைக்கூட ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித் தவறி, அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்தில் ஏற்படுத்தினேன் என்றால், அதற்காக மன்னித்துவிடுங்கள்!'' என முதல்வர் பேசப் பேச, 'ஓர் அரசியல் தலைவனின் பக்குவம் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என அசந்துபோனார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

தமிழன் பேசிப்பேசியே வீணாப்போனான்..... பேச்சை கேட்டு கேட்டும் மதி மயங்கிப்போனான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw8xxnf77WzwGeoYukFclQF68r94xFZtG_-MKoj0WGNu3xCiItHb6jBKSXSlhhb9C6WRBPp8QZpD8bQPdz9xbJ0SMbKH5RSbnqNfKCJxzyTMQMaKJhbt0dFEWaZD9qV1w5uH7a6TdheIE/s400/2008062851771201.jpg
மறுநாள் காலை கருணாநிதி, காட்டூரில் உள்ள தன் தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போனார். குடும்ப உறவுகள் பலரும் சூழ்ந்திருக்க, தாயின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி, சில கணம் அமைதியாக நின்றார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் கிளம்பி வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடிக்கடி திருவாரூருக்கு வந்துபோகும் வழக்கமுடைய அழகிரி, அங்கே இருந்த நண்பர்களிடம், ''என்னய்யா, தலைவரை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிடுவீங்களா?'' எனக் கேட்டு உற்சாகமாக உரையாடியபடி இருந்தார்.

ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?


முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், நாகை மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, முதல்வரை ஜெயிக்கவைக்க இரவும் பகலுமாக இயங்கி வருகிறது. இதற்குஇடையில், கருணாநிதியின் வெற்றிக்கு அணை போடும்விதமாக அ.தி.மு.க. தரப்பு கிராமங்கள் தோறும் சாதிரீதியான கூட்டங்களை ரகசிய மாக நடத்தி வருகிறதாம்.

ஐவர்  குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முக்குலத்து வேட்பா ளரான 'குடவாசல்’ ராஜேந்திரன் இரவு பகல் பாராமல் திருவாரூர் தெருக்களைச் சுற்றி வருகிறார். ''இதுவரை தோல்வின்னா என்னன்னே தெரியாத கருணாநிதிக்கு, நம்ம சமுதாயம்தான் சரியான அடி கொடுக்கணும்.
 http://farm3.static.flickr.com/2651/4137255345_15cf7a5898.jpg
எப்படி? நீங்க ஓட்டுக்கு ரூ 10000 தரப்போறீங்களா? போங்க தம்பி போங்க.. 

திருவாரூரில் கருணாநிதியை வீழ்த்துவதன் மூலமா நம்ம சமுதாயத்துக்கே பெரிய பெயரைத் தேடிக்க முடியும். வரலாற்று வாய்ப்பாகக் கிடைச்சிருக்கும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!'' என குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவான முக்குலத்துப் பிரமுகர்கள் கிராமங்கள்தோறும் இரவுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...


இதுவரை கருணாநிதி பெற்ற வெற்றி வித்தியாசத்தைக் காட்டிலும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்கவைக்க தி.மு.க. ஆதரவுப் பிரபலங்கள் அனைவருமே திருவாரூரில் டென்ட் அடித்துவிட் டார்கள். அன்பளிப்பு மேளாவும் ஆங்காங்கே களை கட்டுகிறது. முதல்வரின் தொகுதி என்பதால், திக்குமுக்காடிக் கிடக்கிறது திருவாரூர்!

 ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...

Saturday, April 09, 2011

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...

Friday, April 08, 2011

அமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்திரா கிளு கிளு பேட்டி - காமெடி கும்மி

http://www.bollywoodbreak.com/photos/neetu-chandra-lucky/Neetu-Chandra-5.jpg 

ன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து. 

கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு

1, '' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?'' 

''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.

ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. 

அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். 

எங்கே? கேரவுன் வேன்லயா?

இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''

ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்.. 

2. ''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?'' 

''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. 

சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். 

அப்படியா? வாங்க .. 20 நிமிஷம் பேசிட்டிருக்கலாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtYR1VeWH7fTg4Agacfo1XGwWhBoKHVlPYQ6mrDaoHJsapaJqLi2aPQ9ODlywC01OixbhiVFXP_QNWKqKq95JT-iUMqL2AbTlku1ose72P6B71U4I6zsf57FewphtqPW2A1ihHwKf01E0/s1600/neetu_chandra_hot_thighs.jpg
அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?

மத்தவங்க, பெத்தவங்க,ஒன்னுக்கும் வழி அத்தவனுங்க எப்பவும் இப்படித்தாங்க.. அவ்ங்களைப்பத்தி நமக்கென்ன? வாங்க.. நாம பழகலாம்.. 
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''

படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்.... 

3. ''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?'' 

 (பார்க்கறவங்களுக்குத்தான் தைரியம் வேணூம்.. அவ்ங்களுக்கென்ன?)

''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''

 அம்புட்டு அப்பாவியா நீங்க..?

4. ''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?'' 


''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''


எப்படி? ஆ  ன  ந்  த  வி க  ட  ன்.. அப்படின்னா?

5. ''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?'' 

''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''

தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..


6. ''நீத்துன்னா என்ன அர்த்தம்?'' 

'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''

எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி 

Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

Friday, April 01, 2011

கலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்? தமிழருவி மணியன் ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

1. ''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?'' 

''தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!''

ரொம்ப சிரமம் சார்...மக்கள் விழிப்புடன் இல்லையே...

2. ''கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே... அப்படி என்ன அவர் மேல் கோபம்?'' 

''20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சர வையில் இடம் பெறுவதில் காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கியக் காரணம்!''

 தமிழ் இனம் அழிக்கப்படும்போது கடிதம் எழுதியவர் தன் குடும்பத்துக்கு பதவி வேணும்னதும் டெல்லி விரைந்தாரே.. அதை விட்டூட்டீங்க?

'3. 'பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''சினிமாவின் வீச்சு + விஜயகாந்த்தின் துணிச்சல்  +தமிழரின் ரசனை = தே.மு.தி.க -வின் வளர்ச்சி!''

மாற்று சக்திக்காக மக்களின் ஏக்கம்?


4. ''அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!'' 

1. ''பிளேட்டோவின் 'குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் 'அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் 'மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின்  'காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. 'காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. 'இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. 'பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி - தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய 'இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. 'பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. 'இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)


5. ''நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

 ''நான் உயிர் கசிய நெஞ்சில்வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ்  இயக்கம் காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்காக இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது.

நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, 'காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.

'சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன்.

அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்க மித்தது என்னை மீறிய நிகழ்வு.


2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்துவிட்ட மாறாத களங்கம்.

இன்று நான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகசைத்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்... 'இனி, எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!''

மரத்துக்கு மரம் தாவும் வானரங்களுக்கு மத்தியில் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு வரம்


'6. 'எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல்வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?'' 

''முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்த நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக்கொள்வது இல்லை. 'காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவேன்.

அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேன். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த 'அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!''

ஆனா அவரை தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்?நித்யானந்தாவை தெரிந்த அளவு கூட தெரியாது.. ஏன்னா இங்கே பாசிடிவ்வை விட நெகடிவ்க்குத்தான் விளம்பரம் ஜாஸ்தி

'7. 'நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?'' 

''ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன்.

வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடைமை ஆகாது.

நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தர வில்லை.

ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்ட விதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங் களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்!''

கலைஞர் எப்பவும் அப்படித்தான்.. இந்த ஒரு விஷயத்தில் அவர் எம் ஜி ஆர் மாதிரி.. தனக்கு எதிரி என தெரிந்தால் ......


8. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல்இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

''அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!''

டம்மி பீஸ்களிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்...

9. ''பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?'' 

'' 'அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த 'சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!''

அப்பவும் உங்க கட்சி ஆளை விட்டுக்கொடுக்காம பேசறீங்களே.. பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்.. 

10. ''ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார் கள்... நான் என்ன செய்வது?'' 

''தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவதுகூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்துகொடுங்கள்.

பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் 'சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற 'சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!''

நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் காலாக்காயே மேல் என சிலர் நினைக்கிறார்களே.. ? என்ன செய்வது? 


11. ''உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?'' 

''ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே!
பதவியை மறுத்து, பணத்தைத் துறந்தவர்... அரசியலில் தோற்றவரா... ஜெயித்தவரா?''

 காமராஜர், ஜீவா,கக்கன் இவங்க எல்லாம் வாழும் காலத்தில் பிழைக்கத்தெரியாதவர்கள் என பேசப்பட்டாலும் இன்று சரித்திரம் அவர்களை போற்றுகிறதே.. அதே போல் உங்களையும் நாளைய சரித்திரம் அடையாளம் கண்டு கொள்ளும் சார்..

12. ''பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?'' 

'' 'மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைர வரி. 'அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசகம்!''


13. ''நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத் துக்கு இடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப்போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!''


'14. 'அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?'' 

''அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!''

15. ''ராகுல் காந்தி பற்றி உங்கள் மதிப்பீடு?'' 

''களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!''


16. ''மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்கவைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்கவைப்பீர்கள்?'' 

''மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!''


'17. 'தி.மு.க,  அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?'' 

''நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!''

சாரி சார்.. அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்.. 

Thursday, March 31, 2011

ஆனந்த விகடன் VS திரிஷா பேட்டி - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglXA_OfOWZDKNdGy8BlHRr7Msaf212BwQ_SAXIURLouez2wK1Ug_St8itoC9xxCYF35KTYVAjk6QhYDI32hvB-74WPJ0uhSTk1aNcetOKcXAr5EBAFeVXG3US4kE_Zx047OsCxH7ScEPWI/s1600/trisha-in-marmayogi.jpg
ரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!
1. '' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே?'' 

''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா? சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை.

 ஆமாங்க.. சிம்பு கூட இதையே தான் சொல்வாரு...

என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை.

 வேற யாருக்கு.. உங்க ரசிகர்களுக்குத்தான்

எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது.

 ஆமாங்க.. ஆனா 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வதந்தி வந்ததே அது டாப் டக்கருங்க.. அந்த மாதிரி மறுபடி புதுசா எதுவும் வர்லைங்களே.. ? ஏன்?



கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண்.

 ஆமாங்க.. நீங்க பச்சை குத்தி இருக்கற ஸ்டைல்லயும், டாட்டூ போட்ட மேட்டர்லயும் அது நல்லா தெரியுது...


என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை!''


பொதுவா மார்க்கெட் போன பிறகுதானே கல்யாணத்தை பத்தி யோசிக்கனும்?



2. ''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க?'' 


''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம்.

 இருந்தோம்னு ப்ளூரல்ல சொல்றீங்களே? #டவுட்டு


உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு!


நாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!''

 சபீனா, ஹேமா ரெண்டு பேரும் வந்தாங்க.. ஓக்கே? சேட்டை அண்ணனுமா வந்தாரு? அண்ணன் சொல்லவே இல்லை?


3. ''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே?''  


''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு.

 ஓஹோ.. அப்படியே தான் இருக்கா.. ஜாக்கிரதை.. அவரோட லேட்டஸ்ட் படம் பார்த்தீங்க இல்ல..?


இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpuw6USWI7xaJkE7Y9uTrYZlA7-8QehTw7pZdQZFe0eTPFYBxVuXgz1Bs_RbdpRkdASu3uo5rg2WI0WHZuqre3eqvMK4Sn4OJzRmNRZr6wW3zzzSvCOIB6uNdVcD-1lFnQiVkltFnYpQpZ/s1600/Trisha065.jpg
4. ''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு?'' 

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''


டி ஆர் நிக்கலை.. அதனால டி ஆருக்கு ஓட்டு போட வழி இல்லை... 

கறுப்பு எம் ஜி ஆர் + சிவப்ப்பு ஜெயலலிதா VS விகடன் பேட்டி - காமெடி கும்மி கலாட்டா

.தி.மு.க. கூட்டணியின் அனல், புனல் இரண்டுமே இப்போது விஜயகாந்த்தான்!

அப்பாவின் 'முரசொலி’ அவரைத் திட்டித் தீர்க்கிறது. 'விஜயகாந்த் மானஸ்தன்!’ என்று தூபம் போட்டார் அண்ணன் அழகிரி. '30, 40 சீட்டுக்காகக் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என்ற முன்னாள் கதாநாயகன் என்ன ஆனார்?’ என்று கேட்டார் தம்பி ஸ்டாலின். தி.மு.க-வின் வெற்றிக் கணக்கை, விஜயகாந்த்தின் கூட்டணிக் கணக்கு முறியடித்து வருகிறதோ என்ற கோபத்தின் வெளிப்பாடுகளாகவே இவர்களின் வாக்குமூலங்களைக் கருத வேண்டி இருக்கிறது.

இதுவரை 'சிங்கிள் சிங்கமாக’ வலம் வந்த விஜயகாந்த், இப்போது கூட்டணிக் காட்டுக்குள். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் போகும் அவரது வேனில் ஓர் இடம் கிடைத்த இடைவேளையில், பல விஷயங்களைப் பேச முடிந்தது.


1. ''முதல் கேள்வியை நானே கேட்கிறேன் சார்! 'தெய்வத்துடனும் மக்களுடனும் தான் கூட்டணின்னு சொன்ன நீங்க, ஏன் ஒரு அணியில் சேர்ந்தீங்க?’ன்னுதானே கேட்கப்போறீங்க?''- உஷாராக எடுத்துக் கொடுக்கிறார்.
''அதுதானே முதல் கேள்வியாக இருக்க முடியும்...'' 


''இன்றைக்கு என்னோட ஒரே இலக்கு, முதலமைச்சர் நாற்காலியில் கருணாநிதி நீடிக்கக் கூடாது. தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடாது. அதுக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் நான் எடுத்திருக்கேன். என்னை தனியா நிறுத்தி, ரத்தம் குடிக்கச் சில நரிகள் தயாராக இருந்தன. அதற்கு நான் தடைபோட்டு விட்டேன். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது அவதூறு பரப்புறாங்க!
இப்போதும் சொல்றேன்... மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி வைத்து இருக்கேன். சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில், 'கூட்டணி சேரலாமா, வேண்டாமா’ என்று கேட்டேன். 'கூட்டணி சேருங்கள்! அப்போதுதான் நம் எண்ணம் நிறைவேறும்’னு எல்லா மக்களும் ஒரே மாதிரி சொன்னாங்க. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது அண்ணாவின் மந்திரம். அதைத்தான் நான் செயல்படுத்தி இருக்கேன்!''


கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு? 

2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?'' 

'' 'கருணாநிதி ஒரு தீய சக்தி’ என்று சொல்லி, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. 'கருணாநிதி பல தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம்’ என்று சொல்லி வருபவன் நான். ஒரே கொள்கைகொண்ட இரண்டு கட்சிகள் கூட்டணிவைப்பது எப்படி சந்தர்ப்பவாதம் ஆகும்? இதுதான் சரியான வாதம்!

கருணாநிதி அமைச்சிருக்கிறது கொள்கைக் கூட்டணியா? காங்கிரஸ் கட்சியை 1967-ம் வருஷம் வீட்டுக்கு அனுப்பினார் அண்ணா. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் கட்சிதான்னு சொன்னார் அண்ணா. இன்றைக்குத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கட்சி கேட்பதையெல்லாம் தூக்கிக் கொடுக்கிறார் கருணாநிதி.


தி.மு.க-வின் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கை அடமானம் வைக்கப்பட்டதற்குக் காரணம், ஆ.ராசா திஹார் ஜெயிலில் இருக்கிறதுதானே?
டாக்டர் ராமதாஸ் கட்சி ஆரம்பிச்சதில் இருந்து கருணாநிதியைத்தான் ஆதரிச்சுக்கிட்டு இருக்காரா? இந்தக் கூட்டணிக்குள் எத்தனை தடவை வந்தார்... எத்தனை தடவை வெளியே போனாருங்கிற கணக்காவது கருணாநிதிகிட்டயும் ராமதாஸிடமும் உண்டா? 'கருணாநிதி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீங்க?’ன்னு ராமதாஸிடம் ஒரு நிருபர் கேட்டப்போ, 'முட்டை மார்க் போடுவேன்’னு சொன்னவர் அவர். முட்டை மார்க் போட்ட ராமதாஸும் கருணாநிதியும் மேடையில் சிரிக்கிறது சந்தர்ப்பவாதம் இல்லையா?''

மிஸ்டர் கேப்டன்.. சந்தர்ப்பவாதத்தைப்பற்றி நீங்க பேசாதீங்க.. 30 அல்லது 40 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன்னு ஒரு மானஸ்தன் சொன்னதா ஞாபகம்.. 


'3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?'' 


'' 'நீண்ட கால நண்பர்’னு வேற சொல்லியிருக்கார்! சின்ன வயசுல நானும் அவரும் என்ன கோலிக்குண்டு விளையாடினோமா? கபடி ஆடினோமா? சும்மா, மைக் கிடைச்சதும் அடிச்சுவிட்டிருக்கார் அழகிரி.

அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க. கூட்டணி போடக் கூடாது. போட்டால், தி.மு.க. அதோட காலிங்கிறது னால, அவங்க என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. நான் எதுக்கும் அசரலை. விலை பேசினாங்க. நான் மசியலை. உளவுத் துறையைவெச்சு பொய்களை, வதந்திகளைக் கிளப்பினாங்க. நான் எதைப்பத்தியும் கவலையே படலை. அர்ஜுனனுக்குத் தெரிந்தது கிளியின் கழுத்து மட்டுமேங்கிற மாதிரி, எனக்குத் தெரிந்தது எல்லாமே கருணாநிதி மட்டும்தான். கோடிகளைவிட, இந்த மோசடிப் பேர்வழிகள்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.
கோடிகளை வாங்கினால், நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க முடியும். ஆனா, நான் அந்தப் பாவத்தைச் செய்யலை. மே 13-க்குப் பிறகு, நாடே நல்லா இருக்கப்போகுது!''


 ஏன்? நீங்க சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்களா? 


4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?'' 


'' 'அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நான் பார்க்க மாட்டேன்’னு அவரோட அப்பா சொல்லி இருக்கார். அதை ஸ்டாலினும் கடைப்பிடிக்கட்டும். சேர்ந்து பிரசாரம் பண்றோமா, தனியா பண்றோமாங்கிறது முக்கியம் இல்லை. ஜெயிக்கிறோம்... அதுதான் எங்க லட்சியம்!''

எலக்‌ஷனுக்கு முன்னாலயே 2 பேரும் சேரலைன்னா எலக்‌ஷன் ல ஜெயிச்ச பிறகு அந்தம்மா உங்களை கிட்டே விடும்னு நினைக்கறீங்க?

5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?'' 

''பயனடைந்தவர்கள் பத்துப் பேர்னா... எதுவும் கிடைக்காதவங்க தொண்ணூறு சதவிகி தம் பேராச்சே! அவங்க உதயசூரியனுக்கு எப்படிக் குத்துவாங்க?
இலவச டி.வி. எதுக்குக் கொடுத்தார் கருணாநிதி? டி.வி-க்களின் எண்ணிக்கை அதிக மானால், தன் குடும்பத்துக்கு கேபிள் பணம் கொட்டும். அதுக்காகத்தான். அரசாங்கப் பணத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்து, அதைத் தன் குடும்பத்துக்குத் திருப்புற டெக்னிக் அது. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடியவர் கருணாநிதி’ன்னு நீதிபதி சர்க்காரியா சும்மாவா சொன்னார்?


இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. யார் கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா கருணாநிதிக்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித் திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.


இப்படி உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் கருணாநிதி கொண்டுவரலை. கொண்டுவரவும் மாட்டார். 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலன் ஒன்றையே மனதில்கொள் வார்’ங்கிற பாட்டு கருணாநிதிக்கு மட்டும் தான் பொருந்தும்.


'அரிசிக் கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக் கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி திருவாரூர்லயும் தஞ்சாவூர்லயும் சொல்றார். இதை எல்லாம் தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?

இந்த அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன் எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்? திருவண்ணாமலையில் ஒரு லாரியே எரிஞ்சுபோச்சு. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அதை ரேஷன் அரிசின்னார். கூட்டணி சேர்ந்த பிறகு, அவங்க அதைப்பத்திப் பேசவே இல்லை. கருணாநிதியும் ராமதாஸும் சேர்ந்தால், உண்மை செத்துடுமா?


'பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை எங்கள் கட்சிப் பெண்களே அடித்து நொறுக்குவாங்க’ என்றார் ராமதாஸ். மதுவிலக்கு வேண்டும் என்று ராமதாஸ் சொன்னார். செய்தாரா கருணாநிதி?
இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''

என்ன இப்படி சொல்லீட்டீங்க..?நீங்க அரசியலுக்கு வந்ததே அவங்களால தானே.. அது நல்லது இல்லையா? எத்தனையோ நடிகைகளுக்கு கலைமாமணி விருது கிடைச்சது அது நல்லது இல்லையா?கலைஞர் டி வி யே என்னுது இல்லைன்னு கலைஞர் சொல்லீட்டார்.. அது பொது சொத்து ஆகப்போகுது.. அது நல்லது இல்லையா?அவ்வளவு ஏங்க? தப்ஸி, தமனா,அஞ்சலி போன்ற சூப்பர் ஃபிகர்கள் களம் இறங்குனதும் அய்யாவோட ஆட்சில தானே..?


6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?'' 

''ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, தி.மு.க. குடும்பச் சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் சொத்தா மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.

முன்பெல்லாம் படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமத்துப் பாட்டாளிக்கும் நல்லாவே தெரியுது. அதில் அடிச்ச பணத்தைத்தான் நமக்குத் தரப்போறாங்கன்னு மக்களே சொல்றாங்க.
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்,

அவர் இதுவரைக்கும் போட்டுவெச்சு இருந்த கொள்கைவாதி முகமூடியைக் கிழித்துவிட்டது. 2009 மே மாசத்துக்குப் பிறகு, உண்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

ஸ்பெக்ட்ரம் மோசடி வெளிச்சத் துக்கு வந்த பிறகு, அவர் இதுவரைக்கும் போட்டு வைத்திருந்த நேர்மையாளன் என்ற முகமூடியும் கிழிந்துவிட்டது. 2010 நவம்பர் மாசத்துக்குப் பிறகு நேர்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

எகிப்துல முபாரக் ஓடின மாதிரி, இங்கேயும் நடக்கப்போகுது பாருங்க!'
''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!''

கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விடும் என்று நினைத்துத்தான் பலர் மனப்பால், மனபிராந்தி, மன விஸ்கி எல்லாம் குடிக்கறாங்க.. இந்த கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் தப்ஸி வந்தாக்கூடத்தான் வரும்.. அதுக்காக தப்ஸி தான் அடுத்த சி எம்னு சொல்லிட முடியுமா? போங்க தம்பி போங்க.. போய் புள்ள குட்டிகளை நல்லா படிக்க வைங்க.. அவங்களாவது நல்ல புத்தியோட வளரட்டும்..  


டிஸ்கி -1.  இந்த பதிவில் கறுப்பு , வெள்ளை, சிவப்பு என கலர் மாறி மாறி வருவது எதேச்சையானது.. நான் அதிமுகவுக்கு ஆதரவு என யாரும் முத்திரை குத்த வேண்டாம்..  


டிஸ்கி 2  - டைட்டிலில் ஜெயலலிதா இருக்கார் ஆனால் பதிவில் அவர் இல்லையே என கேட்பவர்களுக்கு  நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது. அதை குறிப்பால் உணர்த்தவே அப்படி டைட்டில்.... ஹி ஹி ( எதையாவது எதுகை மோனையா டைட்டில் வைக்க வேண்டியது.. அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க யோசிக்க வேண்டியது..)