Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Wednesday, September 10, 2014

ஆப்பிள் வாட்ச்: அறிய வேண்டிய 10 அம்சங்கள்

ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ஆம் தேதி ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் ஆகிய புதிய வகையை சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது மேலும் ஒரு நூதனத்தைப் புகுத்தியுள்ளது. அதுதான் ஆப்பிள் வாட்ச்.

1. ஆப்பிள் வாட்சின் தொடக்க விலை 349 அமெரிக்க டாலர்கள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பரவலாக இது கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஐஃபோன் 5, 5c,5s,மற்றும் 6 பிளஸ் ஆகியவற்றுடன் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. ஆப்பிள் வாட்ச் சஃபையர் கண்ணாடி முகப்புடன் தட்டையான திரை அமைப்பு கொண்டது. மேலும் சிறப்பாக ‘டிஜிட்டல் கிரவுன்’ என்ற திருகுக் கட்டுப்பாடு கொண்ட ஒன்றின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை ஸ்க்ரோல் செய்து அணுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிரவுன் என்பது ஸ்க்ரோல் சக்கரம் போல் செயல்படும் ஒன்று. மெனுக்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை எளிதில் ஸ்க்ரோல் செய்ய முடிவதோடு புகைப்படம், மேப்கள் ஆகியவற்றை ஜூம் செய்ய முடியும். மேலும் இது ஒரு பொத்தான் போலவும் செயல்படும். சாதாரண வாட்சில் கீ கொடுக்கும் சிறு பொத்தான் போல் இருக்கும் இதனை அமுக்கினால் முகப்புத் திரைக்கு மீண்டும் வந்து விடலாம்.
3. ஆப்பிள் வாட்சின் மற்றொரு சிறப்பம்சம் 'கைரோஸ்கோப்' (gyroscope), மற்றும் இன்றைய நவீன மொபைல்களின் சிறப்பம்சமான ஆக்சிலரோமீட்டரின் உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. ஆட்டோ ஸ்க்ரீன் ரொடேஷனுக்கு ஆக்சிலரோமீட்டர்கள் பெரும்பாலும் பயன்படுகின்றன. இதன் மற்றொரு நவீனப் பயன்பாடு மொபைல் மியூசிக் பிளேயரைக் கட்டுப்படுத்துவதாகும்.
மேலும் மொபைல் கேம் பயன்பாடுகளில் எதற்கெடுத்தாலும் கீ-யைஅழுத்தாமல் மொபைல் கருவியை ஆட்டி அசைத்து பயன்படுத்த உதவுகிறது. மேலும் இது, பயனாளர்களின் ஐஃபோனில் உள்ள ஜிபிஎஸ், மற்றும் வை-ஃபை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தூரத்தையும் கணக்கிட உதவுகிறது.
4. ஆப்பிள் வாட்ச் ஒரு வாக்கி-டாக்கியாக, டிராயிங் பேடாக, நாடித் துடிப்பு அறிய உதவும் கருவியாகவும் கலோரி கணக்கீடு செய்யும் கருவியாகவும், ஆக்டிவிட்டி டிராக்கராக பல பயன்பாடுகள் கொண்டது. ஆப்ஸ்களை செயல்படுத்துவதோடு, டிக்டேஷன் எடுத்துக் கொள்கிறது, மேலும் ஐஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.
5. Siri என்ற தானியங்கி குரல் கட்டுப்பாட்டு அமைப்பை ஆப்பிள் வாட்ச் ஆதரிக்கிறது, பேச்சு வடிவ கேள்விகள் மற்றும் கட்டளைகள் வழியாக உரையாட இது வழிவகுக்கிறது.
6. ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் 2 மாதிரிகளில் வருகிறது: ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்.
7. இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும்.
8. புதுப்பிக்கப்பட்ட iOS 8 பிளாட்பார்மில் ஆப்பிள் வாட்ச் இயங்கும். இதன் மூலம் அனைத்து ஆப்பிள் கருவிகளை ஒத்திசைவுடன் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும். உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஐஃபோனில் ஒரு உரையாடலைத் தொடங்குகிறோம் என்றால் அதனை ஐபேடிலோ, ஆப்பிள் வாட்சிலோ முடிக்கலாம்.
9. ஊதா, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய ரிஸ்ட்பாண்ட்களுடன் ஆப்பிள் வாட்ச் வரவுள்ளது. மேலும் கையால் செய்யப்பட்ட கோல்ட் பக்கிளும் கூடுதல் கவர்ச்சி.


10. டிம் குக் இதனை "இதுவரை உருவாக்கப்படாத தனிநபர் பயன்பாட்டுக் கருவி" என்று இதனை டிம் குக் விதந்தோதுகிறார்.

Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Monday, March 11, 2013

பாரம்பரிய நெல் ரகங்கள்.


நெல்லின் நேசர்

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

சிவப்புக் குடவாழை. வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக் குறுவை..."
போதும்... நிறுத்துங்க! இதெல்லாம் என்னங்க?"
இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள். இதுபோன்று நம்ம மண்ணுல வெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டு போய்ட்டாங்க. இன்னைக்கு நம்ம சமகால விவசாயிகளுக்கு இதோட பெருமையும் தெரியலை. அருமையும் புரியலை. கடந்த ஏழெட்டு வருஷமாய்ப் போராடி சுமார் 63 வகையான நம்ம பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டுபிடிச்சு பரவலாக்கியிருக்கோம்!" என்கிறார்நெல்லின் நேசர்ஆன ஜெயராமன்.
நமது நெல்லைக் காப்போம்என்கிற பிரசார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அவர். பாரம்பரிய நெல் வகைகள் குறித்தும் இயற்கை வேளாண்மை பற்றியும் ஆய்வாளருக்குரிய தகவல்களுடன் படபடவெனப் பேசும் அவர் அதிகம் படித்தவரில்லை. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமம். பூர்விக விவசாயக் குடும்பம். அப்பா விவசாயி. கடனாளியானதுதான் மிச்சம். அவர் தம் காலத்திலேயே நிலங்களை விற்று விட, பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த ஜெயராமன், அச்சாபீஸ் வேலைக்குப் போய் விட்டார்.
அந்த நேரத்துல சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்தாரு. அவரோட பேச்சு என்னில ரொம்பவே ஈர்த்துச்சு. அப்புறம் என்ன? அச்சக வேலைக்கு குட்பை சொல்லிட்டு, வேளாண் தொழிலுக்கு நேரா வந்துட்டேன். 2005 கேரளாவின் வயநாடு மாவட்டத்துல கும்பளங்கி கிராமத்துலதணல்அமைப்பு சார்பாநமது நெல்லைக் காப்போம்கருத்தரங்கு.
மலையாளிங்க தங்களோட பாரம்பரிய நெல் ரகங்களைப் பத்தி ரொம்பவே பேசினாங்க. எனக்கு அப்பத்தான் பொடனியில யாரோ பொடேர்னு அடிச்ச மாதிரி இருந்திச்சு. அப்ப... தமிழ்நாட்டுல நம்பளோட பாரம்பரிய நெல் ரகங்கள்லாம் என்னாச்சு? எங்கே போச்சுன்னு ஒரு தேடல் எனக்கு அன்னையிலேர்ந்தே தொடங்கிடிச்சு!" கதிரிலிருந்து உதிரும் நெல்மணிகளைப் போல சொற்களை உதிர்க்கிறார் ஜெயராமன்.

தமிழ்நாடு முழுவதும் சுத்தித் திரிஞ்சேன். பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்கிற விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடிச்சேன். அவுங்கள்ட்ட கையேந்தினேன். அவுங்க தர்ற நெல்லைக் கொண்டாந்து எங்க ஆராய்ச்சி மைய வயல்ல விதைப்பேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கி கோட்டை போலக் குவிச்சி வெச்சுக்குவேன்!" என்பவரை ரொம்பவே சிரமப்பட்டிருக்கீங்க போல..." என இடைமறித்தோம்.
நெல்லுல பலவகை இருக்கு இல்லே. அதுபோல அந்தந்த மண்ணுக்கு அந்தந்த நெல்லுனு இருக்கு. ஒரு தபா பனங்காட்டுக் குடவாழை நெல் தேடி அலைஞ்சேன். அது கடலோரப் பகுதி நிலத்துல விளையுற நெல். வேதாரண்யம் ஏரியாவுல அது விதைச்சிருந்த விவசாயியைக் கண்டுபுடிச்சிட்டேன். வெவரம் சொல்லி நெல்லு கேட்டேன். அவுரு தர மாட்டேன்னுட்டாரு. நான் சளைக்கலை. தொடர்ந்து அஞ்சாறு தபா அவுர்ட்ட அலைஞ்சேன். நெல்லெல்லாம் கிடையாதுன்னுட்டு ரெண்டு பிடி நாத்து மட்டும் தந்தாரு. அதை நட்டு பனங்காட்டுக் குடவாழை நெல் விதையினைச் சேர்க்கத் தொடங்கினேன். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட நெல் ரகம்ங்க அது. காய்ச்சல் கண்டவங்களுக்கு பனங்காட்டுக் குடவாழை அரிசியில் கஞ்சி வெச்சுத் தொடர்ந்து குடுத்து வந்தா மளமளன்னு காய்ச்சல் கொறைஞ்சுடும்ங்க!" என்று திடீரென உணவு முறை வைத்தியராக மாறுகிறார் ஜெயராமன்.
பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஒவ்வொண்ணும் பலவித நோய்களுக்கான அருமருந்து. மாப்பிள்ளைச் சம்பானு ஒரு ரகம். அந்த அரிசிச் சோறு தின்னா சர்க்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை. சிவப்புக் கவுனி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை அரிசி யானைக்கால் நோயைக் குணப்படுத்தும். பால்குட வாழை அரிசி சமைச்சி சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச் சம்பா நெல்லுனு ஒண்ணு இருந்திச்சு. அதனை தங்க பஸ்பம்னே சொல்வாங்க. இதையெல்லாம் பறி கொடுத்துவிட்டு வெறும் சக்கையை விளைவிச்சுட்டு இருக்கோம்!" என்று ஆதங்கப்படுகிறார். அவர் சொல்லிச் செல்லும் நெல் ரகங்களின் பெயர்ப் பட்டியல் மேன்மேலும் நீள்கிறது.

அறுபது நாள் சாகுபடியிலிருந்து நூற்றியெண்பது நாள் சாகுபடி வரைக்குமாக சுமார் நூற்றுக்குட்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை இவர் சேமித்து வைத்திருக்கிறார். அதற்கென ஒரு வங்கியும் இயங்கி வருகிறது.
செம்மை நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)யில் ஒரே ஒரு தூரில் விளைந்த நெல் மணிகளை மட்டும் அதற்கான கதிருடன் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார் நம்மிடம். தூயமல்லி நெல் ரகம் அது. ஒரு தூரில் 113 கதிர்கள்! சீரக சம்பா, வாசனை சீரக சம்பானு ரெண்டு வகை நெல்.
இதுல வாசனை சீரக சம்பா நெல் வயல்ல பூக்கும் போதும் சரி, அந்த அரிசியை வீட்டில் சமைக்கும் போதும் சரி, சும்மா சீரக வாசனை கும்முனு தூக்கியடிக்குமாம்!
திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம் கிராம ஆய்வுப் பண்ணையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்நெல் திருவிழாநடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமாக சுமார் இரண்டாயிரம் விவசாயிகள் வந்து செல்கின்றனர். எந்தப் பாரம்பரிய விதை நெல்லினை இங்கு வந்து பெற்றுச் சென்றாலும், அந்த விவசாயி அதன் அறுவடைக்குப் பின்னர் இரண்டு மடங்கு விதை நெல்லினை சமூகக் கடமையாக இங்கு கொண்டு வந்து திருப்பிச் செலுத்த வேண்டும்.


THANX - KALKI

Monday, November 05, 2012

வின்னிங்க் பாயிண்ட்டில் ஒபாமா

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!


 Mitt Romney Heckled End Climate Silence

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.



சான்டி புயலின் அறிவிப்பு வந்த நிலையிலிருந்தே அதிபர் ஒபாமா பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஒருநாள் முன்னதாகவே பிரச்சார பயணத்திலிருந்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்ட அவர், நகர மேயர்கள், மாநில கவர்னர்களிடம் நள்ளிரவு தாண்டியும் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.



FEMA என்றழைக்கப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆங்காங்கே மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைக்கச் செய்தார்.



FEMA வேண்டுமா வேண்டாமா?
ஒபாமா தேர்தல் பணிகளிலிருந்து முற்றிலும் விலகி, அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராம்னி. சான்டி புயல் சேத்த்திற்கு பிறகு, ஒஹயோவில் உதவிப்பொருட்களை சேகரிப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஐயாயிரம் டாலர்களுக்கு வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கி செஞ்சிலுவை அமைப்பிடம் கொடுத்தார்.




அவசரகால நேரத்தில் பொருடகள் வேண்டாம் பணமாகக் கொடுங்கள் என்று கூறி, செஞ்சிலுவைச் சங்கம் ராம்னியின் செயல்களை மூக்குடைத்துவிட்டது. அந்த் பொருட்களை தூக்கி செல்லுவதற்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவரிடம், 'தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்/ தேவையில்லை என்று முன்னர் கூறினீர்களே, இப்போதும் அதே நிலைதானா?' என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.



எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவரது ஆதரவாளார்களை நோக்கி எல்லோரும் உதவி செய்வோம் என்று சம்மந்தம் இல்லாமல் பதில் சொன்னார். ராம்னியின் FEMA குறித்த நிலை என்ன என்ற கேள்விகளுடன் இரண்டு நாட்கள் தேசிய தொலைக்காட்சிகளில் அதிகமாக விவாதத்திற்குள்ளானது.




கைவிரித்த நண்பர்
அதே சான்டி புயல் தாக்கிய நியூ ஜெர்ஸி மாநில குடியரசுக்கட்சி கவர்னரும், ராம்னியின் ஆத்ரவாளருமான கிறிஸ் கிறிஸ்டி, ஒபாமாவின் கட்சி சாராத அணுகு முறைக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒபாமா புராணம் பாடிவிட்டார். மேலும் ஒபாமாவுடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ், ராம்னி நியூஜெர்ஸிக்கு வரத்தேவையில்லை என்றும் கூறிவிட்டார். எதிரணியினருடன் இணைந்து செயல்படாதவர் ஒபாமா என்று குறை சொல்லிக்கொண்டிருந்த ராம்னிக்கு, அவரது நண்பரே பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார்.




சுற்றுச்சூழலை பாதுகாப்பாரா ராம்னி?



இந்நிலையில் சான்டி புயலால் பாதிப்படைந்த, கடும் போட்டி நிலவும் மாநிலமான வர்ஜினியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற ராம்னியை சான்டி மேலும் துரத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுத்து வருகிறார்.



ராம்னியோ சுற்றுச்சூழல் பற்றி கவலை இல்லை என்ற ரீதியில் ‘உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தான் கவலை' என்று கூறியிருந்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், புவி வெப்பமயமாகிதாலும் தான் சான்டி புயல் வந்ததாக நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் கூறியிருந்தார்.



மேலும் சுற்றுச்சுழல் மேம்பாட்டிற்காக ஒபாமா செயல் திட்டம் நிறைவேற்றுவதால் தான் அவரை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.



வர்ஜினியா பீச்சில் ராம்னியின் பிரச்சாரத்தில், இதே கருத்தை வலியுறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ‘ சுற்றுச்சூழல் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவும்' என்று பேனர் காட்டி, முழக்கமிட்டார்.



நேருக்கு நேராக நின்று இப்படி ஒருத்தர் கேள்வி கேட்பார் என்று ராம்னி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், செய்வதறியாது திகைத்தார்.. ராம்னியின் பாதுகாவலர்கள் அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகே வழக்கமான பிரச்சார பேச்சை ஆரம்பித்தார். முன்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது பேச்சில் சுவாராஸ்யம் குறைந்தே காணப்பட்டது.



'எதிரி நாட்டில்' ராம்னியின் மகன்!


இதற்கிடையே, ராம்னியின் மகன் மேட் ராம்னி கடந்தவாரம் தொழில் ரீதியாக ரஷ்யா சென்று வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள தனது ரியல் எஸ்டே நிறுவனத்திற்கு முதலீடு திரட்டுவதற்க்காக இந்த பயணம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் மிக்ப்பெரிய எதிரி யார் என்று ராம்னியிடம் கேட்ட போது ‘ரஷ்யா' என்று பதில் சொல்லியிருந்தார்.



ராம்னியின் கூற்றுப்படி எதிரியாக கருதப்படும் நாட்டில் தொழில் ரீதியாக நட்பு தேடுகிறார் அவரது சொந்த மகன்.



ராம்னி முன்பு சொன்ன வார்த்தைகளே, தேர்தலின் கடைசிக் கட்ட நேரத்தில் அவருக்கு எதிராக திரும்புவதால், செய்வதறியாது திகைக்கிறார் ராம்னி என்றே சொல்லலாம்!



புதிய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு வெற்றி!



இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர்நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து ஒஹயோவில் நடத்திய கருத்து கணிப்பில் ராம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், ராம்னிக்கு 47 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.



தேர்தல் நாளன்று இந்த வித்தியாசம் 10 சதவீத அளவுக்கு ஒபாமாவுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.



நன்றி -தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

Wednesday, October 17, 2012

பாரக் ஒபாமா பதிலடி , பம்மிய ராமனி

அதிரடி இரண்டாம் கட்ட விவாதம்: ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா!

 

 


ஹாம்ஸ்டெட் (யுஎஸ்): சற்று முன் (நியூயார்க் நேரப்படி செவ்வாய் இரவு 9 மணி) நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் அதிபர் பாரக் ஒபாமா.


 obama takes offensive against romney in debate rematch
அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும் ராமனி மீது, புள்ளி விவரங்களுடன் கடுமையாக அதிரடி தாக்குதல் நடத்தினார். மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை வாக்காளர்களுக்கு மத்தியில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்த இந்த விவாதத்தில் ஒபாமா அதிரடியாய் வென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
 
இதுதான் ஒபாமா ஸ்டைல்...


'முதல் விவாதத்தின்போது கொஞ்சம் பெருந்தன்மையா இருந்துட்டேன். அதுக்காக எப்போவும் அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க" - என்று மறைமுகமாக ராம்னிக்கு சொல்லும் வகையில்தான் இன்றைய ஒபாமாவின விவாதம் இருந்தது.


சில நேரங்களில் ‘நீங்கள் சொல்வது தவறு" என்று முகத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய போது, பதில் சொல்லத் தெரியாமல் திணறி விட்டார் ராம்னி.


பார்வையாளரின் கேள்விக்கு சொல்ல வேண்டிய நிலையில் அதை சொல்ல முடியாமல், ஒபாமாவை நோக்கி கேள்வி கேட்ட ராம்னியை பார்க்கும் போது பரிதாமாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ராம்னியின் கேள்விகளை படு லாவகமாக கையாண்ட ஒபாமா, தான் அமெரிக்காவின் அதிபர்.. சின்னப்புள்ளத்தனமாக பேச முடியாது என்பதைச் சொல்லாமல் சொன்னார். 


சீனாவுக்கு வேலைகளை அனுப்பிய ராம்னி... 


அமெரிக்க வேலை வாய்ப்பை பெருக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்று பார்வையாளர் கேட்ட போது ராம்னி அன்னிய செலாவணியைக் குறைத்துக் காட்டும் சீனாவைக் கட்டுப்படுத்துவேன் என்றார்.


அடுத்து பேசிய ஒபாமா, தன்னுடைய ஆட்சியில் சீனாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கடிவாளம் போட்டுள்ளேன். அமெரிக்காவில் உள் நாட்டு உற்பத்திகள் பெருகியதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது.


சீனாவுக்கு எதிராக சட்டம் போடுவதில் அமெரிக்காவின் கடைசி மனிதர் ராம்னி ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அவரது கம்பெனிதான் சீனாவுக்கு அதிநவீன உற்பத்தித்துறையின் வேலைகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உற்பத்தியையும் சீனாவுக்கு அனுப்பி வைத்தவர் இதே ராம்னிதான். இவரை எப்படி நம்புவது? என்று ஒபாமா கேள்வி எழுப்பிய போது ஆடிப்போய்விட்டார் ராம்னி.


இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டுக்கு செல்லும் வேலை வாய்ப்புகளை எப்படி தடுத்து நிறுத்தப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, விளக்கமாக தொலை நோக்கு பார்வையுடன் சொல்லத் தெரியாத ராம்னி ' வருமான வரியை குறைத்து நான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெருக்குவேன்' என்று பொத்தாம் பொதுவாகதான் பதில் சொன்னார்.


சில வேலைகள் அமெரிக்கர்களுக்கு இல்லை...


ஒபாமாவோ, சில வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பாது என்ற உண்மையை அழுத்தமாக சொல்லியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் உயர் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதே எனது திட்டம். அதற்காக எனர்ஜி, உயர்தொழில் நுட்ப தொழிற்சாலைகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு என அடுத்த நூற்றாண்டுக்கான எதிர்கால திட்டம் உருவாக்கியிருக்கிறேன். அதன் பலன் ஏற்கனவே கிடைக்க ஆரம்பித்து உள்ளது. சோலார், காற்றாலை உள்ளிட்ட புதிய தொழில் நுட்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு, அதிக ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என புள்ளி விவரத்தோடு அடுக்கினார்.



சொன்னதை செய்வேன்.. செய்வதைத்தான் சொல்வேன்..


நான்கு ஆண்டுகளில் என்ன செய்து முடித்துள்ளீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒபாமாவின் பதில் இது:


படு பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருந்த பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினேன். மடிந்து கொண்டிருந்த அமெரிக்க கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மீட்டெடுத்து பல லட்சம் வேலைவாய்ப்புகளை காத்து, புதிய தொழில் நுட்பத்துடன் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை தயாரிக்க காரணமாக இருந்தேன்.


அமெரிக்க வரலாற்றிலேயே குறைந்த அளவு எண்ணெய் இறக்குமதி என்ற் சாதனையை நிறைவேற்றி, உள் நாட்டு உற்பத்தியை பெருக்கியுள்ளேன். ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வந்து பணத்தை உள்நாட்டு வளர்ச்சிக்கு திருப்பியுள்ளேன். ஒசாமா பின் லேடனை ஒழித்து கட்டினேன். ஆஃப்கானிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறேன்.



தொடர்ச்சியாக 49 மாதங்கள் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது அதை நோக்கி தனது திட்டங்கள் என்ன என்றும் வரிசைப்படுத்தினார்.


ஒபாமாவை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்த ராம்னியோ வேலையை உருவாக்குவேன் உருவாக்குவேன் என்று கிளிப்பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.


ராம்னியின் தப்புக் கணக்கு...


கவர்னர் ராம்னி பணக்காரர்கள் , ஏழைகளுக்கு ஒரே அளவில் 20 சதவீதம் வருமான வரி என்றும் ஆனாலும் வருமானத்தை அதிகரித்து பற்றாக்குறையை சரி செய்வேன் என்றும் சொல்கிறார்.


அவரது கணக்குப்படி 20 சதவீதம் வரி என்றாலும் 5 ட்ரில்லியன் டாலர்கள் அரசுக்கு வருவாய் இழப்பு. ராணுவத்தினர் கேட்காத நிலையிலும் 2 ட்ரில்லியன் டாலர் கூடுதல் செலவு. ஆனாலும் பற்றாக்குறையை குறைப்பதாகக் கூறுகிறார். பொது தொலைக்காட்சி (தூர்தர்ஷன் போல்), குழந்தை பிறப்பை திட்டமிடும் பெண்களுக்கான காப்பீடு ஆகிய இரண்டிலும்தான் நிதி ஒதுக்கீடை ரத்து செய்வேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர எப்படி நிதி நிலையை சமாளிபார் என்று தெளிவான விவரம் அவரால் சொல்ல முடியவில்லை.


சாமானியனை விட குறைவாக வரி கட்டும் ராம்னி...


பல கோடிகள் சம்பாதிக்கும் ராம்னி 14 சதவீத வரி செலுத்தும் போது, சாதராண தொழிலாளியோ அவரை விட அதிகமான சதவீத வரி செலுத்துகிறார். இவரா நடுத்தர மக்களின் வரியை குறைப்பார் என மக்களை நோக்கி கேட்டார் ஒபாமா.


ராம்னி பல நிறுவனங்களை நடத்துபவர், அவரிடம் புதிதாக ஒருவர் வந்து லாபம் காட்டுகிறேன். ஆனால் திட்டங்களை சொல்ல மாட்டேன் என்றால் பணத்தை கொடுப்பாரா? அல்லது பொது மக்களாகி நீங்கள்தான் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று சூடான கேள்வியை எழுப்பினார்.



அப்போதும் கூட தன் திட்டங்களைச் சொல்லாமல், "நான் இருபத்தைந்து வருஷமா தொழில் செய்றேன், எனக்கு எப்படி நிதி நிலை சமாளிக்கனும்னு தெரியும்" என்று கூறிக் கொண்டிருந்தார். இது ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் கேலிக்குள்ளானது.


ராம்னியை விட புஷ் நல்லவர்


க்ளிண்டன் ஆட்சியில் எட்டு வருடமாக அமெரிக்க பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது. எட்டு ஆண்டு புஷ் ஆட்சியில் தான் நிலமை மோசமடைந்து நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் மோசமானது. இதை நினைவூட்டும் விதமாக 'உங்க கட்சியை சார்ந்த புஷ்ஷை விட நீங்கள் எவ்வாறு மாறுபட்டவர்' என்று ராம்னியை நோக்கி ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.



உடனே சந்தோஷமாக 'நான் ரொம்ப நல்லவன். என் திட்டங்கள் வேறு, சின்ன தொழில்களுக்கு முன்னுரிமை கொடுப்பவன்' என்று ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்தார் ராம்னி.



அடுத்து வந்த ஒபாமாவோ, 'ஒரு வகையில் புஷ் ரொம்ப நல்லவர். இவரைப் போல் ஏழைகளின் மருத்துவக் காப்பீட்டில் கை வைக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றாமல், குடியேற்ற சட்டத்தை சீரமைக்க முனைந்தார். முதியவர்களின் காப்பீடு திட்ட்த்தை வவுச்சர் திட்டமாக்கவில்லை' என்றார்.



புஷ்ஷை விட ராம்னி மோசமானவர் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஒபாமா.


பெண்கள் ஓட்டு யாருக்கு


பெண்களுக்கு சம ஊதியம் என்ற கொள்கையில் சட்டம் நிறைவேற்றியுள்ள ஒபாமா, கருத்தடை, தேர்ந்தெடுத்த குழந்தை பிறப்பு என முக்கிய பிரச்சனைகளும் மருத்துவக் காப்பீடு திட்டங்களில் இடம் பெறவேண்டும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமல்ல, இது குடும்பத்திற்கே முக்கியமான விஷயம் என்றார்.


ஆனால் ராம்னியோ, நிறுவன முதலாளிகள்தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.


ஆண்களும் பெண்களும் சம உரிமை மட்டுமல்ல, பெண்களுக்கே உரிய மருத்துவ பிரச்சனைகளுக்கும் முதலிடம் கொடுப்பது தான் தனது நிலை என்று தெளிவுபடுத்தினார் ஒபாமா.


சந்தடி சாக்கில், கணவன் இல்லாமல் குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அம்மாக்களால் தான் பிள்ளைகள் குற்றவாளிகளாகின்றனர் என்ற ரீதியில் புதிய வெடியை இன்று ராம்னி கொளுத்திப் போட்டுள்ளார். இதை எதிர்த்து ஏற்கனவே இன்டெர்நெட்டில் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



பெண்கள் பெருமளவு ஒபாமாவை ஆதரித்து வரும் சூழலில், எந்த கட்சியையும் சாராத பெண்கள் வாக்குகள் இந்த விவாதத்துக்குப் பிறகு ஒபாமாவுக்கே என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தவிர குடியேற்ற சட்ட திருத்தத்தில் ராம்னியின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தியிருந்தார் ஒபாமா. இதன் மூலம் ஹிஸ்பானிக் சமூகத்தினரின் ஆதரவும் பெருமளவில், கிட்ட்த்தட்ட முழுமையாக ஒபாமாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


நாட்டிற்கு தலைமை ஏற்கும் தகுதி யாருக்கு உண்டு


லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட போது, துக்க வீட்டில் அரசியல் பேசிய ராம்னியை, இந்த முறை ஒபாமா ஒரு பிடி பிடித்தார். நாட்டின் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஏதென்று முழுமையான தகவல்கள் கிடைக்காத நிலையில் அரசியல் பேசும் இவர் எப்படி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்.. அதற்கான தகுதி அவருக்கு இல்லையே...



இறந்தது நான் அனுப்பிய எனது ஊழியர்கள். நண்பர்கள். அவர்களை இழந்த எனக்கு அதன் வலி முழுமையாக தெரியும். அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடிச்சென்று பழி தீர்ப்போம். அதிபர் என்ற முறையிலும் கமாண்டர் இன் சீஃப் என்ற முறையில் உறுதியாக இதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று மிகவும் அழுத்தமாக கூறினார்.



தனது தலைமையில் நாட்டின் பொருளாதாரம் பெரு வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நூற்றாண்டு வரை அமெரிக்கா உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும். அதற்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என்ற கோரிக்கையுடன் ஒபாமாவின் வாதம் நிறைவு பெற்றது.



ராம்னி எந்த பாயிண்ட் சொன்னாலும், உடனடியாக புள்ளி விவரத்தோடு மறுத்த ஒபாமா, அத்துடன் உண்மையான நிலவரத்தையும் எடுத்துச் சொன்னார். ராம்னி சொன்ன தவறான தகவலகளை உடனுக்குடன் மறுத்த ஒபாமா ஒரு கட்டத்தில் ' உங்கள் பொய்யை எவ்வளவு நேரம்தான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பது' என்று சற்று காட்டமாகக் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராம்னி.



இன்றைய விவாத்த்தில் ஒபாமா வெற்றி பெற்றார் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளன. இந்த அதிரடி போட்டி விவாதத்தின் மூலம் தனது கட்சியினருக்கு உற்சாகம் மட்டுமல்ல, இதுவரை முடிவு செய்யாதவர்களையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் ஒபாமா.

 நன்றி - தட்ஸ் தமிழ்

-ஒன்இந்தியா.தமிழ் எக்ஸ்க்ளூசிவ்