Showing posts with label அனுபவம் நகைச்சுவை டி ஆர் ஆனந்த விகடன் பேட்டி. Show all posts
Showing posts with label அனுபவம் நகைச்சுவை டி ஆர் ஆனந்த விகடன் பேட்டி. Show all posts

Monday, July 25, 2011

தெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட்டி

http://blog.unchal.com/wp-content/uploads/2011/07/sara-11.jpg
ள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!


 கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)    


''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். 

அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். 

நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''
 http://www.viduppu.com/photos/full/actresses/others/amala_paul20.jpg

1. ''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''


''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''


2. ''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''


''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''



3. ''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''

(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''


4. ''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''


''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''


5. ''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''


''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''


6. ''அவங்க யாரு?''


''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''


7. ''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''


''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!
எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''


(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)


8. ''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''  


''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''


(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு  ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)
 சாரா

9. ''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''


''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. 

ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே  உயரமா வரணும்!''
(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)


10. ''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''


''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். 

அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''     

     
11. 'யார் தியாகராஜன்..?'

'
''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''


12. ''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''


''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. 


சாரா
நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''


கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!

நன்றி - விகடன்

Monday, July 18, 2011

நயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - காமெடி கும்மி

http://s1.hubimg.com/u/642076_f520.jpg 
 
எம்.ஜி.ஆர்... என்.டி.ஆர்... எஸ்.டி.ஆர்!

டெரர் பட்டியல் போடுகிறார் டி.ஆர்.

விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம்.


1.  ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்...

சி.பி - ஓப்பனிங்க் கேள்வியே தப்பு. கஷ்டப்படனுமா? அல்ல. எங்களை கஷ்டப்படுத்தனுமா?


''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன்.

சி.பி - டீ குடிக்கலைன்னா உடம்பு டைட் ஆகிடுமா?அப்போ காபி குடிக்கலைன்னா உடம்பு லூஸ் ஆகிடுமா?

உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி!



2. ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டிச்சு, போராட்டத்துல குதிச்சு இருக்கீங்க... கச்சா எண்ணெய் விலை ஏறினால், அதுக்கு மத்திய அரசு என்ன பண்ண முடியும்?''

'''சார்... எண்ணெய் ஊற்றுகளே இல்லாத பக்கத்து நாடான பாகிஸ்தான்ல, பெட்ரோல் விலை 45, இலங்கையில 50. இந்தியாவில் மட்டும் ஏன் எகிறுது விலை? இந்தியனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யுது. அதனால, பெட்ரோலுக்கு கலால் வரி 15, சுங்க வரி 7. 'இந்த வரியைக் குறைச்சா என்ன... இந்திய மக்களின் வலியைக் குறைச்சா என்ன?’னு நான் குரல் எழுப்பியதை இங்கே இருக்கிற மீடியாக்கள் கண்டுக்கலை.

ஆனா, அமெரிக்காவில் வெளியாகிற 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு நெறி கட்டுது. 'இந்தியா வரியைக் குறைத்தால், இந்தியாவின் துண்டு பட்ஜெட் நீண்டுவிடும்’னு குழப்பி குசும்பு வேலை காட்டி இருக்கு அந்தப் பத்திரிகை. அமெரிக்காவில் வாலாட்டும் அந்த 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையைப் பார்த்துக் கேட்கிறேன்...

http://mimg.sulekha.com/nayantara/stills/1_nayantara-stills05.jpg

உங்க நாட்டுல பெட்ரோல் விலை 45. இந்தியாவின் துண்டு பட்ஜெட், கர்ச்சீஃப் சைஸ்தான். உங்க நாட்டோட துண்டு பட்ஜெட், தலையில போட்டுக்கிற டவல் சைஸ். யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க? இங்கே தமிழ்நாட்டுல ஜெயலலிதா கேஸ் விலையைக் குறைச்சு இருக்காங்க. இதைப் பார்த்தாவது மத்திய அரசு திருந்தணும்!''

சி.பி - சர்வதேச அரசியல் பேச ஆரம்பிச்சுட்டாரே. அண்ணன் ஃபாரீன்ல போய் பதவி கேட்பாரோ?

3. ''சமச்சீர்க் கல்வி, அதிகாரிகள்-அமைச்சர்கள் பந்தாட்டம்னு செயல்படுற ஜெ-வை எதிர்ப்பீங்கன்னு பார்த்தால், இப்படி சபாஷ் போடுறீங்களே?''

''நான் ஒண்ணும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலை. தமிழக முதல்வருக்கு இருக்கிற அக்கறை, ஏன் மத்திய அரசுக்கு இல்லைனு கேட்கிறேன். அதே நேரம், சமச்சீர்க் கல்வி யைக் கலைஞர் கொண்டுவந்தார்ங்கிறதுக் காக தடுக்கிறதைக் கண்டிக்கிறேன். பாடப்புத்தகங்கள்ல திருவள்ளுவர் படங்களைக்கூட மறைச்சு இருக்காங்க. உலகத்துக்கே பொது மறை பாடிய அவரை கருணாநிதிக்குச் சொந்தக்காரர் மாதிரி சித்திரிப்பது சரியா?

பள்ளிக்கூடம் தொடங்கி, இத்தனை நாளாகி யும் என்ன பாடம் நடத்துறதுனு வாத்தியார்களுக்கும் புரியலை. என்ன படிக்கிறதுனு மாணவர்களுக்கும் தெரியலை. அரசுப் பள்ளிகளில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத் துற அளவுக்கு இருக்கைகள் சரி இல்லைனு ஓட்டைக் காரணத்தை இப்போ சொல் றாங்க. படிப்புங்கிறது பெஞ்ச்சுல இல்ல சார்... படிக்கிறவனோட நெஞ்சுல இருக்கு!''

 சி.பி - அதானே பார்த்தேன், பேட்டி ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆகியும் அண்ணன் இன்னும் எதுகை மோனையை எடுத்து விடலையேன்னு பார்த்தேன்.. ..


4. ''தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா திகார் சிறையில் இருக்கார். தி.மு.க-வின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''தி.மு.க-வில் இருந்தப்ப நான் சாராய ஃபேக்டரிக்கு லைசென்ஸ் கேட்கலை. கல்லூரி கட்டலை. கட்டப்பஞ்சாயத்து பண்ணலை. எம்.எல்.ஏ-வா இருந்தப்ப, எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல ஒருநாள்கூடத் தங்கியது இல்லை. ஆனால், இன்னிக்கு என்ன நடக்குது? தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் இருக்கார் சிறை யிலே... கொள்கை இருக்கிறதா திகாரிலே... தி.மு.க. உருண்டுகொண்டு இருக்கிறது அடுக்கடுக்கான புகாரிலே..

. குறிப்பிட்ட குடும்பங்கள் செய்த தவறு, தி.மு.க-வே பிழை செய்த மாதிரியான தோற்றத்தை உண்டாக்கி இருக்கு. தந்தைக்கும் மகனுக் கும் சீட்டு, தவறு பண்ணித் தண்டிக்கப் பட்ட மந்திரிக்கு மறுபடியும் பதவி, மறுபடியும் சீட்டு... அப்புறம் எப்படி ஜெயிப்பாங்க? காங்கிரஸ் உடனான உறவைக் கண்டிச்சு, என்னோட சிறு சேமிப்புத் துறைத் துணைத் தலைவர் பதவியை அப்பவே தூக்கி எறிஞ்சேன். நாம ஒரு குல்லாவை வீசினால், மந்திகள் எல்லா குல்லாக்களையும் வீசும்னு ஒரு கதை சொல்வாங்க.

அதை மனசுல வெச்சுத்தான் என் பதவியை நான் தூக்கி வீசினேன். ஆனால், மந்திகளுக்கு இருந்த உணர்வுகூட இங்கே இருக்கிற மனிதர் களுக்கு இல்லையே!''

சி.பி - அண்ணன் தன்னைத்தானே மந்தின்னு சொல்லிக்கறாரா? மந்திரின்னு சொல்ல வந்ததை இவங்க திரிச்சி போட்டுட்டாங்களா?

5. ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகியபோது, உங்களுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வந்ததாமே... உண்மையா?''

''இதில் மறைக்க என்ன சார் இருக்கு? அழைப்பு வந்தது உண்மை. எனக்கு சீட் கொடுக்க, அந்தம்மா முன்வந்தாங்க. அப்போ, அவங்கவெச்ச கோரிக்கையை ஏற்று, நான் அங்கே போக முடியாத நிலை. அதுக்கு முந்தைய தேர்தலிலேயே எனக்கு சீட் கொடுக்க அந்தம்மா முன்வந்தாங்க.

ஆனா, 'இத்தனை சீட் கொடுத்தால்தான் வருவேன்’னு சொல்லிட்டேன். 'இதெல்லாம் ஓவராத் தெரியலியா?’னு நீங்க நினைக்கலாம். ஆனால், எதற்காகவும், என் சுய மரியாதையை இழக்கிற பழக்கம் எனக்கு இல்லை. காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத் தேர்தலில் எல்லாரும் அந்தம்மாவைத் தவிக்கவிட்டுப் போனப்ப, என்னை மட்டும் தானே அழைச்சாங்க. 'எங்களுக்காகப் பிரசாரம் பண்ணுங்க’னு கேட்டாங்க. நானும் பண்ணிக் கொடுத்தேன்!''


சி.பி - அண்ணன் கலர் கலரா ரீல் விட ஆரம்பிச்சுட்டாரே? அம்மாவாவது சீட் தர்றேன்னு சொல்றது ஆவது.. ஆனானப்பட்ட வை கோவுக்கு அல்வா குடுத்தவங்களாச்சே?


6. ''முதிர்ந்த தலைவரான கருணாநிதி இத்தனை இக்கட்டுக்கு ஆளாகித் தவிப்பதை அவருடைய முன்னாள் தொண்டரா எப்படி தாங்கிக்கிறீங்க?''

''அவருக்கு இருப்பது இக்கட்டுன்னா, இலங்கையில திக்கெட்டுத் தவிச்சவங்க யாரு? செங்கோல் சாய, சிங்களவன் பாய, செங்குறுதி ஓட, ஈழத்திலே வீசியது ரத்த வாடை! சில்லறையைக் கரைக்க, சிந்தையை மயக்க, செம்மொழியைப் பாட, கோவை யிலே போட்டார்கள் மேடை. இதை எல்லாம் சகித்துக்கொள்ள தமிழன் ஆகி விட்டானா சோடை? அவர்கள் சாதித்து விட்டார்கள் காரியம்... சாக்குக்காகப் பேசக் கூடாது ஆரியம்... சக்தி இழந்து விட்டது வேதியம்... சத்தியமா இல்லை வீரியம்!''

சி.பி - இவருக்கு எங்கிருந்தது வந்தது இவ்வளவு தைரியம்?


'7. 'நேற்றைக்கு அரசியலுக்கு வந்த விஜயகாந்த், இன்று எதிர்க் கட்சித் தலைவராகவே ஆகிட்டார். ஆனால், நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்களே?''

''என்னோட கட்சி சின்னக் கட்சிதான்... சின்னம் இல்லாத கட்சிதான். ஆனாலும், யாரோட வளர்ச்சியையும் பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன். 234 தொகுதியிலயும் தனியா ஆள் நிறுத்தும் தைரியம் அவருக்கு எப்போ வந்துச்சோ, அப்பவே அவர் ஜெயிச்சிட்டார் சார். எனக்கு என்ன எழுதி இருக்கோ... அதுதான் நடக்கும்!''

சி.பி - இது வரைக்கும் ஆண்டவன் தமிழ்நாட்டை சோதிக்கலை, இனியும் சோதிக்க மாட்டார்னு நம்புவோம்


8. ''அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் சினிமாவை விடாமல் கெட்டியா பிடிச்சிருக்கீங்களே?''

'' 'ஒரு தலை ராகம்’ படத்தில் ஆரம்பிச்சு, இப்போ 'ஒரு தலைக் காதல்’ வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கேன். வெற்றி தோல்விங் கிறது வேற... ஆனா, இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்கிறேன்ல. என்னோட வந்த வங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்க? நான் ஒண்ணும் டோப்பா முடி வெக்கலை. இன்னிக்கும் தலை வணங்காமுடிதான். சிம்புவுக்குக்கூட நான் இன்னும் அப்பாவா நடிக்கலை. இன்னிக்கு வரைக்கும் பட்டம் போடாமல் நடிக்கிற கலைஞன் நான்!''

சி.பி - அண்ணே, தன்மான சுரங்கம்.. அடச்சே சிங்கம்னு போட்டுக்கறீங்களே? அது>?

9. ''அதுக்காக 'வீராசாமி’ மாதிரியான படம் எடுத்து மும்தாஜ்கூட டூயட் பாடி ஆடி மிரட்டுறது எல்லாம் நியாயம்தானா?''

''நான் ஒண்ணும் 'மன்மதன்’ இல்லை. 'வீராசாமி’யில் என் கேரக்டர் அப்படிப் பட்டது. 'மன்மதன்’ மாதிரி பத்துப் பதினஞ்சு பொண்ணுங்களைக் கூட்டி வெச்சு 'தத்தை தத்தை தத்தை’னு நான் கிளாமர் டான்ஸ் ஆடலை. சரி இல்லாமலா சைதை ராஜ்ல அந்தப் படம் 50 நாள் ஓடிச்சு? கமலா தியேட்டர்ல வீராசாமி யோட கலெக்ஷன் ரெக்கார்டு இருக்கு. 'வீராசாமி’-யில் நான்வெச்ச சிஸ்டர் சென்ட்டிமென்ட்டை, தாய்மார்கள் போய்ப் பார்க்கலை. ஆனா, எனக்கு அதில் நஷ்டம் இல்லை. ஏனா, ரஜினிக்கு நிகரா சம்பாரிச்சவன் நான்!''

சி.பி - அவருக்கு ஆன மாதிரியே உங்களுக்கு எதுவும் ஆக மாட்டேங்குதேங்கறதுதான் எங்களோட வருத்தம் எல்லாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyurOhcQWhYOkp1JCbvZmAquijH2128jazM_-Ntm0GuuyekVAJ9TqbqkLF5hpj5_UNwzB5J1oy8L1WfI4MYxa4PO9F0ZTPSzpRMUB3OGcQ5qHY_qrAFnHCfVqyy4HLxExjayqq6OTnm4M/s400/nayanthara-photos-september-07-40.jpg

10. ''எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். வரிசையில் உங்கள் மகனைக் கொண்டுவர நினைத்துத்தானே, சிம்புவுக்கு 'எஸ்.டி.ஆர்’-னு பேர்வெச்சீங்க?''

''அவர் ஒரு இடத்தை நோக்கிப் போவார்னு எதிர்பார்த்தேன். அவர் சரியாப் போய்ட்டு இருக்கார். சிம்புவின் 'வானம்’ படத்தின் 75-வது நாளுக்கு நான் தான் விளம்பரம் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். 'அன்று திரை வானத்திலே துருவ நட்சத்திரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றையத் திரை வானிலே வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்’னு எழுதிக் கொடுத்தேன். அந்த இடத்தை நோக்கிப் போகும் தகுதி அவருக்கு இருக்கு சார்!''

சி.பி - அடுத்த எம் ஜி ஆர் சிம்புவா? அப்போ அடுத்த சி எம் நயன் தாராவா? என்ன கொடுமை சார் இது?


11. ''ஆமா, 'வானம்’ படத்தில் அவரே உங்களை இமிடேட் பண்ணினாரே... அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?''

''மத்தவங்க மாதிரி நடிக்காத சிம்பு, இந்த அப்பன் மாதிரி நடிக்க ஆசைப்பட்டு நடிச்சது சார் அது! அதுல என்ன தப்பு?'' 

சி.பி - சே. வலிக்காத மாதிரியே நடிக்கறாரே? இவருக்கா நடிப்பு வர்லைன்னு சிலர் சொல்றாங்க?

12. ''சிம்பு விரல் சுத்துறதையே விட்டுட்டார்... ஆனா, நீங்க இன்னும் எதுகை மோனையை விட மாட்டேங்கிறீங்களே?''

''ஒருவனின் பலம் என்னவோ... அது ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவீனமாத் திட்டமிட்டுப் பரப்பப்படும். அதுக்குப் பின்வாங்கிட்டா, நமக்குத் தோல்விதான். என்னோட எதுகை மோனைக்கு எத்தனை பேர் அடிக்ட்னு உங்களுக்குத் தெரியுமா?

நான் பேசுற தமிழைப் பார்த்து, இந்த சந்தம் எங்கே இருந்து வந்ததுன்னு ஆச்சர் யமாக் கேட்கிறாங்க. தமிழ் அமுதத்தை உண்டு வளர்ந்தவன்தான் நான். எதையும் கற்பனை பண்ணிப் பேசுறது இல்லை. கட கடன்னு அதுவாக் கொட்டும். கண்ணை மூடினால், வருதே விருத்தம்... கண் கண்ட சிவனே உமக்கும் எமக்குமே இது பொருத்தம்!''

சி.பி -  இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்?. படுவாக்களா.. விட்டா  ரீலா விடுவாரு போல இருக்கே?

13, ''காளமேகத்தை விஞ்சுற அளவுக்கு வியக்கவைக்கிறீங்களே சார்?''

''வியக்கவைப்பவனும் அவனே... மயக்க வைப்பவனும் அவனே... இயக்கவைப்பவனும் அவனே... அனைத்தும் அவனே... அவன் எவனே... அது அந்த சிவனே!''

சி.பி - அப்பா சாமி. ரீல் அந்துபோச்சுடா.. ஆளை விடுங்கப்பா. மீ த எஸ்கேப்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAKOVPkKweYHc4EXY2YtlTsj9ZO-SLvYa063eHJl-iadmk8oBJDjnvgcOMXZLAwMI9V8m66bwjAmHDe2OzK4yAVt_NRM-6c3eS-966WE-g5-Pi399S9ztN7Hhen4P9xniy7sP9Xv5Scw/s1600/Nayanthara-hot-stills004.jpg
 நன்றி - விகடன்