Showing posts with label அனுபவம் கலைஞர் டி வி கொலை த்ரில்லர் SHORT FILM REVIEW. Show all posts
Showing posts with label அனுபவம் கலைஞர் டி வி கொலை த்ரில்லர் SHORT FILM REVIEW. Show all posts

Monday, May 30, 2011

நாளைய இயக்குநர் -கொலை கதைகள் - விமர்சனம்


photo
இப்பவெல்லாம் ஹாய் மதன் ஓப்பனிங்க்ல ஒரு கமெண்ட் குடுக்காம விட மாட்டார் போல.. த்ரில்லர் கதை, டெரர் கதை என்ன வித்தியாசம்?னு ஒரு கேள்வியை கேட்டதுக்கு ஏதோ குழப்பமான பதிலை குடுத்தார்.. அதாவது த்ரில்லர் கதைன்னா கொலை நடக்கும், பார்க்க த்ரில்லா இருக்கும், டெரர் கதைன்னா ஒரு கொலை கூட நடக்காம கதையை த்ரில்லிங்கா கொண்டு போவது..

தொகுப்பாளினி டிரஸ்ஸிங்க் சென்ஸ் பற்றி வாரா வாரம் ஒரு பேரா போடலைன்னா எனக்கு விமோச்சனமே கிடைக்காது போல,.,. டி வி காம்ப்பியரிங்க்லயே மிக மோசமான டிரஸ்ஸிங்க் சென்ஸ் இந்த பாப்பாவுக்கு த்தான்.. கிராமங்கள்ல பூ போட்ட பாவாடை கட்டுவாங்களே.. அதையே மேலே இருந்து கீழே வரை கிட்டத்தட்ட நைட்டி மாதிரி போட்டிருந்தார்.. கைல சம்பந்தமே இல்லாம பிளாஸ்டிக் வளையல் . இதுல வெள்ளை நிற ஹை ஹீல்ஸ் வேற.. ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுடும் போல..


1. கல்யாண் - அவள் 

வீட்ல மன நிலை பாதிக்கப்பட்ட மனைவியை விட்டுட்டு கணவன் வெளில போறான். வேலைக்காரி பால் காய்ச்சறா.. அப்போ அவளுக்கு ஒரு கால் வருது.. அடுப்பை ஆஃப் பண்ணாம கதவை வெளில லாக் பண்ணீட்டு வெளில வந்து கடலை  போடறா...அப்போ பால் பொங்கி அடுப்பு ஆஃப் ஆகிடுது.. ஆனா கேஸ் சிலிண்டர்ல இருந்து கேஸ் வந்துட்டு இருக்கு.. குழந்தை அப்போ லைட்டர் எடுத்து விளையாடிட்டு இருக்கு.. பற்ற வெச்சா டமால் தான்.. 

செம KNOT  தான். மனைவி ரூம் வேற .. பாப்பா இருகும் ரூம் வேற.. வெளில வர முடியாம டோர் லாக்.. உடனே மனைவி ஃபோன் பண்றா.. கணவன் ஃபோன் எங்கேஜ்டு.. 

இந்த சீன்ல மனைவியா வந்தவரோட நடிப்பு செம.. .. 

இப்போ கணவன் வந்ததும் ஒரு சஸ்பென்ஸ் உடை படுது..  

இந்த படத்துல  டாக்டர் கேரக்டர்  அவ்வளவா எடுபடலை.. அவருகு பாடி லேங்குவேஜ் பத்தாது.. மற்றபடி அனைவர் நடிப்பும் பர்ஃபெக்ட்.. இந்தபடத்துக்குத்தான் பரிசு குடுத்திருப்பாங்கன்னு நினைக்கறேன்...

இந்தப்படத்துக்கு கே பி சார் முதல் ஹாய் மதன் ,பிரதாப் வரை அனைஅவரின் பாராட்டும் கிடைத்தது.. 

2. ஸ்ரீ மணி கண்டன் - மறந்துட்டியா?

பொதுவா பத்திரிக்கைல வர்ற படைப்புகள் எடிட்டரின் டேஸ்ட்ட்க்கு தக்கபடி தான் இருக்கும்.. உதாரணத்துக்கு சில புக்ஸ்ல பிரசுரம் ஆகற ஜோக்ஸ் படிச்சா சிரிப்பு வராது.. எரிச்சல் தான் வரும்.. இதைப்போய் போட்டிருக்காங்களேன்னு..

நாம் அனுப்பும் பல நல்ல ஜொக்குகளை அவங்க சர்வ சாதாரணமா ரிஜக்ட் பண்ணி ரிட்டர்ன் பண்ணிடுவாங்க.. 

அந்த மாதிரி இந்த படம் நடுவர்கள்,கே பி சார் யாருக்கும் பிடிக்கலை.. ஆனா எனக்கு பிடிச்சுது..

ஒரு ஹாஸ்டல் ரூம்ல 2 பொண்ணுங்க.. அவங்களோட இன்னொரு க்ளாஸ்மேட் பொண்ணு இறந்துடறா... அவ செல் ஃபோன் நெம்பர்ல இருந்து எஸ் எம் எஸ் வருது.. செல் ஃபோன் கம்ப்பெனிக்கு ஃபோன் பண்ணூனா அது உபயோகத்தில் இல்லைன்னு பதில் வருது.. 

செல் ஃபோன்ல மெசேஜ் ரிசீவ் பண்ற ரிங்க் டோனா “ மறந்திட்டியா?” ஒரு ராகத்தோட வர்றப்ப 2 பேரும் பேய் அறைஞ்ச மாதிரி பயப்படறாங்க..

அந்த 2 பேர்ல யாரோ ஒருத்தி தான் இறந்த தோழியின் மரணத்துகு காரணம்..

ஒருத்தி தன்னோட ஆஃபீஸ் பிஸ்னெஸ் டார்கெட்க்காக தோழியின் பணத்தை மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டவ,, இன்னொருத்தி தோழியின் பாய் ஃபிரண்டையே மிஸ் யூஸ் பண்ண ட்ரை செஞ்சவ,, யார் கொலையாளீங்கறதை கண்டறியத்தான் போலீஸ் அப்படி ஒரு செட்டப் பண்ணுது.. 

கொலையாளி யார்னு தெரியுது.. இப்போ அந்த 2 பேர்ல கொலையாளியை போலீஸ் கைது பண்ணி கூட்டிட்டுப்போறப்ப எஸ் எம் எஸ் வருது....  அவ்வ்ளவ் தான் படம்//

எல்லோரோட கமெண்ட் என்னான்னா படம் குழப்பமா இருக்கு.. இன்னும் தெளீவா சொல்லி இருக்கலாம்.. ஓக்கே ..ஆனா சந்தேகமே இல்லாம அது ஒரு நல்ல படம் தான்..

இந்தப்படத்தை 45 நிமிடப்படமா எடுத்தா செமயா ஹிட் ஆகும்னு தோணுது.. 

பிரதாப் இந்தப்படத்தை பத்தி கமெண்ட் பண்ணும்போது.. அவர் வழக்கம்போல எனக்கு படம் பிடிக்கலை... ( நல்லா பிட் படம் போட்டா பிடிக்குதுன்னு சொல்வாரோ?#டவுட்டு) அப்டின்னு சொல்லிட்டு மதன் கிட்டே மதன் உங்களுக்கு? என்றார்.. 

உடனே ஹாய் மதன்  எனக்கே கன்ஃபியூஸ் தான் என்றார்.. அதென்னெ எனக்கே...?ஹா ஹா 





3. என் .வெண்ணிலா - சைக்கோ  ( பொண்ணுங்களுக்கு இனிஷியலா என் வந்தா ஸ்கூல்ல காலேஜ்ல செம கலாட்டாவா இருக்கும் ஆளாளுக்கு இனிஷியல் சொல்லி பேர் சொல்வாங்க.. கூப்பிடுவாங்க)

ஓப்பனிங்க் ஷாட்ல டி வி ல நியூஸ் .. தொடர் கொலைல கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஓட்டம். அந்த நபர் ஒரு வீட்டுக்குள்ள  வர்றான்.. ஒரு வயசான ஆள்.. மன நிலை பாதிக்கப்பட்ட அவரோட பொண்ணு.. 2 பேர் மட்டும்.. வந்தவன் அவர் கிட்டே மிரட்டி பணம் கேட்கறான். அவர் போய் ஏ டி எம் ல எடுத்துட்டு வர்றேன்னு போறார்... 

அப்போ தப்பி வந்த கைதி அந்த பொண்ணு கிட்டே தவறா நடக்கலாமான்னு யோசிக்கிறான். அப்போ தோட்டத்துல சில பிணங்களை பார்க்கிறான். அப்போ தான் அந்த பெரியவர் தான் கொலையாளி என்ற உண்மை தெர்யுது.. அவரோட மகளை பாலியல் பலாத்த்காரம் செய்த ஆட்களை அவர்கள் மாதிரி யாரா இருந்தாலும் போட்டுத்தள்ளிடறது அவர் வேலை..

தப்பி வந்த கைதி யையும் அவர் போட்றாரு..

படத்துல  யாருக்கும் டயலாக் டெலிவரி சரியா  வர்லை..  நடிப்பும் செயற்கை.. 

 இயக்குநரிடம் சில கேள்விகள்

1. திருடன் பணம் கேட்டப்ப வீட்ல பணம் இல்லைன்னு சொல்றதோட நிறுத்திக்குவாங்க யாரும்... யாராவது ஏ டி எம் ல போய் எடுத்துட்டு வந்து தர்றேம்ப்பாங்களா/?

2. கைதி தவறான எண்ணம் உள்ளவன்னு தெரிஞ்சே யாராவது தனிமைல மகளை விட்டுட்டு வெளில போவாங்களா? அட்லீஸ்ட்  ரூமையாவது பூட்டிட்டு போக மாட்டாங்களா?

3. ஒவ்வொரு கொலை நடந்த இடத்துலயும் எதுக்காக கொலையாளி எலுமிச்சை பழம் விட்டுட்டு போறான்கறதை கடைசி வரை சொல்லவே இல்லையே?


 டிஸ்கி - மேலே உள்ளவற்றில் முதல் படம் முத்துச்சரம் பிளாக்கில் சுட்டது...டேக்கன் பை ஜீவ்ஸ்