Saturday, January 14, 2023

MILI (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( சர்வைவல் த்ரில்லர்)@நெட் ஃபிளிகஸ்


நாயகி   நர்சிங்கில்  பிஎஸ் சி  கிராஜூவேட்  முடித்த  நர்ஸ். அப்பாவுடன்  வசிக்கிறாள். அப்பாவும் மகளும் நல்ல நண்பர்கள் போல பழகுகிறார்கள் , அக்கம் பக்கம் வீடுகளில்  ஒரு நர்சா ஒரு மனுஷியா  பல உதவிகள் செய்யற நாயகிக்கு அப்பாக்கு தெரியாம காதல், காதலன்  உண்டு . 

காதலன்  கூட  பைக்ல  ஒரு  உலா  போகும்போது  போலீசில்  மாட்டும் அவர்கள்  ஒரு  வாக்குவாதம்  ஏற்பட  போலீஸ்  ஆஃபீசருடன் ஒரு  பிணக்கு  உருவாகிறது

நாயகி  ஃபாரீன் போய் வேலை செய்ய ஒரு ட்ரெய்னிங் செண்ட்டரில் படிக்கிறார். க்ளாஸ் முடித்து விட்டு  மாலை  கே எஃப் சி எனும் கோழிப்பண்டக சாலையில்  பார்ட் டைம் சேல்ஸ் கேர்ளா வேலை பார்க்கிறார்


அந்த கடை ஓனர் ஒரு மார்க்கமான ஆள் . ஒரு நாள் வேலைக்குப்போன பெண்  திரும்ப வர்லை . அப்பா போலீஸ்ல புகார் தருகிறார் போலீஸ்க்கு காதலன் மேலும், கடை ஓனர் மேலும் டவுட் , ஆடியன்சான  நமக்கு  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  மேல  டவுட்

அந்தப்பொண்ணுக்கு என்ன ஆனது? எப்படி அந்த சிக்கலை எதிர்  கொண்டார்? ? உயிரோட மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதை திரையில் காண்க


நாயகியாக  ஸ்ரீதேவியின்  மகளான  ஜான்வி  கபூர்  அபாரமாக  நடித்துள்ளார். குளிரில்  உறைந்த  நிலையில்  அவர்  சந்திக்கும்  நெருக்கடிகள்  பரிதாபம்  ஏற்படுத்துகிறது

நாயகியின்  காதலனாக  சன்னி  கவுசல்  கச்சிதமான  நடிப்பு.  காதலியை  தான்  தான்  கடத்தி வைத்திருப்பதாக  போலீஸ்  சந்தேகப்படும்போது  துடிப்புடன்  நடித்திருகிறார்

நாயகியின்  அப்பாவாக   மனோஜ்  உருக்கமான  நடிப்பு  ஜாக்கி  ஷெராஃப்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்

2019ம் ஆண்டு  மலையாளத்தில் அன்னா  பென்  நடிப்பில்  வெளியான   ஹெலன்    படத்தின்  அஃபிசியல்  ரீமேக்  தான்  இது அந்தப்படத்தை  இயக்கிய  அதே  இயக்குநர்  மது குட்டி  சேவியர் தான்   இந்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார்

சுனில்  கார்த்திகேயனின்  ஒளிப்பதிவில்  ஐஸ்  ரூம்  காட்சிகள்  அபாரம் . மோனிஷா  ஆர்  பல்டாவா வின்  எடிட்டிங்கில் கச்சிதமாக  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 

 படத்தின்  முக்கிய  பிளஸ்  ஏர் ஆர்  ரஹ்மானின்  இசை ., 

சபாஷ் இயக்குநர்

1  இது ஒரு  உண்மை சம்பவம் , திரை சுவராஸ்யத்துக்காக எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் கொஞ்சம்


2   நாயகியை கண்ணியமா , எந்த அளவு அழகா காட்ட முடியுமோ அந்த அளவு  அழகா காட்டி இருப்பது


3  பெரிய ஹீரோ வின் கால்ஷீட்டோ , பிரமாண்டமான லொக்கேஷனோ , செட்டிங்கோ ஒரு திறமையான திரைக்கதை ஆசிரியருக்கு தேவை இல்லை என்பதை ச்மார்த்தியமாக நிரூபித்த விதம் 


4   கோடை கால மழையாய் , மழைக்கால அதிசய வெய்யிலாய் டென்சனை ஏற்றும் திகிலான திரைக்கதையில் ரிலாக்சாக ரசிக்க வைக்கும் ரம்மியமான காதல் காட்சிகள்  அழகு 

5  கதைப்படி நாயகி தனக்குத்தானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் காட்சிகள் கதைக்கு முக்கியம் என்பதாள் அவரை நர்சாக கேரக்டர் வடிவமைத்த சாமார்த்தியம்  ( நிஜக்கதையில் நாயகி நர்ஸ் அல்ல) 

லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1  அவ்ளோ பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல  சிசிடிவி கேமரா இல்லாம இருக்குமா? போலீஸ்  முதல்ல அதை செக் பண்ணாம விட்டது ஏன்? 

2    செக்யூரிட்டியிடம் நாயகியின்  ஃபோட்டோவைக்காட்டி போலீஸ் ஆரம்பத்திலேயே  விசாரிக்காதது ஏன்? 


3  நாயகியின் காணாமப்போன சம்பவத்துக்கு அவள் காதலன் தான் காரணம் எனில் அவன் எப்படி  ஸ்பாட்ல இருப்பான்? அவன் மேல எதுக்கு டவுட் வருது?


4  ராட்சச ஃபேனை இயங்க வைக்காமல் செய்ய ஆரம்பத்துலேயே நாயகி முயற்சி செஞ்சிருக்கலாம். சும்மா அட்டையை வெச்சு மூடுனாலோ மறைச்சாலோ காத்துக்கு அது தள்ளப்பட்டு விடும் என்பதை நாயகி யூகிக்காதது ஏன்? 


 சி.பி கமெண்ட் =  மிகக்குறைந்த நடிகர்கள் ., மிகக்குறைவான பட்ஜெட்டில் எப்படி ஒரு ஏ செண்ட்டர் ஃபிலிம் எடுப்பது மிக மிக கடினம்., அந்த கடினமான பணியை சர்வசாதாரணமாக  செய்த   இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் , தயாரிப்பாளர் போனிகபூர் இருவருக்கும் பூங்கொத்துகள் . பணிக்குச்செல்லும் பெண்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் 

உண்மையில்  நிகழ்ந்த  சம்பவம்  தான்  இது . சர்வைவல்  த்ரில்லரான  இந்தப்படம்  பெண்களுக்குப்பிடிக்கும்.  நெட்  ஃபிளிகஸ்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது . ரேட்டிங்  2.5 / 5 



Mili
Mili 2022 poster.jpg
Theatrical release poster
Directed byMathukutty Xavier
Screenplay byRitesh Shah
Based onHelen
by 
Produced byBoney Kapoor
StarringJanhvi Kapoor
Sunny Kaushal
Manoj Pahwa
CinematographySunil Karthikeyan
Edited byMonisha R. Baldawa
Music byA. R. Rahman
Production
companies
Bayview Projects
Zee Studios
Distributed byZee Studios[1]
Release date
  • 4 November 2022
Running time
127 minutes[2]
CountryIndia
LanguageHindi



0 comments: