Saturday, January 14, 2023

HIT: The Second Case (2022) ‧(தெலுங்கு ) சினிமா விமர்சனம்(க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


ஹிட்  த  ஃபர்ஸ்ட்  கேஸ்  படத்தின்  முதல்  பாகம்  2020ல்;  ரிலீஸ் ஆகி  ஹிட் ஆகியது. பின்  ஹிந்தியில் ரீமேக்  ஆகியது. காணாமல்  போன  19  வயதுப்பெண்ணைக்கண்டுபிடிக்கும்  கேஸ்  அது. இப்போ  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்தப்படம்  வேறு  கதை. முதல்  பாகம்  பார்க்காதவர்களுக்கும்  கதை  புரியும்., இரண்டும்  வேறு  வேறு  கதை

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்., மிகுந்த  புத்திக்கூர்மை  கொண்டவர், க்ரைம்  ஸ்பாட்டுக்குப்போனாலே  இவன் தான்  குற்றவாளி  என  உடனடியாக  கண்டுபிடித்து  விடுபவர்.இவர்  எப்படி  கேசை  அனாயசமாக  டீல்  செய்கிறார்  என  காண்பிப்பதற்காக  ஒரு  பத்து  நிமிட  தனிக்கதை  அல்லது சம்பவம்  காட்டப்படுகிறது. ஆக்சன் மசாலா  படங்களில்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஹீரோவுக்கு  ஓப்பனிங்  ஃபைட்  சீன்  வைப்பது  போல  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  நாயகனின்  அறிவைக்காட்ட  ஒரு  கேசை  துப்பு  துலக்குவதை  ஓப்பனிங்கில்  காட்டுவது  வ்ழக்கம்


ஒரு  இளம்பெண்  கொலை செய்யபட்டு  வீட்டின்  ஹாலில்  கிடத்தி  வைக்கப்பட்டு  இருக்கிறார். அவர்  தலை , 2 கைகள் , 2  கால்கள்  எல்லாம்  தனியாக  துண்டிக்கப்பட்டு  இருக்கின்றன்


 போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  வந்தால்  ஒரு  அதிர்ச்சி  செய்தி . தலை  ஒரு பெண்ணுடையது  கைகள்    வேறு  ஒரு  பெண்ணுடையது. கால்கள்  வேறு  பெண்ணுடையது. 


 பெண்ணின்  கழுத்தில்  கொலையாளியின் பல்  தடம்  பதிந்திருக்கிறது. அவன்  ஷூ  சைஸ் 9.  பெண்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படவில்லை 


மேற்கூறிய  தகவலை  வைத்து நாயகன்  கேசை  டீல்  செய்து அதே  போல்  சிங்கப்பல் , மற்றும்  கால்  ஷூ சைஸ் 9  உள்ள  ஒரு  ஆளை  சந்தேகப்பட்டு  பிடிக்கிறான். குற்றம்  நடந்த  டைமில்  தான்  வேறு  பெண்ணுடன்  வேறு  ஒரு  ஊரில்  இருந்தேன்  என  சொல்லும்  அவன்  எந்த  ஊர்? அந்தப்பெண்  யார் என்பதை  சொல்ல  மறுக்கிறான். கோர்ட்டிலும்  சொல்லவில்லை . அது  என்  பர்சனல்  விஷயம்  என்கிறான்


 நாயகனின்  மேலிடம்  இந்தக்கேசை  விரைந்து  முடிக்க  நினைக்கிறது . குற்றவாளியை  என்கவுண்ட்டரில்  போட்டு  விட  ஆயத்தம்  ஆகிறது. கடைசி  கட்டத்தில் நாயகனின்  தலையீட்டால்  என்கவுண்ட்டர்  நடக்கவில்லை . ஆனால்  லாக்கப்பில்  குற்றம்  சாட்டப்பட்ட  நபர்  தற்கொலை  செய்து  கொள்கிறான்


 அப்போ  உண்மையான  கொலையாளி  யார் ? அவன்  ஏன்  சீரியல்  கில்லர்  போல  குறிப்பிட்ட  சில  பெண்களைக்கொல்கிறான்? என்பதை  நாயகன்  களம்  இறங்கிக்கண்டு பிடிப்பதே  மீதி  திரைக்கதை   


நாயகனாக அதிவி சேஷ்.சாக்லெட் பாய்  மாதவன் , சுரேஷ் , மோகன்  பொன்ற  தோற்றம்.,  கச்சிதமான  நடிப்பு, ஆக்சன்  காட்சிகளில் சேசிங்  சீன்களில்  நல்ல  சுறுசுறுப்பு


நாயகியாக  மீனாட்சி  சவுத்ரி , அதிக  வேலை  இல்லை . வந்தவரை  ஓக்கே 


முதல்  பாகத்தை  விட  இந்தப்பட  கதை  அதிக  விறுவிறுப்பு . இயக்கி  இருப்பவர்  சைலேஷ் கொலானு . 2  மணி  நேரத்திக்  ட்ரிம்  செய்த  எடிட்டிங்  குட் , இசை  சுமார்  ரகம்  தான் , ஒளிப்பதிவு  கச்சிதம் 


பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது ரேட்டிங்  2.5 / 5 

0 comments: