Friday, January 06, 2023

DHOKHA ROUND D CORNER (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 Spoiler alert



நாயகன், நாயகி  இருவரும்  மணமான  தம்பதியினர்.வீட்டில்  பணிப்பெண்  முன்  இருவரும்  சண்டை  இட்டுக்கொள்கிறார்கள். நாயகி  நாயகனிடம்  விவாகரத்து  கேட்கிறாள். நாயகன்  சரியாக  பதில்  சொல்லவில்லை . ஆஃபீஸ்க்குக்கிளம்பி  போய் விடுகிறான். அங்கே டி வி ல  ஒரு  பிரேக்கிங்  நியூஸ்  ஓடிக்கொண்டு  இருக்கிறது. ஒரு  தீவிரவாதி  ஒரு  அபார்ட்மெண்ட்டுக்குள்  புகுந்து  ஒரு  பெண்ணை  பிணையக்கைதியாகப்பிடித்து  வைத்துக்கொண்டு  மிரட்டுகிறான்., இவன்  மரண  தண்டனை  பெற்று  சிறையில் அடைக்கப்பட்டு  பின் தப்பியவன், 13  பள்ளிக்குழந்தைகளைக்கொன்றதாக  இவன்  மீது  வழக்கு 


இந்த  செய்தி  கேட்டதும்  நாயகனுக்கு  அதிர்ச்சி  , தீவிரவாதி  மிரட்டிக்கொண்டிருப்பது  நாயகியைத்தான். உடனே  நாயகன்  விரைந்து  வீட்டுக்குப்போகிறான், அங்கே  போலீஸ்  ஆஃபீசரிடம் “ என்  மனைவியை  காப்பாற்ற  வேண்டும்  என்னை  உள்ளே  விடுங்கள்  என்கிறான்.போலீஸ்  ஆஃபீசர்   விடவில்லை. அப்போது  நாயகன் ஒரு  அதிர்ச்சி  தகவலை சொல்கிறான். நாயகி    குறிப்பிட்ட  நேரத்தில்  மனநலனுக்கான  மாத்திரை  சாப்பிட வேண்டும், அப்படி  சாப்பிட  வில்லை  எனில்  அவள்  ஸ்பிலிட்  பர்சனாலிட்டி  மூலம்  வேறு  ஒரு  ஆளாக  மாறி  விடுவாள்:, அவளால்  தீவிரவாதிக்கு  ஆபத்து  என்கிறான்


இங்கே  உள்ளே  வீட்டில்  நாயகி  தீவிர  வாதியிடம்  ஒரு  கதை  சொல்கிறாள். நாயகனுக்கும் , சைக்யாட்ரிஸ்ட்  லேடி  டாக்டருக்கும்  தொடர்பு  இருந்தது  தனக்குத்தெரிய  வந்ததால்  தன்னை  பைத்தியம்  என  பட்டம்  கட்டி  தன்  சொத்துக்களை  எல்லாம்  அபேஸ்  பண்ண    இருவரும்  திட்டம்  இடுகிறார்கள் டைவர்ஸ்  கொடுத்து  விட்டால்  என்  சொத்துக்கள்  என்   கணவனுக்குக்கிடைக்காது  என்பதால்  தர  மறுக்கிறார்.  என்னை  நீயே  எங்காவது  கொண்டு  போய்  விடு  என்கிறாள் 


இதற்குப்பின் இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 


நாயகனாக  மாதவன். சாக்லெட்  பாய்  ஆகவே  பார்த்த  நமக்கு  இவரை  நெக்டிவ்  ரோலில்  பார்க்க  முதலில்  என்னவோ  போல்  இருந்தாலும்  திரைக்கதையின் கட்டமைப்பு  நம்மை  பிறகு  அதற்குப்பழக்கி  விடுகிறது 


நாயகியாக  குசாலி  குமார் .  மாத்திரை  சாப்பிட்டால்  ஒரு  மாதிரி  அதன்  வீரியம்  குறைந்த  பின்  வேறு  மாதிரி  நடந்துகொள்ளும்  கேரக்டர் . இவர்  நல்லவரா? கெட்டவரா? என  நாயகன்   பட  டயலாக்  போல  நாம்  யோசிக்க  வேண்டியதாக  இருக்கிறது 


தீவிரவாதியாக  அபர்சக்தி  குராணா. எந்த  தப்புமே  செய்யாமல்  போலீசால்  தீவிரவாதி  என  ஃப்ரேம்  செய்யப்பட்டு  பின்  அதிலிருந்து  தப்பிக்க  அவர்  செய்யும்  செயல்கள்    பரிதாபத்தை  ஏற்படுத்துகிறது 


போலீஸ்  ஆஃபீசராக  தர்சன்  குமார். கச்சிதமான  வில்லன்  நடிப்பு , மிரட்டி  இருக்கிறார், சைக்யாட்ரிஸ்ட்  லேடி  டாக்டராக  வாசுகி  கொடுத்த  பாத்திரத்தை  கச்சிதமாக  செய்திருக்கிறார்


  ஒரு  கொலை  நடப்பதும்  அதை  யார்  செய்தார்கள்  என்பதும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  வைத்ததோடு  நாம்  எதிர்பாராத  நான்கு  முனை  குழப்பங்களுக்கு  தீர்வு  சொல்லும்போது  இயக்குநரைப்பாராட்டத்தோன்றுகிறது 


அமித்ராயின்  ஒளிப்பதிவு  கச்சிதம்   அமர்  தான்  இசை , பிஜிஎம்  மில்  பேர்  சொல்கிறார்  2  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  எடிட்  செய்திருக்கிறார்  தர்மேந்திர சர்மா


பார்க்கத்தகுந்த  த்ரில்லர்  கதையான  இப்படம் நெட் ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 



ரசித்த  வசனங்கள்


1  இந்த  உலகத்தில்  உள்ள  எந்த  ஒரு  ஆணுக்கும்  தெரியாத  விஷயம்  என்ன  தெரியுமா? ஒரு  பெண்ணின்  தேவை  என்ன? எனும்  விஷயம் தான் 


2 மரண  தண்டனைக்கைதியிடம்  உன்  கடைசி  ஆசை  என்ன?னு  கேட்டா  இன்னும்  நான்  வாழனும்னு தான்  சொல்வான்



லாஜிக்  மிஸ்டேக்ஸ்



1   நாயகி  குடிக்கும்  காபியில்  2  மாத்திரைகளை  மட்டும்  தான்  போடுகிறார். அது  கரைய  டைமே  இல்லை . அப்போ  நாயகி  காபி  குடித்து  முடித்ததும்  அதில்  மாத்திரை  இருப்பதை  பார்த்திருப்பாரே?


2   தீவிரவாதி   மிரட்டும் துப்பாக்கியில்  புல்லட்  இல்லை  என்று  சொன்னதும்  டக்னு  போலீஸ்  அவனை  சுட்டிருக்க  வேண்டாமா? அவன்  கண்னாடியை உடைத்து   ஒரு  பீசை  எடுத்து  கீழே  விழுந்து  கிடக்கும்  நாயகியை  எழ  வைத்து  கழுத்தில்  கண்ணாடியை     வைத்து  மிரட்டும்  வரை  ஏன்  வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இருக்கிறது ?


3  பணயக்கைதியான  நாயகி  வி ஐ பி கிடையாது . பின்  ஏன்  போலீஸ் , மேலிடம்  அனைத்தும்  தயங்குகின்றன ?


4  கோடிக்கணக்கான  சொத்துக்கு  நாயகி  அதிபதி. நாயகியைக்கூட்டிட்டுப்போக  தயார்  ஆகும்  தீவிரவாதி  நாயகனிடம்  பிசாத்து  பணம்  50  லட்சம்  ரூபாய்  கேட்பது  எதற்கு? நாயகியிடமே  பணம்  பெறலாமே?

5  தீவிரவாதி  ஜன்னல்  வழியா  16  தடவை   எட்டிப்பார்த்தப்ப  சுடாத  போலீஸ்  வீட்டை  விட்டு  வெளியே  வந்தப்ப  சுடாத  போலீஸ்  மீண்டும்  அவன்  உள்ளே  போய்  ஜன்னலை  சாத்திய  பின் 75  போலீசும்    ஜன்னல்  கதவு  நோக்கி துப்பாக்கியைக்குறி  பார்த்து  வேஸ்ட்டா  எதுக்கு  போஸ்  கொடுக்கறாங்க ?

6 க்ளைமாக்சில்  நாயகனும்  வில்லனும்  துப்பாக்கியைப்பிடுங்குவதில்  தள்ளுமுள்ளு  நடக்கும்போது  டக்னு  நாயகி  வெளியே  ஓடி  இருக்கலாம், ஏன்  வேடிக்கை  பார்த்துட்டு  நிக்குது? நாயகன், வில்லன்  யார்  எக்கேடு  கெட்டா  நாயகிக்கு  கவலை  இல்லை ., வேற  ஆள்  இருக்கு . ஆனா  ஏன்  அங்கேயே  நின்னு  பார்த்துட்டே  இருக்கு ?


7   போலீஸ்  வேனில்  தீவிரவாதியை  ஏற்றி  போலீஸ்  கான்ஸ்டபிள்கள்  பாதுகாப்புக்கு  கூட  ஏறும்போது  போலீஸ்  ஆஃபீசர்  நீங்க  எல்லாரும்  முன்னால  ஏறுங்க , நான்  மட்டும்  அவன்  கூட இருக்கேன்னு  ஒரு  பிளான்  போடறாரு. விசாரணை  நடக்கும்போது  அவர்  ஏன்  அப்ப்டி  செய்தார்?னு கேட்பாங்களே? என்ன  சொல்லி  சமாளிப்பார்?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் = நம்பவே  முடியாத  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  சுவராஸ்யமான  த்ரில்ல்ர்  கதைதான்  , பார்க்கலாம், ரேட்டிங் 2.5 / 5 



0 comments: