Monday, January 09, 2023

ARIYIPPU (2022)மலையாளம் - DECLARATION -திரை விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


எழுத்தாளர்  பாலகுமாரன்  தான் எழுதிய  இனிது  இனிது  காதல்  இனிது  கட்டுரைத்தொகுப்பில்  குறிப்பிட்ட  ஒரு  விஷயம்  மிகவும்  பிரபலம்  ஆனது, காதல்  என்பது  மதித்தல்  பரஸ்பரம்  எந்த  வித  எதிர்பார்ப்புகளும்  இன்றி. மேலும்  காதல்  என்பது  நம்பிக்கை .தான்  நேசிக்கும்  ஒருவர்  மீது  வைக்கும்  நம்பிக்கை தான்  காதல் . அந்த  நம்பிக்கை  தகர்ந்து  போகும்போது  தம்பதியின்  மனநிலை  என்ன  ஆகும்? என்பதை  விவரிப்பதே  இந்தப்படத்தின்  கதை

ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகன் ,நாயகி  இருவரும்  திருமணம்  ஆன  தம்பதி. கேரளாவில்  இருந்து  நொய்டா  வந்து  ஒரு  கம்பெனியில்  பணி  செய்கிறார்கள்.  ஃபாரீனில்  ஏதாவது  கம்பெனியில்  பணி  செய்ய  வேண்டும்  என்பதே  அவர்கள்  விருப்பம்,நொய்டாவில்  பணி  செய்தால்  ஃபாரீன்  போவது  சுலபம்  என்பதால்  அவர்கள்  நொய்டாவில்  உள்ள  கிளவுஸ்  தயாரிக்கும்  கம்பெனியில்  பணி  புரிகிறார்கள் 


அந்த  கம்பெனியில்  உள்ளே  செல் ஃபோன்  அனுமதி  இல்லை . இருந்தாலும்   தன்  மனைவி  பணி  செய்வதை  வீடியோ  எடுத்து  வைத்துக்கொள்கிறான்  நாயகன்,  ஃபாரீன்  போக  இருக்கும்  கம்பெனியில்  தன்  மனைவியின்  பணி  சாதுர்யம்  பற்றி  பறை  சாற்ற  அதை ஒரு  வீடியோ  ஆதாரமாக  வைத்துக்கொள்வதே  அவன்  திட்டம் 


ஆனால்  அவன்  செல் ஃபோனுக்கு  ஒரு  வீடியோ  க்ளிப்  வருகிறது. அது  கம்பெனியில்  உள்ள  அனைவர்  செல்லுக்கும்  பரவுகிறது . அதில் நாயகன்  வீடியோ எடுத்த  நாயகியின்  க்ளிப்பிங்கோடு  கூடுதலாக  எடிட்  செய்யப்பட்ட  ஒரு  தவறான  வீடியோ க்ளிப்பும்  சேர்ந்து  இருக்கிறது 


நாயகன்  அதை  போலீசில்  புகார்  செய்யலாம்  என  சொல்லும்போது  நாயகி  வேண்டாம்  என  மறுக்கிறாள். நான்  தப்பு  செய்யலை  என  உங்களுக்கும்  எனக்கும்  தெரியும்,  பின் எதற்காக  யாரிடம்  நிரூபிக்க  புகார்  அளிக்க  வேண்டும் ?  தேவை  இல்லாத  பிரச்சனை, என்கிறாள் 


 ஆனால்  நாயகன்  கேட்கவில்லை . போலீசில் புகார்  அளிக்கிறான். இதற்குப்பின் நடக்கும்  எதிர்பாராத  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகனாக குஞ்சாக்கா  போபன், ஒரு சராசரி  ஆணின்  மனதை  பிரதிபலிக்கும்  கேரக்டர். வீடியோ  க்ளிப்பில்  உள்ள  பெண்  தன்  மனைவிதானா? என  சந்தேகம்  கொண்டு  அதை  ஜூம்  செய்து  பெண்ணின்  கண்களை  உற்று  நோக்குவது  அப்ராமான  நடிப்பு, கோபித்துச்செல்லும்  மனைவியை  சமாதானப்படுத்த  அவர்  பின்னாலயே  போய்  கெஞ்சும்போது ஒரு  இயல்பான  கணவனைக்கண்  முன்  நிறுத்துகிறார். வீடியோ  கிளிப்பில்  உள்ள  ஆணின்  கையில்  உள்ள  பிரேஸ்லெட்டை  அடையாளம்  வைத்து  ஆளைக்கண்டுபிடிக்க  அவர்  எடுக்கும்  முயற்சிகள்  சபாஷ்  போட  வைக்கிறது 


 நாயகியாக திவ்யா  பிரபா . அவரது  கண்களே  முக்கால்  சதவீத  பங்களிப்பை  செய்து  விடுகிறது. போதாததற்கு  அவரது  அபாரமான  உடல்மொழி தனித்து  நிற்கிறது 


கதைக்களம்  கிளவுஸ்  தயாரிக்கும்  கம்பெனி  என்பதால் நாம்  பார்க்காத  சில  சுவராஸ்யமான  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன, கதை  நடக்கும்  கால கட்டம்  கொரோனா  வைரஸ்  வந்த  புதிதான  2020  ஏப்ரல்  மாதம். அதனால்  அனைவரும்  மாஸ்க்  அணிந்தே  வருகிறார்கள் . க்ளிப்பிங்கில்  உள்ள  பெண்  யார்? என  அடையாளம்  அறியாமல்  போக  அந்த  மாஸ்க்கும்  ஒரு  காரணம்  என்பதை  கச்சிதமாக  திரைக்கதையில்  இணைத்திருக்கிறார்கள் 


கம்பெனி  மேனேஜர்  செய்யும்  மோசடிகள் , கம்பெனி  ஓனரின்  தம்பி  செய்யும்  சில  தவறுக்ள் , போலீஸ்காரர்களின்  அராஜகம் , கார்ப்பரேட் கம்பெனியின்  சுயநலம்  என  திரைக்கதை  பல  விஷயங்களைப்பேசினாலும்  தம்பதிக்க்குள்  ஏற்படும்  பிணக்கு , சந்தேகம்  கொள்வதுதான்  திரைக்கதையின்  முதுகெலும்பு 

2011ல்  ரிலீஸ்  ஆன  ஈரானியப்படமான  எ  செப்பரேஷன்   +  2016ல் ரிலீஸ்  ஆன த  சேல்ஸ்மேன்  என்ற  ஈரானியப்படம்  இந்த  இரண்டு  படங்களின்  தாக்கத்தில்தான்  இந்த  மலையாளப்படத்தின்  திரைக்கதை  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  இரண்டு  ஈரானியப்படங்களின்  இயக்குநரும் ஒருவரே! அஷ்கர்  பர்கதி 


சனு  வர்கீஷின்  ஒளிப்பதிவு  உயிரோட்டமாக  காட்சிகளை  நம்  கண்  முன்  நிறுத்துகிறது .சுஷின் ஷ்யாம்  இசை  பல  இடங்களில்  அடக்கி  வாசித்து  இருக்கிறது


 ஒன்றே  முக்கால்  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  எடிட்  செய்து  இயக்கி  இருப்பவர்  மகேஷ்  நாராயணன், காட்சிகள்  மிக  மெதுவாகத்தான்  நகர்கிறது  என்பதால்  பொறுமை  தேவை .


டூயட் , காமெடி  டிராக்  எல்லாம்  இல்லாமல்  ஒரு  உயிரோட்டமான  படம் 



ரசித்த  வசனங்கள்


1   தவறே  செய்யாத நமக்கு  ஏன்  குற்ற  உணர்வு ?




லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  ஒரு  வேன்  டிரைவர்  வேனில்  சரக்கு  லோடிங்    அப்லோடிங்  டவுன்லோடிங்  செய்ய  மாட்டார், செய்ய  வேண்டிய  அவசியம்  இல்லை .  அவராப்பார்த்து  செஞ்சா  ஓக்கே ,  நாம  செய்யும்படி  அவரைக்கட்டாயப்படுத்த  முடியாது , கம்யூனிஸ்ட்  ஆட்சி  நடக்கும்  கேரளாவில்  நாயகன்  ஒரு  டிரைவரிடம்  சரக்கை  இறக்க  ஏற்ற  உதவும்படி  அதிகாரம்   செய்யும்  காட்சி  அதைத்தொடர்ந்து  நடக்கும்  ரகளை  நம்பும்படி  இல்லை 


2  க்ளவுஸ்  உற்பத்தி  செய்யும்  கம்பெனியில்  தொழிலாளர்கள்  நகம்  நீளமாக  வளர்த்தக்கூடாது ,  மோதிரம்  அணியக்கூடாது, இந்த  விதி  வலியுறுத்தப்பட்டும்  நாயகி  மோதிரத்தைக்கழட்ட  முடியவில்லை  என  கூறுவது  ஏற்கும்படி  இல்லை 


3  கம்பெனில செல்ஃபோன்  கொண்டு  போக  அனுமதி  இல்லை.,  சில  காரணங்களுக்காக  விதியை மீறி  செல் ஃபோன்  கொண்டு போகும்  நாயகி  அதை  சைலண்ட்  மோடில்  வைக்க  மாட்டாரா? திடீர்  என  கால்  வந்தால்  ரிங்  டோன்  காட்டிக்குடுக்கும்  என  தெரியாதா? 


4    கம்பெனியில்  நடந்த  ஒரு  சீட்டிங்கை    செல் ஃபோனில்  நாயகியை  படமாக்கச்சொல்லும்  அந்த  லேடி  அந்த  க்ளிப்பிங்கை  தன்  செல்  ஃபோனுக்கு  ஏன்  அனுப்பச்சொல்லவில்லை ? நாயகி ஃபோனிலேயே  இருப்பதை  விட  அவர்  ஃபோனிலும்  இருந்தால்  கூடுதல்  பாதுகாப்பு  ஆயிற்றே?


5  நாயகியின்  தோழி  நாயகியின்  அருகே  படுத்துத்தூங்கிக்கொண்டு  இருக்கும்போது  நாயகன்  கூடலுக்கு  முற்படுவது  அபத்தம் , குழந்தை  தூங்கிட்டு இருந்தாலே  தயங்குவதுதான்  யதார்த்தம், நாயகி  வெளில  ஹாலுக்குப்போகலாம்  என  அழைத்தும்  நாயகன்  அதை  கேட்காதது  ஏனோ? 


6  வைரல்  ஆன  வீடியோ  க்ளிப்பிங்கில்  பிரேஸ்லெட்  காட்டப்பட்ட  பின்பும்  சம்பந்தப்பட்ட  நபர்  அந்த  பிரேஸ்லெட்டை  கழட்டாமல்  அணிந்திருப்பது  ஏனோ? 


7   வீடியோ  க்ளிப்பிங்கில்  இருந்த  பெண்   கொலை  செய்யப்பட்டாளா? என்ற  நாயகியின்  கேள்விக்கு  பதிலே  கிடைக்கவில்லை . முழுமையான  க்ளைமாக்ஸாக  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஈரானியப்படங்கள்  போல  மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை , பெண்களுக்குப்பிடிக்கும் , ரேட்டிங்  3 / 5 ,  தி

யேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்  முன்பே  பல  விருதுகளைக்குவித்த  படம் 

Ariyippu
Ariyippu film poster.jpg
Release poster
Directed byMahesh Narayanan
Written byMahesh Narayanan
Produced by
Starring
CinematographySanu Varghese
Edited by
Music bySushin Shyam
Production
companies
  • Shebin Backer Productions
  • Kunchacko Boban Productions
  • Moving Narratives
Release dates
Running time
107 minutes
CountryIndia
LanguagesMalayalam
Hindi

0 comments: