Monday, January 16, 2023

உடன்பால் (2022) தமிழ் - திரை விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ ஆஹா தமிழ் ஓடிடி


2022 ஆம்  ஆண்டின்  இறுதியில் (30/12/2022)  வெளியாகி  அந்த  ஆண்டின்  கடைசிப்படம்  என்ற  பெருமையைப்பெறும்  இந்தப்படம்  ஆரோக்யமான  திரைக்கதையுடன்  அனைவரும்  ரசிக்கும்படி  பிளாக்  ஹ்யூமர்  காமெடி  மெலோ டிராமாவாக  ஆஹா தமிழ்  ஓ டி டி தளத்தில்  வெளியாகி  உள்ளது . வெளியான  சில  நாட்களிலேயே  1 கோடி  பார்வையாளர்களைப்பெற்ற  பெருமைக்குரிய  படம்  இது

நாயகன்  தன்  சொந்த  வீட்டில்  வசித்து வருபவர் , அவருக்கு  இரு  மகன்கள் , ஒரு மகள் .  மகனுக்கு  திருமணம்  ஆகி  ஒரு  மகன் , ஒரு  மகள் உண்டு . அவருக்கு  தொழிலில்  சில  நட்டங்கள். அதனால்  பணத்தேவை  ஏற்படுகிறது அம்மா  இறந்த  தினத்தன்று  சாமி  கும்பிட  வீட்டுக்கு  வரும்போது  அண்ணன், தங்கை  இருவரும்    அப்பாவிடம்  இந்த  வீட்டை  விற்று  விடலாம்  என  வற்புறுத்துகின்றனர் . 


ஆனால்  நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை.நம்மிடம்  இருப்பதே அந்த  ஒரு  வீடுதான். அதையும்  விற்று  விட்டால்  எங்கே  வசிப்பது  என  மறுத்து  விடுகிறார்


 அப்பா   பணி  செய்யும்  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  இடிந்து  விழுந்ததாக  தகவல்  வெளியாகிறது .  டி வியில்  செய்தி  வெளியிடுகிறார்கள் . விபத்தில்  பலி  ஆனவர்களுக்கு  அரசு  தலா  ரூ 20 லட்சம் இழப்பீடுத்தொகை  தருவதாக  சொல்கிறார்கள்  ஆரம்பத்தில்  அப்பாவுக்கு  என்ன  ஆச்சோ?  என  பதறும்  வாரிசுகள்  ஒரு  கட்டத்தில்  அப்பா இறந்திருந்தால்  அந்த  20  லட்சத்தை  யார் யார்  எவ்வளவு  பங்கு  போட்டுக்கொள்ளலாம்  என  விவாதிக்கிறார்கள்


ஆனால்  ஒரு  அதிர்ச்சி  திருப்பம் , அப்பா  உயிருடன்  திரும்பி  வந்து  விடுகிறார். இதனால்  வாரிசுகளுக்கு   வருத்தம்,  ஆனால்  வீட்டுக்கு  வந்தவர்  மாரடைப்பால்  மரணம்  அடைகிறார். 


இந்த  இறந்து போன  அப்பாவின்  டெட்  பாடியை  அந்த  இடிந்து  விழுந்த  கட்டிடத்தில்  கொண்டு போய்  வைத்து  விட்டால்  இழப்பீடு  பணம்  கிடைக்குமே? என  திட்டம்  போடுகிறார்கள் , அதற்காக  அவர்கள்  படும்  பாடுதான்  மீதி  திரைக்கதை ., க்ளைமாக்ஸில்  ஒரு  எதிர்பாராத  ட்விஸ்ட்டும்  உண்டு 


சீரியசான  கதையைக்காமெடியாகக்கொண்டு  போவது  கத்தி  முனையில்    நடப்பது  போல  , அந்த  வித்தையைக்கச்சிதமாக  செய்திருகிறார்  இயக்குநர்  கார்த்திக்  சீனிவாசன்


 நாயகனாக  நகைச்சுவை  நடிகர்  சார்லி  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார். அவர்  போக  மகளாக  வரும்  காயத்ரி , மகனாக  வரும் லிங்கா , மருமகளாக  வரும் அபர்ணதி  அனைவருமே  சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் . காமெடி  டிராக்கிற்காக  வரும்  விவேக்  பிரசன்னாவும்  சிரிக்க  வைக்கிறார்.

பெரும்பாலான  காட்சிகள் ஒரு  வீட்டுக்குள்ளேயே  நடப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை . அதை  கச்சிதமாகச்செய்திருக்கிறர்  மதன்  கிறிஸ்டோபர். சக்தி  பாலாஜியி  பின்னணி  இசை  கச்சிதம் , பிஜிஎம்மில்  கலகலப்பு  கூடுதல் 


இன்னைக்கு  செத்தா  நாளைக்கு  பால்  என்பது  பழமொழி , இன்னைக்கு  செத்தா  இன்னைக்கே  கை  மேல்  பலன் , உடன்  பால்  என்பது  புது  மொழி 


ரேட்டிங் 3/5 

0 comments: