Wednesday, September 28, 2022

பலே பாண்டியா (1962) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா)

 திரிசூலம் , தெய்வ  மகன், சந்திப்பு  என  பல  பட்ங்களில்  சிவாஜி  3  வேடங்களில்  நடித்திருந்தாலும்  முதன்முதலாக  3  மாறுபட்ட  வேடங்களில்  நடித்தது  இதில்  தான். ஹீரோ  சிவாஜி   3  வேடங்கள் , வில்லன்  எம் ஆர்  ராதா  2  வேடங்கள்  . இப்படி  ஒரு காம்போ  இதுக்குப்பின்  எந்தத்தமிழ்ப்படத்திலும்  அமையலை . இந்த காமெடி பட்ம்  செம   ஹிட்  ஆச்சு., பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்டு .   கமலின்  மைக்கேல்  மதனகாமராஜன்  ஆள்  மாறாட்டக்காமெடி , பிரபுவின்  சின்ன  வாத்தியார்  ஹீரோ  கெட்டப்  எல்லாம் இங்கே  இருந்து  உருவுனதுதான் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  தற்கொலை  முயற்சியில்  இறங்கறார். காரணம்  வேலை  வாய்ப்பின்மை , அவரை  வில்லன்  காப்பாத்தி  அவர்  வீட்டுக்குக்கூட்டிட்டு  வந்து  சாப்பாடு  எல்லாம்  போட்டு  அங்கேயே  தங்க  வைக்கிறார்

 வில்லன்  கிட்டே  ஹீரோ  மாதிரியே  உருவத்தோற்றம்  உள்ள ஆள்  இருக்கான். அதனால  வில்லன்  பிளான்  என்னான்னா   தன்  பணியாள்  பேரில்  இன்சூரன்ஸ்  பாலிசி  எடுத்து   பின்  ஹீரோவை  தற்கொலை செய்ய  விட்டு  பின்  அந்த  இன்சூரன்ஸ்  பணத்தை  ஆட்டையைப்போட்டுடலாம்னு  ஐடியா 

அப்போ  ஹீரோயின்  இண்ட்ரோ. அவர்  கிட்டே  இருந்த  பர்சை  திருடன்  பறிச்சுட்டு  ஓட  ஹீரோ  அதைக்கைப்பற்றித்தர்றார். நிஜ  வாழ்க்கைல  5  ரூபா  அல்லது  10  ரூபா  டிப்ஸ்  தருவாங்க  இந்த  உதவிக்கு , ஆனா  சினிமால  உடனே  இருவருக்கும்  லவ் 

 ஒரு  எஸ்டேட்  ஓனரோட  பொண்ணு  மனநிலை  பாதிக்கபப்ட்டு  இருக்கு  அதை  ஹீரோ  காப்பாத்தறார். அந்த  நன்றிக்கடனுக்காக  ஹீரோவை  தன்  வளர்ப்பு  மகனாக  அறிவிக்கிறார்  ஓனர்

  வில்லன்  ஒரு  சூழ்ச்சி  செஞ்சு  தன்  அடியாள்  செஞ்ச  தப்புக்கு  ஹீரோவை  ஜெயிலுக்குப்போவ்து  போல  செய்கிறார்

 ஹீரோக்கு  எஸ்டேட்  சொத்து  எல்லாம்  வருதுனு  தெரிஞ்சதும்  ஹீரோவோட  அண்ணன்  சம்சாரம்  அண்ணி  ஒரு  சதித்திட்டம்  தீட்றா

 அதன்படி  தன்  கணவர்  வெச்சிருக்கும்  லேப்  தீப்பற்றி    எரிந்ததாகவும் அதுல  கணவர்  இறந்ததாகவும்  நாடகம்  ஆடி  ஹீரோ  இடத்துக்கு  கணவனை  அனுப்பி  ஆள்  மாறாட்டம்  பண்ணலாம்னு  பிளான் 

இப்போ வில்லி  அண்ணியின்  பிளான்    ஜெயிச்சுதா? வில்லன்  பிளான்   ஜெயிச்சுதா?  ஹீரோ  ஜெயிச்சாரா? 

 இதை  எல்லாம்  ஜாலியான  திரைக்கதையில்  கண்டு  மகிழவும் 

 
சிவாஜி  ஆக்டிங்  பற்றி  சொல்லவும்  வேண்டுமா?  3  வேடங்கள்  ஒரே  கெட்டப்  ஒரே டிரஸ்  ஆனா  க்ளைமாக்ஸில்  மாறுபட்ட  3  விதமான  நடிப்பு  தரனும்,  பாடி லேங்க்வேஜில்  கலக்கி  இருக்கார் 

ஒரு  ஜோடி  சந்தியா  ( ஜெ வின்  அம்மா )   இன்னொரு ஜோடி  தேவிகா 

எம் ஆர்  ராதாவின்  இரு  மாறுபட்ட  கெட்டப்  அண்ட்  உடல்  மொழி  எல்லாம்  பட்டாசா  இருக்கும் 

  இதில்  வரும்  மாமா  -  மாப்ளே  பாட்டு  பட்டி தொட்டி  எல்லாம்  ஹிட்டு   ஆர்கெஸ்ட்ரா  வில்  நிச்சயம்  பாடியே  தீருவார்கள் 

பி  ஆர்  பந்துலு  திரைக்கதை  இயக்கம்  கலக்கல்  ரகம் 

 ரசித்த  வசனங்கள் 

1   அரசியலுக்கும்  , எனக்கும் ராசி  இல்லை , இனி  அரசியல்  பக்கமே  எட்டிப்பார்க்க  மாட்டேன் , தேர்தல்ல தான்  ஜெயிக்க  முடியலையே ? 

2 குறிக்கோள்  இல்லாமல்   கோட்டு  வாய்  கூட  விடமாட்டேன் 

3   நாம்  நினைப்பதெல்லாம்  நடக்கா  விட்டால்  , நாம்   நினைக்காதது  எதிர்பாராதது  கூட   நடக்கலாம்  இல்லையா? 


4  தங்கள்  இதயம்  என்ன  கல்லா?  வாயில்  இருந்து  வருவது  என்ன  சொல்லா?    இந்த  மருமகனோடு  மல்லா ?  (  மல்லுக்கட்டுதல் )

5  எத்தனை  ஜென்மம்  எடுத்தாலும்  அவர்  தான்  என்  கணவர் 

  ஏம்மா, நாளைக்கு  என்ன  நடக்கும்னே  யாருக்கும்  தெரியாது , நீ  ஜென்மக்கணக்குக்கு  பிளான்  போடறியா? 


  படப்பிடிப்பில்  நடந்த  ரசமான  சம்பவம்

  மாமா    மாப்ளே  பாடல்  காட்சியில்  ந்டிக்கும்போது  எம் ஆர்  ராதா  ஒரு  சீனில்  பாகவ்தர்  போல  கையை  காதுக்குப்பக்கத்தில்  வைத்து  பாடுவது  போல  அபிநயம்  பிடித்தாராம்.  ஷாட்  ஓக்கே  ஆன  பிறகு  டைரக்டர்  அவரிட,ம்  அந்த  மாதிரி  சீனே  இல்லையே? என  கேட்க   அ0ந்த   சீனில்  சோபாவில்  அமர்ந்தபடி  குலுங்கும்போது பாடியை  ஓவரா  அலட்டிட்டேன்  போல  விக்  கழண்டுடுச்சு. அது  விழாமல்  பிடிக்க  பாகவதர்  மாதிரி  பாவ்லா  பண்ணேன்  என்றாராம்.  ஃபிலிம்  ரோல்  வேஸ்ட்  ஆகாம  காப்பாத்துனேன்  பாரு  என்றாராம்.   இந்த  சீனை  ரசிக்க  அந்த  மாமா  மாப்ளே  பாட்டை  கேட்டுப்பாருங்கள் 

  செம  ஹிட்டுபாட்டு   லிஸ்ட்  (  படத்தில்  வரும்  வரிசைப்படி  இல்லாமல்  ஹிட்  பேசிஸ்)

1    வாழ  நினைத்தால்  வாழலாம்  வ்ழியா  இல்லை  பூமியில் 

2  அத்திக்காய்  காய்  (  இதுல  கொஞ்சம்  டபுள்  மீனிங்  வரும் )

3   ஆதி  மனிதன் 

4  நீயே  உனக்கு  என்றும்  

5   யாரை  எங்கே  வைபப்து  யாருக்கும்  தெரியல 

6  நான்  என்ன  சொல்லி  விட்டேன் 

-லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   இன்சூரன்ஸ்  கம்பெனி  ரூல்ஸ்  எல்லாம்  தெரியுமா? தெரியாதா? பாலிசி  போட்டு  ஒரு  மாதத்துக்குள்  ஒருவர்  தற்கொலை  செய்து  கொண்டால்  பணம்  கிடைக்காது 

2  தன்  கணவனின்  தம்பி  போல்  ஆள்  மாறாட்டம்  செய்ய  தன்  கணவனை  தூண்டும்  மனைவிக்கு  தன்  தம்பியின்  காதலி  தன்  க்ணவனுடன்  நெருக்கமாவார்  என  யூகிக்க  முடியாதா? பொதுவா  தமிழகப்பெண்கள்  பொசசிவ்னெஸ்  ஜாஸ்தி. எப்படி  இதுக்கு  ஒத்துக்கறாங்க ? 

3  தற்கொலைக்கு  முயல்வது  ச்ட்டப்படி  தவறு . படம்  முழுக்க  ஆங்காங்கே  தற்கொலை  ,முயற்சியில்  ஈடுபடும்  ஹீரோவை  போலீஸ்  கண்டுக்கவே  இல்லையே? 


4   ஆள்  மாறாட்டம்  செய்யும்  எல்லாப்படங்களிலும்  ஒரு  லாஜிக்  இடிக்கும்.  முகச்சாயல்  ஒன்றாக  இருக்கலாம், ஆனா  கை  ரேகை  வேற  வேற . ஆள்  இறந்தால்  ரேகையை  வெச்சுக்கண்டுபிடிக்கலாமே? 


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சிவாஜி  ரசிகர்கள்  ,மட்டுமல்ல  ஜாலி  காமெடி  ரசிக்ர்களும்  அவசியம்  காண  வேண்டிய  ப்டம்  எம் ஆர்  ராதா  நடிப்புக்காகவே  பார்க்கலா,ம்  ரேட்டிங்  3 / 5 

0 comments: