Tuesday, August 02, 2022

பாடு நிலாவே 1987 _ சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)


1  மலையோரம்  வீசும்  காத்து  மனசோடு  பாடும்  பாட்டு  கேட்குதா  கேட்குதா

2  சித்திரை  மாசத்து  நிலவு  வருது  வழி விடு  வழி  விடு  மேகமே  வழி  விடு 

3  கொக்கரக்கொக்கோ  கூவுற  வேளை இது 

4  பாடுங்கள்  பாட்டு  பாடுங்கள்    கேட்டு  தாளம்  போடுங்கள் 

5   வா  வெளியே இளம்  பூங்குயிலே 

  போன்ற  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  கொண்ட  படம் 

ஃபிலிமாலயா  பத்திரிக்கை  ஆசிரியர்  எம்  ஜி  வல்லபன்  திரைக்கதை  எழுதி  தயாரித்த  படம்

 கதைக்கு  பெருசா மெனக்கெடலை  1985ல்  வந்த  நான்  உங்கள்  ரசிகன்  கதையை  பட்டி  டிங்கரிங்  பண்ணிட்டாங்க 


ஸ்பாய்லர்  அலெர்ட் 

 ஹீரோ ஒரு  போலீஸ் கான்ஸ்டபிள் ஹீரோயின்  ஒரு  பாடகி . ஹிரோ  பாடகியின்  தீவிர  ரசிகன். இதுவரை  1001  கடிதங்கள்  எழுதி  இருக்கான். ஹீரோயின்  தொடர்ந்து  கச்சேரிகள்  பண்ணிட்டு  வருவதால்  அவர்  ஓய்வெடுக்க  விரும்பறார். 


 போற  இடத்துல  ஹீரோவை  சந்திக்கறார், தான்  பரம  ரசிகன்  என்பதை  தெரிவிக்கிறார்  ஹீரோ


 பாடகிக்கு  செக்யூரிட்டியா  போகும்  வாய்ப்பு  ஹிரோக்கு கிடைக்குது . அங்கே  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  பிரப்போஸ்  பண்றார், ஹீரோயின்  அதை  ஏத்துக்கலை


 அப்புறம்  ஹீரோ  பாடும்  பாட்டைக்கேட்டு  மனசு  மாறுகிறார், இருவரும்  லவ்  பண்றாங்க 


 ஹீரோயினோட அப்பா  ப்ணத்தாசை  மிக்கவர் . ஹீரோ  சாதா  போலீசா  இருப்பது  ஹீரோயினுக்கு  பிடிக்கலை ., அவர்  திறமையானவர்  பெரிய  ஆள்  ஆகனும்னு  நினைக்கிறார் 

அதனால தன்  அப்பா  முன்னால  ஹீரோவை  மட்டம்  தட்டி  பேசறார். அப்போதான்  ரோஷம்  வந்து  ஹீரோ  போராடி  வாழ்க்கைல  ஜெயிப்பார்னு  அவர்  ஐடியா 


 ஆனா  ஹீரோ  அதை  புரிஞ்சுக்கலை 


 ஹீரோ  முறைப்படி  சங்கீதம்  கத்துக்க  நினைக்கிறார்  அதுக்கு  குறிப்பிட்ட  ஒரு சங்கீத  வித்வான்  கிட்டேதான்  கத்துக்கனும்  இப்போ  அவர்  தூக்கு  தண்டனைக்கைதியா  ஜெயில்ல  இருக்கார் 


 அவரை  சந்திக்க  ஹீரோ  ஒரு  பெட்டி  கேஸ்ல  தானா மாட்டி  ஜெயிலுக்குப்போய்  அவரை  மீட்  பண்றார் 

 இப்போ  ஒரு  ட்விஸ்ட்   அது  ஹீரோவோட  அப்பா . அப்பா  உங்க  மக  கதை  என்ன  ஆச்சு ?  அக்கா  இப்போ  எங்கே   அப்டி  கேட்கறார்


 ஃபிளாஸ்பேக். ஹீரோவோட  அக்காவை  ஒரு  பணக்காரன்  ஏமாத்தி   கெடுக்கறான்  மேரேஜ்  பண்ணிக்கலை   அக்கா  கர்ப்[பம்  அவமானம்  தாங்காம  தூக்கு  மாட்டிக்கறா


 கர்ப்பமா  இருப்பது  வெளி  உலகத்துக்கு  தெரியக்கூடாதுனு  பெட்ரோல்  ஊற்றி  எரிக்கிறார்  அப்பா  அந்தக்கொலைக்கேசில்  தான்  மாட்றார்


 ஹீரோவோட  அக்காவை  கெடுத்தவர்தான்  ஹீரோயினோட  அப்பா 


இப்போ  ஹீரோ  பெரிய  பாடகர்  ஆகிடறார், ஹீரோயின்  நேர்ல  வந்து  ஹீரோவை  சந்திக்கும்போது   ஹீரோ  அவரை  அவமானப்படுத்தறார்,

அப்றம்  ஹீரோயினை  மேரேஜ்  பண்ணி  அடுத்த  நாள்  பிரியறார். பழி  வாங்கலாம்    கஷ்டம்

  பிரிஞ்ச தம்பதிகள்  இணைஞ்சாங்களா? அக்காவின்  வாழ்வை  நாசம்  ஆக்கிய  மாமனாரை  ஹீரோ  பழி  வாங்கினாரா? எனப்து  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  மோகன்  பாடகனா இவர்    நடிச்சாலே  படம்  ஹிட்  என  ஒரு  காலத்தில்  எழுதப்படாத  நியதி  இருந்தது .. நதியாவுடன் உயிரே  உனக்காக  தொடங்கி  பல  படங்களில்  நல்லா  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகி ருந்தது  நல்ல  ஜோடிப்பொருத்தம்  ஆனா  ஹீரோ  பின்  பாதியில்  வில்லனா  மாறுவது  ஏத்துக்க  முடியலை  நம்ப  முடியலை 


  ஹீரோயினா  நதியா . இவரோட  ஆடைகள்  கவனிக்க வைப்பவை  ஆண்  டிரஸ்  போடறதா  இருந்தாக்கூட  ஃபுல்  ஹேண்ட்  சர்ட்  தான்  போடுவார் . மிடி  போட்டாலும்  கெண்டைக்காலைத்தாண்டி  ஒரு இஞ்ச்  மேலே  போகாது . சேலை  அணிந்து  வரும்போது  கேமரா  கோணம்  எங்கே  ரெகுலரா  மற்ற  நடிகைகளுக்கு  வைப்பாங்களோ  அந்த  கோணத்தை  ஜாக்கிரதையாத்தவிர்ப்பார் , மழையில்  நனைவது  போல,வோ முத்தக்காட்சிலயோ நடிக்க  மாட்டார்  சபாஷ்  நதியா 


வில்லனாக  ரவிச்சந்திரன்  கச்சிதம்  ஹீரோவோட  அப்பாவாக  சோமயாஜூலு  பின்னாளில் இது  நம்ம  ஆளு  படத்தில்  செம  ஹிட்  ஆனவர்  அமைதியான  நடிப்பு 


 செந்தில்  காமெடி  மொக்கை  தான்   வெண்ணிற  ஆடை  மூர்த்தி  வ்ழக்கம்  போல்  டபுள்  மீனிங்  டயலாக் 


இசை இளையராஜா  அசத்தி  இருப்பார்  பிஜிஎம்  குட் 

ஒளிப்ப்திவு  தினேஷ்  பாபு   அருமையா  பண்ணி  இருக்கார் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதியை  வ்ழக்கமான  லவ்  சப்ஜெக்டாக  கொண்டு  சென்றவர்  பின் பாதியில்  ரிவஞ்ச்  சப்ஜெக்டாக  மாற்றியது  க்ளைமாக்சில்  போட்டி  பாட்டு  வைத்தது ( ஆனா  அந்தப்பாட்டு  அவ்ளவா  ஹிட்  ஆகலை )


2   மொத்தப்படமே  ரெண்டு  மணி  நேரம்  தான்  ஆனா  ஏராளமான  சம்பவங்கள்  கச்சிதமான  எடிட்டிங்


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1     தற்கொலை  செய்து  கொண்ட  பெண்ணின் உடலை  பெட்ரோல்  ஊற்றி  எரிச்சுட்டா  அவ  கர்ப்பமா  இருந்தது  தெரியாதா?  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  காட்டிக்கொடுக்குமே?


2   பெற்ற  மகளை  அப்பாவே  எரிச்சுட்டார்  என்பது  வழக்கு   போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  முதலில்   கழுத்து  நெறிபட்டு  இறந்தார்  அதுக்குப்பின்  தான்  பெட்ரோல்  எரிப்புனு  தெரியுமே? எப்படி  அப்பாவுக்கு  தண்டனை  கிடைக்கும் ?


3   தூக்குதண்டனைக்கைதிக்கு  தனி  அறை  சாதா  கைதிக்கு  வேற  அறை  தான்  தருவாங்க. ஹீரோ  எப்படி  அதே  அறைக்கு  செல்ல  முடியும் ?


4   ஹீரோ  ஹீரோயினைப்புரிஞ்சுக்காம  மேரேஜ்  ஆன  அன்னைக்கு  அவர்  கூட  சந்தோஷமா இருந்துட்டு  காலைல  உன்னைப்பழி  வாங்கறேன்  இனி  நீ வாழா  வெட்டி  என  சிரிப்பது  எரிச்சலா  இருக்கு   மேல்சாவனிசம் 


5 க்ளைமாக்சில்   ஹீரோ  திடீர்  என  திருந்துவது  நம்பற  மாதிரி  இல்லை  மனசுல  ஒட்டவும்  இல்லை 



ரசித்த  வசனங்கள் 


1   தீபத்தோட  அருமை    இருட்டில்  தான்  தெரிய  வரும்  அது  மாதிரி  தான்  நாம  சோகமா  இருக்கும்போதுதான்  நம்ம  திறமைகள்  வெளில  வரும். சோதனைக்காலத்திலும்  அப்படித்தான்


2   வானத்துல  இருக்கற  நட்சத்திரத்தை  அண்ணாந்து  வேடிக்கை  பார்க்கலாம், அந்த  ஸ்டாரை  நீ  உன்  சர்ட்  பாக்கெட்ல  குத்திக்க  நினைக்கலாமா? 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  நதியா  ரசிகர்கள்  பார்க்கலாம்  இசை  ரசிகர்கள்  பார்க்கலாம்  மோகன்  ரசிகர்கள்(  யாராவது  இருந்தா )  அவாய்ட்  பண்ணிடுங்க  ரேட்டிங்  2.25 / 5 

0 comments: