Saturday, August 13, 2022

உன்னை விட மாட்டேன் (1985) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் )


பொதுவாகவே  ஒரு டைரக்டரின்  முதல்  படம்  எப்படியும்  ஹிட்  ஆகிடும், தனக்குக்கிடைத்த  வாய்ப்பை  தக்க  விதத்தில்  உபயோகப்படுத்தி  தன்  திறமையை  நிரூபிக்கனும்னு  ஒரு  வெறி  இருக்கும்   இயக்குநர  நேதாஜி  ஹீரோவா  நடிச்சு  இயக்கி  இருப்பார் , இவரது  மற்ற படங்கள்  ஜெமினியின்  ஜனனி  என  ரேடியோவில்  பயங்கரமா  விளம்பரம்  செய்யப்பட்ட  லவ்  ஸ்டோரி  ஃபிலிம்  சரியா  போகலை .,  முரளி  நடிச்ச சிலம்பு  சுமாராதான்  போச்சு  விஜயகாந்த்  நடிச்ச  சொல்வதெல்லாம்  உண்மை    நல்லா  போச்சு . இந்தப்படம்  பர பரப்பா  பேசப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஹீரோவோட  அப்பா  பெரிய  தொழில்  அதிபர். திடிர்னு  ஒரு  விபத்துல  இறந்துடறார். அம்மா  தனியாளா  சமாளிக்கறாங்க  . கம்பெனில  மேனேஜரா  வேலை  பார்த்தவன் தான்  வில்லன்  சொத்தையும்  ஆட்டையைப்போடனும்,  ஓனர்  சம்சாரத்தையும் தன்  வசப்படுத்தனும்னு  நினைக்கறான். ஆனா  அது  நடக்கலை .,


 பலவந்தமா  அடைய  முயற்சிக்கும்போது ஹீரோ  துப்பாக்கி  எடுத்து  சுடும்போது  தவறுதலா  அம்மா  மேல  குண்டு  பாய்ஞ்சு  ஆள்  அவுட் . அந்த  சின்ன  வயச்லயே  ஹிரோ  சபதம்  எடுக்கறார்  எப்படி  என்  கையால  என்  அம்மாவைக்கொல்ல  வெச்சியோ  அதே  மாதிரி  உன்  கையால  உன்  குடும்பத்தினரை  தீர்த்துக்கட்டுவேன் அப்டிங்கறார்


 வில்லனுக்கு  மேரேஜ்  ஆகி  ஒரு  மகன்  மகள்  மேரேஜ்  வயசுல  இருக்காங்க ,  ஹீரோ  வில்லனோட    மனைவி  மகன்  இருவரையும்  தான்  சொன்னபடி  வில்லன்  கையாலயே  கொல்ல  வைக்கிறார் 


   வில்லனோட  மகளை  மேரேஜ்  பண்ணிக்கறார்  இதுல தான்  சிக்கல்  தன்  சபதப்படி  வில்லன்  கையால  மகளை  கொல்ல  வெச்சாரா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ்


 வழக்கமான  பழி  வாங்கல்  கதைல  இருந்து  மாறுபட்டு  ஹீரோ  இதில்  எப்படி  சபதத்தில்  ஜெயிக்கிறார்  என்ற  ஆர்வம் மேலோங்கும் 


 பிஜிஎம்  ந்ல்லாருக்கும்  பாடல்கள்  எல்லாம்  சுமார்  ரகம்  தான் 


 ஹீரோவா  இயக்குநர்  நேதாஜி   தலைல  விக்  வெச்சுட்டு  வருவார்  பெருசா  உறுத்தாது  , இவரது  குரல்  மாறுபட்டு  இருக்கும் .   நடிப்பு  ஓக்கே  ரகம் 


 ஹீரோயினா  பூர்ணிமா  ராவ். + அதிக  வாய்ப்பில்லை  வந்தவரை  ஓக்கே


 செந்தாமரை  வில்லனா  கலக்கி இருப்பார் , இவரது  டயலாக்  டெலிவரி  நல்லாருக்கும்  ஒய்  ஜி  மகேந்திரன்   வழக்கம்  போல  மொக்கை  போடறார். மிஸ்டர்  வினோத்  என்பதை  அடிக்கடி   மிஸ்டர்  நிரோத்  என  தப்பாக  உச்சரித்து  அது  ஒரு  ஜோக்னு நினைச்சு  அவரே  சிரிச்சுக்குவார் 


 சபாஷ்  டைரக்டர்  ( நேதாஜி )


1  வழக்கமாக  ஹீரோக்கு    தரப்படும்  ஓப்பனிங்  ஃபைட்  சீனுக்கான  லீட்  நல்லாருக்கும். அடியாளுங்க  பேசும்  வசனமும்  அதுக்கான  சிச்சுவேஷனும் புதுசு


2  ஹீரோ  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சி  வைத்திருப்பதால்  வில்லன்  தன்னை  மிரட்டுவது  யார்  என  கண்டுபிடிக்க  ஹீரோவையே  அப்பாய்ண்ட்  பண்ணும்  சீன் 


3    வில்லன்  மகனை  எதேச்சையாக  கொலை  செய்வதை  ஃபோட்டோ  எடுத்து  ஆதாரம்  ஆக்கி  அதை  வில்லனின்  மனைவியைபார்க்கச்செய்து  கொலைக்கு  சாட்சியாக்கி அவரை  கொல்ல  தூண்டும்  சாமார்த்திய  ஐடியா  குட்


4   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட் 


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஹீரோவின்  அம்மா  ஒரு  இளம்  விதவை   அவர்  பங்களா வில்  நைட்  தூங்கும்போது  வாசல்  மெயின்  கேட்  , வீடு  கதவு    பெட்ரூம்  கதவு  எதையுமே  தாழ்  போட  மாட்டார்  போல  வில்லன்  நைட்  அசால்ட்டா  வந்து  ரேப்  பண்ண  ட்ரை  பண்றார்


2  வில்லன்  கிட்டே  ரிசைன்  லெட்டர்ல  சைன்  வாங்குன  அம்மா  அதை  அவன்  கிட்டே  அப்பவே  சொல்லி  மாட்டிக்கறாங்க. ஆள்  பலம்  இருக்கும்போது  சொல்லி  இருக்கலாம்


3   வில்லனோட  கான்செப்ட்டே  மகா  மட்டமா  இருக்கு   ஓனரோட  மனைவியை  ரேப்  பண்ணிட்டா  அவங்களும் சொந்தம்  ஆகிடுவாங்க  சொத்தும்  கிடைக்கும்கறாப்டி  அது  எப்டி ? சோன்பப்டி  ! ரேப்  கேஸ்க்கு 14  வருசம்  ஜெயில்  தண்டனை  தான்  கிடைக்கும் 


 சி பி எஸ்  ஃபைனல் கமெண்ட் =   மாறுபட்ட  ரிவஞ்ச்  த்ரில்லர்  பார்க்க  விருப்பம்னா  யூ  ட்யூப்ல  பார்க்கலாம்   ரேட்டிங்  2.25 /5 


0 comments: