Tuesday, June 14, 2022

21 GRAMS -TWENTY ONE GRAMS -2022 ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் த்ரில்லர் )

 


படத்தோட  விமர்சனத்துக்குப்போறதுக்கு  முன்னாடி  ஒரு  குழப்படி  மேட்டரை  தெளிவுபடுத்திடறேன். 2003ல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  இப்போ அமேசான்  பிரைம்ல  ஓடும் 21 கிராம்ஸ் ( இங்க்லீஷ் ) சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கும் , 2011ல்  ரிலீஸ்  ஆகி  இப்போ  அமேசான் பிரைம் ல  இருக்கும்  உயிரின்  எடை  21  அயிரி (தமிழ்)  படத்துக்கும்  இப்போ  டிஸ்னி ஹாட்  ஸ்டார்  ல  ரிலீஸ்  ஆகி  இருக்கும் இந்தப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை .  இந்த  3  படங்களின்  கதை , திரைக்கதை   வேற  வேற .


 ஒரு  உடலில்  இருந்து  உயிர்  கிளம்பிடுச்சுன்னா  அந்த  உடல்  எடை  21  கிராம்  குறையுது , அதை  வெச்சு  உயிரின்  எடை  21  கிராமாக  இருக்கலாம்னு  சொல்றாங்க  . இந்த  ஒரே  ஒரு  அம்சம்தான்  3  படங்களுக்கும்  பொதுவான  அம்சம் ( இந்த  டயலாக் மட்டும்  3  படங்களிலும்  உண்டு ) 


ஹீரோ  க்ரைம்  பிராஞ்ச்;ல  போலீஸ்  ஆஃபீசர்.  அவருக்கு  ஒரு  சம்சாரம்  ,   ஒரு  பெண்  குழந்தை . அந்தப்பொண்ணு  திடீர்னு  ஒரு  மெடிக்கல்  கம்ப்ளைண்ட்ல  ஹாஸ்பிடல்ல  அட்மிட்  ஆகி  இறந்துடுது .  . புத்திர  சோகம்  தாங்காம  பொண்ணோட  அம்மா  தற்கொலை  முயற்சில  ஈடுபடுது. அப்போ  ஹீரோ  சொல்றாரு  இங்க  பாரு  இனிமே  தற்கொலை  பண்ற  எண்ணம்  வந்தா  சொல்லு  நாம  ரெண்டு பேருமே  சேர்ந்து  பண்ணீக்கலாம்கறார்.ஹீரோவுக்கு  ஒரு  மச்சினன். மனைவியோட  தம்பி . இப்போ  ஊர்ல  இருந்து  வந்து  இவங்க  கூட  தங்கி  இருக்கான்


ஒரு  பிரபல  ஹாஸ்பிடல்ல  நர்சா  ஒர்க்  பண்ற  பொண்ணு    கொலை  செய்யபப்டறா. அதைதொடர்ந்து  நகரத்தில்  பல  கொலைகள்  நடக்குது. இந்த  சீரியல்  கில்லர்  யார்  என்பதை  ஹீரோ  கண்டுபிடிச்சாரா?  இல்லையா?|  என்பதுதான்  படத்தின்  கதை 


ஹீரோவா  அனூப்  மேனன்  போலீஸ்  ஆஃபீசரா  கம்பீரமா  நடிச்சிருக்கார்  மகளை  இழந்த  துக்கம், மனைவியின்  தற்கொலை  முயற்சிக்கு  அவர்  கொடுக்கும்  ரீ  ஆக்சன்  எல்லாம்  கச்சிதமான  நடிப்பு 


இன்னொரு  போலீஸ்  ஆஃபிசரா  அனு மோகன்  நல்லா  பண்ணி  இருக்கார் 


மனைவியாக லியோனா  லிசோய்   அழகிய  முகம்  பாந்தமான  நடிப்பு 


மச்சினனாக  வருபவர்   நல்ல  நடிப்பு   அவர்  தான்  கொலையா:ளீயாக  இருக்குமோ  என  ஹீரோ  சந்தேகப்படுவதும்  , மச்சினன்  காதலி  பற்றிய  உண்மைகள்  தெஇர்ய  வருவதும்  திரைகக்தை  சுவராஸ்யங்கள்


முதல்  பாதி  ரொம்ப  ஸ்லோ  பின்  பாதி  ஸ்பீடா  போகுது . பொதுவா  க்ரைம்  த்ரில்லர்  படங்கள்  ஓப்பனிங்க்ல  சோகமா  காட்டக்கூடாது  .  பர பரனு  பத்திக்கற  மாதிரி  காட்சிகள்  நகரனும் 




 சபாஷ்  டைரகடர்  ( பிபின்  கிருஷ்ணா)


1    நான்  லீனியர்  முறைல  கட்  பண்ண  எடிட்டிங்  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கு , நேரடியா  கதை  சொல்லி  இருந்தா  இவ்ளோ  சுவராஸ்யம்  இருந்திருக்காது 


2   ஜித்துவின் ஒளிப்பதிவு ,    தீபக்கின்  இசை  பின்னணி  இசை  இரண்டுமே  அருமை . பல  இடங்களில்  உயிர்ப்புடன்  இருக்கு 


3    க்ளைமாக்ஸ்ச்  ட்விஸ்ட்  அருமை  .  சீரியல்  கில்லர்  ஒருவர்  .  அவரைக்கொல்பவர்  இன்னொருவர்  என்ற  ட்விஸ்ட்டும்  நல்லாருக்கு


லாஜிக்   மிஸ்டேக்ஸ்  ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1    ஒரு  ஹாஸ்பிடல்ல  நர்சா  ஒர்க்  பண்ற  பொண்ணுக்கு  அங்கே  சிசிடிவி  கேமரா  இருக்கும்கற  விஷயம்  தெரியாதா?  அதென்ன  அப்போலோ  ஹாஸ்பிடலா?   அடிக்கடி  ரிப்பேர்  ஆக ?


2   நர்சாக  வருபவர்  உயிரைப்பணயம்  வைத்து  செய்யும்   ஒரு  செயல்  எவ்ளோ  முக்கியத்துவம்  வாய்ந்தது  அவர்  அசால்ட்டா “ அடடா/..  அந்த  விஷயத்தை  நான்  மறந்துட்டேன் “  என  சொல்வது  ஏத்துக்கவே  முடியல  



 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமான  படம் எல்லாம்  கிடையாது  அதே  சமயம்  மோசமும்  இல்லை  .  ஒரு  டைம்  பார்க்கலாம்கற  லெவல்ல  இருக்கு . அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை  ஃபேமிலியோட  பார்க்கலாம்.   டிஸ்னி  ஹாட்  ஸ்டார்ல போன  வாரம்  ரிலீஸ்  ஆகி  இருக்கு   ரேட்டிங்  2.25 / 5 

0 comments: