Monday, October 03, 2022

THEERPPU (2022)-தீர்ப்பு ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)@ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


யூகிக்காத  மாறுபட்ட  க்ளைமாக்ஸ்  சீன்  உள்ள  படங்கள்  3  இருக்கு 1  1  சொல்வதெல்லாம்  உண்மை 1997
2  OLD BOY 2003
3  THE SECRET IN THEIR  EYES *2009). இதுல  சொல்வதெல்லாம்  உண்மை  இயக்குநர்  நேதாஜி  விஜய்காந்த்தை  வெச்சு  எடுத்த  படத்தில்  எதிர்பாராத  ட்விஸ்ட்  வரும். உண்மை  செய்திகளை மட்டுமே  வெளியிடும்  ஒரு  செய்தி  நிறுவனம்  ஒரு  முறை எதிரியின்  சதியால்  அந்த  பத்திரிக்கை  எடிட்டரின்  மரணச்செய்தியையே  தவறுதலாக  வெளியிட்டு விடும். ஆனால்  ஆண்டாண்டு  காலமாய்  தன்  பத்திரிக்கை  உண்மையான  செய்திகளை  மட்டுமே  வெளியிடும்  என்ற  நல்ல  பெயரைக்காப்பாற்ற  அந்த  பத்திரிக்கை  எடிட்டர்  நிஜமாவே  அந்த  செய்தியை  உண்மையாக்குவார். ரொம்ப  அதிர்ச்சியா  இருந்தது ., இந்தப்படத்தோட  விமர்சனத்துல  இதைப்பற்றி  சொல்லக்காரணம்  இருக்கு , படம்  பார்த்தா  தெரியும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1  = ஒரு  தம்பதி  பீச்  ஓரமா  நின்னு  பேசிக்கிட்டு  இருக்காங்க , பால்ய  கால  நண்பன்  வர்றான்  இங்கே , அவனுக்கு  உதவி  செய்யனும். பழசை  எல்லாம்  மறக்கக்கூடாது  ப்ளா ப்ளா  அப்டினு  புருசன்  சொல்றான், அதுக்கு  சம்சாரம்  நக்கலா  இந்த  மூஞ்சியைப்பார்த்தா  நண்பனுக்கு  உதவி  பண்றவன்  மாதிரி  தெரியலையே , உண்மையைச்சொல்லுங்க,  உங்க  நண்பர்  கூட  யார்  வர்றாங்க ? என  கேட்க  அவன்  பம்மறான், பதிலே  சொல்லலை 

 சம்பவம் 2  - வேற  ஒரு  தம்பதி  கார்ல  வந்துக்கிட்டு  இருக்காங்க , அப்போ  ஒரு  ஆள்  குறுக்கிடறார். தம்பி , என்னை  யார்னு  தெரியுதா?னு  கேட்க  புருசன்  பம்மறான். அவன்  அதீத  உரிமை  எடுத்துக்கிட்டு  என்னென்னமோ  பேசிக்கிட்டு  இருக்கான், சம்சாரத்துக்கு  புது  ஆள்  சகவாசம்  பிடிக்கலை , ஏங்க  காரை  எடுங்க  போலாம்கறா.  கிளம்பும்போது  புருசன்  சம்சாரம்  கிட்டே  சொல்றான்.. இப்போ  இவனைப்பார்த்தமே, அந்த  விஷயத்தை  இப்போ  நாம  யாரைப்பார்க்கப்போய்க்கிட்டு  இருக்கமோ  அவன்  கிட்டே  சொல்லாத, ஏன்? எதுக்கு  என்ன  விபரம்னு  எதுவும்  என்னைக்கேட்காத  அப்டீங்கறான்

சம்பவம்  3  -  சம்பவம் 2ல்  வந்த  ஜோடி  சம்பவம்  1ல்  வந்த  ஜோடியை  சந்திக்கறாங்க  அவங்க  பங்களாவில். அது  ஒரு  அபூர்வமான  கலெக்சன்  கொண்ட  மியூசியம். பழங்கால    பொருட்கள்  , விஐபிகள்  யூஸ்  பண்ணுன  பல  அபூர்வ  பொருட்களின்  கலெக்சன்  இருக்கு. இந்த  2  செட்  ஜோடிகளும்  ஒரு  பிஸ்னெஸ்  டீல்  பேசுதுங்க .


சம்பவம் 4  - சம்பவம் 1ல்  பேசிய  ஜோடியில்  உள்ள  புருசன்  காரன்  சம்பவம் 2ல்  உள்ள  ஜோடியில்  உள்ள  சம்சாரத்தை  ஆல்ரெடி  10  வருசம்  முன்னே  பழக்கம்  , சேட்டிங்  எல்லாம்  நடந்திருக்கு , இப்போதான்  முதல்  முறையா  நேரில்  சந்திக்கறாங்க . இவங்க  ரெண்டு  பேருக்கும்  ஒரு  இல்லீகல்  காண்டாக்ட்  உருவாகப்போகுதுனு  அவங்கவங்க  துணைக்கு  தெரிஞ்சிடுது 

சம்பவம் 5    சம்பவம்2ல்  ஒரு  ஜோடி  கிட்டே  ஒரு  ஆள்  தகறாரு  செஞ்சாரே  அவரு  இப்போ  இந்த  பில்டிங்க்  உள்ளே  நுழையறாரு .  அவரு  வந்ததும்  இந்த  2  ஜோடிகளும்  பம்மறாங்க  . அவரு  எல்லாரையும் மிரட்டிட்டு  இருக்காரு . அப்போ  யாருமே  எதிர்பாராத  சம்பவம்  ஒண்ணு  நடந்துடுது 

  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  போக  ஆறாவதா  ஒரு  சம்பவம்  ஃபிளாஸ்பேக்ல  நடந்திருக்கு , அதைச்சொன்னா  சுவராஸ்யம்  போய்டும்  .  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  ,  வேணும்னே  சொல்லாம  விட்ட  ஆறாவது  சம்பவம்  இவை  எல்லாவற்றையும் இணைக்கும்  கோடுதான்  திரைக்கதை 

 
சம்பவம் 2ல்  தகறாரு  செய்யும்  ஆசாமி  தான்  ஹீரோ  பிருத்விராஜ். இவர்  நடிச்ச  எல்லாப்படங்களும்  மாறுபட்ட  கதை  அம்சம்  உள்ள  ப்டங்களே. 90%  படங்கள்  ஹிட்  தான் . இதில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  போர்சன்  இல்லை  இவருக்கு , ரொம்ப  கம்மியான  ஸ்பேஸ்  தான், கிட்டத்தட்ட  ரெண்ட்ரை  மணி  நேரப்படத்தில்  இவர்  வருவது  முக்கால்  மணி  நேரம்தான்

 ஆனா  நடிப்பு  அடிபொலி  .ஆரம்பத்தில்  அவர்  வில்லன்  மாதிரி  தெரியும்   ஆனா  போகப்போக  அவர்  தான்  ஹீரோ  என  உணர்வோம் ,ஆனாலும்  அவரது  ரசிகர்களுக்கு  கொஞ்சம்  ஏமாற்றமாகத்தான்  இருக்கும் 

சம்பவம் 1ல்  வரும்  ஜோடியாக   விஜய்  பாபு  அண்ட்   இஷா  தல்வார் . கிட்டத்தட்ட  படத்தில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  அதிக  போர்சன்  விஜய்  பாபுக்குத்தான், ஆனா  இவர்  ஆன்ட்டி  ஹீரோ  கம்  ”ஆண்ட்டி ” ஹீரோவும்  கூட . படம்  பூரா  முகத்தைக்கடு  கடு  என்றே  வைத்திருக்க  வேண்டிய  சூழல் 

 

 சம்பவம்  2  ல்  வரும்  ஜோடியாக  சைஜூ  க்ரூப்  அண்ட்   ஹன்னா  ரெஜி இருவருக்குமே  நடிக்க  நல்ல  வாய்ப்பு   குறிப்பா  ஹன்னா ரெஜியின்  ஆஜானுபாவகமான  உருவம்   அலை  பாயும்  கூந்தல்  கணவன்  அருகில்  இருக்கும்போதே  இன்னொருவருடன்  நெருங்கிப்பழகும்  தெனாவெட்டு  நடிப்பு   பயங்கரம் 


ஒரு  கொலை  நடந்த  பிறகு  அங்கே  ஆஜர்  ஆகும்   போலீஸ்  ஆஃபீசர்  கம் ஆண்ட்டி  ஹீரோவின்  பிஸ்னெஸ்  பார்ட்னராக   இந்திரஜித்  சுகுமாரன்  கனகச்சிதமான  நடிப்பு . இவர்  பெரும்பாலும்  போலீஸ்  ஆஃபீசராகவே  ரோல்ஸ்  பண்றார்  அப்ளாஸ்  அள்றார்


மேலே  சொன்ன   2  செட்  ஜோடி ,  பிருத்விராஜ் , இந்திரஜித்  ஆக  மொத்தம்  ஆறு  பேர்  தான்  அதிக  பட்ச    மெயின் கேரக்டர்கள்.  கதையின் 80%  காட்சிகள்  ஒரே  ஒரு  மாளிகையில் 


படத்தில்  குறிப்பிட்டுச்சொல்ல  வேண்டிய  முக்கியமான  விஷயம்  ஆர்ட்  டைரக்சன் . அந்த  மியூசியம்  லைட்டிங்  , செட்டிங்க்ஸ்  எல்லாம்  பிரமாதம் .  படத்தைப்பார்க்க  விருப்பம்  இல்லாதவர்கள்  கூட  அந்த  ஆர்ட் டைரக்சன்  செட்டை  மியூசியத்தை  ரசிச்சுட்டுப்போயே  ஆகனும், பிரமாதமான  ஒர்க் 
 சபாஷ்  டைரக்டர் 

1   பொதுவாக  மலையாளப்படங்களில்  படம்  போட்டு  முதல்  40  நிமிடங்கள்  மெயின்  கதைக்கு  வர  மாட்டாங்க ,  பஸ்  ஏறுவாங்க  , மீன்  வாங்குவாங்க, கட்டஞ்சாயா  குடிப்பாங்க . 41  வது  நிமிசம்தான்  கதை  சொல்ல  ஆரம்பிப்பாங்க , இதில்  முதல்  சீன்லயே  கதைக்கு  நேரடியா  வந்துட்டாங்க 

2    இயக்குநர்  ஷங்கர்  தன்  படங்களில்  ஃபிளாஸ்பேக்  சீன்  ரொம்ப  அழுத்தமா  வைப்பார் ,  குறிப்பா  இந்தியன்  , ஜெண்டில்மேன்  படங்களில்  மனதை  உருக்குவதாக  இருக்கும்  படத்தின்  வெற்றிக்கு  அது  முக்கியக்காரணி  ஆகும், அது  போல  இதிலும்  ஒரு  ஃபிளாஸ்பேக்  சீன்  உண்டு   ஆனா  ஒரே  சிட்டிங்கில்  அதை  சொல்லாமல்  நான்  லீனியர்  கட்டில்  படம்   பூரா  பொடிமாஸ்  மாதிரி  ஆங்காங்கே   தூவி  விட்டிருக்காங்க 


3  கதை  ஓட்டத்தில்  ஏதோ  கள்ளக்காதல்  சம்பவம்  அரங்கேறப்போகுது  என்பது  மாதிரி  லீட்  குடுத்துட்டு  திடீர்னு  கொலை  நடப்பதாக  காட்டுவது  அதை  மறைக்கப்போடும்  திட்டங்கள்  என  கதையே  ஒரு  யூ  டர்ன்  அடிக்குது 


4   படத்தின்  கதை  த்ரில்லர்  ஸ்டோரி  , ஆனா   பல  அரசியல்  சட்டையர்  வசனங்கள் , சமூக  அவலங்களை சாடும்  காட்சிகள்  உண்டு , பல  ரசிக்க  வைத்தன லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  மேரேஜ்  ஆன  ஆண்  தன்னை  விட  வசதியான  குறிப்பா  பல  மடங்கு  மேல்  தட்டு  ஆளை  சந்திக்க  தன்  மனைவியை  அழைத்துச்செல்ல  மாட்டான், அவனுக்கு  இருக்கும்  தாழ்வு  மனப்பான்மை  ஒரு  முக்கியக்காரணம், ஆனா  இதில்  அப்படி  நடக்கல 


2 திருமணம்  ஆன  ஒரு  பெண்  வேறொரு  ஆணிடம்  சேட்  பண்ணுவது  ஓக்கே   அவன்  கூட  மீட்டப்   வைக்கனும்னா  தனியா  அதை  பண்ணி  இருக்கலாம்,  புருசன்  கூடவே  வந்து  மீட்  பண்ணுவது  என்ன  வகை  துணிச்சல் ? 


3   கொலை  நடந்ததை  மறைக்க  போலீஸ்  ஆஃபீசரும், நண்பனும்  பேரம் பேசுவதும்  ஒரு  குறிப்பிட்ட  தொகை  கேட்பதும்  ஓக்கே , ஆனா  எந்த  பின்  புலமும்  இல்லாத  வீட்டு  வேலைக்காரன்  மாசா  மாசம்  50,000  ரூபாய்  தரனும்   என  மிரட்டுவது  என்ன  தைரியத்தில்? அதே  மாதிரி  தன்னையும்  போட்டுத்தள்ளிட்டா?  என  பயம்  இருக்காதா>?  அது  போக  பிளாக்  மெயில்  பண்ணும்போது  ஒரே  செட்டில்மெண்ட்டாதான்  பணம்  கேட்பாங்க . . தவணை  முறைல  கேட்கறாரே?  வசந்த்  அண்ட்  கோ  ஓனர்  ஃபிரண்டா? 


4   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஒரு  சர்ச்சைக்குரிய  விஷயம்  ,  கான்  கேர்ள்  படத்தில்  வருவது  போல  ஒரு  கொலை யில்  மாட்டி  வைக்க  ஐடியா  பண்ணாம  இப்படி  செய்வது  நம்பும்படி  இல்லை   சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  ஸ்லோவாகச்செல்லும்  த்ரில்லர்  மூவி . ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  அரை  மணி  நேரம்  கொஞ்சம்  ஜவ்வு  இழுப்பு  இழுக்கும். இதை  எல்லாம்  பல்லைக்கடிச்ட்டு  பொறுத்துக்கிட்டா  மாறுபட்ட  த்ரில்லர்  மூவி  கண்ட  திருப்தி  இருக்கும் . ரேட்டிங்  2.5 / 5 
Theerppu
Theerppu.jpg
Official Release Poster
Directed byRathish Ambat
Written byMurali Gopy
Produced byVijay Babu
Rathish Ambat
Murali Gopy
Starring
CinematographySunil K. S.
Edited byDeepu S. Joseph
Music bySongs:
Murali Gopy
Score:
Gopi Sunder
Production
companies
Friday Film House
Celluloid Maarg
Distributed byFriday Film House
Release date
  • 25 August 2022
CountryIndia
LanguageMalayalam
Sunday, October 02, 2022

PLAN A PLAN B (2022) ( ஹிந்தி) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


இந்தப்படத்தைப்பார்க்க  ரெண்டே  காரணங்கள் தான், லெமன் விமன் தமன் ஹீரோயின், டோட்டல் டைம் ட்யூரேஷன்  ஒண்ணே  முக்கால்  மணி  நேரம்தான். நெட்  ஃபிளிக்ஸ்ல ரிலீஸ். . இது  ஸ்லோவாதான்  மூவ்  ஆகும். ஃபைட் , மொக்கை  காமெடி  டிராக்   இல்லை , அந்த  டேஸ்ட்  உள்ளவங்க  ஒன்  ஸ்டெப் பேக் 


ஸ்பாய்லெர்  அலெர்ட்


கல்யாண  மாலை  மாதிரி  ஒரு  ஆஃபீஸ்  வெச்சு  ரன்  பண்றாரு  ஹீரோயின் , இவருக்கு ஆல்ரெடி  ஒரு லவ்வர்  இருந்தாரு. ஹார்ட்  அட்டாக்ல  இறந்துட்டாரு. அவரை  மறக்க  முடியாம  தவிக்கறாரு 


 அதே  ஆஃபீஸ்  பக்கத்துல  டைவர்ஸ்  காலை   மாதிரி  ஆஃபீஸ்  நடத்தறாரு  ஹீரோ .இவர்  ஒரு  லாயர். குறிப்பா  டைவர்ஸ்  லாயர் . அவரோட  வேலை கருத்து  வேற்றுமை  கொண்ட  தம்பதிகளைப்பிரித்து  வைப்பது  , டைவர்ஸ்  வாங்கித்தருவது


 இவங்க  ரெண்டு  பேரு  ஆஃபீசும்   பக்கத்துலயே  இருப்பதால்  , இருவரின்  தொழிலும்  கேரக்டர்களும்  எதிர்  எதிர்  துருவங்கள்  என்பதால்  அடிக்கடி  இருவருக்கு  மோதல்  வருது 


ஹீரோக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகிடுச்சு . ஆனா  மனைவி  டைவர்ஸ்  கேட்டுட்டு  இருக்காப்டி, ஆனா  இவரு  தராம  இழுத்தடிச்ட்டு  இருக்காரு 


மோதலில்  ஆரம்பிச்ச  ஹீரோ  ஹீரோயின்  நட்பு  காதலில்  முடியுது. அந்த  காதலை  ப்ரப்போஸ்  பண்ற  டைம்ல  திடீர்னு  ஹீரோ  நான்கு  நாட்கள்  ஆளே  அட்ரஸ்  இல்லாம  போறாரு  ஆஃபீசே  வர்லை 


 அவரை  எல்லாரும்  தேடறாங்க . அவர்  எங்கே  போனார்?  க்ளைமாக்ஸ்ல  அவரு  சொந்த  சம்சாரம்  கூடவே  சேர்ந்தாரா? புது  சம்சாரமா  ஹீரோயினை  கட்டிக்கிட்டாரா?  என்பது  திரையில்  காண்க 


ஹீரோவா  ரித்தீஷ்  தேஸ்முக். இவரை  இப்போதான்  முதல்  முறையா  பாக்கறேன். . ஆக்டிங்  ஓக்கே 


 ஹீரோயின்  ஒண்டர்  விமனா, மஞ்சள்  அழகி  லெமனா  வந்த  தமனா . பாகுபலிக்குப்பின்  இதுல  அழகாவே  இருக்காரு கோபமான  கொந்தளிப்பான  காட்சிகளை  விட  காதலில்  விழுந்த  பின் காட்டும்  முக  பாவனைகளில்  ஸ்கோர்  பண்றார்


ஹீரோவின்  முதல்  மனைவியா  வர்றவரு   சுமாரா  இருக்காங்க . 


ஹீரோயினின்  அம்மாவாக  60  வயசு  லேடி  நடிப்பு  குட் 


 ஹீரோவின்   ஆஃபீஸ்  ரிசப்ஷனிஸ்ட்டா  வரும்  நடிகை  க்ளைமாக்ஸ்ல   ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக்  எல்லாம்  பேசி  கலக்கி  இருக்கு 


சபாஷ்  டைரக்டர் 


1   விஜய்  ஆண்ட்டனி  வக்கீலா  நடிச்ச  இந்தியா  பாகிஸ்தான் ( 2016)

PURPLE HEART (2022) , LOVE  IN THE   VILLA (2021)  இந்த  மூன்று  படங்களையும்  பார்த்து  அதுல  இருந்து  பட்டி  டிங்கரிங்  பண்ணிய  சாமார்த்தியம் 


2   நான்கே  கேரக்டர்களை  வெச்சு  ஒரே  ஒரு  ஆஃபீஸ்  செட்டப்ல  லோ  பட்ஜெட்ல  எடுத்து  முடிச்ச  சாமார்த்தியம் 


3  ஹீரோ - ஹீரோயின்  மோதல்  காட்சிகள்  பல  படங்களில்  பார்த்தவைதான்  என்றாலும்  சில  காட்சிகள்  ரசிக்கும்படி  எடுத்தது 
ரசித்த  வசனங்கள்


1  நீங்க  ரெண்டு  பேரும்  உங்க  வாழ்க்கைல  அடுத்தவங்க  குறையைக்கண்டுபிடிக்கறதுலதான்  அதிக  நேரம்  செலவு  பண்ணி  இருக்கீங்க 


2  கல்யாணம்  எந்த  அளவுக்கு  பலருக்கு  சந்தோஷத்தைத்தருதோ  அந்த  அளவுக்கு  டைவர்சும்  பலருக்கு  சந்தோஷத்தைத்தந்திருக்கு 


3  உறவுகளுக்கு  கேரண்ட்டி  கார்டு  கிடையாது


4  இன்னைக்கு  4  கல்யாணங்களில்  3  கல்யாணங்கள்  டைவர்ஸ்ல தான்  முடியுது 


5   ஃபோன்ல  பழைய  ஃபோட்டோஸ்  வீடியோஸ்  ஓவரா  சேர்ந்துட்டா  லாக்  ஆகிக்கும்  அப்பப்ப  அதை  ரீ  பூட்  பண்ணனும், இது  ஃபோனுக்கு  மட்டும்  இல்லை  நம்ம  மனசுக்கும் 


6   இவன்  என்ன  ஜி எஸ் டி  மாதிரி  நம்ம  கூடவே  ஒட்டிக்கிட்டான் ? 


7  கல்யாண  மாலை  நடராஜனுக்கே  கல்யாணம்  ஆகாம  இருந்தா  கஸ்ட்மர்ஸ்க்கு  எப்படி  நம்பிக்கை  வரும் ? அனில்  அம்பானியே  ஜியோ  சிம்  யூஸ்  பண்ணலைன்னா  எப்படி ?


அப்படிப்பார்த்தா  ஸ்வீட்  கடை  வெச்சிருக்கறவனுக்கு எல்லாம்  சுகர்  இருக்கனுமா? 


8   எனக்கு  என்ன  வேணும்?னு  எனக்கு  முன்னாடியே  அவனுக்கு  தெரிஞ்சிடும், அப்படி  இருந்தவன்  என்னை  ஏன்  விட்டுட்டுப்போனான்>?


9  உனக்கு  எப்படி  இந்த  எல்லா  விஷயமும்  தெரிஞ்சுது ?

 ஒருத்தனுக்குப்பொண்டாட்டி  இருந்தா  அவனுக்கு  உலக  விஷயம்  எல்லாமே  தெரிஞ்சிடும்


  லாஜிக்   மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயினோட  அம்மாவுக்கு  60  வயசு. அவங்க  ஒரு  சீன்ல  எனக்கு  சின்ன  வயசுலயே  மேரேஜ்  ஆகிடுச்சு . உடனே  இவ  பிறந்தானு  டயலாக்  சொல்றாரு . ஆவரேஜா  அவருக்கு  மேரேஜ்  ஆகும்போது  20  வயசுனு  வெச்சுக்கிட்டாக்கூட  தமனாவுக்கு இப்போ 30  வயசுனு  வெச்சாலும்  அம்மாவுக்கு  50  வயசு தானே  இருக்கும்   ( நாட்டுக்கு  ரொம்ப  முக்கியமான  பிரச்சனையா  இது ? ) 


2  ஹீரோவின்  மனைவி  டைவர்ஸ்  கேட்பதற்கு  ஸ்ட்ராங்கான  காரணம்  சொல்லவே  இல்லை .  டைவர்ஸ்க்கான  மெயின்  காரணங்களான  வரதட்சணை ,  இ எம் ஏ , குழந்தை  பாக்யம்  போன்ற  எந்த  பிரச்சனைகளையும்  அவள்  சொல்லவில்லை . ஓ சினாமிகா  பட  ஹீரோயின்  மாதிரி  காரணமே  சொல்லாம  பிரிவது  ஏனோ ? 


3  ஹீரோ - ஹீரோயின்  தப்பு  பண்ண  ஒரு  வாய்ப்பு  வந்தப்ப  அந்த  ரூம்ல  ஹீரோவின்  முதல்  மனைவி  ஃபோட்டோ  இருந்ததால்  என்னால  முடியல  என  ஹீரோ  நழுவுவது  நம்ப  முடியல அந்த  ஃபோட்டோ வை  எடுத்து  பக்கத்து    ரூம்ல  வைக்கக்கூடாதா?  இதுக்காக  மெனக்கெட்டு  ஹோட்டல்ல  ரூம்  போடலாமா? என  கேட்பது  நகைக்க  வைக்குது 


4  ஹீரோ திடீர்னு 4  நாட்கள்  காணாம  போறார் திரும்பி  வரும்போது  சாரி  சொல்றார். ஏன்  வாட்சப்ல  ஒரு  மெசேஜ்  கூட  அனுப்பலை ?  ஒரு  கால்  கூட  பண்ணி  சொல்லலை  என்பதற்கு  சரியான  பதில்   இல்லை , சும்மா  சஸ்பென்ஸ்க்காக சால்ஜாப் 


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பார்த்தே  தீர  வேண்டிய  படம்  எல்லாம் கிடையாது  . சும்மா  டைம்  பாஸ்  மூவியா  பார்க்கலாம் .  ரேட்டிங் 2 / 5 

ஆயிரம் பூக்கள் மலரட்டும் (1986) (தமிழ்)- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


 ஒரு  திரைப்பட  விழாவில்  மதர்லேண்ட்  பிக்சர்ஸ்  கோவைத்தம்பி  பேசும்போது  இந்தப்படத்தின்  தோல்விக்கு பொண்டாட்டி  தன்  புருசனையே  கொலை  செய்யும்  க்ளைமாக்ஸ்  தான்  காரணம்,  தமிழ்ப்பெண்கள்  புருசனைக்கொலை  செய்வதை  ஏத்துக்கலை  என  சொல்லி  இருந்தார். அதைக்கேட்டு  நான்  ஜெர்க் ஆகிட்டேன்.,  பொதுவா  இந்தப்பொண்டாட்டிங்க  புருசனை  காலம்  காலமா  கொலையா  கொன்னுட்டு இருக்காங்க , அப்படி  இருக்கும்போது  இந்த  ஜூஜூபி  விஷயத்துக்காக  ஒரு படத்தை  ஏத்துக்கலையா? என்ன?னு  பார்ப்போம்னு  களம்  இறங்குனேன்

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ ஒரு  டாக்டர் .  ஹாஸ்பிடல்ல  அவரு  ட்ரீட்மெண்ட்  தர்ற  மாதிரி  கண்ணுக்கு  எட்டுன  தூரம்  வரைக்காட்சிகளே  இல்லை . இவரு  குடி  இருக்கற  வீட்டில் ஹவுஸ்  ஓனர்  பொண்ணு  பாட்டுப்பாடிட்டு  சுத்திட்டு  இருக்கு . இவர்  அந்தப்பொண்ணை  சுத்திட்டு  இருக்காரு . இவரை  இன்னொரு  பொண்ணு  சுத்திட்டு  இருக்கு . இந்த  முக்  கேன காதல்  கதைல  எந்தக்கேனம்  காதல்  ஜெயிச்சுச்சு  என்பது  க்ளைமாக்ஸ் 


 ஹீரோவா  மைக்  மோகன் . . இவரு  பாடகராவே    காலம்  பூரா  நடிச்சு  ஹிட்  கொடுத்துடலாம்னு  நினைச்சு  இருப்பார்  போல  ,. டாக்டர்  கேரக்டர்  என்றதும்  திணறுகிறார்


பொதுவா  நிஜ  வாழ்க்கைல  பொண்ணு  அழகா  இருந்தாப்போதும்  , பசங்க  பின்னாடியே  போவானுங்க , ஆனா  சினிமால  மட்டும்  தான்  ஹீரோயின்  வீணை  வாசிக்கற  அழகு ,  ஓவியம்  வரையும்  அழகு  , பாட்டுப்பாடும்  அழகுனு  ஹீரோ  மயங்கறார்னு  ரீல்  விட்டுட்டே  இருக்காங்க 


வாய்  பேச  முடியாத  நாயகியா  சீதா . இவருக்கு  ஒரு  ஃபிளாஸ் பேக்  இவர்  ஏன்  பேச  முடியலைனு ?


 காலேஜ்ல  படிக்கும்போது  நட்ட  நடு  ராத்திரில  மார்ச்வரில  போய்  பிணங்களின்  முகத்தின்  மேல்  எலுமிச்சம்பழம்  வெச்சுட்டு  வரனும்  . இதான்  பந்தயம் .  சீதா   அப்படி    மார்ச்வரி  போனப்போ  காலேஜ்  ஃபிரண்ட்  ஒருத்தன்  பிணம்  மாதிரி   வேஷம்  போட்டுட்டு  சீதா  வந்ததும்  பே  அப்டினு  பயமுறுத்தறான். அந்த  அதிர்ச்சில   சீதாவால  பேச  முடியாம  போய்டுது 


 இந்த  அதிர்ச்சிக்கு  இன்னொரு  அதிர்ச்சி  வைத்தியம்  கொடுத்தா  சரி  ஆகிடும் , பேசிடுவாருனு  ஹீரோ  சொல்றாரு . அதுக்கான  ஐடியாவைக்கேட்டா  ஆஸ்கார்  விருதுக்குழு  கின்னஸ்  ரெக்கார்டு  குழு  எல்லாம்  மயங்கி  விழுந்துடும் 


அதாவது சீதாவை  பரிசல்ல  ஆத்துல  எங்கயோ  கூட்டிட்டுப்போறாரு  ஹீரோ ,  அங்கே  ஆள்  இல்லாத  தனிமை  இடத்துல  அவரை  ரேப்  பண்ண  ட்ரை  பண்றதா  டிராமா  போடறாரு  .  எந்தெப்பெண்ணுக்கும்  அவ  கற்புக்கு  களங்கம்  வர்றதுதான்  பெரிய  அதிர்ச்சி .. அப்டினு  கேவலமா  ஒரு  டயலாக்  வேற .  அப்படி  ரேப்  அட்டெம்ப்ட்  பண்ணதும்  சீதாக்கு  பேச்சு  வந்துடுது 


 நல்ல  வேளை . என்  வாழ்க்கைல  பேச்சு   வர்றதுக்கு  உங்க  இந்த  ட்ரீட்மெண்ட்  தான்  காரணம்  , ரொம்ப  நன்றி,  இதுக்கு  பிரதி  உபகாரமா  நிஜமாவே  நீங்க  வேணா  ஒரு  வாட்டி  என்னைக்கெடுத்துக்குங்கனு  சொல்லலை  நல்ல  வேளை 


ஆக்சுவலா  அட்டெம்ப்ட்  ரேப்  கேஸ்ல  ஹீரோவை  10  வருசம்  உள்ளே  போட்டிருக்கனும்   தப்பிச்ட்டாரு 


இப்போ  சீதா  ஒரு  ஆளை  லவ்  பண்றாரே  அந்தக்கதையைப்பார்ப்போம்


வில்லன்  ஒரு  விமனைசர்.  பொண்ணுங்களை  லவ்  பண்ண  வேண்டியது , மேரேஜ்  பண்றேன்னு  ஏமாத்தி  வரதட்சணை  வாங்க  வேண்டியது .  பின்  நைசா  பணம்   நகையோட  எஸ்  ஆவது  இதுதான்  அவன்  பிளான் 


க்ளைமாக்ஸ்  ல  சீதாவுக்கும்  வில்லனுக்கும்  மேரேஜ்  நடக்க  இருக்கு . மாப்ளை  வீட்டுக்காரங்க  மாப்ளை  ரூம்ல  இருக்காங்க , பொண்ணும்  பொண்ணு  வீட்டுக்காரங்களும்  பொண்ணு  ரூம்ல  இருக்காங்க 


 அப்போ  ஒரு  ஆள்  வந்து  மாப்ளையை  மிரட்றான்.  நீ ஒரு  டுபாக்கூர்னு  தெரியும் அதுக்கான  ஆதாரம்  என் கிட்டே  இருக்கு , எனக்கு  இவ்ளோ  பணம்  தரனும், இல்லைன்னா  எல்லாத்தையும்  பெண்  வீட்ல  சொல்லிடுவேன்கறான்


அப்போ  வில்லனான  மாப்ளை  “  ஓட்டை வாயை  வெச்சுட்டு   கம்முனுஜ்  இருக்காம அவன்  லீலைகள்  பூரா  உளறிடறான்  ., அதை  பக்கத்து  ரூம்ல  இருக்கற  பொண்ணு  கேட்டுட்டே  இருக்கு . அப்பவே  கல்யாணத்தை  நிறுத்தி  இக்ருக்கனுமில்ல? 


 அதை  விட்டுட்டு  அடுத்த  நாள்  காலைல  தாலி  கட்ற  வரை  வெயிட்  பண்ணி  குத்து  விளக்கை  எடுத்து  ஒரே  குத்து  . குத்திட்டு 


 டேய்  நீ  நேத்து  பேசிட்டு  இருந்ததை  என்  ரெண்டு  காதாலயும் கேட்டுட்டுதாண்டா  இருந்தேன்  அப்டிங்குது 


 அப்பவே  ஏம்மா  மேரேஜை  நிறுத்தலைனு  யாரும்  கேட்கலை 


 ஆனா  ஒல்ரு  சமாளிஃபிகேசன்  வசனம்  பேசுது


 என்னை  மாதிரி  வேற  எந்தப்பெண்ணும்  பாதிக்கப்படக்கூடாதுனு  தான்  இப்படிப்பண்ணேன்குது


 அட  கேனம், இதை  போலீஸ் ல  புகாரா  குடுத்தா  அவனும்  உள்ளே  போய்  இருப்பான், நீயும்  ஹீரோவைக்கட்டி  இருக்கலாம்’இந்தக்கேவலமான  சீனை  எழுதுனது  யாருனு  பார்த்தா  அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  27  பேரு  பட்டியல்ல  வருது , ஏம்ப்பா  யாராவது  ஒருவராவது  இதை  சொல்லி  இருக்கக்கூடாதா? 


கடைசில   ஹீரோ  ஆசைப்பட்ட  சீதா  கூடவும்  அவருக்கு  மேரேஜ்  நடக்கலை ,, ஹீரோ  மேல  ஆசைபப்ட்ட  ரஞ்சனி  கூடவும்  மேரேஜ்  நடக்கலை  


 அப்றம்  எதுக்கு  தண்டமா  ஹீரோனு  பேரு ?  தெரில  


  கவுண்டமனி  காமெடி  டிராக்  சுமாரா  இருக்கு .ஹீரோயின்  சீதா வுக்கு பேச  முடியாத  கேரக்டர்  என்பதால்  வசனம்  இல்லை , ரஞ்சனி  தொண தொணனு  பேசிட்டு இருக்கு. , ரஞ்சனி  ஊறுகாய்  மாதிரி  பாடல்  காட்சிகளில்  கிளாமரா  இருக்கட்டும்னு புக்  பண்ணி  இருக்காங்க  போல 

பாடல்கள்


1  ஆயிரம்  பூக்கள்  மலரட்டும்  ஆனந்தம்  எங்கும்  பெருகட்டும் 


2  மேகம்  அந்த  மேகம்  அது  வழி  தேடும்  ஊமை  தானே?  மவுனம்  இந்த  மவுனம்  இது  தேவன்  கோவில் 


3  பூ  மேடையோ?  பொன்  வீணையோ ?


4  நேத்து  உன்னைப்பார்த்து  என்  நெஞ்சுல  உள்ளதை  கண்ணுல  சொன்னேனே?


 சபாஷ்  டைரக்டர்


 1  படத்துல  2  ஹீரோயின்  என்பதால்  போட்ட  4  பாட்டுக்களை  சரி  சமமாப்பிரிச்சு    முதல்  2  பாடல்களை  சீதா  வுக்கும்   அடுத்த  2  பாடல்களை  ரஞ்சனிக்கும்  பிரிச்சுத்தந்தது, ஆனா  நாலிலும்  ஹீரோ  மோகன்  உண்டு 


2  பூ  மேடையோ  பாட்டு  காட்சிக்கான  லீடு  சீன்  செம  காமெடி .  வீட்டு  கூரை  மேல  ரஞ்சனி  நிற்பார் , கண்ணை  மூடி  ஏதோ  கேம்  போல   கீழே  ஹீரோ  நிற்பார்.  ஏதோ  சுவர்னு  காலை  ஹீரோ  தலை  மேல  வெச்சு  பின்  அபடியே  இறங்குவார். உடனே  டூயட் , என்னதான்  கண்ணை  மூடி  இருந்தாலும்  கல்லுக்கும்  ஆளுக்கும்  வித்தியாசம்  தெரியாதா?   சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ஸ்க்ரிப்ட்டே  படிச்சுப்பார்க்காம  இந்த  மாதிரி  குப்பைக்கதைக்கு  எல்லாம்  தயாரிப்பாளர்  எப்படி  மாட்றாங்கனு  தெரியலை .  டப்பாப்படம்  பாட்டு  நல்லாருக்கு  கவுண்டமணி  காமெடி  ஓக்கே  ரேட்டிங்  1 / 5 


ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இயக்கம்ஈ. இராமதாஸ்
தயாரிப்புகே. மோகன் துரை
கதைஈ. ராமதாஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புமோகன்
சீதா
ரஞ்சனி
கவுண்டமணி
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஷ்கரன்
பி. கிருஷ்ண குமார்
கலையகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
விநியோகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
வெளியீடுஆகத்து 8, 1986[1]
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தியா

Saturday, October 01, 2022

டைரி (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர்) @ ஆஹா ஓ டி டி


1966 ல் ரிலீஸ்  ஆன  மெட்ராஸ்  டூ  பாண்டிச்சேரி பஸ் ட்ராவல்ல போகும்  க்ரைம் த்ரில்லர் . செம ஹிட் ரஜினி  நடிச்சு 1981 ல  ரிலீஸ்  ஆன  கழுகு படம் பூரா  ஒரு  பஸ்ல  ட்ராவல்  ஆகும்., சூப்பர் ஹிட். 2000ல் ரிலிஸ்  ஆன  பார்த்தேன் ரசித்தேன் (பிரசாந்த்-லைலா) ரொமாண்டிக் சப்ஜெக்ட். ஹிட். பஸ்ல  பெரும்பாலான  காட்சிகள்  இருக்கும் .  நல்ல  ஹிட்/ 2002ல் ரிலீஸ் ஆன  சுந்தரா ட்ராவல்ஸ்  முரளி - வடிவேலு  காம்போல வந்த  செம ஹிட்  காமெடி  மூவி. ஒரு  அடாஸ்  பஸ்  வெச்சு முழு  படத்தையும்  ஓட்டிய  படம். . 2011 ல  ரிலீஸ்  ஆன எங்கேயும் எப்போதும் திரைப்படம் மெகா  ஹிட்.பஸ்ல  ஒரு ஆக்சிடெண்ட் ஆகும் 2012ல எம் சசிகுமார்  நடிப்பில் வந்த  சுந்தர பாண்டியன்  ஹிட் .  ./ 2022ல் ரிலீஸ் ஆன  நயன்  தாராவின்  ஓ 2  மட்டும்  விதி  விலக்கு  இது செம  ஹிட்  ஆகல. சுமாராப்போச்சு 


ஆக  நமக்குத்தெரிய  வரும்  நீதி-  பஸ்  சை  பேஸ்  பண்ணி திரைக்கதை   எழுதுனா  செண்ட்டிமெண்ட்டா  அது  ஹிட்  ஆகிடும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஃபிளாஸ்பேக்  சம்பவம் 1 -ஒரு  எம் எல்  ஏ வோட  பொண்ணு  தன்  காதலனோட  பஸ்ல  போய்  மேரேஜ்  பண்ணிக்கப்போறா. அது  தெரிஞ்சு  எம் எல்  ஏ  அடியாட்களை  அனுப்பி  அவங்களை  காலி  பண்ணச்சொல்றாரு.அந்த  பஸ்  ஒரு  விபத்துல  மாட்டிக்குது . இந்த  பஸ்ல  யார்  யார்  எல்லாம்  ட்ராவல்  பண்ணாங்களோ  அவங்களுக்கு  ஒரு சின்ன  ஃபிளாஸ்பேக்  கதை  இருக்கு . கிட்டத்தட்ட 45  நிமிடங்களுக்கு  மேல்  நிகழும்  இந்த  பஸ்  கதைல  ஹீரோ  கிடையாது . ஹீரோ  தேடும்  குற்றவாளிகள்  3  பேர்  இதுல  இருக்காங்க 


 ஃபிளாஸ்பேக்  சம்பவம் 2  - ஒரு  குறிப்பிட்ட  ஊர்ல  13  வது  கொண்டை  வளைவு  அமானுஷ்யம்  நிறைந்ததா  சொல்லபப்டுது . அங்கே  அடிக்கடி  விபத்து  நடக்குது/ இதைப்பற்றி  பேசிக்கிட்டே  ஒரு  ஜோடி  கார்ல  போறாங்க, கரெக்டா  அந்த    ஹேர்பின்  பெண்ட்  வரும்போது  அந்த  கார்  ஆக்சிடெண்ட்  ஆகுது. இருவரும்  ஸ்பாட்  அவுட் 


தற்கால      சம்பவம்  1 - ஹீரோ  ஒரு  போலீஸ்  எஸ்  ஐ. அவர்  டியூட்டில  ஜாயின்  பண்ணதும்  இது வரை  தீர்க்கப்படாத கேஸ்  எதையாவது  தீர்க்கனும்னு  கண்ணை  மூடிட்டு  ஒரு  ஃபைலை  தொடறார். அந்த  ஃபைல்  அவரோட  பர்சனல்  லைஃப்ல  ச,ம்பந்தப்பட்டதா  இருக்கும்னு  அவருக்கு  அப்போ  தெரியாது


  மேலே  சொன்ன   3  சம்பவங்களுக்கும்  எ4ன்ன  தொடர்பு  என்பதே  திரைக்கதை 


ஹீரோவா த்ரில்லர்  ஸ்டார்  அருள்  நிதி .  செமயான  ரோல்,  இவருடைய  ஹைட்டுக்கு  இவர்  போலீஸ்  ஆஃபீசர்  மிலிடிரி  ஆஃபிசர்  ரோல்  மேட்சா  இருக்குது .  அதிக  வசனம்  இல்லை ., சொல்லப்போனா  அதிக  காட்சிகளே  இல்லை ,  முதல்  பாதியில்  ஹீரோவுக்கே  அதிக  சீன்கள்  இல்லை  . செகண்ட்  ஆஃப்ல  தான்  சான்ஸ் 


 ஹீரோக்கே  வேலை  கம்மின்னா  ஹீரோயின்? பவித்ரா   மாரிமுத்து   சும்மா  வந்துட்டுப்போறார்


ஒரே  கதைல  அம்மா  செண்ட்டிமெண்ட்  ,  த்ரில்லர்  எலிமெண்ட் , மிஸ்ட்ரி  சீன்ஸ்   ஜீ வி  படத்தில்  வருவது  போல  முக்கோண  விதிகள்  ., தொடர்பியல்  விதிகள்னு  எல்லாத்தையும்ம்  பேக்  பண்ணிக்குடுக்கப்பார்த்திருக்கார்  இயக்குநர்முதல்  பாதி  ஸ்லோவா  போனாலும்  பின்  பாதி  குறிப்பா   கடைசி  அரை  மணி  நேரம்  செம  த்ரில்

ரசித்த  வசனங்கள்


1  க்ரைம்க்கு  எக்ஸ்பயரி  டேட்  கிடையாது , எப்போ  குற்றம்  வெளில  வருதோ  நிரூபிக்கப்படுதோ  அப்போ  தண்டனை  உண்டு 

2  நேரத்தை  யராலும்  நிறுத்த  முடியாது , ஆனா  அந்த  நேரம்  நம்மை எங்கேயோ  கொண்டு  போய்  நிறுத்திடும் 

3   போலீஸ்  பயிற்சில  சொல்லித்தந்த  முதல்  விஷயம்  நமக்கு  யார்  மேல  ச்ந்தெகம்  வருதோ  அவங்களை  குற்றவளியாவே  கருதிடனும்  அப்டியே  விசாரிக்கனும், அப்போதான்  நமக்கு  தடயங்கள்  கிடைக்கும் 

4   எதிர்காலம்  , இறந்த  காலம்  ரெண்டும்  நம்ம  பக்கத்துலயே  இருக்கு  ஆனா  நமக்கு  அது   தெரியறதில்லை 

5   ஏதோ  தப்பு  நடக்குது  ஆனா  அந்த  தப்பு  மட்டும்  என் கிட்டே  தப்பிச்ட்டே   இருக்கு  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1  கிட்ட்த்தட்ட  பல  வருடங்களாக  ஒரு  கிராமத்தில்  இருக்கும்  ஏரியில்  ஒரு  பஸ்  மூழ்கி  இருப்பது  யாருக்குமே  தெரியவில்லை  என்பது  நம்பும்படி  இல்லை . நகரம்னா  எவனும்  கண்டுக்க  மாட்டான், கிராமம்  அப்படி இல்லை

2   ஒரு  சாதாரண  சப்  இன்ஸ்பெக்டருக்கு  யாரை  வேண்டுமானாலும்  விசாரிக்கலாம் என  வானளாவிய  அதிகாரம்  இருக்கா? 

3  ஒரு  த்ரில்லிங்  மூவி  ஓடிட்டு  இருக்கும்போது  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  டபுள்  மீனிங்  பேசும்  சாம்ஸ்  , ஷாரா மொக்கைக்காமெடி  டிராக்  எதுக்கு ? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொதுவா  அருள்  நிதி  படங்கள்  ஏமாற்றாது ., வழக்கமா  அரைச்ச  மாவை  அரைக்கும்  கதைல  நடிக்க  மாட்டார் . மறுபட்ட  ஒரு  த்ரில்லர்  கதை  இருக்கும்  எனும்  நம்பிக்கையை  மெய்ப்பிக்கும்  படம் .  ரேட்டிங்  2.75 / 5   த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்  ஆஹா  ஓ டி டில  இருக்கு . முதல்  பாதி  பார்த்துட்டு  போர்னு  பாதில  விட்டவங்க  அதிகம், கடைசி  அரை  மணி  நேரத்தில்  தான்  ஜீவனே  இருக்கு 

Friday, September 30, 2022

பொன்னியின் செல்வன் பாகம் 1 (2022) - சினிமா விமர்சனம்


 ஸ்பாய்லர்  அலெர்ட்

எல்லாருக்கும்  புரியற  மாதிரி  அதாவது  நாவல்  படிக்காத  பாமரர்களுக்கும்  புரியற  மாதிரி  கதையை  சொல்லிடறேன்


தமிழ்  இனத்தலைவர் டாக்டர்  கலைஞர்  தான்  சுந்தரசோழன். இவருக்கு அழகிரி, ஸ்டாலின்  அப்டினு  ரெண்டு  பசங்க  இருக்கற  மாதிரி  சுந்தர சோழனுக்கு ஆதித்த  கரிகாலன், அருண்(ள்)மொழிவர்மன்  என  ரெண்டு  பசங்க. கனிமொழி  மகள்  மாதிரி  குந்தவைனு  ஒரு  மக. பெரியப்பா  மகன்   மதுராந்தகர்  பதவிக்குப்போட்டி  இடுகிறார். இவரை  மு க  முத்துனு  வெச்சுக்குவோம். இந்த  பதவிப்போட்டியில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதே  முதல்  பாகத்தின்  கதை 


சுந்தர  சோழனாக  பிரகாஷ் ராஜ். படுத்த  படுக்கைல  இருப்பதால்  இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை .ஆனாலும்  கம்பீரமான  நடிப்பு . 


மேலே  சொன்ன  கேரக்டர்களில்  அல்லாத  வந்தியத்தேவன்  எனும்  ஒற்றன்  கேரக்டரில்  ஹீரோவா  கார்த்தி . மொத்தமா  3  மணி  நேரம்  ஓடும்  படத்தில் ரெண்டே  கால்  மணி  நேரம்  இவருக்குதான்  அதிக  காட்சிகள் . துறுதுறுப்பு  , சுறுசுறுப்பு , குறும்பு  என  இவர்  துள்ளலான  நடிப்பில்  கலக்கி  இருக்கார் .  படத்தில்  வரும்  3  முக்கியமான  பெண்  கேரக்டர்களிடமும்  வழிவதும்  பம்முவதும்  அருமை 


ஆதித்த  கரிகாலனாக  வரும்  விக்ரம் நடிப்பு  கனகச்சிதம்.ஓப்பனிங்கில்  நிராயுதபாணியாய்  இருப்பவனை  நாங்கள்  கொல்வதில்லை  என  கெத்து  காட்டும்போது  அப்ளாஸ்  அள்ளுறார்.


அருள்  மொழிவர்மராக  பொன்னியின்  செல்வனாக  வரும்  ஜெயம்  ரவி  ஷாக்  சர்ப்பரைஸ்  ஆக்டிங். இவருக்கும்  கார்த்திக்கும்  வரும்  ஒரு  ஃபைட்  சீன்  செம 


குந்தவையாக வரும்  த்ரிஷா  கெட்டப் , மேக்கப்  நடிப்பு  எல்லாம்  அழகு 


 வில்லியாக, பெரிய  பழுவேட்டரையரின்  மனைவியாக, நந்தினியாக   வரும்  ஐஸ்வர்யாராய்  செம  ஆக்டிங் . 


பெரிய  பழுவேட்டரையrஆக  சரத்குமார் , சின்ன   பழுவேட்டரையராக  இரா  பார்த்திபன்  கச்சிதமான  நடிப்பு 


மதுராந்தகராக  ரகுமான்  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  ஓக்கே , அம்மாவை  எதிர்த்துப்பேசும்  காட்சி  அனல்  பறக்குது 


நந்தினியாக  வரும்  ஐஸ்வர்யாராய்  தன்  முதல்  கணவரான   வீர  பாண்டியனைக்கொன்ற  ஆதித்த  கரிகாலனை  பழிக்குப்பழி  வாங்கத்தான்   சோழ  தேசத்துக்கு  வருகிறாள். இது  போக  ஆல்ரெடி  ஆதித்த  கரிகாலனுடன்  ஒரு  காதல்  வேற  இருக்கு 


 ஆக  மொத்தம்  இவருக்கு  3  ஜோடி 


ஆதித்த  கரிகாலன்  போர்க்களத்தில்  இருக்கிறார்.  அருள்  மொழி  வர்மன்  இலங்கையில்  இருக்கிறார். சுந்தர  சோழன்  தஞ்சையில்  இருக்கிறார்.  அனைவரையும்  தஞ்சை  வர  வைக்கனும்,  அதுதான்  ஹீரோ  கார்த்தியின்  பணி 


படத்தின்  முதல்  ஹீரோ  ஆர்ட்  டைரக்டர்  தோட்டா தரணிதான் . பிரம்மாண்டமான  செட்கள்  அரண்மனைக்காட்சிகள்  எல்லாமே  தத்ரூபம். வில்லன்  யார்  எனில்  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்  காட்சிகளும்  விஎஃப் எக்ஸ்  ஒர்க்கும். சரியா  செட்  ஆகலை 


ஜெயம்  ரவிக்கும் , கார்த்தி  க்கும்  இடையே  நடக்கும்  ஃபைட்  செமயா  படமாக்கப்பட்டு  இருக்கு


 ஆனா  மற்ற  போர்க்காட்சிகள்  எல்லாம்  கூட்டத்தோட  கோவிந்தா  போட்ட  மாதிரி  ஏனோதானோனு  தான்  இருக்கு 


பாகுபலில  போர்க்காட்சிகள்  லாங்க்  ஷாட்டில்  ரசிக்கும்படி  படமாக்கி  இருந்தாங்க . இதில  க்ளோசப்  ஷாட்ல  50  பேரை  வெச்சு முடிச்ட்டாங்க 


 சபாஷ்  டைரக்டர்


1  ரைட்டர்  ஜெயமோகனுடன்  இணைந்து  இயக்குநர்  மணிரத்னம்  திரைக்கதை  அமைத்த  விதம். ஆனானப்பட்ட  எம் ஜி ஆர் , கமல்  உட்பட  பலர்  முயற்சித்தும்  முடியாததை  முடிச்சுக்காட்டியமைக்கு  ஒரு  ஷொட்டு . நாடக அனுபவம்  உள்ள  குமரவேல்  திரைக்கதை  அமைப்பில்  உதவி   இருப்பது  அருமை 


2   விக்ரம் , த்ரிஷா , ஐஸ்வர்யா ராய்  மூவருக்குமான  ஓப்பனிங்  சீன், த்ரிஷா - ஐஸ்  காம்போ  சீன்   எல்லாம்  டைரக்சன் டச்


3  பாடல்  காட்சிகளில்  திருடா  திருடா  படத்தில்  வரும் வீரபாண்டிக்கோட்டையிலே  ரெஃப்ரென்ஸ்  இருப்பது  லைட்டிங்  எல்லாம்  செம 


4  கடல்  காட்சிகள்  பாய்மரக்கப்பல்  காட்சிகள்  எல்லாம்  பிரம்மாண்டம் 


5  கார்த்தி  பேசும்  காமெடி  சீக்வன்சில்  ரைட்டர்  ஜெயமோகன்  வசனம்  பளிச்


6  அதிகம்  எதிர்பார்க்காத  விவேக்  கேரக்டர்  பூங்குழலியாக  வரும் படகோட்டி  ஐஸ்வர்யா  லட்சுமி  கேரக்டர்  குட் 


7  ஏ ஆர்  ரஹ்மான்  இசையில்  பாடல்கள்  ஹிட்  பிஜிஎம்  செம . தோட்டாதரணியின்  ஆர்ட்  டைரக்சன்  சூப்பர் 


8  ரவிவர்மனின்  ஒளிப்பதிவு  கனகச்சிதம்


படத்தின்  மைனஸ்


1  ஹீரோவுக்கு  காதல்  காட்சிகளே  இல்லை . அவ்வளவு  ஏன்? சரித்திரப்படத்தில்  யாருக்குமே  லவ்  போர்சனே  இல்லாதது  மைனஸ்  தான்


2  போர்க்காட்சிகளை  பாகுபலி  மாதிரி  பிரம்மாண்டமாக  எடுக்கவில்லை  அல்லது  அப்படிக்காட்டவில்லை 


3   சி ஜி  ஒர்க்கும்  விஎஃப் எக்ஸ்  ஒர்க்கும்  ரொம்ப  சுமார்தான்


ரசித்த  வசனங்கள்


1  சுரங்கப்பாதைல  போற  வழில   கருவூலம்  இருக்கும், அதுல  தங்கம்  இருக்கும், மயங்கிடாத 


 வைரச்சுரங்கத்தையே  இங்கே  பாத்துட்டேனே?


 மயங்கிட்டாயா?


 கொஞ்சமா


2  பேரழகிகளை  விட  ஆசை  காட்டுவது  மணிமுடி


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைத்துத்தர  ரசிகர்களையும்  கவரும்    ஜனரஞ்சகமான  படம்  தான் 


பொன்னியின் செல்வன்-1 (2022)- மணிரத்னம் பிரமாதமான மேக்கிங்கில் கலக்கிட்டார். கடல் காட்சிகள் பிரம்மாண்டம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி நடிப்பு அருமை , த்ரிஷா-ஐஸ் காம்போ காட்சி செம . நாவல் படித்தவர்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும், பாகுபலி போல இந்தியா முழுக்க ஹிட் ஆவது கடினம், தமிழகத்தில் ஏ செண்ட்டரில் ஹிட் ஆகும். விகடன் 50 , ரேட்டிங் 3.5 / 5


 

Thursday, September 29, 2022

நானே வருவேன் (2022) - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஹாரர் & சைக்கோ க்ரைம் த்ரில்லர்)


நேமாலஜிப்படி தாணு  தனுஷ் இருவ்ருக்கும்  ராசி  உண்டு.  DHANUSH   என்ற  சொல்லுக்குள்  அடங்கிடுது.DHANU  சோ  ஹீரோ  &  புரொடியூசர்  பிராப்ளம்  வராது. 


 ஆளவந்தான்  பட்ம்  அட்டர்  ஃபிளாப்  ஆனதில்  கமல்  மீது   கலைப்புலி எஸ்  தாணுக்கு  ஒரு  வ்ருத்தம்  உண்டு. அதே  கதை  ஒன்லைனை  வேற  பாணில   வேற்  திரைகக்தைல ந் லோ பட்ஜெட்ல  எடுத்து  ஜெயிச்சுக்காட்டறேன்  பார்  என  மானசீகமாக  சவால்  விட்டு  எடுத்த  மாதிரியே  இருக்கு 


 ப்டத்தின்  முதல்  பாதி    சூப்பர்  நேச்சுரல்  ஹாரர்  ஃபிலிம்  அல்லது  கோஸ்ட்  த்ரில்ல்ர்  மோட்ல  எடுத்துட்டு  பின்  பாதி  சைக்கோ  க்ரைம்  த்ரில்லரா  போனாலும்  டோட்டலா  படம்  ஸ்லோ வாதான்  போகும்,  அதனால  ஆடியன்ஸ்  தியேட்டருக்கு  பொறுமையான  திரைக்கதையை  எதிர்பார்த்து  வரனும் 


செல்வராகவன்  +  தனுஷ் +  யுவன்  ஷங்கர்  ராஜா  காம்போ  நீண்ட  இடைவெளிக்குப்பின்  இனையுது 


 ஸ்பாய்லர்  அலெர்ட் 


நான்- லீனியர்  கட்ல  கதை  சொல்லப்ப்ட்டாலும்   நம்ம  விமர்சனத்துல  ரிவர்ஸ்  பேட்டர்ன்ல  கதை  சொல்றேன்

 சம்பவம் 1 - பொதுவாவே  இந்த  சம்சாரம்ங்க  வாயைத்திறந்தாலே  நமக்கு  பக்னு  இருக்கும், என்ன  கோரிக்கை? என்ன  ஆர்டர்? என்ன  ஷாப்பிங்?னு... ஆனா  வில்லன்  கொடுத்து  வெச்சவர். ஒரு பேச்சு  வராத  சாந்தியை  லவ்  மேரேஜ்  பண்ணிக்கறாரு . அவருக்கு  2  பசங்க.  ஃபேமிலியோட  வெளில   போகும்போது  ஒரு  ரவுடி  கும்பல்   வில்லனை      வம்படியா  கலாய்க்குது .  வில்லன்  அமைதியா  வர்றார். ஆனா  பச்ங்க  சலிச்சுக்கறாங்க, அவங்களை  ஒரு  காட்டு  காட்டி  இருக்கலாமில்ல?  என  அங்கலாய்க்கறாங்க . 


அன்னைக்கு  நைட்  காட்டுக்கு  வேட்டையாடப்போறேன்னு வில்லன்  கிளம்பறார்.  மகன்  ஒருத்தன்  அப்பா  வேட்டையாடுவதை  வீடியோ  எடுக்கலாம்னு  அவருக்கே  தெரியாம  ஜீப்ல  ஏறிக்கறான்.அன்னைக்கு  நைட்  நடக்கும்  சம்பவங்கள்  அவனுக்கு  அதிர்ச்சி .. 


 வில்லன்  மகன்  ஜீப்ல  இருந்ததை  ஒரு  கட்டத்தில்  வில்லன் பார்த்துடறார். இந்த  விஷயத்தை  இங்கே  நடந்ததை  அம்மா  கிட்டயோ  வேற  யார்  கிட்டேயோ  சொன்னே  தொலைச்சிடுவேன்னு  மிர்ட்றார்


அவன்  அம்மா கிட்டே  அப்பா  பற்றிய  ரகசியங்களை  சொன்னானா?  பின்  விளைவுகள்  என்ன  ஆச்சு ?   இது  சஸ்பென்ஸ்


சம்பவம் 2  - ஹீரோக்கு  ஒரு  சம்சாரம்  ஒரு  பெண்  குழந்தை . பாப்பாவுக்கு  12  வயசு  ஆனதும்   அவர்  கிட்டே  ஒரு  மாற்றம்  வருது. ரூம்ல  தனியா  இருக்கறப்போ  வேற  யார்  கிட்டேயோ  பேசற  மாதிரி  தெரியுது .  யார்னு  கேட்டா  அதெல்லாம்  ஒண்ணும்  இல்லைனு  சமாளிக்கறா.  ஒரு  கட்டத்தில்  இது  ஓவர்  ஆகவே  சைக்யாட்ரிஸ்ட்டிடம்  கூட்டிட்டுப்போறாங்க.    ஹீரோ  மகளை  ஒரு  ஆவி  பிடிச்சிருக்கு அந்த  ஆவி  ஒரு  கொலை  பண்ணனும்னு  டிமாண்ட்  வைக்குது . அதை  அந்தக்கொலையை  ஹீரோ  பண்ணாலும்  சரி  ஹீரோ  மகள்  உடம்பில் இருந்து  ஆவியை  பண்ண  விட்டாலும்  சரி .. இஅந்தக்கொலை  எதுக்காக  ப்ண்ணனும்?  யாரைப்ப்ண்னனும்  என்பது  சஸ்பென்ஸ் .  ஆவியின் கோரிக்கையை  ஹீரோ  நிறைவேற்றினாரா? இல்லையா?  அது சஸ்பென்ஸ் 


 சம்பவம்  3  -  ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  ,அவங்களுக்கு  ரெண்டு  பசங்க. 2  பேரும்  ட்வின்ஸ் . ஒருத்தன்  நல்லவன், இன்னொருவன்  கெட்டவன் .  சைக்கோ  மாதிரி , அவன்  பார்வையே  சரி இல்லை ., ஏண்டா  இப்டி  இருக்கே?னு  கேட்டதுக்கு  அப்பாவையே  போட்டுத்தள்ளிட்டான் . அரண்டு  போன  அம்மா  ஜோசியரிடம்  போக  அந்தக்குழந்தையால  ஆபத்து .  விரட்டி  விட்டுடுங்க  என்கிறார்/. அம்மா  நைசா  அந்தப்பையனை  கழட்டி  விட்டுட்டு  எஸ்  ஆகிறார் 


 மேலே  சொன்ன  3    வெவ்வேற  சம்பவங்களும்  எப்படி  ஒரு   நேர்கோட்டில் இனையுது  என்பதே  திரைகக்தை 


 ஹீரோவா  தனுஷ் , அமைதியான  நடிப்பு . கெட்ட்ப்பும்  நார்மல் . அவருக்கு  மனைவியாக  இந்துஜா   அதிக  வாய்ப்பில்லை  வந்தவ்ரை  ஓக்கே 


 தனுஷின்  மகளாக  வரும் ஹியா  தவே  கலக்கலான  நடிப்பு . படத்தில்  தனுஷ்க்கு  அடுத்து  இவருக்குதான்  அதிக  காட்சிகள் ., குறிப்பாக இண்ட்டர்வெல்  பிளாக்கில்  அவரது  பேய்ச்சிரிப்பு   பிரமாதம் 


வில்லன்  தனுஷ்க்கு  தியேட்டரில்  அப்ளாஸ்  அள்ளுது .,அனாயசமான  நடிப்பு 


சிறுவர்கலாக  வரும்  இரட்டையர்கள்  ந்டிப்பு  அபாரம் 


வில்லனின்  மனைவியாக  வருபவர்  நடிப்பு  குட் . சைக்யாட்ரிஸ்டாக  வரு ம்  பிரபு  குட்  ஆக்டிங்  . யோகிபாபுவுக்கு  அதிக  வேலை  இல்லை 


  ஒளிப்பதிவு  இசை  படத்தின்  பெரிய  பலம்   சபாஷ்  டைரக்டர்


1    த  காஞ்சூரிங் படத்தில்   வருவது  போல  திகில்  காட்சிகளை   இதில்  எதிர்பார்க்கவில்லை . ஒரு  சீனில்  கூட  பேயைக்காட்டாமல்யே  திகிலை  வரவழைக்கிறார்கள்:


2   ரொம்ப  லோ  பட்ஜெட்டில்  இரு  வீடுகளிலேயே  ஷூட்டிங்கை  முடித்த  சாமார்த்தியம்  சபாஷ் 


3    வில்லன்  வரும்போது  ஒலிக்கும் பிஜிஎம்  அந்தப்பாட்டு  கொலை  மாஸ் 


திரைக்கதையில் சில  ஆலோசனைகள்,  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவா   இந்தியக்குடும்பங்களில்  அம்மா  அப்பா  மகள்  எல்லாம்  ஒரே  பெட்ரூமில்  படுப்பதுதான்  வ்ழக்கம்,  ஃபாரீன்  படத்தில்  இருந்து  சீன்  உருவும்போது  அப்படியே  வைக்கனும்னு  இல்லை , நம்ம  கலாச்சாரத்துக்குத்தகுந்த  மாதிரி மாத்திக்கனும், இந்த  விஷயத்தில்  அட்லீ  கெட்டி 


2   ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  படுத்திருக்கும்  கட்டில்  கிட்டத்தட்ட 10  பேர்  படுக்கும்  அளவு  அகலமாத்தான்  இருக்கு ., மகள்  நைட்  வந்து  இன்னைக்கு  நான்  உங்க  கூடப்படுத்துக்கறேன்  என  சொல்லும்போது  அப்பா  ஓகேங்கறார். அம்மா  கோவிச்ட்டு எனக்கு  கட்டில்ல  இடம்  போதாதுனு  கோவிச்ட்டு  வெளில  போறார். இந்த  சீன்  எதுக்கு ? 


3    மகளுக்கு  ஏதோ  பிரச்சனை  என்று  தெரிந்த  பின்னும்  மக்ளை  தனி  அறையில்   ப்டுக்க  வைப்பது  ஏன் ? 


4  மகள்  ரூமில்  கேமரா  செட்  பண்ணுவது  இன்ன  பிற  டெக்னிக்கல்  அம்சங்கள்  ஃபிட்  பண்ணுவது  எல்லாம்  மகள்  ஸ்கூலுக்குப்போனபின் அவளுக்கு  தெரியாமலேயே  ப்ண்ணலாமே? 

5  பொதுவா  தம்பதிக்கு  2  வது  குழந்தை  வேணும்னா  முதல்  குழந்தை  பிறந்து   5   வருடத்துக்குள்ள் தான்  கேட்பாங்க, அதான்   உலக  வழக்கம் , இந்த  ஹீரோயின்  மகளுக்கு  12    வயசு  ஆனபின்  இவளுக்கு  மேரேஜ்  ஆகிட்டா  நாம  தனியா  இருப்போம்  இன்னொரு  குழந்தை  பெத்துக்கலாம்னு  சொல்லுது . காலம் கடந்த  ஞானம்   


6  வில்லனுக்கு  வேலை  வெட்டி  எதும்  இருப்பதாத்தெரில. பூவாவுக்கு என்ன  பண்றாரு ? 


7 பொதுவா  ஒரு  கொலையைப்பார்த்த  சாட்சியை  விட்டு  வைப்பது  அபாயம்  தான், ஆனா  தன்  சொந்தக்குழந்தை தான்  சாட்சி  எனும்போது  யாராவது  கொல்வாங்களா? எல்லாரையும்  கொன்னுட்டு  அவர்  எங்கே  போகப்போறார்? 


8  வில்ல்ன்  35  வய்சுல  தான்  ஏன்  சைக்கோ  ஆ னேன்னு  காரணம்  சொல்வது  ஓக்கே  ஆனா  சின்னப்பையனா  இருய்க்கும்போதே  அவர்  ஏன்  சைக்கோவா  ஆனார்  என்பதற்கு  பட்த்தில்  விளக்கம்  இல்லை . வ்ழக்கமா  அனாதை , அன்பு  இல்லைனு  சப்பைக்கட்டு  கட்டுவாங்க  இதில்  அது  கூட  இல்லை 9 வில்லனின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  இன்னும்    ஸ்ட்ராங்கா  டிசைன்  பண்ணி  இருக்கலாம்


10  க்ளைமாக்சில்  200  அடி  பள்ளத்தாக்கில்  மேலே  இருந்து  விழும்  ஹீரோ  வில்லன்  இருவருமே  உயிர்  பிழைப்பது  காதில் பூ .  கீழே  தண்ணி  ஓடுதுனு  காட்டியாவது  சமாலிச்சிருகலாம்


11  நீ  என்னை  விட  மோசமானவன்  என  செல்வராகவன்  சொல்லும்போது    அப்றம்  ஏப்பா  அவரை  கூட  வெச்சுக்க்றேனு  கேட்கத்தோணுது 


12  இவ்ளோ  க்ளேபரங்கள்  கதைல  நடக்குது  . ஒரு  மருந்து , மாத்திரை , டானிக்குக்கூட  போலீஸ்  கேரக்டரே  இல்லை 

 ரசித்த  வசனங்கள்


1     என்னை  விட  நீ  ஏன்  பலசாலி  இல்லைனு  தெரிய்மா? ஏன்னா  நான்  அனுபவிச்ச  வலி  எனக்கு  நிகழ்ந்த  நிராகரிப்புகள்  இதெல்லாம்  உனக்கு  நிகழ்லை 


2   உலகத்தோட  எந்த  மூலைக்கு  நீ  போனாலும்  அப்பாவா  உன்னைப்பாதுகாக்க  அங்கே  வருவேன் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  ஃபேமிலியோடு  பார்க்கத்தகுந்த  ஒரு த்ரில்லர்  படம் தான் . ரெண்டு  மணி  நேரம்  தான்  ஓடுது  .  பார்க்கலாம்  

நானே வருவேன் (2022)-முதல் பாதி கோஸ்ட் த்ரில்லர்.பின் பாதி சைக்கோ க்ரைம் த்ரில்லர்.யுவன் பிஜிஎம் பட்டாசு.சைக்கோ தனுஷ் நடிப்பு செம.லோ பட்ஜெட்ல ஒரு ஹிட் படம்.விகடன் 43. ரேட்டிங். 2.75 / 5. #NaaneVaruvean

Wednesday, September 28, 2022

பலே பாண்டியா (1962) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா)

 திரிசூலம் , தெய்வ  மகன், சந்திப்பு  என  பல  பட்ங்களில்  சிவாஜி  3  வேடங்களில்  நடித்திருந்தாலும்  முதன்முதலாக  3  மாறுபட்ட  வேடங்களில்  நடித்தது  இதில்  தான். ஹீரோ  சிவாஜி   3  வேடங்கள் , வில்லன்  எம் ஆர்  ராதா  2  வேடங்கள்  . இப்படி  ஒரு காம்போ  இதுக்குப்பின்  எந்தத்தமிழ்ப்படத்திலும்  அமையலை . இந்த காமெடி பட்ம்  செம   ஹிட்  ஆச்சு., பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்டு .   கமலின்  மைக்கேல்  மதனகாமராஜன்  ஆள்  மாறாட்டக்காமெடி , பிரபுவின்  சின்ன  வாத்தியார்  ஹீரோ  கெட்டப்  எல்லாம் இங்கே  இருந்து  உருவுனதுதான் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  தற்கொலை  முயற்சியில்  இறங்கறார். காரணம்  வேலை  வாய்ப்பின்மை , அவரை  வில்லன்  காப்பாத்தி  அவர்  வீட்டுக்குக்கூட்டிட்டு  வந்து  சாப்பாடு  எல்லாம்  போட்டு  அங்கேயே  தங்க  வைக்கிறார்

 வில்லன்  கிட்டே  ஹீரோ  மாதிரியே  உருவத்தோற்றம்  உள்ள ஆள்  இருக்கான். அதனால  வில்லன்  பிளான்  என்னான்னா   தன்  பணியாள்  பேரில்  இன்சூரன்ஸ்  பாலிசி  எடுத்து   பின்  ஹீரோவை  தற்கொலை செய்ய  விட்டு  பின்  அந்த  இன்சூரன்ஸ்  பணத்தை  ஆட்டையைப்போட்டுடலாம்னு  ஐடியா 

அப்போ  ஹீரோயின்  இண்ட்ரோ. அவர்  கிட்டே  இருந்த  பர்சை  திருடன்  பறிச்சுட்டு  ஓட  ஹீரோ  அதைக்கைப்பற்றித்தர்றார். நிஜ  வாழ்க்கைல  5  ரூபா  அல்லது  10  ரூபா  டிப்ஸ்  தருவாங்க  இந்த  உதவிக்கு , ஆனா  சினிமால  உடனே  இருவருக்கும்  லவ் 

 ஒரு  எஸ்டேட்  ஓனரோட  பொண்ணு  மனநிலை  பாதிக்கபப்ட்டு  இருக்கு  அதை  ஹீரோ  காப்பாத்தறார். அந்த  நன்றிக்கடனுக்காக  ஹீரோவை  தன்  வளர்ப்பு  மகனாக  அறிவிக்கிறார்  ஓனர்

  வில்லன்  ஒரு  சூழ்ச்சி  செஞ்சு  தன்  அடியாள்  செஞ்ச  தப்புக்கு  ஹீரோவை  ஜெயிலுக்குப்போவ்து  போல  செய்கிறார்

 ஹீரோக்கு  எஸ்டேட்  சொத்து  எல்லாம்  வருதுனு  தெரிஞ்சதும்  ஹீரோவோட  அண்ணன்  சம்சாரம்  அண்ணி  ஒரு  சதித்திட்டம்  தீட்றா

 அதன்படி  தன்  கணவர்  வெச்சிருக்கும்  லேப்  தீப்பற்றி    எரிந்ததாகவும் அதுல  கணவர்  இறந்ததாகவும்  நாடகம்  ஆடி  ஹீரோ  இடத்துக்கு  கணவனை  அனுப்பி  ஆள்  மாறாட்டம்  பண்ணலாம்னு  பிளான் 

இப்போ வில்லி  அண்ணியின்  பிளான்    ஜெயிச்சுதா? வில்லன்  பிளான்   ஜெயிச்சுதா?  ஹீரோ  ஜெயிச்சாரா? 

 இதை  எல்லாம்  ஜாலியான  திரைக்கதையில்  கண்டு  மகிழவும் 

 
சிவாஜி  ஆக்டிங்  பற்றி  சொல்லவும்  வேண்டுமா?  3  வேடங்கள்  ஒரே  கெட்டப்  ஒரே டிரஸ்  ஆனா  க்ளைமாக்ஸில்  மாறுபட்ட  3  விதமான  நடிப்பு  தரனும்,  பாடி லேங்க்வேஜில்  கலக்கி  இருக்கார் 

ஒரு  ஜோடி  சந்தியா  ( ஜெ வின்  அம்மா )   இன்னொரு ஜோடி  தேவிகா 

எம் ஆர்  ராதாவின்  இரு  மாறுபட்ட  கெட்டப்  அண்ட்  உடல்  மொழி  எல்லாம்  பட்டாசா  இருக்கும் 

  இதில்  வரும்  மாமா  -  மாப்ளே  பாட்டு  பட்டி தொட்டி  எல்லாம்  ஹிட்டு   ஆர்கெஸ்ட்ரா  வில்  நிச்சயம்  பாடியே  தீருவார்கள் 

பி  ஆர்  பந்துலு  திரைக்கதை  இயக்கம்  கலக்கல்  ரகம் 

 ரசித்த  வசனங்கள் 

1   அரசியலுக்கும்  , எனக்கும் ராசி  இல்லை , இனி  அரசியல்  பக்கமே  எட்டிப்பார்க்க  மாட்டேன் , தேர்தல்ல தான்  ஜெயிக்க  முடியலையே ? 

2 குறிக்கோள்  இல்லாமல்   கோட்டு  வாய்  கூட  விடமாட்டேன் 

3   நாம்  நினைப்பதெல்லாம்  நடக்கா  விட்டால்  , நாம்   நினைக்காதது  எதிர்பாராதது  கூட   நடக்கலாம்  இல்லையா? 


4  தங்கள்  இதயம்  என்ன  கல்லா?  வாயில்  இருந்து  வருவது  என்ன  சொல்லா?    இந்த  மருமகனோடு  மல்லா ?  (  மல்லுக்கட்டுதல் )

5  எத்தனை  ஜென்மம்  எடுத்தாலும்  அவர்  தான்  என்  கணவர் 

  ஏம்மா, நாளைக்கு  என்ன  நடக்கும்னே  யாருக்கும்  தெரியாது , நீ  ஜென்மக்கணக்குக்கு  பிளான்  போடறியா? 


  படப்பிடிப்பில்  நடந்த  ரசமான  சம்பவம்

  மாமா    மாப்ளே  பாடல்  காட்சியில்  ந்டிக்கும்போது  எம் ஆர்  ராதா  ஒரு  சீனில்  பாகவ்தர்  போல  கையை  காதுக்குப்பக்கத்தில்  வைத்து  பாடுவது  போல  அபிநயம்  பிடித்தாராம்.  ஷாட்  ஓக்கே  ஆன  பிறகு  டைரக்டர்  அவரிட,ம்  அந்த  மாதிரி  சீனே  இல்லையே? என  கேட்க   அ0ந்த   சீனில்  சோபாவில்  அமர்ந்தபடி  குலுங்கும்போது பாடியை  ஓவரா  அலட்டிட்டேன்  போல  விக்  கழண்டுடுச்சு. அது  விழாமல்  பிடிக்க  பாகவதர்  மாதிரி  பாவ்லா  பண்ணேன்  என்றாராம்.  ஃபிலிம்  ரோல்  வேஸ்ட்  ஆகாம  காப்பாத்துனேன்  பாரு  என்றாராம்.   இந்த  சீனை  ரசிக்க  அந்த  மாமா  மாப்ளே  பாட்டை  கேட்டுப்பாருங்கள் 

  செம  ஹிட்டுபாட்டு   லிஸ்ட்  (  படத்தில்  வரும்  வரிசைப்படி  இல்லாமல்  ஹிட்  பேசிஸ்)

1    வாழ  நினைத்தால்  வாழலாம்  வ்ழியா  இல்லை  பூமியில் 

2  அத்திக்காய்  காய்  (  இதுல  கொஞ்சம்  டபுள்  மீனிங்  வரும் )

3   ஆதி  மனிதன் 

4  நீயே  உனக்கு  என்றும்  

5   யாரை  எங்கே  வைபப்து  யாருக்கும்  தெரியல 

6  நான்  என்ன  சொல்லி  விட்டேன் 

-லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   இன்சூரன்ஸ்  கம்பெனி  ரூல்ஸ்  எல்லாம்  தெரியுமா? தெரியாதா? பாலிசி  போட்டு  ஒரு  மாதத்துக்குள்  ஒருவர்  தற்கொலை  செய்து  கொண்டால்  பணம்  கிடைக்காது 

2  தன்  கணவனின்  தம்பி  போல்  ஆள்  மாறாட்டம்  செய்ய  தன்  கணவனை  தூண்டும்  மனைவிக்கு  தன்  தம்பியின்  காதலி  தன்  க்ணவனுடன்  நெருக்கமாவார்  என  யூகிக்க  முடியாதா? பொதுவா  தமிழகப்பெண்கள்  பொசசிவ்னெஸ்  ஜாஸ்தி. எப்படி  இதுக்கு  ஒத்துக்கறாங்க ? 

3  தற்கொலைக்கு  முயல்வது  ச்ட்டப்படி  தவறு . படம்  முழுக்க  ஆங்காங்கே  தற்கொலை  ,முயற்சியில்  ஈடுபடும்  ஹீரோவை  போலீஸ்  கண்டுக்கவே  இல்லையே? 


4   ஆள்  மாறாட்டம்  செய்யும்  எல்லாப்படங்களிலும்  ஒரு  லாஜிக்  இடிக்கும்.  முகச்சாயல்  ஒன்றாக  இருக்கலாம், ஆனா  கை  ரேகை  வேற  வேற . ஆள்  இறந்தால்  ரேகையை  வெச்சுக்கண்டுபிடிக்கலாமே? 


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சிவாஜி  ரசிகர்கள்  ,மட்டுமல்ல  ஜாலி  காமெடி  ரசிக்ர்களும்  அவசியம்  காண  வேண்டிய  ப்டம்  எம் ஆர்  ராதா  நடிப்புக்காகவே  பார்க்கலா,ம்  ரேட்டிங்  3 / 5