Wednesday, June 02, 2021

KALA 2021 (malayalam) -சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் )

 யூ  ட்யூப்ல  பல  புத்திசாலி  விமர்சகர்கள்  இந்தப்படத்தின்  டைட்டிலை  உச்சரிக்கும்போது  காலா  எனவும்  , கலா  எனவும்  சொன்னாங்க. எனக்கு  திருவிளையாடல்  டயலாக்  தான்  ஞாபகம் வந்தது . அது  காலாவும்  இல்லை , கலாவும்  இல்ல. கள  அதாவது  களை .   தேவை  இல்லாத  ஆணி  அப்டினு  அர்த்தம்.  அமேசான்  பிரைம்ல  இது  கிடைக்குது


இது  உண்மையில்  நடந்த  சம்பவம்னு  சொல்றாங்க. இந்தப்படத்தின்  க்ளைமாக்ஸ் ல  வர்ற  கடைசி  30  நிமிஷ  ஆக்சன்  சீக்வன்ஸ்  காட்சிகளை  பலரும்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா  ரெஞ்சுக்கு  சிலாகிச்சு  இருந்தாங்க   . அதெல்லாம் கரெக்டா  , ஓவர்  ரேட்டடா?  லாஜிக்கலி  ஒத்துக்கற  மாதிரி  இருக்கா   என்பதை  எல்லாம்  பொறுமையா  பார்ப்போம் வாங்க 


ஹீரோ  தன்  மனைவி , மகன், அப்பா   உடன்   வீட்டில்  வசித்து  வருகிறார்.  விவசாயம்  தான்  தொழில். அப்பாதான்  எல்லாம்,   ஹீரோ  டம்மிதான்


வில்லனோட  நாயை  ஹீரோ  மப்பில்  வெடி  வெச்சு  கொன்னுடறார்.அதுக்கு  பழி  வாங்க  வில்லன்  ஹீரோ  இடத்துக்கே  தேடி  வந்து அடிக்கிறார். அவ்ளோ  தான்  கதை . படம்  மொத்தம்  2  மணி  நேரம்  11  நிமிசம்  ஓடுது. பெண்களுக்கு  இந்தப்படம்  சுத்தமா  பிடிக்காது 


ஹீரோவா  டொவினோ  தாமஸ் , இவரோட  தீவண்டி  படத்தை  கேரளாவில்   கோட்டய்ம்  மாவட்டம் சங்கணாச்சேரி  தன்யா  வில் பார்த்தபோது  ஜெர்க்  ஆகிட்டேன்  ஏராளமான  ரசிகைகள்  அப்ளாஸ்  மழை.  படம்  பூரா  தம்  அடிச்டே  இருப்பாரு.  தாடி  வெச்சு  ரவுடி  மாதிரி  இருப்பாரு  நம்ம  ஊரு  மாதவனை  அலை  பாயுதே  வில்  கொண்டாடின  காலேஜ்  கேர்ள்ஸ்  மாதிரி  இதுல  கொண்டாடித்தீர்த்துட்டாங்க 


 தனிப்பட்ட  முறையில்  இவரை  எனக்கு பிடிக்காது  3  காரணங்கள் 

 1  முதல் காரணம்  இவர்  படங்களில்  தமிழர்களை  ,மட்டம்  தட்டி  சில  டயலாக்ஸ்  வெச்சிருப்பாரு 

 2  எப்போப்பாரு  வருங்கால  கேன்சர்  பேசண்ட்  மாதிரி  தம்  அடிச்ட்டே  இருப்பாரு  

 3  ரவுடி  பொறுக்கி  லுக் 


ஆனா  நடிப்பில்  இவர்  பட்டாசு . கலக்கி இருக்கார் , படத்தின்  தயாரிப்பாளரும்    இவரே .  படத்துக்கு  தயாரிப்பாளராக  இருந்தும்  வில்லனிடம்  அடிவாங்கி  ஓடும்  காட்சி ,   ஹீரோயிசம்  இல்லாமல்  இறங்கி  வந்து  அவமானப்படும் காட்சியில்  நடிச்சதுக்கு  ஒரு  சபாஷ் 


  நாயகியாக  சுமேஷ்  மூர்    குட்  பர்சனாலிட்டி .  ரொமான்ஸ்  காட்சியில்  செம  கெமிஸ்ட்ரி ..  ஹீரோ  ஹீரோயினிடம்  லிப்  லாக்  வைத்து  தம்  அடிச்ச  புகையை  அவர்  உதட்டுக்குள்  அனுப்பி  நாயகியின்  நாசியின்  வழியே  வர  வைக்கும்   காட்சி   கேவலமாக  இருந்தாலும்   மாறுபட்ட  கற்பனை .   டீன்  ஏஜ்  பெண்கள்  விரும்புவார்கள்

 இதை  தனிப்பட்ட  முறையில்  ஏன்  எதிர்க்கறேன்னா  இந்த  மாதிரி  சீன்  பார்த்து  அவரது  ரசிகர்கள்  அவரவர்  காதலி , கள்ளக்காதலி  மனைவி  கூட  இதே  மாதிரி  செஞ்சாங்கன்னா   கெடுதல்  தானே ? (  ரஜினி எப்படி  ஒரு  காலத்தில்  ஏராளமான  ரசிகர்கள்  தம்  அடிக்க  காரணமாக  இருந்தாரோ  அது  போல ) 


ஹீரோவோட  அப்பாவா  லால்  கம்பீரமான  நடிப்பு 

 வில்லனாக   விஷ்ணு  கலக்கலான  மிரட்டலான  நடிப்பு 


சபாஷ்  டைரக்டர் 


1   ஒளிப்பதிவும்  ,  ஸ்டண்ட்  காட்சிகளும்  படத்தின்  பலம்.  பல  காமரா கோணங்கள்  ரசிக்க  வைத்தன. குறிப்பாக  நாயகி  இண்ட்ரோ  சீன் 


2   ஒரு  மிகச்சிறிய  சம்பவத்தை  20  நிமிட  குறும்படமாக  எடுக்க  வேண்டிய  படத்தை   ஒரு 2  மணி  நேரப்படமாக  இழுத்து  செஞ்ச   மேஜிக்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   க்lளைமாக்ஸில்  ஹீரோ  வில்லன்  இருவரும்   முறைச்சுக்கிட்டே  எதிர்  எதிரே  நிக்கறாங்க ,  ஹீரோவோட  அப்பாவும் , மனைவியும்  வேடிக்கை பார்த்துட்டே  இருக்காங்க . குறிப்பா    மனைவி  முகத்தில்  ஒரு பதட்டமே  இல்லை .  நான்  கூட  வில்லன்   ஹீரோயினின்    கள்ளக்காதலனாக  இருப்பானோ>  ஏதாவது  ட்விஸ்ட்  இருக்கும்  ,அதனால  தான்  ஹீரோயின்  அப்படி  இருக்காங்க  என  நினைத்தேன்

மனைவி சண்டையை  தடுக்கலை  அல்லது  விலக்கி  விட  முயற்சிக்கலை 


2   ஹீரோவும்  வில்லனும்  அடிச்சுக்கற  விதம்   பார்த்தா  2  வருசம்  ஆஸ்பத்திரி  ல பெட்  ரெஸ்ட்  எடுக்கனும்  கால்  எலும்பு  முறியுது , கழுத்தை  சுளுக்கு  எடுக்கறாரு . குத்துயிரும்  கொலை  உயிருமா  2  பேரும்  இருக்காங்க  , ஆனா  டக்னு  சரி  ஆகிடுது


3   ஹீரோ  ஒரு  வீட்டில்  வில்லனை  அடைச்சு  வெச்சுட்டு  கதவை  சாத்திட்டு  பேக்கு  மாதிரி போறாரு , கைகாலை கட்டி  வெச்சுட்டுப்போகனும்  அல்லது காலை   சேதப்படுத்திட்டாவது  போகனும்.  லூஸ்  மாதிரி  அப்டியா  விட்டுட்டுப்போவாங்க ?


4  ஹீரோ  வில்லனை  ஒரு  கிணத்தில்  தள்ளி  விட்டு  வட்ட  வடிவக்கிணத்தின்  மேலே  ஒரு  கம்பி  வலை உள்ள  மூடியை  மூடிட்டுப்போறாரு  . அதுக்கு  மேல  2 பாறாங்கல்  வெயிட்  வெச்சாத்தானே  அவன்  மேலே  வர  மாட்டான்?  அது  கூடவா  தெரியாது ?


5    ஹீரோவின்  செல்ல  நாய்  க்ளைமாக்ஸில்  வில்லன்  கூட   ஃபிரண்ட்  ஆகி  கூடவே  போவது  எப்படி  ?


நச்  டயலாக்ஸ்


1   உங்க  அப்பாவுக்கு  வயசாகிடுச்சு , ஒரு  குறிப்பிட்ட  வயசுக்கு  மேலே  ஒருவரின்  கேரக்டரை  சேஞ்ச்  பண்ண  முடியாது 


2   டாடி , உங்களை  எனக்குப்பிடிக்கலை ல் நாயைக்குளிப்பாட்டி  பின்  அம்மாவைக்குளிப்பாட்டினீங்க, ஆனா  என்னைகண்டுக்கலை


 அடப்பாவி , இதை  யார்றா  சொன்னாங்க ? 


 அம்மாதான் சொன்னாங்க 


3   என்  வலி  என்ன?னு உனக்கு  தெரியனும்.  இப்ப  தெரிஞ்சிருக்குமே? 


சி,பி   ஃபைனல்  கமெண்ட் -   இது  பலராலும்  பாராட்டப்பட்ட  ஒரு  ஹிட்  படம்  , ஆனா  எனக்கு  ஏனோ  பெரிய  அளவில்  கவரலை . ஒளிப்பதிவு , நாயகியின்  அழகுக்காக  பார்க்கலாம்.  ஒரே  ஒரு  இடத்துல  அடல்ட் கண்ட்டெண்ட்  இருக்கு , வன்முறை  தூக்கல் , தனால  18+  தான்   , அமேசான்  பிரைம்ல  ரிலீஸ் 



0 comments: